என் மலர்
கோவில்கள்
இரிஞ்சாலக்குடா பரதன் கோவிலுக்கு சென்று வழிபடுபவர்களுக்குத் தடைகள் அனைத்தும் நீங்கி, அவர்கள் வேண்டியவை அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், இரிஞ்சாலக்குடா எனுமிடத்தில் அமைந்திருக்கும் பரதன் கோவில், இரண்டாவது தலமாகும். இந்த ஆலயம் சென்று வழிபடுபவர்களுக்குத் தடைகள் அனைத்தும் நீங்கி, அவர்கள் வேண்டியவை அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கோவில் அமைப்பு
இரிஞ்சாலக்குடாவில் இருக்கும் பரதன் கோவில் மூன்று பக்கம் வாசல்களுடன் மிகப்பெரிய கோவிலாக அமைந்திருக் கிறது. வட்டவடிவில் அமைந்திருக்கும் இக்கோவிலின் கரு வறையின் மேற்கூரை, கூம்பு வடிவத்தில் இருக்கிறது. இக்கரு வறையில் இருக்கும் பரதன் நான்கு கரங்களுடன், வலதுபக்க மேற்கரத்தில் தண்டம், கீழ் கரத்தில் அட்சமாலை, இடதுபக்க மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் சங்கும் கொண்டு நின்ற நிலையில் விஷ்ணுவாகவே காட்சி தருகிறார்.
இக்கோவிலில் இவரே முழுமுதற்கடவுளாக இருப்பதாகக் கருதப்படுகிறார். எனவே விநாயகர் உள்ளிட்ட வேறு எந்தத் துணைத் தெய்வமும் இக்கோவிலில் இடம் பெறவில்லை. இக்கோவில் முழுவதும் அழகிய ஓவியங்கள், கற்சிலைகள், மரச்சிலைகள் என்று கலைநயத்துடன் அமைக்கப்பட்டிருக் கிறது. ஆலயத்தின் சுற்றியுள்ள பகுதியில் நான்கு திருக்குளங் கள் அமைந்திருக்கின்றன. இவற்றுள் கோவில் வளாகத்தில் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ‘குலிப்பிணித் தீர்த்தம்’ புனிதமுடையதாக பக்தர்களால் போற்றி வழிபடப்படுகிறது.
கூடல் மாணிக்கம்
இத்தலத்தில் வீற்றிருக்கும் பரதன் ‘கூடல் மாணிக்கம்’ என்றும், ‘சங்கமேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், கூடல் மாணிக்கம் என்னும் பெயரே அனைவரும் பயன்படுத்துவதாக இருக்கிறது. அவர் இப்பெயரால் அழைக்கப்படுவதற்கு மூன்று விதமான காரணங்களைச் சொல்கின்றனர்.

முந்தைய காலத்தில் சாலக்குடி எனும் ஆறும், குருமலி எனும் ஆறும் சேருமிடத்தில் (கூடும் இடம்) இக்கோவில் அமைந்திருந்தது. எனவே கூடலில் அமைந்த கோவிலின் பேரொளி என்னும் பொருளில், இவர் கூடல் மாணிக்கம் என்று அழைக்கப்பட்டதாக சிலர் சொல்கின்றனர்.
ஒரு சமயம் இந்த தலத்தில் உள்ள பரதனின் தலையில் இருந்து பேரொளி தோன்றியது. அப்பேரொளி மாணிக்கத்திலிருந்து வரும் ஒளியைப் போன்றிருந்தது. அப்போதைய காயங்குளம் அரசன், தன்னிடமிருந்த விலை மதிப்பற்ற மாணிக்கத்தின் ஒளியுடன் அந்தப் பேரொளியை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பினான். அவன் தன்னுடைய அரண்மனையிலிருந்து ஒரு மாணிக்கத்தை எடுத்து வந்து, அதை ஒப்பிட்டுப் பார்க்க, பரதனின் திருவுருவம் அருகில் சென்றான். அப்போது, அந்த மாணிக்கம், பரதனின் திருவுருவத்துடன் சேர்ந்து மறைந்து விட்டது. அன்றிலிருந்து அவர், ‘கூடல் மாணிக்கம்’ என்று பெயர் பெற்றதாக வேறு சிலர் சொல்கின்றனர்.
இன்னொரு விதமான கூற்றையும் பார்த்து விடுவோம்.
ஒரு சமயம் தலிப்பரம்பா என்ற ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர், பல்வேறு ஆலயங்களின் சக்தியை ஒரு சங்கில் ஒன்று திரட்டினார். அதைக் கொண்டு போய் தன் ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் கோவிலின் மூர்த்தியிடம் சேர்த்து, அவரை பெரும் சக்தியுடையவராக மாற்ற வேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் வரும் போது, இக்கோவிலுக்கும் வந்தார். அப்போது அவர் கையில் இருந்த சங்கு எதிர்பாராமல் கீழே விழுந்து உடைந்து போனது. அந்தச் சங்கில் இருந்த இறைசக்திகள் அனைத்தும், இங்கிருந்த பரதனுடன் சென்று கூடியதால், இவர் ‘கூடல் மாணிக்கம்’ என்று பெயர் மாற்றமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்தக் கோவில் அதிகாலை 3 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இக்கோவிலில் மூன்று வேளை பூஜைகள் மட்டுமே நடைபெறுகிறது. இங்கு உச்சிகால பூஜை மற்றும் பந்தீரடி பூஜைகள் நடைபெறுவதில்லை. இது போல் கேரளக் கோவில்களில் தினமும் நடைபெறும் சீவேலி எனும் உற்சவர் ஊர்வலமும் இங்கு நடத்தப்படுவது கிடையாது. இங்கு பரதன் தவக்கோலத்தில் இருப்பதால், பூஜையின் போது எந்தவிதமான வாசனைத் திரவியங்களும் சேர்ப்பதில்லை. தீபாராதனை வழிபாடும் இல்லை. தாமரை மலர், துளசி மற்றும் தெச்சி பூக்கள் மட்டுமே பூஜைக்குப் பயன்படுத்தப்படுகிறது. வேறு எந்த மலரும் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. இக்கோவில் வளாகத்தில் இருக்கும் துளசிச் செடிகளில் விதைகள் கூடத் தோன்றுவதில்லை என்று சொல்கிறார்கள்.
கூடல் மாணிக்கருக்கு, 101 தாமரை மலர்களுக்கு அதிகமான எண்ணிக்கையில் 12 அடி நீளமான தாமரை மலர் மாலையை அணிவித்து வேண்டுபவர்களுக்கு, காரியத் தடைகள் அனைத்தும் விலகும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால், இங்கு தாமரை மலர் மாலை வழிபாடு அதிகமாக இருக்கிறது.
கத்தரிக்காய் படையல்
இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தீராத வயிற்று வலியால் துன்பமடைந்து வந்தார். அவரது கனவில் தோன்றிய இவ்வாலய இறைவன், அவரது தோட்டத்தில் விளைந்த கத்தரிக் காய்களில் 101 கத்தரிக்காய்களைக் கோவில் வழிபாட்டிற்கான உணவாகப் படைத்து வணங்கினால், வயிற்று வலி மறைந்து, அதனால் ஏற்பட்ட அனைத்துத் துன்பங்களும் தீரும் என்று கூறியிருக் கிறார். அந்தப் பக்தரும் அது போல் செய்து வயிற்று வலி நீங்கப் பெற்றார் என்கிறார்கள். அன்றிலிருந்து, இக்கோவிலில் தீராத வயிற்று வலியால் துன்பப்படுபவர்கள், 101 கத்தரிக்காய்களைப் படைத்து வழிபடும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.

இக்கோவிலில் மலையாள நாட்காட்டியில் மேட மாதம் (சித்திரை மாதம்) பூரம் தொடங்கி, திருவோணம் முடிய ‘மேடத் திருவிழா’ (சித்திரை விழா) நடத்தப்படுகிறது. இவ்விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் 17 யானைகளுடன் சுவாமி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இதில் நூறு இசைக்கலைஞர்கள் பங்கேற்று இசையை வாசிப்பது சிறப்புக் குரியதாகும்.
மலையாள நாட்காட்டியில் துலாம் மாதம் (ஐப்பசி மாதம்) வரும் திருவோண நாளில், பரதனுக்குப் புதிதாக அறுவடையான அரிசியைக் கொண்டு, புத்தரிசி உணவு படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. அன்றைய நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குப் புத்தரிசி உணவு பிரசாதமாக வழங்கப்படு கிறது. மறுநாள் முக்குடி என்ற வயிற்று வலியைப் போக்கும் பிரசாதம் ஒன்றினைப் பக்தர்களுக்கு அளிக்கின்றனர். இந்த முக்குடிப் பிரசாதம், பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினரால் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குலிப்பிணி தீர்த்தம்
முந்தைய காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இவ்விடத்தில், குலிப்பிணி என்ற முனிவர் தலைமையில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு அவர்களுக்குக் காட்சியளித்து, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார்.
அவர்கள் தங்களுக்குக் காட்சியளித்த இடத்தில் இறைவன் கோவில் கொண்டு அருள வேண்டும் என்று வேண்டினர். விஷ்ணுவும் முனிவர்கள் கேட்ட வரத்தை அளித்தார்.
அதன் பின்னர், முனிவர்கள் கங்கையை வேண்டி வரவைத்து, கங்கை வெள்ளத்தில் மூழ்கி அனைவரும் இறைவனின் திருவடியைச் சென்றடைந்தனர். கங்கை வந்தடைந்த இடம் இக்கோவில் வளாகத்தினுள் அமைந்திருக்கிறது. அந்தக் குளம், இங்கு தவமிருந்த முனிவர்களின் தலைமை முனிவரான குலிப்பிணி என்பவரின் பெயரிலேயே ‘குலிப்பிணி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குலிப்பிணித் தீர்த்தக் குளத்தில், கோவிலில் பூஜை செய்பவர்கள் மட்டுமே நீராடுகின்றனர்.
அமைவிடம்
திருச்சூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், சாலக்குடியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், கொடுங்கலூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் இரிஞ்சாலக்குடா பரதன் கோவில் உள்ளது. திருச்சூர், சாலக்குடி, கொடுங்கலூர் மற்றும் குருவாயூர் ஆகிய இடங் களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

கோவில் உள்புற தோற்றம்
விழாக்கள்இக்கோவிலில் மலையாள நாட்காட்டியில் மேட மாதம் (சித்திரை மாதம்) பூரம் தொடங்கி, திருவோணம் முடிய ‘மேடத் திருவிழா’ (சித்திரை விழா) நடத்தப்படுகிறது. இவ்விழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் 17 யானைகளுடன் சுவாமி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இதில் நூறு இசைக்கலைஞர்கள் பங்கேற்று இசையை வாசிப்பது சிறப்புக் குரியதாகும்.
மலையாள நாட்காட்டியில் துலாம் மாதம் (ஐப்பசி மாதம்) வரும் திருவோண நாளில், பரதனுக்குப் புதிதாக அறுவடையான அரிசியைக் கொண்டு, புத்தரிசி உணவு படைத்து வழிபாடு செய்யப்படுகிறது. அன்றைய நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குப் புத்தரிசி உணவு பிரசாதமாக வழங்கப்படு கிறது. மறுநாள் முக்குடி என்ற வயிற்று வலியைப் போக்கும் பிரசாதம் ஒன்றினைப் பக்தர்களுக்கு அளிக்கின்றனர். இந்த முக்குடிப் பிரசாதம், பல தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினரால் தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குலிப்பிணி தீர்த்தம்
முந்தைய காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இவ்விடத்தில், குலிப்பிணி என்ற முனிவர் தலைமையில் பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு அவர்களுக்குக் காட்சியளித்து, ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார்.
அவர்கள் தங்களுக்குக் காட்சியளித்த இடத்தில் இறைவன் கோவில் கொண்டு அருள வேண்டும் என்று வேண்டினர். விஷ்ணுவும் முனிவர்கள் கேட்ட வரத்தை அளித்தார்.
அதன் பின்னர், முனிவர்கள் கங்கையை வேண்டி வரவைத்து, கங்கை வெள்ளத்தில் மூழ்கி அனைவரும் இறைவனின் திருவடியைச் சென்றடைந்தனர். கங்கை வந்தடைந்த இடம் இக்கோவில் வளாகத்தினுள் அமைந்திருக்கிறது. அந்தக் குளம், இங்கு தவமிருந்த முனிவர்களின் தலைமை முனிவரான குலிப்பிணி என்பவரின் பெயரிலேயே ‘குலிப்பிணி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குலிப்பிணித் தீர்த்தக் குளத்தில், கோவிலில் பூஜை செய்பவர்கள் மட்டுமே நீராடுகின்றனர்.
அமைவிடம்
திருச்சூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவிலும், சாலக்குடியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், கொடுங்கலூரில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் இரிஞ்சாலக்குடா பரதன் கோவில் உள்ளது. திருச்சூர், சாலக்குடி, கொடுங்கலூர் மற்றும் குருவாயூர் ஆகிய இடங் களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
சேலம் மாவட்டத்தில் ஆன்மிக நகரின் அடையாளமாக திகழும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலின் கோபுரம் 13-ம் நூற்றாண்டை கடந்து இப்பவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
சேலம் மாவட்டத்தில் ஆன்மிக நகரின் அடையாளமாக திகழ்கிறது தாரமங்கலம். இங்கு எந்த திசையில் திரும்பி பார்த்தாலும் ஆன்மிக மணத்துடன் கோவில்கள் இருப்பதை காணமுடிகிறது. நமச்சிவாய..! நமச்சிவாய..! ஓம் நமச்சிவாய..! என்று ஊருக்குள் நுழைந்ததும் பக்தி பரவசமுடன் பாடல் ஒலிக்கும் சத்தம் இதயத்தை வருடுகிறது.
13-ம் நூற்றாண்டை கடந்து இப்பவும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலின் கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த கோவிலின் தனிச்சிறப்பு என்னவென்றால்,சாமி சிலைகள் மட்டுமின்றி உள்மண்டபம், வெளி மண்டபம் அனைத்தும் கற்களால் ஆனவை. கோவிலுக்கு அருகே இருக்கும் மண்டபத்தில் அமர்ந்திருந்த முதியவர்களை சந்தித்தோம்.
அவர்கள் நம்மிடம் தாரமங்கலம் ஊர் பெருமை பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்?.
சூரிய பூஜை :
தாரமங்கலம் என்ற பெயர் ஏற்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர். இக்கோவிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணயான புண்ணிய காலங்களில் மாலை வேளையில் சூரியன் கதிர்களும், சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது படுகின்றன.
அதாவது, சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். சூரியனுடைய கதிர்கள் ராஜகோபுர வாயிலின் வழியே வந்து, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, பின் மூன்று உள் வாயிலையும் கடந்து சிவலிங்கத்தின் மேல் படுவது அபூர்வமாக கருதப்படுகிறது. சந்திரனுக்கும், சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவார்கள். கோவிலில். உட்பிரகார தூண்கள் எல்லாவற்றிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடு அமைந்த திருவுருவங்கள் காணப்படுகின்றன.

கங்கை தீர்த்தம் :
கோவில் வளாகத்தில் சித்தி விநாயகர் சன்னதி இருக்கிறது. இது ஒன்பதே கருங்கற்களால் அமைக்கப்பெற்றது. கல்மேடை அமைக்கப்பட்டு, அதன்மீது விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. விமானம் வரை கற்களாலேயே ஆனது. கோவிலின் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது சிற்பியின் மகனான சிறுவன் இந்த ஒன்பது கல் கோவிலைக் கட்டியதாக ஒரு வரலாறு உண்டு.
இந்த கோவிலுக்கு கிழக்கே அதாவது பஸ்நிலையம் அருகில் ஒரு தெப்பக்குளம் இருக்கிறது. இந்த குளத்தில் சிவந்த கற்களால் கட்டப்பெற்ற கைப்பிடிச் சுவர்கள் சுற்றிலும் இருக்கின்றன. குளத்தின் நடுவில் நீராழி மண்டபம் உள்ளது. இந்த குளத்து தண்ணீரை ‘கங்கை தீர்த்தம்’ என்கிறார்கள். ஏனென்றால், மூலவர் கைலாசநாதருக்கு அபிஷேகம் செய்யும் பால், இளநீர், திரவியங்கள் நேரடியாக அங்கிருந்து குழாய் மூலம் இந்த குளத்திற்கு வந்து சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தான் இதனை கங்கை தீர்த்தம் என்கிறார்கள்.
பராமரிப்பு இல்லாத தெப்பக்குளம் :
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தெப்பக்குளத்தில் இதுவரை தண்ணீர் வற்றிய வரலாறு கிடையாது. நீருற்று இருந்து கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், இந்த குளத்திற்கு வந்து கை, கால், முகத்தை கழுவி சுத்தம் செய்துவிட்டு தான் கோவிலுக்குள் செல்வார்களாம். இப்படி வரலாற்று சிறப்பு மிக்க இந்த தெப்பக்குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமலும், பாசிபடர்ந்து தண்ணீர் அசுத்தமாக காணப்படுகிறது.
மேலும் இந்த தெப்பக்குளத்தின் அருகே வடக்கில் சிறிய தெப்பக்குளம் உள்ளது. இதுவும் பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. கற்களால் ஆன இந்த 2 தெப்பக்குளங்களையும் சீரமைத்து உரிய முறையில் பராமரிக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் மட்டுமின்றி பத்ரகாளியம்மன் கோவில், கண்ணனூர் மாரியம்மன் கோவில், முருகன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், தண்டு மாரியம்மன் கோவில், விநாயகர் கோவில் என எட்டு திசையிலும் கோவில்கள் நிறைந்து காணப்படுவதால் இந்நகரை ஆன்மிக நகரம் என்றும் அழைப்பதுண்டு. இங்குள்ள பத்ரகாளியம்மனை ஊர் காவல் தெய்வமாக வழிபடுகிறார்கள். இந்த கோவில் அருகே ஒரு தெப்பக்குளம் இருக்கிறது.

நிம்மேலி கோவில் சனீஸ்வரனை எள் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனிப் பார்வையால் அவதிப்படுபவர்களும், அஷ்டமச் சனி உள்ளவர்களும் நிவாரணம் பெறுவது நிஜம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாகை மாவட்டம் சீர்காழி - பனங்காட்டாங்குடி சாலையில், சீர்காழிக்கு மேற்கே மூன்று கி.மீ தொலைவில் உள்ளது நிம்மேலி என்ற தலம்.
நேர்மை நிலமையிலிருந்து விலகி யார் தவறு செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இது இயற்கை நியதி. இந்த நியதி மானிடனுக்கு மட்டுமல்ல சனீஸ்வரனுக்கும் பொருந்தும். அது என்ன கதை?
சனி செய்த தவறு :
திடத நாட்டை ஆண்ட மன்னன் வீரசேனன். அவனது மகன் நளன் குண்டின புரத்து அரச குமாரியான தமயந்தியின் சுயம்வரத்தில் கலந்து கொள்கிறான். இந்திரன், அக்னி, வாயு, எமன் போன்றவர்களும் தமயந்தியின் மேல் ஆசை கொண்டு அந்த சுயம் வரத்தில் நளனின் உருவெடுத்து கலந்து கொள்கின்றனர். தமயந்தி தன் சமயோசித புத்தியினால் நளனை அடையாளம் கண்டு கொள்கிறாள். அவனுக்கே மாலையிடுகிறாள். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
காலதாமதமாக வந்த கலிபுருடன், நளனுக்கு தமயந்தி மாலையிட்டு விட்டாள் என்ற செய்தி அறிந்து நளனின் மேல் பகை கொள்கிறான். எனவே கலிபுருடன் சனியின் துணையை நாடுகிறான். சனியும் தன் நடுநிலையிலிருந்து நழுவி நளனுக்கு மிகுந்த தொல்லை கொடுக்கிறான். கார்கோடன் என்ற பாம்பை ஏவி நளனைத் தீண்டச் செய்கிறான்.
வேதனையடைந்த நளன் திருநள்ளாறு சென்று சிவபெருமானை பூஜிக்க, காரணமில்லாமல் நளனுக்கு துன்பமிழைத்த சனியின் மேல் சிவபெருமான் கோபம் கொள்ள, அஞ்சிய சனி அவரது திருவடிகளில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டுகிறான்.
சனியை சிவலிங்க பூஜை செய்து வருமாறு சிவபெருமான் அருளுகிறார். முன்பே சாபத்தினால் குஷ்ட ரோகம் பெற்றிருந்த சனி, இப்போதைய சாபமும் சேர்ந்து இரட்டிப்பாக, வடக்கு நோக்கி பயணமாகிறான்.
சாபம் நீங்கிய சனி :
நிம்மேலி என்ற தலத்துக்கு வந்து சேர்ந்த சனி அங்கு சிவன் கோவிலின் முன் உள்ள தீர்த்தத்தில் நீராடி, உடல் குளிர்ச்சியடைந்து, அந்த ஆலயத்தில் உள்ள வருண லிங்கத்தை வழிபட, சனியை விட்டு நோய் விலகுகிறது. பின், திருநள்ளாறு நோக்கி புறப்பட்டுச் சென்ற சனி பகவான் அங்கு தர்பாரன்யேஸ்வரரை வணங்கிவிட்டு அங்கேயே தங்கி அருள்புரிய தொடங்கினான்.
சனியின் உடல் வேதனை தீர்ந்து, அவன் நிம்மதி அடையக் காரணமான இத்தலம் ஆரம்பத்தில் நிம்மதி என்றே அழைக்கப்பட்டது. பிறகு அது மறுவி, நிம்மலியாக மாறி, தற்போது ‘நிம்மேலி’ என்று அழைக்கப்படுகிறது.
சனி பகவான் வழிபட்ட ஆலயம்தான் அருள்மிகு விசுவநாதர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் அருள்மிகு விசுவநாதர். இறைவி அருள்மிகு விசாலாட்சி.

விசாலாட்சி, விசுவநாதர்
ஆலய அமைப்பு :
ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இது ஒரு சிறப்பு அம்சம். உள்ளே நுழைந்ததும் பலிபீடமும் நந்தியும் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகன், இடும்பன் திருமேனிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும், கிழக்கில் சண்டி கேசுவரரும் அருள்பாலிக்கின்றனர்.
உள்ளே நுழைந்ததும் மகாமண்டபமும் அதைத் தொடர்ந்து அர்த்த மண்டபமும் உள்ளன. கருவறையில் இறைவன் அருள்மிகு விசுவநாதர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். கருவறையின் வடக்கில் தெற்கு முகம் பார்த்து அருள்மிகு விசாலாட்சி அம்மை வீற்றிருக்கிறார்.
இறைவனின் கர்ப்பக்கிரக தேவக் கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி மற்றும் வடபுறம் துர்க்கையின் திருமேனிகள் உள்ளன. நந்தி மண்டபத்தின் வடதிசையில் வருணலிங்கமும் அவரை வணங்கும் சனீஸ்வரனும் காட்சி தருகின்றனர்.
ஆலயத்தின் தலவிருட்சம் அரசமரம். இந்த ஆலயம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சனி பாவ விமோசனம் பெற்ற தலம் இது. எனவே, சனியால் பாதிப்பு உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள இறைவனையும் இறைவியையும், வருணலிங்கத்தையும் வழிபடுகின்றனர். சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலம் வந்து விசுவநாதரையும் வருண பகவானையும் சனிக்கிழமைகளில் வழிபட்டு பின்னர் திருநள்ளாறு சென்று சிவனையும் சனி பகவானையும் வழிபட்டு வந்தால் சனி கிரகத்தினால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி நலம் பெறுவர் என்கின்றனர் பக்தர்கள்.
நினைவில் இருக்க வேண்டிய உன்னத நாட்கள் :
ஒவ்வொரு ஆண்டும் தொடங்குகிற பொழுதே முக்கிய தினங்களை குறித்து வைத்துக் கொண்டு வழிபாட்டில் ஈடுபட வேண்டும். குறிப்பாக, அமாவாசை, பவுர்ணமி, கிரகண நாட்கள், முன்னோர்களின் திதி தினங்கள், சிவராத்திரி, நவராத்திரி, நமது பிறந்த நட்சத்திர நாட்கள், மகான்களின் அவதார தினங்கள், ராமநவமி, கோகுலாஷ்டமி, வருடப்பிறப்புநாள், மாதப்பிறப்பு நாள், ஏகாதசி, சஷ்டி, குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாட்கள் போன்றவற்றை மனதில் பதித்து வைத்துக்கொண்டு அந்த புண்ணிய தினங்களில் நல்ல எண்ணங்களோடு செயல்பட்டு இறைவனையும், முன்னோர்களையும் நினைத்து வழிபட வேண்டும்.
அந்த நாட்களில் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கலாம். முதியவர்களுக்கு ஆடை தானம் வழங்கலாம். வசதியில்லாத குழந்தைகளின் கல்விக்கு, கல்யாணக் கனவுகளை நிறைவேற்ற ஒரு தொகையை நிதி உதவிக்காக எடுத்து வைக்கலாம். அன்றைய தினம் ஏதேனும் ஒரு நல்ல காரியம் செய்தால் உங்கள் வாழ்க்கையில் உன்னதமான பலன் கிடைக்கும் என்பது உறுதி.
ஐப்பசி பவுர்ணமியில் இங்குள்ள இறைவனுக்கு சிறப்பான முறையில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. மாத பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சோம வாரங்கள், மார்கழி தனுசு நாட்கள், கார்த்திகை போன்ற நாட்களில் இறைவன், இறைவி, வர்ணலிங்கம், சனி பகவான் ஆகியோர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
இந்த ஆலயம் செல்ல சீர்காழியிலிருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.
சனி பகவானுக்கு அருளிய வருணலிங்கத்தையும் அருகே உள்ள சனீஸ்வரனையும் எள் விளக்கு ஏற்றி வழிபட்டால் சனிப் பார்வையால் அவதிப்படுபவர்களும், அஷ்டமச் சனி உள்ளவர்களும் நிவாரணம் பெறுவது நிஜம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தேவாரம் பாடல் பெற்ற திருத்தலங்கள் 32-ல் 11-ஆவதாகவும், திருமால் சிவபெருமானை வழிபட்டு சக்ராயுதம் பெற்ற தலமாகவும் விளங்குகிறது திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் ஆலயம்.
உலக உயிர்களெல்லாம் உய்யும் பொருட்டு கடல் சூழ்ந்த நிலவுலகில் சிவப்பரம்பொருள் பல அற்புதங்களை நிகழ்த்தி அருளாட்சி புரிந்து வருகிறான். காஞ்சி நகரைத் தலைமை இடமாகக் கொண்ட தொண்டை மண்டலத்தைச் சார்ந்த தேவாரம் பாடல் பெற்ற திருத்தலங்கள் 32-ல் 11-ஆவதாகவும், திருமால் சிவபெருமானை வழிபட்டு சக்ராயுதம் பெற்ற தலமாகவும் விளங்குகிறது திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் ஆலயம்.
ஒருசமயம் சிவனும், பார்வதியும் கயிலாயத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, ‘இவ்வுலகம் என்னால்தான் இயங்குகிறது’ என்று ஈசன் சொன்னார். இதனை ஏற்க மறுத்த பார்வதி தேவி, சிவபெருமானின் கண் முன்னே கையை வைத்துப் பார்வையை மறைத்தார். உடனே உலகமே இருளில் மூழ்கியது. இதனால் மிகுந்த வருத்தமுற்ற பார்வதி, ‘என்னால் ஒரு விநாடியில் அனைத்து ஜீவராசிகளும் துயரம் அடைந்துவிட்டனவே! இந்த பாவத்தை நான் ஏற்றுக்கொண்டு உங்களிடத்திலிருந்து விலகி, பூமிக்குச்சென்று என் பாவத்தை நிவர்த்தி செய்கிறேன்’ என்றார்.
சிவனும், ‘அவ்வாறே ஆகட்டும்’ என்று சொல்ல, தேவி பூமியில் பாலாற்று நதிக்கரையை வந்தடைந்தார். அங்கு ஒரு வில்வமரத்தடியில் மணலை லிங்கமாகப் பிடித்துப் பூஜை செய்து வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஈசன், “பார்வதி தேவி! பார்வதி தேவி!” என்று கூப்பிட்டார். பூஜையில் இருந்ததால் ஈசன் அழைத்தது பார்வதி காதில் விழவில்லை. இதனால் கோபமுற்ற சிவபெருமான், இந்தப் பூஜையை கலைக்க தன் தலையில் இருந்த காவிரியை, பாலாற்றில் போட்டார். உடனே பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.
அந்த வெள்ளத்தில் சிவலிங்கம் அடித்துச் செல்லாமலிருக்க, தேவி லிங்கத்தை அணைத்துக்கொண்டு தன் அண்ணனான பெருமாளை துணைக்கு அழைத்தார். வெள்ளத்தால் தன் தங்கையின் பூஜை கலைந்துவிடக்கூடாதே என்றெண்ணிய பெருமாள், திருப்பாற்கடலில் படுத்து அணை கட்டியவுடன் இந்த பாலாறு காஞ்சீபுரத்திற்கு தெற்கே ஓடத் தொடங்கியது. இதன்பின் பூஜையைப் பூர்த்தி செய்த பார்வதி தேவி, ஈசனைச் சென்றடைந்தார்.
இத்தகைய புராணப் பின்னணியைக் கொண்ட சிறப்புமிக்க திருத்தலத்தில், திருமால் ஈசனிடம் சுதர்சன சக்ரம் பெற்றார் என்று காஞ்சி புராணம் கூறுகின்றது.
குபன் என்ற அரசன் திருமால் பக்தன். அவனுக்கும், ததீசி முனிவருக்கும் ஒருமுறை பகை ஏற்பட்டது. குபன், திருமாலிடம் முறையிட்டான். திருமால் ததீசி முனிவரின் மீது தமது சக்ராயுதத்தை ஏவினார். முனிவரது வஜ்ர உடலைத் தாக்கமுடியாமல் அந்த சக்ராயுதம் கூர் மழுங்கியது.
முன்பொரு சமயம், சலந்தரன் என்ற அசுரன் தேவர்களுக்குத் துன்பம் விளைவித்து வந்தான். தேவர்கள் சிவ பெருமானிடம் முறையிட, அவர் விரலால் பூமியில் வட்டம் செய்தார். அந்த வட்டம் ஒரு சக்ரமாகி சலந்தரனை அழித்தது. அந்த சக்கரத்தை சிவபெருமானிடம் கேட்டுப் பெறவேண்டும் என்றும், காஞ்சி மாநகரில் சிவ வழிபாடு மேற்கொண்டால் சக்கரம் கிடைக்கும் என்றும் திருமாலிடம் தேவர்கள் கூறினர்.
அதனால் இத் தலத்தை அடைந்த திருமால், சக்கர தீர்த்தம் ஏற்படுத்தி, பாசுபத விரதம் பூண்டு, திருநீற்றை உடல் முழுவதும் பூசி ருத்ராட்சம் அணிந்து, அம்பிகை பூஜித்த ஈசனை முறைப்படி பூஜை செய்து வந்தார். தினமும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு, ஆயிரம் நாமங்கள் சொல்லி ஈசனை அர்ச்சித்து வந்தார். ஒருநாள் பூஜையின்போது, ஈசனின் திருவிளையாடலால் ஒரு மலர் குறைந்தது. வழிபாட்டில் குறையேற்படலாகாது என்றெண்ணி, தன் கண்ணைப் பறித்து, கண் மலரால் ஈசனை வழிபாடு செய்தார். திருமாலின் ஆழ்ந்த பக்திக்கு ஈசன் உளம் மகிழ்ந்து காட்சி கொடுத்தார்.
தனக்கு காட்சி தந்த சிவபெருமானை மும்முறை வலம்வந்து வணங்கினார் திருமால். பின்னர் ஈசன் திருமாலைப் பார்த்து, ‘நாராயணரே! தாமரை மலருக்காக உம் கண்ணை எடுத்து அர்ச்சித்தமையால், உள்ளம் மகிழ்ந்து உமக்கு தேன் மருவிய தாமரை மலர்க்கண்ணை அளித்தோம். இனி நீ தாமரைக்கண்ணன், பதுமாஷன் என்று பெயர்பெற்று விளங்குவாய். நீ பேறு பெற்றதால், இத்தலம் உன் திருப்பெயரால் ‘திருமாற்பேறு’ என விளங்கப்பெறும். இச்சக்கரத்தால் வெல்லற்கரிய பகைவரையும் வெல்க’ என்றுகூறி சுதர்சன சக்கரம் வழங்கி ஆசீர்வதித்தார்.

சக்ராயுதத்தைப் பெற்றுக்கொண்ட திருமால், ‘என்போன்று ஆயிரம் திருநாமங்கள் கூறி மலர்களால் வழிபடுபவர் களுக்கு, வேண்டும் வரம் அருள வேண்டும்’ என்று வேண்ட ஈசனும் அவ்வாறே வரமளித்தார். புராணப்பெருமை வாய்ந்த இத்தலம் தற்போது திருமால்பூர் என அழைக்கப்படுகிறது. முன்பு அரிச்சக்கரபுரம், வில்வாரண்யம், உத்தர காஞ்சி ஆகிய பெயர்களாலும் அழைக்கப்பட்டுள்ளது.
இத்தல ஈசனுக்கு தணிவொன்று மணமுடையார், தீண்டச்சிவந்த பிரான், சாந்த ரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவள மலையார், வாட்டந் தவிர்த்தார், பாசப்பிணி விண்ட சாகிசனார் என்னும் எட்டு நாமங்கள் ஏற்பட்டது. அம்பிகைக்கு அஞ்சனாட்சி, கருணை நாயகி, ஆதி காமாட்சி என்னும் பெயர்கள் வந்தன. அஞ்சனாட்சி சமேத மணிகண்டீசுவரர் என்னும் பெயருடன் விளங்கும் இவ்வாலயம் வேலூர் மாவட்டத்தில் உள்ளது. முதலாம் பராந்தக சோழ மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட, சைவ-வைணவத்தலமான இவ்வாலயம் கல் திருப்பணி ரீதியாக 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மன்னனின் நினைவாக சோளஸ்வரர் மேற்கு முகமாக இருந்து காட்சி தருகிறார்.
சந்திரன் பூஜித்த இத்தலத்தை வழிபடுவோருக்கு, உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு. இக்கோவிலில் பக்தர்களுக்கு சடாரி சாத்தி, தீர்த்தம் தருவது தனிச்சிறப்பு.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய அம்சங்களால் சிறப்புப் பெற்றது இவ்வாலயம். கிழக்குப் பார்த்த இக்கோவில் முன்பு சக்கர தீர்த்தம் உள்ளது. அருகில் விநாயகர், நின்ற திருக்கோலத்தில் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து ஆலயத்திற்குள் செல்லும்போது பிரகார வாசலில் இடப்புறமாக ஆஞ்சநேய முகமாக நின்ற நிலையில் உள்ள அதிகார நந்தியை வழிபட்டு, சுவாமியை தரிசனம் செய்வதற்குச் செல்ல வேண்டும்.
மூலவர் மணிகண்டீசுவரருக்கு எதிரில் திருமால், ஈசனை வணங்கிய கோலத்தில் உள்ளார். உற்சவர் திருமால் கையில் தாமரை மலரும், கண்ணும் உள்ளது. சித்திரை நட்சத்திரக்காரர் களின் பரிகாரத்தலமாக இந்த ஷேத்திரம் விளங்குகிறது. அஷ்ட லட்சுமியுடன் கூடிய பீடத்திலுள்ள அம்பாளை மீன ராசிக்காரர்கள் வழிபட சகல தோஷமும் நீங்கும். பவுர்ணமிதோறும் அம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது. அஷ்டபுஜ துர்க்கையும், எட்டுக் கரங்களுடன் நின்ற வண்ணம் காட்சி தருகிறார். பத்துக் கரங்களுடன் வல்லபை சமேதராக பிரதான விநாயகராக, வல்லவ விநாயகர் காட்சி தருகிறார்.
கும்பகோணத்துக்கு அடுத்தபடியாக மாசி மகம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், கார்த்திகை தீபம், ஆருத்ரா, அன்னாபிஷேகம் ஆகியவை இங்கு முக்கிய விழாக்களாகும்.
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். திருமால்பூர் தரிசனம் செய்வோர், இறைவனை எட்டு நாமங்கள் சொல்லி வழிபடுவோர், வழிபோக்கராக ஒரு கணப்பொழுதேனும் இத்தலத்தில் தங்கியோர்-நினைத்தோர் ஆகியோருக்கு முக்தி கிட்டும். இப்பிறவியில் நினைத்தது நிறை வேறும். இறைவனுக்கு சிவப்புத் தாமரை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபடுவது இவ்வாலய முறை.
நந்திக்கு விசேஷத் தலம் :
பார்வதி தேவி பூஜைக்குத் துணையாக இருந்ததால், இங்கு அதிகார நந்தி (கயிலாய நந்தி) நின்ற நிலையில் காட்சி தருகிறார். ராவணன் இத்தல இறைவனை தரிசிக்க வரும்போது நந்தி இருப்பதை கவனிக்காமல் தரிசிக்கச் சென்றார். ராவணனைப் பார்த்து, ‘சுவாமி தியானத்தில் இருக்கிறார். ஆகையால் உள்ளே போகாதே!’ என்று நந்தி தடுத்தார். இதனால் ராவணனால் சபிக்கப்பட்டு ஆஞ்சநேய முகமாக மாறிவிட்டது நந்தியம்பெருமானுக்கு. உடனே சபிக்கப்பட்ட முகத்தால் ராவணனுக்கு அழிவு என்று நந்தி சபித்தார். (ஆஞ்சநேயரால் இலங்கை அழிந்தது புராணத் தகவல்). ஆகையால் நின்ற நிலையில் இருக்கும் நந்திகேஸ்வரரை வணங்கி, பின் சுவாமியை தரிசிப்பது கயிலாய தரிசனம் பெற்ற புண்ணியம் ஆகும்.
செங்கல்பட்டு - அரக்கோணம் ரெயில் பாதையில் திருமால்பூர் ரெயில் நிலையத்திற்கு தென் மேற்கே 4 கி.மீ தூரத்தில் உள்ளது இந்த ஆலயம். காஞ்சீபுரத்திலிருந்து 12 கி.மீ., அரக்கோணத்தில்இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் திகழ்கிறது.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப தமிழ்நாட்டில் உள்ள மலை மற்றும் குன்றுகளில் முருகப்பெருமான் கோவில்கள் நிறைந்து காணப்படுகின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் திகழ்கிறது.
அலகுமலை கோவில் தல வரலாற்றை அறிய வரலாற்று சான்றுகளும் இலக்கிய சான்றுகளும் உள்ளன. திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டு ஒன்று கைலாசநாதர் கோவில் முன்பாக உள்ளது. அக்கல்வெட்டு கி.பி.1641–ம் ஆண்டு எழுதப்பட்டது.
பெயர் காரணம் :
அலகு என்றால் ‘மூக்கு’ என்பது பொருள். மூக்கின் வடிவம் போல் இந்த மலை அமைந்து உள்ளதால் ‘அலகு மலை’ என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அலகு மலைக்கு கீழே அழகாபுரி அம்மன் என்ற ஊர்க்காவல் தெய்வம் ஒன்று இருப்பதால் இந்த மலைக்கு அலகுமலை என்ற பெயர் வந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். மலை மீது முருகப்பெருமான் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மலை அடிவாரத்தில் மயில் வாகன மண்டபம் உள்ளது. இதையடுத்து படியேறி எட்டு தூண்கள் கொண்ட மண்டபத்தை கடந்தால், இடதுபுறத்தில் பாதவிநாயகரை தரிசிக்கலாம். அலகுமலை படிகளின் ஆரம்பத்தில் பாத விநாயகர் கோவில் உள்ளது. விநாயகரை வழிபட்டு விட்டு, வடக்கு நோக்கி அமைந்துள்ள படிகளை கடந்தால் இடது புறம் இடும்பன் சன்னிதி அமைந்துள்ளது.
ஆறுபடை வீடுகள் :
இடும்பன் சன்னிதியைக் கடந்து மலையின் மேற்காக உள்ள 300 படிகளை கடந்து மேலே சென்றால் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யலாம். இந்த ஆறுபடை வீடுகள் கோவில் 1984–ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் உள்ளாரோ, அதே போன்று இந்த சன்னிதிகளிலும் காட்சி தருவது சிறப்பம்சமாகும். அத்துடன் சண்முகருக்கு ஒரு சன்னிதி அமைந்துள்ளது. மலை பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும் மேலே ஏழாவது படைவீடாக அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும். ஆறுபடை வீடு சன்னிதிகளின் அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது.
இடும்பன் சன்னிதி அருகில் குழந்தை குமார் கோவில் உள்ளது. இங்கு அலகுமலை குமரன், பாலகனாக காட்சி அளிக்கின்றார். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு, அதை நிறைவேற்றும் தெய்வமாக இந்த பாலமுருகன் திகழ்கிறார். பழனி மலையில் இருப்பது போல் ஆண்டி கோலத்தில், சிறிது குஞ்சம் போன்று முடியுடன் வலது கையில் தண்டாயுதத்தை தாங்கியபடி இறைவன் காட்சி தருகிறார்.
முருகனின் சமயோசிதம் :
அலகுமலை கோவில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. கிழக்கில் தாழ்ந்தும் மேற்கில் உயர்ந்தும் காணப்படுகிறது. கோவில் கருவறையில் முத்துகுமாரசாமி பாலதண்டாயுதபாணியாக, முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஒரு முறை திருகயிலாயத்தில் பாலகனான முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பார்வதிதேவியும், கங்காதேவியும் தன் அருகில் வருமாறு அழைத்தனர். ஆனால் முருகப்பெருமான், அவர்கள் அருகில் செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முருகனின் அருகில் சென்று, ‘இங்கே உள்ள இரண்டு தாய்மார்களில் உனக்கு கங்காதேவியை பிடிக்குமா? பார்வதிதேவியை பிடிக்குமா?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு முருகப்பெருமான், ‘அறன் மாதாவின் மீதுதான் எனக்கு மிகுந்த ஆசை’ என்று கூறினார்.
இவ்விடத்தில் முருகப்பெருமான் கூறிய பதில் சமயோசிதமானது. அதாவது ‘அறன்மாதா’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு. ‘அறம் வளர்த்த நாயகி’ என்பது ஒரு பொருள். அறம் வளர்த்த நாயகி என்றால் பார்வதி தேவியை குறிக்கும். மேலும் ‘உயிர்களை காக்கும் நீர்’ என்ற பொருளும் உண்டு. இது கங்காதேவியை குறிப்பதாகும். இவ்வாறு முருகப்பெருமான் ஒரு வார்த்தையில் இரண்டு அன்னையரையும் பிடிக்கும் என்று கூறினார்.
இத்தகைய சிறப்புகளையுடைய பாலதண்டாயுதபாணியை காண கோவிலுக்குள் நுழையும் முதலிலே இருப்பது கொடிமரம். கொடிமரத்திற்கு மேற்கு நோக்கி மயில் வாகனமும் அதற்கு அருகில் பலிபீடமும் உள்ளது. தல விருட்சமாக வில்வ மரம் கோவிலின் இடது புறத்தில் அமைந்துள்ளது.
கோவில் மகா மண்டபத்தின் உள்ளே வலது புறத்தில் கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பு சங்கடஹர சதுர்த்தி விழாக்காணும் ஆனந்த விநாயகரும், வலம்புரி விநாயகரும் அருள்பாலிக் கிறார்கள். இடது புற மேடையில் வீரபாகு தேவரும், தெற்கு நோக்கிய தனி சன்னிதியில் தேவியர் வள்ளி, தெய்வானையும் அருள்பாலிக்கிறார்கள். கர்ப்பக்கிரகத்தில் முருகன் ஆண்டி கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை கோவில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
கவலை தீர்க்கும் கந்தன் :
நடுவில் கர்ப்பக்கிரகம் உள்ளது. இதில் முருகவேள் ‘முத்துகுமார பால் தண்டாயுதபாணி’ எனும் பெயர் தாங்கி கண்களை சற்று தாழ்த்திய நிலையில் கையில் தண்டாயுதத்துடன் ஞான குருவாக காட்சி தருகிறார். ஞான குருவான அவரை நெஞ்சாரப்பணிவோரின் குறைகள், கவலைகள், பிரச்சினைகள் தீர்வது இன்றும் நடக்கும் நிகழ்வாகும். சுமார் 4 அரை அடி உயர திருவுருவில் காட்சி அளிக்கும் முருகப்பெருமானை, வெள்ளிக் கவசத்தில் காணும்போதும் கண்கள் இமைகளை மூட மறுக்கின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை காண சுமார் 300 படிகளில் ஏறி செல்ல வேண்டும். வாகனங்கள் கோவில் வரை செல்ல சாலை வசதியும் உள்ளது.
அமைவிடம் :
திருப்பூருக்கு தென்கிழக்கில் தாராபுரம் சாலையில் 22 கிலோமீட்டர் தூரத்தில் அலகுமலை கிராமம் அமைந்துள்ளது. 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கிராமத்தில், அழகு பெற்று எழில் சூழ்ந்த அலகுமலை காணப்படுகிறது. சூரியனுடன் சேர்த்து ஒன்பது கிரகங்கள், நவக்கிரகங்களாக உள்ளன. அது போன்று இந்த மலையை சுற்றிலும் ஏழு மலைகள் உள்ளன. அவை சென்னிமலை, சிவன் மலை, வட்டமலை, ஊதியூர் மலை, பழனிமலை, மருதமலை, கதித்தமலை ஆகியனவாகும். இந்த ஏழு மலைகளுக்கு நடுவில் அலகுமலை காட்சியளிக்கிறது. இதுவும் அலகுமலையின் தனிச் சிறப்பு ஆகும்.

புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடுமியான்மலையில் சிகாநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இதன் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
புதுக்கோட்டையில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடுமியான்மலை. இங்கு சிகாநாதசாமி கோவில் அமைந்துள்ளது. ‘சிகா’ என்பதற்கு ‘குடுமி’ என்ற பொருள் உண்டு. இங்குள்ள இறைவன் குடுமியுடன் காணப்படுவதால் சிகாநாதசாமி என்றும், இந்த ஊர் குடுமியான் மலை என்றும் அழைக்கப்படுகிறது. மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு, இவ்வூர் ‘குடுமியான்மலை’ என்று அழைக்கப்படுகிறது. (சிகா - குடுமி. அதாவது குடுமியுள்ள இறைவன்).
இங்குள்ள இறைவனுக்கு குடுமி வந்தது பற்றி இக்கோவில் தலபுராணம் கூறும் கதை சுவையானதாகும்.
முன்னொரு காலத்தில் இக்கோவில் அர்ச்சகர் ஒருவர் பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்குவந்த தனது காதலிக்கு கொடுத்துவிட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் மன்னர் கோவிலுக்கு வந்துவிட, மன்னரைக் கண்டதும் செய்வதறியாது தவித்த அர்ச்சகர் தனது காதலியின் தலையிலிருந்து பூவை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தி, அதைப் பிரசாதமாக மன்னருக்கு அளிக்க, அதில் தலைமுடி இருந்ததைக் கண்ட மன்னர், அதற்கான காரணத்தை அர்ச்சகரிடம் வினவினார். அர்ச்சகர் சமயோசிதமாக கோவிலில் குடிகொண்டிருக்கும் மூலவருக்கு (லிங்கம்) குடுமியுள்ளது என்று சொல்லிவிட்டார்.
வியப்பு மேலிட்ட மன்னர் (இறைவனின்) குடுமியைக் காட்டும்படி சொன்னார். தனது பக்தனான அர்ச்சகரைக் காப்பாற்ற இறைவனும் லிங்கத்தில் குடுமியுடன் காட்சியளித்தார். ஆகவேதான் மூலவருக்கு சிகாநாதசாமி என்று பெயர் வந்ததாக இக்கதையின் மூலம் அறிகிறோம். (இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவனுக்கு லிங்கத்திற்கு குடுமி இருப்பதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத்தின் உச்சியில் குடுமி முடிச்சு போன்ற பகுதி இருப்பது இன்றும் பக்தர்களுக்கு காட்டப்படுகிறது).
அக்காலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் குன்றைச் சுற்றிலும் வீடுகள் அமைந் திருந்தன. குன்றின்மீது ஏறிச் செல்லும்போது ஒரு இயற் கைக் குகையினைக் காண் கிறோம். இது கற்கால மனிதர் களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். குன்றின் உச்சியில் குமரன் கோவில் உள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோவில் உள்ளது. புதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய செய்திகளை குடுமியான்மலை யிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
சிகாநாதசாமியின் கருவறை கி.பி.12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப் படுகிறது. அதன்பின் இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்கள் ஆலயத்தின் பராமரிப்பிற்கு கொடைகள் அளித்த செய்தியை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. குன்றின் கிழக்குச் சரிவில் மேலக்கோவில் என்னும் குகைக்கோவில் குடைவிக்கப்பட்டுள்ளது. குன்றில் குடையப்பட்ட கருவறையும் அதற்கு முன்பு உள்ள தாழ்வாரப் பகுதியும் மலையிலேயே குடையப்பட்டதாகும்.
குகைக்கோவிலின் மேலே உள்ள பாறையின் உச்சி பகுதியின் கிழக்குநோக்கி அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிகாநாத அகிலாண்டேஸ்வரி கோவில், சமஸ்தான காலத்தில் சீரும், சிறப்புடன் விளங்கியது. கிழக்கு நோக்கி இருக்கும் கோவிலில் கோபுர வாயிலை கடந்து உள்ளே சென்றதும் ஆயிரங்கால் மண்டபத்தை காணலாம்.
இம்மண்டபத்தின் முகப்பு தூண்களில் அனுமான், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன. இதன் இருபுறமும் பெரிய மண்டபங்கள் உள்ளன. இதையடுத்த ஆனைவெட்டு மண்டபத்தில் நுழைந்ததும் தமிழகத்து சிற்பக்கூடம் ஒன்றில் நுழைந்துவிட்ட உணர்வு ஏற்படும். இம்மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்க பல சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பங்கள் காலத்தால் பிற்பட்டவை என்றாலும், இக்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாகும். தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற இரண்யகசிபு, ஆணவம் தலைக்கேறி, சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே என்று பிரகலாதனை துன்புறுத்த, நாராயணன் தூணிலும் உள்ளான், துரும்பிலும் உள்ளான் என பிரகலாதன் விடை பகற, அருகிலிருந்து தூணை எட்டி உதைத்தான் இரண்யகசிபு.

கோபுர தோற்றம்
தூண் இரண்டாகப் பிளந்தது. இதிலிருந்து சிங்க முகமும், மனித உடலும் கொண்ட பயங்கர உருவம் தோன்றியது. இரண்யனைப் பற்றி பிடித்து தனது கால்களுக்கு குறுக்கே கிடத்தி, அவனது உடலை இரு கூறாக பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. அவனது ஆணவம் வீழ்ந்தது. இதுவே நரசிம்ம அவதாரம்.
இக்கதையை சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதார காட்சியினை விளக்கும் நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் காணலாம். காதலுக்கு கரும்பைத் தூதுவிட்டு விளையாடும் மன்மதன், அதற்கு மறுமொழியாக தனது வேல்விழியினை பாய்ச்சிடும் ரதி என இங்குள்ள ரதிமன்மதன் சிலைகள் நம்மை சிலிர்க்க வைக்கின்றன.
உலகத்து அழகையெல்லாம் தன் வயப்படுத்திக்கொண்டு காட்சியளிக்கும் மோகினி உருவில் விஷ்ணு, வினை தீர்க்கும் விநாயகர் பக்தர்களை காக்க பன்னிரு கைகளும், ஆறுமுகங்களும் கொண்டு சண்முகன், அண்டத்தையும் ஆட்டிபடைக்கும் பலம் பெற்று பத்து தலையுடன் கூடிய ராவணன், கருடன் மீதமர்ந்து பயணம் செய்யும் விஷ்ணு பெருமான், தீயசக்திகளை தூளாக்குவேன் என உணர்த்திக் கொண்டிருக்கும் அகோர வீரபத்திரன் இன்னும் பல சிற்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். குதிரைப் படை வீரர்களும், கால்படை வீரர்களும் உபயோகித்த ஆயுதங் களையும், குதிரைப்படை தாக்குதல்களை, காலாட்படையினர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் இங்குள்ள சிற்பங்களில் காணலாம்.
இந்த மண்டபத்திலிருந்து கோவிலினுள் செல்லும் நுழைவு வாயில் பகுதிக்கு கங்கையரையன் குறடு என்று பெயர். இதையடுத்து பாண்டியர் கால கலைப்பாணியில் கட்டப்பட்ட மண்டபம் உள்ளது. அடுத்துள்ளது மகாமண்டபம். கோவிலின் கருவறையும் விமானமும்-முகமண்டபமும் முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்பு பாண்டியர் காலத்திலும் விஜயநகர மன்னர்களின் காலத்திலும் புதுப்பிக்கப்பட்டது.
குகைக்கோவிலில் காணப்படும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு திருமூலத்தானம், திருமேற்றளி என இரண்டு கோவில்களைக் குறிப்பிடுகின்றது. திருமூலத்தானம் என்பது இந்தச் சிவன் கோவிலையே குறிப்பதாகும். ஆலய விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள மண்டபங்களில் சப்த கன்னியர், லிங்கோத்பவர், ஜேஷ்டாதேவி, சுப்பிரமணியர் போன்ற சிற்பங்கள் பலவற்றைக் காணலாம். நாயக்கர் மண்டபத்தில் வியாகரபாதர் (மனித உருவம் புலியின் கால்கள்), பதஞ்சலி (மனித உடலும் கால்கள் பாம்பு போன்றும்) சிற்பங்கள் காணப்படுகின்றன.
அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னிதி, பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தின் தரையில் அறுபட்டை வடிவாக அமைந்த கருங்கல் பலகை ஒன்று உள்ளது. அக்கற்பலகையில் அமர்ந்தே இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் முடிசூட்டிக் கொண்டனர் என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடு கின்றன. உமையாள்நாச்சி என்னும் தேவதாசி, குகைக்கோவிலுக்கு அருகிலுள்ள அம்மன் கோவிலைக் கட்டுவித்து அங்கு சவுந்திரநாயகி அம்மனை பிரதிஷ்டை செய்தாள்.

கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், திருப்பிரையார் எனுமிடத்தில் அமைந்திருக்கும் ராமர் கோவிலே முதன்மையானது.
கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், திருப்பிரையார் எனுமிடத்தில் அமைந்திருக்கும் ராமர் கோவிலே முதன்மையானது. இந்த ஆலயத்தில் வெடி வழிபாடு செய்பவர்களுக்கு, அவர்கள் வேண்டியதை இறைவன் மகிழ்ச்சியுடன் விரைவில் செய்து கொடுப்பார் என்பது ஐதீகம்.
ஆலய அமைப்பு :
திருப்பிரையார் ராமர் கோவிலின் கருவறை சதுரமாகக் கட்டுமானம் செய்யப்பட்டு, அதன் மேற்கூரை கூம்பு வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் ராமர் சங்கு, சக்கரம், அட்சமாலை, கோதண்டம் ஆகியவற்றுடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் அட்ச மாலையை வைத்திருப்பது இங்கு மட்டுமே காணக்கூடிய காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் இறைவனான ராமர் திருப்பிரையாறப்பன் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு ராமருக்கு வலப்புறம் ஸ்ரீதேவியும், இடப்புறம் பூதேவியும் இருக்கின்றனர். ராமர் கோவிலில் சீதாதேவி இல்லாமல், ஸ்ரீதேவியும் பூதேவியும் இடம் பெற்றிருப்பது ஏன்? என்பதற்கு இங்கிருப்பவர்கள் ஒரு கதையைச் சொல்கின்றனர்.
கேரளத்தில் புகழ்பெற்ற வில்வ மங்கலம் சுவாமிகள், ஒரு சமயம் இக்கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்தார். அப்போது அவர் ராமர் சன்னிதி முன்பாக நின்றிருந்த போது, கோவிலின் மேற்கு வாசல் வழியாக ஸ்ரீதேவியும், பூதேவியும் இங்கு கோவில் கொண்டிருக்கும் ராமரை வழிபடுவதற்காக வந்ததைக் கண்டிருக்கிறார். அவர்கள் இருவரும் இங்கேயே இருக்க வேண்டும் என்று நினைத்த அவர், அவர்களிருவரும் திரும்பிச் செல்ல முடியாதபடி கோவிலின் மேற்கு வாசலை மூடித் தாளிட்டு விட்டாராம்.
அதன் பின்னர் ராமருக்கு இருபுறமும் ஸ்ரீதேவியையும், பூதேவியையும் இருக்கச் செய்துவிட்டுச் சென்றாராம். இதனை மெய்ப்பிக்கும் விதமாக, இந்த ஆலயத்தின் மேற்கு வாசல் இன்றும் மூடியே கிடக்கிறது.
கோவிலின் தென்மேற்கு மூலையில் கணபதி, தெற்கு வாசலுக்கு அருகில் தட்சிணாமூர்த்தி, வெளிச்சுற்றின் தென்பகுதியில் சாஸ்தா, வடக்குப் பகுதியில் கோசாலை கிருஷ்ணர் ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலின் கிழக்குப் பகுதியில் திருப்பிரையாறு எனும் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.
விழாக்கள் :
இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் 21 நாட்கள் நடைபெறும் சிறப்புத் திருவிழா முக்கியமானதாகும். இத்திருவிழா காலத்தில், இக்கோவிலில் ‘ஆன்கியக் கூத்து’ எனும் இசை நாடகம் நடத்தப்படுகிறது. கார்த்திகை ஏகாதசிக்கு இரு வாரங்களுக்கு முன்பிருந்தே, தினமும் கோவில் முழுக்க அதிகமான மலர் மாலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. அதனை ‘நிறை மாலை’ என்று அழைக்கின்றனர். அவ்வேளையில் கோவிலில் லட்சதீபம் ஏற்றுகிறார் கள்.
பங்குனி மாதத்தில் ஏழு நாட்கள் கொண்ட திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. பங்குனி பூரம் நாளில் சிறப்பு ஊர்வலத்துடன் இவ்விழா நிறைவடைகிறது. இது போல் தசமி நாளில் சாஸ்தாவும், ஏகாதசி நாளில் ராமரும் கோவிலில் இருந்து ஊர்வலமாகச் செல்கின்றனர். இந்த ஊர்வலத்தில் யானைகளின் அணிவகுப்பும் உண்டு.
ஆலயம் அதிகாலை 3 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை யிலும் திறந்திருக்கும். இக்கோவிலில் தினமும் ஐந்து கால பூஜைகள் செய்யப்படுகின்றன. தினமும் மூன்று வேளைகளில், கருவறையில் இருக்கும் மூலவரைப் போன்ற உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு கோவிலை வலம் வரும் ‘சீவேலி’ ஊர்வலம் நடக்கிறது. நாலம்பலப் புனிதப் பயணத்தின் முதல் வழிபாடாக இக்கோவிலின் அதிகாலை வழிபாடு அமைந்திருப்பதால், அதிகாலை வேளையில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

கோவிலின் கிழக்கே ஓடிக்கொண்டிருக்கும் திருப்பிரையாறு எனும் ஆற்றில், அதிக அளவில் மீன்கள் உள்ளன. இந்த மீன்களுக்கு அவல், செவ்வாழை போன்ற உணவுப் பொருட்களைப் போட்டுப் பக்தர்கள் வழிபடுகின்றனர். இதனை ‘மீனூட்டு’ என்று அழைக்கின்றனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடலில் மிதந்து கொண்டிருந்த ராமர் மற்றும் அவரது சகோதரர்களின் சிலைகளைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்ததை நன்றியுடன் நினைத்துப் பார்க்கும் விதமாக, பக்தர்கள் இந்த ‘மீனூட்டு’ நடைமுறையைச் செயல்படுத்தி இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள்.
ஆஞ்சநேயர் மண்டபம் :
இக்கோவிலில் ஆஞ்சநேயருக்குத் தனிச் சன்னிதி எதுவும் இல்லை. சீதையைத் தேடி இலங்கை சென்று திரும்பிய ஆஞ்ச நேயர், இந்தக் கோவில் இருக்கும் இடத்தில்தான் ‘கண்டேன் சீதையை’ என்று ராமரிடம் சொன்னதாகச் கூறப்படுகிறது. இதனால், இக்கோவில் கருவறைக்கு நேர் எதிரில் இருக்கும் வழிபாட்டு மண்டபத்தில் ஆஞ்சநேயர் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார் என்கிற நம்பிக்கை உள்ளது. இதனால் இந்த மண்டபத்தை ‘ஆஞ்சநேயர் மண்டபம்’ என்றே அழைக்கின்றனர்.
வெடி வழிபாடு :
இந்த ஆலயத்தின் சிறப்பு வழிபாடுகளில் ஒன்று, வெடி வழிபாடு. சாஸ்தா சன்னிதிக்கு அருகில் குழாய் ஒன்றில் வெடி மருந்திட்டு, அதை வெடிக்கச் செய்து வழிபடுகின்றனர். ஒரு வெடியில் இருந்து ஆயிரம் வெடி வரை, அவரவர் வேண்டு தலுக்கேற்ப வெடிக்கச் செய்யப்படுகிறது. வெடிகளின் எண்ணிக்கைக்கேற்ப கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இந்த வெடி வழிபாடு முக்கியத்துவம் பெறுவதற்கு அனுமன்தான் காரணம் என்கின்றனர். ராமனின் கட்டளைப்படி, சீதாதேவியைச் தேடிச் சென்ற அனுமன், இலங்கையில் ராவணனிடம் சிறைப்பட்டிருக்கும் நிலையைக் கண்டு வந்து, ராமனிடம், ‘கண்டேன் சீதையை’ என்ற இன்பச் செய்தியை அதிர்வெடியைப் போட்டுச் சொன்னது போல் சொல்லி மகிழ்ச்சியை ஏற்படுத்தினாராம். அதன்படி, அந்த மகிழ்ச்சியைத் தாமும் பெற வேண்டும் என்பதற்காக, பக்தர்களும் அதிர் வெடி போட்டு தங்கள் வேண்டுதலை இறைவனிடம் சொல்கின்றனர். வெடி வழிபாடு செய்பவர்களின் வேண்டுதலைக் கேட்கும் இறைவன், அவர்கள் வேண்டுதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, அதை விரைவில் நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது பக்தர் களின் நம்பிக்கை.
அமைவிடம் :
திருச்சூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும், குருவாயூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், கொடுங்கலூர் மற்றும் குருவாயூருக்கு இடையில் திருப்பிரையார் ராமர் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குச் செல்ல திருச்சூர் மற்றும் குருவாயூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

திருவாரூர் மாவட்டம், குடந்தையிலிருந்து ஆலங்குடி என்னும் குருஸ்தலம் தாண்டி உள்ளது நரிக்குடி திருத்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மனிதர்கள் பல வகைகளில் பயம் கொள்வதுண்டு. நெருப்பு, வெள்ளம், இருட்டு, பேய், பிசாசு, எதிரிகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் உயிரினங்கள், குறிப்பாக மனிதர்கள் அனைவருக்கும் வயது வேறுபாடின்றி ஏற்படுவது மரண பயம். நோயினாலோ, விபத்தினாலோ, எதிரிகளாலோ, முதுமையினாலோ, இயற்கை சீற்றங்களாலோ மரணம் வரும்.
ஒரு மனிதனின் தீர்க்க ஆயுள் என்பது 120 ஆண்டுகள். அவ்வளவு காலம் இல்லாவிடினும் 80, 90 வயது வரை வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு.
எப்படித்தான் உடலைப் பேணி பாதுகாத்தாலும், உயிர் ஒரு நாள் உடலை விட்டுப் போய்விடும் என்பது உலக நியதி. அதனைக் கவர்ந்து செல்வது எமன் என்பதும், தன்னை நாடியவர்களை எமனிடமிருந்து ஆலமுண்ட அண்ணல் காப்பார் என்பதும் இறையடியாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மிருத்யுஞ் ஜெயம் :
அந்த நம்பிக்கைக்காகத்தான், தன்னிடம் சரணடைந்த பதினாறு வயது பாலகனைக் காப்பதற்காக, சிவபெருமான் திருக்கடவூரில் எமனைக் காலால் உதைத்தார்.
சுசரிதன் என்ற அந்தணச் சிறுவனின் ஆயுளைக் காப்பாற்றுவதற்காக, ஆட்கொண்டேசுவரராகத் தோன்றி திருவையாறில் எமனை விரட்டினார். திருவாஞ்சியத்தில் எமனுக்குத் தனி சன்னிதி இருக்க, அங்கே இறைவன் வாஞ்சிநாதராக வீற்றிருந்து எமபயம் போக்குகிறார்.
பரமக்குடி அருகே எமனேஸ்வரம் என்ற ஊரில் முக்கண்ணன் ‘எமனேஸ்வரமுடையார்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
இவைகள் அனைத்தையும் மிருத்யுஞ் ஜெய தலம் என்கிறார்கள். ‘மிருத்யுஞ்’ என்றால் ஆயுட்குறைப்பு, பாவ வினைகள், தோஷங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவைகளை ஜெயிப்பதுதான் மிருத்யுஞ் ஜெயம் என்பதாகும்.
அந்த அற்புத சக்தி கொண்ட இறைவனை, மிருத்யுஞ்ஜெய மந்திரங்களும், யாகங்களும் செய்து எமபயத்தையும், தீவினைகளையும் போக்கிக் கொள்கிறார்கள். மரணபயம் போக்கும் வழிபாட்டை அதற்குரிய தலங்களில் நிறைவேற்றுவது கூடுதல் பலனைத் தரும்.
நரிக்குடி எமனேஸ்வரர் :
ஆலங்குடி என்னும் குரு பரகாரத் தலத்துக்கு தெற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது நரிக்குடி என்ற ஊர். இந்த தலத்தில் எமன் தர்ம நெறிப்படி ஆண்டு, சிவபிரானை வழிபட்டதால் ‘நெறிக்குடி’ என்று பெயர் பெற்றதாகவும், அதுவே மருவி நரிக்குடி என்றானதாகவும் கூறுகிறார்கள். பண்டைக் காலத்தில், யமபுரி, யமபட்டினம், யமனேஸ்வரம், யமதர்மபுரம், யதர்மபுரயி, தர்மதேசம் என்ற பெயர்களுடன் விளங்கியது.
மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் செய்யும் பாவ புண்ணியங்களானது சூரிய சந்திரர்கள் சாட்சியாக எமதர்மராஜா முன்னிலையில் சித்ரகுப்தரால் ‘அகர சந்தானி’ என்ற ஏட்டில் பதியப்பட்டு வருவதாக ஐதீகம். இத்தகைய சித்ரகுப்தப் பதிவேடு அர்ப்பணிப்புத் தலங்களில் ஒன்றாக நரிக்குடியும் சொல்லப்படுகிறது.
இத்தலத்தில், கல்லால மரத்தடியில் சிவபெருமான் எழுந்தருளியிருந்த பண்டையக் கோவில் சிதிலமடைந்து விட்டதால், புதிதாக சுவாமி எமனேஸ்வரருக்கும், அம்பாள் எமனேஸ்வரிக்கும் தனித்தனி கருவறைகளுடன் விமானங்கள் கட்டி வழிபாடு நடைபெற்றது.
தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர் மூர்த்தங்களும் உள்ளன. முன்பு எமனுக்கு தனிச் சன்னிதி இருந்ததாகவும் தற்போது புதிதாக உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
இங்கே உள்ள எம தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. நேபாள நாட்டில் ஓடும் புனித கண்டகி நதியின் சூட்சுமமான நீரோட்டப் பிணைப்பைக் கொண்டதால், எமனேஸ்வர ஆலய திருக்குளத் தீர்த்தத்துக்கு ‘கண்டகி தீர்த்தம்’ என்ற வேறு பெயரும் உண்டு.
சாளக்கிராம வடிவங்களை வைத்து பூஜை செய்வோர், இத்தல கண்டகி தீர்த்தத்தை எடுத்து எமனேஸ்வரரை அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மை உண்டு என்று சொல்கிறார்கள்.
‘த்ர்யம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
வர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத்’
என்ற மிருத்யுஞ்ஜெய மந்திரத்தை உச்சரித்தபடி அமாவாசை, பவுர்ணமி தினங்களில் எமதீர்த்தக் குளத்தை வலம் வந்து, எமனேஸ்வர சுவாமி, எமனேஸ்வரி அம்பிகைக்கு அர்ச்சனை செய்கிறார்கள். மரணபயத்தைக் களையவும், விபத்தினைத் தடுக்கவும், தற்கொலை எண்ணத்தைப் மாற்றவும் இந்த வழிபாடு பெருந்துணை புரிவதாக சொல்லப்படுகிறது.
தெற்கு திசை தேவதையான எமதர்மராஜனுக்கு, அவருக்குரிய நீலநிற பருத்தித் துணியில், காய்ந்த கண்டங்கத்திரி வேர், அதிமதுரம், வசம்பு, சுக்கு துண்டுகளை வைத்து முடிச்சு போட்டு, எள்தீபத் திரிபோல உருவாக்கி நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலப்பில் தீபம் ஏற்றி வணங்குவது நல்லது. இவ்வாறு செய்தால், கண் திருஷ்டி, மன உளைச்சல், எமபயம் ஆகியவை அண்டாது என்பது ஆன்மிக அன்பர்களின் கருத்து.
அமைவிடம் :
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்திற்கு வடக்கில் 3 கி.மீ தொலைவிலும், குடந்தையிலிருந்து ஆலங்குடி என்னும் குருஸ்தலம் தாண்டி 4 கி.மீ தூரத்திலும் உள்ளது நரிக்குடி திருத்தலம்.

ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கன்னியாகுமரி– திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இவ்விடத்தில் கூடி பந்தல் அமைத்து, அதன் கீழ் தங்களின் பிரச்சினைகளை அவ்வையார் தலைமையில் பேசி தீர்த்துக் கொண்டனர். இதன் அடிப்படையிலேயே இந்த இடம் முப்பந்தல் என்று பெயர் பெற்றது.
தல வரலாறு :
முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர். இந்த ஊரில் நாட் டிய பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் செல்வச் செழிப்பில் வசித்து வந்தாள். அவளது சொத்தின் மீது ஆசை கொண்ட ஒருவன், இசக்கியை காதல் மொழி பேசி வஞ்சனையால் வீழ்த்தினான். பின்னர் இசக்கியை வீட்டில் உள்ள நகை பணத்துடன் அருகில் இருந்த காட்டுக்கு வரவழைத்தவன், இசக்கி அவன்பால் கட்டுண்டு இருந்த போது தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டான். இதில் இசக்கி துடிதுடித்து இறந்துபோனாள்.
பின்னர் அந்தக் கயவன், நகை– பணத்துடன் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று தீண்டியதில் அவனும் இறந்துபோனான். இந்த நிலையில் தெய்வ பிறவியான இசக்கி, சிவபெருமானிடம் தன்னை வஞ்சனையால் கொன்றவனைத் தானே அழிக்க வேண்டும் என்று வரம் பெற்று மீண்டும் தன்னையும், தன்னை ஏமாற்றியவனையும் உயிர்த்தெழச் செய்யுமாறு வேண்டினாள். சிவனும் வரம் கொடுத்தார்.
கள்ளியை, குழந்தையாக மாற்றி...
அதன்படி பாம்பு தீண்டி இறந்து கிடந்த இசக்கியை கொன்றவன் வீடு திரும்பினான். இசக்கியோ காட்டில் அலைந்து திரிந்தாள். ஒருநாள், காட்டில் இருந்த கள்ளிச் செடியை ஒடித்து அதனை அழகிய குழந்தையாக மாற்றி னாள் இசக்கி. பின்னர் அந்த குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு, தன்னை ஏமாற்றிய கயவனின் ஊருக்கு சென்று பஞ்சாயத்தை கூட்டி, தன்னையும், தனது குழந்தையையும் அவன் ஏற்க மறுப்பதாக புகார் கூறினாள்.
விசாரணைக்கு வந்த இசக்கியை ஏமாற்றியவன், அவள் தனது மனைவியல்ல, அது என் குழந்தை அல்ல என்று மன்றாடினான். ஒரு கட்டத்தில் இசக்கி தனது இடுப்பில் இருந்த குழந்தையை கீழே இறக்கி விட்டாள். அந்த குழந்தை நேராக, குற்றம் சாட்டப்பட்டவனிடம் சென்று அப்பா என்றது. இதனை பார்த்த பஞ்சாயத்து தலைவர், ‘குழந்தை பொய் சொல்லாது, எனவே நீ உன் மனைவியுடன் பேசி ஒரு முடிவுக்கு வா’ என்று கூறி ஒரு வீட்டில் இருவரையும் உள்ளே வைத்து பூட்டி சென்று விட்டனர்.

முப்பந்தலில் அமர்ந்தாள் :
இந்த நேரத்திற்காக காத்திருந்த இசக்கி, நள்ளிரவு ஆனதும் விஸ்வரூபம் எடுத்தாள். பின்னர் தன்னை ஏமாற்றி கொன்றவனை, தனது கையால் கொன்று பழிதீர்த்தாள். அதன்பிறகு பழவூரை விட்டு, மேற்கு நோக்கி நடந்தாள். அப்போது அவ்வையார் முப்பந்தல் பகுதியில் மூவேந்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற இசக்கியை அழைத்து, சாந்தப்படுத்தி, ‘இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்’ என்றார். இசக்கியும் அங்கேயே தங்கினாள். இதனை கயிலையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான் பார்வதியை நோக்க, உடனே பார்வதிதேவி தன் வீரசக்தியை இசக்கிக்கு அளித்தாள். அன்று முதல் ஊரை காக்கும் தெய்வமானாள் இசக்கி. முப்பந்தலில் அமர்ந்ததால் முப்பந்தல் இசக்கி அம்மன் என்று பெயர் பெற்றாள்.
அவ்வைக்கு தனி சன்னிதி :
இசக்கியை, அவ்வையார் சாந்தப்படுத்தியதால் முப்பந்தலில் அவ்வையாரம்மன் என்ற பெயரில் அவ்வைக்கு தனி சன்னிதி உள்ளது. மேலும் இசக்கியின் சகோதரனான நீலனுக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. திருமாலே இசக்கியின் தமையனாக வந்ததாக கூறப்படுகிறது. ‘இசக்கி’ என்ற சொல்லுக்கு ‘மனதை மயக்குபவள்’ என்று பொருள். முப்பந்தலில் கருவறையில் அம்மன் வடக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறாள். வலதுபுறம் பிராமணத்தி அம்மன் உள்ளார். கருவறை சுற்றுச்சுவரில் வைஷ்ணவி, துர்க்கை, பிரத்தியங்கரா தேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
கோவில் சுற்றுப்பிரகாரத்தில் வலம்புரி விநாயகரும், பாலமுருகனும், அவ்வையாரம்மனும் தனி சன்னிதியில் பாங்குடன் அருள்புரிகின்றனர். முகப்பில் காவல் தெய்வங்களான சுடலைமாடனும், அவருக்கு எதிரில் பட்டவராயரும் தனி சன்னிதிகளில் உள்ளனர்.
இந்த கோவிலின் அருகில் மற்றுமொரு இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கும் சுடலை மாட சுவாமி காவல் தெய்வமாக கனகம்பீரமாக அமர்ந்துள்ளார். இந்தக் கோவில் கருவறை முன் மண்டபம் கேரள பாணியில் ஓடு வேயப்பட்டுள்ளது. இங்குள்ள இசக்கி அம்மன், ஆதி இசக்கி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். ஆலயத்தின் வெளியே மிகப் பெரிய அளவில் இசக்கி அம்மன் இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்ட நிலையில் அமர்ந்துள்ளார்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் அமைந்துள்ளது எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் ஊட்டியில் அமைந்துள்ளது எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில். மலையும், மலை சார்ந்த இடமும் குறிஞ்சி என்று அழைக்கப்படுகிறது. குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். தமிழகத்தில் சிறந்த மலைவாழிடம் ஊட்டி (உதக மண்டலம்) என்பது அனைவரும் அறிந்தது. ஒத்தக்கல் மந்து என்பதே உதகமண்டலம் என்று மருவியது. மந்து என்றால் மலை என்று பொருள்படும்.
சென்ற நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆண்டபோது நீலகிரி மலையை மேம்படுத்தி, போக்குவரத்து வழிகளை ஏற்படுத்தினர். தென்னகத்தின் கோடைவாசஸ்தலமாகவும் மாற்றினர். அப்போது சமவெளி பகுதி மக்கள் வாணிபத்துக்காகவும், தேயிலை தோட்டங்கள் உள்பட பல்வேறு பணிகளுக்காகவும் இங்கு குடியேறினார்கள். அந்த நேரத்தில் ஊட்டியில் வாழ்ந்த முருக பக்தர்கள் 2 பேர் ஆண்டுதோறும் பழனி சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்து வருவது வழக்கம். தளர்ச்சி மிகுதியாலோ, வேறு சில காரணங்களினாலோ ஒரு முறை பழனி போக முடியவில்லை. இதனால் முருகப்பெருமான் கனவில் தோன்றி, ஊட்டி நகரில் உள்ள எல்க்ஹில் குன்றிலேயே உறைவதாகவும், இங்கேயே வழிபடுமாறும் அருள் பாலித்தார்.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் சேர்ந்து ஊட்டி எல்க்ஹில் மலையில் பாலதண்டாயுதபாணி கோவிலை நிறுவியதாக வரலாறு கூறுகிறது.
தாமரை மலர் :
ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து பார்த்தால் எதிரே தெரியும் மலைப்பகுதி தான் எல்க்ஹில் என்று அழைக்கப்படுகிறது. ‘எல்க்’ என்ற வகை மான்கள் இந்த குன்றம் முழுவதும் நிறைந்து இருந்ததாம்... அதனால் எல்க்மலை என்றும், மான் குன்றம் என்றும் அழைக்கப்பட்டு, தற்போது எல்க்ஹில் என்று மாறி விட்டது.
மிகவும் அமைதியான அழகிய சூழலில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு செல்லும் போது முதலில் பாத விநாயகர் காட்சி தருகிறார். பக்தர் களின் வசதிக்காக தார்சாலை போடப்பட்டுள்ளது. விநாயகரை தரிசித்து விட்டு சற்று மேல்நோக்கி வலதுபுறம் திரும்பி சில அடி தூரம் நடந்து சென்றால் ஜலகண்டேஸ்வரி அம்மன் சன்னிதி இருக்கிறது. அங்கு அம்மன் தாமரை மலரில் 4 கரங்களுடன் அருள் பாலித்து வருகிறார். அருகில் விநாயகர் உள்ளார்.
அதற்கு முன்புறம் கொற்றவையான துர்க்கை அம்மன் சன்னிதியும், அங்கு மகிடனை வென்ற அம்பிகையின் தோற்றம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவாமி சன்னிதிக்கு கீழே ஜலகண்டேஸ்வரர் லிங்கவடிவமாக காட்சி அளிக்கிறார்.
முருகப்பெருமான் :
அங்கிருந்து சற்று மேல் நோக்கி நடந்து சென்றால் தனிக்கோவில் கொண்டு பாலதண்டாயுத பாணி வீற்றிருக்கிறார். பழனி முருகப்பெருமான் போலவே காட்சி அளிக்கிறார். தலையில் அக்க மாலையும், ஒரு கரத்தில் தண்டமும், ஒரு கரம் இடுப்பில் வைத்த கோலத்தில் மிக அழகாக காட்சி அளிக்கிறார்.
கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் வைகாசி விசாகத்தையொட்டி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வருவார். மேலும் மாதந்தோறும் கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. தினமும் காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது. பழனி முருகன் கோவிலில் உள்ள மூலவர் பாலதண்டாயுதபாணியின் வடிவமைப்பு போல, எல்க்ஹில் முருகன் கோவிலில் முருகப்பெருமானின் வடிவமைப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

40 அடி உயர முருகன் சிலை :
எல்க்ஹில் முருகன் கோவிலில் முருகப் பெருமானின் 6 படைவீடுகளை குறிக்கும் வகையில் 6 மண்டபங்களும், 108 திருநாமங்களை நினைவுகூரும் வகையில் 108 படிகளும் உள்ளன. மலேசியா நாட்டில் பத்துமலை என்ற இடத்தில் முருகன் கோவில் ஒன்று உள்ளது. அங்கு 140 அடி உயரமுள்ள முருகன் சிலை உள்ளது. அதற்கு அடுத்த படியாக தமிழகத்திலேயே முதல் முறையாக ஊட்டி எல்க்ஹில் முருகன் கோவிலில் 40 அடி உயரத்தில் முருகன் கம்பீரமாக மலை நடுவே எழுந்தருளி உள்ளார். இது தமிழகத்திலேயே மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்க்ஹில் முருகன் கோவிலில் கடந்த 1971-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. 40 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. 40 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், 40 அடி உயரத்தில் முருகன் சிலை வைக்கப்பட்டது. அதற்காக 5 அடி உயரத்தில் மேடை அமைத்து, அதன் மேல் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
12 அடி உயர ஞானவேல் :
கடந்த 1986-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நடிகர் நம்பியார் கோவிலில் இருந்து 500 அடி உயரத்தில் உள்ள மலை உச்சியில் 60 அடி உயரம் கொண்ட ஞானவேலை நிறுவினார். காலப்போக்கில் மலை உச்சியில் பலத்த காற்று வீசியதால் ஞானவேல் சாய்ந்து விழுந்தது. அதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் 60 அடி உயர ஞானவேலை அகற்றி விட்டு, 12 அடி உயரமுள்ள ஞானவேல் வைத்தது. மேலும் பலத்த காற்றுக்கு கீழே விழாமல் இருக்க, கான்கிரீட் போடப்பட்டு உள்ளது. இந்த ஞானவேல் கடல் மட்டத்தில் இருந்து 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது.
மலை உச்சியில் கார்த்திகை தீப திருநாளன்று, மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் விளக்கு ஏற்றுவது போன்று திருவிளக்கு ஏற்றப்படும். பல ஆண்டுகளுக்கு முன்பு எல்க்ஹில் முருகன் கோவில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பின்னர்தான், ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்றுவார்கள்.
அதற்காக மலை உச்சியில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு, அதன் மேல் தீபம் ஏற்றப்படுகிறது. காலப்போக்கில் அப்பகுதியை சுற்றிலும் மரங்கள் அடர்ந்து வளர்ந்ததால், கார்த்திகை திருநாளன்று மலை உச்சியில் தீபம் ஏற்றினால் ஊட்டி நகரத்தில் இருந்து பார்த்தால் தெரிவதில்லை. இருந்தாலும், கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் எத்தனை மணிக்கு மலை உச்சியில் தீபம் ஏற்றுவார்கள்? என்று கேட்டு சென்று, அதன் படி தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வருகின்றனர்.
அமைவிடம் :
கோவை, மேட்டுப்பாளையம் ஆகிய இடங் களில் இருந்து ஊட்டிக்கு பஸ் வசதி உண்டு. ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது வடமாத்தூர் மாணிக்க விநாயகர் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது வடமாத்தூர் மாணிக்க விநாயகர் திருக்கோவில். ஜவ்வாதுமலையில் தோன்றி திருவண்ணாமலை மாவட்டத்திற்குப் பாய்ந்து வளம் சேர்க்கும் ஆறாகத் திகழ்வது, சேயாறு ஆகும். இது பாலாற்றின் துணை ஆறாக விளங்குகின்றது.
சேயாறு வந்த கதை :
இந்த சேயாறு தோன்றியது குறித்து புராணக்கதை ஒன்று உண்டு. முருகப்பெருமான் தன் அன்னை பார்வதிக்காக நீரூற்று தோன்றிட அம்பெய்தி உருவாக்கியது இந்த ஆறு. இந்த ஆறு உருவானபோது, அதில் 7 ரிஷிகள் மாண்டு போனார்கள். அந்த தோஷம் நீங்கிட, சேயாற்றின் கரையோரம் 7 சிவாலயங்களை நிறுவி, முருகப்பெருமான் வழிபாடு செய்தார். அதன்காரணமாக அவரது தோஷம் நீங்கியது. அதன் முதல் தலம், இவ்வூரின் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள காஞ்சி கரைகண்டேஸ்வரர் ஆலயமாகும்.
அந்த சிறப்புமிகு சேயாறு வளம் சேர்க்கும் பூமியில் வடமாத்தூரும் ஒன்று. யுகங்களைக் கடந்து விண்ணை முட்டி நிற்கும் மலையே இறைவனாக விளங்குவது திருவண்ணாமலை. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர். இதன் வெளிவட்டத்தில் சுமார் 15 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ளது வடமாத்தூர் திருத்தலம். இங்கு சுயம்புவாகத் தோன்றி அருள்பாலித்து வருகிறார் மாணிக்க விநாயகர்.
தல வரலாறு :
சுமார் ஐந்து தலைமுறைகளுக்கு முன்பு, இந்த ஊரில் சீதாராமன் என்ற அடியார் வாழ்ந்து வந்தார். அவர் தனது ஊரில் வழிபடுவதற்கு ஆலயம் இல்லாததை நினைத்து கவலை கொண்டார். அதனால் நெடுந்தொலைவில் இருந்து ஒரு விநாயகர் சிலையை எடுத்து வந்து, தன் வீட்டின் அருகே வைத்து வழிபட்டு வந்தார். அவரையே மூலவராக்கி, ஆலயம் எழுப்ப முடிவு செய்திருந்தார்.
ஆனால் அன்று இரவு அவரது கனவில் தோன்றிய விநாயகப்பெருமான், ‘உன் ஊரிலேயே பல நூறு ஆண்டுகளாக நான் மண்ணில் மறைந்திருக்கிறேன். என்னை எடுத்து நீ ஆலயம் எழுப்பு. அதில் நான் வெளிப்படுவேன். நான் இருக்கும் இடம், நீ ஏர் உழும்போது வெளிப்படும்’ என்று கூறினார். கனவைக் கண்டதும் அடியார் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தார். இறைவனின் சித்தம் அதுவென உணர்ந்தவர், விடிவதற்காக காத்திருந்தார்.
பொழுது புலர்ந்ததும் ஏர் கலப்பையை தூக்கிக் கொண்டு, மாடுகளை பூட்டி தனது நிலத்தில் உழ ஆரம்பித்தார். நெடுநேரம் உழுதும் எதுவும் தென்படவில்லை. இருப்பினும் இறைவனை நினைத்தபடி மனம் தளராமல் உழுது கொண்டே வந்தார். அப்போது ஏர் கலப்பையை மூன்று கருங்கற்கள் தடுத்து நிறுத்தின. அதைத் தோண்டி வெளியே எடுத்தார். அவற்றில் இரண்டு உருண்டை வடிவிலும், மற்றொன்று சிறிய மூஞ்சுறு வடிவிலும் காட்சி தந்தது. இதனால் மனம் மகிழ்ந்த அடியார், அவற்றை தனது இல்லத்திற்குக் கொண்டு வந்தார்.
ஆனால் உருண்டையான கற்களில் எதை இறைவன் என நினைத்து வழிபடுவது என்பதில் அவருக்குக் குழப்பம். அந்தக் குழப்பத்துடனேயே உறங்கியவரின் கனவில் மீண்டும் தோன்றிய விநாயகர், ‘இரண்டு கற்களில் எதை வேண்டுமானாலும் வைத்து பூஜித்து வா. அதில் நான் என் உருவத்தை வெளிப்படுத்துவேன்’ என்றார்.
மறுநாள் தன் வீட்டின் அருகே உள்ள இடத்தில் கிழக்கு நோக்கியவாறு, ஒரு உருண்டைக் கல்லையும், அதன் எதிரே மூஞ்சுறு வடிவில் இருந்த சிறிய கல்லையும் நிறுவினார். மற்றொரு கல்லை தனியாக வைத்தார். காலப்போக்கில் அவர் நிறுவிய கல்லில் விநாயகரின் உருவம் வெளிப்படத் தொடங்கியது. அதுவரை அவர் மட்டுமே வழிபாடு செய்து வந்த விநாயகரை, இப்போது ஊர் மக்கள் அனைவரும் வழிபடத் தொடங்கினார்கள். இதையடுத்து விநாயகருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. மாணிக்க விநாயகர் என்பது இத்தல இறைவனின் பெயர். பொதுமக்களின் உதவியுடன், விநாயகரை மையமாக வைத்து மதுரநாதீஸ்வரர், மரகதாம்பிகை, வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதி என பெரிய ஆலயமாக கட்டப்பட்டது.
இத்தலத்தில் உள்ள மாணிக்க விநாயகரை, மூன்று சதுர்த்தி தினங்கள் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால், செவ்வாய் தோஷம், ராகு–கேது தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்ற அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், திருமணத்தடை நீங்கவும், கணவன்– மனைவி இடையே ஒற்றுமை மேம்படவும், தாலி பாக்கியம் நிலைத்திடவும் சிறந்த பரிகாரத் தலமாக இது விளங்குகிறது.

ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய ஆலயம், எளிய நுழைவு வாசலைக் கொண்டு காட்சியளிக்கிறது. உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்திதேவர் காட்சி தருகின்றன. கருங்கல் கூரையால் ஆன கருவறை முன் மண்டபத்தை அடுத்து, இடதுபுறம் எளிய வடிவில் அழகுற காட்சி தருகிறார் மாணிக்க விநாயகர். வலதுபுறம் வள்ளி– தெய்வயானை சமேத முருகப்பெருமான் எளிய வடிவில் அருளாசி வழங்குகின்றார். இவர்களுக்கு நடுநாயகமாக இறைவன் மதுரநாதீஸ்வரர், கிழக்கு நோக்கி காணப்படுகிறார். கருவறை சுவரில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோரது வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அன்னை மரகதாம்பிகை சன்னிதி கி.பி. 1921–ல் கட்டப்பட்டு, தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. அன்னை நின்ற கோலத்தில் எளிய வடிவுடன் அருளாசி வழங்குகின்றார். ஈசான்ய மூலையில் நவக்கிரக சன்னிதியும், அதன் அருகே மேற்கு பார்த்தபடி கால பைரவர் சன்னிதியும் உள்ளன. காலை 6 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
விழாக்கள்:
இத்தலத்தில் வைகாசி விசாகத்தில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு, சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை, மகா சிவராத்திரி, மார்கழி மாத அபிஷேகம் என அனைத்து விழாக்களும் சிறப்போடு நடத்தப்படுகின்றன. தல மரமாக வில்வமும், தலத் தீர்த்தமாக ஆலயத்திற்குள் உள்ள கிணற்றில் இருக்கும் கங்கா தீர்த்தமும் அமைந்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் அமைந்துள்ளது வடமாத்தூர். சென்னைக்கு தென்மேற்கே 210 கிலோமீட்டர் தொலைவிலும், போளூருக்கு தெற்கே 43 கிலோமீட்டர் தூரத்திலும், செங்கத்திற்கு கிழக்கே 24 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. திருவண்ணாமலை– காஞ்சி (காஞ்சீபுரம் அல்ல) பேருந்து வழித்தடத்தில், பெரியகுளம் நிறுத்தத்தில் இறங்கி தெற்கே 2 கிலோமீட்டர் பயணம் செய்தால் வடமாத்தூரை அடையலாம்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ளது அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை இப்போது அறிந்து கொள்ளலாம்.
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமங்கலம் என்ற தலம். பசுமைச் சூழலில் அமைதியே உருவாக அமைந்துள்ள இந்த ஊரில் உள்ளது அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயம். இறைவியின் பெயர் உலக நாயகி. இறைவன் பெயர் சாமவேதீஸ்வரர். ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
ஆலய அமைப்பு :
அழகிய ராஜகோபுரத்தைக் கடந்தவுடன் விசாலமான பிரகாரம் உள்ளது. அங்கே கொடி மர விநாயகர் தனி மண்டபத்தில் அருள் பாலிக்கிறார். அடுத்து கொடி மரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. அடுத்துள்ளது சிறப்பு மண்டபம். இந்த மண்டபத்தில் வலதுபுறம் இறைவி உலக நாயகி அம்பாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இறைவியின் அர்த்த மண்டப நுழைவாயிலில் துவாரபாலகிகளின் சுதை வடிவ திருமேனிகள் அழகாய் அமைந்துள்ளன.
மகாமண்டபத்தில் நந்தியும், பலபீடமும் இருக்க அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது. இதன் வலது புறம் சண்டிகேசுவரரின் திருமேனி உள்ளது. அடுத்துள்ள கருவறையில் இறைவன் சாமவேதீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவனின் தேவகோட்டத்தில் தென் திசையில் பிச்சாடனார், தட்சிணாமூர்த்தி, உதங்க முனிவர் ஆகியோரும், கீழ் திசையில் சங்கரநாராயணன் மற்றும் வடதிசையில் பிரம்மாவும், விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.
பிரகாரத்தின் தென் திசையில் பரசுராமர் பூஜை செய்த லிங்கமும், கிழக்கு பிரகாரத்தில் வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான், மகாலட்சுமி, ஆணய நாயனாருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும் உள்ளது. வடக்குப் பிரகாரத்தில் அப்பர், சம்பந்தர், ஆணய நாயனார், பாணலிங்கம், சண்டிகேஸ்வரர் ஆகியோர் திருமேனிகள் வீற்றிருக்கின்றன. ஆணய நாயனாருக்கு முக்தி கொடுத்த அம்மனின் சன்னிதியும் இங்கு உள்ளது. சண்டிகேசுவரர் தனி சன்னிதியில் வடக்கு பிரகாரத்தில் வீற்றிருக்கிறார். கிழக்கு பிரகாரத்தில் பைரவர், காலபைரவர், சூரியன், சனீஸ்வரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் உள்ளனர்.
ஆலயச் சிறப்பு :
பரசுராமர் தனது தாயைக் கொன்றதால் மாத்ருஹத்தி எனும் தோஷம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். அவரது தோஷம் நீங்கியது. இதனால் இங்குள்ள தீர்த்தம் பரசுராம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அத்துடன் இந்த ஊருக்கு பரசுராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. சண்டிகேசுவரர் தனது தந்தையைக் கொன்றதால் ஏற்பட்ட பித்ருஹத்தி தோஷம் நீங்க பல ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார். அவரைப் பற்றிய தோஷம் நீங்கவில்லை. இறைவன் இத்தலத்தில் வந்து தன்னை வணங்கும்படி கூற சண்டிகேசுவரரும் இறைவனின் சன்னிதியின் இடது புறம் இருந்து இறைவனை வணங்கினார். அவரது தோஷம் விலகி இறைவனடி சேர்ந்தார். இறைவனின் அர்த்தமண்டப நுழைவு வாசலில் சண்டி கேசுவரரின் திருமேனியை நாம் காணலாம். இது வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பம்சம் ஆகும்.
இங்கு கிழக்கு பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு, ஆறுமுகமும் 12 கரங்களும் இல்லை. மாறாக ஆறு முகமும் நான்கு கைகளுமாக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
தவிர முருகன் வள்ளியை மணந்தபின் இத்தலம் வந்ததால் முருகனும் தேவசேனாவும் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க, வள்ளி மட்டும் மயிலின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது ஓர் அற்புத காட்சியாகும்.
இங்கு அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி வழக்கம் போல் சின்முத்திரை காட்டாமல் அபய முத்திரை காட்டுகிறார். இது ஓர் அபூர்வ அமைப்பு என்கின்றனர் பக்தர்கள். இதனால் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு இறைவன் தோஷ நிவர்த்தி தருவதுடன் கல்வி செல்வத்தையும் வாரி வழங்குகிறார் என பக்தர்கள் நம்புகின்றனர்.
சனிபகவான் :
சனி பகவானின் வாகனம் காகம். பொதுவாக காகம் தெற்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் இங்குள்ள சனி பகவானின் வாகனம் வடக்கு திசை நோக்கி அமைந்திருப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். சனி பெயர்ச்சியின் போது இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெறும். ஜென்ம சனி, பாத சனி, அஷ்டமசனி ஆகியவை சனிபகவானை வழிபடுவதால் விலகி ஓடும் என்பது அனைவரும் அறிந்த நிஜம்.
இந்த ஆலயத்தில் பைரவரும், கால பைரவரும் சேர்ந்து இருப்பது ஓர் அற்புதமான அமைப்பாகும். அர்த்தஜாம பூஜையின் போது பைரவர் பாதத்தில் வைத்த விபூதியை பூசுவதால் சகலவிதமான பில்லி சூன்யம் நோய்களும் குணமாகும் என கூறுகின்றனர் பக்தர்கள்.
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் 14–வது நாயன்மார் ஆணய நாயனார். அவர் அவதரித்த தலம் இது. இவர் கார்த்திகை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் இறைவனுடன் இரண்டற கலந்தார்.
அந்த நாளை அவரது குருபூஜை நாளாக இந்த ஆலயத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். ஆணய நாயனாருக்கு முக்தி கொடுத்த சிவலிங்கமும், அம்மனும் இங்கு தனித் தனியே அருள்பாலிக்கின்றனர். ஆலயத்தின் தல விருட்சம் பலாமரம்.
பக்தியின் பலன் :
மகம் நட்சத்திரத்தன்றும் சனிக்கிழமையன்றும் இக்கோவிலை 11 முறை வலம் வந்து, தேனில் ஊறிய பலாச் சுளைகளை தானம் செய்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம் என்பது இந்த ஊர் மக்கள் சொல்லும் நம்பிக்கையான செய்தி.
நம்மை பாதித்துள்ள தோஷங்களும், பாவங்களும் நீங்க நாமும் ஒரு முறை திருமங்கலம் சென்று வரலாமே!