என் மலர்
நீங்கள் தேடியது "Ganda Sashti and Surasamhara Festival"
- சூரசம்ஹாரம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
- பக்தர்கள் செந்தில் குறவஞ்சி பாடல் பாடி வந்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந்தேதி யாகசாலை பூஜை யுடன் தொடங்கி நடை பெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
7-ம் திருவிழாவான இன்று திருக்கல்யாணம் நடக்கிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது 3.30-க்கு விஸ்வ ரூப தரிசனம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 6 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பட்டு சன்னதி தெரு, வீரராகவ புரம் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்குரதவீதி வழியாக தெப்பக்குளம் அருகே உள்ள தபசு மண்ட பத்திற்கு வந்து சேர்ந்தார்.
அப்போது அம்மன் சப்பரத்திற்கு முன்பு ராமையா பாகவதர் நினைவு நிலை செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், நிர்வாகி மற்றும் பக்தர்கள் செந்தில் குறவஞ்சி பாடல் பாடி வந்தனர்.
காலை 9 மணிக்கு உச்சி கால தீபாராதனை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
8-ம் திருவிழாவான நாளை இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.
9,10,11 ஆகிய 3 திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவமும் 12-ம் திருவிழா மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- தேவர் சன்னதி முன்பு சாயாபி ஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
- வெள்ளிக்கிழமை சுவாமி குமரவிடங்க பெருமானுக்கு, தெய்வாணைக்கும் திருக்கல்யாணம்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
12 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 5-வது நாளான இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் தங்க தேரில் சுவாமி, அம்பாள் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு பல்வேறு வகையான அபிஷேக பொருட்களால் அபிசேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளுகிறார்.
அங்கு முதலில் சுவாமி ஜெயந்தி நாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், 2-வதாக சிங்கமுகன், 3-வதாக தன் முகம் கொண்ட சூரனையும் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அங்கு 108 மகா தேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 11மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கு, தெய்வாணைக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரங்களில் அங்க பிரதட்சனை செய்தம், கந்த சஷ்டி கவசம் பாடல்கள் பாடியும், கோலாட்டம் ஆடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் புனித நீராடி விரதத்தை முடித்து கொள்கின்றனர்.
- கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- சூரசம்ஹாரம் 7-ந்தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. சூரபத்மனை வதம் செய்த பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
இந்த நிலையில் சுமார் 2,200 கி.மீ தொலைவில் உள்ள குஜராத்தில் இருந்து பெங்களூருக்கு கொண்டு வரப்பட்ட மயில் இறகுகள் அங்கு மாலையாக வடிவமைக்கப்பட்டு விமானம் மூலம் திருச்செந்தூர் எடுத்துவந்து கந்த சஷ்டி விழாவில் ஜெயந்திநாதருக்கு அணிவிக்கப்பட்டது.
- நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
- 8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு தீபாராதனையும், 12.45 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் வந்து அங்கு தீபாராதனைக்குப்பின மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
கந்த சஷ்டி திருவிழா 3-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
3-ம் நாளான இன்று பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரங்களில் அங்க பிரதட்சனை செய்தும், பஜனை பாடல்கள் பாடியும், கோலாட்டம் ஆடி விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. சூரபத்மனை வதம் செய்த பின்னர் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்தி நாதருக்கு அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.
8-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு மேல் கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- 1-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது.
- சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 7-ந்தேதி காலை சுவாமி படிச்சட்டத்தில் வீதிஉலா வந்து, 108 சங்காபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நடைபெறும்.
பின்னர், அன்று மாலை சண்முகர் அம்பாளிடம் சக்திவேல் வாங்கி சூரசம்காரம் செய்து, சுவாமி தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்து வீதிஉலா வைபவம் நடைபெறும். இதில் தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.
தொடர்ந்து, வருகிற 12-ந்தேதி யதாஸ்தானம் சேரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- மாலையில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கபிலர்மலை மற்றும் பாண்டமங்கலம் முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு தினந்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், மாலையில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை முருகப்பெருமான் சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், இரவு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மாலை 6 மணிக்கு மேல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர் மற்றும் கபிலர்மலை பாலசுப்ரமணியசுவாமி கோயில்களில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதேபோல் கோப்பணம் பாளையம், நன்செய் இடையாறு, பொத்தனூர், கந்தம்பாளையம், பாலப்பட்டியில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.