என் மலர்
கோவில்கள்
செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த யந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.
இந்தியாவில் கிரக, விஞ்ஞான பூர்வமான ஆகர்ஷண சக்திகள் வாய்ந்த பல ரகசியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் விந்திய மலை. இம்மலைத் தொடருக்கு தெற்கில் உள்ள பூமி, அங்கார பூமி என்றும், இங்கு செவ்வாயின் தோஷம் அதிக அளவில் ஏற்படாது என்றும் புராதன நூல்களில் கூறப்பட்டுள்ளன.
இதற்கு காரணம், செவ்வாயின் சாரப்பாதையில் இருந்து விந்திய மலைக்கு தெற்கே உள்ள பூமிப்பகுதி, விலகி இருப்பதே. இந்த உண்மையை அறிந்த நமது பெரியோர்கள், செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் அளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த யந்திரத்தில் மந்திரப் பிரயோகம் செய்து வைத்தீஸ்வரன் கோவிலில் பிரதிஷ்டை செய்து வைத்தனர்.
சீதையைத் தேடிக்கொண்டு, தம்பி லட்சுமணனுடன் வனவாசம் வந்த ஸ்ரீ ராமபிரான், சீதா தேவியை ராவணனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக போரிட்டு, உயிர் துறந்த ஜடாயுவுக்கு, திருப்புட்குழி என்ற புண்ணிய தலத்தில் அந்திம தகனக் கிரியைகளைத் தன் தொடை மேலேயே செய்துவிட்டு, அதற்குப்பின் செய்ய வேண்டிய தினச்சடங்குகளை வைத்தீஸ்வரன் கோவிலில் செய்ததால், மேலும் இத்திருத்தலம் புனிதம் பெற்று, புள்ளிருக்கும் வேளூர் எனச் சிறப்புப் பெயருடன் திகழலாயிற்று.
மேலும், அங்காரகன் என்று புகழ்பெற்ற செவ்வாயும் இத்திருத்தலத்தில் ஒரு சமயம் தவம் செய்ததால், செவ்வாய் தோஷ பரிகார பலம் இந்த சேத்திரத்திற்கு மேலும் அதிகமாயிற்று.
செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் திருக்கோவிலுக்கு வந்து, இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, இறைவனையும், வணங்கி, தனிச்சன்னதியில் எழுந்தருளி இருக்கும் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி, தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கும்.
ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் அவரின் உடலில் ரத்தத்தின் ஆற்றல் மிக குறைவாக இருக்கும். அல்லதுஅவரின் எலும்பு பகுதி ஏதாவது பாதிப்புகள் இருக்கும்.
செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில். இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது.
வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு தோஷத்திருக்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது. இங்கு மிகும் பிரத்சிதி பெற்றது நாடி ஜோதிடம். ஆதலால் இங்கு வரும் பக்தர்கள் நாடி ஜோதிடத்தை அதிகமாக நம்புகின்றனர். திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் தேவாரத்தை பாடி இறைவனை வழிபட்டனர்.
ஈசன் மற்றும் அம்பிகை :
ஈசனின் பெயர் வைத்தீஸ்வரர் பெருமாள், அம்பிகையின் பெயர் தையல்நாயகி. மேலும் இத்திருகோவிலில் உள்ள ஈச பெருமான் சுயம்புவாக எழுந்தருளி மூலிகை தைலத்துடன் உள்ளார். வைத்தீஸ்வரர் என்ற பெயருக்கு மருத்துவர் என்ற பெயரும் உண்டு.
கோவில் வரலாறு :
செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான “தொழுநோய்’’ வந்ததாகவும் அதனை போக்க சிவ பெருமானே தானாக தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.
ஒருமுறை ராவணன் சீதையை கானகத்தில் இருந்து தூக்கி கொண்டு போகும் பொது , ராவணனை தடுத்த சடாயுவை ராவணன் கொன்றான். அப்போது சடாயுவின் உடல் கீழ் விழுந்தது. அதனை கண்ட ராமன் மற்றும் அவர் தமையன் இலக்குமணன் உடலை கண்டு அந்த உடலுக்கு சிதை மூட்டி எரித்தனர். இந்த சிதை இக்குளத்திற்கு அருகாமையில் உள்ளது. ஆதலால் இக்குளம் “சடாயு குளம்’’ என்று அழைக்கப்படுகிறது.
அது மட்டும் அல்லாது இந்த கோவிலின் மட்டற்ற பெருமை சித்தர்கள் பாற்கடலில் கலந்த அமிர்தத்தால் அபிஷேகம் சேயும் போது அந்த அம்ரிதம் சிதறி குளத்தில் விழுந்தது. ஆதலால் இத்திருக்குளம் “சிதர்கள் அம்ரிதா தீர்த்தம்’’ என்ற பெயர் பெற்றது.
கோவிலின் சிறப்பம்சம் :
இத்திருக்கோவிலில் உள்ள கோபுரங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அமைந்து உள்ளது. அது மட்டும் அல்லது கோவிலில் நவகிரஹம் ஈசனின் பின் உள்ளது.
இந்த திருகோயில் ஆனது பதினாறு தீர தளங்களில் ஒன்று. இந்த கோவிலில் அணைத்து நோய்களும் தீர்வாக உள்ளது. இங்கு வைத்தீஸ்வரர் கோவில் என்பதால் தன்வந்திரி உள்ளார்.
மேலும் இத்திருகோவிலில் உடம்பில் கட்டிகள், முகபரூ மற்றும் நோய் ஆகியாவை இத்திருகோவிலில் தரும் எண்ணயை வாங்கி குணம் பெறுகின்றனர். வைத்தீஸ்வரர் கோவிலில் தான் தன்வந்திரி ஜீவ சமாதி ஆனார்.
சுமார் ஐந்து ஆயிரம் நோய்களை குணபடுத்தும் வல்லமை பெற்றது இத்திருத்தலம். மேலும் இத்தலத்தில் கொடுக்கப்படும் திருசாந்து உருண்டை மிகும் பிரசித்தி பெற்றது. இந்த உருண்டை வேம்பு, சந்தனம் மற்றும் திருநீறு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. இவை அனைத்தும் எம்பெருமானுக்கு ஆகும்.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பு இந்த கோபுர வாசலில் ஆதி சிவன் உள்ளார். இந்த சினை வழிபட்டால் ஆயிரம் சிவனை வழிபட்டதற்கு சமம் என்பது ஆன்றோர் வாக்கு.

மயிலாடி திருத்தலத்தில் முருகப்பெருமான் வடதிசை நோக்கி தவக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் - சீர்காழி இடையே புத்தூர்பழையாறு சாலையில் கிழக்காக ஒரு கிலோமீட்டர் தூரத்தில் திரு மயிலாடி திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான் வடதிசை நோக்கி தவக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகன் அருள்பாலிக்கும் தலம் என்றாலும், மூலவர் சிவபெருமானே.
தல வரலாறு :
திருக்கயிலையில் உமாதேவியோடு சிவ பெருமான் வீற்றிருந்தார். அப்போது அவர்களிடையே ஒரு விவாதம் உண்டானது. தங்களிருவரில் யார் பேரழகு என்பதாய் தொடங்கிய அந்த விவாதத்தில் ‘இணையில்லாத பேரழகு வடிவினன் நான்தான்’ என்றார் சிவபெருமான்.
‘இல்லையில்லை.. என்னை மிஞ்சிய அழகு யாருக்கும் இல்லை’ என்றார் சக்தி.
விளையாட்டு வினையானது.. கோபத்தில் சிவன் அங்கிருந்து மறைந்து போனார். ஈசனைக் காணாது சக்தி தேடத் தொடங்கினாள். மயில் உருவம் கொண்டு பல இடங் களில் தேடிய பார்வதி, இறுதியாக கண்ணுவாசிரமம் என்றழைக்கப்பட்ட இத்தலத்திற்கு வந்தார். பின்னர் ஈசனை நினைத்து துதித்தார். இதையடுத்து சிவ பெருமான், கண்ணுக்கு இனிய எழிற்கோலத்துடன் சுந்தரலிங்கமாக வெளிப்பட்டு உமாதேவிக்கு காட்சி தந்தார். அந்த வடிவத்தைக் கண்டு மயங்கிய அம்பிகை, தோகை விரித்து ஆனந்த நடனமாடினாள். அது முதல் இத்தலத்திற்கு ‘திருமயிலாடி’ என்ற பெயர் உண்டாயிற்று.
இத்தல சிவபெருமான் ‘சுந்தரேஸ்வரர்’ என்ற பெயர்கொண்டு அருள்பாலிக் கிறார். இறைவி பெரியநாயகி எனப்படும் ஸ்ரீபிரகன்நாயகி. வடமொழியில் இத்தலம் ‘கேகிநிருத்தபுரம்’ என்று குறிப்பிடப்படுகிறது. தீர்த்தம் ஆலயத்தின் எதிரிலுள்ள புஷ்பகாரண்ய தீர்த்தம். தலவிருட்சம் வன்னிமரம்.
திருமயிலாடி தலத்தில் சிறப்பாக பார்க்கப் படுவது, இவ்வாலய முருகப்பெருமானாகும். பெரும்பாலான ஆலயங்களில் முருககடவுள் மேற்கு பிரகாரத்தில் கருவறைக்கு பின்னாலிருந்து கீழ்திசை நோக்கி காட்சியளிப்பார். ஆனால் இவ்வாலய முருகன் வடதிசை நோக்கி தவக்கோலத்தில் மகாமண்டபத்திலேயே தரிசனம் தருகிறார். இவர் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னணியில் தேவர்- அசுரர் யுத்தம் இடம்பெற்றுள்ளது.
சிங்களத்தீவில் பத்மாசுரன் என்னும் அசுரன் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் தேவர்களை விரோதித்து துன்புறுத்தி வந்தான். தேவர் களின் சேனாதிபதியாக முருகப்பெருமான் படைநடத்திச் சென்று சூரனை எதிர்த்தார். சூரனோ பகையை வஞ்சனையால் வீழ்த்தக் கருதி அபிசார வேள்வியை செய்தான். யாககுண்டத்திலிருந்து சுரதேவதை வெளிப்பட்டாள். அவள் தேவர்படைகளை வெப்பு நோயால் வாட்டினாள். இதனைக் கண்ட குமரக்கடவுள் திருமயிலாடி வந்து வேலாயுதத்தால் தடாகம் ஒன்றை உண்டாக்கினார். பின்னர் அதில் கங்கையை வரவழைத்து நீராடி, சுந்தரேஸ்வரரை வடதிசை நோக்கி தவம் செய்தார்.
குமரக்கடவுளால் உருவாக்கப்பட்ட இத்தீர்த்தம் புஷ்பகாரண்ய தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் எதிரில் உள்ளது. தனயனின் தவக்கோலத்தைப் பார்த்த பரமன், சீதளா தேவியை வரவழைத்து குமரக்கடவுளுக்கு அளித்தார். சீதளாதேவியுடன் சிங்களம் சென்ற குமரன், சுரதேவதையை சிறைப்பிடித்தார். இதையடுத்து தேவர்கள் சோர்வு நீங்கி புதிய சக்தியைப் பெற்று போரிட்டனர். போரில் வெற்றியும் கண்டனர். முருகப்பெருமானை தவக்கோலத்தில் இத்தலத்திலேயே இருக்குமாறு வேண்டினான் இந்திரன். வடக்கு நோக்கிய முருகனை தெற்குமுகமாக நின்று வணங்கினால், பில்லி, சூனியம், பெரும்பகை அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தேவர்- அசுரர் யுத்தம் முடிந்த பின்னர் சூரனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனை தனது மயில் வாகனமாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான். பின் மயில்மீது அமர்ந்து திருமயிலாடி தலத்துக்கு எழுந்தருளினார். ஆணவமலத்தின் வடிவமாகிய சூரன் மயிலாக நின்று அவரைத் தாங்குகின்றான். ஆணவ மலத்தை அழிக்கமுடியாது, அடக்கத்தான் முடியும், அடங்கியிருந்தாலும் ஆணவம் அவ்வப்போது தன் முனைப்பை காட்டிக் கொண்டிருக்கும் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவது போல முருகப்பெருமானின் உற்சவதிருமேனி இத்தலத்தில் அமைந்துள்ளது. சூரபத்மனாகிய ஆணவமயில் முருகன்பாதத்தில் பாதரட்சையாக தன் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. இடதுகால் பெருவிரலுக்கும் அடுத்தவிரலுக்கும் இடையே தலையை தூக்கி முருகப்பெருமானின் முகத்தை எழுச்சியுடன் பார்த்தவண்ணம் தோற்றமளிக்கிறது. மற்றொரு பாதத்தில் பாதரட்சை காணப்படுகின்றது. இத்தனை எழிலார்ந்த தத்துவ பேருண்மை பொதிந்த உற்சவ மூர்த்தியை திருமயிலாடியில் மட்டுமே தரிசிக்கமுடியும்.

ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கியபடி ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் காட்சி தருகிறது இந்த ஆலயம். ராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே வர பிரம்மசந்தியும், அதையொட்டி மகாமண்டபமும் அமைந்துள்ளன. மண்டபத்துள் கொடிமரமும், கொடிமரத்தின் கீழ் நர்த்தன விநாயகரும், நந்தியம்பெருமானும் இடம்பெற்றுள்ளனர். கொடிமரத்தையொட்டி தெற்கில் குமாரவிநாயகர் அருள்புரிகிறார். அவரையடுத்து குமரக் கடவுள் வடதிசைநோக்கி நின்ற தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவரருகே இடும்பன், கடம்பன் மற்றும் காசிவிசுவநாதர் இடம் பெற்றுள்ளனர்.
திருமயிலாடி திருத்தலத்தில் சிவபரம் பொருள் சுந்தரலிங்கமாக எழுந்தருள்புரிகிறார். கருவறைக் கோட்டத்தில் தெற்கில் தட்சிணாமூர்த்தி உள்ளார். தமிழகத்தில் எந்த ஆலயத்திலும் காணக்கிடைக்காத விதமாக பத்மாசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பது இத்தலத்தில் மட்டுமே. மேற்கே லிங்கோத்பவர் மூர்த்தியும், வடக்கில் கோமுகத்தின் மேற்புறத்தில் நான்முக கடவுளும், அவரருகே ஜெயதுர்க்கா பரமேஸ்வரியும் தரிசனம் தருகின்றனர்.
பிரகாரச்சுற்றில் கன்னி மூலையில் (தென்மேற்கில்) சித்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார். விநாயகர் சன்னிதியின் தெற்கில் சப்தமாதாக்கள், குபேரமூலையில் (வடமேற்கு) கஜலட்சுமி உள்ளனர். ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் தல விருட்சமான வன்னிமரம் நிற்கிறது. கூடவே வில்வமரமும் உள்ளது. வாகன மண்டபத்தை அடுத்து சிவகாமி அம்மையுடன் சிற்றம்பலத்துச் செல்வ பெருமானாகிய ஆனந்த நடராஜமூர்த்தி தரிசனம் தந்தருள்கிறார். நடராஜர் கோவிலின் கீழ்புறம் சனிபகவான் அமர்ந்துள்ளார். அடுத்து அருணாச்சலசிவம் அருள்பாலிக்கிறார்.
கோவிலின் வடகிழக்கே பெரியநாயகி நின்ற திருக்கோலத்தில் காட்சியருள்கின்றார். பெரியநாயகி அம்மனுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. முற்காலத்தில் ஆலய திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஏற்கனவே இருந்த அம்பாளின் சிலை பின்னமடைந்துவிட்டதால் திருப் பணிக்குழுவினர் வேரொறு அம்பாள் சிலையை உருவாக்கினர். இதற்கிடையில் அம்மன் ஊர் பெரியவர்கள் கனவில் தோன்றி, ‘என்னை மாற்ற வேண்டாம். எனக்கு தனி சன்னிதி வேண்டும்’ என்றார். இதையடுத்து பழைய அம்பாளை கருவறையிலும், புதிய அம்பாளை வெளிப்புறமாகவும் அமைத்தனர்.
இவ்வாலய சிவனை குமரக்கடவுள், இந்திரன், வால்மீகி முனிவர், கண்வ மகரிஷி மற்றும் பலர் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்.
திருமயிலாடியில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நூறு ஆண்டுகளுக்கு முன் வைகாசி உற்சவ பெருவிழா சிறப்பாக நடைபெற்றதாக கூறு கிறார்கள். இன்றைய நாளில் மாதந்தோறும் கார்த்திகை விழா மற்றும் பிரதோஷ விழாக்களும், வெள்ளிதோறும் துர்க்கை வழிபாடும், மார்கழி திருவாதிரையில் நடராஜமூர்த்திக்கு தரிசன விழாவும், பங்குனி உத்திரத்திலும் சித்திரை பவுர்ணமியிலும் முருகனுக்கு காவடி எடுத்தலும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது.
இரண்டு விநாயகர்கள் :
ஆலயத்தின் எதிரில் தீரத்தக்கரையில் சுந்தரவிநாயகர் சன்னிதி உள்ளது. இவ்விநாயகர் சைவசித்தாந்தத்தின் செம்பொருளை உலகில் நிலைநிறுத்தும் முயற்சியை மேற்கொண்ட, நீதிசன் என்பவனுக்கு அருள்புரிந்தவராவார். இவரை முதன் முதலாக வேண்டிக்கொண்டு அச்செயல்பாட்டில் ஈடுபட்ட நீதிசன் விநாயகரின் அருளால் அதை முழுமையாக செய்து முடித்தான். பின்னர் விநாயகபெருமான் தந்தருளிய விமானத்தில் ஏறி அமர்ந்து மானுட உடலோடு கணேசபதம் அடைந்தான். கயன் என்பவனின் வேண்டுகோளுக்கிணங்க, அவனது முன்னோர்களுக்கு வீடுபேறு அளித்தவர் இந்த விநாயகர்.
சுந்தரவிநாயகரைப் போல, கண்வ மகரிஷி வழிபட்ட கண்வ விநாயகரும் சக்தி மிக்கவர். இவர், 5 வயது வரை வாய் பேச முடியாமல் இருந்த நிகமாநந்தன் என்பவனுக்கு பேசும்சக்தியை அளித்து ஆட்கொண்டவர். விநாயகர் திருவருளால் பேசும் சக்தியுடன் சகலவித்தைகளும் கைவரப்பெற்ற நிகமாநந்தனுக்கு, இவ்வாலய முருகன் சிவதீட்சை தந்து ‘நிகமாநந்த சிவாச்சாரியார்’ என்னும் தீட்சா நாமமும் கொடுத்தார். இரு விநாயகர்கள் அருள்பாலித்த இத்தலத்து தீர்த்தகரையில், சிரார்த்த காரியங்கள் செய்வது புண்ணியம் ஆகும்.
தினசரி நான்குகால பூஜை நடைபெறும் இக்கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சிதம்பரம்- சீர்காழி பேருந்து மார்க்கத்தில் புத்தூர் பாலிடெக்னிக் பேருந்து நிறுத்தத்தில்இருந்து கிழக்கே பழையாறு துறைமுகத்துக்குச் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருமயிலாடி. சிதம்பரம் - பழையாறு, சீர்காழி- பழையாறு பேருந்துகள் இந்த ஆலயம் வழியாகச் செல்கின்றன.

பித்ருதோஷம் முதல் அனைத்து தோஷங்களும் விலக நாமும் ஒரு முறை ரங்கநாதபுரம் சென்று இங்கு அருள்பாலிக்கும் இறைவன் இறைவியை தரிசித்து வரலாமே.
தமிழ்நாட்டில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல ஆலயங்கள் இன்றும் அவர்கள் பெயரை நாம் மறக்காதபடி செய்து வருகின்றன.
திருச்சிக்கு அருகே உள்ள தலம் திருவானைக்காவல். இங்கு சிவபெருமான் வெண்நாவல் மரத்தின் அடியில் அமர்ந்திருந்தபோது நாவல் மரத்தின் இலைகள் காய்ந்து சருகுகளாய் அவர் மேல் விழுந்தன. இதைக்கண்ட சிலந்தி ஒன்று பதறியது. சிவபெருமான் மேல் சருகுகள் விழுவதா என்று எண்ணிய சிலந்தி அதை தடுக்க முயற்சி செய்தது. சிவபெருமான் தலைக்கு மேல் தன் எச்சிலால் பந்தல் போல் பின்னி அந்த காய்ந்த இலைகள் சிவபெருமான் மேல் விழாமல் தடுத்தது.
அங்கு யானை ஒன்று தினந்தோறும் காவிரி நீரை தன் துதிக்கையில் சுமந்து வந்து இறைவனை நீராட்டி வந்தது. சிலந்தி வலையைக் கண்ட யானைக்கு கோபம் வந்தது. வெகுண்டு அந்த வலையை அறுத்து எறிந்தது. மீண்டும் மீண்டும் சிலந்தி வலை அமைக்க யானை கோபங்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வலையை அறுத்தெரிந்தது. கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் நீரால் யானை வழிபடும் போது அதன் துதிக்கையினுள் புகுந்து கடித்தது. வலி தாங்காத யானை துதிக்கையை தரையில் அடித்தது. யானை இறந்தது. சிலந்தியும் இறந்தது.
இருவரையும் ஆட்கொண்டார் இறைவன். இறைவன் அருளால் அந்த சிலந்தி மறுபிறவியில் சோழ குல மன்னராகிய சுப தேவருக்கும் கமலாவதிக்கும் மகனாகத் தோன்றியது. அந்த மன்னனே கோசெங்கட்சோழன்.
கோசெங்கட்சோழன் தன் முற்பிறவியின் நினைவால் யானைகள் புக முடியாத, யானைகள் தீங்கு செய்ய முடியாத மாடக்கோவில்களை கட்ட முடிவு செய்தான். யானை ஏற முடியாத கட்டுமலை போன்ற அமைப்புடைய உயரமான மாடக்கோவில்களை அமைத்தான். இத்திருப்பணி யானை ஏறாத் திருப்பணி என்ற பெயர் பெற்றது. இச்சோழன் 70-க்கும் மேற்பட்ட மாடக் கோவில்களை ஆலயங்களை கட்டினான். தான் வழிப்பட்ட திருவானைக்கோவிலை முதலில் கட்டினான். இந்த மன்னன் கட்டிய இரண்டாவது ஆலயமே ரங்கநாதபுரத்தில் உள்ள கஜாரண்யேஸ்வரர் ஆலயம் என தல புராணம் கூறுகிறது.
ஆலய வரலாறு :
சங்க கால இறுதியில் அதாவது கி.பி 3-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த கோசெங்கட்சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் சுமார் 1750 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் எனலாம்.
அரங்கநாதபுரம் என்ற இந்த ஊர் சோழர்காலத்தில் வடக்கில்இருந்து வந்த வடராயா என்ற அந்தணர்களுக்கு தானமாக வழங்கப்பட்டதால் வடராயமங்கலம் என்ற பெயரைப் பெற்றது. எனவே, வடராய மங்கலத்தில் உள்ள ஆனைக்கார பெருமானார் கோவில் என்பது இவ்வூரில் உள்ள கஜாரண்யேசுவரர் என்ற இந்த கோவிலையே குறிக்கும்.
இந்தப் பகுதியில் மன்னர் மாலிக்கபூர் 1311 முதல் 1371 வரை இரண்டு முறை படை எடுத்து வந்து கோவில்களை அழித்தான். அப்போது திருவரங்கம் திருவானைக்காவல் ஆகிய ஊர்களில் இருந்த உலோக மூர்த்தங்களை இப்பகுதி முன்பு காடாக இருந்த தால் இங்கு கொண்டு வந்து மறைத்து வைத்திருந்தானாம். பின் எடுத்துச் சென்றதாக செவி வழி தகவல் ஒன்று உண்டு. திருவரங்கம் திருவானைக்காவல் ஆகிய தலங்களின் மூர்த்தங்கள் இவ்வூரில் வந்து தங்கி சென்றமையால் அவ்வூர்களின் நினைவாக 14-ம் நூற்றாண்டின் முற்பகுதி முதல் இவ்வூர் அரங்கநாதபுரம் என்றும் கஜாரண்யம் (ஆனைக்கா) என்றும் அழைக்கப்படலாயிற்று.
இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் கஜாரண்யேஸ்வரர் என்பது. இறைவனின் வேறு பெயர்கள் ஆனேசர், கரிவனநாதர், ஆனைக்காரப் பெருமானார், கஜ ஆரோகணஈஸ்வரர், திருவானேஸ்வரர் என்பது. இறைவியின் பெயர் காமாட்சி.

காமாட்சி
ஆலய அமைப்பு :
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்திருந்தாலும் மேற்கு புற வாயிலையே பயன்படுத்துகின்றனர். அழகிய சுற்று மதிலைக் கொண்ட இக்கோவிலுக்கு வடபால் சிறிய ராஜகோபுரம் உள்ளது. அதன் எதிரே தீர்த்த குளம் உள்ளது.
ஒரு சமயம் இந்திரனின் ஐராவத யானை மெய்மறந்து நியமம் என்ற ஊரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபாடு செய்தது. அதைத் தேடிக்கொண்டு வந்த இந்திரன் கோபம் கொண்டு அந்த யானையின் மீது தனது வஜ்ரா யுதத்தை வீசினான். அப்போது சிவபெருமான் செய்த ஊங்காரத்தால் அந்த வஜ்ராயுதம் கஜாரண்யத்தலத்தில் வந்து விழுந்து நின்றது. அது குத்திய இடத்தில் நீருற்று வந்தது. அதுவே வச்சிரத் தீர்த்த குளமாயிற்று. இந்திர சாபம் என்ற தீர்த்த கிணறும் ஆலயத்தின் கிழக்கு திருச்சுற்றில் உள்ளது. இந்த ஆலய தீர்த்தங்கள் இவையே. இத்தீர்த்தத்தில் நீராடி தனது செயலுக்கு வருந்தி இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை வணங்கி பேறு பெற்றானாம் இந்திரன்.
இந்த மாடக்கோவிலின் முன் பகுதியில் இரு முன்னங்கால்களோடு நிற்கும் நிலையில் உள்ள யானையின் முகம் அமைந்துள்ளது. இத்தல இறைவன் எழுந்தருளியுள்ள பாங்கு அந்த யானை மீது அவர் அமர்ந்துள்ளது போலவே அமைந்துள்ளது. இதனாலயே இத்தல இறைவன் கஜஆரோகணஈஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். காளையை வாகனமாகக் கொண்ட சிவபெருமானுக்கு இவ்வூரில் யானையும் வாகனமாக அமைந்துள்ளது ஒரு சிறப்பு அம்சம்தானே.
ஆலயத்தின் தென்திசை படிகட்டுகளில் ஏறி வடபுறம் திரும்பினால் ஆலயத்தின் சிறப்பு மண்டபத்தினுள் நுழையலாம். அடுத்துள்ள மகாமண்டபத்தின் வலதுபுறம் அன்னை காமாட்சி நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் இன் முகம் தவழ தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னை தன் மேல் இருகரங்களில் தாமரை மலரையும் கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்பாலிக் கிறாள். மகா மண்டபத்தின் மத்தியில் நந்தி இருக்க அர்த்த மண்ட பத்தைத் தாண்டி உள்ள கருவறையில் இறைவன் கஜாரண்யேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக் கிறார். இறைவனின் மேனியில் நடுவே பிரம்ம ரேகை என அழைக்கப்படும் ஒரு கோடு உள்ளது. தீ ஜுவாலையின் அடிபாகம் சற்றே அகன்றும் மேலே செல்லச் செல்ல அந்த ஜுவாலை குறுகியும் செல்வது போல் அந்தக்கேடு அமைந்துள்ளதால் இத்தல இறைவன் ஜோதி சொரூபமானவர் என்கின்றனர் பக்தர்கள்.
மாடக்கோவிலின் தென்புறம் தென்முகக் கடவுளும் வடபுறம் விஷ்ணு துர்க்கையும் எழுந்தருளியுள்ளனர். தட்சிணாமூர்த்திக்கு எதிரே தல விருட்சமான வில்வமரம் தழைந்தோங்கி நி்ற்கும் அழகைக் கண்ட காஞ்சி மகாப்பெரியவர் மனம் உருகி இக்காட்சியை பாராட்டினாராம்.
ஆலயத்தின் தென் மேற்கு திசையில் பல்லவர் கால கட்டிட அமைப்பை கொண்ட வலம்புரி விநாயகர் சன்னிதி உள்ளது. அடுத்து வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதியும், மகாலட்சுமி சன்னிதியும் உள்ளது.
வடக்குப் பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதியும் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயக்கர்கள் சன்னிதியும் உள்ளன. பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கான ஆலயம் இது.
வழிபாடுகள் :
தினசரி இரண்டு கால பூஜை நடைபெறும் இங்கு மாதப் பிரதோஷம், மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், கந்த சஷ்டி, கார்த்திகை யாவும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு பலநூறு பக்தர்கள் சூழ அன்னாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெறுகிறது.
நவராத்திரியின் போது அன்னையை ஒன்பது நாட்களும் விதம் விதமாக அலங்காரம் செய்வதும் அதைக் காண பக்தர்கள் கூட்டம் கூட்டமாய் வருவதும் வழக்கமான ஒன்று.
குழந்தை பேறு கிடைக்கவும், கடன்களிலிருந்து நிவாரணம் பெறவும், உடல் பிணிகள் தீரவும், பித்ரு தோஷம், கிரக தோஷம் நீங்கவும், பூரட்டாதி நட்சத்திரத்தன்று ஏழு மாதங்கள் இறைவனுக்கும் இறைவிக்கும் அர்ச்சனை செய்து 7-வது மாதம் இறைவன் இறைவிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அன்னதானம் செய்வதால் இவைகளிலிருந்து பூரணமாக விடுபடலாம் என்று நம்புகின்றனர் பக்தர்கள்்.
சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் ஆலய கும்பாபிஷேக நாள். அன்று நடைபெறும் சிறப்பு ஹோமங்களில் ஏராளமான பேர் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். அன்று அன்னதானமும் நடைபெறுகிறது.
இக்கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்திருக்கும். பித்ருதோஷம் முதல் அனைத்து தோஷங்களும் விலக நாமும் ஒரு முறை ரங்கநாதபுரம் சென்று இங்கு அருள்பாலிக்கும் இறைவன் இறைவியை தரிசித்து வரலாமே.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. பிரதான சாலையில் இறங்கி 2 கி.மீ நடக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் மினி பஸ் வசதி உண்டு.

எப்போதும் அமைதி நிலவும் மயிலம் முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்தி லிருந்து பார்க்கும்போது அந்த குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது.
கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோயிலைப் போலவே இந்த மலையையும் புனித மாகக் கருதி பக்தர்கள் வழி படுகிறார்கள்.
முருகப் பெருமானால் போரில் சூரபத்மன் தோற் கடிக்கப்பட்டான் அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி... மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார். அப்போது ‘‘என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!’’ என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான்.
மேலும் ‘‘மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு ‘மயூராசலம்’ எனப் பெயர் வழங்க வேண்டும். தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன் பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!’’ என்றும் கோரிக்கை வைத்தான்.
உடனே முருகன் அவனிடம் ‘‘எதிர் காலத் தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!’’ என்று கூறிவிட்டு மறைந்தார். சூரபத்மன், அதுவரை மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். ‘மயூரா சலம்’ என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.
பாலசித்தர் வழங்கும் வேலாயுதம் :
பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எவரிடமும் சரணடையாத முருகனது வேலாயுதம், பாலசித்தரிடம் வசமானது என்பது ஐதீகம். இதிலிருந்து பாலசித்தரின் சக்தி விளங்கும். இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவின்போது சூர சம்ஹாரத்துக்குக் புறப்படும் முருகர், பாலசித்தரிடமிருந்தே வேலாயுதத்தைப் பெற்றுச் செல்கிறார்.
பாலசித்தருக்கு அடுத்து மூலவர் காட்சி தருகிறார். வள்ளி- தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் முருகனின் ஒரு கையில் வேல். இன்னொரு கையில் சேவற்கொடி. பெரும்பாலான கோயில்களிலும் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியோ, நேராகவோ இருக்கும். இங்கு மட்டும் வடக்குத் திசையை நோக்கியபடி இருப்பது கோயிலின் சிறப்பு.
தவத்துக்கு உரிய திசை வடக்கு. சூரபத்மன் இங்கு வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி அமரும் பெருமை இங்குள்ள மயில் வாகனத்துக்கு கிடைத்திருக்கிறது.
3 உற்சவர்கள் :
மயிலம் கோயிலில் முருகன் மூன்று விதமான உற்ச வராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர்.
பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக் குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார். மலையைச் சுற்றி இருக்கும் மூன்றாம் பிராகாரத்தில் வீதியுலா நடக்கிறது.
பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்தரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக் கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வலம் வருவார் இந்த மூலவர்.
இரண்டாவது மூலவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி. பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரை புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். 5 நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் 6&வது நாளன்று திரும்பி வருவார்.
மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான்.
இவை தவிர சித்திரையில் வசந்த உற்சவம், ஆனியில் ஏழு நாட்கள் லட்சார்ச்சனை என இங்கு பெரும்பாலும் திருவிழா மயம்தான்!
முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.
மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மயிலம் கோயிலில் செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன் பணப் பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.
இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.
எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்!
வள்ளிமனாளனுக்கு அபிஷேகம் :
மயிலம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழாவுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆடி கிருத்திகையையட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகங்கள் செய்யப்படும்.
பின்னர் தங்க கவசத்தில் அலங்கரிக்கப்பட்ட மூலவர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் மலையை சுற்றியுள்ள நெல்லி மற்றும் மாந்தோப்புகளில் உணவு சமைத்து அன்னதானம் வழங்குவார்கள். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பக்தர்கள் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் நிலையம் அமைக்கப்பட்டு சிறப்பு பஸ்கள் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கடலூர் ஆகிய மார்க்கங்களில் விடப்படவுள்ளன. சென்னை பஸ்கள் செண்டூர் வழியாக மயிலம் வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் இருசக்கர வாகனங்களில் வந்திருந்து தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீல ஸ்ரீசிவஞான பாலயசுவாமிகள் தலைமையில் திருமடத்தினர் செய்துள்ளனர்.
மயிலத்துக்கு எப்படி செல்வது? :
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் இருக்கிறது மயிலம். புதுவை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களி லிருந்து அடிக்கடி பஸ்கள் உண்டு. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம் கோயில்.
இங்கிருந்து பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை பஸ் போகிறது. தங்கும் வசதியோ, பெரிய ஓட்டல்களோ இல்லாத கிராமம் என்பதால், தொலைதூரத்திலிருந்து வருகிறவர்கள் பக்கத்து நகரங்களில் தங்குவது உண்டு. இதற்கு பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் இருப்பதால் எல்லாவற்றையும் தரிசிக்கும் ஏற்பாடுகளோடு பக்தர்கள் வரலாம்.
வாகனங்களில் வருகிறவர்கள் நேராக மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல சாலை வசதி உள்ளது. இது தவிர நடந்து வருகிறவர்களுக்காக நேர்த்தியாக அமைக்கப்பட்ட படிக்கட்டு வழி உள்ளது.
இத்தகைய பல்வேறு பெருமை களைத் தாங்கிய மயிலம் திருத்தலத்தை அருணகிரிநாதர், ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள், வைத்தியநாத தேசிகர், பண்ருட்டி மணி அய்யர், அப்பாவு அய்யர், ஆ.சிவலிங்கனார், தியாகராஜ கவிராயர், வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள், நமச்சிவாய முதலியார், தே.ஆ.சீனிவாசன், இராஜ மாணிக்கம் நடராஜன், இரத்தின முதலியார், வீரபத்திரன், பெரிய சாமிப்பிள்ளை, திரு.வி.கலியாண சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், வே.விஜயரங்கம் உள்ளிட்ட பல்வேறு புலவர்கள் போற்றிப் பாடியுள்ளனர்.
மயிலம் தலத்தில் ஆனி மாத திருவாதிரை குருபூஜை, மாதக்கிருத்திகைகள், கந்தசஷ்டி பெருவிழா(சூரசம்ஹாரம்), பங்குனி உத்திரப் பெருவிழா, தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
நடை திறப்பு :
நாள் தோறும் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். ஞாயிறு மற்றும் விழாக் காலங்களில் கோவில் முழுநேரம் திறந்திருக்கும்.

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு தனிக்கோவில் திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு தனிக்கோவில் திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ராகுபகவான் சிவபெருமானை நோக்கி தவமிருந்து பூஜித்ததால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது. திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் ராகுபகவான் தனது இரு தேவியர்களுடன் மங்கள ராகுவாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
ராஜ வம்சத்து மன்னன் ஒருவருக்கும் அசுரகுல பெண்ணுக்கும் மகனாக பிறந்தார் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடம் இருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது தலையில் அடிக்க, தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆனது. ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்கு கொடுத்து, அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.
சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மனை நாக அரசனான தக்கன் தீண்டியது. இதை அறிந்த முனிவர் கோபம் கொண்டு, தன் மகனை தீண்டிய தக்கன் பூலோகத்தில் மனிதனாக பிறக்கும்படி சாபம் கொடுத்தார். இந்த சாபம் நீங்க காசிப முனிவரின் ஆலோசனைப்படி பூமிக்கு வந்து திருநாகேஸ்வரத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தனது மனைவியருடன் வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாப விமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் நாகநாதர் என்ற பெயரில் அருளாசி வழங்கி வருகிறார்.
தல வரலாறு :
கயிலாயத்தில் சிவபெருமானை மட்டுமே பிருகு முனிவர் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பார்வதி, சிவனிடம் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தார். பார்வதியின் தவத்துக்கு மகிழ்ந்த இறைவன் அவளுக்கு தன் உடலில் பாதியை கொடுத்து உமையொரு பாகமானார். அர்த்தநாரீஸ்வரர் வடிவம் உலகில் பல இடங்களில் அமைய வேண்டும் என்று வேண்டினாள்.
அதன்படி இந்த தலத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவில் சிவபெருமான், பார்வதி தேவி காட்சியளிக்கின்றனர். இறைவன் பெயர் நாகேஸ்வரர். சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவியின் நாமம் பிறையணிஅம்மன். மகாசிவராத்திரி அன்று ராகு பகவான் நாகநாத சுவாமியை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றார். இதனால் தினமும் சிவ தரிசனம் பெறவேண்டி தனது மனைவிகள் நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் மங்கள ராகுவாக திருநாகேஸ்வரத்தில் தங்கி விட்டார்.
பொதுவாக ராகுபகவான் மனித தலை, நாக உடலுடன் தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில் தனிச்சன்னிதியில் மனித வடிவில் காட்சி தந்து தம்மை வழிபடுவோருக்கு கிரக தோஷம் நீக்கி, ராஜயோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்கிறார்.
இந்த கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டு தங்கள் குறைகள் நீங்கப்பெற்று வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற்று வருகின்றனர். இத்தல இறைவனுக்கு நாகநாதர், அர்த்தநாரீஸ்வரர் என இரு சன்னிதிகள் உண்டு. அதைப்போல அம்மனுக்கு பிறையணி வாநுதல் உமை சன்னிதி, கிரிகுஜாம்பிகை சன்னிதியும் உண்டு. இத்தலத்தில் ராகுபகவான் உருவாக்கிய நாக தீர்த்தம், சூரிய தீர்த்தம், எம தீர்த்தம் உள்ளிட்ட 12 தீர்த்தங்கள் இருக்கின்றன. ஆதி விநாயகர், கிரிகுஜாம்பாள், சரஸ்வதி, லட்சுமி, நவக்கிரகங்கள், அறுபத்து மூவர்கள் மற்றும் இதர தெய்வங்களுக்கும் சன்னிதி உண்டு.
ராகுவை போல் கொடுப்பாரும் இல்லை. கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பது பழமொழி. ஒருவர் ஜாதகத்தில் 3, 6, 11 ஆகிய இடங்களில் ராகு விளங்கினால் ராஜயோகம் கிட்டும்.
பரிகாரமுறை :
ஜாதகத்தில் ராகு திசை நடப்பவர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று திருநாகேஸ்வரம் கோவிலுக்கு வந்து விநாயகர், சிவன், கிரிகுஜாம்பாள் ஆகியோரை வழிபட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ராகு காலத்தில் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஹோமம், நாகசாந்தி செய்யலாம். கோவிலில் உள்ள வன்னி மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால் திருமண தோஷம் விலகும். அதே போன்று வீட்டிற்கு நாகம் வந்தால் அவர்கள் பித்தளையில் நாக வடிவினை செய்து கோவிலில் வைக்க வேண்டும். நாகதோஷம் உள்ளவர்கள் கல்லால் ஆன நாக வடிவை வைத்து தோஷம் நீங்க வழிபாடு செய்ய வேண்டும்.
ராகு திசை கடுமையாக பாதித்தால் செவ்வாய்க்கிழமை அஷ்டமி, பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் துர்க்கை, காளியை வழிபடுவது நல்லது. உளுந்துசாதம், புளியோதரை, தயிர் சாதம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். நாகநாதருக்கு விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தால் சகல தோஷங்களும், துன்பங்களும் நீங்கி நாகநாதரின் பரிபூரண அருள் கிடைக்கும்
வழியும் - தூரமும் :
திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் சாலையில் 6 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து 30 நிமிடம் பயணம் செய்தால் கோவிலை சென்றடையலாம். கும்பகோணத்தில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல அடிக்கடி பஸ்வசதி உள்ளது. ராகு பெயர்ச்சியையொட்டி சிறப்பு ஹோமங்கள், தயிர் பள்ளயம், சந்தனகாப்பு அலங்காரம், அன்னதானம் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

சிவாலயங்களில் பிரகாரச்சுற்றில் மற்ற நாயன்மார்கள் ஒரே இடத்தில் வீற்றிருக்கையில், இவர் மட்டும் கருவறையின் அபிஷேக நீர் வெளியேறும் கோமுகம் அருகே தனிச் சன்னிதியில் இடம் பெற்றிருப்பதை காணலாம்.
இறைவன் இணையற்றவன், அவனை வழிபட கோடிக்கணக்கில் செலவிட்டு ஆடம்பரமாக பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. மனதால் நினைத்து.. வாயால் போற்றி.. நினைவில் நிறுத்தி.. கையில் கிடைப்பதை மனமுவந்து படைத்து.. மனமுருக மெய்யுருக பிரார்த்தனை செய்தாலே போதுமானது. தன்னை நம்பும் எவரையும் இறைவன் கைவிடுவதில்லை.
இதற்கு உதாரணம், சண்டேசுவர நாயனாரின் வரலாறு.
சண்டேசுவரர், சண்டிகேசுவரர் என இருவிதமாக அழைக்கப்படும் இவர், நாயன்மார்களில் ஒருவர். ஈசுவர பட்டம் பெற்ற ஐவரில் ஒருவர். சிவாலயங்களில் பிரகாரச்சுற்றில் மற்ற நாயன்மார்கள் ஒரே இடத்தில் வீற்றிருக்கையில், இவர் மட்டும் கருவறையின் அபிஷேக நீர் வெளியேறும் கோமுகம் அருகே தனிச் சன்னிதியில் இடம் பெற்றிருப்பதை காணலாம்.
சிவாலயங்களில் நடைபெறும் அர்த்தசாம பூஜையின்போது இறுதியாக இவருக்கும், பைரவருக்கும் தீபாராதனை காட்டி முடித்த பின்னரே ஆலயத்தை மூடும் வழக்கம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இதுமட்டுமின்றி ஆலய திருப்பணியை தொடங்கும்போது இவரது சன்னிதியின் திருப்பணியே முதலில் தொடங்கப்படுவதும், விழாக் காலங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவில் ஐந்தாவது மூர்த்தியாக இவரின் உற்சவத்திருமேனி அலங்கரிக்கப்பட்டு வீதியுலா கொண்டுவரப்படுவதும் இவருக்குரிய சிறப்பாகும். இத்தகைய சண்டி கேசுவரர், சிவனால் ஆட்கொள்ளப்பட்டவர்.
சோழவள நாட்டில் சேய்ஞலூர் என்னும் ஊரில், எத்தச்சன் என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி பெயர் பவித்ரை. இந்த தம்பதியினருக்கு இறையருளால் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு விசாரு தருமன் என்ற பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். ஏழாம் வயதில் குருகுலத்தில் சேர்த்து வேதவிசாரங்களையும் கற்றுத் தந்தனர். அனைத்தையும் கவனமுடன் கற்ற விசாருதருமன், கல்வி கேள்விகளில் ஞானமுள்ளவனாக திகழ்ந்தான்.
அவன் ஓய்வு நேரங்களில் தன் பள்ளி தோழர் களுடன் பழவாறு என்ற பகுதிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி சென்ற ஒருநாளில் அங்கு மேய்ந்துக் கொண்டிருந்த ஆநிறைக் கூட்டத்தில் கன்று ஈன்ற பசு ஒன்று, தன் கன்றுக்கு இடையூறு தர வருவதாக தவறாக எண்ணி அருகினில் வந்த இடையனை முட்டச் சென்றது. கோபமுற்ற இடையன் கன்று ஈன்ற நிலையில் இருப்பதையும் பொருட்படுத்தாது பசுவை அடித்தான். இது கண்டு வேதனையுற்ற விசாருதருமன் உள்ளூர் வேதியர்களின் அனுமதியைப் பெற்று அப்பசுக்களை மேய்க்கும் பணியை தானே ஏற்றுக்கொண்டான்.
அனுதினமும் பசுக்களை வேதியர் இல்லங்களிலிருந்து ஓட்டிவந்து, புற்கள் அதிகமுள்ள இடத்தில் மேய்த்து, பழவாற்றுக்கு ஓட்டிச்சென்று நீர் அருந்தச்செய்து, பின்னர் வீடுகளுக்கு ஓட்டிச் செல்வான். பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், சிவனை மனதால் வணங்கியும் வந்தான். மண்ணியாற்றின் கரையில் அத்திமர நிழலில் மணலை குவித்து சிவலிங்கத்தை வடிவமைத்து அனுதினமும் அதற்கு பூஜை செய்தான். அப்போது அபிஷேகத்திற்கு பசுக்களின் பாலையும் பயன்படுத்தினான்.
இதைப் பார்த்த வழிப்போக்கன் ஒருவன், பசுவின் சொந்தக்காரர்களிடம் இதுபற்றி தெரிவித்தான். அவர்கள் விசாருதருமனின் தந்தை எத்தச்சனை அழைத்து கடிந்து கொண்டனர். எத்தச்சன் தன் மகனின் செயலுக்காக மன்னிப்புக் கோரியதுடன், அவனை தண்ணடிப்பதாகவும் தெரிவித்தார்.
மறுநாள் வழக்கம் போல பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற விசாருதருமன், அவைகளை மேயவிட்டுவிட்டு பூஜை பணிகளை தொடங்கினான். சிவலிங்கத்தை உருவாக்கி அபிஷேகம் செய்து மலர்களை பறித்துவந்து மாலையாக்கி சூட்டி பூஜையில் ஈடுபட்டான். இக்காட்சிகளை சற்று தூரத்தில் மறைந்திருந்து பார்த்த எத்தச்சன், கோபத்தில் ஒரு கோலால் மகனை தாக்கியதுடன் அபிஷேகத்திற்காக வைத்திருந்த பாற்குடத்தை காலால் எட்டி உதைத்தார். தந்தையின் செயலை சற்றும் எதிர்பாராத விசாருதருமர் அதை சிவபாதகமாக கருதி, தந்தை என்றும் பாராமல் ஒரு கோலை எடுத்து ஓங்கினார். அது மழுவாக மாறி எத்தச்சனின் கால்களை துண்டிக்க, அவர் அந்த இடத்திலேயே உயிர்நீத்தார்.
இவை எதுப்பற்றியும் கவலைக்கொள்ளாது விசாருதருமர், தன் போக்கில் சிவபூஜையை தொடர்ந்தார். விசாருதருமரின் பூஜையால் மகிழ்ந்த சிவபெருமான், மணல் லிங்கத்தில் இருந்து சிவசக்தி சமேதராய் காட்சி தந்தார். விசாருதருமர் அவரை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். சிவன் அவரை தம் கரங்களால் பற்றி ‘எம்பொருட்டு உம் தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச் செய்தாய். இனி உமக்கு நாமே தந்தையாவோம்’ என்று அருள் புரிந்து தழுவிக்கொண்டார்.
இறைவனால் தீண்டப்பட்டதால் விசாருதருமர் பேரொளி பெற்றார். சிவபெருமான் அவரை தம் தொண்டர்களுக்கெல்லாம் தலைவனாக்கியதுடன், தாமுண்ட அமுதும், தனக்கு சூட்டப்பட்ட பரிவட்டமும் உமக்கும் ஆகுக என்று அருள்புரிந்தார். சண்டீசன் என்ற பதவியையும் அளித்தார்.
சண்டேசுவரரின் பாலாபிஷேகத்தை ஏற்றுக் கொண்ட காரணத்தால் அவர் பிரதிஷ்டை செய்த லிங்கம் பாலுக்குகந்த நாதராகி வழக்கில் பாலுகந்தநாதராக பெயர்பெற்றது. இவ்வரலாறு நிகழ்ந்த இடமான திருஆப்பாடி (ஆ என்பது பசுவையும் பாடி என்பது மேய்ச்சல் காட்டையும் குறிப்பதாகும்), பேச்சு வழக்கில் ‘திருவாய்ப்பாடி’ என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் சண்டேசுவரரின் அவதார தலமான சேய்ஞலூரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வடக்கிலும், திருப்பனந்தாளில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் தெற்கிலும் இருக்கிறது.
கிழுக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு, ராஜகோபுரம் இல்லை. நந்திதேவரையும் பலிபீடத்தையும் வணங்கி உள்ளே வர வவ்வால் நெற்றி மண்டபமும், அதனை அடுத்து மகாமண்டபமும் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான் மற்றும் நடராஜர் சன்னிதிகள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் சண்டிகேசுவரர் சன்னிதி இருக்கிறது. கருவறையில் சிவன் சுயம்பு மூர்த்தியாகவும் அனுக்கிரக மூர்த்தியாகவும் இருந்து அருள்பாலிக்கிறார்.
மற்ற ஆலயங்களில் பிரகாரச் சுற்றில் இருக்கும் சண்டேசுவரர், இத்தல இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதாலும், ஈசுவர பட்டமும் சண்டீச பதவியை பெற்றதாலும் இத்தலத்தில் இறைவனுக்கு இடதுபக்கத்தில் கருவறையை ஒட்டிய அர்த்த மண்டபத்தில் தென்முகமாக இருந்து அருள்பாலிக்கிறார். இக்காட்சி வேறு எந்த ஆலயத்திலும் காணக்கிடைக்காதது. சேய்ஞலூரில் அவதரித்து திருவாய்பாடியில் முக்திபெற்ற சண்டேசுவரரை பதவி உயர்வு வேண்டுவோரும் பணி நிரந்தரம் வெண்டுவோரும் பிரார்த்தனை செய்து வழிபட்டுச் செல்கின்றனர். மாசி மாத அமாவாசைக்கு முன்தினமான சிவராத்திரியில் இவருக்கு பிரம்மோற்சவம் நடத்தப்படுகின்றது.
கை தட்டும் வழக்கம் :
சிவபெருமானுக்குப் படைக்கப்படும் உணவு மற்றும் உடைகளுக்கு அதிபதியான இவர், சதாநேரமும் தியானத்தில் இருப்பவர். சிவபெருமானுக்கு படைக்கப்படும் பொருட்கள் இவர் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக ஐதீகம். ‘சிவன் சொத்து குலநாசம்’ என்ற கருத்தின் அடிப்படையில், சிவாலய வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வருவோர், ஆலயத்திலிருந்து எந்த பொருளையும் எடுத்துச் செல்லவில்லை என்பதை உணர்த்தும் விதமாக இவர் திருச்சன்னிதி முன் நின்று இருகரங்களையும் விரித்துக் காட்டி பின் ஒன்றோடொன்றாய் தேய்த்து வெறுங்கையாகச் செல்கிறோம் என்பதாக உணர்த்திவிட்டு வணங்கிச் செல்வது வழக்கம். இதுவே நாளைடைவில் கைதட்டலாகவும், சொடுக்குப் போடுவதாகவும் உருமாறியது.
தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் இந்தக் கோவில் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி யில் இருந்து இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கும்பகோணம், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோயில் ஆகிய ஊர்களிலிருந்து திருவாய்ப்பாடிக்கு பேருந்துகள் உள்ளன. சென்னையில் இருந்து சேத்தியாதோப்பு மார்க்கமாக கும்பகோணம் செல்லும் பேருந்துகள் திருவாய்ப்பாடி வழியாகவேச் செல்கிறது.

சென்னை பாரிமுனை அருகே சவுகார்பேட்டை பகுதியில் உள்ள ஜெனரல் முத்தையா தெருவில் திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் இருக்கிறது.
சென்னை பாரிமுனை அருகே சவுகார்பேட்டை பகுதியில் உள்ள ஜெனரல் முத்தையா தெருவில் இருக்கிறது பைராகி மடம். இங்கு திருவேங்கடமுடையான் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் பூமியில் புதையுண்டு இருந்த திருவேங்கடமுடையான், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரை கண்டெடுத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்துள்ளனர். 60 அடி உயரம் கொண்ட இவ்வாலய நுழைவு வாசல் ஏழு கலசங்களுடன் 5 நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இரண்டு பக்கங்களிலும் வாசல்கள் இருக்கின்றன.
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே நுழைந்ததும் பலிபீடம் உள்ளது. அதற்கடுத்தாற்போல் கருடாழ்வாரை தரிசிக்கலாம். கருவறையில் நான்கு திருக்கரங்களுடனும், வலது கரத்தில் சக்கரம், அபய முத்திரையுடனும், இடது கரத்தில் சங்கு, வரத முத்திரையுடனும், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வெங்கடேசப் பெருமாள் காட்சி தருகிறார்.
அர்த்த மண்டபத்தின் வட பாகத்தில் ரங்கநாதர் தனிச்சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னிதியில் இருந்து வருகையில், வெளிப்புற பிரகாரத்தில் தென்புறம் தனிச்சன்னிதியில் தாயார் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். இந்த ஆலய உற்சவத்தின் போது, தாயார் ஸ்ரீரூபமாக உள்ள கருடவாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார்.
தாயார் சன்னிதிக்கு இடப்பக்கத்தில் கோதண்டராமர் தனிச்சன்னிதியில் சீதா பிராட்டி, லட்சுமணன் சமேதராய் எழுந்தருளியுள்ளார். அருகில் ஆஞ்சநேயரின் சிறிய உருவம் உள்ளது. ராமர் சன்னிதிக்கு எதிரில் ஆஞ்சநேயர் தனிச்சன்னிதியில் இரு கரங்களும் கூப்பிய நிலையில் சாந்த சொரூபமாய் காட்சி தருகிறார்.

அலர்மேலு மங்கை தாயார்
வெளிப்பிரகாரத்தில் சொர்க்கவாசலுக்கு அடுத்தபடியாக ஆண்டாள் புன்னகை பூத்த முகத்துடன், ஒரு கரத்தில் புஷ்பம் ஏந்தி வீற்றிருக்கிறார். ஆண்டாள் சன்னிதிக்கு வலப்பக்கமாக கண்ணன், பாமா, ருக்மணி சமேதராய், நான்கு கரங்களுடனும், வலது, இடது கரத்தில் சக்கரம், சங்கு ஏந்தியும், மற்ற இரு கரங்களினால் புல்லாங்குழல் வாசிப்பது போன்ற தோற்றத்திலும், வேணுகோபாலனாய் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஆண்டாள் சன்னிதிக்கு இடது புறம் தனிச் சன்னிதியில் வராக பெருமாள் அருள்கிறார்.
ஆலய உற்சவங்கள் :
சித்திரை மாதத்தில் 10 நாட்கள் ராமானுஜர் உற்சவம் நடக்கிறது. வைகாசி மாதத்தில் 10 நாட்கள் வரதர் உற்சவம், சுக்ல பட்ச சதுர்த்தியில் நரசிம்மர் ஜெயந்தி, விசாக நட்சத்திரத்தில் நம்மாழ்வார் சாற்றுமுறை, ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, தீபாவளி, கார்த்திகை தீப விழா, வைகுண்ட ஏகாதசி என வருடம் முழுவதும் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
இவ்வாலயம் இந்து சமய அறநிலயத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. பைராகி மடத்தின் பரம்பரை அறங்காவலர் பைராகி மடம் மஹந்த் அலுவல் ரீதியான ஒரு அறங்காவலராக செயல்பட்டு வருகிறார்.
ஆலயம் திறந்திருக்கும் நேரங்கள்: காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் பக்தர்கள் தரி சனத்திற்காக திறந்திருக்கிறது.

மங்களா சாசனம் செய்யப்பெற்ற திவ்ய தேசங்களில் பதினைந்தாவதாக திகழ்வது திருக்கண்டியூர். இன்று இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
அமிழ்தினும் இனிய தமிழில் ஆழ்வார் பெருமக்களால் பாடல் பெற்ற திருமாலின் திருக்கோவில்கள், மங்களா சாசனம் செய்யப்பெற்ற திவ்யதேசங்கள் என்ற புகழுக்குரியவை.
அவற்றுள் பதினைந்தாவது திவ்ய தேசமாக திகழ்வது திருக்கண்டியூர். இது மும்மூர்த்தித் தலம் எனப் பாராட்டப்படுகிறது. ஏனெனில் ஒரே இடத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, சிவ பிரான் மூவருக்கும் தனிக் கோவில்கள் புராண காலத்திலிருந்தே இருக்கின்றன.
இங்கே, திருமாலின் திருக்கோவிலுக்கு அழகிய சுதைச் சிற்பங்கள் மிளிரும் மூன்று அடுக்கு ராஜகோபுரம் சாலை ஓரத்திலேயே எழுந்து விளங்குகிறது. கொடிமரமும், உள்ளே மகாமண்டபத்தில் கருடாழ்வாரும், அருகே ஆஞ்சநேயரும் இருக்கிறார்கள்.
கீழ்த்திசை நோக்கி, நின்ற திருக்கோலத்தில் இருகரங்களில் சங்கு சக்கரம் ஏந்திய படி, வரதகிஸ்தமும், அபய கிஸ்தமுமாக ஸ்ரீதேவி, பூதேவி துணையிருக்கக் காட்சி தருகிறார் பெருமாள். இவரது திருநாமம் ‘அரசாப விமோசனப் பெருமாள்’ என்பதாகும். இப்பெயர் பெற ஒரு புராணக் கதை உள்ளது.
பெயர்க் காரணம் :
முக்கட் பரமனுக்கு இருப்பதனைப் போல, படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும் முன்பு ஐந்து முகங்கள் இருந்தன. அதனால் சிவனும், தானும் ஒன்று என கர்வமடைந்திருந்தார் பிரம்மன். பராசக்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப சிவபெருமான், பிரம்மதேவனின் ஒரு தலையைக் கண்டம் செய்து விட்டார். அதனால் பிரம்ம கபாலம் சிவனுடைய கையில் ஒட்டிக் கொள்ள அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. ஒரு முகத்தை இழந்து நான்முகனாகி விட்ட பிரம்மனின் சாபத்தால், சிவபெருமான் செய்வதறியாது திகைத்தார். அப்போது பிரம்மனே அந்த சாப நிவர்த்திக்கு வழியும் சொன்னார்.
திருமாலின் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, அங்கே கோவில் கொண்டுள்ள பெருமாளை வழிபட வேண்டும். எங்கே நீராடும் போது, பிரம்ம கபாலம் அசைத்து கொடுக்கிறதோ அந்தத் தலம் தான் அரனின் சாபம் போக்கும் திருத்தலமாகும் என்றார்.
ஈஸ்வரனும் பிரம்ம கபாலம் ஏந்திய கையுடன், திருமால் அருள்பாலிக்கும் ஆலய திருக்குளங்களில் மூழ்கி எழுந்தும், எட்டெழுத்து மந்திரம் சொல்லியும் வழிபட்டு வந்தார். இறுதியில் காவிரிக்குத் தெற்கே, குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ள திருக்கண்டியூர் என்னும் இத்தலம் வந்து, கோவிலின் மேற்கே உள்ள தீர்த்தத்தில் மூழ்கும்போது கபாலம் நீர் நிரம்பப் பெற்று, அது கையைவிட்டு நழுவி விழுந்துவிட்டது.
பிறகு திருக்கோவிலுக்கு எதிரே கிழக்கில் உள்ள தாமரைப் பொய்கையில் நீராடினார் சிவபெருமான். அப்போது அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. முன்னது கபாலம் விழுந்ததால் கபால தீர்த்தம் எனவும், பின்னது தாமரை மலர்கள் நிறைந்திருந்ததால் பத்ம தீர்த்தம் எனவும் பெயர் பெற்றன. பிறகு சிவபெருமான் இத்தல பெருமாளை வணங்கி பழைய நிலையை அடைந்தார். எனவேதான் இத்தல இறைவனுக்கு, அரசாப விமோசனப் பொருமாள் என்ற பெயர் ஏற்பட்டது.
பிருகு சாப நிவர்த்தி :
வடமொழியில் உள்ள பிரமாண்ட புராணம் இக்கதையைச் சொன்னாலும், தீந்தமிழ்ப் பாசுரத்தால் திருமங்கை ஆழ்வார் இதனை மெய்ப்பிக்கின்றார்.
‘பிண்டியார் மண்டை ஏந்தி பிறன்மனை திரிதந்துண்ஹம் ஞ
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஓர் உலக மேத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்ய லல்லால் மற்றையர்க் குய்ய லாமே’
தீர்த்தத்தில் மூழ்கி எழுந்த சிவபிரான், பிட்சாடனராக வலம் வந்த போது, திருமகள் பிச்சையிட கபாலம் கையை விட்டு மறைந்தது என்ற கதையும் உண்டு.
பிருகு மகரிஷி என்பவர் இத் தலம் வந்ததும் ‘மகா விஷ்ணு அபசார தோஷம்’ நீங்கப் பெற்றார் என்பதால் பெருமாளுக்கு ‘பிருகு நாதன்’ என்ற திருநாமமும் உண்டு.

ஒருமுறை மாகபலிச் சக்கரவர்த்தி நாராயணருடைய ரத்ன கிரீடத்தை கவர்ந்து சென்றான். அதனால் அவனுக்கு பாவம் ஏற்பட்டு, சித்தபிரமை உண்டானது. இதனால் பல ஊர்களில் பித்தனாக அலைந்து திரிந்தவன், இத்தலப் பெருமாளை சேவித்து பாபதோஷ நிவர்த்தி பெற்றான். அதனால் சுவாமிக்கு பலிநாதன் என்ற பெயரும் விளங்குகிறது.
தேவ குருவான வியாழனின் மனைவி மீது சந்திரன் மோகம் கொண்டான். பிறன் மனை நோக்கிய குற்றத்துக்காக சந்திரனுக்கு குஷ்டநோய் பிடித்தது. இத்தலத்தில் நீராடி மாலவனைப் பூஜித்ததால் நோய் விலகியதாக ஒரு செய்தியும் இருக்கிறது.
இத்தலம் வந்து, திருமகள் நேசனை நினைத்து சித்ரா பவுர்ணமி தினத்தில் கபால தீர்த்தத்தில் நீராடினால், பாபங்கள் போகும் என்று பிரம்மன் அருளியதாக ஒரு புராணக் கதையும் உள்ளது.
சுதர்சனர் :
அரசாப விமோசனப் பெருமாளின் சன்னிதியில் தெற்கு நோக்கியபடி, பதினாறு கரங்களில், பதினாறுவகை ஆயுதங்கள் ஏந்தியபடி சுதர்சனப் பெருமாள் காட்சி தருகிறார்.
கமல விமானத்தின் கீழ் எழுந்தருளியுள்ள பெருமாள் கருவறையில் இருந்து வலச்சுற்றில் தனிச் சன்னிதியில் எழுந்தருளியிருக்கும் தாயார் ‘கமல வல்லி நாச்சியார்’ என்று அழைக்கப்படு கிறார்.
இத்திருக்கோவிலில் பொய்கை ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மணவாள முனிவர் ஆகியோரின் மூர்த்தங்களும், வடமேற்கில் ஆன்டாள் நாச்சியாரின் சிறு கோவிலும் உள்ளன. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்துகாக திறந் திருக்கும்.
திருக்கண்டியூர் வந்து சரஸ்வதி உடனாய பிரம்மதேவர், கமலவல்லி உடனருள் பெருமாள், மங்களநாயகி சமேத பிரம்ம சிர கன்டீசர் ஆகிய மும்மூர்த்திகளையும் வணங்கி நல்லருள் பெறலாமே.
தஞ்சையில் இருந்து வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், திருவையாறில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் குடமுருட்டி ஆற்றின் தென் கரையில் விளங்கும் ஷேத்திரம் தான் திருக்கண்டியூர். தஞ்சையில் இருந்து நிறையபேருந்து வசதிகள் உள்ளது.

பாலக்காட்டில் உள்ள மீன்குளத்திப் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடும் வணிகர்களுக்கு, அவர்களது வணிகம் பெருகிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
ள மாநிலம், பாலக்காடு அருகில் பல்லசேனா எனும் கிராமத்தில் அமைந்திருக்கும் மீன்குளத்திப் பகவதி அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடும் வணிகர்களுக்கு, அவர்களது வணிகம் பெருகிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. மேலும், இங்கு வழிபடும் பக்தர்களுக்குத் திருமணப்பேறு, குழந்தைப்பேறு ஆகியவை கிடைப்பதுடன் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.
தல வரலாறு :
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் சிதம்பரம் பகுதியில் வைர வணிகம் செய்து வந்த வீரசைவ வேளாள (மன்னாடியார்) வகுப்பைச் சேர்ந்த மூன்று குடும்பத்தினர், அப்பகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தால் தங்களது வணிகத்தைத் தொடர்ந்து செய்ய முடியாமல் அங்கிருந்து வெளியேறினர்.
சிதம்பரத்திலிருந்து வெளியேறிய அவர்கள், முதலில் அவர்களது குலதெய்வமான மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கினர். அவர்களில் இளம் வயதினராக இருந்த ஒருவன், கோவிலின் பொற்றாமரைக் குளத்திலிருந்து ஒரு சிறிய கல்லை எடுத்துத் தன்னுடன் வைத்துக் கொண்டான்.
அக்குழுவினர் மதுரையிலிருந்து, தாங்கள் வாழ்வதற்கேற்ற ஒரு நல்ல இடத்தைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். சில நாட்கள் பயணத்திற்குப் பிறகு, கேரள மாநிலம், பாலக்காடு அருகிலுள்ள பல்லசேனா என்னுமிடத்தைச் சென்றடைந்தனர். அந்த இடம் அதிக வளமுடையதாக இருந்ததால், அங்கேயே தங்கிக் கொள்வதென முடிவு செய்தனர். தொடக்கத்தில், அந்தப் பகுதியில் வைர வணிகத்தைச் செய்யத் தொடங்கிய அவர்கள், நாளடைவில், வெளியூர்களுக்கும் சென்று வைர வணிகம் செய்து வளமடைந்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் குளத்திலிருந்து கல்லை எடுத்து வந்தவர், அருகிலுள்ள ஊர்களுக்கு வணிகம் செய்யச் செல்வதாக இருந்தால், அவர் எடுத்து வந்த கல்லை மதுரை மீனாட்சியம்மனாக நினைத்து வழிபட்டுக் கொள்வார், அதிகத் தொலைவிலிருக்கும் ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தால், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நேரடியாகச் சென்று வழிபட்ட பிறகு வணிகத்துக்குச் செல்வது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். அவர் எப்போது வணிகத்துக்குச் சென்றாலும், அவர் கோவில் குளத்திலிருந்து எடுத்து வந்த சிறிய கல்லையும் எடுத்துக் கொண்டு செல்வார்.
இந்நிலையில் ஒருநாள், அவர் வணிகத்துக்காகத் தொலைவிலுள்ள வெளியூர் ஒன்றுக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவர் வணிகத்துக்குத் தேவையான பொருட்களை ஒரு மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டு, கையில் பனை ஓலைக் குடை ஒன்றையும் பிடித்துக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டார்.
செல்லும் வழியில் ஊருக்கு வெளியிலிருந்த குளம் ஒன்றில் நீராடிவிட்டுச் செல்ல விரும்பிய அவர், பனை ஓலைக்குடையை விரித்து வைத்து, அதன் கீழ் அவர் கொண்டு வந்திருந்த மூட்டையையும் இறக்கி வைத்து விட்டுக் குளத்தில் இறங்கி நீராடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு, வயதான காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்ல முடியாதே என்று புதிய கவலை தோன்றியது. அந்தக் கவலையுடனேயே நீராடிவிட்டுக் கரைக்குத் திரும்பினார்.
குளக்கரையில் அவர் வைத்திருந்த மூட்டையையும், குடையையும் எடுக்க முயன்றார். அவர் பல முறை முயற்சித்தும் அதை எடுக்க முடியவில்லை. அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை அழைத்து, அங்கிருக்கும் குடையையும் மூட்டையையும் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்று, குடும்பத்தினர்களை அழைத்துக் கொண்டு திரும்பினார். அவர்களாலும், அவைகளை எடுக்க முடியவில்லை.
அப்போது அவர்களுக்குக் குடை இருந்த இடத்தில் சிறியதாக ஒரு ஒளிவட்டம் இருப்பது தெரிந்தது. அதனைக் கண்ட அவர்கள் ஜோதிடர் ஒருவரை அழைத்து வந்து, குடையையும் மூட்டையையும் எடுக்க முடியாமல் போனதையும், குடை இருக்குமிடத்தில் ஒளிவட்டம் தோன்றி மறைந்ததையும் தெரிவித்தனர்.
அந்தச் ஜோதிடர், அங்கேயேச் சிறிது நேரம் அமர்ந்து தியானித்து விட்டு, அந்தக் குடை இருக்குமிடத்தில் மதுரை மீனாட்சியம்மன் குடியேறி இருப்பது பற்றிச் சொன்னார். அந்தக் குடும்பத்தினர் அவ்விடத்தில் அம்மனுக்குப் புதிதாகக் கோவில் எழுப்பி வழிபடத் தொடங்கினர். அங்கிருக்கும் அம்மன் குடையில் குடியமர்ந்த காரணத்தால், அந்த இடம் குடைமன்னு (குடமந்து) என்று முதலில் அழைக்கப்பட்டது.
அதன் பின்னர், நானூறு ஆண்டுகள் கடந்து விட்டன. அந்தக் கோவிலின் அர்ச்சகர் கனவில் தோன்றிய அம்மன், தனக்குப் புதிதாகப் பெரிய கோவில் ஒன்று கட்டி, அங்கு தன்னை இடமாற்றம் செய்யும்படிச் சொன்னார். அதன் பிறகு, ஊருக்கு நடுவில் பெரிய அளவிலான கோவில் கட்டப்பட்டது.
கோவில் அமைப்பு :
கேரள மாநிலக் கோவில்களைப் போன்று கட்டப்பட்டுள்ள இக்கோவிலுக்கு வடக்கு மற்றும் மேற்கு திசையில் நுழைவாயில்கள் உள்ளன. தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கொடிமரத்தைச் செப்புத் தகடு கொண்டு அலங்கரித்துள்ளனர். கோவில் கருவறையில் அம்மன் பகவதியம்மனாகக் கோவில் கொண்டிருக்கிறார். மீன்கள் அதிகமாகக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த குளத்தினருகே இந்த அம்மன் தோன்றியதால், அம்மனுக்கு மீன்குளத்திப் பகவதி அம்மன் என்றே அழைக்கப்படுகிறார்.
இக்கோவில் வளாகத்தில், சப்த மாதர்கள், கணபதி, வீரபத்திரர், துர்க்கை, பரமேஸ்வரன், பைரவர், பிரம்ம ராட்சஸ், சாஸ்தா ஆகியோருக்குச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலுக்கு வெளியே பெரியகுளம் ஒன்றும் இருக்கிறது.
மீன்குளத்திப் பகவதி அம்மன்
வழிபாடு :
தினமும் அதிகாலை 5 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ஆலயம் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. வார நாட்களில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை யிலும் வழிபாட்டுக்குத் திறந்து வைக்கப்படுகிறது.
இத்தலத்தில் தினசரி வழிபாட்டில், மூன்று வேளை சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இவை தவிர, நிறப்பற சாந்தாட்டம், சோறூட்டல், தங்கத்தாலி, சுயம்வர மலர் வழிபாடு, மலர் வழிபாடு, ஐக்கிய சூத்திரம், பாக்கிய சூத்திரம், சரஸ்வதி மந்திர பூஜை, சந்தனம் சார்த்தல், வெடி பூஜை போன்ற சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன.
சிறப்பு விழாக்கள் :
இக்கோவிலில் கேரள நாட்காட்டியின்படி மேஷம் (சித்திரை) மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில் இக்கோவில் அம்மன் நிறுவப்பட்டதால், அந்நாளை அம்மனின் பிறந்தநாளாகக் கருதிச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. கேரள நாட்காட்டியின்படி கும்பம் (மாசி) மாதத்தில் எட்டு நாட்கள் வரை மாசித் திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாட்களில் ஓட்டன் துள்ளல், கதகளி போன்ற மலையாள ஆட்டங்களின் மூலம் புராணக் கதைகள் சொல்லும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இவை தவிர, நவராத்திரி, திருக்கார்த்திகை, மண்டல விளக்குத் திருவிழா, பள்ளிசேட்டை, பைரவர் திருவிழா என்று பல சிறப்பு விழாக்கள் இக்கோவிலில் நடத்தப்படுகின்றன.
வழிபாட்டுப் பலன்கள்:
இக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்குத் திருமணப்பேறு, குழந்தைப்பேறு ஆகியவை கிடைக்கும். மேலும், இங்கு வழிபடும் பக்தர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்கின்றனர். இக்கோவிலில் இருக்கும் அம்மன் வணிகம் செய்து வந்த குடும்பத்தினரின் வணிகத்தைச் செழிக்கச் செய்தவர் என்பதால், இங்கு வந்து வழிபடும் வணிகர்களின் வணிகம் பெருகிச் செல்வம் அதிகரிக்கும் என்கின்றனர்.
கோவிலுக்கு வெளியிலுள்ள குளத்தில் நீராடிவிட்டு வந்து, அம்மனை வழிபடும் பக்தர்களுக்குத் தீராத நோய்கள் தீர்ந்து போய்விடும் என்பதும் இக்கோவிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
அம்மன் ஊர்வலம்:
மீன்குளத்திப் பகவதி அம்மன் தோற்றத்திற்கு முன்பாக வைக்கப்பட்ட பனை ஓலைக் குடையையும், பொருட்களையும் எடுக்க முடியாமல் போன போது, அவைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மீன்குளத்திப் பகவதி அம்மன் ஊர்வலத்தில் அச்சிறுவர்களின் வழிவந்த குடும்பத்தினர் வீரவாள், திருவிளக்கு போன்றவைகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அமைவிடம் :
கேரள மாநிலம், பாலக்காடு நகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரிலிருந்து 70 கிலோமீட்ட தொலைவிலும் இருக்கும் பல்லசேனா எனுமிடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்லப் பாலக்காடு நகரிலிருந்து அதிக அளவில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இருந்தும் இக்கோவிலுக்குச் செல்லச் சில பேருந்துகள் இருக்கின்றன.

நாகதோஷங்களை ஒழிக்க நாகர்கோவில் ஸ்ரீநாகராஜர் கோவில் ஒரு புண்ணியதலமாக விளங்குகிறது. இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
வரலாற்று சிறப்பு மிக்க நாகராஜர் கோவில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ளது. இங்கு நாகராஜர்கோவில் ஏற்பட்டதற்கு பல கர்ண பரம்பரைக் கதைகள் கூறப்படுகின்றன.
புல், புதர்களுடன், செடி, கொடிகள் என்று இருந்த இந்தக்காட்டில் புல் அறுக்கும் பெண் ஒருத்தி, மாட்டிற்குப்புல் அறுக்கும்போது, அவள் கையிலிருந்த அரிவாள் ஐந்து தலைநாகம் ஒன்றின் தலையில்பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக்கண்டு பயந்து நடுங்கிய அப்பெண், பக்கத்தில் உள்ள கிராம மக்களை அழைத்து வந்தாள்.
அவர்கள் கூட்டமாக வந்து பார்க்கும்போது, அந்த ஐந்து தலைநாகம் சிலையாக காணப்பட்டது. கிராமமக்கள், ஒரு சிறிய தென்னங்கீற்றால் வேயப்பட்ட கூரைக்கோவில் கட்டி வழிபட்டு வந்தனர்.
நாளடைவில் அக்கம் பக்கத்து கிராமமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, நாகராஜரை தரிசித்துச் சென்றதில், ஆலயம் மிகப் பிரபலமாயிற்று.
தமிழகத்துக்கோவில்களில் வேறேங்கும் காணப்படாத தனிச்சிறப்பு, ஆலயத்தின் மூலஸ்தானத்தின் மேல்கூரைத் தென்னை ஓலையால் வேயப்பட்டதாகும். உதய மார்த்தாண்டவர்மா மன்னர், இக்கோவிலை புதுப்பித்து கொண்டிருந்தபோது, ஒருநாள் அவர் கனவில் நாகராஜர் தோன்றி, ஓலைக்கூரையாலான இருப்பிடத்தையே நான் மிகவும் விரும்புகிறேன். முதன் முதலில் அக்கூரையினடியில் தான் வாசம் செய்தேன். ஆதலால் அதை மாற்ற வேண்டாம் என்று கூறினார்.
அக்கூரையில் எப்போதுமே ஒரு நாகப்பாம்பு காவல் புரிகிறது என்றும், வருடதோறும் கூரைவேயப்படும் போது ஒரு பாம்பு வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இக்கோவிலின் அர்ச்சகர்கள் கேரளாவிலுள்ள, பாம்பே காட்டு இல்லம் என்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள். பரம்பரை பரம்பரையாகவே நாகத்தை வழிபடுபவர்கள்.
ஓலையாலான மூலஸ்தானத்தில் நாகராஜர் அமர்ந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருப்பதும், அங்கிருந்து எடுக்கப்படும் மண்ணே இக்கோவிலின் முக்கிய பிரசாதமாகும். இம்மண் ஆறுமாதகாலம் கறுப்பு நிறமாக இருந்து வருகிறதாம்.
எவ்வளவோ காலமாக எடுத்தும் அம்மண் குறையாமல் இருப்பது நாகராஜனின் ஒப்பற்ற அருளைக் குறிக்கிறது என்று சொல்கிறார்கள்.கூரைவேயப்பட்டிருக்கும் மூலஸ்தானத்திற்கும் பின்னால் தொழுநோய் போன்ற பதினெட்டு நோய்களை குணப்படுத்தும் ‘ஓடவள்ளி’ என்ற ஒரு பச்சிலைக்கொடி படர்ந்திருந்ததாகவும், அதனடியில் தன் இனத்துடன் குட்டி குஞ்சுகளுடன் நாகங்கள் குடியிருந்தனவாம். அதனை பக்தர்களின் பயத்தினால் அகற்றி விட்டார்களாம்.
அக்காலத்தில் பிரசாதத்தை ‘ஓடவள்ளி’, இலையில் கொடுப்பார்களாம். ஒவ்வொரு ‘ஓடவள்ளி’ இலையும், ஒவ்வொரு சுவையுடன் இருக்கும். இப்பொழுது பிரசாதம், புற்று மண்ணும், சந்தனமும் வாழை இலையில் கொடுத்து வருகிறார்கள். அம்மன் கோவிலில் மட்டும் குங்குமம் பிரசாதம் கொடுக்கப்படுகிறது. தேவைப்பட்டவர்களுக்கு கிலோ கணக்கில் புற்றுமண்னை விலைக்கு தருகிறார்கள்.
ஆண்டுதோறும் இவ்வாலயத்தில் ‘தை’ மாதத்தில் அனந்தகிருஷ்ணன் முன்னுள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றி, பத்து நாட்கள் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். ஆவணி மாதம் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பாகத் திருவிழா நடைபெறுகிறது.
என்றாலும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் திருவிழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகின்றனர். அதுசமயம் பக்தர்கள் கூடி, உப்பு, மிளகு, பசும்பால், மரத்தினாலான மரப்பொம்மைகள் என காணிக்கைகளை செலுத்தி, நாகராஜனை தரிசித்து அருள் பெறுவதற்கு வழிபடுகின்றனர்.
நாகதோஷங்களை ஒழிக்க இது ஒரு புண்ணியதலமாக விளங்குகிறது. பிள்ளைப்பேறு வேண்டுவோர் நாகச் சிலைகளால் சூழப்பட்ட இந்த அரச மரங்களைச்சுற்றி வலம் வந்தால் பலனடைவர் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ஆடி அமாவாசையில் திருக்கயிலை காட்சி தந்தருளிய ஈசனை வழிபட்டு, திருவையாறு தல பைரவரையும் வழிபட்டால், முன்னோர்கள் அனைவரும் சிவபதம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
திரு+ஐயாறு-திருவையாறு. ஈசன் அருள் செய்யும் இத்தலத்தின் அருகில் காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஐந்து ஆற்று நீரினால் இறைவனுக்கு அபிஷேகம் நடைபெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு திருவையாறு என்ற பெயர் வந்தது. திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பதைப் போல், திருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடப்பெற்ற சிறப்பு கொண்டது இந்த திருத்தலம்.
அஸ்தினாபுரம் நகரத்தின் அரசனாக இருந்தவர் சுரதன். இவருக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. புத்திர பாக்கியம் கிடைக்க திருக்கயிலை மலையை ஒரு மண்டலம் பிரதட்சணம் செய்யும்படி, சில மகரிஷிகள் தெரிவித்தனர். ஆனால் திருக்கயிலை சென்று இந்த பரிகாரத்தை செய்வது என்பது கடினமாகும். இதனை உணர்ந்திருந்த சுரதன், அந்த நேரத்தில் திருவையாறில் இருந்த துர்வாச மகரிஷியிடம் தனது நிலையை எடுத்துரைத்தான்.
துர்வாசர், சுரத மன்னனுக்காக ஈசனிடம் வேண்டினார். ஈசன் மனமிரங்கி நந்திதேவரிடம் கூறி திருக் கயிலையை, திருவையாறுக்கு எடுத்து வரும்படி கூறினார். நந்திதேவரும் திருக்கயிலை மலையை தூக்கி வந்து இரண்டாகப் பிளந்து, இந்த தலத்தில் தற்போதுள்ள ஐயாறப்பருக்கு தென்புறம் ஒரு பகுதியையும், மற்றொரு பகுதியை வடபுறமும் வைத்தார். இதனை உணர்த்தும் விதமாக, ஆலயத்தில் வட கயிலாயம், தென் கயிலாயம் என இரு தனிக்கோவில்கள் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளன.
பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் இத்தல ஈசன் சுயம்பு லிங்கமாக கிழக்கு பார்த்தவண்ணம் உள்ளார். மணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடை பெறும். லிங்கத்திற்கு புணுகு சாத்தப் படும். இறைவனின் பெயர் ஐயாறப்பர். அம்பாள் திருநாமம் அறம் வளர்த்த நாயகி என்பதாகும். அன்னை கிழக்கு பார்த்தவண்ணம் நின்ற திருக்கோலத்தில் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார்.
இத்தல அம்பாள் சிலையின் உருவ அமைப்பைப் பார்த்தால் அப்படியே திருப்பதி வெங்கடாசலபதியின் வடிவமைப்பைக் காணலாம். அதுபோல திருப்பதி வெங்கடாசலபதியின் உருவ அமைப்பில் நம் திருவையாறு அறம் வளர்த்த நாயகி அம்மனின் வடிவழகைக் காணலாம். இதனை ‘அரி அல்லால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே’ என்று இத்தல பதிகத்தில் அப்பர் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும், பெருமாள் கோவில்களில் மட்டுமே நடக்கும் ‘மகாலட்சுமி புறப்பாடு’ இங்கும் நடக்கிறது. வெள்ளிக் கிழமை தோறும் மாலை நேரத்தில், திருவையாறு சிவத்தலத்தில் இருந்து, மகாலட்சுமி புறப்பாடாகி, இத்தல அம்பாள் சன்னிதிக்கு செல்கிறார். அதாவது மகாலட்சுமி தன் கணவர் மகாவிஷ்ணுவை காண வருவதாக ஐதீகம்.
கடலரசன், வாலி, இந்திரன், மகாலட்சுமி ஆகியோர் இங்குள்ள இறைவனை பூஜித்துள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் காலில் முயலகனுக்கு பதிலாக ஆமை உள்ளது. சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம் இதுவாகும். இந்த தலம் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக இருக் கிறது.
ஒருமுறை திருக்காள ஹஸ்தியை தரிசனம் செய்த திருநாவுக்கரசர், பின்னர் ஸ்ரீசைலம், மாளவம், லாடம் (வங்காளம்), மத்திம பைதிசம் (மத்திய பிரதேசம்) முதலிய இடங்களைக் கடந்து காசியை அடைந்தார். அங்கிருந்து கயிலை மலைக்குச் சென்று ஈசனை தரிசிக்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அந்த எண்ணமே அவரை கயிலை நோக்கி இழுத்துச் சென்றது. ஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து திருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது. இருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும் எண்ணமின்றி நடையை தொடர்ந்தார் திருநாவுக்கரசர். சில இடங்களில் நடக்க முடியாமல் ஊர்ந்தும் சென்றார்.
அப்போது அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், முனிவர் வடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, ‘நீர் இம்மானிட வடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச் செல்லும்’ என்றார். ஆனால் திருநாவுக்கரசர் அவரது பேச்சை செவிமடுக்காமல், தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன உறுதியையும் கண்ட சிவபெருமான், ‘திருநாவுக்கரசா! இங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு திருத்தலத்தை நீ அடைவாய். அங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம்’ என்று கூறி மறைந்தார்.
ஈசன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய திரு நாவுக்கரசர், திருவையாறில் கோவிலுக்கு வடமேற்கே உள்ள சமுத்திர தீர்த்தக் குளத்தில் எழுந்தார். அங்கு திருக்கயிலை காட்சியை ஈசன், திருநாவுக்கரசருக்கு காட்டி அருளினார். திருநாவுக்கரசருக்கு திருவையாறு திருத்தலத்தில் ஈசன் திருக்கயிலை திருக்காட்சி காட்டியருளிய தினம், ஆடி அமாவாசை ஆகும்.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று இரவில் 9 மணி அளவில் ‘திருநாவுக்கரசர் திருக்கயிலை திருக்காட்சி’ பெருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெறுகிறது. அன்று காலை முதல் இரவு முழுவதும் ஆலயத்தில் திருமறை பாராயணம் நடக்கிறது. இரவு முழுவதும் ஆலயம் திறந்திருக்கும். ஆடி அமாவாசையில் திருக்கயிலை காட்சி தந்தருளிய ஈசனை வழிபட்டு, இத்தல பைரவரையும் வழிபட்டால், முன்னோர்கள் அனைவரும் சிவபதம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று இரவில், இங்கு அப்பர் கயிலைக்காட்சி கண்டு வழிபாடு செய்வது திருக்கயிலை தரிசனத்துக்கு ஈடான பெரும் புண்ணிய திருப்பலனை அளிக்கும். திருநாவுக்கரசரின் பொருட்டு அன்று திருக்கயிலை திருத்தரிசனத்தை திருவையாறு திருத்தலத்தில் காட்டியருளிய ஈசன், நமக்கும் அருள் செய்வார்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரத்தில் திருவையாறு திருத்தலம் அமைந்துள்ளது.

சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்றான திருப்பூந்துருத்தி திருத்தலம் தஞ்சாவூரில் உள்ளது. இன்று இந்த திருத்தலத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருப்பூந்துருத்தி திருத்தலம் சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி. ஐந்து நிலைகளுடன் கிழக்கு பார்த்த ராஜகோபுரம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சங்கமித்த நிகழ்வு நடந்திருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.
ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் எப்படி சாத்தியம்.. அதற்கு ஒரு புராணக் கதை இருக்கிறது.
ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக்கொண்டிருந்தனர். ‘ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிர பரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும்; பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் இது யாரால் சாத்தியமாகும்’ என்ற ஏக்கத்துடன் அவர்களின் பேச்சு இருந்தது.
அப்போது அங்கிருந்த காசிப முனிவர், ‘ஏன் முடியாது?!. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்’ என்றார்.
பின்னர் காசிப முனிவர், ஈசனை வேண்டி தவம் இருந்தார். பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் ஈசனை வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தார்.
மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். (அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது). காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது. காசிப தீர்த்தம் இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது.
இந்தத் தீர்த்தத்தின் அருகில் ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை மற்றும் சங்கிலி நாச்சியார் சமேத சுந்தரர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. அதிலும் ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழு பலனும் கிடைக்கும்.
மேலும் இத்தலத்தை ஆடி அமாவாசை அன்று 18 முறை கிரிவலமாக வந்து ஈசனையும், உமையாளையும் வழிபட்டால், பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரி பூரணமாய் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.
தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி திருத்தலம்.