பரமத்திவேலூர் பகுதியில் முருகன் கோவில்களில் திருக்கல்யாண வைபவம்

கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலையில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோவிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோவிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கபிலர்மலை மற்றும் பாண்டமங்கலம் முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு தினந்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும், மாலையில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை முருகப்பெருமான் சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், இரவு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மாலை 6 மணிக்கு மேல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர் மற்றும் கபிலர்மலை‌ பாலசுப்ரமணியசுவாமி கோயில்களில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதேபோல் கோப்பணம் பாளையம், நன்செய் இடையாறு, பொத்தனூர், கந்தம்பாளையம், பாலப்பட்டியில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com