என் மலர்
வழிபாடு
- நட்சத்திரம் : அவிட்டம் இரவு 2.51 மணி வரை பிறகு சதயம்
- ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-27 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி காலை 9.09 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : அவிட்டம் இரவு 2.51 மணி வரை பிறகு சதயம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம் - பணிவு
ரிஷபம் - ஓய்வு
மிதுனம் - முயற்சி
கடகம் - பாசம்
சிம்மம் - பயிற்சி
கன்னி - தன்னம்பிக்கை
துலாம் - தெளிவு
விருச்சிகம் - லாபம்
தனுசு - கண்ணியம்
மகரம் - நன்மை
கும்பம் - ஊக்கம்
மீனம் - லாபம்
- முத்தாரம்மன் கோவிலில் சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
- காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
குலசேகரன்பட்டினம்:
இந்தியாவில் தசரா பெருந்திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்தான் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து முத்தாரம்மன் கோவிலில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில், வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது.
இந்நிலையில், பத்தாவது நாளில் முத்தாரம்மன் கோவில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று இரவு கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி, காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இரவு 11 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நள்ளிரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன் எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தைக் காண்பதற்காக கடற்கரையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன் 3 முறை அம்மனை வலம்வந்து போரிட தயாரானான். அவனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அதன்பின் சிங்க முகமாக உருமாறிய மகிஷாசூரன் மீண்டும் உக்கிரத்துடன் போரிடுவதற்காக அம்மனை 3 முறை சுற்றி வந்தான். அவனையும் அம்மன் சூலாயுதம் கொண்டு அழித்தார்.
தொடா்ந்து எருமை முகமாக உருமாறிய மகிஷாசூரன் மறுபடியும் பெருங்கோபத்துடன் அம்மனுடன் போர் புரிய வந்தான். அவனையும் சூலாயுதத்தால் அம்மன் சம்ஹாரம் செய்தார். அதன்பிறகு சேவலாக உருமாறி போரிட்ட மகிஷாசூரனையும் அன்னை சூலாயுதத்தால் வதம் செய்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஓம் காளி, ஜெய் காளி' என்று விண்ணதிர பக்தி கோஷங்களை முழங்கி அம்மனை வழிபட்டனர்.
குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ராவணனின் பொம்மையை தசராவின்போது எரித்து கொண்டாடுவது வடமாநிலங்களில் வழக்கமாக உள்ளது.
- ராம்லீலா நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவது தங்களின் கிராமத்துக்கு துரதிஷ்டத்தை வரவழைக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர்.
நாடு முழுவதும் தசரா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியான ராவண வதம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிஸ்ராக் [Bisrakh] என்ற கிராமம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ராவணனின் இறப்புக்கு துக்கம் அனுசரிக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது.
ராமாயணக் கதைப்படி ராவணன் தீய சக்தியாக சித்தரிக்கப்பட்டு அவரின் பொம்மையை தசராவின்போது எரித்து கொண்டாடுவது வடமாநிலங்களில் வழக்கமாக உள்ளது. மாறாக இந்த பிஸ்ராக் கிராமத்தில் ராவணன் ஆத்மா சாந்தியடைவதற்காகப் பூஜைகள் நடத்தப்படுகிறது.
ராவணன் தங்களின் பிஸ்ராக் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தாங்கள் அனைவரும் ராவணனின் வழித்தோன்றல்கள் என்றும் இம்மக்கள் நம்புகின்றனர். எனவே தங்களின் மூதாதையான ராவணனின் புத்திக்கூர்மையையும், கடவுள் சிவன் மீது அவர் வைத்திருந்த பக்தியையும் போற்றுகின்றனர்.
ராம்லீலா நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவது தங்களின் கிராமத்துக்கு துரதிஷ்டத்தை வரவழைக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர். இந்த கிராமத்தில் சிவன்கோவிலில் உள்ள லிங்கம் முற்காலத்தில் ராவணன் மற்றும் அவரது தந்தையால் வழிபடப்பட்டது என்று இவர்கள் கருதுகின்றனர். இவர்களை போல ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள மந்தோர் கிரமத்தில் ராவணன் மூதாதையாக கருத்துப்பட்டு அம்மக்களால் வழிபடப்பட்டு வருகிறார்.

தற்போது தங்கள் மூதாதை ராவணனுக்காகக் கோவில் கட்டவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர். கதைப்படி ராவணன் இலங்கையைச் சேர்ந்தவர் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும், வெவ்வேறு பகுதிகளில் ராமாயணம் வெவ்வேறு வகையாகப் புழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூர், மத்திய பிரதேசத்தின் விதிஷா மாவட்டம், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் ஆகியவற்றில் ராவணனுக்குக் கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் காலையில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தான கோவில் நிர்வாகத்தினர் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளுக்கு வழிபாடு செய்வார்கள். குறிப்பாக சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், தேவராஜ முதலி தெரு சென்ன கேசவ பெருமாள் கோவில், புரசைவாக்கம் சீனிவாச பெருமாள் கோவில், விருகம்பாக்கம் சுந்தர வரதராஜ பெருமாள், நங்கநல்லூர் ஸ்ரீ லட்சுமி ஹயவர்தன பெருமாள், பள்ளிக்கரணை லட்சுமி நாராயண பெருமாள், நெற்குன்றம் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதிகாலையிலேயே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள்.
இதே போல தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் காலையில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தான கோவில் நிர்வாகத்தினர் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
வீடுகளிலும் பெருமாளுக்கு புளியோதரை, மிளகு சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் உள்பட 5 வகையான சாதங்களை தயார் செய்து சாமிக்கு படையல் வைத்து வழிபட்டார்கள்.
- இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- திருவிழாவையொட்டி கோவிலில் கடந்த 9 நாட்களும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
உடன்குடி:
இந்தியாவில் தசரா பெருந்திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில்தான் பிரசித்தியாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து விரதம் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பல்வேறு தசரா குழுவினர் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி சென்றனர்.
வேண்டுதல்கள் நிறைவேற கடும் விரதம் இருந்து காளி, அம்மன் போன்ற சுவாமி வேடங்கள், குரங்கு, சிங்கம், பெண் போன்ற 100-க்கு மேற்பட்ட வேடங்கள் அணிந்து காணிக்கை வசூல் செய்து வந்தனர்.
மேலும் ஊர் பெயரில் தசரா குழு அமைத்து அதில் நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, செண்டை மேளம், கரகம், காவடி, டிஸ்கோ போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி காணிக்கை வசூல் செய்து வந்தனர்.
தசரா குழுவினரின் கலை நிகழ்ச்சி மிகவும் அசத்தலாக இருந்தது. 10-ம் திருநாளான விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று இரவு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து வசூல் செய்த காணிக்கையை செலுத்த தொடங்கினார்கள். இன்று பிற்பகல் வரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்.
இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர். இரவில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.
இதற்காக 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம், பக்தர்கள் வரும் தனியார் வாகனங்ளை நிறுத்த 30 தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது.
மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்பு துறை என மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறையினர் குலசையில் முகாமிட்டுள்ளனர்.

9-ம் திருநாளான நேற்று இரவு அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் பவனி வந்த காட்சி
திருவிழாவையொட்டி கோவிலில் கடந்த 9 நாட்களும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடந்தது. முத்தாரம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வோறு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். மேலும் தினமும் கோவில் கலையரங்கத்தில் மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இன்றும் காலை 6 மணி, 7.30 மணி, 9 மணி, 10.30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவர் கோவில் முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலில் அம்மனுக்கு சாந்தாபிஷேக ஆராதனையும் தொடர்ந்து தேரில் எழுந்தருளி கோவில் கலையரங்கம் வந்தடைவார். அங்கு காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.
காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலாவும், பகல் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்கிறார். பின்னர் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களையுதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. நாளை மறுநாள் (14-ந் தேதி) காலை 6 மணி, 8 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் 12 மணிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஏற்பாட்டில் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடக்கிறது.
தசரா திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் தாண்டவன் காடு கண்ணன், செயல் அலுவலர் ராம சுப்பிரமணியன் அறங்காவலர்கள் ரவிந்திரன் குமரன், மகராஜன், கணேசன், வெங்கடேஷ்வரி மற்றும் மாவட்ட அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளனர்.
திருவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டி.எஸ்.பி.வசந்தராஜன் தலைமையில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தசரா உடை அணிந்த போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- இன்று விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்.
- ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவத் தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இக்கோவிலுக்கு கடலூர், விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் புதுவை மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தந்து சாமி கும்பிட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் நேற்று ஆயுத பூஜை மற்றும் இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று விஜயதசமி நாளில் தொடங்கப்படும் அனைத்து காரியங்களும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இந்த நன்னாளில் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்படும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
அந்த வகையில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி, லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சாமி சன்னதிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் அழைத்து சென்று பூஜை செய்து பள்ளிக்கூடங்களில் சேர்ப்பார்கள். அதன்படி திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் எதிரே உள்ள அவுசதகிரி மலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஹயக்ரீவர் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு ஏடு படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி ஹயக்ரீவருக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, கருப்பு பலகை, பேனா, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருட்களை கொண்டு வந்து ஹயக்ரீவர் சன்னதியில் வைத்து வழிபட்டனர்.
பின்னர் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஹயக்ரீவர் சன்னதி முன்பு தரையில் அரிசி அல்லது நெல்லை கொட்டி வைத்திருந்த அந்த நெல்லில் ஏடு படிக்கும் நிகழ்ச்சியான தமிழில் " அ..ஆ" என எழுதி தங்கள் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை ஆர்வத்துடன் தொடங்கினர். மேலும் மாணவர்களும் ஆர்வத்துடன் ஏடு படிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விஜயதசமியை முன்னிட்டு திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலிலும் மற்றும் மலையில் உள்ள ஹயக்ரீவர் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர்.
- சரஸ்வதி தேவிக்கு வெண்மை நிற ஆடை மற்றும் வெண்மை நிற மலர்கள் சமர்ப்பணம் செய்வது வழிபடுவது மரபாக இருக்கிறது.
- நவராத்திரி என்ற கொலு வைத்து கொண்டாடப்படும் திருவிழா நாட்களில் பத்தாவது நாள் விஜயதசமி என்று சொல்லப்படுகிறது.
சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகை நாட்கள் இந்திய அளவில் அனைத்து மாநில மக்களாலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சரஸ்வதி பூஜை தேசிய அளவில் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது.
முதலாவது, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரக்கூடிய நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை என்றும், அதற்கு அடுத்த பத்தாவது நாளில் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது. இந்த முறை தென்னிந்திய மாநிலங்களில் நடைமுறை வழக்கமாக அமைந்துள்ளது.
இரண்டாவது, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வரக்கூடிய மாசி மாத சுக்கில பட்ச ஐந்தாம் நாளான வசந்த பஞ்சமி சரஸ்வதி பூஜையாக வட இந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. அந்த நாள் சரஸ்வதி அவதாரம் செய்த தினம் என்பதால் சரஸ்வதியை வழிபட்டு கல்விச் செல்வத்தை பெறும் வகையில் வீடுகளிலும், கோவில்களிலும், பொது இடங்களிலும் சமுதாய திருநாளாக சரஸ்வதி பூஜை அனுசரிக்கப்படுகிறது.

புராணங்களில்படி சரஸ்வதி தேவி மும்மூர்த்திகளில் முதலாவது மூர்த்தியாக சொல்லப்படும் பிரம்மாவின் மனைவியாக குறிப்பிடப்படுகிறார். உலகில் உள்ள அனைத்து வித ஞானங்களுக்கும், கல்விச்செல்வத்திற்கும் ஆதிபத்தியம் பெற்ற தெய்வ அம்சமாக சரஸ்வதி இருக்கிறார் என்பது ஐதீகம். சரஸ்வதி தேவிக்கு வெண்மை நிற ஆடை மற்றும் வெண்மை நிற மலர்கள் சமர்ப்பணம் செய்வது வழிபடுவது மரபாக இருக்கிறது.
சரஸ்வதி தேவியை வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி ஆகிய பெயர்களில் அழைக்கிறார்கள். வசந்த பஞ்சமி நாளிலிருந்து அடுத்து வரக்கூடிய 40-வது நாளில் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையின் தொடக்கத்தை அங்கீகரிக்கும் வகையிலும் வசந்த பஞ்சமி வட இந்தியாவில் விமரிசையாக அனுசரிக்கப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை நவராத்திரி கொலு வைத்து பூஜைகள் செய்யப்படும் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் விஜயதசமி என்று சொல்லப்படும். அந்த நாளில் தான் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும், குழந்தைகளுக்கு அவர்களுடைய தந்தை, குடும்ப மூத்தவர்கள், ஆசிரியர்கள் கல்வி கற்றலுக்கான முதல் நாளை தொடங்கி வைக்கிறார்கள்.
நவராத்திரி என்ற கொலு வைத்து கொண்டாடப்படும் திருவிழா நாட்களில் பத்தாவது நாள் விஜயதசமி என்று சொல்லப்படுகிறது. இந்த நாளை கர்நாடகா மற்றும் ஆந்திராவில் தசரா என்று குறிப்பிடுகிறார்கள். அந்த நாட்களில் எந்த ஒரு தொழிலையும், வித்தையையும் கற்பதற்கான நாளாக அனுசரிக்கிறார்கள்.
மேலும் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் பேனா ஆகியவற்றை பரிசாக வழங்கி அவர்களுக்கு நல்ல கல்வி செல்வம் கிடைப்பதற்கு ஆசிகளையும் வழங்குவது சமூக மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- சரஸ்வதி தாயார் இங்கு கன்னியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வழங்கி வருகிறார்.
- நோட்டு, பேனா, புத்தகம், சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கூத்தனூரில் கல்வி தெய்வம் சரஸ்வதி தேவிக்கு தனி கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு என்று இங்கு தான் தனி கோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சரஸ்வதி தாயார் இங்கு கன்னியாக அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வழங்கி வருகிறார். கருவறையில் வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் வீற்றிருந்து, வலது கீழ் கரத்தில் சின்முத்திரையும், இடது கையில் புத்தகமும், வலது மேல் கரத்தில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கியிருந்து ஜடா முடியுடன், ஞானச்சஸ் என்கிற மூன்றாவது கண்ணும் கொண்டு, கிழக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறார்.
இவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா விமர்சையாக நடைபெறும்.

சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெண்ணாடை உடுத்தி பாத தரிசனம் விழா நடைபெற்றபோது எடுத்தப்படம்.
அந்த வகையில் இந்த வருட நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 3-ம் தேதி திருவிழா தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று சரஸ்வதி பூஜை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மகா சரஸ்வதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு வெண்ணாடை உடுத்தி பாத தரிசனம் விழா நடைபெற்றது.
இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக விஜயதசமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயதசமியை முன்னிட்டு இன்று காலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். நோட்டு, பேனா, புத்தகம், சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்தனர். பின்னர் ஒரு தாம்பாளத்தில் நெல்மணிகளை பரப்பி அதில் தங்களது குழந்தைகளை தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான 'அ' வை எழுத வைத்து வித்யாரம்பம் செய்தனர்.
முன்னதாக குழந்தைகளின் நாக்கில் மூன்று முறை தேனை தொட்டு வைத்து பின்பு குழந்தைகள் காதுகளில் மந்திரங்களை சொல்லிய பிறகு நெல்மணிகளில் பிள்ளையார் சுழி எழுதி அதற்கு பின்பு தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதப்பட்டன.
இந்த விழாவுக்கு திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் இரு புறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- விஜயதசமி நாளில் என்ன செய்தாலும் அது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
- பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதிலும் பெற்றோர் ஆர்வம் காட்டினர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நேற்று ஆயுதபூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், ஆட்டோ நிலையங்கள் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்திலும் ஆயுத பூஜை விழா விமர்சையாக நடந்தது. இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) விஜயதசமி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்வி, விளையாட்டு, தொழில் என எதை தொடங்குவதாக இருந்தாலும், அதற்கு நல்ல நாள் பார்த்து செய்வது வழக்கம். ஆனால் இந்த நாளில் செய்தால், அது மிகுந்த வளர்ச்சி அடையும் என கருதப்படும் நாள் தான் விஜயதசமி.
நேற்று ஆயுதபூஜை கொண்டாடிய அனைவரும் பூஜையில் வைத்த தொழில் கருவிகள், புத்தகங்கள் போன்றவற்றை விஜயதசமி நாளான இன்று மீண்டும் பூஜை செய்து எடுத்து பயன்படுத்தினர். விஜயதசமி நாளில் என்ன செய்தாலும் அது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
இதனை கருத்தில் கொண்டே பலரும் தங்கள் குழந்தைகளுக்கு இன்று தாம்பாளத்தில் வைக்கப்பட்ட அரிசி மற்றும் நெல்லில் எழுத்துக்களை எழுத கற்றுக்கொடுப்பார்கள். வித்யாரம்பம் என கருதப்படும் இந்த நிகழ்ச்சி இன்று கோவில்களிலும், வீடுகளிலும் நடைபெற்றது. குமரி மாவட்ட கோவில்களில் இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்து கோவில்களிலும் செய்யப்பட்டு இருந்தன.
பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். அங்கு தாம்பூலத்தில் வைக்கப்பட்டிருந்த அரிசியில் அ, ஆ எழுத வைத்தனர். தங்க ஊசியால் குழந்தையின் நாக்கில் அ எழுதப்பட்டது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. இதனால் அனைத்து கோவில்களிலும் இன்று காலையிலேயே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பார்வதிபுரம் வனமாலீஸ்வரர் கோவிலில் உள்ள சரசுவதி சன்னிதானத்தில் தங்க ஊசியாலும், பச்சரிசியிலும் அகர முதல எழுத்துக்களை எழுத செய்து குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர்.
இங்கு அதிக அளவில் குழந்தைகளுடன் பெற்றோர் கலந்து கொண்டனர். வழக்கமாக கேரளாவில் இருந்தும் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை இங்கு அழைத்து வருவார்கள். கேரளாவில் நாளை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுவதால் கேரளாவை சேர்ந்தவர்கள் வருகை குறைவாக இருந்தது. இது தவிர இன்று பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதிலும் பெற்றோர் ஆர்வம் காட்டினர்.
இதனால் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை நடந்தது. பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் பள்ளியில் சேர்த்தனர். பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் கோவிலிலும் இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.
தேவிக்கு நடந்த சிறப்பு பூஜைக்கு பிறகு குழந்தைகளுக்கு எழுத்தறிவு சொல்லிக்கொடுக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி தொடங்கியது. குழந்தைகளின் நாவில் தங்க குச்சியாலும், தாம்பாள தட்டில் வைக்கப்பட்டிருந்த தானியத்தில் கைவிரல்களாலும் எழுத்துக்களின் வடிவங்களை எழுதி, எழுத்தறிவை சொல்லி கொடுத்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.
- இன்று திருவோண விரதம்.
- குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார நிகழ்ச்சி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு புரட்டாசி-26 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: நவமி காலை 6.08 வரை
தசமி நள்ளிரவு கடந்து அதிகாலை 4.36 வரை.
நட்சத்திரம்: திருவோணம் நள்ளிரவு 12.54 வரை.
யோகம்: சித்தயோகம்
ராகு காலம்: காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை
சூலம்: கிழக்கு
சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை
நல்ல நேரம்: காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, நண்பகல் 12.15 மணி முதல் 1.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
இன்று திருவோண விரதம். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார நிகழ்ச்சி, விஜயதசமி, குழந்தைகள் கல்வி தொடங்க உகந்த நாள்.
இன்றைய ராசிபலன்
மேஷம் - பாராட்டு
ரிஷபம் - பரிவு
மிதுனம் - நன்மை
கடகம் - பகை
சிம்மம் - யோகம்
கன்னி - வரவு
துலாம் - நலம்
விருச்சிகம் - மேன்மை
தனுசு - சிந்தனை
மகரம் - கவனம்
கும்பம் - பெருமை
மீனம் - பயணம்
- கோவில்பட்டி பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பழமையான பூவநாத சுவாமி திருக்கோவில்.
- இறைவன் பூவநாத சுவாமி என்ற பெயரிலும், அம்பாள் செண்பகவல்லித் தாயார் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பஸ்நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பழமையான பூவநாத சுவாமி திருக்கோவில். இந்த ஆலயத்தில் இறைவன் பூவநாத சுவாமி என்ற பெயரிலும், அம்பாள் செண்பகவல்லித் தாயார் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.
இத்தல அம்மனுக்கு புடவை சாத்தியும், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியும் வழிபாடு செய்தால், பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு, அந்தக் குறை படிப்படியாக சரியாகும் என்கிறார்கள்.
- ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
- ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில், திண்டல் திருத்தலம் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல் என்ற இடத்தில் சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் திருக்கோவில் அமைந்துள்ளது.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்ற சொல்மொழிக்கு ஏற்ப, இந்த ஆலயமும் முருகனின் அருள் ஆலயங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடிக்கிறது. இந்த ஆலயத்தில் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
புத்திரப்பேறு இல்லாதவர்கள், இத்தல முருகனுக்கு அபிஷேகம் செய்து, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில், திண்டல் திருத்தலம் உள்ளது.






