என் மலர்
கோவில்கள்
கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான 4 கோவில்களில், பாயம்மல் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் சத்துருக்கனன் கோவில் 4-வது தலமாக வழிபடப்படுகிறது.
கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், பாயம்மல் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் சத்துருக்கனன் கோவில் நான்காவது தலமாக வழிபடப்படுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபடுபவர்களுக்கு எதிரிகளால் வரும் துன்பங்கள் எல்லாம் குறைந்து, செல்வங்கள் குவிந்து வாழ்க்கை வளமடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
கோவில் அமைப்பு :
பாயம்மலில் அமைந்திருக்கும் சத்துருக்கனன் கோவில், திருப்பிரையார் ராமர், இரிஞ்சாலக்குடா பரதன், திருமூழிக் குளம் லட்சுமணர் கோவில்களைப் போல் பெரிய கோவில் இல்லை. சிறிய அளவிலான ஆலயமாக இருந்தாலும், மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதைப் போல, இத்தல இறைவனின் சக்தியும் பெருமைக்குரியதுதான்.
இந்த ஆலயத்தின் கருவறை செவ்வக வடிவிலும், மேற்கூரை பிரமிடு வடிவத்திலும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆலய கருவறையில் வீற்றிருக்கும் சத்துருக்கனன் நான்கு கரங்களுடன், வலதுபுறம் மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் தாமரை மலர், இடதுபுறம் மேற்கரத்தில் சங்கு, கீழ் கரத்தில் கதை ஆகியவைகளைக் கொண்டு, நின்ற நிலையில் காட்சி தருகிறார். இந்தக் கோவில் வளாகத்தில் கணபதி, அனுமன் ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சத்துருக்கனனாக பிறந்த சக்கரம் :
விஷ்ணு, பூலோகத்தில் ராமனாகப் பிறப்பெடுத்த போது, வைகுண்டத்தில் அவரைத் தாங்கும் அனந்தன் எனும் பாம்பு, லட்சுமணனாகப் பிறந்து, எப்போதும் அவருக்குத் துணையாக இருந்து அவரைக் காத்தது. விஷ்ணுவின் கைகளில் இருக்கும் சங்கு பரதனாகவும், சக்கரம் சத்துருக்கனனாகவும் பிறந்து வாழ்ந்தனர்.
ராமனின் மூன்று சகோதரர்களுமே, ராமனின் மீது அதிகமான அன்பு கொண்டிருந்தனர். அவர்களில், லட்சுமணன் பிறந்தது முதல் ராமனின் நிழலாகவே வாழ்ந்து வந்தான். ராமன் காட்டுக்குச் சென்ற போதும், தன்னுடைய மனைவியைப் பிரிந்து, ராமருடன் காட்டுக்குச் சென்றான். மேலும் காட்டில் ராமனுக்கும் சீதைக்கும் பாதுகாப்பாகவும், பணிவிடை செய்பவனாகவும் இருந்தான். ராமனின் மனைவியான சீதையைக் காட்டிலும், ராமனுடன் அதிகக் காலம் உடனிருந்தவன் என்ற பெருமை லட்சுமணனுக்குக் கிடைத்தது.
ராமனை உடனிருந்து பார்த்துக் கொண்ட லட்சுமணனை விட, பரதனே உயர்ந்தவன் என்று பாரதம் சொல்கிறது. பரதன் ஆசையே இல்லாதவன், அண்ணன் காடு சென்றதும், அவனுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடித் திருக்கலாம், அரசனாகி இருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், அண்ணனின் காலணியைப் பெற்று வந்து, அதையே அரியாசனத்தில் வைத்து நாட்டை ஆண்டவன் அவன். பக்தனைப் பாகவதன் என்பர். பகவானை விடப் பாகவதனே உயர்ந்தவன் என்பதை உணர்த்தியவன் பரதன்.
பகவான் ராமனுக்குப் பாகவதனானப் பரதன் சேவை செய்தான் என்றால், அந்தப் பாகவதனுக்குச் சேவை செய்தவன் சத்துருக்கனன். பரதன், ராமன் மேல் கொண்ட பக்தியை வழிமொழிந்து வாழ்ந்தவன் சத்துருக்கனன் என்றால் அது மிகையல்ல. காட்டுக்குச் சென்ற ராமன், பதினான்கு ஆண்டுகள் கடந்தும் அயோத்திக்கு வராததால், மனமுடைந்த பரதன் நெருப்பில் விழுந்து உயிர் விடத் துணிந்தான்.
நெருப்புக் குண்டத்தில் குதிக்க தயாரான நிலையில், சத்துருக்கனனைப் பார்த்து, ‘நீயே இனி இந்த நாட்டை ஆள வேண்டும்’ என்றான் பரதன். ஆனால் மண்ணின் மீது ஆசையில்லாத சத்துருக்கனன் பேசாமல் இருந்து அமைதி காத்தான். அவன் அதிகம் பேசியதில்லை. ஆனாலும் கூட தான் கொண்ட ராம பக்தியை அமைதியாக இருந்த உயர்வாக்கிக் காட்டியவன் என்கிறது ராமாயண இதிகாசம். அத்தகைய சிறப்பு வாய்ந்த சத்துருக்கனனுக்கு, கேரளாவின் பாயம்மலில் தனியாகக் கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே கருதப்படுகிறது.

வழிபாடு :
பாயம்மலில் இருக்கும் சத்துருக்கனன் கோவில் அதிகாலை 4.30 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் தினமும் உஷா பூஜை, ஒச்சி கால பூஜை, அதழ பூஜை என்னும் மூன்று கால பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
சத்ருகனன் என்றால் சத்ருக்களை (எதிரிகளை) வெல்பவன் என்று பொருள். பொதுவாக, இவரை வழிபடுபவர்களுக்கு எதிரி களால் வரும் துன்பங்கள் எல்லாம் குறைந்து, செல்வங்கள் குவிந்து வாழ்க்கை வளமடையும் என்கின்றனர்.
சத்துருக்கனன் விஷ்ணுவின் கையிலிருக்கும் சக்கரத்தின் தோற்றம் என்பதால், இக்கோவிலில் இவரைச் சுதர்சன மூர்த்தியாகவே வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு சுதர்சன மலரஞ்சலி, சக்கர சமர்ப்பணம் ஆகியவை முக்கியமான வழிபாடுகளாக இருக்கின்றன. மனிதனின் பல்வேறு பாதிப்புகளுக்குக் காரணமாக இருக்கும் கடன், நோய், எதிரி ஆகியவைகளால் துன்பமடைபவர்கள் இவ்வழிபாடுகளில் கலந்து கொண்டால், அனைத்துத் தொல்லைகளும் நீங்கி மன அமைதியோடு நல்ல பலனையும் பெற முடியும்.
விழாக்கள் :
இந்தத் திருத்தலத்தில் மலையாள நாட்காட்டியில் கும்பம் மாதத்தில் (மாசி மாதம்) பூசம் நட்சத்திர நாளில் தொடங்கி ஐந்து நாட்கள் விழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்நாட்களில் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கேரளாவில் ஆடி மாதம் முழுவதையும் ராமாயண மாதம் என்று சொல்கின்றனர். இந்த மாதம் முழுவதும் நாள்தோறும் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இம்மாதத்தில் ஆலயத்துக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.
ரிஷிகேஷ் சத்துருக்கனன் :
கேரளாவின் பாயம்மல் தவிர, உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷிலும் சத்துருக்கனனுக்கு ஒரு கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. ரிஷிகேஷில் கங்கை நதிக்கரையில் ராம் ஜூலா எனும் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் கோவில் ‘ஆதி பத்ர நாராயணன் கோவில்’ என்றும் ‘ஸ்ரீ சத்துருக்கனன் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
சக்கரத்தாழ்வார் :
திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே ‘சக்கரத்தாழ்வார்’. இவர் திருமாலுக்கு இணையானவர் என்கின்றது புராணங்கள். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்று வேறு பெயர் களாலும் அழைக்கப்படுகிறார். விஷ்ணு கோவில் களில் சக்கரத்தாழ்வாருக்கு என்று தனிச் சன்னிதி அமைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும்.
சக்கரத்தாழ்வாரைத் தினமும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால், கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் கூட அழிந்து போவர். மனதில் தோன்றும் பயம் அனைத்தும் இல்லாமல் போகும். தீர்க்க முடியாத நோய்களும் குணமாகும். திரு மணத்தடைகள் நீங்கும், வறுமை ஒழிந்து செல்வம் குவியும்.
அமைவிடம் :
சத்துருக்கனன் கோவில் அமைந்திருக்கும் பாயம்மல், பரதன் கோவில் அமைந்திருக்கும் இரிஞ்சாலக்குடாவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த திருத் தலத்திற்குச் செல்ல இரிஞ்சாலக்குடாவிலிருந்து பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மனப்பிணக்கு காரணமாக பிரிந்து வாழும் தம்பதியரை இங்கு சேவை சாதிக்கும் பெருமாள் சேர்த்து வைத்து நிச்சயம் மனம் மகிழச் செய்வார் என்று பக்தர்கள் நம்புவது நிஜமே!
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நாராயண பெருமாள், தனது துணைவியார் லட்சுமி தேவியை தனது மடியில் அமர்த்தி ஒரு கரத்தால் தாயாரின் இடையை அணைத்தபடி சேவை சாதிக்கும் அழகை கண் குளிர காண வேண்டாமா?
வாருங்கள் இடையாற்று மங்கலத்திற்கு..
இந்தத் திருத்தலத்தில்தான் உள்ளது லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில்.
ஆலய அமைப்பு :
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அழகான சிறப்பு மண்டபம். அதை அடுத்து மகாமண்டபம். இந்த மண்டபத்தின் நடுவே கருடாழ்வாரின் தனி மண்டபம் உள்ளது. கருடாழ்வார், நாராயணப் பெருமாளைப் பார்த்தப்படி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மண்டபத்தின் வலது புறம் ஆஞ்சநேயரின் சன்னிதி உள்ளது.
அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாசலின் இருபுறமும் துவாரபாலகர்களின் சுதை வடிவ திருமேனி அலங்கரிக்க அர்த்த மண்டபத்தில் பெருமாளின் உற்சவத் திருமேனி உள்ளது.
உற்சவர் இங்கு ஸ்ரீ வரத ராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். அடுத்துள்ள கருவறையில் பெருமாள் ஸ்ரீ லட்சுமி நாராயணன் என்ற திருநாமத்துடன் கீழ்திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.
கணவன்- மனைவி ஒற்றுமை :
தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை ஆராதிப்பதால், கண வன் - மனைவி ஒற்றுமை ஓங்கும் எனவும், மன வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்கின்றனர் பக்தர்கள்.
தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு இல்லறம் நடத்த, இத்தல பெருமாள் அருள்புரியக் கூடியவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையே! குறிப்பாக திருவோண நட்சத்திரங் களில் பெருமாளையும், தாயாரையும் ஆராதனை அபிஷேகம் செய்து வணங்குவது கூடுதல் சிறப்பு தரும் செய லாகும்.
உற்சவர் வரதராஜப் பெருமாள் அனைத்து வரங்களையும் தரக்கூடியவர். வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகிய நாட்களில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளும் தாயாரும் வீதியுலா வருவதுண்டு.
இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் கன்னிப் பெண் களின் கண்கண்ட தெய்வம். தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் கன்னியரின் கவலையை நீக்கி அவர்களுக்கு நல்ல துணைவரை இவர் அமைத்து தருவதாக கன்னிப் பெண்கள் நம்புகின்றனர்.

தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும், வடை மாலையும் சாத்தி தங்கள் நன்றிக் கடனை மன நெகிழ்வோடு கணவரோடு வந்து தெரிவித்துக் கொள்கின்றனர், கன்னியராய் இருந்து மனைவி என்ற பதவியில் அமரும் அந்தப் பெண்கள்.
அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மேலும், இந்த ஆஞ்சநேயரை மனமுருகி வேண்டினால் சனி தோஷ நிவர்த்தியும் ஏற்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்த தலம் அமைந்துள்ளதால், அதாவது இரு ஆறுகளுக்கும் இடையே அமைந்துள்ளதால் ‘இடையாற்றுமங்கலம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள்.
சந்தான கோபால கிருஷ்ணன் :
இங்கு உற்சவர் வரதராஜப் பெருமாளின் அருகே, சுமார் 20 செ.மீ. உயரத்தில் சந்தான கோபால கிருஷ்ணனின் உலோகச் சிலை ஒன்று உள்ளது.
குழந்தை செல்வம் இல்லையே என ஏக்கத்துடன் இந்த ஆலயம் வரும் தம்பதியர் தங்களுடன் ஒரு சிறிய மரத்தொட்டிலை கொண்டு வருகின்றனர். அந்தத் தொட்டிலை இந்த ஆலயத்தில் கயிற்றிலோ அல்லது சேலையிலோ கட்டுகின்றனர். பின்னர் இந்த சந்தான கோபால கிருஷ்ணனை அந்தத் தொட்டியில் இட்டு தொட்டிலை மெல்ல ஆட்டுகின்றனர். சிலர் ரம்மியமாய் பாடுவதும் உண்டு.
பின்னர் மூலவருக்கு அர்ச்சனையோ அபிஷேக ஆராதனையோ செய்து விட்டு நிறைந்த மனதோடு இல்லம் திரும்புகின்றனர்.
இந்த தம்பதியர் மறு ஆண்டு தங்கள் வீட்டில் தொட்டில் கட்டி அதில் தங்கள் குழந்தையை கிடத்தி தாலாட்டு பாடுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.
தங்களது பிரார்த்தனை பலித்ததும் மீண்டும் இந்த ஆலயம் வரும் தம்பதியர் பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து தங்களது நன்றிக் கடனை கண்ணீர் மல்க செலுத்தும் காட்சி இங்கு அடிக்கடி காணக் கூடியது.
தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7½ மணி வரையிலும் திறந்திருக்கும்.
மனப்பிணக்கு காரணமாக பிரிந்து வாழும் தம்பதியரை இங்கு சேவை சாதிக்கும் பெருமாள் சேர்த்து வைத்து நிச்சயம் மனம் மகிழச் செய்வார் என்று பக்தர்கள் நம்புவது நிஜமே!
திருச்சி - அன்பில் பேருந்து சாலையில் லால்குடியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இடையாற்றுமங்கலம் என்ற இத்தலம்.

திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டையில், நகரின் நடுவில் அமைந்து உள்ளது மிகவும் பழமைவாய்ந்த திரிபுராந்தீசுவரர் கோவில்.
திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டையில், நகரின் நடுவில் அமைந்து உள்ளது திரிபுராந்தீசுவரர் கோவில். மிகவும் பழமைவாய்ந்த இக்கோவில் மூலவரின் பெயர் திரிபுராந்தீசுவரர். அம்மன் கோமதி அம்பாள். தீர்த்தம் தாமிரபரணி. தல விருட்சம் வில்வ மரம்.
பாண்டிய நாட்டின் ஒரு பகுதியை உத்தாலன் எனும் திருநாமம் உடைய வேந்தன். சீரும், சிறப்புமாய் ஆட்சி நடத்தி வந்த இந்த மன்னன், ஒருநாள் உப்பரிகையில் தனது மனைவியோடு உலா சென்றான். செல்லும் வழியில் தவத்தில் ஈடுபட்டு இருந்த தவமுனிவர் ஒருவரை தனது அகந்தை மிகுதியால் கேலிப் பொருள் ஆக்கினான். இதனால் வெகுண்ட தவமுனிவர் மன்னனை சபித்தார். மன்னனின் அங்கம் உருக்குலைந்து அவலநிலை அடைந்தது. கண்கள் காட்சியை இழந்தது.
இதனால் மனம் வருந்திய மன்னன், தனது பாழைய நிலையை நினைத்து பலவாறு வருந்தி, முனிவரை வேண்டினான். தவமுனிவர் அவனது வேண்டுகோளுக்கு இணங்கி பொருநை நதிக்கரையில் செண்பக வனத்தில் சிவலிங்கம் அமைத்து பூஜை செய்தால் இழந்த வனப்பை மீண்டும் பெறலாம் என விமோச்சனம் அருளினார்.
தனது துயர் துடைக்க மன்னன், கவுதம முனிவரை வேண்டினான். தாமரபரணி நதிக்கரையில் ஈசனை வழிபட்டு மன்னன் தனது இழந்த வனப்பை பெற முடியும் என ஞானத்தினால் உணர்ந்த கவுதன முனிவர் பாண்டிய மன்னனையும், பாண்டிமா தேவியையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு பாளையம் பதிக்கு வந்தார். செண்பக வனத்தின் செழுமை கண்ட முனிவர் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்து சிறப்பிக்க நினைத்தார்.
வான்வழியே வடதிசை நோக்கி பயணித்து கொண்டு இருந்த ஆஞ்சநேயரை அழைத்து, காசிக்கு சென்று சிவபூஜை செய்ய சிவலிங்கம் கொண்டு வருக என்று கூறினார். அதன்படி அஞ்சனை குமரனும் காசிக்கு சென்று சிவலிங்கம் கொண்டு வர கவுதம முனிவர் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பாண்டிய மன்னனையும், பாண்டிமா தேவியையும் தவமிருக்க செய்து இழந்த தேகப்பொலிவையும், கண்ணொளியையும் பெற்று தந்தார்.
கவுதம முனிவருக்கு காட்சி தந்த ஈசன் வேண்டும் வரம் யாது? என கேட்டார். உடனே கவுதம முனிவர், இத்தலம் என்றும் சிறப்புற்று இருக்க வேண்டும். இங்கு வந்து உன்னை பூஜிப்பவர்கள் எல்லா நலனும் பெற்று இன்புற்று இருக்க வேண்டும் என்று வேண்டினார். அதனை கேட்ட இறைவனும் அவ்வாறே ஆகட்டும் என்று வாழ்த்தி வரம் தந்ததாக கோவில் வரலாறு தெரிவிக்கிறது.
இக்கோவிலில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 7.15 மணிக்கு கால சந்தி, பகல் 12 மணிக்கு உச்சிக்காலம், மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 8.45 மணிக்கு அர்த்தசாமம், 9 மணிக்கு பள்ளியறை என 6 கால பூஜைகள் நடைபெறுகிறது. சித்திரை பிரமோற்சவம், மார்கழி திருப்பள்ளியெழுச்சி, திருவாதிரை, திருக்கார்த்திகை, ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாணம், கந்த சஷ்டி, ஆடிப்பூரம், தைப்பூசம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலி மாநகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ளதால் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுடனும் ரெயில், பஸ் போக்குவரத்து வசதி உண்டு.

அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை எடுத்துரைத்தவர் திருஇன்னம்பரில் எழுந்தருளி இருக்கும் ஈசன். அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை போதித்ததால், ‘எழுத்தறிநாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.
நமக்கெல்லாம் தமிழ் இலக்கணத்தை வடித்துக் கொடுத்தவர் குறுமுனி அகத்தியர். அந்த அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை எடுத்துரைத்தவர் திருஇன்னம்பரில் எழுந்தருளி இருக்கும் ஈசன். இங்குள்ள ஈசனின் திருநாமம் ஐராவதேஸ்வரர் என்பதாகும். அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை போதித்ததால், ‘எழுத்தறிநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் அட்சரபுரீஸ்வரர். ‘அட்சரம்’ என்றால் ‘எழுத்து’ என்று பெயர்.
ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளானது, இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம். சாபம் பெற்ற ஐராவதம் இத்தல ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. அதனால் இத்தல இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என்று பெயர்.
‘இனன்’ என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் இத்தல ஈசனை நம்பி வழிபட்ட ஊர் என்பதால் இனன்நம்பூர் என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் இதுவே மருவி ‘இன்னம்பூர்’ என்றாகியிருக்கிறது. இத்தலத்தில் சூரியன் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி 31-ந் தேதி, புராட்டாசி 12-ந் தேதி மற்றும் பங்குனி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில், எழுத்தறிநாதரின் மீது தன்னுடைய சூரிய கதிர்களை வீசி வழிபடுகிறான். இந்த நாட்களில் ஆலயத்தில் சூரிய பூஜை, திருவிழா போல் கொண்டாடப்படுகிறது.
ஆலய அமைப்பு :
இந்த ஆலயத்தில் மூலவர் எழுத்தறிநாதர், மிகப்பெரிய வடிவில் கம்பீரமாக, கிழக்கு நோக்கி லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக ருத்திராட்சப் பந்தலின் கீழ் அருள்புரிகிறார். கருவறை கோஷ்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். முருகப்பெருமான், தட்சிண கயிலாய லிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சண்டேஸ்வரர் ஆகியோர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.
இத்தல எழுத்தறிநாதரை வழிபட்டு, 27 நெய் தீபங்கள் ஏற்றினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்கிறார்கள். ஆதி காலத்தில் அகத்தியருக்கு எழுத்தறிவித்தவர் இத்தல இறைவன் என்பதால், கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபட்டால் சிறப்பான வெற்றியைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஈசனின் கருவறை விமானம் கஜபிருஷ்ட வடிவில் இருக்கிறது. விமானத்தின் கிழக்குப் புறம் ஈசன், அம்பாள், சுதன்மன் மற்றும் சோழ மன்னனின் சுதைச் சிற்பங்களும் உள்ளன.
இந்த ஆலயத்தில் உள்ள பைரவரை தேய்பிறை அஷ்டமி நாட்களில் பால், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் போன்றவற்றால் அபிஷேகம் செய்வதுடன், நெய்தீபம், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன், உடற்பிணிகள் அகலும். ஆலயத்தின் தெற்குச் சுற்றுச்சுவரில் சிலை உருவில் நடராஜர் எழுந்தருளியுள்ளார். மாத திருவாதிரையும், மார்கழி மாத திருவாதிரையும் இந்தக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைபெறும். இங்குள்ள நடராஜர் சிலை, கடலில் இருந்து கிடைத்ததாக கூறுகிறார்கள். இவரை மாத திருவாதிரை நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால், சகல செல்வங்களும், வளங்களும் இல்லத்தில் நிறையும்.
எழுத்தறிநாதரின் வாசல் அருகே நான்கு திருக்கரங்களுடன், தெற்கு நோக் கியபடி சவுந்தரநாயகி என்னும் நித்திய கல்யாணி அம்மன் திருமணக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறாள். இந்த அன்னையை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால், வெகு விரைவில் தடைகள், தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும் என்கிறார்கள். எலுமிச்சைப் பழத்தின் மேற்புறம் சிறு துளையிட்டு, சாற்றை வெளியேற்றிவிட்டு, பின்பு அந்தத் துளை வழியாக சிறிது நெய் விட்டு, துளையில் திரியை நுழைத்து தீபம் ஏற்ற வேண்டும். எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டுவது கூடாது.
கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தின் வலதுபுறம் தெற்கு நோக் கியபடி நான்கு திருக்கரங்களுடன் கையில் ஜெப மாலையை ஏந்தி தவக்கோலத்தில் மற்றொரு அம்பாள் ‘சுகந்த குந்தளாம்பிகை’ அருள்பாலிக்கிறாள். அழகிய மணம் பொருந்திய கூந்தலை கொண்டவள் என்பது இந்த அன்னையின் பெயருக்கான பொருள். ‘பூங்கொம்பு நாயகி’ என்றும் அன்னை அழைக்கப் படுகிறாள். மகா மண்டபத்தில் நவக்கிரகங்கள் உள்ளன.

புரட்டாசி மாதத்தில் நவராத்திரி 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. கல்வி பயிலத் தொடங்கும் முன்பும், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன்பும் இத்தலம் அழைத்து வந்து, பரப்பிய நெல்லில் ‘ஓம் அட்சரபுரீஸ்வராய நம ஹ’ என்று குழந்தைகளின் விரலைப் பிடித்து எழுதவைக்கிறார்கள். இப்படி வித்யாப்பியாசத்தை தொடங்கும் நிகழ்ச்சி இந்த ஆலயத்தில் தினமும் நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றாகும். குறிப்பாக சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாட்களில் குழந்தைகளை கூட்டி வந்து, ஈசனை வழிபட்டு வித்யாப்பியாசத்தை தொடங்குவது அதிக அளவில் நடைபெறுகிறது.
சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாட்களில் இன்னம்பர் எழுத்தறிநாதரை குடும்பத்துடன் வழிபட்டு, பள்ளிக் கணக்குகளை மட்டுமல்லாமல், நம்முடைய வாழ்க்கை கணக்குகளையும் சரி செய்து கொள்வோம்.
பக்தன் உருவில் வந்த பரமன் :
சுதன்மன் என்னும் சிவ பக்தன், இன்னம்பர் எழுத்தறிநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தான். அவன் இன்னம்பர் ஆலயத்தின் நிர்வாக கணக்கு வழக்குகளையும் கவனிக்கும் பொறுப்பில் இருந்தான். ஒரு முறை அந்தப் பகுதியை ஆண்டு வந்த சோழ மன்னன், இன்னம்பர் கோவிலின் வரவு செலவுக் கணக்குகளை தன்னிடம் சமர்ப்பிக்குமாறு, சுதன்மனுக்கு கட்டளையிட்டான். சுதன்மனும் ஆலயக் கணக்கை எடுத்துக் கொண்டு போய், மன்னனிடம் சமர்ப்பித்தான். ஆனால் அந்தக் கணக்கு வழக்குகளில் மன்னனுக்கு ஐயம் ஏற்பட்டது.
‘நாளை பகல் பொழுதுக்குள், என்னிடம் சரியாக இன்னம்பர் ஆலயக் கணக்குகளைச் சமர்ப்பித்தாக வேண்டும்’ என்று உத்தரவிட்டான் சோழ மன்னன்.
எந்த இடத்தில் கணக்கில் தவறு செய்தோம் என்று தெரியாத நிலையில் மனக்குழப்பம் அடைந்தான் சுதன்மன். பின்னர் எழுத்தறிநாதரின் கருவறை முன்பாக அமர்ந்து சிவபெருமானை நினைத்து துதித்தான். தன் வேதனையை, தனக்கு வந்திருக்கும் துன்பத்தை களைய வேண்டி பிரார்த்தித்தான். மறுநாள் சுதன்மன், மன்னனைச் சந்திக்கச் சென்றான்.
அவனைப் பார்த்து மன்னன், ‘இன்று காலையிலேயே இன்னம்பர் ஆலயக் கணக்கு வழக்குகளை என்னிடம் மிகச் சிறப்பாக ஐயமுற விளக்கி விட்டீர்களே.. பிறகென்ன?’ என்று கேட்டான்.
சுதன்மனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘அப்படியா?.. ஒன்றுமில்லை’ என்றபடியே எழுத்தறிநாதரின் ஆலயத்திற்கு வந்தவன், அங்கேயே ஓரிடத்தில் படுத்து கண்ணயர்ந்தான். அப்போது அவன் கனவில் தோன்றிய ஈசன், ‘பக்தா! நான்தான் உன் உருவத்தில் மன்னனிடம் சென்று ஆலயக் கணக்கு வழக்குகளை ஒப்படைத்தேன்’ என்று கூறி மறைந்தார்.
எழுத்தறிநாதரின் அருட்கருணையை நினைத்து தன் கடைசி காலம் வரை, அவரது கோவிலிலேயே வழிபட்டு, பின்பு சிவலோகப் பதவி அடைந்தான் சுதன்மன்.
கும்பகோணம்- சுவாமிமலை வழிப்பாதையில் புளியஞ்சேரிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் இன்னம்பர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மிக அருகாமையில் திருப்புறம்பயம் சாட்சிநாதர் ஆலயமும் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து வடமேற்கே 6 கிலோமீட்டர் தூரம் சென்றால் இன்னம்பர் திருத்தலத்தை அடையலாம்.

நாக தோஷத்தை நிவர்த்தி செய்யும் நாகம்மா அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று திம்மராய சமுத்திரத்தில் உள்ளது. ஸ்ரீ சுயம்பு நாகமணி தேவி ஆலயம் என்பது இந்த ஆலயத்தின் பெயராகும்.
தோஷ நிவர்த்தி தலங்கள் பல உண்டு. நாக தோஷ நிவர்த்தி தலங்களும் பல உண்டு. நாக தோஷத்தை நிவர்த்தி செய்யும் நாகம்மா அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று திம்மராய சமுத்திரத்தில் உள்ளது. ஸ்ரீ சுயம்பு நாகமணி தேவி ஆலயம் என்பது இந்த ஆலயத்தின் பெயராகும்.
சுமார் 400 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். ஒரு கருவ மரமும் அதையொட்டி ஒரு புற்றும் வளர்ந்து வர மக்கள் அந்தப் புற்றை நாகம்மாவாகப் பாவித்து வணங்கி வரத்தொடங்கினர். மரமும் வளர்ந்தது. புற்றும் வளர்ந்தது. இரண்டடி, மூன்றடி என்று தொடங்கி புற்று பத்தடி உயரத்திற்கு மேல் வளர்ந்தது. அதைத் தொடர்ந்து அந்த கிராம மக்கள் சார்பில் புற்றின் முன் ஒரு விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அந்த விக்கிரகத்தின் கீழ் பகுதி சிவலிங்கமாகவும், மேல் பகுதியில் அன்னையின் சிரசும் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பின் அன்னையின் உருவம் மட்டுமே தெரியும் அமைப்பாக உள்ளது. அன்னை நாகமணி தேவியின் சன்னிதிக்கு வந்து வேண்டுவோருக்கு வேண்டும் அனைத்தும் கிடைப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
அன்னையின் கருவறையில் அன்னை இன்முகத்துடன் அமர்ந்திருக்க அந்த கருவறை முழுவதையும் மண்புற்று ஆக்கிரமித்துள்ளது. அந்தப் புற்றில் ஒரு நாக குடும்பமே வசிப்பதாக ஆலய நிர்வாகி எந்தவித பதற்றமும் இன்றி கூறுவது நம்மை சிலிர்க்க வைக்கிறது. அதில் வசிக்கும் சில நாகங்கள் அவ்வப்போது வெளியில் வருவது உண்டாம். பக்தர்கள் பலரும் அதைப் பார்த்திருப்பதாக மெய்சிலிர்த்தபடி தெரிவிக்கின்றனர். கருவறையில் எப்போதாவது வலம் வரும் நாகத்தை ஆராதனை செய்யவரும் அர்ச்சகர் பொருட்படுத்துவது இல்லையாம்.
ஆலய அமைப்பு :
ஆலயம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஒருபுறம் கொள்ளிடம் ஆறு ஓட, சாலையை விட்டு மறுபுறம் இறங்கினால் கோவிலை தரிசனம் செய்யலாம். ஆலய முகப்பின் இடதுபுறம் காளியும் வலதுபுறம் பேச்சியம்மனும் அருள் பாலிக்கின்றனர். உள்ளே நுழைந்ததும் மகா மண்டபமும் அருகே சூலமும் சிம்மமும் உள்ளன. உட்பிரகாரத்தில் மேற்கில் மகாலிங்க சாஸ்தா, கொம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், கலிங்கு நர்த்தனார், சப்த மாதாக்கள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். அத்துடன் கிழக்கில் காத்தவராயன் சன்னிதியும் உள்ளது.
கருவறையின் முன் இருபுறமும் துவாரபாலகிகள் வீற்றிருக்க நாகம்மா அன்னை வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னையின் தலைக்கு மேல் நாகம் படம் எடுத்து ஆடுவது போன்ற அமைப்பு உள்ளது.
புற்றில் உள்ள கருவை மரத்தில் காளிதேவியும், புற்றில் நாகம்மாவும், வெளியே அங்காளப் பரமேஸ்வரியும் வாசம் செய்வதாக பல நூறு ஆண்டுகளாக நம்பிக்கை உள்ளது. ஆலய தல மரங்கள் கருவை, வேம்பு என இரு மரங்கள்.
காவல் தெய்வங்கள் :
மகாமண்டபத்தை விட்டு வெளியே வந்தால் அகன்று விரிந்த ஆலய வளாகம் உள்ளது. பல காவல் தெய்வங்கள் அங்கு அருள்புரிகின்றனர். மேற்கில் அங்காளப்பரமேஸ்வரி, வடக்கில் கருப்புசாமி, முனிஸ்வரர், மதுரைவீரன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கிழக்கில் நெல்லி மரமும் அதன் அடியில் பைரவரும் அருள்பாலிக்கின்றனர். தவிர சுடலை மாடசாமி, சாம்புக மூர்த்தி, சமயபுரத்தம்மன் சன்னிதிகள் உள்ளன. தலவிருட்சமான வேம்பு அன்னை சமயபுரத்தம்மன் சன்னிதிக்கு பின்புறம் இருக்கிறது. இந்த வேம்பு மரம் அடியில் மூன்று கிளைகளாகப் பிரிந்துள்ளது. பின்னர், ஒவ்வொரு கிளைகளும் மூன்று மூன்று கிளைகளாகப் பிரிந்து பார்ப்பவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த் திக் கொண்டிருக்கிறது.

பூஜையும் விழாக்களும் :
அன்னை நாகமணிக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை நடைபெறுகிறது. மாலை 4.30 முதல் 6 மணி வரை நடைபெறும், இந்த பூஜையில் கலந்து கொள்வதால் சகல தோஷங்களும் விலகும் என்கின்றனர் பக்தர்கள். இந்த ஆலயத்தில் தீர்த்த பிரசாதமாக, புற்று மண் கலந்த நீரை வழங்குகிறார்கள். பல வியாதிகளை குணமாக்கும் வல்லமை இந்த தீர்த்தத்திற்கு உண்டு என்கின்றனர், தீர்த்த நீரை வாங்கிப் பருகி நோய் தீர்ந்த பக்தர்கள்.
வைகாசி மாதம் வளர்பிறை பூரம் நட்சத்திரம் அன்று தொடங்கி 9 நாட்கள் இந்த ஆலயத்தில் திருவிழா நடைபெறுகிறது. முதல் நாள் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கும். 7–ம் நாள் கரகம், பால்குடம், அக்னி சட்டி முதலியவைகளுடன் சுமார் 200–க்கும் மேற்பட்டோர் கொள்ளிட நதியில் இருந்து புறப்பட்டு ஆலயம் வந்து சேருவார்கள். 8–ம் நாள் அடசல் பூஜையும், 9–ம் நாள் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும். அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊஞ்சல் உற்சவம் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.
அன்னையிடம் தங்கள் குறைகளைக் கூறி வேண்டிக் கொள்பவர்கள், தங்களது வேண்டுதல் பலித்ததும் அன்னைக்கு புடவை சாத்துவதுடன், அம்பாள் சன்னிதியில் விளக்கு ஏற்றி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றனர். இந்த ஆலயம் ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அமைப்பில் அமைந்துள்ளது வியப்பான தகவலாகும்.
யாக பூஜை:
தை மாதம் அஸ்த நட்சத்திரம் சஷ்டி திதியில் வரும் அம்மன் பிறந்த நாள் அன்று, அன்னையின் முன் மகா மண்டபத்தில் விசேஷ ஹோமம் நடத்தப்படுகிறது. பல நூறு பக்தர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
ஒரு முறை இந்த யாகம் நடந்த போது ஓர் அதிசயம் நடந்துள்ளது. கொழுந்து விட்டு எரிந்த யாகத்தீயில் அன்னையின் உருவம் தீப்பிழம்பாய் மேலெழுந்து, கூடியிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்ததாக கூறுகிறார்கள்.
அந்த உருவத்தின் கையில் கத்தியும், தலையில் பிறையும் இருப்பது புகைப்படத்தில் கூட தெளிவாகத் தெரிகிறது. அந்த புகைப்படம் ஆலயத்தில் மாட்டி வைக்கப்பட்டுள்ளது.
அன்னையின் சன்னிதியில் நாம் நுழையும் போது நம் மனதில் இனம் தெரியாத சிலிர்ப்பு உண்டாகி மனம் இலகுவாக மாறுவதை நம்மால் நிச்சயமாக உணர முடியும்.
ஆலயம் காலை 5½ மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7½ மணி வரையிலும் திறந்திருக்கும். தினசரி இரண்டு கால பூஜை மட்டுமே இங்கு நடைபெறுகிறது.
திருவானைக்கோவிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் உள்ளது திம்மராய சமுத்திரம். இங்குதான் இந்த ஆலயம் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு செல்ல பேருந்து வசதி உள்ளது. முதியோர் இல்லம் என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அருகிலேயே ஆலயம் உள்ளது. ஆட்டோ வசதியும் உண்டு.
வேண்டியதை வேண்டியபடி அருளும் நாகமணி தேவியை நாமும் ஒரு முறை தரிசித்து வரலாமே!

பாதாளீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என இரு சிவாலயங்களை கொண்ட ஊர் என பல்வேறு பெருமைகள் கொண்டு விளங்கும் பழமையான தலம் விழுப்புரம் பிரம்மதேசம் ஆகும்.
பல்லவன், சோழன், பாண்டியன், சாளுக்கியர், விஜயநகர மன்னர்கள் எனப் பல்வேறு மன்னர்களால் போற்றப்பட்ட தலம். அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட ஊர். பாதாளீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என இரு சிவாலயங்களை கொண்ட ஊர் என பல்வேறு பெருமைகள் கொண்டு விளங்கும் பழமையான தலம் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் அமைந்த பிரம்மதேசம் ஆகும்.
பிரம்மதேசம் என்பது ‘பிரம்மதேயம்’ என்ற பெயரில் இருந்து மருவி வந்துள்ளன. அந்தணர்களுக்குத் தானம் தந்த ஊர் என்பதால் பிரம்மதேயம் என்று அழைக்கப்பட்ட இத்தலம், நாளடைவில் மருவி பிரம்மதேசம் ஆனது. இவ்வூரில் பழமையான இரண்டு சிவாலயங்கள் அமைந்துள்ளன. பாதாளீஸ்வரர் ஆலயம் ஊரின் நடுவிலும், பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் ஊரின் வடக்குப் பகுதியில் ஏரிக்கரையின் அருகேயும் இருக்கின்றன. பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் செல்லும் வழியில் தேரடி விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது.
பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் :
பிரம்மதேசத்தின் வடமேற்கே, ஏரிக்கரை அருகே பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வடக்கே உயர்ந்த மலைகள், வயல்வெளிகள் நம் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. ஆலயம் கிழக்கு நோக்கி பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இந்தக் கோவில் சோழர் காலத்தைச் சார்ந்ததாகும். ஆய்வின் போது கிடைத்த துர்க்கை சிலையானது, இது பல்லவர் காலத்திலும் இருந்திருக்கலாம் என்பதை உறுதி செய்கிறது.
காளமேகப் புலவர் வாழ்ந்த ஊர் எண்ணாயிரம் ஆகும். இவருக்கும், அவ்வையாருக்கும் நிகழ்ந்த பாடல் போட்டிகள் மிகவும் போற்றத் தக்கதாகும். மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய ‘மீனாட்சி கலித்தொகை’யில் இப்பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சி மகா பெரியவரின் தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் பிரம்மதேசம் பற்றியும், எண்ணாயிரம் குறித்தும், அந்தணர்கள் குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் இப்பகுதி குறித்தும், அங்கு நிகழ்ந்த மன்னர்களின் வாழ்க்கையைப் பற்றியும் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலய அமைப்பு :
கிழக்கே நோக்கிய இவ்வாலயம், இன்று இந்தியத் தொல்லியல்துறை மூலமாக நல்ல முறையில் பழமை மாறாமல் புனரமைப்பினால் புதுப்பொலிவினைப் பெற்று வருகிறது. நந்திதேவர் மேற்குநோக்கி இறைவனை வழிபட, வலதுபுறம் பெரிய மண்டபம் உள்ளது. இது பழைய அம்மன் சன்னிதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேற்கு நோக்கி உள்ளே நுழைந்தால், பிரமாண்ட திருச்சுற்று மாளிகை அமைந்துள்ளது. இதில் இரட்டைப் பிரகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உருண்டை வடிவ கல்தூண்கள் நேர்த்தியாக அணிவகுக்க, நாற்புறமும் கல்மண்டபத்தினைத் தாங்கி நிற்கின்றன. எண்ணாயிரத்தில் கல்விச் சாலை இம்மண்டபத்தில் செயல்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மகாமண்டபம் முன்புறம், பிரமாண்ட முகமண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தில் நான்கு வரிசையில் பன்னிரண்டு தூண்கள் இருக்கிறது. பிரகாரத்தில் கலைநயம் மிக்க விநாயகர், லிங்கம், நின்ற கோல விநாயகர், வள்ளி– தெய்வயானையுடன், வஜ்ஜிரப் படை, சக்திபடை ஏந்திய முருகப்பெருமான், துர்க்கை, பைரவர் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன. வடதிசையில் சண்டிகேஸ்வரர், அருகே நவக்கிரகங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
தேவக்கோட்டத்தில், தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கே லிங்கோத்பவர், வடக்கே பிரம்மன் ஆகியோர் காட்சி தருகின்றனர். முப்புறமும் 24 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. லிங்கத்தை வழிபடும் அடியார், பசு, காகம், நாகம், மீன் ஆகிய சிவபுராணச் சிற்பங்களும், பஞ்சதந்திரக் கதைகளை நினைவுபடுத்தும் சிற்பங்களும் இக்கோவிலின் தனிச் சிறப்புகளாக உள்ளன.
பிரம்மபுரீஸ்வரர் :
கிழக்கு நோக்கிய கருவறை சதுரவடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் எழிலான தோற்றத்தில் வட்ட வடிவ ஆவுடையாராக, உயரமான பாணலிங்கத் திருமேனியாக பிரம்மபுரீஸ்வரர் அருட்காட்சி வழங்குகின்றார். இறைவனின் திருவுருவம், பல நூற்றாண்டுகளைக் கடந்து புதுப்பொலிவோடு காட்சிதருவது, நம்மை வியப்பில் ஆழ்த்தி, மெய்சிலிர்க்க வைக்கிறது.
முகமண்டபத்தின் வடக்கே, தெற்குநோக்கிய தனிச் சன்னிதியில் அன்னை பெரியநாயகி காட்சியளிக்கின்றாள். பெயருக்கு ஏற்றபடியே பெரியநாயகியாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். மேல் வலது கரத்தில் அல்லி மலரையும், மேல் இடது கரத்தில் தாமரை மலரையும் தாங்கி, கீழ் வலது கரத்தில் அபய முத்திரையுடனும், கீழ் இடது கரத்தில் வரத முத்திரையோடும் காட்சி அளிக்கின்றாள். அன்னையின் வடிவமும், கலைநயமும், நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகின்றது. அன்னை, சோழர் காலத்தைச் சார்ந்தவர் என்பது ஆய்வாளர்களின் முடிவு ஆகும்.
விழாக்கள்:
மாசி மகத்தன்று வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்மனேரி சாஸ்தா கோவிலுக்குச் சென்று அங்கே தீர்த்தவாரி நடைபெறும். அதன்பின் பிரம்மதேசத்தில் அன்று மாலை வீதியுலா நடத்தப்படும். இதுதவிர, விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி ஆகியவையும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இது இந்தியத் தொல்லியல் துறையின் ஆலயம் என்பதால், காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை ஆலய தரிசனம் செய்யலாம். தீபாராதனையைக் காண வேண்டுமெனில், அர்ச்சகர் இருக்கும் நேரத்தில் மட்டுமே சாத்தியம்.
அமைவிடம் :
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்தில் பிரம்மதேசம் அமைந்துள்ளது. விழுப்புரம் – செஞ்சி சாலையில் விழுப்புரத்தில் இருந்து வடகிழக்கே 21 கிலோமீட்டர் தொலைவிலும், செஞ்சியில் இருந்து தென்கிழக்கே 21 கிலோமீட்டர் தூரத்திலும் பிரம்மதேசம் இருக்கிறது. விழுப்புரத்திற்கும் செஞ்சிக்கும் நடுவே 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நேமூரில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் சென்றால் பிரம்மதேசத்தை அடையலாம். நேமூரில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.
திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் கூட்டேரிப்பட்டு என்ற இடத்தை கடந்து, சங்கராபரணி ஆற்றுப் பாலத்தைக் கடந்ததும், பேரணி கூட்டுச்சாலை வரும். அதிலிருந்து பெரியதச்சூர், எசாலம் வழியாகவும் பிரம்மதேசம் வரலாம்.

கேரளாவில் உள்ள லட்சுமணர் ஆலயத்தில் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் திருவோண பூஜை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்கின்றனர்.
கேரளாவில் நாலம்பலம் என்று அழைக்கப்படும் ராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், திருமூழிக்குளம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் லட்சுமணர் கோவில், மூன்றாவது தலமாகும். இந்த ஆலயத்தில் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் திருவோண பூஜை செய்து வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு கிடைக்கும் என்கின்றனர்.
கோவில் அமைப்பு :
திருமூழிக்குளத்தில் இருக்கும் லட்சுமணர் கோவில், சாலக்குடி ஆற்றின் கீழ் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கருவறை வட்ட வடிவிலும், அதன் மேற்கூரை இரண்டடுக்கு கூம்பு வடிவில், தாமிரத்தகடு கொண்டு மூடப்பட்டும் அழகாகக் காட்சியளிக்கிறது.
இங்குள்ள லட்சுமணப்பெருமாள் நான்கு கரங்களுடன், வலதுபுறம் மேற்கரத்தில் சங்கு, கீழ் கரத்தில் கதை, இடதுபுறம் மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் தாமரை மலர் ஆகியவைகளைக் கொண்டு, கிழக்கு நோக்கி நின்ற நிலையில் விஷ்ணுவாகவே காட்சி தருகிறார்.
இத்தல தாயார் பெயர் மதுரவேணி நாச்சியார் என்பதாகும்.
கோவில் வளாகத்தில் கணபதி, சாஸ்தா, சிவபெருமான் ஆகியோருக்குத் தனிச் சன்னிதிகள் இருக்கின்றன. மேலும் கோவில் வளாகத்தில், பஞ்சலோகத்திலான பகவதி, பஞ்சலோகத்தாலான கோசால கிருஷ்ணன் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கோவில் உட்புறச் சுவர்களில் ராமாயணத்தைச் சொல்லும் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.
லட்சுமணப் பெருமாள் :
இத்தல இறைவன் லட்சுமணப்பெருமாள், திருமூழிக்குளத்தான், அப்பன், ஸூக்திநாதன் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இவர் லட்சுமணப்பெருமாள் என அழைக்கப்படுவதற்கு காரணமாக ஒரு வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகிறது.
கைகேயி தசரதனிடம், ‘ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும், பரதன் அரசாள வேண்டும்’ என்று இரண்டு வரங்களைக் கேட்டதால், ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டியதாயிற்று.
ராமன் காட்டுக்குச் சென்ற வருத்தத்தில் சில நாட்களிலேயே தசரதன் இறந்து போனார். அதன் பிறகு, தற்செயலாக அயோத்தி திரும்பிய பரதன், தனது விருப்பத்தைக் கேட்காமல் தாய் கேட்ட வரங்களையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நினைத்து வருந்தினான்.
பின்னர் அவன், காட்டுக்குச் சென்ற ராமனைத் திரும்பவும் அயோத்திக்கு அழைத்து வரவேண்டும் என நினைத்துக் காட்டுக்குள் சென்றான்.
பரதன் காட்டுக்குள் வரும் செய்தி அறிந்த லட்சுமணன், ராமனைக் காட்டுக்குள் அனுப்பிவிட்டு, தான் அரசனான செய்தியைச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்வதற்காகக் காட்டுக்குள் வருகிறானா? இல்லை, ராமனைக் கொல்வதற்காகப் படைபலத்துடன் காட்டுக்குள் வருகிறானா? என்று அவனாக ஏதேதோ நினைத்துக் கோபமடைந்தான்.
பரதனைத் தவறாக நினைத்த லட்சுமணன், அவனுடன் சண்டைக்குப் போனான். ராமன், லட்சுமணனை தடுத்து நிறுத்தினான். காட்டுக்குள்ளிருக்கும் ராமனை மீண்டும் அயோத்திக்கு அழைத்துச் சென்று அரசனாக்க வேண்டும் என்று நினைத்து வந்த பரதன், ராமன் நாடு திரும்ப மறுக்கவே, ராமனின் காலணிகளைப் பெற்றுச் சென்று, அந்தக் காலணிகளைச் சிம்மாசனத்தில் வைத்து, நந்திகிராமத்தில் தங்கி ராமனின் பெயரிலேயே பரதன் ஆட்சி செய்தான்.
பரதனைத் தவறாக நினைத்ததை எண்ணி வருந்திய லட்சுமணன் அந்த மனக்குறையுடனேயே இருந்தான். இந்நிலையில், ஒருநாள் இத்தலத்திற்கு பரதனும் லட்சுமணனும் ஒன்றாகச் சேர்ந்து வந்திருந்தனர். அப்போது, அங்கிருந்த அரித முனிவர் லட்சுமணனின் மனதிலிருக்கும் குறையை வெளிப்படுத்தினார்.
அதைக் கேட்ட லட்சுமணன், அங்கிருந்த பரதனின் காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினான். ஆனால், பரதன், ‘தம்பி, நீ காட்டிற்குள் இருந்த போது அண்ணன் ராமனைக் கண் போன்று காத்திருந்தவன். அந்நிலையில் என் மேல் நீ கோபப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை, இதற்காக நீ எந்தக் குற்ற உணர்வும் கொள்ள வேண்டியதில்லை’ என்றான்.
இருப்பினும், லட்சுமணனுக்கு அந்தக் குற்ற உணர்வு மறையாமல் இருந்தது. அவன் அரித முனிவரிடம் அந்தக் குற்ற உணர்வில் இருந்து விடுபட வழிகாட்டும்படி வேண்டினான். அவர், அங்கிருந்த விஷ்ணு கோவிலைப் புதுப்பித்து, இறைவனை வேண்டினால், மனக்குறை அனைத்தும் நீங்கும் என்று சொன்னார்.
அதன்படி லட்சுமணன் இக்கோவிலுக்குக் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பிக் கோவிலைப் புதுப்பித்து இறைவனை வழிபட்டுக் குறை நீங்கப் பெற்றார்.
லட்சுமணனின் திருப்பணிக்குப் பிறகு, இங்கு வந்த பக்தர்கள் லட்சுமணனையே மூலவராக வைத்து வழிபடத் தொடங்கினர். அதன் பிறகு, இறைவன் லட்சுமணப்பெருமாள் என அழைக்கப்பட்டார் என்பது இங்கு சொல் வழக்காக இருக்கிறது.
ஆலயம் அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். இக்கோவிலில் தினமும் ஐந்து கால பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
தினமும் மூன்று வேளைகளில், உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு கோவிலை வலம் வரும் ‘சீவேலி’ ஊர்வலமும் நடக்கிறது.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோவிலில் இருக்கும் இறைவனுக்கு, திருவோண பூஜை செய்து வழிபட்டால் விரைவில் குழந்தைப்பேற்றை அடைய முடியும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.
திருவோண பூஜை வழிபாட்டிற்கு, இந்த ஆலயத்தில் ஒரு ஆண்டுக்கு முன்பே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்கின்றனர்.
இக்கோவில் இறைவனுக்குச் சந்தனக்காப்பு செய்து வழிபடுபவர்களுக்கு நல்வாழ்வும், வளமும் கிடைக்கும்.

விழாக்கள் :
இத்தலத்தில் மலையாள நாட்காட்டியில் மேட மாதம் (சித்திரை மாதம்) திருவோண நட்சத்திர நாளில் ஆறாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெறும். திருவோண நட்சத்திர நாளுக்குப் பத்து நாட்கள் முன்பாகவே, கோவிலில் கொடியேற்றம் நடைபெற்று விழா தொடங்கி விடுகிறது. சித்திரை மாதம் மட்டுமின்றி, அனைத்து மாதங்களிலும் திருவோணம் நட்சத்திர நாளில் சிறப்புப் பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
கேரளாவில் ஆடி மாதம் முழுவதையும் ராமாயண மாதம் என்று சொல்கிறார்கள். இந்த மாதம் முழுவதும் நாள்தோறும் இறைவனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இம்மாதத்தில் இக்கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகத் திருமூழிக்குளம் லட்சுமணப் பெருமாள் கோவில் இருக் கிறது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் மங்களாசனம் செய்த பாசுரங்களில், 14 பாசுரங்கள் இக்கோவில் இறைவனைப் பற்றி சொல்கின்றன. பரதன் மற்றும் லட்சுமணன் இணைந்து வழிபட்ட திருத்தலம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக இந்த ஆலயம் திகழ்கிறது.
லட்சுமணப் பெருமாள் :
திப்பு சுல்தான் படையெடுப்பின் போது, திரு மூழிக்குளம் லட்சுமணர் கோவில் மூலவர் சிலையின் இருகரங்களும் சேதமடைந்து போய்விட்டன, காலிலும் சிறு விரிசல் ஏற்பட்டு விட்டது.
அந்தச் சேதங்களை மறைப்பதற்காகச் சிலைக்கு வெள்ளியில் ஒரு கவசம் செய்து அணிவித்தனர்.
வெள்ளிக்கவசம் அணிவித்த நாளிலேயே காணாமல் போய்விட்டது. அதன் பின்னர், சிலையின் பாதுகாப்புக்கு என்ன செய்யலாம்? என்று தேவ பிரசன்னம் யோசித்த போது, மூலவருக்குக் கவசம் எதுவும் அணிவிக்க வேண்டாமென்று வந்ததால், அப்படியே விட்டுவிட்டனர்.
பெயர்க்காரணம் :
அரித மகரிசி என்பவர், திருமாலை நினைத்துத் தவமிருந்து வந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த விஷ்ணு அவருக்குக் காட்சியளித்தார்.
அரித மகரிசி அவரிடம், ‘மனிதராகப் பிறந்தவர்கள் இறைவனை அடைவதற்கு, வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைச் சொல்லுங்கள்’ என்று வேண்டினார்.
இறைவன் அவருக்கு ‘ஸ்ரீ ஸுக்தியை’ என்ற திருமொழியைச் சொல்லியருளினார்.
இறைவன் திருமொழியைச் சொல்லிய இடம் என்பதைக் குறிக்கும் விதமாக, இவ்விடத்திற்குத் திருமொழிக்களம் என்கிற பெயர் வழங்கலாயிற்று.
நாளடைவில் இப்பெயர் திருமூழிக் களம், திருமூழிக்குளம் என்று மாற்றமடைந்து விட்டது.
அமைவிடம் :
லட்சுமணப்பெருமாள் கோவில் அமைந்திருக்கும் திருமூழிக்குளம், எர்ணாகுளத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், கோட்டயத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்கு மேற்கண்ட மூன்று ஊர்களில் இருந்தும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கரூர் மாவட்டம் பெரியதிருமங்கலம் என்ற இடத்தில் உள்ள அருங்கரை அம்மன் திருக்கோவிலல் பெண்களுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கரூர் மாவட்டம் பெரியதிருமங்கலம் என்ற இடத்தில் உள்ளது அருங்கரை அம்மன் திருக்கோவில். ஆலயத்தின் அருகில் ஓடும் அமராவதி ஆறு, அம்பாளுக்கு மாலையிட்டதுபோல் இந்த இடத்தில் திரும்பிச் செல்கிறது. தொடக்கத்தில் ‘நல்லதாய்’ என்று அழைக்கப்பட்ட அம்மன், ஆற்றங்கரையின் அருகே அமர்ந்த அம்பாள் என்பதால், ‘அருங்கரை அம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள். காலப்போக்கில் இந்த பெயரே நிலைத்து விட்டது.
பெட்டிக்குள் அம்மன் :
முன்காலத்தில் மீன் பிடிப்பதை தொழிலாக கொண்டவர்கள் இந்தப் பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் அமராவதி ஆற்றில் மீன்பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சமயம் மீனவர் ஒருவர் ஆற்றில் வீசிய வலையில் ஒரு பெட்டி சிக்கியது. அதை திறந்து பார்த்தபோது, அதற்குள் ஒரு அம்மன் சிலை இருந்தது. தனக்கு அருள்புரிவதற்காகவே அம்பாள் ஆற்றில் வந்ததாக கருதிய அந்த மீனவர், ஆற்றங்கரையில் இருந்த ஒரு மரத்தின் அடியில் அந்தப் பெட்டியை வைத்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த அனைவரும் பெட்டியையும், அதில் இருந்த அம்பாளையும் வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மீனவர்கள் அவ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர். ஆகவே பெட்டி இருந்த இடம் மண் மூடி புதைந்து விட்டது. பெட்டி இருந்த இடத்தில் பெரிய மேடு மட்டும் இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சிலர் அங்கு மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்துள்ளனர். ஒரு முறை நல்லதாய் என்ற சிறுமி மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு பசு, மணல் மேடாக இருந்த இடத்தில் தானாக பாலை சுரந்தது. இதைக் கண்டு வியப்புற்ற அந்த சிறுமி, மணல் மேட்டின் மீது அமர்ந்தாள். அதன் பின் அச்சிறுமி எழவில்லை.
ஜோதியாக மறைந்த சிறுமி :
மாலையில் மாடுகள் மட்டும் வீடு திரும்பின. சிறுமியைக் காணாததால் ஊரில் இருந்த ஆண்கள், அவளைத் தேடி குறிப்பிட்ட இடத்திற்கு வந்தனர். அங்கு மணல் மேட்டில் சிறுமி அமர்ந்திருப்பதைக் கண்டு, அவளை வீட்டிற்கு வரும்படி அழைத்தனர். ஆனால் சிறுமியோ, ‘நான் இங்கேதான் இருக்க விரும்புகிறேன். பல ஆண்டு களாக நான் இங்குதான் வசித்து வருகிறேன்.
என்னைக் கண்ட இந்த நாளில் மட்டும் எனக்கு பூஜை செய்து வழிபடுங்கள்’ என்று சொல்லி விட்டு, சிறுமி ஜோதியாக மாறி மறைந்து விட்டாள். பின்னர் ஊர் மக்கள் சிறுமியை அம்பாளாக எண்ணி, உருவம் ஏதும் இல்லாமல் வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் இங்கு கோவில் எழுப்பப்பட்டது. ஆலயத்தில் கருவறை, விமானம், கோபுரம் என்று எதுவுமே கிடையாது.
பெட்டி இருக்கும் இடத்தையே அம்பாளாக கருதி வழிபடுகின்றனர். நாட்ராயர், லாடமுனி, மதுரைவீரன், கருப்பசாமி, மகாமுனி என்ற காவல் தெய்வங்கள், ராகு– கேதுவுடன் விநாயகர் ஆகியோர் உள்ளனர். விநாயகருக்கும், காவல் தெய்வங்களுக்கும் அபிஷேகம் கிடையாது. கோவில் முன்புறத்தில் உள்ள பலிபீடத்தை ஆமை தாங்கியிருப்பதுபோல் அமைத்துள்ளனர்.
குடும்பம் சிறக்கவும், விவசாயம் செழிக்கவும் அம்பாளிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள், கோரிக்கை நிறைவேறியதும், அம்பாளுக்கும் காவல் தெய்வங்களுக்கும் கிடா வெட்டியும், குதிரை பொம்மைகள் செய்து வைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அம்மனுக்கு சிலை எதுவும் கிடையாது. மணல் மேட்டையே வழிபடுகிறார்கள். மணல் மேட்டில் சிறுமி அமர்ந்திருப்பது போன்ற சுதை சிற்பம் கோவிலில் வடிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு அனுமதியில்லை :
மாடு மேய்க்கச் சென்ற சிறுமி திரும்பி வராததால், அவளைத் தேடி ஆண்கள் இந்தப் பகுதிக்கு வந்தது ஒரு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேளை ஆகும். எனவே இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோவில் நடை திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடைபெறுகிறது. மற்ற நாட்களில் கோவில் இரவும், பகலும் அடைக்கப்பட்டே இருக்கும். மேலும் இந்த ஆலயத்திற்குள் ஆண்கள் மட்டுமே சென்று வழிபாடு செய்கின்றனர். பெண்களுக்கு உள்ளே செல்ல அனுமதியில்லை. அவர்கள் வாசலில் நின்றுதான் வழிபட வேண்டும். பெண் குழந்தைகள் கூட கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது.
ஆலயத்தின் வெளியில் நின்று வணங்கும் பெண்கள், அமராவதி ஆற்றில் குளித்து விட்டு, தலையை முடியாமல் ஈரத்துணியுடன் வழிபட வேண்டும். அம்பாளுக்கு பூஜை முடிந்ததும், இறைவிக்கு படைக்கப்பட்ட பூஜைப் பொருட்கள் மற்றும் நேர்த்திக் கடனாக செலுத்தும் வாழை, தானியங்கள் போன்றவை கோவில் முன் மண்டபத்தில் இருந்து சூறை (எறிதல்) விடப்படும். இந்த பிரசாதங்களை பெண்கள் தங்களது சேலைத் தலைப்பில் பிடித்துக் கொள்கின்றனர். அம்பாள் பிரசாத பொருட்களின் வடிவில் பெண்களுக்கு அருள்வதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஆலயத்தின் தல விருட்சமாக ‘ஊஞ்சல் மரம்’ உள்ளது. ஆலயத் தீர்த்தம் அமராவதி நதி. இங்குள்ள பிரார்த்தனை ஊஞ்சல் பிரசித்தி பெற்றதாக உள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், துன்பத்தில் தவிப்பவர்கள் இந்த ஊஞ்சலில் அமர்ந்து சிறிது நேரம் ஆடியபடி அம்மனை நினைத்து வேண்டிக்கொண்டால், அவர்களது கோரிக்கை உடனடியாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருவிழா :
சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் விழா நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை ‘பேரூட்ட விழா’ என்று அழைத்துள்ளனர். இந்த விழாவின் போது மட்டும் அம்பாள் சிலை இருக்கும் பெட்டியை கிராமம் முழுவதும் உலாவாக எடுத்துச் செல்வார்களாம். அம்பாள் உத்தரவு கிடைக்காத காரணத்தால் கடந்த சில நூற்றாண்டுகளாக இந்த ஆலயத்தில் திருவிழா நடத்தப்படவில்லை என்று கூறுகிறார்கள். இது தவிர்த்து தை மாதத்தில் அருங்கரை அம்மன் ஆலயத்தின் அருகில் உள்ள நாட்ராயர் கோவிலில் இருந்து அம்பாளுக்கு பொங்கல் சீர்வரிசை கொடுக்கும் வைபவம் நடக்கிறது.
கரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னதாராபுரம் சென்று, அங்கிருந்து மினி பஸ் மூலம் 10 கிலோமீட்டர் சென்றால் பெரியதிருமங்கலத்தை அடையலாம்.

மதங்களைக் கடந்து மனித நேயத்தை வளர்க்கும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஹம் ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் ஆகும்.
ஐரோப்பா கண்டத்திலேயே பெரிய ஆலயம், கலை, கலாசாரம் கற்பிக்கும் கோவில், ஜெர்மனி அரசால் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற ஆலயம், மதங்களைக் கடந்து மனித நேயத்தை வளர்க்கும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஹம் ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் ஆகும்.
வெளிநாட்டு ஆலயங்கள் :
பல்லவர் காலந்தொட்டு, இந்து சமய ஆலயங்கள் இந்தியாவையும் கடந்து, இலங்கை, மலேசியா, ஜாவா, சுமத்திரா, கம்போடியா என பல்வேறு நாடுகளிலும் எழுப்பப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜெர்மனி நாட்டில் ஹம் நகரின் எல்லைக்குள் உன்ட்ராப் என்ற ஊரில் அமைந்துள்ளது ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம். இவ்வாலயத்தின் சிறப்புகளையும், வரலாற்றினையும் காண்போம்.
ஆலய வரலாறு :
இந்த ஆலயத்தை நேரில் தரிசிக்கும்போது, ஜெர்மனி நாட்டு ஆலயம் என்ற நினைப்பு மறந்து, தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஆலயத்திற்கு வந்துள்ள உணர்வே தோன்றுகிறது. இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. பாஸ்கரன் இலங்கை போர்ச்சூழல் காரணமாக 1985-ம் ஆண்டு பிரான்சு நாட்டிற்குப் பயணம் செய்தபோது, நண்பரின் வேண்டு கோளின்படி, ஜெர்மனி நாட்டில் தங்க நேர்ந்தது. அவர் தங்கியிருந்த இடம் வெளிநாடு என்றாலும், தன் காமாட்சி வழிபாட்டினை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.
அப்பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதிலுள்ள அறையையே கோவிலாக்கினார். அங்கே விநாயகர், முருகன், லட்சுமி முதலிய படங்களை வைத்து பூஜை செய்து வந்தார். இதையறிந்த அப்பகுதிவாழ் தமிழர்களும் அங்கு வந்து வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
1989-ம் ஆண்டு மற்றொரு இடத்தில் படங்களை வைத்து வழிபட்ட போது, அங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதனால் பாஸ்கரனுக்கு, அவ்வூரில் தனி ஆலயம் அமைக்க ஆவல் எழுந்தது. அமைதியை விரும்பும் நாடான ஜெர்மனியில் இங்கு நடைபெறும் பூஜைகளின் ஓசைகள் இடையூறாக இருந்ததால், அப்பகுதி மக்கள் ஜெர்மனி அரசிடம் புகார் செய்தனர்.
இதனால் அரசு அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை செய்து ஆலயத்தை மூடலாமா? என்று வினவினர். பின்னர் அதிகாரிகளே, மனமுவந்து ஹம் நகரின் எல்லைக்குள் 10 கி.மீ. தொலைவில் உள்ள உன்ட்ராப் கிராமத்தில் கோவில் அமைக்க இடம் ஒதுக்கித் தந்தனர். அடியார்களின் பொருளுதவியோடு அவ் விடத்தை விலைக்கு வாங்கிய பாஸ்கரன், அங்கேயே ஆலயம் எழுப்பத் தொடங்கினார். பல அடியவர்களின் உதவியின் காரணமாக ஆலயம் கம்பீரமாக எழுப்பப்பட்டது.
காமாட்சி அம்மன்:
தொடக்கத்தில் படங்களை வைத்து வழிபட்டு வந்த நிலையில், ஜெர்மனியில் வசித்து வரும் பரம் வசந்தி என்பவரிடமிருந்து காமாட்சி சிலை ஒன்று கிடைக்கப்பெற்றது. அதை வைத்து வழிபாடு செய்யப்பட்டு வந்தது. இதன்பின், ஆலயம் எழுப்பும் கட்டத்தில், இந்தியாவிலிருந்து சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு, ஜெர்மனி வந்து சேர்ந்தன. திருப்பணி வேலை காரணமாக, இந்தியாவில் மாமல்லபுரத்திற்கு சுவாமிகள் வருகை தந்தபோது ஒரு சிற்பக் கூடத்திற்கு வந்தார். அப்போது, அங்கிருந்த காமாட்சி அம்மன் சிலையைக் கண்டார்.
அச்சிலை ஜெர்மனி செல்வதற்காக செய்தது என்று அறிந்த போது அன்னையின் திருவருளை நினைத்து மெய்சிலிர்த்தார். ஆனால், அச்சிலையை வாங்க அவரிடம் பணமில்லாததால், அரை மனதோடு ஜெர்மனி திரும்பினார். அதன்பின், இறையருளால் இலங்கை நாட்டின் நெடுந்தீவைச் சேர்ந்த தில்லையம்பலம் குடும்பத்தார் உரிய தொகை கொடுத்து அச்சிலையை இந்தியாவிலிருந்து ஜெர்மனிக்கு வரவழைத்தனர். அதுவே இன்று ஜெர்மனியில் ஜெகம் போற்றும் காமாட்சியாக அருளாட்சி செய்துவருகின்றது. இச்சிலை காஞ்சி காமாட்சியின் மறு வடிவமாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஆலய அமைப்பு :
இயற்கை எழில் தவழும் உன்ட்ராப் கிராமத்தில், கிழக்கு முகமாய் பதினைந்து ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திருக்கோவில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்ததும், கொடிமரம், அதனடியில் கொடிமர விநாயகர், இடதுபுறம் விநாயகர் சன்னிதி, சிவன் சன்னிதி, வள்ளி தெய்வானையுடன் முருகன் சன்னிதி, லட்சுமி நாராயணர் சன்னிதி, கோமுகத்தின் எதிரே சண்டிகேஸ்வரி, வசந்தமண்டபம், சோமாஸ்கந்தர், நவக்கிரக சன்னிதி, ஐயப்பன் மற்றும் பைரவர் சன்னிதிகள் ஆகியவை ஒருங்கே அமைந்துள்ளன. இவற்றின் நடுநாயகமாக அன்னை காமாட்சியின் சன்னிதி அமைந்துள்ளது. ஆலயத்தின் மேற்கே மூன்று நிலை கோபுரம் அமைந்துள்ளது. ஆலயத்தின் வெளியே தனி சன்னிதியில் சனிபகவான் அமைந்துள்ளார். ஆலயத்தின் வெளியே ஈசான்ய மூலையில் திருத்தேர் மண்டபம் இருக்கிறது.
இத்திருக்கோவிலுக்குத் தெற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் டால்ட்டென் கெனால் என்ற ஜீவநதி ஓடுகிறது. இந்த நதியில்தான் இவ்வாலயத்தின் தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஆலயத்தின் அருகாமையில் ஜீவநதி ஓடுவதும் இறையருளே என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலப் புத்தாண்டு, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், தமிழ்ப்புத்தாண்டு, சித்திரா பவுர்ணமி, திருவாதிரை, ஜூனில் பிரமோற்சவம், தேரோட்டம், நவராத்திரி, தீபாவளி என ஆலய விழாக் களுக்குப் பஞ்சமில்லை. இது தவிர, மாதந்தோறும் தேவி மகாத்மிய ஹோமமும் நடைபெறுகிறது.
ஜெர்மனி நாட்டின் நேரப்படி, காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.
அமைவிடம் :
ஜெர்மனி நாட்டின் மேற்கு மாநிலமான நோட்டைன் வெஸ்ட் பேலியா மாநிலத்தில் உள்ள ஹம் நகரின் எல்லைக்குள் சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைதியான உன்ட்ராப் கிராமத்தில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள பிராங்க்பட் நகரிலிருந்து வடமேற்கே 250 கிலோ மீட்டர் தொலைவிலும், டுசல் டார்ப் நகரத்திலிருந்து கிழக்கே 120 கிலோமீட்டர் தொலைவிலும், ஹம் நகரம் அமைந்துள்ளது. விமானம் நிலையம் அமைந்துள்ள இந்த இரு நகரங்களிலிருந்தும், ரெயில் மூலமாகவும், சாலை வழியாகவும் ஹம் நகருக்கு எளிதில் செல்ல முடியும். அங்கிருந்து இவ்வாலயத்தை எளிதில் அடையலாம்.

திருமண பாக்கியத்தை அள்ளி தரும் தேனீஸ்வரர் திருத்தலம் கோவையை அடுத்த வெள்ளலூர் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது. இதன் வரலாற்றை பார்க்கலாம்.
கல்யாணம்-ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இருமனம் ஒருமனமாக திருமணம் அவசியம். எவ்வளவு அற்புதமான நிகழ்வு இது. உண்மையை ஆழ்ந்து யோசித்தால் இறைவனின் சூட்சமம் இதில் இருக்கிறது. எங்கோ பிறந்த ஆண், எங்கோ பிறந்த பெண். இவர்கள் இருவரும் இல்லறத்தால் இணைந்து ஜனனத்தை உண்டாக்கு கிறார்கள்.
அப்படிப்பட்ட அற்புதமான திருமண வாழ்க்கை, சிலருக்கு வயதைக் கடந்தும் கிடைக்காமல் தள்ளிப்போகலாம். அதனால் ஏக்கம் கொள்பவர்களின் எண்ணிக்கையும் இங்கே அதிகம். ஜாதகம் அல்லது பொருளாதார காரணங்களால் தங்கள் திருமணம் தள்ளிப்போகிறதே என்ற கவலை இருக்கலாம். இப் படிப்பட்டவர்கள் இனி கவலைப்பட வேண்டாம்.
உங்கள் மனக்குறைகளை ஆதிபரம்பொருளாகிய தேனீஸ்வரரிடம் கொட்டுங்கள். தேன் போன்ற இனிமையான இல்லற வாழ்க்கையை அவர் கொடுப்பார். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருமண பாக்கியத்தை அள்ளி தரும் பேராற்றல் அவருக்கு உண்டு. இத்தகைய சிறப்பு பெற்ற தேனீஸ்வரர் திருத்தலம் கோவையை அடுத்த வெள்ளலூர் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது.
நுழைவு கோபுரம் :
பொதுவாக திருக்கோவில்களை அடைந்ததும் நம் கண்கள் கோபுரத்தை தரிசிக்கும். ஆனால் இந்த திருத்தலத்தில் நுழைவு கோபுரம் வித்தியாசமானது. மற்ற கோவில்களில் இருப்பது போன்று பல்வேறு நிலை அடுக்கு கோபுரம் இங்கு இல்லை. துவாரபாலகர்கள் நடனம் ஆடுவது போன்று, இரு பெரிய தூண்களில் காட்சியளிக்கிறார்கள். கோவில் மதில்சுவருடன் சேர்த்து 4 பிரமாண்ட தூண்கள், அதன் மேல் பெரிய ஆவுடையார். அதன் மீது சிவலிங்கம்.
அதை குடை போல் பாதுகாத்து சேவை சாதிப்பதில் ஐந்து தலைநாகத்திற்கு ஒரு மகிழ்ச்சி. சமய சின்னங்கள் பொறிக்கப்பட்ட லிங்கத்தின் மீது நர்த்தனம் ஆடும் நடராஜர். இதற்கு மேல் நான்கு புறமும் கலசங்களுடன் உள்ள சின்ன, சின்ன கோபுரத்திலும் நர்த்தன நடராஜர் வீற்றிருக்கிறார். தூரத்தில் இருந்து கோவிலுக்கு வரும் போதே இதை தரிசிக்கலாம்.
கோவிலின் முகப்பில் தோரணக்கல்லில் 2-ம் நூற்றாண்டை சேர்ந்த பராந்தகசோழன் பற்றி செய்திகள் வட்டெழுத்துக் களால் பொறிக்கப்பட்டு உள்ளது. இது கோவிலின் பழமையை எடுத்துரைக்கும்.
கோவிலுக்குள் நுழைந்தவுடன், வெளியே கல்யாண விநாயகர் சன்னிதி உள்ளது. அவரை தரிசித்து விட்டு நர்த்தன நடராஜர் வீற்றிருக்கும் நுழைவு கோபுரத்தை தரிசிக்கலாம்.
நுழைவு கோபுரத்தின் இடப்புறம் அருட்பெருஞ்ஜோதி உள்ளது. இதற்கு கீழே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அந்த சிவலிங்கத்தின் கீழே பெரிய சுரங்கப்பாதை இருந்ததாக கூறப்படு கிறது. அருட்பெருஞ்ஜோதிக்கு அருகே சூரிய பகவான் தனி சன்னிதியில் எழுந்தருளி உள்ளார்.
சுயம்புமூர்த்தி :
இந்த திருத்தலத்தில் கருவறையில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் தேனீஸ்வரர். இது சுயம்புமூர்த்தி ஆகும். காமதேனு, சூரியன் வழிபட்டு பேறு பெற்ற திருத்தலம் இது. முன்பு சோலைகள் சூழ்ந்த இந்த தலத்தில் தேனீக்கள், தேனை தேனடையில் சேமிக்காமல், சுயம்புலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்ததால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல்நாள் அன்று காலையில் சூரியபகவான் தேனீஸ்வரரை தரிசிக்கிறார். அன்று காலை கருவறை முழுவதும் சூரியவெளிச்சத்தில் இருப்பதை அறியலாம்.
தேனீஸ்வரருக்கு இடதுப்புறத்தில் கிழக்கு நோக்கி அன்னை, சிவகாமி சுந்தரி என்ற திருநாமத்தில் எழுந்தருளி உள்ளார். தனது வலது திருக்கரத்தில் தாமரை பூவும், அபய கஸ்தமாக காட்சியளிக்கிறார். அருகே சங்கரநாராயணர் எழுந்தருளி உள்ளார். அவரை தரிசித்து விட்டு வெளியே பிரகாரத்தில் வரும் போது தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். மேலும் கோவிலில் பாலமுருகன், சண்டிகேஸ்வரர், துர்க்கையம்மன், கால பைரவர், சந்திரன், நவக்கிரக நாயகர்களை தரிசிக்கலாம்.

சிவகாமி சுந்தரி, மூலவர் தேனீஸ்வரர்
திருமண வரம் :
இந்த தலத்துக்கு திருமண பாக்கியம் வேண்டி வரும் பெண்கள், மூலவர் தேனீஸ்வரருக்கு மாலை வாங்கி பூஜிக்க வேண்டும். அப்போது உடன் அவரது ஜாதக நகலையும் கொண்டு வர வேண்டும். மாலையை சிவனுக்கு அணிவித்தும், ஜாதக நகலையும் அவரது திருபாதத்தில் வைத்து சிவாச்சாரியார் பூஜை நடத்தி பின்னர், சிவனுக்கு அணிவிக்கப்பட்ட மாலையை, அந்த பெண்ணுக்கு அணிவிக்கின்றனர். திருமண வரம் கேட்டு வந்த பெண், பின்னர் அன்னை சிவகாமி சுந்தரியை தரிசித்து விட்டு கோவிலை வலம் வந்து அந்த மாலையுடன் வீடு திரும்புகிறார்.
வீட்டில் சாமியிடம் இருந்து தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை அங்குள்ள பூஜை அறையில் பத்திரப்படுத்துகிறார். பின்னர் திருமணம் முடிந்த பிறகு அந்த மாலையை தனது வருங்கால கணவருடன் கோவிலுக்கு வந்து சாமிக்கு திரும்ப ஒப்படைத்து வேண்டுதல் நிறைவேறியதற்கு பூஜை செய்து நன்றி தெரிவித்து வழிபடுகின்றனர்.
இதே போல் திருமணம் வேண்டி வரும் ஆண்களுக்கு அன்னை சிவகாமி சுந்தரி கழுத்தில் கிடந்த மாலை அணிவிக்கப்படு கிறது. சுவாமியும், அம்பாளும் தாங்கள் அணிவித்த மாலையை பெற்று கொண்ட பக்தர் களுக்கு திருமண காரியத்தை விரைந்து நடக்க ஒருவருக்கொருவர் உத்தரவிடுவதாக ஐதீகம். இந்த பிரார்த்தனை விரைந்து கைக்கூடுவதாக இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தலத்தில் 5 இலைகள் கொண்ட மந்தாரை மரத்தில் பூக்கும் இளஞ்சிவப்பு நிற பூக்களை தேனீஸ்வரருக்கு படைத்து ராகு- கேது தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம்.
வரலாற்று தொன்மை :
இந்த திருத்தலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வந்து திருப்பணிகள் செய்து இருக்கிறார்கள். எப்போது கோவில் தோன்றியது அது பற்றிய தகவல்கள் இல்லை. இங்குள்ள விநாயகர் சிலை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பராந்தகசோழன் கல்வெட்டு கிடைக்க பெற்று இருப்பதும், கோவிலின் தொன்மையை காட்டுகிறது.
கடந்த 1310-ம் ஆண்டு மாலிக்கப்பூர் படையெடுப்பின் போது கோவிலில் உள்ள சில விக்கிரகங்கள் சூறையாடப்பட்டதாக என்ற வரலாற்று செய்தியும் கூறுகின்றன. கரிகாலச் சோழனும் இந்த தலத்தில் திருப்பணிகளை செய்திருக்கிறார். 3-ம் கரிகால சோழன் காலத்தில் சிங்கத்தம்மன் என்பவர் கோவிலில் தீப வழிபாட்டுக்காக 20 களஞ்சி பொன் தானமாக வழங்கியதாகவும் வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கோவிலில் தல விருட்சமாக வன்னி மரம் விளங்குகிறது. இதுவும் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர். உப தல விருட்சமாக மந்தார மரம் உள்ளது. எப்படி காக்கும் கடவுள் விஷ்ணு, படைக்கும் கடவுள் பிரம்மா கண்டறிய முடியாத அடிமுடியாய் காட்சியளித்தாரே பரபிரம்மா சிவன். அது போல் தான் இந்த திருத்தலத்தின் தோற்றமும் உணர முடியாத நிலை உள்ளது.
விழாக்கள் :
இந்த கோவிலில் பிரதோஷம், சங்கடஹரசதுர்த்தி, ஐப்பசி பவுர்ணமி, கார்த்திகை மாத சோமவார நாட்கள், பங்குனி உத்திரம், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, பைரவாஷ்டமி, கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
கோவை காந்திபுரம், உக்கடத்தில் இருந்து வெள்ள லூர் செல்வதற்கு டவுன் பஸ்கள் இருக்கிறது. சிங்கா நல்லூரில் இருந்தும் வெள்ளலூர் செல்ல பஸ் வசதி உள்ளது.

இந்த கோவில் மூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாது என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பம்சம்.
கோவில் வரலாறு :
நிவா நதியின் கரையில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு முகப்பு வாயில் மற்றும் முன் மண்டபம், அதையடுத்து தெற்கு நோக்கிய 4 நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு "நீ, வா" என்றழைக்க, இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் இப்பெயர் பெற்றது. "நீ, வா" நதி நாளடைவில் நிவா நதியாயிற்று என்கின்றனர். இன்று பொன்னை ஆறு என்ற பெயரும் கொண்டுள்ளது. இந்நதியிலிருந்துதான் பண்டைநாளில் சுவாமிக்குத் தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.
இராஜகோபுரம் வாயில் வழியே உள்ள நுழைந்தால் வலமுபுறம் நீராழி மண்டபத்துடன் உள்ள கெளரி தீர்த்தம் இருக்கிறது. உள் கோபுரம் மூன்று நிலைகளையுடையது. இக்கோபுரம் கல் மண்டபத்தின் மீது கட்டப்பட்டதாகும். உள் நுழைந்து பிராகாரத்தில் வலமாக வரும்போது உற்சவர் மண்டபம் உள்ளது. பக்கத்தில் காசிவிசுவநாதர் சந்நிதியும், அடுத்து சந்திரமௌலீஸ்வரர் சந்நிதியும் உள்ளன. இவ்விரு சந்நிதிகளும், சந்நிதிகளிலும் உள்ள சிவலிங்கத் திருமேனிகள் மிகச் சிறியன. அடுத்துள்ள அருணாசலேஸ்வரர் சந்நிதியிலுள்ள சிவலிங்க திருமேனி சற்றுப் பெரியது.
இதற்குப் பக்கத்தில் சதாசிவர், அனந்தர், ஸ்ரீகண்டர், அம்பிகேஸ்வரர் என்னும் பெயர்களில் சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதனை அடுத்து சஹஸ்ரலிங்கம் உள்ளது. ஆறுமுகர் சந்நிதியில் இருபுறமும் வள்ளி தெய்வயானையும், நாகப்பிரதிஷ்டையும், மூலையில் அருணகிரிநாதர் உருவமும் உள்ளன. இதன் பக்கத்தில் குருஈஸ்வரர், விஷ்ணுஈஸ்வரர், விதாதா ஈஸ்வரர் என்னும் பெயர்களைக் கொண்ட சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. இதற்கு எதிர்புறம் கிழக்கு நோக்கிய ஆதிவில்வநாதேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. இச்சந்நிதிக்கு எதிரே நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்றுள்ளது.
வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தி மேற்கு நோக்கி சுவாமியைப் பார்க்காமல் கிழக்கு நோக்கி உள்ளது. இதற்குப் பின்னால் நின்ற நிலையில் அதிகார நந்தி சுவாமியைப் பார்த்தபடியுள்ளது. சுவாமி சந்நிதி அர்த்த மண்டபத்தில் உள்ள நந்தியும் கிழக்கு நோக்கியே திரும்பி உள்ளது. இவைகளுக்கு இடையில் திருவலம் மௌனசுவாமிகள் கட்டுவித்த சுதையாலான பெரிய நந்தியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நேரே நின்று மூலவரைத் தரிசிக்க முடியாதவாறு இது மறைக்கின்றது.
மூலவர் சந்நிதி வாயிலில் நுழைந்தவுடன் நேரே கிழக்கு நோக்கி சதுர பீடஆவுடையார் மீது மூலவர் வில்வ நாதேஸ்வரர் சுயம்பு சிவலிங்கத் திருமேனியாக்க் காட்சி தருகிறார். உள்சுற்று வலம் வரும்போது மூலையில் "பிராமி" உருவச்சிலையுள்ளது. மூலவர் சந்ந்ததிக்குள் நுழைய தெற்கு நோக்கிய பக்கவாயிலும் உள்ளது. கருவறை அகழி அமைப்புடையது.
கருவறைச்சுவரில் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேசுவரர் சந்நிதி, 63 மூவரின் உற்சவ, மூலத்திருமேனிகள் மேலும் கீழுமாக இருவரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன. கருவறை மண்டபத்தில் சங்கரநாராயணர் திருவுருவம் உள்ளது. சுவாமி சந்நிதிக்கு அருகே தொட்டி போன்ற அமைப்பிலான பள்ளத்தில் பாதாளேஸ்வரர் சந்நிதி உள்ளது. இதில் சிவலிங்கம் நந்தி, விநாயகர் மூலத்திருமேனிகள் உள்ளன.
பஞ்சம் நேரின் இப்பெருமானுக்கு ஒரு மண்டலகாலம் அபிஷேகம் செய்யின் மழை பெய்யும் என்று சொல்லப்படுகின்றது. மூலவர் வாயிலில் உள்ள இரு துவாரபாலகர்கள் திருமேனிகள் சிற்பக் கலையழகு வாய்ந்தவை. இவற்றுள் ஒன்று ஒரு கையை மேலுயர்த்தி, நடனபாவ முத்திரையுடன் விளங்குகின்றது. இங்குள்ள மூலவருக்கு நேர் எதிரில் நந்தீஸ்வரருக்கும், சுவாமிக்கும் இடையில் தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியின் சீடர்களில் ஒருவரான சனகரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தால் பூர்வ ஜன்ம சாபங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
மூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அமைப்பு வேறு எங்கும் காண முடியாது என்பது இத்தலத்தின் ஒரு சிறப்பம்சம்.
தெய்வீகத் தன்மை வாய்ந்த நெல்லிக்கனியை இத்தலத்தில் தான் ஒளவையார் பெற்றார். விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து அற்புத மாங்கனியை இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது இத்தலம். தலத்திலுள்ள சனிபகவான் சந்நிதிக்குப் பக்கத்திலுள்ள விநாயகர் சந்நிதியில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில், இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி தருகிறார். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இவ்வூருக்கு திருவலம் என்ற பெயர் வழங்கப்படுகிறது.
அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகப் பெருமான் மீது திருப்புகழ் பாடியுள்ளார். திருப்புகழில் ஒரு பாடல் உள்ளது. மேற்குப் பிராகாரத்தில் சகஸ்ரலிங்கம் அருகில் வள்ளி தெய்வானை உடனாய சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. அம்பிகை சந்நிதியில் அம்பிகைக்கு இருபுறமும் மகாவிஷ்ணு நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் காட்சி தருவது இத்தலத்தில் சிறப்பு. அம்பிகை சந்நிதி முன் பலிபீடம், சிம்மம் உள்ளது.
நந்தியெம்பெருமான் இத்தலத்தில் சுவாமியை நோக்கியிராமல் வெளி நோக்கி இருப்பதற்குரிய காரணத்தை தலபுராணம் விவரிக்கிறது. அடியவர் ஒருவர் இத்தலத்திலிருந்து சுமார் 5 கி.மி. தொலைவலுள்ள கஞ்சனகிரி மலையிலுள்ள திருக்குளத்திலிருந்து இறைவன் அபிஷேகத்திற்கு தினமும் நீர் எடுத்து வருவது வழக்கம்.
கஞ்சன் எனும் அசுரன் அடியவரை நீர் எடுக்கவிடாமல் துன்புறுத்தவே மனம் வருந்திய அவர் இறைவனிடம் முறையிட்டார். சிவபிரான் நந்திதேவரை அனுப்பினார். நந்தியெம்பெருமான் அசுரனை தன் கொம்புகளால் குத்தி எட்டு பாகங்களாக கிழித்து போட்டார். சிவனிடம் சாகா வரம் பெற்றிருந்த அந்த முரடன், நந்தியின் தாக்குதலில் இருந்து தப்பி விட்டான். கஞ்சனகிரியில் அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் இறைவனருளால் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின.
இன்றும் இம்மலையில் குளக்கரையில் எண்ணற்ற சிவலிங்கங்கள் இருப்பதையும் தோண்டினால் கிடைப்பதையும் நேரில் பார்க்கலாம். கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க வில்வநாதேஸ்வரர், தைப்பொங்கல் கழித்த 3ம் நாள், கஞ்சனின் உடலுறுப்புகள் விழுந்த எட்டு இடங்களிலும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்கு எழுந்தருளி, கஞ்சனுக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கஞ்சனால் மீண்டும் இன்னல் வராமல் தடுக்கவே நந்தி சிவனை நோக்கி இராமல், கோயில் வாசலை நோக்கி திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது. இம்மலையில் (காஞ்சனகிரியில்) ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஜோதி ஒன்று பிரகாசமாகத் தோன்றுகிறது. சித்திரை, தை மாதங்களில் இந்த ஜோதி நன்கு தெரியும். இம்மலையின் சிறப்பு அறிந்து மக்கள் தற்போது செல்லத் தொடங்கியுள்ளனர்.
திருஞானசம்பந்தர் பதிகத்தில் திருவல்லம் என்றும், அருணகிரிநாதரின் திருப்புகழில் திருவலம் என்றும் இத்தலம் குறிக்கப்படுகின்றது.
இவ்வாலயம் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
இந்த சிவஸ்தலம் சென்னையில் இருந்து சுமார் 120 கி.மி. தொலைவில் உள்ளது. சென்னை - காட்பாடி ரயில் பாதையில் உள்ள திருவல்லம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் இருக்கிறது. அருகில் உள்ள ஊர் இராணிப்பேட்டை சுமார் 10 கி.மி. தொலைவில் உள்ளது. வாலாஜா, இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய ஊர்களில் இருந்து திருவல்லம் செல்ல பேருந்து வசதிகள் உண்டு. திருவல்லம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் ஆலயம் இருக்கிறது.
அருள்மிகு வில்வ நாதேஸ்வரர் திருக்கோவில்
திருவலம் அஞ்சல்
வழி இராணிப்பேட்டை
காட்பாடி வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN - 632515

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் சிறப்புக்கள் மற்றும் வரலாறு குறித்த தகவல்களைப் பார்ப்போம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் ஆலயம். தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசந்திர மவுலீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் சந்நிதி.
தல வரலாறு:
வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம். எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள்.
சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின்படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம். வக்ர சாந்தி திருத்தலம் என்று இத்தலத்திற்கு பெயர்.
பொதுவாக காளி கோயில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்தியாசமானதாக உள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது. சுடர் விட்ட பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம் வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டுத்திருத்தலங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம், பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலையையே மார்பு கச்சாக இடத் தோளிலிருந்து இறங்கி பருத்த தனங்களூடே வந்து படிந்து கீழே தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது. முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள். இக்கோயிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும்.
பிரார்த்தனை:
மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை பிரார்த்திக்கிறார்கள்.
வக்ர தோசங்கள், ஜாதக கிரக தோசங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர்.
நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
வழிபாடு:
பவுர்ணமி இரவு 12 மணிக்கும் அமாவாசை பகல் 12 மணிக்கும் வக்ரகாளியம்மனுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேசம். வக்ர காளியின் இடது பாகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் உள்ளது.
செல்லும் வழி:
திண்டிவனம் நகரில் இருந்து பேருந்து வசதி உள்ளது. திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் மயிலம் வழியாக பெரும்பாக்கம் என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகைக் கார் மூலம் திருவக்கரை கோயிலை அடையலாம்.