என் மலர்
கோவில்கள்
நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.
அடிமுடி தேடிய தோஷம் நீங்க பிரம்மன் வழிபட்ட தலங்களில் ஒன்று, வழக்கத்திற்கு மாறாக அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்த ஆலயம், நாகதோஷங்கள் நீக்கும் தலம், மணப்பேறும் மகப்பேறும் அருளும் கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் நாகநாதசுவாமி திருக்கோவில்.
தல புராணம் :
அடிமுடி தேடிய தோஷம் நீங்க, பிரம்ம தேவன் வழிபட்ட ஏழு தலங்களில், ஆறாவது தலமாக விளங்குகின்றது இந்த ஆலயம். மன்னன் காலத்தில் ஆம்பூர் வனப்பகுதியில் இறைவன் புற்றினால் மூடி மறைந்த நிலையில் வாழ்ந்து வந்தார். இப்பகுதியை ஆண்ட மன்னனின் அரண்மனை மந்தையைச் சேர்ந்த பசு ஒன்று, நாள்தோறும் இந்தப் புற்றின் மீது நின்று கொண்டு, பால் பொழிவதை வழக்கமாக கொண்டிருந்தது.
இதைக் கண்காணித்த இடையன், மன்னனிடம் நடந்த விவரத்தைச் சொன்னான். உடனே மன்னன் அந்தப் புற்றை இடிக்க ஆணையிட்டான். மன்னனின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் புற்றை இடித்தபோது, நாகம் காத்து வந்த சிவலிங்கத்தின் மீது அடிபட்டு ரத்தம் பீறிட்டது. இதனால் அனைவரும் பயத்தில் கலைந்து ஓடினர்.
அன்று இரவு மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், புற்றில் இருந்தது தானே என்றும், தனக்கு தனி ஆலயம் எழுப்பி, நாகம் காத்த என்னை ‘நாகநாதன்’ என்று அழைக்கும்படியும் கூறி மறைந்தார்.
மன்னனும் அதன்படியே அதே இடத்தில் ஒரு ஆலயம் எழுப்பி, குடமுழுக்கு விழாவை நடத்தி முடித்தான். இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வடுவை, இன்றும் இறைவன் திருமேனியில் காணலாம்.
ஆலய அமைப்பு :
ஆம்பூர் நகரின் மையப்பகுதியில், சுமார் 1½ ஏக்கர் நிலப்பரப்பில், சற்று பள்ளமாக 9 படிகள் கீழிறங்கி செல்லும் விதமாக ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் அமைப்பு பிற்காலச் சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்து.
தென்கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் ஐந்து கலசங்களைத் தாங்கி கம்பீரமாக நிற்கின்றது. ராஜகோபுரம் முழுவதுமே கலை நயமிக்க சுதைச் சிற்பங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகின்றன. பிட்டுக்கு மண் சுமத்தல், அனுமன் சிவலிங்கத்தை ராமருக்குக் கொண்டு வருதல், அஷ்டதிக்குப் பாலகர்கள், கால சம்ஹாரம், திருஞான சம்பந்தரின் அற்புதங்கள் முதலான புராண வரலாறுகள் சுதைச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
ராஜகோபுர நுழைவுவாசலில் வல்லப கணபதியின் புடைப்புச் சிற்பமும், அவரின் வாகனமும் காட்சி தருகின்றன. கோபுர வாசலைக் கடந்ததும், அக்னி மூலையில் உள்ள குருவின் பார்வை நம் மீது படுகிறது. எதிரே கொடிமரம், பலிபீடம், நந்தி, காட்சி தர, மேல் மண்டப விளம்பில் எம்பெருமானின் திருமணக் கோலமும், தெய்வ வடிவங்களும் சுதைச் சிற்பங்களாக அழகுற காட்சி தருகின்றன. நந்திதேவர் நவ துவாரக் கல் ஜன்னல் வழியே நாகநாதசுவாமியை தரிசிக்கின்றார்.
தெற்குப் பிரகாரத்தில் மார்க்கபந்தீசுவரர் சன்னிதி கிழக்கு முகமாய் அமைந்துள்ளது. அன்னை மரகதாம்பிகை, விநாயகர், நந்திதேவர் காட்சிதர, அக்னி மூலையில் நவக்கிரக சன்னிதி இருக்கிறது. சப்த மாதர் சன்னிதி வடக்கு நோக்கி உள்ளது. தென்மேற்கில் அறுபத்துமூவர் சன்னிதியும், அடுத்ததாக வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னிதியும் அமைந்துள்ளன. அருகே தலமரமான வில்வம் பசுமையாகக் காட்சி தருகிறது.
நாகநாத சுவாமி :
ஆலயத்தில் நடுநாயகமாக நாகநாதசுவாமி வீற்றிருக் கிறார். துவாரபாலகர்கள் காவல் நிற்க, கருவறைச் சுற்றில் விநாயகர், பச்சைக் கல்லினால் ஆன தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, எழிலான துர்க்கை, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சிலா வடிவங்கள் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன. தட்சிணாமூர்த்தியின் பின்புறம் ஆஞ்சநேயர் சிவலிங்கத் திருமேனியை வழி படும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. ஈசான்ய பகுதியில் காளத்தீசுவரர், ஞான பிரசன்னாம்பிகை, பலிபீடம், நந்தி ஆகியவை சிவப்பு கருங்கல் மேனியராக அமர்ந்து திருமண வரம் தருவது குறிப்பிடத்தக்கது.
இறைவன் நாகநாதசுவாமி சதுர வடிவ ஆவுடையாரில் சுயம்பு மூர்த்தியாக எளிய வடிவில், ஒளி வீசும் தோற்றத்துடன் அருள்காட்சி வழங்குகின்றார். இவரைக் கண்டறிய புற்றை அகற்றியபோது ஏற்பட்ட வடுவை, இன்றும் இவரின் திருமேனியின் பின்பகுதியில் கண்டு மெய் சிலிர்க்கலாம்.
வடமேற்குப் பிரகாரத்தில் அன்னை சமயவல்லி சன்னிதி அமைந்துள்ளது. இதற்குள் சுக்ர வார அம்மன், பள்ளியறை அமைந்திருக்க, அன்னையை தரிசித்தபடி சிம்ம வாகனம் காணப்படுகிறது. அன்னை சமயவல்லி எளியவளாக கலைநயம் கொண்டு, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரையோடு, மேல் இரு கரங்களில் பாச அங்குசம் தாங்கி, கிழக்கு முகமாய்க் காட்சி தருகிறாள். அன்னை, சுவாமியின் உயரத்தை விட, ஒரு படி மேலாக காட்சியளிப்பது, வழக்கத்திற்கு மாறான அமைப்பாக உள்ளது.

கன்னி மூலையில் நவக்கிரகங்கள் :
பொதுவாக, நவக்கிரக சன்னிதி வடகிழக்குப் பகுதியான ஈசான்ய மூலையில் அமைந்திருப்பது இயல்பான ஒன்று. ஆனால் இங்கு தென்கிழக்குப் பகுதியான கன்னி மூலையில் நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. இதன் மூலம் ராஜகோபுரத்தை கடந்து ஆலயத்திற்குள் நுழையும் போதே குருவின் பார்வை கிடைப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, சனி பகவானின் இடதுபுறம் காக வாகனம் இருப்பது தனிச் சிறப்பாகும். இவ்வாலயத்தில், இரண்டு பைரவர்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சம்.
இவ்வாலயம் நாக தோஷங்கள் அனைத்திற்கும், ஏற்ற தலமாக அமைந்துள்ளது. இது தவிர திருமணப்பேறு, குழந்தைப்பேறு இவற்றிற்கு உகந்த தலமாகவும் இது அமைந்துள்ளது. திங்கட்கிழமைகளில் உண்ணா நோன்பிருந்து வழிபடுவது குழந்தைப்பேறு தரும். குடும்ப பிரச்சினைகள், நோய்கள் தீரவும், சிறந்த வேண்டுதல் தலமாக இது திகழ்கின்றது.
விழாக்கள் :
இந்தக் கோவிலில் பங்குனி கிருத்திகையில் தொடங்கி பங்குனி உத்திரம் வரை பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இது தவிர, தமிழ்ப்புத்தாண்டு லட்ச தீபம், சித்திராப் பவுர்ணமி, சித்திரை விஷு, கிருத்திகை, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், கார்த்திகை கடைசி சோமவாரம் சங்காபிஷேகம், மார்கழி ஆருத்ரா, தைப் பொங்கல், கிருத்திகை, மகா சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட அனைத்து சிவாலய வழிபாடுகளும், கிருஷ்ணன், ஐயப்பனுக்கும் விழாக்கள் விமரிசையாக நடத்தப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.
பெயர்க் காரணம் :
இவ்வூர் பல்லவர், சோழர், விஜயநகர மன்னர், ஒய்சாலர் என பல்வேறு மன்னர்கள் காலங்களிலும், முக்கியத்துவம் பெற்ற ஊராக விளங்கியதை, இவ்வூரில் கிடைத்த நான்கு கல்வெட்டுகள் சான்றாக அமைந்துள்ளன.
கி.பி. 1896-ம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையின்படி, இவ்வூரில் மூன்று கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டு கல்வெட்டுகள் ஆம்பூரின் கங்கா ரெட்டிக்காரத் தெருவில் கண்டறியப்பட்டன. அவை இரண்டுமே கி.பி. 895-ம் ஆண்டைச் சார்ந்தவையாகும். இவை நிருபதுங்க வர்ம பல்லவன் கால, வீரக்கல் எனும் நடுகற்களாகும். இன்றைய ஆம்பூர், பழங்காலத்தில் ‘ஆமையூர்’ என அழைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இவ்வூரில் ஆண்மை மிக்க வீரர்கள் இருந்ததால் இது ‘ஆண்மை ஊர்’ என்பதே பிற்காலத்தில் ‘ஆமையூராக’ மாறி, தற்போது ஆம்பூர் என்று சொல்வழக்கில் உள்ளது.
மூன்றாவது கல்வெட்டு, நாகநாத சுவாமி திருக்கோவில் சுவற்றில் உள்ள கி.பி. 1193-ம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 15-ம் ஆட்சியாண்டு கல்வெட்டாகும். இதில் இக்கோவில் நிர்வாகம் செய்த சித்திரமேழி பெரியநாட்டார் என்ற குழுவினர் இக்கோவிலின் ஸ்ரீபலி எனும் வழிபாடு மேற்கொள்ள அரங்கம் அமைத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. இதில் இறைவன் திருப்பெயர் நாகேசுவரர் என்றும், ஊரின் பெயர் ஆமையூர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அமைவிடம் :
வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரின் மையப்பகுதியில் இத் திருக்கோவில் அமைந்துள்ளது. வேலூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து மேற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் ஆம்பூர் இருக்கிறது. இவ்வூருக்கு ஏராளமான பேருந்து வசதியும், குறிப்பிட்ட நேரத்தில் ரெயில் வசதியும் உண்டு. ரெயில் நிலையத்தில் இருந்தும், பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், சுமார் ஒரு கி.மீ. தொலைவில் மார்க்கெட் அருகே இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

சென்னை வடபழனியில் ஆதி மூலப் பெருமாள் கோவில் தெருவில், பிரதான கிழக்கு வாசல் கொண்டு ஸ்ரீ ஆதி மூலப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
சென்னை வடபழனியில் ஆதி மூலப் பெருமாள் கோவில் தெருவில், பிரதான கிழக்கு வாசல் கொண்டு ஸ்ரீ ஆதி மூலப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வட பழனி முருகன் ஆலயம், இவ்வாலய பின்புற வாசல் பகுதியில் உள்ளது. சுமார் 600 வருடம் கடந்த பழமையான ஆலயம் இது.
பிரதான வாசலைக் கடந்து உள்ளே நுழைகையில், பலி பீடத்தைக் காணலாம். அதைக் கடந்து செல்கையில், பெரிய திருவடியான கருடாழ்வாரை தரிசனம் செய்யலாம். அடுத்துள்ள கருவறை மண்டப தூண்களில் கிருஷ்ணர், அனுமன், திருமால் போன்ற திருவுருவங்கள் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. மூலவர் சன்னிதி நுழைவு வாசலில் வலது மற்றும் இடது புறங்களில் ஜெயன் மற்றும் விஜயன் ஆகியோர் துவார பாலகர்களாக உள்ளனர்.
கருவறையில் மூலவராக ஆதிமூலப் பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராய் சதுர் புஜங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கும் இத்தல இறைவன், இடது கரத்தில் அஹ்வான முத்திரையுடனும், வலது கரத்தில் அபய ஹஸ்தத்துடனும், மற்ற இரு கரங்களில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார். மேலும் ஒரு காலை மடித்து வைத்தபடியும், மற்றொரு காலை தாமரை மலரின் மீது வைத்த படியும் அமர்ந்த கோலத்தில் பேரழகுடன் வீற்றிருக்கிறார். இவர் தேடி வரும் பக்தர்களின் குறைகளை போக்கும் பெருமாளாக, யானையின் துயர் தீர்த்த பெருமாளாக விளங்கு கிறார். உற்சவர் கஜேந்திர வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராய் நான்கு கரங்களுடன் எழுந்தருளியுள்ளார்.
மூலவர் சன்னிதியை விட்டு வெளியே வருகையில், இடதுபுறத்தில் உள்ள சன்னிதியில் வேணுகோபாலன், ஆண்டாள் எழுந்தருளி சேவிக்கும் பக்தர்களுக்கு மன நிம்மதி ஏற்பட செய்கின்றனர். இது தவிர ராமானுஜர் சன்னிதி என்று எழுதப்பட்ட சன்னிதியில் விக்னேஷ்வர், நம்மாழ்வார், கலியன், மணவாள மாமுனிகள் மற்றும் உடையவர் ஆகியோரும் குடிகொண்டுள்ளனர். இந்த சன்னிதிக்கு எதிரில் வரத ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார்.
கருவறையை விட்டு வெளியே வருகையில், வெளிப்பிரகாரத்தில் இடது பக்கத்தில் தனிச்சன்னிதியில் தாயார் சேவை சாதிக்கிறார். தாயாரின் திருநாமம் ஆதிலட்சுமி என்பதாகும். அமர்ந்த கோலத்தில் இரு கரங்களில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடனும், புன்சிரிப்புடனும், சாந்த சொரூபினியாக தாயார் அமர்ந்துள்ளார். அபயம் என வருபவர்களுக்கு உடனே ஆனந்தம் அளிப்பவளாகத் திகழ்கிறார்.
ஆலயத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் கர்ப்பக ஸ்வரூபினி தாயார் நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில், இரு கரங்களில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடனும் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். புன்னகை தவழும் முகத்துடனும், தனது கடைக்கண் பார்வையால் தன்னை நாடி வரும் பக்தர்களின் மனக்குறையை நீக்குபவராகவும் இவர் திகழ்கிறார். கருவுற்ற தாய்மார்களின் கரு காக்கும் தாயாக விளங்கு கிறார். மேலும் சுகப் பிரசவம் வேண்டுவோர் இந்த தாயாரை விடாது வணங்கி சுகப் பிரசவம் அடைகின்றனர். குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம் கிடைக்கப் பெற்றவர்கள், இந்த தாயாருக்கு நேர்த்திக்கடன் செலுத்தி தங்கள் நன்றிக் கடனை சொல்கின்றனர்.
இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் மற்றும் கருவறை விமானம் கட்டப்படவில்லை. கருவறை வெளிச்சுற்று சுவரில் தசாவதாரம், திருவள்ளுர் வீரராகவப் பெருமாள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் ஆகியோரது உருவங்கள் ஓவியமாக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. ஆலய தல விருட்சம் திருவரசு ஆகும். கஜேந்திர மோட்சம் நடைபெற்ற இந்த ஆலயத்தில் பாஞ்சதரத்ரம் என்ற ஆகம முறைப்படி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
வரத ஆஞ்சநேயர் சன்னிதியில் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வடை மாலை சாற்றி வணங்குகின்றனர். உருவத்தில் மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தியில் தன்னிகரில்லாதவராக விளங்குகிறார்.

இவ்வாலயத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், வெள்ளி தோறும் தாயாருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. பெருமாள் சன்னிதியில் ஹஸ்தம் மற்றும் திருவோணத்தில் உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் திருமஞ்சனமும், திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் திருமஞ்சனமும் நடைபெறு கிறது.
குழந்தைகள் படிப்பறிவு, ஞாபக சக்தி, புத்தி கூர்மை, நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்பட வியாழக்கிழமைகளில் ராமானுஜருக்கு ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த ஆலயம், தினமும் காலை 6.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கிறது.
வழக்குகள் முடிவுற.. :
நிரந்தர உத்தியோகம் கிடைக்க, சத்ரு தொல்லை விலக, மரண பயம் நீங்க, சங்கடங்கள் தீர, கடன் பிரச்சினையில் இருந்து விடுபட, தீராத வியாதியில் இருந்து நிவாரணம் பெற, வியாபார அபிவிருத்தியடைய பெருமாள் சன்னிதியில் பிரார்த்தனை செய்து பலடைகின்றனர். இத்தலத்தில் இருக்கும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தீராத வழக்குகளையும் தீர்த்து வைப்பவராக திகழ்கிறார். தம்பதி களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு நீங்கி அன்னியோன்யம் ஏற்பட தாம்பத்ய சேஷங்கள் (சல்லாப நாகங்களை) வணங்கி பலனடைகின்றனர்.
திருமணத்தடை நீங்க..
திருமணமாகாதவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ச்சியாக 16 வாரம் வழிபட வேண்டியது அவசியம். முதல் 3 வாரம் 3 கல்யாண மாலை கொணர்ந்து, 3 மாலையையும் பெருமாளுக்குச் சாத்தி, ஒரு மாலையை பிரசாதமாக பெற்று கழுத்தில் அணிந்து கொண்டு 12 முறை ஆலயத்தை வலம் வர வேண்டும். தாயார் சன்னிதியில் சங்கல்பம் செய்து கொண்டு 12 முறை வலம் வந்து 16 வாரம் விரலி மஞ்சள் கணக்கின்றி மாலையாக தொடுத்து தாயாருக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும். 16-வது வாரம், 3 கல்யாண மாலை தாயாருக்கு சமர்ப்பித்து சங்கல்பம் பூர்த்தி செய்ய வேண்டும். திரு மணம் கை கூடியவுடன் தம்பதி சமேதராய் ஆலயம் வந்து, பெருமாள் தாயாரை வணங்க வேண்டும்.
குழந்தை வரம் கிடைக்க..
ரோகிணி நட்சத்திரத்தன்று காலை விரதமிருந்து, வீட்டிலிருந்து தொட்டில் கண்ணன், புஷ்பம், அவல், வெண்ணெய், பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, இரண்டு செவ்வாழை ஆகியவற்றை ஆலயத்திற்கு கொண்டு வர வேண்டும். தொட்டில் கண்ணனை திருக்கோவில் அர்ச்சகரிடம் சமர்ப்பித்து, கண்ணன் திருவடியில் வைத்து பூஜை செய்து பின் அதை மடியில் வாங்கிக் கொண்டு, அரச மரத்தடியில் உள்ள சந்தான கண்ணனை 27 முறை வலம் வந்து, மனமுருகி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
பிறகு கண்ணனை தொட்டிலில் வைத்துக் கட்டி விட்டு, சந்தான கோபாலனுக்கு பால் பாயசத்தை சமர்ப்பித்து பக்தர்களுக்கு விநியோகித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த பிரார்த்தனையை தொடர்ந்து 12 ரோகிணி நட்சத்திரத்தில் செய்ய வேண்டும்.

சென்னை திருவான்மியூரில் இருக்கிறது திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சென்னை திருவான்மியூரில் இருக்கிறது திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோவில். அகத்திய முனிவருக்கு இந்த உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும், அவைகளை குணமாக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளிய பவித்திரமான திருத்தலம் இது. எனவே தான் இங்கு சுயம்புவாய் அருளும் ஈசனை மருந்தீஸ்வரர் என்கிறோம். இங்கு வழங்கப்படும் ஈசனின் திருநீறு நம் நோய்களை போக்கும் வல்லமை உடையது.
கண்ணபிரான் தன்னுடைய பாவம் நீங்க, இங்கு உள்ள பாவ நாசினி தீர்த்தத்தில் நீராடியுள்ளார். காமதேனு இங்குள்ள மூலவர் ஈசனுக்கு பால் சொரிந்து வழிபட்டு, தனது கொடூர குணம் அகலப் பெற்றது. எனவே வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள், சேட்டை அதிகம் செய்யும் குழந்தைகளை இத்தலம் அழைத்து வந்து, பாவ நாசினி தீர்த்தத்தில் நீராடி 48 நாட்கள் இங்குஉள்ள ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட, குழந்தைகள் நற்குணம் அடைவார்கள்.
தினமும் அதிகாலையில் இங்கு கோ- பூஜை நடக் கிறது. தொடர்ந்து 21 நாட்கள் அதில் தவறாமல் கலந்து கொண்டால் நம் கர்ம வினைகள் அகன்று, வாழ்வில் நலம் பிறக்கும். வால்மீகி முனிவருக்கு ஈசன் இங்கு காட்சி தந்ததால் வான்மீகியூர் ஆகி, வான்மியூர், திருவான்மியூர் ஆனது. காம தேனு ஈசனுக்கு பால் சொரிந்து வழிபட்டதால் இத்தல மருந்தீஸ்வரரை பால் வண்ண நாதர் என்றும் அழைக் கிறார்கள்.கோசாலை அருகில் உள்ள தேவாசிரியர் திருமுறை மண்டபத்தில் தினமும் மாலையில் சைவ சமய சொற்பொழிவுகள் நடக்கிறது.
செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மாலையில் இங்கு ‘அபிராமி அந்தாதி முற்றும் ஓதுதல்’ நடைபெறுகிறது. அபிராமி அந்தாதி முற்றோதலில் கலந்துகொண்டு தொடர்ந்து வீடுகளிலும் அதிகாலை, இரவு நேரங்களில் என தினமும் இருமுறை அபிராமி அந்தாதி பாராயணம் செய்துவர பதினாறு வகை பெரும் பேறுகளும் கிட்டும் என்கிறார்கள்.
மூளை, மனது, எண்ணங்கள், கற்பனைகள், உணர்ச்சிகள் முதலிய நம் செயல் களுக்கு சந்திர பகவானே காரணம். ஆம்! தற்போது ஆட்டிசம், ஹைப்பர் ஆக்ட்டிவ் குழந்தைகளை காண்கிறோம். இதற்கு காரணம் கர்ம வினைகள் தான். ஆனாலும் இந்த விதமான பாதிப்புக்கு ஆளாக்குபவர் சந்திரனே. சந்திரன் சுபகிரகம். நம் சந்தோசம், தானம், தனம் இவைகளுக்கும் சந்திரனே காரணமாவார்.
அத்திரி முனிவரின் புதல்வர் சந்திரன். மிகுந்த அழகன். அத்திரி முனிவர் தன் புதல்வன் சந்திரனை கல்வி கற்க வேண்டி பிரகஸ்பதியிடம் அனுப்பினார். பிரகஸ்பதியும் சந்திரனுக்கு சகல கலைகளையும் போதித்தார். பிரகஸ்பதியின் மனைவி தாரை சந்திரனின் அழகில் மயங்க, கல்வி கற்க வந்த இடத்தில் தன் குருவின் மனைவியான தாரையின் அழகில் சந்திரனும் மயங்க, இருவரும் ஒன்றாயினர்.
இதனால் தாரையின் வயிற்றில் கரு உண்டானது. இப்படி சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்தவர் ‘புதன்’. சகல கலைகள், கல்வி, ஞானம், புத்திரபாக்கியம் இவைகளை அளிக்க கூடியவர் புதன். சந்திரன் தன் குருவின் மனைவி தாரையோடு தொடர்பு கொண்டதால் அவனுக்கு பாவம் உண்டானது. பிரகஸ்பதி சந்திரனை குரு துரோகி என சபிக்க, சந்திரன் தனது கலைகளை இழந்து, ஒளியை இழந்தார்.
அந்த சாபம் நீங்குவதற்கான வழிகளைத் தேடினார் சந்திரன். நாரதர், சந்திரனை திருவான்மியூர் திருத்தலம் சென்று, அங்கு உள்ள காமநாசினி தீர்த்தத்தில் நீராடி, ஈசனை வழிபட பணித்தார். சந்திரன் திருவான்மியூர் வந்து முறைப்படி ஈசனை வழிபாடு செய்து, தாம் இழந்த அனைத்து கலைகளையும், ஒளியையும் மீண்டும் அடைந்தார்.

கலிகாலத்தில் காமத்தால் தவறுகள், கொலைகள் பல நடந்து வருகின்றன. இதனால் இன்று பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு, தீர்வுகளைத் தேடி அலை கிறார்கள். இந்த கொடிய காம பாவங்களுக்கு பரிகாரம் இல்லை. இருந்தாலும் மன ஒருமைப்பாட்டுடன், மனம் திருந்தி இத்தலம் வந்து ஒரு மண்டலம் தொடர்ந்து இங்கு உள்ள காமநாசினி தீர்த்தத்தில் நீராடி, ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து, கருவறை தீபத்தில் தூய பசும் நெய் சேர்த்து வழிபட கர்மவினைகள், காம வினைகளால் வந்த தோஷங்கள் யாவும் அகலும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் கேதாரீஸ்வரர், சுந்தரேஸ்வரர், ராமநாதீஸ்வரர், ஜம்புகேஸ்வரர், உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார், கங்காள நாதர், நால்வர், விநாயகர், சூரியன், அறுபத்து மூவர் சன்னிதிகள், கஜலட்சுமி, வீரவாகு, அருணகிரிநாதர் மற்றும் வள்ளி- தெய்வானை உடனுறை முருகப்பெருமான், நடராஜர் - சிவகாமி அம்மன் சன்னிதிகளும் உள்ளன. இங்கு உள்ள கேதாரீஸ்வரர் வழிபாட்டினை திங்கள், தீபாவளி நாட்களில் செய்தால் பித்ரு சாபங்கள் தீர வழிவகுக்கும். இங்கு உள்ள கேதாரீஸ்வரரை தீபாவளி நாளில் வட மாநிலத்தவர் உட்பட பலரும் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
வெளிப் பிரகாரத்தில் மும்முடி விநாயகர், விஜய விநாயகர், கோசாலை, நாகர் மற்றும் கொடிமரம், தலமரமான வன்னி மரம் முதலியன உள்ளன. இங்கு மருந்தீஸ்வரர் மேற்கு பார்த்த வண்ணமும், திரிபுர சுந்தரி அம்பாள் தெற்கு பார்த்த வண்ணமும் உள்ளனர். அம்பாள் சன்னிதியின் முன்பக்க தூணில் உள்ள சரபேஸ்வரர், நரம்பு சம்பந்தமான நோய்கள், வறுமை, கடன் முதலியவற்றை நீக்கும் வல்லமை கொண்டவர்.
தீய சக்திகள், எதிரிகளால் ஏவப்படும் பில்லி சூனியம், மாந்திரீகம், பேய் பிசாசு போன்றவைகள் நம்முள் புகுந்து நம் செயல்களை மாற்றி விடும். சில நேரங்களில் மனதில் எதிர்மறை எண்ணங்களை உண்டாக்கும். கெட்டவைகளை செய்யத் தூண்டும். வாழ்க்கையிலும், செய்தொழிலிலும் முற்றிலும் நம்மை வளர விடாமல் முடக்கி விடும். சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
எனவே இவற்றை முறியடிக்க சரபேஸ்வரரை வணங்குவதே சிறந்ததாகும். அதுவும் இத்தல அம்பாள் சன்னிதி முன்பு தூணில் உள்ள சரபேஸ்வரர் மிகுந்த சக்தி உள்ளவர். சரபேஸ்வரரின் தூணின் பின்புறம் உக்கிர நரசிம்மர் உள்ளது இன்னும் சிறப்பு. இவருக்கு பானகம் படைத்து தொடர்ந்து வழிபட்டு வரவேண்டுமாம். இங்கு அம்பாள் சன்னிதி கருவறை பிரகார சுற்றில் ஓவியத்தில் அழகுற மிளிரும் திருக்கடையூர் அபிராமி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி.
‘இந்திரனும் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே’. இந்திரனும் சந்திரனும் கெட்டது பெண்களால் தான். ஆனால் பெண்கள் மட்டுமே அதற்கு காரணம் அல்ல. இந்திரனும், சந்திரனும் அவர்களது மனதை கட்டுப்படுத்த முடியாததாலே தவிர பெண்கள் காரணம் அல்ல என்பதே உண்மை.
இத்தல ஈசனின் அப்பரின் பதிகமான, ‘விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்’ என்னும் திருமுறை பதிகத்தை தினமும் இருமுறை தொடர்ந்து பாராயணம் செய்து, வான்மியூர் ஈசனை வழிபட்டு வந்தால், வழி பிறந்து, நம் வாழ்விலும், நம் சந்ததிகள் வாழ்விலும் ஒளி பிறக்கும் என்பது நம்பிக்கை. சரும நோய்கள் அகல தொடர்ந்து பதினோரு பவுர்ணமியில் இங்கு வந்து கருவறை தீபத்தில் பசு நெய் சேர்த்து வழிபட வேண்டும்.
அப்பர், சம்பந்தர், அருணகிரிநாதர் பாடல் கொண்ட திருத்தலம் இதுவாகும். இந்த ஆலயத்தின் அருகில் சற்று தொலைவில், மகான் பாம்பன் சுவாமிகள் அதிஷ்டானம் உள்ளது. அதன் அருகிலே பெண் சித்தர் சர்க்கரை அம்மா அதிஷ்டானமும் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி, வியாழன், திருவாதிரை, சஷ்டி, கிருத்திகை நாட்களில் வந்து வழிபட மகான்களின் பரிபூரண அருளாசி கிடைக்கும்.
பைரவர் வழிபாடு :
இந்த ஆலயத்தில் தியாகராஜருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இத்தல பைரவருக்கு நாய் வாகனம் இல்லை. நூற்றியெட்டு சிவலிங்கம் சூழ இங்கு பைரவர் அருள்பாலிக்கிறார். தேய்பிறை அஷ்டமி தினத்தில் மாலை வேளையில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இத்தல பைரவரை வழிபட உடல் நோய்கள் உடனே குணமடைவதாக கூறுகிறார் கள். இத்தல பலிபீடம் மற்றும் கால பைரவரை அஷ்டமி நாட்களில் நறுமண மலர்கள் சூட்டி, நெய் தீபம் ஏற்றி வழிபட கடன், வறுமை, தரித்திரம் அகலும்.

மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ளது யோக நரசிம்மர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மதுரை அருகே உள்ள யானை மலை ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ளது யோக நரசிம்மர் ஆலயம். மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் மூலவராக யோக நரசிம்மர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தயார் பெயர் நரசிங்கவல்லி என்பதாகும். ஆலய தீர்த்தம் சக்கர தீர்த்தமாகும். இது ஒரு குடவறைக் கோவிலாகும். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களிலேயே, மிகப்பெரிய உருவத்தை கொண்ட ஆலயம் இது என்பது தனிச் சிறப்பாகும்.
தல வரலாறு:
உரோமச முனிவர், தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி, இந்த யானை மலை தலத்திற்கு வந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். மேலும் நரசிம்மரை, அவரது நரசிம்ம அவதார கோலத்திலேயே தரிசிக்கவும் விரும்பினார். இறைவனும் உரோமச முனிவரின் விருப்பப்படியே, உக்கிர நரசிம்மராக தோன்றி காட்சி தந்தார். ஆனால் நரசிம்மரின் உக்கிர கோல வெப்பத்தால் உலகமே தகித்தது. இதனை தாங்கிட முடியாமல், தேவர் களும், முனிவர்களும் பிரகலாதனிடம் சென்று முறையிட்டனர். பிரகலாதனும் இத்தலத்திற்கு வந்தார். ஆனால் நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர, வெப்பம் முற்றிலும் நீங்கவில்லை.
இதையடுத்து அன்னை மகாலட்சுமியிடம் அனைவரும் முறையிட்டனர். மகாலட்சுமியும் இத்தலத்திற்கு வந்தார். அதன்பிறகே நரசிம்மரின் உக்கிரம் முழுமையாக மாறி தணிந்தது. மேலும் அன்னை மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்தபடி, யோக நரசிம்மராக, கேட்டதை வழங்கும் வள்ளலாக இத்தலத்தில் நரசிம்மர் அருள்புரிகிறார்.

இத்தலத்தில் இருக்கும் யோக நரசிம்மர், தன் மார்பினில் மகாலட்சுமியை தாங்கியபடி மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லை. இதற்குக் காரணமாக செவி வழிச் செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. பொதுவாக கொடி மரம் என்பது, கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீளம், அகல அளவைப் பொறுத்ததே. ஆனால் இத்தலத்தில் கருவறைக்கு மேல், யானை மலை மிகவும் உயர்ந்து காணப்படுவதால் கொடி மரம் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
நரசிம்மராக அவதாரம் எடுத்தது, தேய்பிறை சதுர்த்தி காலத்தில் தான். எனவே அந்த நேரத்தில் இந்த யோக நரசிம்மரை வழிபட்டால், கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிரி பயம் விலகும். மரண பயம் அகலும். அதே போல் நரசிங்கவல்லி தாயாரை வணங்கினால் திருமணத் தடை நீங்கும். கோபம் குறைந்து அமைதியான வழியில் செல்ல வழி ஏற் படும் என்பது அனுபவ உண்மையாகும்.
இந்த ஆலயத்தின் அருகே உள்ள தீர்த்தத்தில் மாசி மாத பவுர்ணமி தினத்தன்று கஜேந்திர மோட்ச விழா சிறப்பாக நடத்தப்படுகிறது. திருவண்ணாமலையைப் போலவே இங்கும் ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. இத்தலத்தில் சிவபெருமானுக்கு நடக்கிற பிரதோஷம் போல, நரசிம்மருக்கு பிரதோஷ பூஜை நடப்பது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது யானை மலை ஒத்தக்கடை. இங்கிருந்து மினி பஸ்களில் 2 கிலோமீட்டர் மேற்கே சென்றால் கோவிலை அடையலாம்.

சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் தமிழகத்தில் மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வர். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.
இந்த கோவில் 1,600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான் மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார். இக்கோவிலின் தலவிருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சன்னிதியும் உள்ளது.
கட்டிடக்கலை :
மதுரை மாநகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. பழங்கால தமிழ் நூல்களின் சான்றுகளின் படி இக்கோவில் மதுரையின் மத்தியிலும் கோவிலை சுற்றி உள்ள தெருக்கள் தாமரை இதழ்கள் வடிவிலும் அமைக்கப்பட்டது. இந்த கோவிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் நான்கு கோபுரங்கள் 4 திசைகளை நோக்கி உள்ள நுழைவுவாயில்கள். இந்த 12 கோபுரங்களுள் தெற்கு கோபுரம் மிக உயரமானது. 9 அடுக்குகளை உடைய தெற்கு கோபுரத்தின் உயரம் 52 மீட்டர்.
இங்குள்ள கோபுரங்கள் பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டவை. கடைசியில் தேவக்கோட்டை நகரத்தாரால் பழுது பார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியார் என்பவரால் கி.பி.1570-ல் கட்டபெற்று 1963-ம் ஆண்டு சிவகங்கை அரசர் சண்முகத்தால் புதுப்பிக்கப்பட்டது. சுவாமி கோபுரம் கி.பி.1570-ம் ஆண்டு கட்டப்பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் பழுதுபார்க்கப்பட்டது. மேலும் மூவருக்காக இரண்டு கோபுரங்கள் உள்ளன. அவை இரண்டும் தங்கத்தால் வேயப்பட்டது.
இங்கு பொற்றாமரை குளமும் உள்ளது. இந்த குளத்தில் தங்க தாமரை உள்ளது. முன்னர் சிவபெருமான் ஒரு நாரைக்கு இங்கு கடல்வாழ் உயிரினங்கள் வாழாது என்று வாக்கு அளித்ததால் இந்த குளத்தில் மீன்கள் கூட வாழ்வது இல்லை. மேலும் இந்த குளம் நல்ல நூல்களை தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தது என்றும் நம்புகிறார்கள். நூல்கள், ஓலைச்சுவடிகளை இந்த குளத்தில் போட வேண்டும். அவை நல்ல நூல்கள் என்றால் மிதக்கும். இல்லையென்றால் மூழ்கிவிடும். இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும் நடுவில் நடராஜர் சிலையும் உள்ளது. இதை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் அமைச்சர் அரியநாத முதலியார் கட்டினார்.
சிற்பக்கலை :
ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளை தரும் சிலைகள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. வடக்கு கோபுரத்திற்கு அருகில் 5 இசைத்தூண்கள் உள்ளன. அஷ்ட சக்தி மண்டபத்தில் கலைநயமிக்க எட்டு அம்மன் சிலைகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல் கோவில் கோபுரங்கள், தூண்கள் பலவற்றிலும் பாண்டிய சிற்பிகளின் சிற்பக்கலையை காணமுடியும்.கிழக்கு கோபுரத்திற்கு அருகில் உள்ள புதுமண்டபத்தில் தலவரலாற்றை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுவாமி சன்னதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன.
திருவிழாக்கள் :
இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழா மிக பிரசித்தி பெற்றது. ஆனி மாதம் ஊஞ்சல் உற்சவம், ஆவணி மூலம், நவராத்திரி விழா, கார்த்திகை தீபத் திருவிழா, மார்கழி உற்சவம், தை தெப்பம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. சித்திரை திருவிழா கோவிலின் தலவரலாற்றை எடுத்துரைக்கும் திருவிழாவாகும்.

ஐந்து முகம் கொண்ட முருகனைப் பார்த்திருக்கிறீர்களா! கோவை மாவட்டம் அன்னூர் அருகிலுள்ள இரும்பறை ஓதிமலையாண்டவர் கோயிலில் இவரைக் காணலாம்.
ஐந்து முகம் கொண்ட முருகனைப் பார்த்திருக்கிறீர்களா! கோவை மாவட்டம் அன்னூர் அருகிலுள்ள இரும்பறை ஓதிமலையாண்டவர் கோயிலில் இவரைக் காணலாம். திங்கள், வெள்ளி மட்டுமே இந்தக் கோயில் திறந்திருக்கும்.
தல வரலாறு:
படைப்பின் ஆதாரமான "ஓம்' என்ற பிரணவத்தின் பொருள் பிரம்மாவுக்குத் தெரியாததால், முருகன் அவரை சிறையில் அடைத்து விட்டார். தானே படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். தனது தந்தைக்கும் அந்த பிரணவத்தின் பொருளை ஓதினார். எனவே, இவருக்கு "ஓதிமலையாண்டவர்' என்ற பெயர் ஏற்பட்டது.
விசேஷ முருகன்:
சிவனுக்கு ஐந்துமுகங்கள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் ஆகியவை அவை. இந்த முகங்களின் மூலமே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை செய்கிறார். அதனடிப்படையில், அவரது பிள்ளையான முருகனுக்கும் முதலில் ஐந்து முகங்களே இருந்தது. இதை மனதில் கொண்டு, இங்குள்ள சிலை வடிக்கப்பட்டது.

சிறப்பம்சம்:
ஐந்து முகமும், ஆயுதங்களும் கொண்ட முருகனை "கவுஞ்ச வேதமூர்த்தி' என்று அழைப்பர். முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். ஓதிமலை அடிவாரத்தில் சுயம்பு விநாயகர் உள்ளார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி சந்நிதிகளுக்கு நடுவே முருகன் இருக்கும்படியாக, சோமாஸ்கந்த அமைப்பில் இக்கோயில் உள்ளது. இடும்பன், சப்தகன்னியர் சந்நிதிகளும் உள்ளன. பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் "இரும்பறை' எனப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு உள்ள கல்யாண சுப்பிரமணியரை வழிபடுகிறார்கள். ஓதிமரம் இத்தலத்தின் விருட்சம்.
பூ பிரார்த்தனை:
பக்தர்கள் தாங்கள் எந்த செயலையும் துவங்கும் முன், ஒரு வெள்ளைப் பூவையும், சிவப்பு பூவையும் தனித்தனி இலைகளில் வைத்துக் கட்டி முருகன் முன்னிலையில் வைக்கிறார்கள். அர்ச்சகர் அல்லது குழந்தைகள் மனதில் நினைத்த பூ பொட்டலத்தை எடுத்துத் தந்தால், அந்தச் செயலைத் தொடங்கலாம் என முடிவெடுக்கின்றனர். இந்த சடங்கிற்கு "வரம் கேட்டல்' என்று பெயர். கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறவும், அறியாமல் செய்த தவறால் ஏற்பட்ட பாவம் நீங்கவும் சுவாமிக்கு பாலபிஷேகமும், சந்தனக்காப்பும் செய்கிறார்கள்.
இருப்பிடம்:
கோவை- சத்தியமங்கலம் ரோட்டில் 48 கி.மீ., தூரத்தில் புளியம்பட்டி. அங்கிருந்து பிரியும் சாலையில் 10 கி.மீ., சென்றால் இரும்பறை.
திறக்கும் நாட்கள்:
திங்கள், வெள்ளி, வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, அமாவாசை நாட்களில் காலை 10- மாலை 6 .
போன்:04254- 287 418.

குருபகவானின் அருள்பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும். இந்த கோவிலின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவ கயிலாயங்களில், ஐந்தாவது இடத்தை பெறுவது முறப்பநாடு. இந்த கோவில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது. குருபகவானின் அருள்பெற நாம் வழிபட வேண்டிய திருத்தலம் முறப்பநாடு ஆகும்.
திருநெல்வேலியில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள ஊர் முறப்ப நாடு. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து இறங்கி அங்கிருந்து நடந்து செல்லும் தூரத்தில் நவ கயிலாயத்தின் ‘வியாழ பகவானாய்’ வீற்றிருக்கும் அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த வனப்புடன் பசுமை கொஞ்சும் எழில் கண்ணுக்கு விருந்தாக வாழைத்தோட்டங்களும், வயல்வெளிகளும் நிறைந்த இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.
நவ கயிலாயத்தில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு இந்த ஆலயத்திற்கு உள்ளது. அது என்னவென்றால், சிவபெருமான், குருபகவானாக அமர்ந்து அருள்பாலிக்கும் சிறப்பு இந்த கோவிலுக்கு மட்டுமே உண்டு. புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆறு, காசியில் உள்ள கங்கையைப் போன்று வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்கிறது. இதனால் இந்த இடத்திற்கு ‘தட்சிண கங்கை’ என்று பெயர். இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு சமம் என்று கூறுவார்கள்.
அது மட்டுமல்லாது புராண சிறப்பு பெற்ற தசாவதார தீர்த்தக்கட்டம் இங்கு உள்ளது. அதாவது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் இந்தக் கோவிலில் உள்ளது. இது இந்தியாவிலேயே மிக சிறப்பு மிக்க இடமாகும். பருக்கை கற்கள் நிரம்பிய மேட்டு நிலத்தை ‘முரம்பு’ என்று கூறுவார்கள். முரம்பு உடைய நிலத்தை கொண்டதனால் இந்த ஊர் முறப்பநாடு என்று பெயர் பெற்றதாக பெயர்க்காரணம் கூறப்படுகிறது.
முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபதுமனின் வழியில் வந்த அசுரன் ஒருவன், இந்தப் பகுதியில் வசித்து வந்த முனிவர்களுக்கு கடுமையான தொல்லைகளைக் கொடுத்து வந்தான். அந்த துன்பத்தைப் பொறுக்க முடியாத முனிவர்கள் அனைவரும் கயிலாயத்தில் வசித்து வரும் ஈசனிடம் முறைப்படி முறையிட்டனர். சிவபெருமான், உள்ளம் உருகி முனிவர்களுக்கு அருள்பாலித்தார். ஈசனை முறைப்படி முறையிட்ட காரணத்தால் இத்தலம் ‘முறைப்படு நாடு’ என்று பெயர் பெற்றது. அதுவே பின்னாளில் மருவி ‘முறப்பநாடு’ என்றானது.

தட்சிணாமூர்த்தி
இங்குள்ள கோவிலானது தாமிர பரணி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி கயிலாசநாதராகவும், அம்பாள் சிவகாமியாகவும் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். கோவிலின் தென்கிழக்கில் சூரிய பகவானும், வடக்கு நோக்கி அதிகார நந்தியும் அமைந்துள்ளனர். கோவில் வெளிச்சுற்றில் சுரதேவர் மற்றும் அஷ்டலட்சுமி களும், 63 நாயன்மார்களும் வீற்றிருக்கின்றனர்.
கருவறை சுவர் அருகே பஞ்சலிங்கமும், தென்மேற்கு மூலையில் கன்னி விநாயகரும் உள்ளனர். வடமேற்கில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானையோடு காட்சியளிக்கிறார். பிரகாரத்தில் சனீஸ்வரர், சண்டேஸ்வரர் மற்றும் காலபைரவர் சிலை உள்ளது. கயிலாசநாதர் கருவறையின் மேல் விமானம் உள்ளது. இக்கோவிலானது நான்கு மண்டபங்களை கொண்டு உள்ளது. முதலில் உள்ள பந்தல் மண்டபத்தில் பத்து தூண்கள் உள்ளது. பின்னர் ஊஞ்சல் மண்டபம், மணி மண்டபம் என்ற அமைப்புகளை கொண்டுள்ளது.
சோழ மன்னன் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்தது. குதிரை முகத்தோடு பிறந்த பெண்ணின் நிலையை கண்டு கவலை கொண்டான் மன்னன். தனது மகளுக்கு அமைந்துள்ள குதிரை முகம் மாற வேண்டி பல்வேறு திருக்கோவில்களுக்கு சென்று சிவபெருமானை வணங்கி தவம் இருந்தான்.
சிவபெருமான் அந்த மன்னன் முன்பு தோன்றி, முறப்பநாடு செல். அங்குள்ள தாமிரபரணி நதிக்கரையில் நீராடு என்று ஆசி வழங்கினார். சிவபெருமானின் திருவுளப்படி அந்த மன்னன் தனது மகளோடு இங்கு வந்து தட்சிண கங்கை தீர்த்த கட்டத்தில் நீராடினான். என்ன ஆச்சரியம்! அந்த மன்னனின் மகள் குதிரை முகம் நீங்கி மனித முகம் கொண்டு மிகவும் அழகாக தோன்றினாள். மன்னன் மகளின் குதிரை முகத்தை இந்த கோவிலில் உள்ள நந்தி ஏற்றுக்கொண்டது. மன்னன் மகளின் குதிரை முகத்தை தான் ஏற்றுக்கொண்டதால் இங்குள்ள நந்தி குதிரை முகத்துடன் காட்சியளிப்பதை காணலாம். உடனே மன்னன் மனம் மகிழ்ந்து சிவபெருமானுக்கு கோவில் கட்டியதாக வரலாறு தெரிவிக்கிறது.
பதினோராம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசு சிறப்புற்று இருந்த காலம். அப்போது பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு பின் அச்சுத தேவராயர் ஆட்சியில், ராமராயன் என்ற சிற்றரசர் இருந்து வந்தார். அவருடைய தம்பி விட்டலராயன், தமிழக பிரதிநிதியாக ஆட்சி புரிந்தார். தன்னை எதிர்த்த சிற்றரசர்களை வென்று தெற்கு நோக்கி தனது படைகளுடன் வந்தார். பேரரசருக்கு கப்பம் கட்ட மறுத்த திருவாங்கூர் மகாராஜா மீது படையெடுக்க விட்டலாயப் பேரரசர் முறப்பநாட்டில் முகாமிட்டு இருந்தார். அவர் ஒரு வைணவராக இருந்தாலும் கூட, ஸ்ரீகயிலாசநாதர் கோவிலுக்கு வந்து வழிபட்டார் என கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

கயிலாசநாதர், சிவகாமி அம்பாள்
இத்திருத்தலத்தில் சிவபெருமானே தட்சிணாமூர்த்தியாக, குருவாக, தென்முக கடவுளாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். நவகைலாயங்களில் முறப்பநாடு நடு கைலாயமாகும். இது குரு(வியாழன்) தலமாகும். பிருகண்ட முனிவர் பாதம் பட்ட இடமும், காஞ்சனமாலை மோட்சம் பெற்றதும், மார்க்கண்டேயன் பூஜை செய்ததும் இவ்விடமே ஆகும்.
இங்கு பைரவர் சன்னிதியில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். வழக்கம்போல் நாயுடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும், வாகனம் இன்றி காட்சி தரும் மற்றொரு பைரவர் வீரபைரவர் என்றும் அழைக் கின்றனர். இங்குள்ள கயிலாசநாதர் குரு அம்சமாக இருப்பதால் சுவாமிக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, கொண்டைக்கடலை நைவேத்தியம் செய்யப்படுகிறது.
சிவராத்திரி, குருப்பெயர்ச்சி, திருக்கார்த்திகை, ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற திருவிழாக் கள் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. தினசரி இக்கோவிலில் நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்து இருக்கும்.
இத்தலத்து இறைவனை வழிபட்டால் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள குருபகவானை(சிவபெருமானை) வழிபட்டதற்கு சமம் ஆகும். இங்குள்ள இறைவனையும், அம்பாளையும் வழிபட்டால் திருமண தடை நீங்கும், நல்ல குடும்பம் அமையும், உடல் ஆரோக்கியம் கிட்டும் என்பது பக் தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருநெல்வேலியில் இருந்தும், தூத்துக்குடியில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் அனைத்து பஸ்களும் முறப்பநாட்டில் நின்று செல்லும்.

சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் மகன் (அ) மகள் ஜாதகத்தை பவுர்ணமி அன்று பூஜை செய்தால் திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
5-10-2017 பவுர்ணமி
இறைவனையே தன் கணவனாக நினைத்து வளர்ந்தாள் ஒரு மங்கை. தான் நினைத்தபடியே அவரையே மணந்து கொண்டாள்.
ஆம். இந்த அதிசயம் நடந்த தலம் தான் ஆற்றூர். இங்கு உள்ளது, சொர்ணபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சொர்ணபுரீஸ்வரர். மந்தாரவனேஸ்வரர் என்பது இறைவனின் இன்னொரு பெயர்.
தல வரலாறு :
ஆற்றூரில் வசித்து வந்த ஒரு சிவ பக்தரின் மகளாகப் பிறந்தவள் கயற்கண்ணி. அவள் தன் பெற்றோரால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள்.
அவள் திருமண வயதை எட்டியதும், அவளுக்குத் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர் பெற்றோர். ஆனால், அவளோ ‘மந்தாரவனத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை நான் மனதார நேசிக்கிறேன். அவரைத் தான் மணந்து கொள்வேன்’ என உறுதியாகக் கூறிவிட்டாள். பெற்றவர் களுக்கு அவளின் நிலைமை கண்டு அழுவதா? அல்லது சிரிப்பதா? என்று புரியவில்லை. ‘மானிட பெண் ஒருத்தி, எப்படி இறைவனை மணந்து கொள்ள முடியும்? அது சாத்தியமா?’ என்று மகளை கேட்டதும், அவளின் முடிவை மாற்றிக்கொள்ளும்படி வற்புறுத்தினர்.
ஆனால், கயற்கண்ணியோ தன் முடிவிலிருந்து பின் வாங்குவதாக இல்லை. சிவபெருமானையே சதா சர்வகாலமும் எண்ணி பூஜித்து வந்தாள். அவரின் நினைவிலேயே நாட்களைக் கடத்தினாள்.
கயற்கண்ணியின் மன உறுதியைக் கண்ட சிவபெருமான் மனம் கசிந்தார். அவரின் பார்வை அவளை நோக்கித் திரும்பியது. அவளை மணந்து கொள்ள முடிவு செய்தார்.
ஆற்றூரில் மந்தாரவனத்தில் எழுந்தருளியுள்ள மந்தாரவனேசுவரர் என அழைக்கப்படும் சிவ பெருமான் ஒரு பிரமசாரியின் வேடம் பூண்டு, தேவர்கள் புடைசூழ, தை மாதத்தில் ஒரு வெள்ளியன்று ஆற்றூரில் எழுந்தருளி கயற்கண்ணியை மணந்தார்.
கயற்கண்ணியின் பெற்றோர் தங்கள் மகள் ஒரு தெய்வமகள் என்று உணர்ந்து, மணமக்களை ஆசீர்வாதம் செய்தனர். சிவபெருமான் கயற்கண்ணியுடன் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார். வடக்குப் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள அன்னை அபயாம்பிகை என்ற அஞ்சனாட்சி அம்மனை வணங்கி அருள் பெற்றாள் கயற்கண்ணி. அன்று முதல் அன்னை அஞ்சனாட்சி அம்மைக்குரிய சிறப்புகள் அனைத்தும் கயற்கண்ணி அம்மைக்கும் நடைபெறத் தொடங்கின.
ஆலய அமைப்பு :
தற்போது ஆற்றூர் என அழைக்கப்படும் இத்தலத்தின் பழைய பெயர் ‘மந்தாரவனம்’ என்பதாகும். இங்குள்ள அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே திருக்குளம் உள்ளது. இந்தக் குளம் கயிலாய தீர்த்தம் எனவும், மண்டூக தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது.
கோவிலின் உள்ளே நுழைந்ததும் நந்தியும், பலிபீடமும் காணப்படுகின்றன. அடுத்து உள்ளது மகா மண்டபம். இந்த மண்டபத்தின் வலப்புறம் அன்னை கயற்கண்ணி தென் முகம் நோக்கி அருள்பாலிக்கிறாள். அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவு வாசலில் இரண்டு துவாரபாலகர்கள் கம்பீரமாகக் காவல் காக்கின்றனர். அடுத்துள்ள கருவறையில் இறைவன் சொர்ணபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள் புரிகிறார். தேவக்கோட்டத்தில் தென் திசையில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தியும், மேற்கில் மகாவிஷ்ணுவும் வடக்கில் அஷ்டபுஜ துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.
திருச்சுற்றில் தெற்கில் அன்னை அபயாம்பிகை தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். தவிர, மேற்கில் சொர்ண விநாயகர், நால்வர், வள்ளி, தெய்வானை, முருகன், கஜலட்சுமியும், கிழக்கில் பைரவர், சூரியன், நாகர், சனீஸ்வரன் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.
இங்குள்ள துர்க்கை தனது எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், கபாலம், டமருதம், கெண்டி இவைகளை தாங்கி அபய, வரத முத்திரைகளுடன் அருளாட்சி செய்கிறாள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு அர்ச்சனை செய்து, எலும்பிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் கன்னியருக்கு விரைந்து திருமணம் நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள்.
திருவிழாக்கள் :
இந்த ஆலயத்தில் காலை, உச்சி, சாயரட்சை, அர்த்தசாமம் என நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சோமவாரங்கள், சித்ரா பவுர்ணமி, தமிழ் வருடப் பிறப்பு, ஆனித் திருமஞ்சனம், நவராத்திரி, பிரதோஷம், சோமவாரம், கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிகளுக்கும் சிறப்பான பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. திருவாதிரைத் திருநாளில் நடராஜரும், சிவகாமி அம்மனும் வீதி உலா வருவதுண்டு.
பவுர்ணமி பூஜை :
இங்கு இறைவனுக்கு நடைபெறும் பவுர்ணமி பூஜை மிகவும் சிறப்பானது. அன்று பல பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் ஜாதகத்தை இறைவன் பாதத்தில் வைத்து, பூஜை செய்து, திரும்ப வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு செய்வதால், திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே பவுர்ணமி நாட்களில் இந்த ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
முக்தி பெற்ற தவளை :
இங்குள்ள திருக்குளத்தில் ஒரு தவளை இருந்தது. ஒரு மகா சிவராத்திரியன்று கன மழை பெய்தது. மழையில் துள்ளித்திரிந்த தவளை அங்கிருந்த நாவல் மரத்தின் அடியில் ஒதுங்கியது. அங்கே இருந்த பாம்பு ஒன்று, அந்தத் தவளையை கவ்விப் பிடித்தது. பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்ட தவளை, ‘நீண்ட நாட்களாக ஈசனின் திருக்குளத்தில் தங்கி இறைவனையே சிந்தனை செய்த எனக்கா இந்த நிலைமை’ என்று வருந்தியது.
மேலும் அபயம்பிகை அன்னையை பிரார்த்தனை செய்தது. தவளையின் பிரார்த்தனைக்கு மனம் இளகிய அன்னை பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்க, தவளை பாம்பின் பிடியிலிருந்து விடுபட்டது. மேலும் அந்த பாம்பையே ஆபரணமாகவும் அணிந்து கொண்டது. பின்னர் வெகு காலம் திருக்குளத்திலேயே வாழ்ந்த அந்தத் தவளை இறுதியில் சிவலோகம் சென்றடைந்ததாக தல வரலாறு கூறுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவன், இறைவியை வணங்கினால் மண்டூக தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு தோஷம் அனைத்தும் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.
மகாவிஷ்ணு :
அசுரர்களை அழிக்க இத்தலத்து இறைவனை வேண்டி, அதீத பலம் பெற்றார் மகாவிஷ்ணு. இதற்கு சான்று பகிரும் வகையில் இந்த ஆலயத்தின் அருகிலேயே சுகவாசி நாராயண பெருமாள் என்ற பெயரில் தன் பரிவாரங்களுடன் அவர் கோவில் கொண்டுள்ளார். தவிர தேவ கோட்டத்தில் மேல் திசையில் மகாவிஷ்ணு அருள் பாலிக்கிறார். எனவே, இந்த ஆலயத்தில் சிவ-விஷ்ணு பேதம் இல்லை.
இந்த ஆலயம் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தில் தல விருட்சம் மந்தாரை மரம். இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
நாகை மாவட்டம் பந்தநல்லூர் - மணல்மேடு பேருந்து தடத்தில் உள்ள கடலங்குடி என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆற்றூர் திருத்தலம்.

பல அற்புதங்களைக் கொண்டதாக திகழ்கிறது சுவிட்சர்லாந்து நாட்டின் பேர்ன் நகரில் அமைந்துள்ள ஞானம்பிகை சமேத ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவில்.
சுவிட்சர்லாந்து நாட்டின் பெருமை கூறும் சிவாலயம், சுவிஸ் அரசின் அனுமதியில் எட்டு சமயங்களின் வளாகத்தில் அமைந்த முதன்மை ஆலயம், இலங்கை சித்தரிடம் பெற்ற ஸ்படிக லிங்கத் திருமேனி கொண்ட இறைவன் பல அற்புதங்களைக் கொண்டதாக திகழ்கிறது சுவிட்சர்லாந்து நாட்டின் பேர்ன் நகரில் அமைந்துள்ள ஞானம்பிகை சமேத ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவில்.
தல வரலாறு :
எங்கும் நிறைந்தவன் இறைவன் என்பதை நிரூபிக்கத் தோன்றிய ஆலயம் இது. இறைவன் தன் திருவிளையாடலால், இலங்கை நாட்டில் வாழ்ந்து வந்த இளைஞர்கள் பலரை 1980-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு இடம் பெயரச் செய்தான். புதிய பூமியில், பல்லினப் பண்பாட்டு சூழலில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டில், வாழ வழி தெரியாமல் நின்றனர் அவர்கள் அனைவரும்.
தாயகத்தைப் பிரிந்து வந்த அவர்களுக்கு தாயாக நின்று அதரவு காட்டினான், இறைவன். அவர்களில் சசிக்குமார், முரளிதரன், சுரேஷ்குமார் மூவரும் குருவாக நின்று சைவநெறிக்கூடம் என்ற அமைப்பை உருவாக்கினர். அதன் உறுப்பினர்களுக்கு இம்மூவரும் ஆன்மிகத் தெளிவைக் காட்டினர். காசியில் உள்ள கேதார்காட் சங்கரலிங்கேஸ்வரர் கோவில் நிறுவனர் அருணாசல சாஸ்திரிகள் மூலம் இவர்களுக்கு தீட்சை கிடைத்தது. கூடவே யோகநிலை சிவனின் திருவடிவமும் கிடைத்தது. அந்த இறைவனை தாங்கள் தங்கியிருந்த சிறிய அறைக்குள் வைத்து பூஜை செய்து வந்தனர்.
இந்நிலையில், பல்வேறு சமயங்களை ஒரே வளாகத்தில் உள்ளடக்கி, ஆன்மிக மையம் ஏற்படுத்த சுவிஸ் நாட்டின் சைவநெறிக்கூடம், கிருஸ்துவம், பவுத்தம், இஸ்லாம், பஹாய் உள்ளிட்ட அமைப்புகள் முடிவு செய்தன. அதன் பயனாக சைவ நெறிக் கூடம் மூலம் இந்து சமயத்தின் சார்பாக சிவாலயம் ஒன்று அமைக்க திருவருள் கூடியது. 2005-ம் ஆண்டு இலங்கையில் இருந்து சித்தர்களால் பூஜிக்கப்பட்டு வந்த ஸ்படிக லிங்கம் கிடைக்கப்பெற்றது. அந்த திருமேனி எவ்வித தடையும் இன்றி சுவிஸ் நாட்டின் முக்கிய நகரான பேர்ன் நகருக்கு எளிதாக வந்து சேர்ந்தது. இந்த ஸ்படிக லிங்கத்தையே பிரதானமாகக் கொண்டு 2007-ம் ஆண்டில், பல்சமய வழிபாட்டு வளாகம் அமைந்தது. 2015-ம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரதான சிவலாயம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்த ஆலயம்.
ஆலய அமைப்பு :
கிழக்கு நோக்கிய வாசல் கொண்டுள்ள இந்தச் சிவாலயம் மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கொண்டு விளங்குகிறது. கோபுர உச்சியில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என நால்வரின் திருவுருவங்கள் இறைவனை வழிபடும் கோலத்தில் காட்சி தருகின்றன. உள்ளே நுழைந்ததும் நம்மை வரவேற்பவர், மூலவர் ஞானலிங்கேஸ்வரர். பத்து தலை ராவணன் தோள் மீது, அமர்ந்த கோலமாக எம்பெருமான் ஞானலிங்கேஸ்வரர் ஒளிவீசும் தோற்றத்தில் காட்சி தருகிறார். இவரின் லிங்கத் திருமேனியே ஸ்படிக லிங்கம் என்பது தனிச் சிறப்பு. இவரே பல்லாயிரம் ஆண்டுகளாக சித்தர்களால் பூஜிக்கப்பட்டு வந்தவர். இவர் இலங்கை வேந்தன் ராவணனால் பூஜிக்கப்பட்டவர் என்பது சித்தர் வாக்கால் தெரிய வந்துள்ளது.
சுவாமியின் எதிரே எழிலான நந்தி, பலிபீடம், கொடிமரம், அதன் அடியில் இலங்கையின் வடிவமும், அதனுள் சிறிய சிவலிங்கமும் அமைந்துள்ளது. வலச்சுற்றில் விநாயகர், ஐயப்பன், திருமகள்-திருமால், பெருந்தேவன்- பெருந்தேவி (பிரத்தியங்கரா -சரபேசுவரர்), கலைவாணி, வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான், நாகம் குடையாக நிற்கும் நாகபூஷணியம்மன், உற்சவர் கூடம், பொற்சபை, வசந்த மண்டபம், நவக்கிரக சன்னிதி, பைரவர், அனுமன் சன்னிதி, சனிபகவான் சன்னிதி, அதன் அருகே முருகன் நின்ற கோலத்தில் காட்சி தர, பின்புறம் மகான்களின் நிழற் படங்கள் அணி வகுக்கும் சிவஞான சித்தர் பீடமும் இங்கு உள்ளது.
சுவாமியின் இடது புறம் ஞானம்பிகை அம்மன் சன்னிதி இருக்கிறது. அன்னை ஞானம்பிகை மேல் இரு கரங்களில் பாச, அங்குசம் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடனும் காட்சி தருகிறாள்.
தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மகாசிவராத்திரி, கந்தசஷ்டி என அனைத்து விழாக் களும் இந்தத் தலத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. ஆலயத்தின் பிரம்மோற்சவ விழா ஆகஸ்டு மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி, 13 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறுகிறது. இதில் யூரோப் பிளாசாவை சுற்றி வலம் வரும் தேரோட்டம் முக்கியமானது.

ஆலயத்தில் சமுதாயப் பணிகள் :
தமிழ் மக்களின் நிதியுதவியால், தமிழர்களால் நடத்தப் படும் ஆலயமாக இவ்வாலயம் திகழ்கின்றது. இங்கு சைவ முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்படுகின்றன. நாள்தோறும் வந்து செல்லும் மற்ற நாட்டவர்களுக்கும், பல் கலைக்கழக மாணவ- மாணவியர்களுக்கும் சைவத்தின் மேன்மை, இந்து சமயத்தின் சிறப்புகள் போன்றவை அவர்கள் மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுகிறது.
தமிழ்மொழி வழிபாட்டினை ஊக்கப்படுத்தி, பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை உருவாக்குகிறார்கள். பெண்களும் முறையான பயிற்சி பெற்ற பின்பு அர்ச்சகர்களாகப் பணிபுரிய அனுமதிக்கப்படுவது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு ஆகும்.
இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து மூலவர் சிவ பெருமானை தரிசிக்கலாம். பிற தெய்வங்களை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே தரிசிக்க இயலும். பெருந்தேவன்- பெருந்தேவி சன்னிதியை பவுர்ணமி, அமாவாசை நாட்களில் மட்டுமே தரிசிக்கலாம்.
யூரோப் பிளாசா - பல்சமய வளாகம் :
ஞானலிங்கேசுவரர் ஆலயம் பல் சமய வளாகத்தின் பிரதான ஆலயமாக அமைந்துள்ளது. இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம், பவுத்தம், அல்வித்தென், யூதம், சீக்கியம், பஹாய் என எட்டு மதங்களுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு, சுவிட்சர்லாந்து முக்கிய நகரான பேர்ன் நகரின் மையப் பகுதியில் யூரோப்பிளாசா என்ற பெயரில் அமைந்துள்ளது.
சுவிஸ் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு அரசுப் பிரதிநிதிகள், பிரமுகர்கள் இந்த வளாகத்திற்குத் தவறாமல் வருகை தந்து வியந்து செல்லும் மையமாக இது திகழ்கின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வப்போது வருகை தந்து இந்து மதத்தினைப் பற்றி அறிந்து செல்கின்றனர்.
இதில் அதிக இடப்பரப்பில் இந்து சமய சிவாலயம் மட்டுமே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல்சமய இல்லத்தின் சார்பாக ‘வணக்கம்’ என்ற சைவ உணவு விடுதியும் நடத்தப்படுகிறது. இதில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் உணவருந்தி செல்கின்றனர். ‘நன்றி’ என்ற வார்த்தை உலக மொழிகள் அனைத்திலும் எழுதி நுழைவு வாசலில் உள்ள பலகையில் பொருத்தப்பட்டுள்ளது.
மதச் சண்டையால் தத்தளித்து வரும் இன்றைய சூழலில், ஒரே வளாகத்தில் எட்டு வகையான மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் ஒற்றுமையுடன் நடந்து வருவது சுவிஸ் நாட்டின் பெருந்தன்மைக்கும், மதச் சார்பின்மைக்கும் சான்றாக விளங்குகின்றது. சமயத்தை ஏற்போரும், சமயத்தை மறுப்போரும் கூடும் சமூக மையமாகவும் இந்த வளாகம் விளங்குகிறது.
அமைவிடம் :
சுவிட்சர்லாந்து நாட்டின் முக்கிய நகரான பேர்ன் நகரின் மையப்பகுதியில் யூரோப் பிளாசா என்ற இடத்தில், ரெயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது, இந்தத் திருத்தலம். இங்கு வந்து செல்ல பேருந்து, ரெயில், டிராம் வசதிகள் அதிகம் உள்ளன.

இறந்தவர்களின் ஆன்மா உயர்ந்த நிலையை அடையவும், கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதியடையவும் சிறந்த தலமாகக் கேரள மாநிலம், திருவல்லம் பரசுராமர் கோவில் அமைந்திருக்கிறது.
இறந்தவர்களின் ஆன்மா உயர்ந்த நிலையை அடையவும், கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதியடையவும் சிறப்பு வழிபாடுகளைச் செய்யச் சிறந்த தலமாகக் கேரள மாநிலம், திருவல்லம் பரசுராமர் கோவில் அமைந்திருக்கிறது.
தல வரலாறு :
ஜமத்கனி முனிவர் - ரேணுகாதேவி தம்பதியரின் கடைசி மகனாகப் பிறந்தவர் ராமர். விஷ்ணுவின் ஆறாவது தோற்றமாகக் கருதப்படும் அவர், சிவபெருமானை வழிபட்டு, அவரிடமிருந்து ‘பரசு’ எனும் கோடாரியைப் பெற்றதால் ‘பரசுராமர்’ என்று அழைக்கப்பட்டார்.
ஒரு நாள் ரேணுகாதேவி ஆற்றில் குளிக்கச் சென்றார். அவர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது, வானத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கந்தர்வனின் நிழல், அந்த ஆற்று நீரில் தெரிந்தது. ஆற்று நீரில் தெரிந்த நிழல் உருவத்தைப் பார்த்து அவர் வியப்படைந்தார். இந்தக் காட்சி தியானத்திலிருந்த ஜமத்கனி முனிவரின் மனதில் தோன்றி மறைந்தது.
உடனே ஜமத்கனி முனிவர், தனது மகன் பரசுராமரை அழைத்து, ‘உன் தாய், கந்தர்வன் ஒருவனைப் பார்த்து மயக்கம் கொண்டு விட்டாள். உடனடியாக அவளைக் கொன்று விட்டுத் திரும்பி வா’ என்று ஆணையிட்டார். தந்தையின் ஆணையைக் கேட்டப் பரசுராமர், தனது தாய் என்றும் பாராமல் ரேணுகா தேவியைக் கொன்று விட்டுத் திரும்பினார்.
திரும்பி வந்த அவர், ‘தந்தையே, தங்களின் ஆணைப்படி நான் தங்களது மனைவியைக் கொன்று விட்டேன். ஆனால், தற்போது நான் தாயை இழந்து நிற்கிறேன். என் மனம், தாயன்பை வேண்டித் தவிக்கிறது. என் தாயின் உடலை உயிர்ப்பித்துத் தந்திட வேண்டும்’ என்று வேண்டினார்.
ஜமத்கனி முனிவரும், தான் சொன்னதைக் கேட்டு எந்த மறுப்பும் சொல்லாமல், தன் தாயையே கொன்று திரும்பிய மகனின் வேண்டுகோளை நிறைவேற்ற முன் வந்தார். உடனே அவர், தன் மனைவியின் உடலுக்கு உயிர் கொடுத்து, முன்பு போலவே திரும்பி வரச் செய்தார்.
பின்னொரு நாளில் ஜமத்கனி முனிவருடன் பகை கொண்டிருந்த அரசன் ஒருவன், யாருமில்லாத வேளையில் ஆசிரமத்துக்குச் சென்று, கண்களை மூடி தியானத்தில் இருந்த ஜமத்கனி முனிவரைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்று விட்டான். இதனையறிந்த பரசுராமர், அந்த அரசனைத் தேடிச் சென்று கொன்றார். அத்துடன், அரச குலத்தினர் அனைவரையும் தானே அழிப்பதாகச் சபதம் செய்தார். அதே வேளையில், திருமணம் செய்து கொண்டிருக்கும் அரசர்களை மட்டும் ஒரு வருடம் வரைக் கொல்வதில்லை என்று முடிவு செய்து கொண்டார்.
தான் செய்த சபதத்தின்படி அரச குலத்தைச் சேர்ந்த பலரையும் தேடிச்சென்று, அவர்களுடன் சண்டையிட்டு, அவர்களை அழித்துக் கொண்டிருந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, தன் தாயைக் கொன்றது, அரசர்களைப் போட்டியிட்டுக் கொன்றது போன்ற செயல்கள் அவரது மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி, அவருக்குப் பெரும் துன்பத்தைத் தந்தது.
அந்த துன்பத்திலிருந்து விடுபட விரும்பிய அவர், இனி எவருடனும் போர் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து, இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். தான் செல்லும் இடங்களிலெல்லாம் இறையுருவங்களை நிறுவி, அதற்குச் சிறப்பு வழிபாடுகளைச் செய்தபடி பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்படி ஒருநாள், கேரள மாநிலத்தில் ஓடிக்கொண்டிருந்த கரமனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்த ஆற்றில் அவருக்குச் சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. அந்தச் சிவலிங்கத்தை ஆற்றின் கரைப்பகுதியில் நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். அப்போது அவர், தன் தாயைக் கொன்ற பாவம், பல அரசர்களைக் கொன்ற பாவமெல்லாம் நீங்கியதாக உணர்ந்தார்.
அந்தக் கோவிலிலேயே தன் தாயின் ஆன்மா உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் ஆன்மா அமைதி வழிபாட்டுச் சடங்கினைச் (பிதுர் தர்ப்பணம்) செய்தார். அந்தச் சடங்கிற்குப் பின்பு, அவருடைய அம்மாவின் ஆன்மா உயர்வு கிடைத்தது தெரிந்து மகிழ்ந்தார். அவருக்கு ஏற்பட்டிருந்த மன வருத்தமெல்லாம் மறைந்து போனது.
பரசுராமர் சிவபெருமானை வழிபட்ட இடத்தில், அவரது பாதம் பொறிக்கப்பட்ட பீடம் ஒன்று இருக்கிறது. இந்தப் பீடத்தின் அருகில் பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் சிலை ஒன்று இருக்கிறது. இங்குள்ள பீடத்திற்குத் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

கோவில் அமைப்பு :
கரமனை ஆறு, கிள்ளியாறு, பார்வதிபுத்தனார் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் சேருமிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூவருக்கும் தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. இங்குள்ள சிவ பெருமானை பரசுராமரும், விஷ்ணுவின் தோற்றமான வேதவியாசரை விபா கரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் நிறுவினர் என்று இக்கோவிலுக்கான தல வரலாறுகள் தெரிவிக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் பகவதி, கணபதி ஆகியோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஆலயம் தினமும் அதிகாலை 5 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆலயத்தில் ‘திருவோணம் ஆறாட்டு’ மற்றும் ‘பரசுராமர் ஜெயந்தி’ எனும் இரு விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இத்தலத்தில் பரசுராமர் தனது தாயின் ஆன்மா உயர்வுக்கான வழிபாட்டினை (பிதுர் தர்ப்பணம்) செய்திருக்கிறார். இதே போல் ஆதிசங்கரர் அவருடைய தாய் ஆரியாம்பாளின் ஆன்மா உயர்வுக்கான வழிபாட்டினைச் செய்திருக்கிறார். இதனால், இக்கோவில் ஆன்மா உயர்வுக்கான வழிபாட்டிற்கும் (பலி, கர்மம், பிதுர் தர்ப்பணம்), கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதிக்கான வேள்விக்கும் (தில ஹோமம்) சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.
இங்கு தினசரி காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆன்மா உயர்வுக்கான சிறப்பு வழிபாடும் (பலி, கர்மம், பிதுர் தர்ப்பணம்), காலை 6 மணி முதல் 10.30 மணி வரை கொடிய மரணமடைந்தவர்களின் ஆன்மா அமைதிக்கான சிறப்பு வேள்வியும் (தில ஹோமம்) நடத்தப்படுகின்றன.
இங்குள்ள விஷ்ணுவின் தோற்றத்திலான வேதவியாசர் சன்னிதியில், குழந்தைகள் கல்வியில் சிறப்பு பெற்றிட வேண்டிச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அருகிலுள்ள பிரம்மன் சன்னிதியில் நோயற்ற நீண்ட கால வாழ்க்கை வேண்டி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இங்குள்ள பரசுராமர் பாதம் பொறிக்கப்பட்ட பீடத்தின் முன்பாக, அமைதியான மனநிலை அளிக்க வேண்டிப் பலரும் வணங்கிச் செல்கின்றனர்.
பிதுர் தர்ப்பணம் :
முன்னோர்களில் மூன்று தலைமுறையினர்களின் உயர்வுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் செய்யப்படும் சடங்கை, ‘பிதுர் தர்ப்பணம்’ என்று சொல்கின்றனர். பிதுர் உலகத் தேவதைகளான வசு, ருத்ர, ஆதித்யர்களை எள் மற்றும் தண்ணீரால் நினைத்துக் கொண்டு இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கின் முடிவில் எள் கலந்தத் தண்ணீர், இறந்தவர்கள் பூவுலகில் செய்த செயல்பாடுகளுக்கேற்பத் தற்போதடைந்திருக்கும் நிலையில் அமிர்தமாகவோ, நெய்யாகவோ, தண்ணீராகவோ, பாலாகவோ, புல்லாகவோ, ரத்தமாகவோ மாறி, அவர்கள் பெற்றுக் கொள்ளும்படியாக வேண்டிக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அந்த ஆன்மா மகிழ்ச்சியையும், உயர்வையும் அடையும் என்பது இச்சடங்கின் நம்பிக்கை.
திருவல்லம் பெயர்க் காரணம் :
திருவல்லம் பரசுராமர் கோவில் விஷ்ணுவின் தலைப்பகுதியாகவும், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் விஷ்ணுவின் உடல் பகுதியாகவும், திருவனந்தபுரம் அருகே உள்ள திருப்பாதபுரம் கோவில் விஷ்ணுவின் கால் பகுதியாகவும் விளங்குவதாக ஐதீகம். ஒரே நாளில் இம்மூன்று தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்குவது அனைத்து நலன்களையும், வளங்களையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
முற்காலத்தில் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் தலைப் பகுதி தற்போது திருவல்லம் என்றழைக்கப்படும் பகுதி வரை நீண்டிருந்ததாம். எனவே திருவல்லம் என்ற இடத்தை தமிழில் ‘தலை’ என்று பொருள் தரும் மலையாள மொழிச் சொல்லான ‘வல்லம்’ என்ற பெயரில் அழைத்தனர். இறைவனின் தலைப்பகுதி என்பதைத் தெரிவிக்கும் விதமாகத் ‘திருவல்லம்’ என்கின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபரை நிறுவிய வில்வ மங்களம் சுவாமிகள் செய்த வழிபாட்டால், திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமியின் உருவம் தற்போது உள்ள அளவுக்குச் சுருங்கிப் போய் விட்டதாக இக்கோவிலின் தல வரலாறுகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.
அமைவிடம் :
கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரம் நகரிலிருந்து கோவளம் கடற்கரைக்குச் செல்லும் புறவழிச் சாலையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவல்லம் திருத்தலம்.

கற்பில் சிறந்த கண்ணகிக்கு தமிழகம் மற்றும் கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி மலையில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.
மதுரையை எரித்த கண்ணகிக்கு பல இடங்களில் வழிபாட்டு ஆலயம் கட்டப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பகவதி அம்மன் ஆலயங்களில், பகவதி அம்மன் என்று அழைக்கப்படும் தெய்வம் கண்ணகிதான் என்ற கூற்றும் நிலவுகிறது. கற்பில் சிறந்த கண்ணகிக்கு தமிழகம் மற்றும் கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி மலையில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்பட்டு திருவிழா காண்கிறது. இந்த ஆலயத்தின் சிறப்பு பற்றி இங்கே காணலாம்.
கண்ணகி வரலாறு :
சோழ நாடான காவிரிப்பூம்பட்டினத்தில், கோவலனுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தாள் கண்ணகி. கோவலனுக்கு யாழ் இசைப்பதில் அதீத ஆர்வம் உண்டு. அதே போல் ஆடல், பாடல்களிலும் விருப்பம் கொண்டவனாக இருந்து வந்தான். இந்த நிலையில் பூம்புகாரில் ஆடல் தொழில் செய்து வந்த மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு கோவலன் மனம் மகிழ்ந்தான். அவளிடம் தன் மனதை பறிகொடுத்தான். அவர்களிடையே நெருக்கம் ஏற்பட்டதால், கண்ணகியை மறந்து, மாதவியின் வீட்டிற்கு சென்று அவளுடன் வாழ்க்கையை வாழத் தொடங்கினான். கோவலனின் செல்வம் அனைத்தும் குறைந்து போகிறது. மாதவியுடன் மனம் வேறுபட்டு, அவளை விட்டுப் பிரிந்து மீண்டும் கண்ணகியிடம் வந்து சேர்ந்தான்.
தான் இழந்த பொருள் அனைத்தையும் மீட்டுவிடும் நோக்கத்தில், கண்ணகியை அழைத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து வெளியேறி, மதுரை நோக்கிச் செல்கிறான். அங்கு கோவலன் வணிகம் செய்வதற்காகக் கண்ணகி தனது காற்சிலம்புகளில் ஒன்றினைக் கழற்றிக் கொடுக்கிறாள். கோவலன் கண்ணகியை மாதரி எனும் ஆயர்குலப் பெண்ணிடம் அடைக்கலமாக இருக்கச் சொல்லிவிட்டு, அந்தச் சிலம்பை விற்பதற்காக நகருக்குள் செல்கிறான்.
நகருக்குள் சென்ற கோவலன், தான் கொண்டு சென்ற சிலம்பை அங்கிருந்த அரண்மனைப் பொற்கொல்லனிடம் காட்டுகிறான். அந்தப் பொற்கொல்லன் முன்பே அரசியின் சிலம்புகளில் ஒன்றைத் திருடி இருந்தான். அந்தக் குற்றத்தை மறைக்க இதுதான் சரியான நேரம் என்று எண்ணிய அவன் அந்தச் சிலம்புடன் அரண் மனைக்குச் செல்கிறான். அப்போது அரசவையில் ஆடல் நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியினைக் கண்டு அரசன் தன்னை மறந்து விட்டான் என்று நினைத்து, அரசி மனம் வேறுபட்டு அந்தப்புரம் சென்று விடுகிறாள்.
அரசியைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் அரசன் அந்தப்புரம் செல்லும் வழியில், பொற்கொல்லன் அரசனைக் கண்டு, அரசியின் சிலம்பு காணாமல் போன குற்றத்தில் கோவலனைத் திருடனாக்கிக் குற்றம் சுமத்துகிறான். இந்நிலையில் அரசன் அது குறித்து முழுமையாக விசாரிக்காமல் கோவலனுக்கு மரண தண்டனை அளித்து விடுகிறான். கோவலனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இச்செய்தி அறிந்த கண்ணகி கோபத்துடன் பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று வழக்கு உரைக்கிறாள். இந்த வழக்கின் முடிவில் உண்மையறிந்த பாண்டிய மன்னன், தனது தவறான தீர்ப்பை நினைத்து வருந்தி, அவன் அமர்ந்திருந்த அரியணையிலிருந்து கீழே விழுந்து உயிர் துறந்தான். அரசனைத் தொடர்ந்து அவனது மனைவியும் மன்னன் மார்பு மீது சாய்ந்து அழுதபடி தன் உயிர் நீத்தாள். அதன் பின்பும் கண்ணகியின் கோபம் குறையவில்லை. கற்பில் சிறந்த 7 பெண்களின் பெயரை உச்சரித்து, ‘அவர் களைப் போல் நானும் கற்பில் சிறந்தவளாக வாழ்ந்தது உண்மையானால், இந்த மதுரை தீக்கிரையாகட்டும்’ என்று சாபமிட்டாள். அவளது கற்பின் வலிமையால் மதுரை மாநகரமே நெருப்புக்கு இரையானது. அதில் தீயவர்கள் இறந்தனர்; நல்லவர்கள் உயிர் தப்பினர்.
பின்னர் கண்ணகி அங்கிருந்து வெளியேறி, நீண்ட தூரம் நடந்து சென்ற அவள் சேரநாட்டை அடைகிறாள். அங்கிருந்த குன்றில் வேங்கை மர நிழலில் நின்று கொண்டிருக்கிறாள். அவளைக் கண்ட வேடுவர்களிடம், தான் அடைந்த துன்பம் கொண்ட தனது வாழ்க்கையை முழுமையாகக் கூறுகிறாள். அதன் பின்னர், அங்கு வானோர் வடிவில் வந்த கோவலனோடு, கண்ணகி தெய்வ விமானமேறி தேவலோகம் சென்றாள். இதனைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் கண்ணகியை, அம்மனாக நினைத்து ‘இவளே நமது காவல் தெய்வம்’ என்று கூறி வழிபடத் தொடங்கினர்.
மன்னன் கட்டிய ஆலயம் :
இந்த நிலையில் சேர மன்னனான சேரன் செங்குட்டுவன் அந்தப் பகுதிக்கு நகர்வலமாக வந்தான். அப்போது அந்தப் பகுதி மக்கள் மன்னனைச் சந்தித்து, கண்ணகி என்ற பெண்ணைப் பற்றியும், அவள் மனித உடலோடு, தேவ விமானத்தில் ஏறி தேவலோகம் சென்றதையும் தெரிவித்தனர். இதையறிந்த மன்னன் ஆச்சரியம் கொண்டான்.
அப்போது மன்னனுடன் இருந்த புலவர் சீத்தலை சாத்தனாரும், ‘அரசே! அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட துன்பம் பற்றிய செய்தியை நானும் பாண்டிய நாட்டில் இருந்து வந்த தகவலால் அறிந்தேன். அந்தப் பெண்ணின் கணவன் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நியாயம் கேட்கச் சென்ற அந்தப் பெண்ணின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்த பாண்டிய மன்னன், அங்கேயே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உயிர் இழந்தான். மன்னன் இறந்ததும் அவனது மனைவியும் உயிர் துறந்தாள். பின்னர் மதுரையை தன் கற்பு நெறியால் எரித்து விட்டு, இவ்விடம் வந்து சேர்ந்திருக்கிறாள்’ என்றார்.
அதைக் கேட்ட சேர நாட்டு மன்னனுக்கு மேலும் ஆச்சரியம் சேர்ந்தது. கற்பில் சிறந்தவளாகவும், மனித உடலுடன் தேவலோகம் செல்லும் அளவுக்கு உயர்ந்த பண்புகளைக் கொண்டவளாகவும் இருக்கும் கண்ணகிக்கு ஆலயம் கட்டுவது என்று மன்னன் முடிவு செய்தான். அவள் தேவலோகம் சென்ற அதே இடத்தில் கண்ணகிக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. தமிழ்நாடு, கேரளா மாநில எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலையின் மீது வண்ணாத்திப் பாறை என்னும் இடத்தில் கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரத்து 380 அடி உயரத்தில் இருக்கிறது.
சித்ரா பவுர்ணமி வழிபாடு :
அந்த காலத்தில் இந்த மலையில் இருந்த வேடுவ மக்கள், கண்ணகியை சித்ரா பவுர்ணமி நாளில் சிறப்பாக வழிபாடு செய்து வந்துள்ளனர். அந்த வழக்கமே இன்றும் தொடர்கிறது. எல்லைப்பிரச்சினை காரணமாக ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இங்கு வழிபாடு நடைபெறுகிறது. அதுவும் சித்ரா பவுர்ணமி அன்று காலை 5 மணி அளவில் மலைப்பாதையை திறந்து, மாலை 5 மணிக்குள் மலையில் இருந்து இறங்கி விடும் வகையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார் கள். பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஆலயம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. வழிபாட்டின்போது, இரு மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருப்பார்கள். இந்த ஆண்டுக்கான கண்ணகி வழிபாடு வருகிற 22–ந் தேதி நடைபெறுகிறது.
இலங்கையில் கண்ணகி வழிபாடு :
தமிழ்நாட்டில் வாழ்ந்த பத்தினிப் பெண்ணான கண்ணகிக்கு, இலங்கையில் பல இடங்களில் ஆலயம் இருக்கிறது. சிங்களர்களால் வழிபடப்படும் இந்த ஆலயத்தில் கண்ணகியை, ‘பத்தினி தெய்யோ’ என்று அழைக்கின்றனர். பெருமாள் ஆலயங்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைத்து ஆசீர்வாதம் செய்யப்படுவது வழக்கம். அதே போல் இலங்கையில் உள்ள கண்ணகி ஆலயங்களில், கண்ணகியின் கால் சிலம்பு போல் பெரியதாக செய்து, அதை தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்யும் வழக்கம் இருக்கிறது.
கேரள மாநிலம் குமுளியில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் கூடலூர் வனப்பகுதியான பளியங்குடியில் இருந்து சுமார் 6.6 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திப் பெற்ற முத்தாரம்மன் கோவில்.
சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு. இந்த உலகின் ஆதார சக்தியாக திகழ்பவள் அன்னை பராசக்தி. சக்தி அருள்பாலிக்கும் இடங்கள் சக்தி பீடங்களாகப் புகழ்ந்து போற்றப்படுகின்றன.
அகிலத்தைப் படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னை பராசக்தி ஒவ்வொரு தலத்திலும் வெவ்வேறு திருநாமங்களில் அருள்பாலிக்கிறாள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் குலசேகரன்பட்டினம். இவ்வூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் உலக பிரசித்திப் பெற்றது. தசரா என்றதும் அனைவருக்கும் மைசூரில் நடக்கும் திருவிழா தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டில் தசரா குலசேகரன்பட்டினத்தில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். அப்போது மகிஷாசுரனை, முத்தாரம்மன் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும்.
அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி ஞானமூர்த்தீஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் அருட்தோற்றம் காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.
பொதுவாக பூமியில் இருந்து தானாக சுயம்பு லிங்கம் தோன்றி கோவில்களில் அருள்பாலிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். குலசேகரன்பட்டினம் திருத்தலத்தில் அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனால் இங்கு அம்மன் சக்தி வாய்ந்தவளாக காட்சி அளிக்கிறாள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு முத்தான வாழ்வை அருள்கிறாள்.
முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பாகும். இதுபோல அம்மனும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி புரிவது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சிவாலயங்களில் லிங்க வழிபாடு தான் நடைபெறும். ஆனால் இத்திருத்தலத்தில் பரமேஸ்வரன், ஞானமூர்த்தீஸ்வரராக மனிதவடிவில் உள்ளார். அவருடைய திருக்கோலம் வியப்புடன் மீசையுடன் உள்ளது. விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்யும் வகையில் அவர் தனது வலது கையில் செங்கோலை தாங்கி உள்ளார். இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார்.
ஞானம் என்றால் பேரறிவு. மூர்த்தி என்றால் வடிவம் என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ஈகை சுரப்பவர் என்று பொருள். அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால் பேரறிவு உடைய வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று அர்த்தம். ஞானமுடி சூடியிருப்பதால் இவர் ஞானமூர்த்தியாக விளங்குகிறார்.
பாண்டி நாடு முத்துடைத்து என்பர். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாக கொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அம்பிகை முத்தாரம்மன் என அழைக்கின்றனர். அம்மை போட்டவர்களுக்கு முத்து போட்டதாக கூறுவர். முத்துக்கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் கட்ட செய்வர். இதன் மூலம் அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் அன்னை முத்து ஆற்று அம்மன், முத்தாரம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.
கனவில் தோன்றிய அம்மன்:
அகிலம் போற்றும் நாயகி, அன்னை முத்தாரம்மனை திருமேனியாக கண்குளிரக் கண்டு தரிசிக்க மக்கள் விரும்பினர். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்ற அன்னை திரு உளம் கொண்டாள்.
கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், கன்னியாகுமரி அருகே மைலாடி என்ற ஊருக்கு செல்லும்படி கட்டளையிட்டார். அதேபோல மைலாடியில் உள்ள ஒரு சிற்பியின் கனவில் தோன்றி தனது உருவம் மற்றும் ஞானமூர்த்தீஸ்வரர் திருமேனியுடன் சிற்பிக்கு காட்சி அளித்து அங்குள்ள ஆண், பெண் பாறையில் ஒரே கல்லில் ஒரே பீடத்தில் தங்கள் திரு உருவ சிலையை வடித்து கொடுக்கும்படி உத்தரவிட்டார். பின்னர் அந்த சிலையை தாங்கள் சுயம்புவாக எழுந்தருளி இருக்கும் இடத்தில் வைக்க உத்தரவிட்டார்.
சிற்பி மெய்சிலிர்த்து போனார். உடனே அவர் அம்மன் கனவில் கூறியவாறு அம்பாள் மற்றும் சுவாமியின் திருமேனியை வடித்தார். இறையருள் ஆட்விக்க குலசை அர்ச்சகர் மைலாடி சென்றார். சிற்பி ஏற்கனவே ஞானமூர்த்தீஸ்வரர், முத்தாரம்மன் சிலையை செய்து வைத்து இருந்தார். அதை அர்ச்சகர் பக்தி பரவசத்துடன் பெற்று கொண்டு குலசேகரன்பட்டினம் திரும்பினார். அன்னையின் விருப்ப படியே அந்த சிலை சுயம்புவாக அம்மன் எழுந்தருளி உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தசரா பெருவிழா:
இந்த ஆலயத்தில் நடைபெறும் தசரா திருவிழா உலகப் புகழ்பெற்றதாகும். புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு மறுநாள் கொடி ஏற்றத்துடன் தசரா விழா தொடங்கும். கொடியேற்ற தினத்திற்கு முந்தைய இரவில் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு காப்பு கட்டப்படும். முதல் நாள் துர்க்கை கோலத்தில் அம்மன் காட்சி தருவாள்.
2-ம் நாள் விசுவகர்மேஸ்வரர் கோலத்திலும், 3-ம் நாள் பார்வதி கோலத்திலும், 4-ம் நாள் பாலசுப் பிரமணியர் கோலத்திலும், 5-ம் நாள் நவநீதகிருஷ்ணன் கோலத்திலும், 6-ம் நாள் மகிஷாசுரமர்த்தினியாகவும், 7-ம் நாள் ஆனந்த நடராசராகவும், 8-ம் நாள் அலைமகள் கோலத்திலும், 9-ம் நாள் கலைமகள் கோலத்திலும் வீதி உலா வருவார். 10-வது நாள் மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடைபெறும்.
அங்கு மகிஷாசுர வதம் நடைபெறும். முதலில் மகிஷனின் தலை, அடுத்து சிம்ம தலை, பின்னர் மகிஷாசுரனின் தலையினையும் கொய்து வெற்றிக்கொடி நாட்டுவாள். இந்த காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
இதையடுத்து சிதம்பரேஸ்வரர் கோவிலை அன்னை வந்தடைவாள். அங்கு அன்னைக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மறுநாள் காலை பூஞ்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அன்னை அருள்புரிவாள். மாலை கோவிலை அம்மன் வந்தடைந்த பின்னர் கொடி இறக்கப்படும். தொடர்ந்து சுவாமி, அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளின் காப்புகள் களையப்படும். இதேபோல் காப்பு கட்டிய பக்தர்கள் அனைவரும் தங்கள் காப்புகளை களைந்துவிடுவார்கள். 12-ம் நாள் பகலில் முத்தாரம்மனை குளிர்விப்பதற்காக குடம் குடமாக பாலாபிஷேகம் நடத்தப்படும். அத்துடன் தசரா விழா இனிதே நிறைவடையும்.
இந்த ஆலயத்தின் தலமரம் வேம்பு ஆகும். ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். காலை 8.15 மணிக்கு காலை சந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகாலமும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8.15 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் செய்யப்படுகிறது.
பக்தர்கள் வேடம் போடுவது ஏன்?
தசரா விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வித, விதமான வேடங்களை அணிந்து, வீடுதோறும் சென்று தர்மம் எடுப்பதை இன்றும் பார்க்கலாம். அவர்களுக்கு மக்கள் மனமகிழ்ச்சியுடன் அரிசி, பணம் காணிக்கையாக வழங்குவர். இதற்கு காரண காரியம் உண்டு. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறுவேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம். இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். அம்மனே நேரில் வந்து கேட்பதாக கருதி மக்கள் தர்மம் செய்வார்கள்.
திருமஞ்சணை பிரசாத மகிமை:
குலசை முத்தாரம்மன் கோவிலில் வழங்கப்படும் திருமஞ்சணை பிரசாதம் மகத்துவம் வாய்ந்தது. புற்றுமண், மஞ்சள்பொடி எண்ணெய் கலந்து அம்மனுக்கு இரவு சாத்தப்பட்டு, மறுநாள் பிரசாதமாக வழங்கப்படும். இந்த திருமஞ்சணை பிரசாதத்தை சிறிது உட்கொண்டு, நெற்றியில் பூசி கொண்டால் தீராத வியாதி தீரும். நலமெல்லாம் வந்து சேரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
அன்னதானம்:
குலசை முத்தாரம்மன் கோவிலில் தினமும் மதியம் 1000 பேருக்கு அன்னதான திட்டத்தின்கீழ் அன்னதானம் வழங்கப்படுகிறது.
குலசை கோவிலுக்கு வருபவர்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டு உடனே ஊர் திரும்பி விடலாம். பால்குடம் எடுப்பதாக வேண்டி கொண்டவர்கள் முதல் நாள் இரவு கண்டிப்பாக கோவிலில் தங்க வேண்டும்.
மாவிளக்கு பூஜை:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு பூஜை நடைபெறும். இந்த பூஜையின்போது தரும் மாவை சாப்பிட்டால் தீராத நோயும், குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் குணமாகி நலம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
நோய் தீர்க்கும் வேப்பிலை:
குலசை சன்னிதியில் பக்தர்களுக்கு மஞ்சள், திருநீறு, மஞ்சணை, வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த வேப்பிலையை சாப்பிட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வழியும்- தூரமும்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து குலசை செல்பவர்கள் திருச்செந்தூர் வரை ரெயிலில் வந்து, அங்கிருந்து பஸ்சில் செல்லலாம். திருநெல்வேலி வரை ரெயிலில் வந்து அங்கிருந்து 68 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோவிலை பஸ், கார் மூலம் சென்றடையலாம். தூத்துக்குடி வரை வர முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்ளது. விமானத்தில் செல்ல விரும்புபவர்கள் திருவனந்தபுரம், மதுரை, தூத்துக்குடி விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பஸ், கார் மூலம் வந்து சேரலாம்.