என் மலர்
கோவில்கள்
சிவபெருமான் நடனமிடும் சபைகளில் முதன்மையானது ரத்தின சபை என்னும் திருவாலங்காடு. இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் வடபகுதியில் இருக்கும் திரு ஆலங்காடு சென்னையிலிருந்து திருவள்ளூர் சென்று திருத்தணி திருப்பதி நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது சுங்கச்சாவடி வரும். அங்கிருந்து 9 கி.மீ பெருஞ்சாலையிலிருந்து உள்ளே பிரிவு சாலையில் 5 கி.மீ கடக்க வேண்டும். அதாவது திருவள்ளுரிலிருந்து 20 கி.மீ தொலைவு, அரக்கோணத்திலிருந்து 14 கி.மீ தொலைவு, திருவாலங்காடு தொடர்வண்டி நிலையத்திலிருந்து கோவிலுக்கு 4 கி.மீ ஆட்டோ அல்லது ஷேர் ஆட்டோவில் பயணிக்க வேண்டும்.
அப்படி என்ன சிறப்பு அந்த ஊருக்கு?
நடராச சபை :
சிவபெருமான் நடனமிடும் சபைகள் மொத்தம் ஐந்து. அதில் முதன்மையானது ரத்தின சபை என்னும் திருவாலங்காடு. இங்கே அருளல் தொழில் செய்து ஊர்த்துவ தாண்டவம் ஆடுகிறார்.
சிதம்பரம் பொற்சபையில் ஆனந்த தாண்டவமாடி ஐந்தொழில் செய்கிறார். மதுரை வெள்ளி சபையில் சந்தியா தாண்டவமாடி காத்தல் புரிகிறார். நெல்லை தாமிர சபையில் முனி தாண்டவமாடி படைத்தல் தொழிலையும் ஆற்றுகிறார்.
அழகிய தொண்டை நாட்டுக் கிராமச் சூழலில் அமைந்த இச் சிற்றூரில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜ கோபுரத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம். நந்திதேவரின் அனுமதி பெற்று எதிரே பார்த்தால் மதில் சுவருடன் மூன்று நிலை ராஜகோபுரமும், இருபுறமும் விநாயகரும், முருகனும் இருக்கின்றனர்.
வட ஆரண்யேசுவரர் :
உள்ளே நுழைந்தால் கருவறையில் கிழக்கு நோக்கியவராக லிங்கத் திருமேனியில் காட்சிதரும் மூலவர் வடவாரண்யேசுவரர் என்றும் ஆலங்காட்டு அப்பன் என்றும் அழைக்கப்படுகிறார்.
உள் பிரகாரத்தில், கன்னி மூலையில் கணபதியும், வடமேற்கு மூலையில் அருணகிரி நாதரால் பாடல் பெற்ற வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானும் அருள் பாலிக்கின்றனர். வடமேற்கில் மாந்தீஸ்வர் இருக்கிறார். சனீசுவரனின் புதல்வர் மாந்தி வழிபட்டு, தோஷங் களைப் போக்கிக் கொண்ட தலம் என்பதால் இங்கே மக்கள் சனிக்கிழமைகளில் வந்து சனி தோஷத்துக்குப் பரிகாரம் செய்து வழிபடுகின்றனர்.
தெற்கு நோக்கிய அம்பாள் சன்னிதியில் ‘வண்டார்குழலி’ என்னும் திருப்பெயர் தாங்கி அம்பிகை அருள் ஆட்சி செய்கின்றார். இங்கே இருக்கும் நடராச சபையில், சிவபெருமான் ஆடும் ஊர்த்துவ தாண்டவம், நடனத்தின் உச்சம் என்று கருதப்படுகிறது.
ஒருகாலைத் தலைக்குமேல் தூக்கி சுழன்றாடும் காட்சி பரவசப்படுத்துகிறது. ஆடலைக் கண்டு தரிசிக்க அமர்ந்த நிலையில் இருக்கும் காரைக்கால் அம்மையாரின் விக்ரகம் இத்தலத்தின் ரத்தினசபையினை சிறப்புற வைக்கின்றது.

அதனைப் பார்த்து பரவசப்படும் சிவகாம சுந்தரி அம்மைக்கு ‘அருகிருந்து வியந்த நாயகி’ என்ற சிறப்புப் பெயர் உள்ளது. முஞ்சிகேச, கார்கோடக முனிவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காளியின் கர்வத்தை அடக்க, சிவன் நடனம் ஆடிய தலம். கோபுரத்தின் மாடத்தில் வடக்கு நோக்கி காளியின் உற்சவ விக்கிரகம் உள்ளது. கோவில் மதிற்சுவருக்கு வெளியே வடமேற்கு மூலையில் பத்ரகாளி தனிக் கோவிலில் சிறிய உருவில் வடதிசை நோக்கியிருந்து அருள்புரிகிறார். அங்கே இருக்கும் மிகப்பெரிய ஆழமான திருக்குளம் ‘சென்றாடு தீர்த்தம்’ என்றும் ‘முக்தி தீர்த்தம்’ என்றும் புகழப்படுகிறது.
திருக்கோவிலின் வெளிச் சுற்றில் வடமேற்கு மூலையில் பரந்து விரிந்த ஆலமரம் ஆலங்காடு என்ற ஊரின் பெயருக்கு ஏற்ப தலவிருட்சம் என்ற சிறப்பில் நிமிர்ந்து நிற்கிறது.
வண்டார் குழலி உமைநங்கை பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேத நெறியானே
பண்டாழ் வினைகள் பலதீர்க்கும் பரமா பழைய னூர்மேலை
அண்டா ஆலங் காடாஉன் அடியார்க்கு அடியேன் ஆவேனே
என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், அப்பர் பெருமானும், சம்மந்தர் பெருமானும் மட்டுமல்லாது இத்தலத்தை காரைக்கால் அம்மையாரும் பாடிப்பரவிய பெருமைக்குரியது.
காரைக்கால் அம்மையார் :
கணவனுக்கு மட்டுமே அர்ப்பணிக்கக் கூடிய அழகிய பெண்ணுருவை விட்டுப் பிரிந்து எலும்புக் கூடாய்ப் பேயுரு எடுத்து தலையாலே நடந்து சென்று கயிலை மலையில் உமையொருபாகரால் ‘அம்மையே’ என்று அழைக்கப்பட்ட புனிதவதி என்றும் காரைக்கால் அம்மையார் அவரது விருப்பப்படி திருவாலங்காடு திருத்தலத்துக்கு தலையாலேயே ஊர்ந்து வந்தார். அங்கே தாண்டவம் ஆடும் இறைவனின் திருக்காட்சி கண்டு பரவசமிட்டு அவர் திருவடியின்கீழ் இருந்து என்றும் பாடி மகிழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். மூத்த திருப்பதிகம் உட்பட பல திருப்பதிகங்களைப் பாடிய சிவன் சேவடி நிழலிலேயே என்றும் இளைப்பாறல் அடைந்தார்.
ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார், தலையால் நடந்து வந்த பதி என்பதனை அறிந்து, அதனை காலால் மதிக்க அஞ்சி ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருஞான சம்மந்தர் அருகில் உள்ள பழையனூரிலேயே தங்கி திரு ஆலங்காடு திருத்தலத்தைக் கருத்தாற்கண்டு கவிபாடியதாக வரலாறு சொல்லுகிறது.
எனவே திரு ஆலங்காடு திருக்கோவில் மிகப்பழமை வாய்ந்தது என்பது வரலாற்றுத் தகவல் ஆகும்.

திருச்சி உறையூரில் உள்ள பாண்டமங்கலம் பகுதியில், வெக்காளி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் அமைந்து உள்ளது செல்லாண்டியம்மன் கோவில்.
திருச்சி உறையூரில் உள்ள பாண்டமங்கலம் பகுதியில், வெக்காளி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் அமைந்து உள்ளது செல்லாண்டியம்மன் கோவில். நாட்டில் உள்ள பல்வேறு திருத்தலங்களில் பலவித கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் பராசக்தி, இந்த கோவிலிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறாள்.
ஆனால் இங்குள்ள அம்மனின் திருவுருவம் சற்று வித்தியாசமானது. இந்த அம்மனுக்கு தலை, கை, உடல் கிடையாது. இடுப்புக்கு கீழே உள்ள பகுதி மட்டுமே உள்ளது. அம்மனின் இந்த வித்தியாசமான உருவத்திற்கு காரணம் ஆராய்ந்தால், அதற்கு ஒரு கதையே கூறப்படுகிறது.
3.z
சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் இருந்தன. அவர்களுக்காக செல்லாண்டி அம்மன் தன்னைத்தானே மூவருக்கும் மூன்று பாகமாக பிரித்து அளித்து அவர்களது நாட்டில் எழுந்தருளியதாகவும், அதன்படி அம்மனை மூன்று பாகமாக பிரித்துக்கொண்டு மூவேந்தர்களும் தங்களது நாட்டில் கோவில் அமைத்து காவல் தெய்வமாக வழிபட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
அம்மனின் திருவுருவம் மூன்று பாகங்களாக பிரிந்து சென்றதற்கு சொல்லப்படும் செய்தியை நாம் இங்கே காண்போமா!.
சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் அவர்களிடையே எல்லை தகராறால் அடிக்கடி போர் மூண்டது. இதனால் நாட்டு மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். எனவே மக்கள் அனைவரும் காவல் தெய்வமான செல்லாண்டி அம்மனிடம் தங்களது குறைகளைச் சொல்லி வேண்டினர். அவர்களது குறைகளை தீர்த்து வைக்க முடிவு செய்த அம்மன், ஒரு மூதாட்டியாக உருவெடுத்து மூவேந்தர்களையும் சந்தித்தாள். அப்போது மூன்று பேரிடமும் ஒற்றுமையாக ஆட்சி புரியுமாறு அறிவுரை கூறினாள்.
ஆனால் மூவேந்தர்களும் எல்லை தகராறை விட்டுக்கொடுக்க முடியாது என்று அம்மனிடம் வாதிட்டனர். அவர்களது எண்ணத்தை புரிந்து கொண்ட அம்மன், கரூர் செல்லும் வழியில் உள்ள மதுக்கரை என்ற ஊரில் எழுந்தருளி தனது சுயரூபத்தை அவர்களுக்கு காட்டி விட்டு மாயமாக மறைந்து விட்டாள்.
தங்களுக்கு காட்சி அளித்தது செல்லாண்டி அம்மன் என்பதை உணர்ந்த மூவேந்தர்களும், தங்களது தவறை உணர்ந்து அம்மனை தங்கள் குலதெய்வமாக ஏற்றனர். அப்போது அவர்களிடம் அம்மன், நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே என்னை முழு உருவில் வழிபடலாம். அப்படி இல்லாமல் உங்களுக்குள் நீங்கள் ஒரு எல்லையை வகுத்துக்கொண்டால் என்னையும் மூன்று பாகமாக எடுத்து சென்று வழிபடுங்கள் என்று அசரீரியாக ஒலித்தாள்.
ஆனால் மூவேந்தர்களும் தங்களுக்கு என்று எல்லையை வகுத்துக்கொண்டதால் அம்மனும் மூன்று பாகமாக பிரிந்தாள். அதன்படி தலைப்பாகம் சேர மன்னனுக்கு சொந்தமாக காங்கேயம் அருகில் கீரனூர் என்ற இடத்திலும், மார்பு பாகம் பாண்டிய மன்னனுக்கு சொந்தமாக மதுரை சிம்மக்கல்லிலும், இடுப்புக்கு கீழே பாதம் உள்ள பகுதி சோழ மன்னனுக்கு உரித்தானதாக திருச்சி உறையூரிலும் அமைந்துள்ளதாக தெரிவிக்கிறது அந்தக் கதை.
கிழக்கு நோக்கிய இந்தக் கோவில் வளாகத்தில் தென்கிழக்கு மூலையில் அரசும், வேம்பும் இணைந்த பெரிய மரத்தடியில் வலம்புரி விநாயகர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இவரை வணங்கி விட்டு கருவறையை நோக்கி சென்றால், வலது புறத்தில் மேலும் ஒரு வலம்புரி விநாயகரும், இடது புறத்தில் ஸ்ரீ சுப்பிரமணியர் மட்டும் தனித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். செல்லாண்டி அம்மனின் பின்புறம் அம்மனின் முழு உருவச்சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பிற்காலத்தில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
கோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தை ஒட்டி உள்ள மகா மண்டபம் 20 தூண்களை கொண்டு திகழ்கிறது. மற்ற கோவில்களில் அம்மனுக்கு எதிரில் சிம்மம் காட்சி அளிக்கும். இங்கு சிம்மம் இல்லை. அதற்கு பதில் பலி பீடத்திற்கு அருகே வேல் ஒன்று நடப்பட்டு உள்ளது. கோவில் சன்னிதியின் முன் மண்டபத்தில் அம்பிகையின் பாதம் பொறிக்கப்பட்ட பீடம் இருக்கிறது. இதனையும் அம்பாளாகவே பாவித்து பக்தர்கள் வணங்குகிறார்கள். அம்பாளுக்கு பூஜை செய்யப்படும்போது பாதத்திற்கும் பூஜை செய்யப்படுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
திருமண தோஷம், புத்திர தோஷம் உள்ள பெண்கள் பவுர்ணமியில் அம்மனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். அம்மனை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தாலி, எலுமிச்சை மாலை அணிவித்தும், விளக்கு ஏற்றியும் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு செல்கிறார்கள்.
திருச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல பஸ், ஆட்டோ வசதி உள்ளது.
பனை ஓலையில் அம்மன் திருவுருவம் :
வழக்கமாகவே அம்மன் கோவில்களில் ஆடி மாதம் பல்வேறு பூஜைகள் சிறப்பாக நடைபெறும். இங்கும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கின்றன. இந்த கோவில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் காளி ஓட்டத்திருவிழா 7 நாட்கள் நடக்கிறது. பொதுவாக கோவில்களில் திருவிழா காலங்களில் அம்பிகையின் பஞ்சலோக சிலையே உற்சவ அம்மனாக வீதியுலா எடுத்து செல்லப்படும். ஆனால் இங்கு பஞ்சலோக விக்கிரகம் இல்லை. அதற்கு பதிலாக பனை ஓலையில் செய்யப்பட்ட அம்மனை உற்சவ அம்மனாக கருதி வழிபடுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும்போது பனை ஓலையில் அம்மனின் உருவத்தை செய்கின்றனர். இந்த ஓலையில் அம்மன் அருளுவதாக பக்தர்களிடையே நம்பிக்கை இருக்கிறது. விழாவின்போது பனை ஓலை அம்மனை இந்த கோவிலில் இருந்து சற்று தூரத்தில் உள்ள ஒரு திடலுக்கு கொண்டு செல்கின்றனர்.
தொடர்ந்து 6 நாட்களுக்கு அம்மனுக்கு பிரதான நெய்வேத்தியம் படைக்கப்பட்டு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. ஐந்தாம் நாள் விழாவின் முடிவில் அம்மனை மீண்டும் கோவிலுக்கு கொண்டு வருகின்றனர். ஆரம்ப காலத்தில் இந்த விழாவின்போது கோவிலில் இருந்து அம்மனை தூக்கிக்கொண்டு ஓடும் வழக்கம் இருந்தது. எனவே இந்த விழா காளி ஓட்டத்திருவிழா என்று அழைக்கப்பட்டது. இந்த வழக்கம் நாளடைவில் மறைந்து இப்போது நடைமுறையில் இல்லை.

சுவிஸ் நாட்டு மக்களின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு பெருமைகளைக் கொண்ட ஆலயமாகத் திகழ்வது செங்காலன் கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில்.
கதிர்வேலே மூலவராக விளங்கும் ஆலயம், சுவிட்சர்லாந்து நாட்டில் அமைந்த குமரன் கோவில், ஆல்ப்ஸ் மலைக்கும், ரைன் நதிக்கும் இடையே அமைந்த திருத்தலம், முருகனைத் தேடி வெள்ளை மயில் வந்து திருவிளையாடல் புரிந்த தலம், ஆன்மிகப் பணியோடு, சமுதாயப் பணியையும் இணைத்து செய்யும் பொது நலக்கோவில், சித்திரைத் தேர் கொண்ட ஆலயம், சுவிஸ் நாட்டு மக்களின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு பெருமைகளைக் கொண்ட ஆலயமாகத் திகழ்வது செங்காலன் கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவில்.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதை சுவிட்சர்லாந்து நாட்டிலும் நிரூபித்திருக்கிறார் முருகப்பெருமான். ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில், ஜீவநதியான ரைன் நதிக் கரையோரம் எழுந்தருளியுள்ளார், ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி. சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா நாட்டின் எல்லையோர மாவட்டமாக விளங்குவது செங்காலன். இதில் சென்மார்க்கிறேத்தன் கிராமத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம். வேலும், மயிலும் பிரதானமாக விளங்கும் ஆலயம் இது. இவ்வாலயம் பல்வேறு சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.
தாமாக வந்த வெள்ளை மயில் :
கதிர்வேலாயுத சுவாமி ஆலயப் பகுதிக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஒரு வெள்ளைநிற மயில் ஒன்று தாமாகப் பறந்து வந்து சேர்ந்தது. அங்கே மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களுக்கு இது வியப்பாக இருந்தது. உடனே அருகில் இருந்த ஆலய நிர்வாகியிடம் இத்தகவலைக் கூறினர். அந்நாட்டு வனவிலங்கு சட்டப்படி, உடனே அவரும் இதனைக் காவல் துறைக்குத் தெரிவித்தார்.
அத்தோடு தங்கள் ஆலய தெய்வமான முருகப்பெருமானைப் பற்றியும், முருகனின் வாகனம் மேற்படி மயில் என்பதையும் எடுத்துக் கூறினார். அதனால் அவர்கள் எவராவது உரிமை கோரினால் திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், ஆலயத்தின் வசம் மயிலை காவல்துறையினர் ஒப்படைத்தனர். ஆண்டுகள் பல கடந்தும், இன்றுவரை எவரும் அந்த மயிலை உரிமை கோரவில்லை. அபூர்வ பறவையான வெள்ளை மயில், கந்த சஷ்டி நாளில் இந்த ஆலயத்தைத் தேடி பறந்து வந்த நிகழ்வு அப்பகுதிவாழ் மக்களாலும், பக்தர்களாலும் இன்றும் வியப்பான செய்தியாகப் பேசப்படுகிறது.
வேலே முருகர் :
முருகப்பெருமானின் திருக்கோவில்களில் வேலுக்கும் முக்கியப் பங்குண்டு. முருகனின் அருவுருவத் திருக்கோலம் ‘வேல்’ ஆகும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் இவ்வாலயத்தின் குறிப்பிடத்தக்க அம்சம், மூலவராக விளங்கும் முருகப்பெருமானின் வேலாயுதம். இந்த வேலினை மையமாக வைத்தே ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட பிறகு இதை நோக்கினால் முருகப்பெருமானே நேரில் காட்சி தருவது போலத் தோன்றுகிறது.
ஆலய அமைப்பு :
இவ்வாலயம் சென்மார்க்கிறேத்தன் என்ற கிராமத்தில், தொழிற்சாலைப் பகுதியில் பிரமாண்ட தனிக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. அயல்நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாட்டு கட்டிட பாணியில் அமைந்துவிட்டது போலும். எளிய நுழைவு வாசல், நுழைந்ததும், சில படிகள் ஏறினால் ஆலயம் நம்மை வரவேற்கிறது.
வேல்கள் தாங்கிய கதவுகள் வழியே உள்ளே நுழைந்ததும், விநாயகப் பெருமான் காட்சி தருகிறார். அருகே எளிய கொடிமரம், மயில் மூலவரை தரிசித்த வண்ணம் காட்சி தருகின்றன. மூலவராக முருகப்பெருமானின் வேல் அழகுற அலங்கரிக்கப்பட்டு நமக்கு காட்சிதருகின்றது. இடது பின்புறம் விஷ்ணு துர்க்கை அழகுற வீற்றிருக்கிறாள். எதிரில் சண்டிகேசுவரர், பைரவர் காட்சி தருகின்றனர்.

அருகே அலங்கார மண்ட பத்தில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் என அனைத்து வித உற்சவ மூர்த்திகளும் அழகுற வடிவமைக்கப்பட்டு காட்சியளிக்கின்றனர். மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகள் அனைத்துமே ஐம்பொன் சிலை களால் அமைந்துள்ளது தனிச் சிறப்பு அம்சமாகும்.
ஆண்டுதோறும் வைகாசி விசாக பட்சத்தை அடிப்படையாகக் கொண்டு, பன்னிரண்டு நாட்கள் பிரமோற்சவமும் வீதியுலாவும் நடைபெறு கிறது. விழாவில் முக்கிய அம்சமாக தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதற்கென மரத்திலான பெரிய சித்திரைத்தேர் இலங்கையில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் காவடி எடுத்தல், பால் குடம், தீச்சட்டி, அலகு குத்துதல் என பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் கூடுவது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, தைப்பொங்கல், மாசி மகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற அனைத்து ஆலய விழாக்களும் சிறப்புடன் நடத்தப்படுகிறது. முருகப்பெருமானின் முக்கியத் திருவிழாவான தைப்பூசம், கந்தசஷ்டி விழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
தரிசன நேரம் :
இவ்வாலயம் நாள்தோறும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், சிறப்பு நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் மக்களிடம் இவ்வாலயம் சமயத்தையும், ஆன்மிகத்தையும் வளர்த்து மக்களை நெறிப்படுத்துகின்றது. அத்துடன் தங்கள் தாய்நாட்டில் வாழும் ஆதரவற்ற சிறுவர்களுக்கும், போரினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறது.
இதுமட்டுமின்றி, சென்னையில் ஏற்பட்ட வர்தா புயல் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட இவ்வாலயம் உதவிகள் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்து சமயத்தில் ஈடுபாடு கொண்ட சுவிஸ் நாட்டில் வாழும் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு திருமண வைபவங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.
தலவரலாறு :
2005-ம் ஆண்டில் சிறிய அளவில் தமிழர்கள் வழிபாடு செய்ய தொடங்கப்பட்ட இந்த ஆலயம், தனி ஆலயமாக மாற்றம் பெற்று 2007-ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதன் பின் இப்பகுதியில் தமிழர்கள் பங்களிப்பும் அதிகமாகி வர, அவர்களின் வருகையும் கூடியது. பக்தர்களின் வேண்டுதல்களை கதிர்வேலாயுத சுவாமி நிறைவேற்றித்தர, பக்தர்கள் வருகையும் அதிகரித்தவண்ணம் உள்ளது. அயல்நாட்டினரும் இவ்வாலயத்தை வியப்புடன் தரிசித்துச் செல்கின்றனர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் கிழக்கு மாநிலம் செங்காலன். இதன் முக்கிய ஊராகத் திகழ்வது சென்மார்க்கிறேத்தன். ஆல்ப்ஸ் மலைக்கும், ரைன் நதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இயற்கை எழில் வாய்ந்த ஊரில் அமைந்துள்ள திருக்கோவில் இது.
ஜுரிச்சிலிருந்து ஆஸ்திரியா செல்லும் ரெயில் வழித்தடத்தில், ஜுரிச்சின் மாநகரில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவிலும், செங்காலன் மாநகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. அல்ரன்றைன் என்ற உள்நாட்டு விமான நிலையம் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆஸ்திரியா எல்லை 200 மீட்டர் தூரத்திலும், ஜெர்மனி எல்லையில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

திருச்சியை அடுத்த மணச்சநல்லூருக்கு வடமேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இந்த கோவிலின் வரலாற்றை பார்க்கலாம்.
திருச்சியை அடுத்த மணச்சநல்லூருக்கு வடமேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இங்கு விசாலாட்சி அம்மன் சமேதராக ஞீலிவனேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோவில் நிலமடத்திற்கு கீழே, ஊரின் நடுவில் அமைந்துள்ளது. இத்தல மூலவர் சுயம்பு மூர்த்தி. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்தது இந்த ஆலயம். வசிஷ்ட முனிவருக்கு, ஈசன் நடனக் காட்சியை காட்டி அருளிய தலம் இதுவாகும். எனவே இத்தலம் மேலைச் சிதம்பரம் என்று அழைக்கப்படு கிறது. இத்தல இறைவனை அம்பாளும் வழிபட்டு பேறு பெற்றுள்ளார்.
இங்கு இரண்டு அம்பாள் சன்னிதிகள் உள்ளன. ஒன்று மூலவருக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கியும், மற்றொன்று தெற்கு நோக்கியும் உள்ளன. இத்தல விசாலாட்சி அம்மன் சிலையில் பின்னம் ஏற்பட்டதால், புதியதாக ஒரு சிலை செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து பழைய அம்மன் சிலையை அகற்றப்பட்டது. அப்போது ஊரார் கனவில் தோன்றிய அம்மன், 'உங்கள் வீட்டில் யாருக்காவது உடலில் ஊனம் ஏற்பட்டால் வீட்டை விட்டு துரத்தி விடுவீர்களா?' என்று கேட்க, ஊர் மக்கள் மீண்டும் பழைய அம்மன் சிலையை மற்றொரு சன்னிதியில் வைத்து வழிபடத் தொடங்கினர்.
இந்தத் தலத்தில் வாழை மரமே தல விருட்சமாக உள்ளது. இங்குள்ள வாழை மரம் 'ஞீலி' என்றொரு வகையைச் சார்ந்தது. இதன் இலை, காய், கனி அனைத்தும் இத்தல ஈசனுக்கே பயன்படுத்தப்படுகிறது. இறைவனுக்கு இவை நிவேதனம் செய்யப்பட்ட பிறகும் கூட, பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுவதில்லை. நைவேத்தியத்திற்கு பின்னர் அவற்றை நீரில் விட்டு விடுகின்றனர். 'ஞீலி' வகையைச் சேர்ந்த வாழை வேறு இடங்களில் பயிரிடப்படுவதில்லை. ஏனெனில் இந்த வகை வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் இலை, காய், கனிகளைப் பயன்படுத்தினால் நோய் தாக்கும் என்பதால் இவ்வாறு செய்யப்படுவதாக காரணம் கூறப்படுகிறது.
திருமணத் தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள வாழை மரத்திற்கு தாலி கட்டி பரிகார பூஜை செய்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். சப்த கன்னியர்களே, அம்மனின் அருளால் இத்தலத்தில் வாழை மரமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருக்கடையூரில் சிவபெருமானால் சம்ஹாரம் செய்யப்பட்ட எமதர்மன், இத்தல இறைவனின் அருளால், தைப்பூச நாளன்று மீண்டும் உயிரையும், பணியையும் பெற்றான். எனவே இங்கு எமதர்மனுக்கு தனிச் சன்னிதி உள்ளது. இங்குள்ள சுவாமியின் பாதத்தின் கீழ், குழந்தையாக எமன் இருக்கிறார். இத்தல இறைவனை வழிபட்டால் எம பயம் நீங்கும். அறுபதாம் கல்யாணமும், ஆயுள் ஹோமமும் இங்கு அதிகமாக நடைபெறுகிறது.
அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர், சிவதல யாத்திரையின் ஒரு பகுதியாக இத்தல இறைவனை தரிசிக்க வந்து கொண்டிருந்தார். வழியில் அவருக்கு பசி அதிகரித்தது. அப்போது ஈசன், அர்ச்சகர் உருவத்தில் வந்து அப்பருக்கு பொதி சோறு கொடுத்து பசியைப் போக்கினார். இவர் 'சோற்றுடைய ஈஸ்வரர்' என்ற பெயரில், கோவிலின் முன்புறத்தில் இரண்டாம் கோபுர வாசலில் தனிச் சன்னிதியில் அருள்புரிகிறார். சித்திரை மாத அவிட்டம் நட்சத்திர நாளில், இந்தச் சன்னிதியில் அப்பருக்கு, ஈசன் சோறு படைத்த விழா நடைபெறுகிறது. சித்திரையில் இந்த ஆலயத்தில் 10 நாள் பிரமோற்சவம் நடைபெறும்.
இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் ஒன்பது குழியில் விளக்குத் தீபங்களாக வழிபடப்படுகின்றன. இங்கு ராவணன் திருவாயில் கோபுரம் ஒன்று உள்ளது. ராவணன், நவக்கிரகங்களையும் அடக்கி, ஒன்பது படிகளாக மாற்றி வைத்திருந்தான். இத்தல ராவணன் வாசல் கோபுரத்தைக் கடந்து வந்தால், ஒருவருடைய நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் விலகும் என்பது ஐதீகம்.

நண்டு வழிபட்ட காரணத்தால் இத்தல இறைவன் ‘கற்கடேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கும்பகோணம் அருகே திருந்துதேவன்குடி என்ற தலத்தில் அமைந்துள்ளது கற்கடேஸ்வரர் திருக்கோவில். இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த சோழமன்னன் திடீரென்று நோய்வாய்ப்பட்டான். வாளெடுத்து வீசிய அவனது கைகளை அசைக்க முடியவில்லை. கால்களை மடக்க முடியவில்லை. சோர்வுற்று விட்டான். பலநாள் படாத பாடுபட்டான். அரண்மனை வைத்தியர்களும், வெளியில் இருந்து அழைத்துவரப்பட்ட வைத்தியர்களும் கைவிட்டு விட்டனர்.
இதையடுத்து சிவபக்தனான அந்த மன்னன், இறைவன் ஒருவனே தன்னை குணமாக்கும் வல்லமை கொண்டவன் என்று நினைத்து இறைவனிடமே சரண்புகுந்தான்.
இந்த நிலையில் ஒருநாள், வெளியூர் மருத்துவரென்று சொல்லிக் கொண்டு ஒரு முதியவரும், மருந்து பெட்டியைத் தூக்கியபடி அவரது மனைவியும் அரண்மனைக்கு வந்தனர். மன்னனின் கையைப் பிடித்து நாடி பார்த்துவிட்டு, முதியவர் தன் மனைவியை நோக்கி கண் ஜாடை காட்டினார். இதையடுத்து அந்த அம்மையார், மருந்துப் பெட்டியைத் திறந்து, கொஞ்சம் திருநீற்றை, ஒரு குவளை நீரில் கரைத்துக் குடிக்கச் சொன்னார்.
என்னே அதிசயம்! சற்று நேரத்தில் வாத நோய் நீங்கி மன்னன் புத்துணர்வு பெற்று எழுந்தான். அவன் அந்த மருத்துவ தம்பதியரின் கால்களில் விழுந்து வணங்கினான். அவர்களுக்கு பொன்னும், பொருளும் பரிசாக வழங்கினான். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். அப்படியானால் அரண் மனையிலேயே தலைமை வைத்தியராக இருக்கும்படி மன்னன் கேட்டுக்கொண்டதற்கும் அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த மன்னன், அந்த மருத்துவ தம்பதியர் அறியாவண்ணம் அவர்கள் பின்னாலேயே தொடர்ந்து சென்றான். அப்போது ஓரிடத்தில் மறைந்தும், மறையாமலும் மண்ணில் கிடந்த ஒரு சிவலிங்கத்திற்குள், அந்த மருத்துவத் தம்பதியர் இருவரும் ஐக்கியமானதை பார்த்து ஆனந்த அதிர்ச்சி கொண்டான் மன்னன். வந்தது ஈசனும், அம்பாளும் என்பதை உணர்ந்து அவனது உள்ளம் மகிழ்ச்சிக் கூத்தாடியது.
பின்னர் இறைவனுக்கும், இறைவிக்கும் அந்த இடத்திலேயே கோவில் அமைத்தான். அம்பாளின் சிலை உருவம் கிடைக்காததால், மருந்து கொண்டு வந்து தனக்கு வைத்தியம் செய்த அன்னையை, ‘அருமருந்து நாயகி’ என்ற பெயரில் புதியதாக சிலை செய்து பிரதிஷ்டை செய்தான். இந்த நிலையில் சில நாட்கள் கழித்து, அம்பாளின் திருவுருவம் கிடைத்தது. அந்த அம்மனுக்கு ‘அபூர்வநாயகி’ என்று பெயரிட்டு தனிச் சன்னிதியில் பிரதிஷ்டை செய்தான். அதன்படி இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கியபடி இரண்டு சன்னிதிகளில் இரண்டு அம்பிகைகள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
தல வரலாறு :
ஒரு முறை துர்வாச முனிவர் சிவபூஜை செய்து விட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கந்தர்வன் ஒருவன், துர்வாச முனிவரின் நடையைப் பார்த்து, ‘நீர்! நண்டு ஊர்ந்து செல்வதைப் போல நடக்கிறீர்’ என்று கேலி செய்தான். இதனால் கோபம் கொண்ட துர்வாசர், அந்த கந்தர்வனை நண்டாக பிறக்கும்படி சபித்தார். செய்த தவறை எண்ணி வருந்திய கந்தர்வன், துர்வாச முனிவரிடம் மன்னிப்பு கோரினான். பின்னர் துர்வாசரின் அறுவுரைப்படி இத்தலத்தில் நண்டு வடிவில் இறைவனை பூஜித்து, தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தான்.
அதே வேளையில் இந்திரனும் ஒரு சாபத்தின் காரணமாக, இந்த இறைவனை தினமும் 1008 தாமரை மலர் கொண்டு வழிபட்டு வந்தான். இந்த நிலையில் மலர் குறைவதையும், அதை எடுத்து நண்டு ஒன்று பூஜை செய்வதையும் கண்ட இந்திரனுக்கு கோபம் வந்தது. தான் வழிபட வைத்திருக்கும் மலரை, அற்பமான நண்டு ஒன்று எடுத்துச் சென்று பூஜை செய்வதா என்ற ஆணவத்தால் நண்டை தன் வாள் கொண்டு வெட்டினான்.
அப்போது நண்டானது, சிவலிங்கத்தின் பாணத்தில் இருந்த துளைக்குள் சென்று மறைந்து கொண்டது. இதனால் இந்திரன் வீசிய வாள், சிவலிங்கத்தின் மீது பட்டு காயம் ஏற்பட்டது. சிவலிங்கத்தின் மீது துளையையும், வாள் வெட்டையும் இப்போதும் பார்க்க முடியும். பிறகு இந்திரன் தன் செயலுக்கு வருந்தி திருந்தியதால், இந்த ஊர் ‘திருந்துதேவன்குடி’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. நண்டு வழிபட்ட காரணத்தால் இத்தல இறைவன் ‘கற்கடேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

மருத்துவச் சிறப்பு :
இந்த ஆலயம் மருத்துவ சிறப்பு வாய்ந்த திருத்தலம் என்பதை திருஞான சம்பந்தர் பாடிய பதிகத்தின் மூலமாகவே நாம் அறிந்து கொள்ள முடியும்.
‘மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் வேண்டில் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்து தேவன் குடி தேவர் தேவு எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே!’
மருத்துவத்திற்குத் தந்தையான தனவந்திரி முனிவர் தங்கி வழிபட்டதலம் என்பதால், அவரது திருஉருவும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்படுகிறது.
ஒவ்வொரு சிவாலயத்திலும் வில்வம், வன்னி, கொன்றை போன்ற தல விருட்சங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் இங்கே மற்ற எந்த தலத்திலும் இல்லாத சிறப்பாக சிறியா நங்கை, பெரியா நங்கை என்ற மருத்துவ மூலிகைகள் தல விருட்சமாக இருப்பதைக் கொண்டே, இந்தத் தலத்தில் மருத்துவ மகிமையை அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆலயத்தில் உள்ள தீர்த்தமும் ‘நவபாஷாண தீர்த்தம்’ என்ற பெயரில் உள்ளது. பழுதடைந்திருந்த இந்தத் திருக்கோவிலில் தற்போது புதிய மண்டபம் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்ற கோவில்களில் இல்லாத முறையில் இங்கே கருங்கல் விமானத்தின் கீழ், கற்கடேஸ்வரர் எழுந்தருளி இருக்கிறார்.
நண்டு துளை போட்ட விநாயகர் சிலை, கற்கடக விநாயகர் என்ற பெயரில் இந்த ஆலயத்தில் இருந்ததாகவும், தற்போது அது எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் ஒரு தகவல் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் மூலிகைச் செடிகள் நிறைந்த காடாக இருந்த இடத்தில், சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் கற்கடேஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெய்யை உட்கொண்டால் அனைத்து நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இத்திருக்கோவிலில் தன்வந்திரி யாகம், சந்திர தோஷ யாகம் போன்றவைகளைச் செய்து உடல் நோய்க்கும், கிரக தோஷங்களுக்கும் பரிகாரம் காண்கிறார்கள்.
யோக சந்திரன் :
புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பரிகார தலம் இது. கோவிலின் நுழைவு வாசலில் யோக சந்திரன் சன்னிதி அமைந்துள்ளது. இவர் யோக நிலையில், யோக சந்திரனாக காட்சி தருகிறார். ஜாதகத்தில் சந்திர திசை உள்ளவர்கள், இவருக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால், தோஷங்கள் நீங்குவதாக நம்பிக்கை.
அமைவிடம் :
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் புறவழிச்சாலையில் 4 கிலோமீட்டர் சென்றால் திருவிசநல்லூர் என்ற பாடல் பெற்ற திருத்தலம் இருக்கும். அதிலிருந்து உள்ளே 1 கிலோமீட்டர் தொலைவில் வயல் வெளிகளுக்கு இடையே அருமையான கிராமத்துச் சூழலில் அமைந்திருக்கிறது இந்தத் திருத்தலம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 42–வது தலமாக இது விளங்குகிறது. அருகில் உள்ள மற்ற சிவத்தலங்கள் திருவிடை மருதூர் மற்றும் திருபுவனம் ஆகும்.

திருச்சிக்கு அருகே உள்ள கிராமம் சர்க்கார் பாளையத்தில் கரிகாலன் கட்டிய காசிவிசுவநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
கரிகாலச் சோழனின் பெருமையை இன்றும் தமிழ்நாட்டில் பறை சாற்றிக் கொண்டிருக்கும் அற்புதமான வரலாற்றுச் சான்று கல்லனை.
கல்லணையை மட்டும் கரிகாலன் கட்டவில்லை. அழகான சிவாலயம் ஒன்றையும் அவன் கட்டியுள்ளான். திருச்சிக்கு அருகே உள்ள கிராமம் சர்க்கார் பாளையம். இங்குதான் கரிகாலன் கட்டிய காசிவிசுவநாதர் ஆலயம் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் காசி விசுவநாதர், இறைவி அருள்மிகு விசாலாட்சி அம்மன்.
இந்த ஆலயத்தின் வரலாறு என்ன?
ஆலய வரலாறு :
கரிகாலன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட நேரமது. காவிரி அன்னை தன் விருப்பம் போல் பரந்து விரிந்து ஊரெங்கும் பாய்ந்து கொண்டிருந்தாள். காவிரியைக் கட்டுப்படுத்த துணை வாய்க்கால்களோ, அணைகளோ கிடையாது. வெள்ளம் வரும் போதெல்லாம் ஊருக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்புகளுக்கும், பயிர்களுக்கும் பெரும் சேதம் ஏற்படுத்தி வந்தது. மக்கள் பரிதவித்தனர். இதற்கு என்னதான் முடிவு?
மக்கள் மன்னனிடம் சென்றனர். தாங்கள் படும் இன்னல் களையும் துயரங்களையும் அவனிடம் எடுத்துக் கூறினர். உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி அவர்களை அனுப்பிய மன்னன் யோசிக்கத் தொடங்கினான். என்ன செய்வது?
காவிரியில் ஒரு அணையைக் கட்டுவதுதான் இதற்கு உரிய நிவாரணம் என்று உணர்ந்த மன்னன் தனது பரிவாரங்களுடனும், படைவீரர்களுடனும் அணை கட்ட உரிய இடத்தை தேர்வு செய்யப் புறப்பட்டான். அவன் சென்ற வழியில் உள்ளது சர்க்கார் பாளையம் என்ற கிராமம்.
மன்னனும் படைவீரர்களும் அந்த கிராமத்தின் அருகே வந்தபோது காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் உடைப்பு ஏற்பட்டு கிராமத்திற்குள் தண்ணீர் பாய்ந்தது. இதனால் மன்னனும் படைவீரர்களும் மேலே செல்ல இயலவில்லை. அவர்கள் பயணம் தடைபட்டது.
காவிரியின் உடைப்பை அடைக்க படை வீரர்கள் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. செய்வதறியாது தவித்து நின்றான் கரிகாலன். அவன் மனம் இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தது.
‘இறைவா? இந்தத் துயரிலிருந்து நான் மீள முடியாதா? என் மக்களை நான் காப்பாற்ற முடியாதா?’ என்று மனமுருக பிரார்த்தனை செய்தான் கரிகாலன். அவன் பிரார்த்தனை பலித்தது. ஒரு அசரீரி குரல் திடீரென்று ஒலித்தது.
‘மன்னா! இந்த இடத்தில் நீ ஒரு கோவில் கட்டு. உடைப்பு நிற்கும்’ என்றது அந்த அசரீரி குரல்.
மனம் சிலிர்த்தான். கண்கள் கலங்கினான். கரங்கூப்பி விண்ணைப் பார்த்தான். ‘அப்படியே செய்கிறேன்’ என்றான் நெகிழ்ந்த மனதோடு. வெள்ளம் வடியத் தொடங்கியது. மன்னன் தன் படைவீரர்களைக் கொண்டு அந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டத் தொடங்கினான்.
அந்தக் கோவில்தான் சர்க்கார் பாளையத்தில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம். இந்த ஆலயம் பற்றிய செவிவழி வரலாறு இதுதான்.
பின் அங்கிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் காவிரியில் ஓர் அணையையும் கட்டத் தொடங்கினான் மன்னன் கரிகாலன். அதுதான் கல்லணை.
காசி லிங்கம் :
கோவிலைக் கட்ட முடிவு செய்த மன்னன், சிலரை காசிக்கு அனுப்பி ஒரு சிவலிங்கம் கொண்டு வரும்படி கூறினான். அவர்களும் புறப்பட்டுச் சென்றனர். கோவில் திருப்பணிகள் விறுவிறுவென நடந்தேறின. கும்பாபிஷேக நாளும் குறிக்கப்பட்டது. ஆனால், காசிக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை.
குருமார்களை கலந்து ஆலோசித்தான் மன்னன். குறிப்பிட்ட நாளில் கும்பாபிஷேகத்தை நடத்தி முடிப்பதே நல்லது என அவர்கள் ஆலோசனை கூறினர். வேறு ஒரு சிவலிங்கத்தை நிர்மானம் செய்து பிரதிஷ்டை செய்து விடலாம் என்றும் அவர்கள் கூறினர். சிறந்த சிற்பிகளைக் கொண்டு ஒரு சிவலிங்கம் வடிவமைக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தையும் நல்ல முறையில் நடத்தினான் கரிகாலன்.
சில நாட்கள் கடந்த பின், காசிக்குச் சென்றவர்கள், ஒரு சிவலிங்கத்துடன் திரும்பி வந்தனர். புதிய சிவலிங்கத்தை என்ன செய்வது? யோசித்தான் மன்னன். அந்த சிவலிங்கத்தை அலட்சியபடுத்தாத மன்னன், அந்த காசி லிங்கத்தை அருகே இருந்த தல விருட்சமான வில்வ மரத்தடியில் பிரதிஷ்டை செய்தான். அந்த காசி லிங்கத்திற்கும் மூலவருக்கு நடைபெறும் ஆராதனைகளும், அபிஷேகங்களும் நடைபெறவும் ஏற்பாடு செய்தான்.
ஆலய அமைப்பு :
இந்த காசி விஸ்வநாதர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் எதிரே சற்றே உயர்ந்த மகாமண்டபம் உள்ளது. வலது புறம் அன்னை காசி விசாலாட்சி நின்ற கோலத்தில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். எதிரே பலிபீடமும், நந்தியும் இருக்க அர்த்த மண்டப வாசலில் துவார பாலகர்களின் திருமேனிகள் கருங்கற்களில் வடிவமைக்கப்பட்டு சுவற்றின் இருபுறமும் பதிக்கப்பட்டுள்ளன. மேலே கஜலட்சுமியின் சிற்பம் உள்ளது. அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன் காசி விசுவநாதர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
ஆலயத்தின் தெற்குப் பிரகாரத்தில் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட காசி லிங்கம் தனி மண்டபத்தில் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. எதிரே நந்தி பகவான் அருள்பாலிக்க, இறைவனின் பின்புறம் தல விருட்சமான வில்வ மரம் உள்ளது.
மேற்குப் பிரகாரத்தில் பிள்ளையார், நாகர், வீர ஜெய் ஆஞ்ச நேயர், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரரின் சன்னிதி உள்ளது.

காசி லிங்கம், காசி விசாலாட்சி.
தேவக் கோட்டத்தில் தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் துர்க்கையும், ஆலயத்தின் தென் மேற்கு திசையில் நாராயண பெருமாள் மற்றும் லட்சுமி தேவி ஆகியோரும் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர். வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களுக்கு தனி மண்டபம் உள்ளது.
இந்த ஆலயம் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது. தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
இறைவனின் சன்னிதியின் முன் மகாமண்டபத்தின் உச்சியில் 12 ராசிகளின் உருவங்களும் கருங்கற்களில் செதுக்கப்பட்டு பொறிக்கப்பட்டிருப்பது, இந்த ஆலயத்தில் உள்ள சிறப்பு களில் ஒன்றாகும். அன்னார்ந்து பார்த்து இந்த நவக்கிரக நாயகர்களை நாம் கண்குளிர தரிசனம் செய்யலாம்.
சூரிய பூஜை :
இந்த ஆலயத்தில் இன்றும் ஓர் அற்புத சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆவணி மாதம் 7,8,9 ஆகிய தேதிகளில் சூரிய உதயத்தின் போது, சூரியனின் பொன் கதிர்கள் கருவறையில் உள்ள காசி விசுவ நாதர் மேல் படும். அப்போது சிவலிங்கம் ஜோதி மயமாகத் தெரியும். இந்தக் காட்சியைக் காணவும், அன்றைய நாட்களில் நடைபெறும் சூரிய பூஜையில் கலந்து கொள்ளவும் அருகே உள்ள சர்க்கார் பாளையம், பனையக்குறிச்சி, ஒட்டக்குடி, முல்லக்குடி, அரியமங்கலம், குவளக்குடி ஆகிய கிராமங்களிலிருந்தும், திருச்சி மற்றும் சுற்றுப்புற இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு கூடுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருவிழாக்கள் :
கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை தீபம் ஏற்றும் திருவிழா மிகவும் சிறப்பாக நடக் கிறது. பங்குனி உத்திரத்தன்று பால் குடம், அலகு காவடி, தீமிதி என்று இந்த ஆலயம் பக்தர் களால் சூழப்பட்டு திருவிழா கோலம் பூண்டிருக்கும். ஆடி, தை வெள்ளிகளில் இங்கு திருவிளக்குப் பூஜை நடக்கிறது. ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர். சிவராத்திரி அன்று ஐந்து கால பூஜை நடத்தப்படுகிறது.
பிரதோஷம், சோமவாரம், தை, சித்திரை மாதப்பிறப்புகள், நவராத்திரி, சிவராத்திரி போன்ற நாட்களில் காசி விசுவநாதருக்கும், காசி லிங்கத்திற்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தின் அருகே காவிரி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுவே இந்த ஆலயத்தின் தீர்த்தமும் கூட.
இந்த ஆலயம் செல்ல நிறைய நகரப் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் உள்ளன. கல்லணை செல்லும் நகரப் பேருந்துகள் சில இந்த ஆலயம் வழியே செல்கின்றன. ஆட்டோ, கால் டாக்ஸி வசதியும் உள்ளன.
காசிக்கு போய் காசி விசுவநாதரை தரிசிப்பதால் பெறும் பலனை, இங்கு அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வழிபட்டாலே பெறலாம் என பக்தர்கள் நம்புகின்றனர்.

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சத்தியநாதர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சத்தியநாதர் திருக்கோவில். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் அமைந்தப் பகுதியில் முன்காலத்தில் காரைச்செடிகள் அதிகமாக வளர்ந்து காணப்பட்டுள்ளன. இதனால் இத்தல இறைவன் ‘காரைத்திருநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். திருக்காலீஸ்வரர் என்ற திருநாமமும் அவருக்கு உண்டு. தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்களில் இது 5–வது தலமாகும். திருஞான சம்பந்தர் இத்தல இறைவனைப் பற்றி தேவாரப்பாடல் பாடியுள்ளார்.
தல வரலாறு :
கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை. இவளை மணம் முடிக்க இந்திரன் முதலான தேவர்கள் பலரும் முயற்சி செய்தனர். இறுதியில் திருமணம் செய்தது கவுதமர். அகலிகைக்கு திருமணமான பின்பும் கூட இந்திரனுக்கு அவள் மீதான ஆசை போகவில்லை. அகலிகையை வஞ்சகமான முறையில் அடைய முயற்சி செய்தான். தவத்தின் வலிமையால், விரும்பிய வடிவம் எடுக்கும்படி பெற்றிருந்த வரம் அவனுக்கு கைகொடுத்தது.
ஒரு நாள் அதிகாலை வேளைக்கு முன்பாகவே கவுதமரின் ஆசிரமத்திற்கு சென்றான் இந்திரன். வெளியில் நின்று கொண்டு சேவலைப் போல கூவினான். பொழுது விடிந்ததாக எண்ணிய கவுதமர் நீராடுவதற்காக வெளியே சென்றார். அந்த நேரத்தில் கவுதமர் போல் வடிவம் கொண்டு ஆசிரமத்திற்குள் நுழைந்த இந்திரன், அகலிகையை ஏமாற்றி காமுற்றான். ஏதோ ஒரு மாயையால் தான் வெளியே கிளம்பி வந்ததை உணர்ந்த கவுதமர், விரைந்து ஆசிரமம் சென்றார்.
அவரைக் கண்ட இந்திரன் தப்பிச் செல்ல முயன்றான். ஆனால் கவுதமர் அவனுக்கு உடல் முழுவதும் கண்ணாக மாறும்படி சாபம் கொடுத்தார். அதே போல் அகலிகையை கல்லாக மாற சாபமிட்டார். சாபம் பெற்ற இந்திரன், பூலோகம் வந்து பல தலங்களிலும் சிவபெருமானை வழிபட்டு விமோசனம் தேடினான். அவ்வாறு இந்தத் தலத்திற்கு வந்தபோது, காரைச் செடிகளின் மத்தியில் சிவன் காட்சி தந்து அவனது சாபத்தைப் போக்கி ‘காரைத்திருநாதர்’ என்ற பெயர் பெற்றார் என்கிறது தல புராணம்.
தட்சிணாமூர்த்தி :
மூன்று நிலைகளுடன் அமைந்துள்ளது இத்தல ராஜகோபுரம். இத்தல இறைவன் சத்தியநாதர் என்ற பெயருடன் அருள்பாலித்து வரு கிறார். இவர் சற்றே சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறார். மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பவர் என்பது சிறப்பாகும். அம்பாளுக்கு காரார்குழலி என்பது திருநாமம். பிரமராம்பிகை என்ற பெயரும் உண்டு. இறைவனுக்கு எதிரே உள்ள நந்தியின் கழுத்து மட்டும் தெற்கு முகமாக திரும்பியிருக்கிறது. இதற்கு நேரே ஒரு வாசலும் உண்டு. கோவில் பிரகாரத்தில் புதன் பகவான் சன்னிதி அமைந்துள்ளது. அவருக்கு அருகில் இந்திரன் வீற்றிருக்கிறார்.
ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி பகவான் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக் கிறார். பொதுவாக தட்சிணாமூர்த்தி பகவான் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய 4 சீடர் களுக்கு ஞானம் போதித்த நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் இந்தத் தலத்தில் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் அருகில் 7 சீடர்கள் இருக்கின்றனர். இது வித்தியாசமான அமைப்பாக உள்ளது. இவரிடம் வேண்டிக்கொண்டால் ஞானம் பிறக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
புதன் பகவான் :
பிரகஸ்பதியை (வியாழன்) குருவாக ஏற்றுக்கொண்ட சந்திரன், அவரிடம் கல்வி கற்று வந்தான். குரு என்பதையும், அவரது மனைவி தனக்கு தாய் போன்றவள் என்பதையும் மறந்த சந்திரன், பிரகஸ்பதியின் மனைவியான தாரை மீது காதல்கொண்டான். ஒரு சமயம் சந்திரன், மகாவிஷ்ணுவின் அருளைப் பெறுவதற்காக யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்திற்கு குரு என்ற முறையில் பிரகஸ்பதி, தன் மனைவி தாரையுடன் கலந்து கொண்டார். அவள் மீது காதல் கொண்டிருந்த சந்திரன், அவளை மயக்கி அவனுடனேயே இருக்கச் செய்துகொண்டான். சந்திரனுக்கும், தாரைக்கும் மகனாக பிறந்தார் புதன்.
இந்த நிலையில் சிவபெருமானிடம் முறையிட்டு, தாரையை தன்னுடன் அழைத்துச் சென்றார் பிரகஸ்பதி. புதனை சந்திரனே வளர்த்து வந்தான். புதன் பெரியவனாக வளர்ந்ததும், தான் பிறந்த முறையை அறிந்து வெறுப்புற்று சந்திரனைப் பிரிந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டார். தாய், தந்தையரைப் பிரிந்திருந்த புதன், இந்த தலத்திற்கு வந்து தனக்கு கிரகங்களில் ஒரு பதவி கிடைக்க அருளும்படி சத்தியநாதரிடம் வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவபெருமான், உரிய காலத்தில் கிரகப் பதவி கிடைக்கும் என்று அருள்புரிந்தார். இந்த புத பகவான், மூலவரின் வலதுபுறத்தில் தெற்கு பார்த்தபடி இருக்கிறார்.
ஞானகாரகன் என்று அழைக்கப்படும் புதனை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். புதன்கிழமைகளில், இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பச்சை நிற வஸ்திரம் சாத்தி, பச்சைப்பயறு நைவேத்தியமாக படைத்து வழிபட்டால், பேச்சுத் திறமை, மொழியில் புலமை ஏற்படுவதுடன், தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆலயத்தில் தல விருட்சமாக காரைச்செடி உள்ளது. தல தீர்த்தம், இந்திர தீர்த்தம், சத்தியவிரத தீர்த்தம் ஆகியவை ஆகும்.
மூலவர் அருகில் அம்பாள் :
காஞ்சீபுரம் முழுவதும் உள்ள சிவன் ஆலயங்களில் உள்ள சிவனுக்கு, காஞ்சி காமாட்சி அம்மனே பொதுவான அம்பாளாக இருப்பதால், எந்த ஆலயங்களிலும் அம்பாளைப் பார்ப்பது அரிதானதாகும். ஆனால் இந்த ஆலயத்தில் மூலவரின் கருவறையிலேயே அம்பாளும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவர் கருவறையில் சுவாமிக்கு அருகில் தெற்கு பார்த்தபடி உற்சவர் வடிவில் அம்பாள் இருக்கிறார். உற்சவராக இருந்தாலும், மூலவருக்கு உரிய பூஜைகள் அனைத்தும், இந்த அம்மனுக்கும் செய்யப்படுகிறது. ஆனாலும் விழாக்காலங்களில் அம்மனை வெளியே கொண்டுவருவதில்லை. சுவாமி மட்டுமே திருவீதி உலா வருவார்.
இந்த ஆலயத்தில் மார்கழி திருவாதிரை, சிவராத்திரி, ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் போன்றவை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

திருநெல்வேலி மாவட்ட சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்ட சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில். இந்தக் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றைக் காண்போம்.
கேரளத்தை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தீராத வியாதி உண்டாயிற்று. மருந்தால் அது தீரவில்லை. ஒருநாள் அவனது கனவில், ‘மன்னா! நீ உன் உயரத்துக்கு ஒரு பொம்மை தயார் செய்து, அதனுள் துவரம் பருப்பு அளவுள்ள மாணிக்க கற்களை கொட்டி, உன் வியாதியை அதற்குள் இடம் மாற்றி, ஒரு பிராமணனுக்கு தானமாக கொடுத்து விடு. உன்னிடம் உள்ள அந்த வியாதி அந்த பிராமணனை சேர்ந்து விடும்’ என அசரீரி ஒலித்தது.
அந்த அசரீரியை தெய்வத்தின் கட்டளையாக ஏற்ற மன்னன், ஒரு பொம்மையை செய்தான். ஆனால் அந்த பொம்மையை எந்த பிராமணனும் வாங்க முன்வரவில்லை. இந்த தகவலை கர்நாடகாவில் உள்ள பிரம்மசாரி பிராமண இளைஞன் ஒருவன் கேள்விப்பட்டான். இதனையடுத்து அவன் அங்கிருந்து புறப்பட்டு வந்து மன்னரிடம் இருந்து அந்த பொம்மையை வாங்கிக் கொண்டான்.
பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் அந்த பொம்மை உயிர் பெற்றது. தனக்கு அந்த பிரம்மசாரி செய்திருந்த காயத்ரி மந்திரத்தின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. ‘அப்படி கொடுத்து விட்டால் வியாதி உன்னை அண்டாது’ என்றும் அந்த பொம்மை சொன்னது. இதனைக்கேட்ட அந்த பிரம்மசாரி பொம்மை கேட்டபடி காயத்ரி மந்திரத்தின் பலனின் ஒரு பகுதியை கொடுத்து விட்டான். ஆனால் கொடுத்த பின்னர் அவனது மனது துன்பம் அடைந்தது.
‘வியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி தர்மத்துக்கு மாறாக காயத்ரி மந்திரத்தின் பலனை தானம் செய்து விட்டோமே’ என்று அவன் கலங்கினான். இதற்கு பிராயச்சித்த மாக தனக்கு கிடைத்த மதிப்பு மிக்க மாணிக்க கற்களை பொதுநலன் கருதி செல வழிப்பது என்று அவன் முடிவெடுத்தான். ‘என்ன நன்மை செய்யலாம்?’ என்பதில் குழப்பம் வரவே, பொதிகை மலையில் வசித்து வரும் அகத்திய முனிவரிடம் சென்று யோசனை கேட்பது என்று முடிவு செய்தான்.
பிறகு பொதிகை மலை சென்று அகத்தியரை சந்தித்தான். அவனது பிரச்சினையை அறிந்து கொண்ட அகத்தியர், ‘நல்ல விஷயங்களிலேயே தலை சிறந்தது தண்ணீர் தானம் தான். நீ மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும்போது, வழியில் ஒரு பசுவை காண்பாய். அதன் வாலைப் பிடித்துக்கொண்டே செல். அது போகும் வழியை குறித்துக்கொள். அதன்படி கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு ஏற்படுத்து. அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகால் ஏற்படுத்து. பசு படுக்கும் இடங் களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு’ என்றார்.

அந்த இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி. அகத்திய முனிவரே அந்த பசுவாக மாறி வந்து நின்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பசு சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்தான் இளைஞன். கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்து விட்டது. அங்கே மிகப்பெரிய ஏரியை தோண்டினான். இப்போதும் மழை வெள்ள காலங்களில் நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரியை பார்த்தால், கடல் போல் காட்சியளிக்கும்.
மக்களுக்காக நல்லது செய்பவர்கள், தங்கள் பெயரை விளம்பரப்படுத்துவதில்லை. அந்த இளைஞனின் பெயரும் கூட இன்றுவரை யாருக்கும் தெரியாது. அவனது மொழியின் பெயராலே அந்த கால்வாய்க்கு ‘கன்னடியன் கால்வாய்’ என்று பெயர் வைத்து விட்டனர். கன்னடத்தில் இருந்து வந்த ஒரு இளைஞன், மலையாள மன்னனிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான்.
அந்த இளைஞன் கால்வாய் வெட்டியதோடு நின்று விடவில்லை. அந்த கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டுமே என்று கவலைப்பட்டான். அவன் கவலைப்பட்டது போலவே, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மழையே இல்லை. கால்வாய் தண்ணீர் ஓடாமல், காய்ந்து போய் விட்டது.
உடனே அவன் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்தான். அந்த அபிஷேக நீர், கால்வாய்க்குள் விழும்படி செய்தான். என்ன ஆச்சரியம்! உடனே மழை கொட்டி தீர்த்தது. இப்போதும் மழை இல்லாத காலங்களில் சேரன்மாதேவி பகுதி விவசாய சங்கத்தினர் இந்த வழிபாட்டை செய்கின்றனர்.
அவன் பிரதிஷ்டை செய்த விநாயகரே ‘மிளகு பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார்.
மழை இல்லாத காலங்களில் இத்தலத்தில் வீற்றிருக்கும் விநாயகரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்து, அந்த புனித நீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும் என்பது ஐதீகம்.
திருநெல்வேலியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மாதேவி திருத்தலம்.

தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டியதைத் தந்து அனுகூலம் செய்யும் அனுகூல விநாயகர் ஆலயம் திருச்சி அய்யப்ப நகரில் உள்ளது. இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆலய முகப்பு :
அனுகூல விநாயகர் ஆலயம் ஒன்று திருச்சி அய்யப்ப நகரில் உள்ளது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டியதைத் தந்து அனுகூலம் செய்பவர் இந்த நான்முகன் விநாயகர். அவர் அனுகூல விநாயகர் என்ற பெயரில் அழைக்கப்படுவது இயல்புதானே.
ஆலய அமைப்பு :
ஆலயம் வடதிசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம். அடுத்துள்ள கருவறையில் அனுகூல விநாயகர் வடதிசை நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள் பாலிக் கிறார்.
மகா மண்டபத்தின் கீழ் திசையில் நடுநாயகமாய் சிவபெருமான் ஜம்புகேஸ்வரர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். எதிரே அன்னை அகிலம் காக்கும் அகிலாண்டேஸ்வரி நின்ற கோலத்தில் இன்முகத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள். திருச்சுற்றில் வடக்கில் சண்டிகேஸ்வரர் அருள்பாலிக்கிறார். தென் கிழக்கில் ஆலய தல விருட்சமான அரசும் வேம்பும் நெடிதுயர்ந்து படர்ந்து நிற்க அதனடியில் ஏராளமான நாகர் சிலைகள் உள்ளன. கிழக்கு திருச்சுற்றில் பிரம்மாவும், பாலமுருகனும் அருள்பாலிக்க, தென் திசையில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும் அருள்புரிகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விதம் விதமாய் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். அன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் சிறப்பு அலங்காரத்தில் விநாயகரை தரிசிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அன்று பக்தர்கள் கூட்டத்தால் ஆலயம் நிரம்பி வழியும்.
மார்கழி மாதம் 30 நாட்களும் காலை 5½ மணிக்கே ஆலயம் திறக்கப்பட்டு ஆராதனைகள் நடைபெறத் தொடங்கிவிடும். மார்கழி மாத சஷ்டியின் போது விநாயகருக்கு லட்சார்ச்சனையும், 108 சங்காபிஷேகமும் நடைபெறும்.
12.2.2014-ல் ஆலயத்திற்கு குடமுழுக்குத் திருவிழா நடந்துள்ளது. தை மாத புனர்பூசத் திருநாளான அந்த நாளை ஆண்டு தோறும் ஆண்டு விழாவாக கொண்டாடுகின்றனர். அன்று விநாயகரின் முன், கணபதி ஹோமமும், நவக்கிரக ஹோமமும் நடை பெறும். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவதுடன் அன்று அன்ன தானமும் நடைபெறும். சேக்கிழார் மன்றத்தினரால் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படும் இந்த ஆலயத்தின் மேல்புறம் பெரிய விசாலமான மண்டபம் உள்ளது. இங்கு திருமுறை பாராயணங்கள் நடைபெறுவதுடன் அன்னதானமும் வழங்கப் படுகின்றன. ஆலய சிறப்பு விழாக்கள் இங்குதான் நடை பெறுகின்றன.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விநாயகரின் சன்னிதி முன் 25 பேர் அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது மிகவும் சிறப்பாக இருக்கும். அன்று கேழ்வரகு கூழ், சிவப்பு அரிசி கூழ் ஆகியவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும்.
பிரதோஷம் இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்று பக்தர்கள் நேராக சிவபெருமானுக்கு தாங்கள் கொண்டு வரும் பாலை தாங்களே அபிஷேகம் செய்து மன மகிழ்ச்சி பெறும் காட்சி எங்கும் காணக்கிடைக்காதது. அன்று சிவபெருமான் பிரகாரத்தில் மட்டும் உலா வருவதுண்டு.
கார்த்திகை சோமவாரங்களில் ஜம்புகேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். அன்றும் பக்தர்களே பாலபிஷேகம் செய்வதும் நடைமுறையில் உள்ள வழக்கம்.

அனுகூல விநாயகர்
பங்குனி உத்ரம் இங்கு வெகு சிறப்பாக நடைபெறும். அன்று நடைபெறும் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி திருமணம் ஒரு திருமண விழாபோலவே கோலாகலமாக நடைபெறுகிறது. நவராத்திரி 10 நாட்களும் ஆலயம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.
பங்குனி உத்திரம் அன்று இறைவன் இறைவிக்கு திருக்கல்யாணம் நடைபெறுவதுடன் வயதில் மூத்த ஒரு தம்பதியை மேடையில் அமரச் செய்கின்றனர். அவர்களுக்கு புத்தாடை தந்து மாலையிட்டு அமர அவர்களுக்கு பக்தர்கள் பாத பூஜை செய்து ஆசீர்வாதம் பெறும் காட்சியும் சிறப்பு அம்சமாக உள்ளது.
அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவதுடன், வரும் பக்தர்களுக்கு திருமண விருந்து போல் அன்னதானமும் வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொருவருக்கும் திருமண வீட்டில் தருவது போல் தேங்காய், பழம், வெற்றிலை பாக்குடன் தாம்பூல பை தருகின்றனர். பக்தர்கள் ஒரு திருமண வீட்டிற்கு சென்று வந்த நிறைவோடு இல்லம் திரும்புகின்றனர்.
சிறுமியே அம்மன் :
நவராத்திரியின் முதல் நாள், நான்காம் நாள், ஏழாம் நாள் என மூன்று நாட்களும் இங்கு ஒரு விசேஷ வைபவம் நடைபெறுகிறது. அன்று வயதுக்கு வராத ஒரு சிறுமியை மண்டபத்தில் அமரச் செய்கின்றனர். அந்தச் சிறுமிக்கு புத்தாடை, வளையல், மாலை அணிவித்து ஒரு அம்மனைப் போல் அவரைப்பாவித்து அமரச் செய்தபின் அவளுக்கு பாத பூஜை செய்கின்றனர்.
சந்தனம் பூசி, குங்குமம் இட்டு அம்மன் வடிவில் இருக்கும் அந்தச் சிறுமிக்கு இறைவிக்கு செய்வது போல் அர்ச்சனை செய்து தீபாராதனை காட்ட பக்தர்கள் பயபக்தியுடன் அவளை வணங்குகின்றனர். பின்னர் ஆரத்தி எடுக்க இந்த வைபவம் நிறைவு பெறும். மூன்று நாட்களும் மூன்று சிறுமிகள் இப்படி அமர சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என அவர்களைப் பாவித்து ஆராதிக்கும் பழக்கம் நம்மை சிலிர்க்கச் செய்கிறது.
நாகதோஷம் :
தல விருட்சங்களுக்கு கீழே இருக்கும் நாகர்களுக்கு நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. நாகதோஷம் உள்ளவர்கள் நாகர் சிலையை கொண்டு வந்து வைத்து பிரார்த்தனை செய்கின்றனர். தல விருட்சங்களையும் நாகர்களையும் பிரதட்சணம் செய்வதால் கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடப்பதாகவும் குழந்தை பேறு வேண்டுபவர்களுக்கு அந்தப் பேறு கிட்டுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர். திங்கள் கிழமையில் வரும் அமாவாசை அன்று தல விருட்சங்களை 108 முறை சுற்றுவதால் பெண்கள் நினைத்த காரியம் நடந்தேறுவது நிஜம் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் உண்டியல் கிடையாது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 5½ மணி முதல் இரவு 8½ மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
தன்னை நாடும் பக்தர்களின் வேண்டுதல்களை அரவணைத்து அனுகூலமாய் நிறைவேற்றுவதில் இந்த அனுகூல விநாயகர் வல்லவர் என்பது நிஜமே.
திருச்சி அய்யப்ப நகரில் உள்ளது இந்த அனுகூல விநாயகர் ஆலயம். திருச்சி மத்திய/சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கே.கே.நகர் பஸ்ஸில் பயணித்து சபரிமில் நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அருகே உள்ள ராஜாஜி தெருவில் உள்ளது ஆலயம்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனம். இன்று இத்திருத்தலத்தின் வரலாற்றை பார்க்கலாம்.
வளர்ந்த பிருந்தாவனத்தின் பெருமை அளவிடற்கரியது, உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.
கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கை யோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக ‘விரஜபூமி’ என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இந்த ‘விரஜ பூமி’ சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது.
இதை வலமாகக் சுற்றி வருவது, ‘விரஜ பரிக்ரமா’ எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர். உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு.
பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், ‘பரிக்ரமா’வை முக்கியமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள். பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.

கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் ‘விரஜ பூமி’யில் உள்ளன. ‘பிருந்தா’ என்பது துளசியைக் குறிக் கும் என்று கூறுவர். பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன.
பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன. கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபாலச் சிறுவர்களையும் ஓராண்டுக் காலம் பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து, பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே!
பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன. யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.
இவற்று-ள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள். தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம். மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனம், அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோவில்.
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர் திருக்கோவில். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம், பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
தல வரலாறு
7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள், மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாக கொண்டு ஆட்சி செய்தனர். அப்போது பல்லவ மன்னனின் அரசவையில் அமைச்சராக இருந்த பரஞ்ஜோதி என்பவர், இக்கோவிலை கட்டி ஒரு காலை பூஜை நடத்தி வந்ததாக கல்வெட்டுகளில் கூறப்படுகிறது. பல்லவர்கள் சாளுக்கியர்களுடன் போர் புரிந்தபோது, அமைச்சர் பரஞ்ஜோதி இந்த கோவிலில் தங்கள் மன்னன் நரசிம்மவர்ம பல்லவனுக்கு போரில் வெற்றி கிட்டவேண்டும் என்று சிறப்பு யாகம், பூஜை செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் போர் நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, காலை வேலையில் சிவலிங்கம் முன்பு பரஞ்சோதி தீவிர வழிபாட்டில் இருந்தாராம். அப்போது அவர் எதிரில் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்து ஆடியதாம். திடீரென அந்த பாம்பு மாயமாய் மறைந்ததாம். அன்று இரவு பரஞ்ஜோதியின் கனவில் சிவபெருமான் தோன்றி, ‘பக்தனே! நான்தான் சர்ப்பம் வடிவில் உன் முன் தோன்றினேன். சாளுக்கியர்களுடன் போரிடும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்’ என்றும், ‘நான் என்றும் உங்களுக்கு துணை நிற்பேன்’ என்றும் அருளாசி வழங்கியதாகவும் கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வரலாற்று புகழ்வாய்ந்த இக்கோவில் கடந்த ஜூலை மாதம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோவிலின் மூலஸ்தானத்தில் லிங்க வடிவில் மல்லிகேஸ்வரர் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கம் பல்லவர் காலத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். இக்கோவிலுக்கு வடக்கு திசையில் தாயார் மல்லிகேஸ்வரி அம்மனுக்கு தனி சன்னிதி உள்ளது. அதேபோல் எதிர் திசையில் நவக்கிரகங்களுக்கும் சன்னிதி உள்ளது.
ஆலயத்தின் தென் திசையில் வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகர் சன்னிதி, வட திசையில் விநாயகர் சன்னிதியும், நடராஜர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் சன்னிதியும் இருக்கிறது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் என நாயன்மார்கள் சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் எதிர்முனையில் வெள்ளியால் வேயப்பட்ட கொடி மரமும், நந்தி சிலையும் காணப்படுகிறது. தூண்களில் அழகிய வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. சுதை சிற்பங்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

அலங்கார கோலத்தில் மல்லிகேஸ்வரி சமேத மல்லிகேஸ்வரர்
சனிப் பிரதோஷம் :
இக்கோவிலில் மாதந்தோறும் நவக்கிரக சன்னிதியில் உள்ள சனிபகவானை வணங்குவதற்காக சனிப்பிரதோஷம் அன்று ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். தங்களை பிடித்துள்ள ஏழரைசனி நீங்குவதற்காக அங்குள்ள சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பரிகாரம் செய்வர். நந்திசிலைக்கு பால் அபிஷேகம் செய்வர். திருமண தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும் பரிகாரம் செய்வதுண்டு. அதேபோல் மகாசிவராத்திரி அன்று சுமங்கலி பெண்கள், பக்தர்கள் விரதமிருந்து, கண்விழித்து இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு பால்அபிஷேகம், வில்வ இலை கொண்டும் வழிபடுவார்கள். அன்று விடியவிடிய சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.
குறிப்பாக பிரதோஷ நாள் அன்று மல்லிகேஸ்வரர், மல்லிகேஸ்வரி மற்றும் நவக்கிரகங்கள், விநாயகர், முருகர், நடராஜர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு மாலை 4 மணிக்கு தொடங்கும் பால், தயிர், பஞ்சாமிர்தம், வெண்ணை உள்ளிட்ட பஞ்சகவ்ய திருமஞ்சன அபிஷேகம் 5 மணி வரை 1 மணி நேரத்திற்கு மேலாகவும் நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். அப்போது நடக்கும் ஊஞ்சல் சேவையில் சிவபெருமான் பார்வதியுடன் அலங்கார கோலத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதேபோல் ஆடிப்பெருக்கு தினத்தன்று மல்லிகேஸ்வரி அம்மனுக்கு வளையல் காப்பு அபிஷேகம் நடக்கும். அப்போது கோவிலுக்கு வரும் பெண் பக்தர் களுக்கு வளையல்கள் வழங்கப்படும். இக்கோவிலில் உள்ள வில்வ மரத்தை சுற்றிவந்து வழிபட்டால் தாங்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாக உள்ளது.
கார்த்திகை மாதங்களில் மாமல்லபுரத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் இக்கோவிலில் இருந்து இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை யாத்திரைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த ஆலயத்தில் தினந்தோறும் ஏதாவது நிகழ்ச்சிகள், பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும். பக்தர்களுக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டு கொண்டு இருக்கும்.
இக்கோவிலின் நடை காலை 7 மணியிலிருந்து 11 மணி வரையிலும், மாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலும் திறந்து இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதி, காஞ்சீபுரம், திருப்பதி, பெங்களூரு, செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்தும் அரசு பேருந்துகள் மாமல்ல புரத்திற்கு இயக்கப்படுகின்றன.

திருச்சி சமயபுரம், பண்ணாரி, திருவேற்காடு என்ற வரிசையில் தஞ்சை புன்னை நல்லூரும், மக்களின் மனதில் இடம் பிடித்த பிரார்த்தனை தலமாகும்.
பண்டையத் தமிழர்களின் சக்தி வழிபாட்டில் மாரியம்மனுக்கே முதலிடம். மாரி எனில் ‘மழை’ என்ற பொருள் தருவதால் மழை பெறவும், நோய் பயம் நீங்கவும், பக்க துணையாக நிற்கவும், ஆகம முறைகள் தோன்றும் முன்னுரே கிராமங்கள் தோறும் மாரிக்குக் கோவில் அமைத்து வழிபட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் தாய் தெய்வம் மாரியம்மன் எனில் மிகை இல்லை. திருச்சி சமயபுரம், பண்ணாரி, திருவேற்காடு என்ற வரிசையில் தஞ்சை புன்னை நல்லூரும், மக்களின் மனதில் இடம் பிடித்த பிரார்த்தனை தலமாகும்.
சோழர்களும், நாயக்கர்களும், மராட்டியர்களும் ஆட்சி செய்த தஞ்சை மண்ணில் கிழக்கு திசை காவல் தெய்வமாக புன்னைநல்லூர் முத்துமாரி, புகழோடு விளங்குகிறாள். மாரியம்மா, மாரியாத்தா, மகமாயி என்பதெல்லாம் மக்களின் அன்பு அழைப்புகள்.
ஞாயிறு விரதம்:
எல்லா அம்மன்களுக்கும் வெள்ளிக்கிழமையும் ஆடிமாதமும் விசேஷம் என்றால் தஞ்சை முத்து மாரிக்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும், ஆவணி மாதமும் விழாக்காலம் ஆகும். ஆவணி மாதத்தில் பத்து நாட்கள் திருவிழாவும், திருத்தேரும், தெப்பமும் உற்சவமும் பரவசப்படுத்தும்.
இன்றும் தஞ்சை மக்களில் பலர் எந்த ஊரில் இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வதும், ஆவணி ஞாயிறு அன்று பக்தி சிரத்தையுடன் இருப்பதையும் பார்க்கிறோம். கோவிலில் கூட்டம் அதிகாலையிலிருந்தே அலைமோதும் மகளிர், ஆண்கள் மட்டுமல்லாது குழந்தைகள் கூட தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் ஞாயிறு இரவு கோவில் மண்டபங்களிலும், பிரகாரங்களிலும் படுத்துறங்கி காலையில் எழுந்து அம்மன் திருவடி தொழுது வீடு திரும்புவார்கள். அதுவும் ஆவணி ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம் அவ்வளவு கூட்டம் கோவில் நிரம்பி வழிந்து குளக்கரைகளிலும் கோவிலுக்கு வெளியே உள்ள இடங்களிலும் குடும்பத்துடன் படுத்து உறங்கி நேர்த்தி கடனைச் செலுத்துகிறார்கள்.
பிரார்த்தனை:
மனிதர்களின் உடலில் ஏற்படும் பரு, கட்டிகள் தோல் நோய் ஆகியவை நீங்க கோவிலின் வட கிழக்கு பகுதியில் உள்ள குளத்தில் வெல்லக் கட்டி களைப் போட்டு நோய் கரைய வேண்டும் என்றும் உப்பு வாங்கி தொட்டியில் கொட்டிவிட்டு உப்பு போல உதிரவேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வது நம்பிக்கையின் உச்சம்.
கண் நோய் உடற்பிணி தீர வேண்டிக் கொண்டு தங்கம் வெள்ளியாய் உறுப்புகளைச் செய்து உண்டியலில் போட்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
அம்மை நோய் தீர அம்பிகையையே ஏற்ற மருத்துவச்சி என்று நம்பி வேப்பிலையால் தடவி கொடுப்பது பக்தி மட்டுமல்ல மருத்துவம் சம்பந்தப்பட்டதும் கூட. அம் பாளின் கருவறையைச் சுற்றி வேண்டிக்கொண்டால் நோயின் தாக்கமும் காய்ச்சலும் குறையும் என்பது அனுபவப்பட்டவர்களின் கருத்து. மங்கையரின் மங்கலச் சக்தியாக மட்டுமல்ல மாந்தரின் காக்கும் சக்தியாகவும் அருள் பாலிக்கிறாள் இத்தல அன்னை.
கோவிலின் தோற்றம்:
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன், வெங்கோஷி ஒரு முறை சமயபுரம் சென்று அங்கு தங்கி வழிபடும் போது தஞ்சைக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் புன்னை மரக்காட்டில் புற்று வடிவில் தான் இருப்பதினை குறிப்பால் உணர்த்தினாள். 1680-ல் நடந்த நிகழ்ச்சி, அவர் தஞ்சை வந்து பார்த்தபோது புன்னை வனத்தில் புற்று இருப்பதினை கண்ணுற்று, சிறிய கூரையமைத்து புன்னைநல்லூர் என்று பெயரிட்டார்.

அதன் பிறகு தஞ்சையை ஆண்ட துளஜா மன்னனின் மகளுக்கு வைசூரி என்ற அம்மை நோய் உண்டாகி, கண் பார்வையையும் மங்கச் செய்தது. அப்போது அம்பிகை ஒரு சிறுமியாகக் கனவில் தோன்றி புன்னை நல்லூர் வரச் சொன்னாள். அரசர் அவ்வாறே செய்ய அந்த அற்புதம் நடந்தது. ஆம்! அரசிளங்குமரி மீண்டும் கண்பார்வை பெற்று புதிய பொலிவுடன் மீண்டாள்.
மகிழ்ச்சி அடைந்த துளஜா ராஜா சிறிய கோவிலையமைத்து திருச்சுற்றினையும் எழுப்பினார். தவவலிமையில் சிறந்த ஞானியான சதா சிவம் பிரமேந்திரர், புற்று மண்ணாக இருந்த மாரிக்கு திருவடிவம் கொடுத்து எந்திரப் பிரதிஷ்டை செய்து சக்தியூட்டினார். பிறகு, ஆண்ட அரசர்கள் மண்டபங்களும், திருச்சுற்றுகளும், ஏழுநிலை ராஜகோபுரமும் கட்டி ஆலயத்தை விரிவு படுத்தினார்.
புற்று மண்ணால் உருவாக்கப்பட்ட புன்னை நல்லூர் புனிதவதி, படைக்கலம் ஏந்திய நான்கு கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் கருணை மழை பொழியும் கண்களுடன் காட்சி தருகிறாள். இவருக்கான அலங்காரங்களில் தாழம்பூ உடையும், தங்க கவசமும் கொள்ளை அழகு தரும்.
முத்துமாரி :
அன்னைக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டல காலம் தைலக் காப்பு சாற்றப்படுகிறது. அப்போது திருமேணியில் வெப்பம் அதிகரித்து முத்து முத்தாக வியர்வை வெளிப் படும். அதனால் ‘முத்துமாரி’ என்று வணங்கப் படுகிறாள். குளிர்ச்சியாக இளநீர், தயிர் படைக்கப்படுகிறது. துரிகையில் அம்பாளின் திருவுருவம் வரையப்பட்டு வழிபடப்படுகிறது.
முத்துமாரி உற்சவ மூர்த்திக்கும், அருகே தனிச் சன்னிதியில் வடக்கு நோக்கி நிற்கும் விஷ்ணு துர்க்கைக்கும் தினசரி அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப் பெறுகின்றன. மூன்று சுற்றுகளைக் கொண்ட இந்த ஆலயத்தின் இரண்டாவது சுற்றில், தென்கிழக்கு மூலையில் பேச்சியம்மன் போன்ற கிராம தேவதைகள் மேற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். மகமாயியைக் கும்பிட்டு விட்டு, குழந்தைகளின் காக்கும் தெய்வமான பேச்சி அம்மனை பூசிப்பது ஒரு மரபு. மூன்றாவது திருச்சுற்றின் அன்னையின் விமானத்துக்கு நேர் பின்புறம், தல விருட்சமான புன்னை மரம் உள்ளது.
ஆடிப் பூச்சொரிதல் :
தஞ்சை தரணிக்கு மட்டுமல்ல.. உலகெங்கிலுமிருந்து எந்த வித இன பேதமும் இல்லாது மக்களைத் தன்பால் ஈர்த்துள்ளார், புன்னைநல்லூர் முத்துமாரியம்மன். கருணைக் கண்களால் ரட்சிக்கும் இந்த அன்னையின் ஆலயத்தில், ஆவணி மாதம் மட்டும் தான் விழாவா என்றால்? மற்ற கோவில்களைப் போல ஆடி வெள்ளியும் சிறப்புடையதாகவே கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் கூடை கூடையாக பல வண்ணப் பூக்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக ஏந்தி வந்து, ஈஸ்வரியின் திருவுருவே மூழ்கும் வண்ணம் பூச்சொரியும் விழாவை நடத்துகிறார்கள். இந்த நிகழ்வைக் காண ஆயிரம் கண் இருந்தாலும் போதாது. இவ்வாண்டு 33 வகை மலர் களால் இந்த பூச்சொரியும் விழா நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தரிசன நேரம் :
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் 88 கோவில் களில் முதன்மை ஆலயமாக புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஆவணி நாட்களில் அதிகாலை 3 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்.
தஞ்சாவூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் நாகை நெடுஞ்சாலையில் உள்ள புகழ்பெற்ற புன்னைநல்லூர் கோவிலுக்கு எல்லா இடங்களிலிருந்தும் பேருந்து, தொடர்வண்டி போன்ற பயண வசதிகள் உண்டு.