என் மலர்
வழிபாடு
- திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- மதுரை ஸ்ரீசெல்லாத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-9 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: அஷ்டமி பிற்பகல் 2.51 மணி வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: சுவாதி பின்னிரவு 2.14 மணி வரை. பிறகு விசாகம்.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு. மதுரை ஸ்ரீசெல்லாத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீவிஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமா
னுக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருப்பெருந்துறை ஸ்ரீமாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம், அலங்காரம். கரூர் ஸ்ரீஅபயபிரதான ரங்கநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அனுகூலம்
ரிஷபம்-உண்மை
மிதுனம்-சுகம்
கடகம்-பொறுமை
சிம்மம்-சுபம்
கன்னி-அன்பு
துலாம்- திறமை
விருச்சிகம்-தனம்
தனுசு- நற்செய்தி
மகரம்-பொறுப்பு
கும்பம்-திடம்
மீனம்- தீரம்
- கோவில் சங்கு வடிவ அமைப்பில் உள்ளது.
- இறைவனின் பெயர் திருக்குற்றாலநாதர், அம்பாள் குழல்வாய் மொழி.
பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவ தலங்களில் மிகவும் தொன்மையானது, திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில். தென்காசியை அடுத்துள்ள குற்றாலத்தில் இருக்கும் இத்தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகியவை இணைந்த சிறப்புமிக்கது.
'கு' என்பதற்கு 'பிறவிப்பிணி' என்றும், 'தாலம்' என்பதற்கு 'தீர்ப்பது' என்றும் பொருள். பிறவிப்பிணியைத் தீர்க்கும் திருத்தலம் என்பதால் இந்த ஊர், 'குத்தாலம்' என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி 'குற்றாலம்' என்றானதாக சொல்கிறார்கள்.

இந்த குற்றாலம், மூலிகை நிறைந்த மலைப் பகுதியாகும். இந்த மலையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன.
இவ்வாலய இறைவனின் பெயர் திருக்குற்றாலநாதர், அம்பாளின் திருநாமம், குழல்வாய் மொழி என்பதாகும். இங்குள்ள தீர்த்தம் 'சிவமது கங்கை', 'வட அருவி', 'சித்ரா நதி' என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
உற்சவ மூர்த்தியின் திருநாமம் சோமாஸ்கந்தர். சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபை, இந்த குற்றாலநாதர் கோவிலில் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் சங்கு வடிவ அமைப்பில் உள்ளது.
சித்திர சபையை காசி பராக்கிரம பாண்டிய மன்னன் கட்டியுள்ளார். இந்தக் கோவிலின் தலவிருட்சம் குறும்பலா மரம். இது, குழல்வாய் மொழி அம்பாள் சன்னிதி முன்பாக உள்ளது.
பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்ற மும்மூர்த்திகளின் பெயர் தாங்கிய 3 சிகரங்கள் உள்ளதால், குற்றால மலையை 'திரிகூடமலை' என்றும், இறைவனை 'திரிகூடநாதர்' என்றும் அழைப்பார்கள்.
குழல்வாய்மொழி அம்பாள் உயரமான கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளியுள்ளார். குழல்வாய்மொழி என்றால் 'வேய்ங்குழலின் ஒலி போன்று இனிமை பொருந்திய சொல்லுடையவள்' என்று பொருள்.

இந்த கோவில் ஆரம்ப காலத்தில் திருமால் கோவிலாக இருந்தது. அந்த சமயத்தில் 'திருமுற்றம்' என்று அழைக்கப்பட்டது. சிவன், சக்தி திருமணத்தின் போது வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது.
இதை சமன் செய்ய தெற்கு நோக்கி ஈஸ்வரனால் அனுப்பப்பட்ட அகத்தியப் பெருமான் இந்த கோவிலில் உள்ள திருமாலை அழுத்தி சிவனாக மாற்றினார். இதனால் அவருடைய ஐந்து கை விரல் தழும்பு சிவலிங்கத்தின் உச்சியில் தற்போதும் பதிந்திருப்பதைக் காண முடியும்.
தலையில் உள்ள தழும்பால் சிவனுக்குத் தலைவலி வந்து விடக்கூடாது என்பதற்காக, இத்தலத்து இறைவனுக்கு மூலிகை அபிஷேகம் நடக்கிறது.
குற்றாலத்திற்கு பெருமை சேர்க்க பல அருவிகள் உள்ளன. அதில் செண்பகாதேவி அருவி, தேனருவி, சிற்றருவி, ஐந்தருவி, பேரருவி, புலிஅருவி என்ற பாசுபதசாஸ்தா அருவி, பழைய குற்றால அருவி ஆகியவை முக்கியமானவை. இந்த அருவிகளில் குளித்து நமது புற அழுக்கை கழுவி, மன அழுக்கு நீங்க குற்றாலநாதரை வணங்குவது சிறப்பானது.
முற்காலத்தில் குற்றால நங்கை என்ற தேவி, சித்திர சபையின் வடக்கு வாசலில் அமர்ந்து அருள்பாலித்துள்ளார். இந்த ஆலயம் தற்போது, குற்றாலநாதர் ஆலயத்துக்கு நன்னகரம் அருகில் உள்ள பாட்டக்கரையில் உள்ளது.
வயல் வேலை செய்யும் பெண் ஒருத்திக்கு, குழல்வாய் மொழியம்மையின் அருளால் நீண்ட காலத்திற்குப் பிறகு, குழந்தைப் பேறு உண்டானது. நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண்ணுக்கு பிரசவ வலி வந்தபோது, அவள் அருகில் யாரும் இல்லை.

'அம்மா..' என்று அலறியபடி மயங்கிச் சரிந்த அந்தப் பெண்ணின் குரல் கேட்டு, குற்றாலநாதர் ஆலயத்தில் இருந்து அம்மன், பச்சைக்கிளியாக மாறி இவ்விடம் பறந்து வந்தாள். பின்னர் தாயாக மாறி அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தாள்.
இந்த நிலையில் தன்னிடம் சொல்லாமல் சென்றதால், 'இனி நீ ஆலயத்திற்குள் வர வேண்டாம்' என்று சிவபெருமான் நங்கையம்மனிடம் கூறினார். உடனே அன்னை, 'உங்களிடம் சொல்லாமல் சென்றாலும், நான் நல்ல நோக்கத்திற்காகவே சென்றேன். என் குற்றத்தை பொறுத்தருள வேண்டும்' என்று வேண்டினாள்.
இதையடுத்து அந்த அம்மனை குற்றாலநாதர் ஆலயத்தில் இருந்து வடக்கு பகுதியில் தங்கி இருக்கும்படியும், வருடத்திற்கு ஒரு முறை தன்னை தேடி வரவும் சிவபெருமான் அருள்பாலித்தார். அப்படி அந்த அம்மன் அருள்பாலிக்கும் ஊர் 'காசிமேஜர்புரம்' என்று அழைக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் காசிமேஜர்புரம் உள்ளது. தை மாதம் நான்கு செவ்வாய்க்கிழமையும் இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறும். முதல் செவ்வாய் அன்று வரியேடு என்னும் வைபவம் நடைபெறும்.
இவ்வேளையில் அம்மனிடம் உத்தரவு வாங்கி மக்கள் வரி பிரித்து கோவில் கொடை விழாவிற்கு ஆயத்தமாவார்கள். இரண்டாம் செவ்வாய்க்கிழமை கால் நாட்டு வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறும்.
மூன்றாம் செவ்வாய் அன்று கோவில் பூசாரி சூலாயுதம் எடுத்து அம்மனின் மூல ஆலயத்துக்கு சென்று, உத்தரவு வாங்கி வந்த பின்பு கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அன்றைய நாளில் செண்பகாதேவி அம்மன் கோவிலில் இருந்து காவு சாமி எனும் அகத்தியர் அழைப்பு நடந்தேறும்.
இந்த அம்மனுக்கு புட்டு அமுது படைப்பார்கள். அப்பம், வடை சுண்டல், தேன் திராட்சை உள்பட பல்வேறு பதார்த்தங்களை படைத்து வணங்குவார்கள். இந்த அன்னையை வேண்டினால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஆலயத்தில் செண்பகாதேவி அம்மன் கிழக்கு நோக்கி உள்ளார். ஆதி அம்மனும் இந்த ஆலய வளாகத்துக்குள் வடக்கு நோக்கி உள்ளார். கோவில் வளாகத்தில் கருப்பசாமி, பன்றி மாடசாமி, சங்கலி பூதத்தார், கொம்பு மாடசாமி ஆகியோர் உள்ளனர். வெளியே சின்னத்தம்பி காவல்தெய்வமாக உள்ளார்.
பொதிகை விநாயகர், ஆதி அம்மன், செண்பகாதேவி ஆகியோரும் இந்த கோவில் வளாகத்தில் உள்ளனர். பாலமுருகன், பால விநாயகர் ஆகியோரும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
- கிருஷ்ணன் கையில் வெண்ணையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
- கோவிலின் மூலவர் வீரபத்திரர், சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது, திற்பரப்பு என்ற ஊர். குமரி மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள திற்பரப்பு அருவியை 'குமரி குற்றாலம்' என்பார்கள்.
கோதை ஆற்றின் கரையில் உள்ளது இந்த அருவி. பேச்சிப்பாறை அணையில் இருந்து 13 கிலோமீட்டர் தூரம் ஓடி வந்து, இங்குள்ள மலையில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாக விழுகிறது. இந்த அருவியைக் காண பல்வேறு மாவட்டம், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

இந்த இடத்தில் சிறப்புமிகுந்த சிவாலயம் ஒன்று உள்ளது. இதனை 'திற்பரப்பு மகாதேவர் ஆலயம்' என்று அழைக்கிறார்கள். மகாசிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கு, சிவனடியார்கள் பலரும் ஒவ்வொரு ஆலயமாக ஓடிச் சென்று வழிபடும் வழக்கம் உள்ளது. இதனை 'சிவாலய ஓட்டம்' என்பார்கள்.
இந்த சிவாலய ஓட்டத்தில் மூன்றாவது வரும் ஆலயமாக, இந்த திற்பரப்பு மகாதேவர் ஆலயம் திகழ்கிறது. இந்த கோவிலின் மூலவரான வீரபத்திரர், சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். இவரை 'ஜடாதரர்', 'மகாதேவர்' ஆகிய பெயர்களிலும் அழைப்பார்கள். இவ்வாலய மூலவர் வழக்கத்திற்கு மாறாக, மேற்கு நோக்கிய திசையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அதேபோல் நந்தியானது, மூலவருக்கு நேர் எதிரில் இல்லாமல், சற்றே விலகி காணப்படுகிறது.
கோதை ஆற்றின் கரையில் உள்ள திற்பரப்பு அருவிக்கு தெற்கு திசையில் இந்த ஆலயம் உள்ளது. மகாதேவர் கோவிலின் தெற்கே உள்ள திருச்சுற்று மண்டபத்தில் இருக்கும் நிலவறை வழியாகவும், இந்த குகை கோவிலுக்கு பாதை உள்ளது.

இந்த குகை கோவிலின் உள்ளே பத்ரகாளி தேவியின் புடைப்புச் சிற்பம் உள்ளதாக சொல்லப்படுகிறது. திற்பரப்பு சிவன் கோவில், 2 ஏக்கர் பரப்புள்ள ஆலய வளாகத்தில் உள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் நான்கு புறமும் சுமார் 15 அடி உயரம் உள்ள கருங்கல் மதில் சுவர் உள்ளது. இந்த கோவிலுக்கு நான்கு திசையிலும் வாசல்கள் உண்டு.
கோவிலின் மேற்கு வாசலில் மணி மண்டபம் காணப்படுகிறது. மேற்கு பிரகாரத்தில் உள்ள சாஸ்தா கோவிலில், 16 மீட்டர் உயரம் உள்ள செப்புக் கொடிமரம் இருக்கிறது. தென்மேற்கில் சிறிய சாஸ்தா கோவில் உள்ளது.
இங்கே பூரணை- புஷ்கலை ஆகிய தேவியருடன் சாஸ்தா சுகாசனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். கோவிலின் உள்ளே இருக்கும் கிருஷ்ணன் கோவில் பிரகாரத்தில் நாகர் சிற்பங்கள், கிருஷ்ணன் கோவில், முருகன் கோவில், மணமேடை ஆகியவை உள்ளன.
கிருஷ்ணன் கோவில் கிழக்கு பார்த்து உள்ளது. மூலவர் கிருஷ்ணன் கையில் வெண்ணையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னிதிக்கு எதிரில் முருகன் கோவில் உள்ளது.
கிழக்கு வெளி பிரகாரத்தின் வாசலில் 8 தூண்களை கொண்ட மண்டபம் உள்ளது. இந்த வாசல் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது. தெற்கு பிரகாரத்தில் ஆஞ்சநேயருக்கு பரிவார கோவில் உள்ளது. இக்கோவிலின் பொதிகை கட்டுமானத்தை கொண்டு, இது 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இக்கோவிலில் நிர்மால்ய தரிசனம், உஷா பூஜை, உச்சிகால பூஜை, சாயரட்சை, அத்தாழ பூஜைகள் உண்டு. மேலும் சிறப்பு பூஜைகளும் சிறப்பு சடங்குகளும் செய்யப்படுகின்றன.
இக்கோவிலின் திருவிழா பங்குனி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். மூன்றாம் திருவிழாவில் கலச பூஜையும், முளையடி பூஜையும் நிகழும்.
ஆறாம் திரு விழாவில் வட்டதீபம் நிகழ்ச்சியும், இரவில் கதகளியும் நடக்கும். எட்டாம் நாள் தாரை பூஜையும், ஒன்பதாம் நாள் பன்றி வேட்டையும் நடைபெறும்.
இவ்விரு நாட்களில் மேளதாளங்களுடன் யானை ஊர்வலம் உண்டு. பத்தாம் நாள் ஆறாட்டு நிகழ்ச்சியானது, அரவங்காடு காணிக்காரர்கள் மற்றும் மலையர்களின் பங்களிப்புடன் நடைபெறும்.
திற்பரப்பு சிவன் கோவிலுக்கு எழுத்து வடிவில் தலபுராணம் இல்லை. சிவபுராணம் சார்ந்த வாய் மொழிக் கதையே உள்ளது. சிற்பக்கலை வேலைப்பாடுகள் நிறைந்த இந்த கோவில் ஒரு கலைப் பொக்கிஷமாகும்.

கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிவாலய ஓட்டத்தின்போது பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது, காலம் காலமாக நடைபெற்று வரும் சிறப்பான நிகழ்வாகும்.
சிவனின் பேச்சை கேட்காமல், தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்கு தாட்சாயிணி (பார்வதி தேவி) சென்றாள். அங்கே தாட்சாயிணிக்கு அவமரியாதை நிகழ்ந்தது. இதனால் சிவன் தன் அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி, அவரை தட்சன் யாகம் செய்யும் இடத்திற்கு அனுப்பினார்.
வீரபத்திரர், அந்த யாகத்தை அழித்து அனைவரையும் தண்டித்தார். ஆனாலும் வீரபத்திரரின் கோபம் குறையவில்லை. எனவே அவர், தன் மனம் அமைதி பெற, கோதை ஆற்றின் பகுதியில் அமர்ந்து தியானம் செய்தார். அப்போது அவருடன் பத்திரகாளியும் தியானத்தில் அமர்ந்தாள்.
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாயும் நதியை பார்க்கும் வகையில், மேற்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்தார், வீரபத்திரர். எனவே தான் இங்குள்ள சிவாலயத்தில் மூலவர், மேற்கு நோக்கி அருள்வதாகவும் சொல்கிறார்கள்.
மேலும் மூலவருக்கு நதியை மறைக்காமல் இருக்கும் வகையில் நந்தியும் சற்று விலகி இருப்பதாக கூறுகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தூரத்திலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிலும், மார்த்தாண்டத்தில் இருந்து திருவட்டாறு வழியாக சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திலும் திற்பரப்பு திருத்தலம் உள்ளது.
- 25-ந்தேதி சர்வ ஏகாதசி.
- 27-ந்தேதி பிரதோஷம்.
21-ந்தேதி (செவ்வாய்)
* மதுரை செல்லாத்தம்மன் சிம்மாசனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
22-ந்தேதி (புதன்)
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
23-ந்தேதி (வியாழன்)
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
24-ந்தேதி (வெள்ளி)
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
25-ந் தேதி (சனி)
* சர்வ ஏகாதசி.
* மதுரை செல்லத்தம்மன் சப்பரத்தில் பவனி.
* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சனம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.
26-ந்தேதி (ஞாயிறு)
* திருவாவடுதுறை கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* திருப்பதி ஏழுமலையான் சுத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந் தருளல்.
* திருபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
27-ந்தேதி (திங்கள்)
* பிரதோஷம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீப உற்சவம் ஆரம்பம்.
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு.
* சூரியனார் கோவிலில் சிவபெருமான் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-8 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி நண்பகல் 12.45 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: சித்திரை இரவு 11.43 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் சிம்மாசத்தில் புறப்பாடு கண்டருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார பூஜை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-பரிசு
மிதுனம்-பாராட்டு
கடகம்-அமைதி
சிம்மம்-சாந்தம்
கன்னி-வெற்றி
துலாம்- முயற்சி
விருச்சிகம்-பயிற்சி
தனுசு- சாதனை
மகரம்-அனுகூலம்
கும்பம்-புகழ்
மீனம்-பண்பு
- இரு சீசன்களிலும் மொத்தம் 53 லட்சம் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.
- ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்தமாதம் (டிசம்பர்) 30-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
கோவில் நடை திறக்கப் பட்டதில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சென்றார்கள். இதனால் மகரவிளக்கு பூஜை காலத்தில் சபரி மலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. பக்தர்கள் நெரிசல் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
மகரவிளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. லட்சக் கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய் தார்கள்.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மகர விளக்கு பூஜை பந்தளம் அரண்டனை ராஜ பிரதிநிதி சாமி தரிசனத்துக்கு பிறகு இன்று நிறைவுக்கு வந்தது.
இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு கோவில் தந்திரிகள் கண்ட ரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் கணபதிஹோமம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அபிஷேகம் மற்றும் நைவேத்திய பூஜைகள் நடந்தன.
மகர விளக்கு வைப வத்தை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த திருவாபரணங்கள் பந்தள அரண் மனையிடமிருந்து கொண்டு வந்த திருவாபரண குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அவர்கள் எடுத்துக் கொண்டு பதினெட்டாம்படி வழியாக இறங்கிச் சென்று பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர்.
அதே நேரத்தில் பந்தளம் அரண்மனை ராஜ பிரதிநிதி திருக்கேத்தநாள் ராஜராஜ வர்மா ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு மேல் சாந்தி அருண்குமார் நம்பூ திரி, ஐயப்பன் சிலைக்கு விபூதியாபிஷேகம் செய்தார்.
பின்னர் ஐயப்பனின் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவித்தல், கையில் யோக தடி வைத்து யோக நிலையில் அமர்த்தும் நிகழ்வு நடைபெற்றது.
பின்பு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. கோவில் சாவியை பந்தள அரச பிரதி நிதியிடம் மேல்சாந்தி ஒப்படைத்தார். அதனை கையில் வைத்துக்கொண்டு அரச பிரதிநிதி பதினெட்டாம் படி வழியாக இறங்கிச் சென்றார்.
பதினெட்டாம் படி இயங்கியதும் கோவில் சாவியை தேவசம் பிரதி நிதிகள் மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ நாத்திடம் ஒப்படைத்தார். அப்போது மாதாந்திர பூஜை செலவுக்கான பணமும் வழங்கப்பட்டது.
பின்னர் அரச பிரதிநிதி மற்றும் அவரது குழுவினர் பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர். திருவாபரண ஊர்வலம் வருகிற 23-ந்தேதி பந்தளம் அரண்மனையை சென்றடைகிறது.
இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் கடந்த ஆண்டை விட அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். இந்த இரு சீசன்களிலும் மொத்தம் 53லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
- திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது.
1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.
2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்" என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.
5. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.
6. ஆந்திர மாநிலம் லபோட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.
7. தமிழ்நாடு மக்களுக்கு நந்தி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.
8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை" எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.
9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.
10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்" என்கிறார்கள்.
11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.
13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.

14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.
15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.
17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.
18. நந்திகேசுவரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.
19. இந்திய வர லாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுவரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.
20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரம்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.
21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசிரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.
22. காஞ்சிபுரத்தில் ராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.
23. தமிழ்நாட்டில் நந்திகேசுவர ரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.
24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்தியம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.
26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை "ரதிரகசியம்" என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.
27. ஆகம சாஸ்திரங் களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமர பில் தலையாயது "சிவஞான போதம்" என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்
28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.
29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோவிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.
30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.
31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு துவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.
32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.
33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகி களுக்கும் நந்திதேவரே ஆதி குரு.
34. "நந்தி" என்ற வார்த்தையுடன் "ஆ" சேரும்போது "ஆநந்தி" என்ற பொருள் தருகிறது. "நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!" என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.
35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.
36. ஆலயங் களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில் களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.
37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.
38. நந்திக்கு இவ்வுலகத்தில் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.
39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.

40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.
41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.
42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.
43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக் கப்படு கிறார்கள்.
44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.
45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.
46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானிடம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.
47. நந்தியை வழிபடும்போது, "சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக" என்று பிரார்த்திக்க வேண்டும்.
48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.
49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.
50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.
- பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் நந்தி கல்யாணம்.
- நந்தி திருமணத்தின் போது பல தலங்களில் இருந்து பல பொருட்கள் வரும்.
நந்தியை சிவபெருமான் தன் மகனாகவே ஏற்றுக்கொண்டார். உரிய வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய சிவன், வசிஷ்ட முனிவரின் பேத்தியை மணமகளாகத் தேர்ந்தெடுத்து, பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி திருமழபாடியில் மேற்சொன்ன நாளில் கோலாகலமாக நடைபெறும். பார்வதியும் பரமேஸ்வரனும் திருவையாறிலிருந்து பல்லக்கில் வருவர். நந்தி மாப்பிள்ளை கோலத்தில், வெள்ளியாலான தலைப்பாகை அணிந்து, கையில் செங்கோல் ஏந்தி, குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க வைத்தியநாதன்பேட்டை வழியாகத் திருமழபாடி வருவார்.

திருமண விழா முடிந்ததும் புனல்வாசல் வழியாக திருவையாறு திரும்பிச் செல்வார். இதைத்தான் 'வருவது வைத்திய நாதன் பேட்டை, போவது புனல்வாசல் என்பர்.
நந்தி திருமணத்தின் போது பல தலங்களில் இருந்து பல பொருட்கள் வரும். திருப்பழனத்தில் இருந்து பழ வகைகள் வரும். திருப்பூந்துருத்தியில் இருந்து மலர் மாலைகள் வரும், திருநெய்த்தானத்திலிருந்து யாகத்திற்கும் சமையலுக்குமான நெய் வரும்.

திருச்சோற்றுத்துறையில் இருந்து அறுசுவை அன்ன வகைகள் வரும். இந்தத் தலங்களெல்லாம் திருமழபாடியைச் சுற்றி அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த திருமண விழா மார்ச் அன்று நடைபெறும்.

இதைக் காணும் திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் விரைவில் திருமணம் கூடி வரும் என்பர். 'நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்' என்பது சொல் வழக்கு. இவ்விழாவைக் காண்போர் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும், சுபகாரியங்கள் நடைபெறும்.
- பிரதோஷம் அன்று செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும்.
- பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும்.
பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் கண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது வழக்கம்.
* சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட சனிக்கிழமைகளில் வரும் சனிமகா பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும்.
* பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.

* சாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோமசூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.
* அதாவது நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர்வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணக்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும்.
* இந்த பிரதட்சண முறைக்கு பிரதோஷ பிரதட்சணம் என்று பெயர், பிரதோஷத்தில் நித்தியப் பிரதோஷ, பிரயை பிரதோஷம், பட்சப் பிரதோஷம் என மொத்தம் இருபது வகை பிரதோஷங்கள் உள்ளன.
* சனிப் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் சேரும். இந்திரனுக்கு நிகரான செல்வாக்கும், புகழும் கிடைக்கும்.
* அன்றைய தினம் செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் வல்லமை வாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

* சனி பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் சிவபெருமானின் நாட்டியத்தை காண வருவார்கள் என்பது ஐதீகம்.
* அதனால் ஆலயத்தின் மற்ற சந்நிதிகள் அந்த நேரத்தில் திரையிடப் பட்டிருக்கும். அதே பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.
* பிரதோஷம் விரதம் இருப்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.
* மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய் தீபம் ஏற்றி வணங்கி வரவேண்டும்.
- மதுரை ஸ்ரீ செல்லாத்தம்மன் உற்சவம் ஆரம்பம்.
- கூரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-7 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி காலை 10.35 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: அஸ்தம் இரவு 9.07 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். மதுரை ஸ்ரீ செல்லாத்தம்மன் உற்சவம் ஆரம்பம். சிம்மாசனததில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. கூரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர சூசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-சுபம்
மிதுனம்-புகழ்
கடகம்-நட்பு
சிம்மம்-அன்பு
கன்னி-சாந்தம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்-வரவு
தனுசு- உயர்வு
மகரம்-போட்டி
கும்பம்-திறமை
மீனம்-நன்மை
- ஆயுள் பலம் அருளும் பரிகார தலங்கள்.
- ஆரோக்கிய வாழ்வு அருளும் பரிகார தலங்கள்.
ஆயுள் பலம் அருளும் பரிகார தலங்கள்!
1. அமிர்தகடேஸ்வரர் கோவில்,திருக்கடையூர்,
2. எமனேஸ்வரமுடையார் கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3. காலகாலேஸ்வரர் கோவில், கோவில்பாளையம்,
4. சித்திரகுப்தசுவாமி கோவில், காஞ்சிபுரம்,
5. தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி,
6. ஞீலிவனேஸ்வரர் கோவில். திருப்பைஞ்ஞீலி.
7. வாஞ்சிநாதசுவாமி கோவில், வாஞ்சியம்.

ஆரோக்கிய வாழ்வு அருளும் பரிகார தலங்கள்!
1. தன்வந்திரி கோவில், ராமநாதபுரம், கோவை.
2. பவஒளஷதீஸ்வரர் கோவில், திருத்துறைப்பூண்டி.
3. பிரசன்னவெங்கடேச பெருமாள் கோவில், குணசீலம்.
4. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்.
5. மகா மாரியம்மன் கோவில், வலங்கைமான்.
6. வைத்தியநாதசுவாமி கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7. வைத்தியநாதசுவாமி கோவில், வைத்தீஸ்வரன் கோவில்.
எதிரி பயம் போக்கும் பரிகார தலங்கள்
1. அங்காளம்மன் கோவில், மேல்மலையனூர்.
2. அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.
3. காலபைரவர் கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4. காளமேகப்பெருமாள் கோவில், திருமோகூர்.
5. காளிகாம்பாள் கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் கோவில்,அதியமான்கோட்டை.
7. தில்லைகாளியம்மன் கோவில், சிதம்பரம்.
8. பிரத்யங்கராதேவி கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
9. மாசாணியம்மன் கோவில், ஆணைமலை.
10. முனியப்பன் கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11. ரேணுகாம்பாள் கோவில், படவேடு.
12. வெட்டுடையார் காளியம்மன் கோவில், கொல்லங்குடி
கடன் பிரச்சினை தீர்க்கும் பரிகார தலங்கள்
1. அன்னமலை தண்டாயுதபாணி கோவில், மஞ்சூர், ஊட்டி
2. கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு.
3. சாரபரமேஸ்வரர் கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
4. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோவில், திருமலை.

கல்வி வளம் பெருக அருளும் பரிகார தலங்கள்
1. கரிவரதராஜ பெருமாள் கோவில், மாதவரம், சென்னை
2. தேவநாதசுவாமி கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3. மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4. வரதராஜபெருமாள் கோவில், செட்டிபுண்ணியம்.
குழந்தைப்பேறு அருளும் பரிகார தலங்கள்
1. ஏகம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்.
2. சங்கரராமேஸ்வரர் கோவில், தூத்துக்குடி.
3. சிவசுப்ரமண்யசுவாமி கோவில், குமாரசாமி பேட்டை, தர்மபுரி.
4. தாயுமானசுவாமி கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
5. பாலசுப்ரமணியசுவாமி கோவில், ஆயக்குடி, தென்காசி.
6. மயூரநாதசுவாமி கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7. முல்லைவனநாதசுவாமி கோவில், திருக்கருகாவூர்.
8. நச்சாடை தவிர்தருளியசுவாமி கோவில், தேவதானம், ராஜபாளையம்.
9. விஜயராகவபெருமாள் கோவில், திருபுட்குழி.
குடும்பத்தில் ஒற்றுமை அருளும் பரிகார தலங்கள்
1. அகத்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம்.
2. அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருச்செங்கோடு.
3. அங்காளம்மன் கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்.
4. கல்யாணவிகிர்தீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூ டலூர்.
5. சங்கரநாராய ணசுவாமி கோவில், சங்கரன் கோவில்.
6. நவநீதசுவாமி கோவில், சிக்கல்.
7. பள்ளிக்கொண்டீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி.
8. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா கோவில், மஞ்சக்கம்பை.
9. மாரியம்மன்,காளியம்மன் கோவில், ஊட்டி
10. லட்சுமி நரசிம்மர் கோவில், பரிக்கல்.
11. வெக்காளியம்மன் கோவில், உறையூர்
12. தலசயனப் பெருமாள் கோவில், மாமல்லபுரம்.
செல்வ வளம் அருளும் பரிகார தலங்கள்
1. அனந்தபத்ம நாப சுவாமி கோவில், அடையாறு.
2. அஷ்டலட்சுமி கோவில், பெசன்ட் நகர், சென்னை.
3. கைலாச நாதர் கோவில், தாரமங்க லம்.
4. பக்தவச்சலப்பெருமாள் கோவில், திருநின்றவூர்.
5. மாதவப்பெருமாள் கோவில், மயிலாப்பூர்.
திருமணத்தடைகள் நீக்கும் பரிகார தலங்கள்
1. உத்வாகநாதசுவாமி கோவில், திருமணஞ்சேரி.
2. கல்யாணபசுபதீஸ்வரர் கோவில், கரூர்.
3. கல்யாணவேங்கடரமணசுவாமி கோவில், தான்தோன்றிமலை.
4. கைலாசநாதர் கோவில், தாரமங்கலம்.
5. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் கோவில், பாரிமுனை.
6. பட்டீஸ்வரர் கோவில், பேரூர். கோவை.
7.நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை.
8. வரதராஜபெருமாள் கோவில், நல்லாத்தூர்.
9. வீழிநாதேஸ்வரர் கோவில், திருவீழிமழலை.
தீவினைகள் அகன்றிட அருளும் பரிகார தலங்கள்
1. காலபைரவர் கோவில், குண்டடம்.
2. காளிகாம்பாள் கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3. குறுங்காலீஸ்வரர் கோவில், கோயம்பேடு.
4. சரபேஸ்வரர் கோவில், திருபுவனம்.
5. சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6. பண்ணாரிமாரியம்மன் கோவில், பண்ணாரி.
நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர அருளும் பரிகார தலங்கள்
1. அக்னீஸ்வரர் கோவில், திருப்புகலூர்.
2. தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தீர்த்தமலை, அரூர்.
3. பூவராகசுவாமி கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
4. வராகீஸ்வரர் கோவில், தாமல். காஞ்சீபுரம்.
நோய், நொடிகள் தீர்க்கும் பரிகார தலங்கள்
1. இருதயாலீஸ்வரர் கோவில், திருநின்றவூர்.
2. தோரணமலை முருகன் கோவில், தோரணமலை.
3. பண்ணாரிமாரியம்மன் கோவில், பண்ணாரி.
4. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்.
5. வீரராகவர் கோவில், திருவள்ளூர்.
6. வீழிநாதேஸ்வரர் கோவில், திருவீழிமழலை.
7. வைத்தியநாதசுவாமி கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.
பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு அருளும் பரிகார தலங்கள்
1. தாயுமானசுவாமி கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
2. பாதாள பொன்னியம்மன் கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3. மகாதேவர் கோவில், செங்கனூர்.
முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த பரிகார தலங்கள்
1. சங்கமேஸ்வரர் கோவில், பவானி.
2. மகுடேஸ்வரர் கோவில், கொடுமுடி.
3. வரமூர்த்தீஸ்வரர் கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4. வீரராகவர் கோவில், திருவள்ளூர்.
5. ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்.
6. திருப்பள்ளி முக்கூடல். குருவிராமேஸ்வரம் கோவில், திருவாரூர்
7. காசி விஸ்வநாதர்
8. பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
9. சொரிமுத்து அய்யனார் கோவில்
10. பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயனருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
- சண்டேசுவர நாயனார் குரு பூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-6 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: பஞ்சமி காலை 8.37 மணி வரை. பிறகு சஷ்டி
நட்சத்திரம்: உத்திரம் இரவு 6.37 மணி வரை. பிறகு அஸ்தம்
யோகம்: அமிர்தயோகம்.
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயனருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகைமாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், ஆராதனை வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம். சண்டேசுவர நாயனார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர், பழனி ஸ்ரீ பாலதண்டாயுத பாணி கோவில்களில் பவனி. சாத்தூர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் புறப்பாடு, வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீசெல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உண்மை
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-கடமை
கடகம்-போட்டி
சிம்மம்-அன்பு
கன்னி-ஜெயம்
துலாம்- பணிவு
விருச்சிகம்-இன்பம்
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-பெருமை
கும்பம்-தெளிவு
மீனம்- மாற்றம்






