என் மலர்
கோவில்கள்
சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆடி மாதம் பிறந்து விட்டது. தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் மாதமான ஆடி மாதத்தில் அம்மனின் அருள் மழை நிறைந்து இருக்கும். இந்த மாதம் முழுவதும் அம்மனை வழிபட்டால், அனைத்து சக்திகளையும் ஒருங்கே வழிபட்டதாக ஐதீகம்.
சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக குடியிருந்தாள். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு சிறிய மீனவ கிராமம்தான் இருந்தது. இந்த கிராமத்தினரின் கடவுளாக இருந்த காளிகாம்பாளுக்கு அவர்கள் செந்தூரம் சாத்தி வழிபட்டு வந்தனர். இதனால் சென்னியம்மன் என அழைக்கப்பட்டாள். சென்னியம்மன் குப்பம் என்ற பெயரே பின்னர் சென்னை என்று மருவியது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
விஸ்வகர்மா சமூகத்தினர் நாயக்கர் கால கட்டத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் திருப்பணிகளுக்காக சென்னையில் குடியேறியபோது திருவண்ணாமலையில் இருந்து கல் எடுத்து வந்து கட்டிய ஆலயம் இது என்று கூறப்படுகிறது. பின்னர் 1640-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் புனித ஜார்ஜ் கோட்டையை கட்டியபோது, கோவில் கோட்டைக்குள் வந்து விட்டது. இப்படி கோட்டைக்குள் வைத்து வழிபட்டதால் கோட்டையம்மன் என்றும் ஒரு பெயர் வழங்கப்பட்டிருக்கிறது.
காளிகாம்பாள் கோவில் ஆங்கிலேய வணிகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் கோட்டைக்கு வெளியே தம்பு செட்டித் தெருவிற்கு இடம் மாறினாள். இடம் மாறியதே தவிர பக்தர்களின் எண்ணிக்கை மாறவில்லை. அம்மனை வழிபட ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து கொண்டே இருந்தனர். அப்படி வந்த ஒரு விஐ.பி. பக்தர்தான் சத்ரபதி சிவாஜி. 1677-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந்தேதி காளிகாம்பாள் கோவிலுக்கு வந்தார் என கோவிலில் ஒரு குறிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
மகாகவி பாரதியார் சுதேசிமித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்தபாது பிராட்வேயில் தங்கி இருந்தார். அப்போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வழிபட வருவார். “யாதுமாகி நின்றாய் காளி” என்ற அவரது பாடலில் வருவது காளிகாம்பாள்தான். சத்ரபதி சிவாஜி, பாரதியார் தொடங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பலரையும் ஆசிர்வதித்த காளிகாம்பாள், 3 நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் தனது அன்பால் சென்னையை அரவணைத்துக் கொண்டிருக்கிறாள். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவளை சரண் அடைந்து அருள் பெறுகிறார்கள்.
கடற்கரைக் கோவிலில் காளி உருவம் உக்கிரமாக இருந்ததாக வும், தம்புசெட்டித் தெருவிற்கு மாறியபோது காளியின் உருவம் சாந்த சொரூபியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கருணை தெய்வமான காளிகாம்பாள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்... ஏராளம்... அவற்றை எவராலும் பட்டியலிட முடியாது.
பொதுவாக தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் முதலியன கொண்டு கோப ரூபத்துடன் இருப்பவளே காளி என்று சொல்வார்கள். ஆனால், நம் அன்னை ஸ்ரீகாளிகாம்பாளின் ரூபத்தினை சற்றே உன்னிப்பாகப் பார்த்தால், அன்னை எழில் கொஞ்சும் திருமேனியுடன் இருப்பதை காணலாம்.
ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பவ மலர் மற்றும் தன் திருவடிகளை தஞ்சமென அடைய உயிர்கட்குக் காட்டும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலம் என்று அன்னை நம் மனதை மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க வைக்கிறாள்.
அன்னையின் இத்திருமேனி, அன்னை ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் ரூபம் கொண்டது. ஆனந்த வாழ்வளிக்கும் அன்னை, வேண்டுபவர்க்கு வேண்டுவன அளித்து ஆனந்தம் நல்குகிறாள். நம் அன்னை வரப்ரதாயினி. ஞானச்சுடராய் விளங்கி பெருங்கருணையோடு ஜீவன்களைக் காத்து அருளும் அன்னையினைக் காண கண்கள் கோடி வேண்டும்.
உலக வாழக்கையை வெறுத்து விரக்தியுடன் வந்து தரிசனம் செய்யும் பக்தனுக்கு முக்தி அளிக்கும் சக்தி கொண்டவள் அம்பிகை- காளிகாம்பாள் ஆவாள் அம்பாளைப் பார்க்கும் போது, அவள் நம்மை பாசத்தோடும், நேசத்தோடும் பார்ப்பது போலவே இருக்கும். அன்னை காளிகாம்பாள் தலத்திலும் இதை நாம் உணரலாம்.
காளிகாம்பாளும் நாம் வேண்டுவதை, ஒரு தாய் தன் பிள்ளையிடம் எப்படி கருணையோடு கேட்பாளோ, அந்த மாதிரி கேட்பாள். அவள் முகத்தை பார்க்கும் போது, ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் ஒரே நேரத்தில் ஒளியை வெளிப்படுத்துவது போல இருக்கும். தீபாராதனை காட்டும் போது காளிகாம்பாளை நன்கு உன்னிப்பாகப் பாருங்கள் அவள் விழிகள் சுடர் விழிகள் போல மாறி இருக்கும்.
கருவறையில் அம்பாள் வீற்றிருந்த கோலத்தில் இருக்கிறாள். வலது மேல் கையில் அங்குசம் ஏந்தியுள்ளாள். இடது மேல் கையில் பாசம் உள்ளது. வலது கீழ் கையில் தாமரை புஷ்பமும், இடது கீழ் கையில் வரஹஸ்தமும் வைத்துள்ளாள். மேலும் இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டபடி அமர்ந்துள்ளாள். அந்த கால் பாதம் தாமரை மலர் மீது படியும்படி அமர்ந்து இருக்கிறாள்.
இத்தகைய சிறப்புடைய காளிகாம்பாள் ஆலயத்தில் இந்த ஆண்டு ஆடி பெருவிழா நாளை மறுநாள் (19-ந்தேதி வெள்ளிக்கிழமை) தொடங்கி ஆகஸ்ட் 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஆடி பெரு விழாவில் 9 வெள்ளிக்கிழமைகளில் மாலை 6 மணி அளவில் உற்சவர் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
அதன்படி 19-ந்தேதி முதல் வார ஊஞ்சல் உற்சவம், 26-ந்தேதி 2-ம் வார ஊஞ்சல் உற்சவம், ஆகஸ்ட் 2-ந்தேதி 3-ம் வார ஊஞ்சல் உற்சவம், 9-ந்தேதி 4-வது வார ஊஞ்சல் உற்சவம், 16-ந்தேதி 5-ம் வார ஊஞ்சல் உற்சவம், 23-ந்தேதி 6-ம் வார ஊஞ்சல் உற்சவம், 30-ந்தேதி 7-ம் வார ஊஞ்சல் உற்சவம், செப்டம்பர் 6-ந்தேதி 8-ம் வார ஊஞ்சல் உற்சவம், செப்டம்பர் 13-ந்தேதி 9-ம் வார ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
வருகிற 27-ந்தேதி ஆடி கிருத்திகையை முன்னிட்டு காலை 8 மணிக்கு முருகனுக்கு பால் அபிஷேகம் நடைபெறும். அன்று மாலை 6 மணிக்கு முருகப்பெருமான் மயில்வாகனத்தில் வீதி உலா வருவார்.
ஆகஸ்ட் 3-ந்தேதி ஆடிப்பெருக்கு உற்சவம் நடைபெறும். அன்று காலை 9 மணிக்கு காளிகாம் பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப் படும். மாலை 6 மணிக்கு ஆடிப்பூரம் உற்சவம் நடை பெறும்.
பத்து வித அபிஷேகங்கள்
காளிகாம்பாள் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 10 ஞாயிற்றுக்கிழமைகளில் வித விதமான அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் எத்தகைய அபிஷேகம் நடத்தப்படுகிறது என்ற விவரம் வருமாறு:-
21.7.19 - 108 குடம் பால் அபிஷேகம்.
28.7.19 - 108 குடம் இளநீர் அபிஷேகம்
4.8.19 - 108 குடம் தயிர் அபிஷேகம்
11.8.19 - 108 குடம் மஞ்சள் அபிஷேகம்
18.8.19 - 108 குடம் சந்தன அபிஷேகம்
25.8.19 - 108 குடம் விபூதி அபிஷேகம்
1.9.19 - 108 குடம் பன்னீர் அபிஷேகம்
8.9.19 - 108 குடம் பஞ்சாமிர்த அபிஷேகம்
15.9.19 - 108 குடம் புஷ்ப அபிஷேகம்
22.9.19 - 108 குடம் புஷ்பு அபிஷேகம்
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணிக்கு காளிகாம்பாளுக்கும், ஸ்ரீகாயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும் நடைபெறும். ஒவ்வொரு அமாவாசை அன்று இரவு 7 மணிக்கு ஸ்ரீ விராட் விஸ்வ பிரம்மத்திற்கு விசேஷ பூஜையும், கூட்டு வழிபாடும் நடைபெறும்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 6 மணிக்கு ஸ்ரீ வீர பிரம்மங்கார் சுவாமிகளுக்கு விசேஷ பூஜை நடைபெறும்.
ஆடி மாத விழா தொடர்பாக காளிகாம்பாள் ஆலயத்தை 044-25229624 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

தமிழகத்தில் லட்சுமி நரசிம்மர், ஒரு சில இடங்களில்தான் தனிச் சன்னிதியில் காணப்படுகிறார். அந்த வகையில் முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் முக்கியத்துவம் பெறுகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள முத்தாலங்குறிச்சி, தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மிகவும் பழமையான ஊர். இவ்வூரில் உள்ள சிவாலயத்தில் அருளும் இறைவன், ‘வீரபாண்டிஸ்வரர்’ என்னும் ‘முகில்வண்ணநாதர்’ என அழைக்கப்படுகிறார். தாயார் சிவகாமி அம்மையார். வீரபாண்டிய என்ற பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதால் சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்லப் படுகிறது. எப்போதுமே மேக கூட்டங்கள் சுழலும் இடத்தில் தாமிரபரணி கரையில் இவர் அமர்ந்து இருப்பதால், முகில்வண்ணநாதர் என்ற பெயர் வந்தது.
சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இந்த ஆலயம் மிக பிரமாண்டமாக இருந்துள்ளது. அதற்கு சாட்சி இக்கோவிலில் உள்ளே உள்ள பிரமாண்டமான விநாயகர், பைரவர், சிவகாமி அம்மாள் ஆகியோரின் சிலைகளாகும். 200 வருடங்களுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. எனவே பிற்காலத்தில் இவ்வூரை ஆட்சி செய்தவர்கள், இந்த கோவிலை சிறிதாக கட்டி அதனுள் அனைத்து தெய்வங்களை பிரதிஷ்டை செய்து விட்டார்கள்.
தற்போது கோவிலுக்குள் சிவலிங்கம், சிவகாமியம்மாள், பைரவர் உள்பட அனைத்து தெய்வங்களும் ஒரே வளாகத்துக்குள் உள்ளது. இந்த கோவிலில் இருந்து தாமிரபரணி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நந்தி, தற்போது வெளியே தெரிந்து, அதை ஊரில் மற்றொரு இடத்தில் வைத்து வணங்கி வருகிறார்கள். இதற்கிடையில் இந்த கோவில் வளாகத்தில் உள்ள மற்றொரு சன்னிதியில் மிகப்பிரமாண்டமாக லட்சுமி நரசிம்மர் உள்ளார். தமிழகத்தில் லட்சுமி நரசிம்மர், ஒரு சில இடங்களில்தான் தனிச் சன்னிதியில் காணப்படுகிறார். அந்த வகையில் முத்தாலங்குறிச்சி லட்சுமி நரசிம்மர் முக்கியத்துவம் பெறுகிறார்.
நரசிம்ம அவதாரத்தின் போது பெருமாள், மிகுந்த கோபத்துடன் இரணியகசிபுவை வதம் செய்தார். அவனை வதம் செய்த பிறகும் அவரது கோபம் தணியவில்லை. அங்கிருந்த பொருட்களை தூக்கி எறிந்த வண்ணம் இருக்கிறார். இதனைக் கண்ட தேவர்கள் கலங்கினர். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அவர் அருகில் செல்ல யாருக்கும் துணிவில்லை. உடனே தேவர்கள் அனைவரும், லட்சுமி தேவியிடம் சென்று, “எப்படியாவது பெருமாளின் கோபம் தணித்து, பழைய நிலைக்கு கொண்டு வாருங்கள்” என்று கோரிக்கை வைத்தனர்.
லட்சுமி தேவி அங்கு வந்தார். ஆனால் நெருப்பு பொங்கும் கண்களுடன், உக்கிரமாக இருந்த நரசிம்மரைக் கண்டு அவர் பயந்து போனார். அந்த நேரத்தில்தான் சிறுவனான பிரகலாதன், தைரியமாக நரசிம்மரை நோக்கிச் சென்றான். பின் பகவானின் மடியில் அமர்ந்து, அவரது தலையை வருடி விட்டான். நரசிம்மரின் நாக்கு, நீண்ட நெடுங்கையை போல நீண்டு கொண்டிருந்தது. அந்த நாக்கைக் கொண்டு, பிரகலாதனின் முதுகில் தேய்த்து தனது சூட்டை தணித்தார். கோபம் தணிந்து அவர் சாந்தமான நிலைக்கு வந்தார்.
அதன்பிறகே, தேவர்களும், லட்சுமிதேவியும் அவரது அருகில் செல்ல முடிந்தது. நரசிம்மர் லட்சுமிதேவியை தன் மடியில் அமர்த்தி, லட்சுமி நரசிம்மராக காட்சி கொடுத்தார்.
ஒருவர் வெற்றிக் களிப்பில் இருக்கும் போது, அவரிடம் என்ன கேட்டாலும், கேட்டதைத் தரும் மனநிலையில் இருப்பார். அதுபோல, இங்கே இரணியனை வதம்செய்து விட்டு, வெற்றி களிப்பில் தனது மடியில் லட்சுமியை அமர வைத்து மிக சந்தோஷமாக இருக்கிறார், நரசிம்மர். எனவே இங்கு வந்து வணங்கி நின்றால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வதால் எதிரிகள் தொல்லை நீங்கும். நீண்ட நாள் பிரச்சினை தீரும்.
சிவன் கோவிலுக்கும், லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கும் இடையே விநாயகர் குடி கொண்டிருக்கிறார். 5 அடி உயரம் கொண்டவர். வெட்டவெளியில் வெயிலில் அமர்ந்து இருக்கிறார். இவருக்கு ‘வெயிலுகந்த விநாயகர்’ என்றும், ‘முக்குருணி அரிசி விநாயகர்’ என்றும் பெயர் உண்டு.
இவ்வூரில் தாமிரபரணி ஆற்றங்கரையில், ‘நல்ல பிள்ளை பெற்ற அம்மாள்’ என்ற ‘குணவதி அம்மன்’ அருள்பாலிக்கிறார். கணவனை பிரிந்து வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வழிகாட்டியாக இருந்து பிரசவம் பார்த்த மருத்துவச்சி இவர். நல்ல ஆண்பிள்ளை பெற்றெடுக்க காரணமாக இருந்ததினால், இவருக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்த அம்மன்தான் இந்த ஊரின் காவல் தெய்வம். 7 தலைமுறைக்கு முன்பே ஊரில் இருந்து வெளியூர் சென்றவர்களை தேடி கண்டுபிடித்து பிரசன்னம் மூலம் ஊருக்கு கூட்டி வந்த தெய்வம். அந்த வாரிசுகள்தான் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்துள்ளனர்.
எப்போதுமே முகில் வண்ணம் நிறைந்து இருந்த இவ்வூரில், சுமார் 200 வருடங்களுக்கு முன்பு முருக பக்தர் ஒருவருக்கு உணவு வழங்கவில்லை. எனவே அவர் சாபம் இட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. எனவே தற்போது இவ்வூரில் ஒரு போகம் கூட விளைவதில்லை. இந்த கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தால்தான் சாபம் தீரும் என பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே அதற்கான முயற்சியில் பக்தர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆலயம் தினமும் நடை திறக்க வாய்ப்பில்லை. அர்ச்சர் வீடு அருகில் இருப்பதால், யாராவது வந்தால் நடை திறந்து பூஜைகள் செய்யப்படுகிறது.
அமைவிடம்
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தூரத்தில் செய்துங்கநல்லூர் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து 6 கிலோ மீட்டர் தூரம் சென்றால் முத்தாலங்குறிச்சியை அடையலாம். செய்துங்கநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.
முத்தாலங்குறிச்சி காமராசு

துன்பங்கள் நீக்கும் காயதிரி நதி கொண்ட தலம், காஞ்சி மாமுனிவர் நான்குமுறை தரிசித்த இறைவன் என பல்வேறு சிறப்புகளை பெற்றது மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோவில்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலம், திருப் புகழ்ப் பாடல் பெற்ற ஊர், பிரம்மா, சூரியன், சந்திரன், இந்திரன், மிருகண்டு முனிவர், வேதமித்திரன், மருதாந்தன் போன்றோரின் தோஷங்களை நீக்கிய தலம், துன்பங்கள் நீக்கும் காயதிரி நதி கொண்ட தலம், காஞ்சி மாமுனிவர் நான்குமுறை தரிசித்த இறைவன் என பல்வேறு சிறப்புகளை பெற்றது மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோவில்.
புராண வரலாறு :
ஸ்காந்த புராணம், அகஸ்திய சம்ஹிதையில் சேத்திரக் காண்டத்தில் ஆம்ரவன சேத்திரம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. அதில் மிருகண்ட முனிவர் பேறு பெற்றது, பொய் சொன்ன பிரம்மன் சாபம் நீங்கியது, இந்திரனுக்கு கவுதமரால் ஏற்பட்ட சாபம் நீங்கியது பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் வேதமித்திரன் தந்தையின் அஸ்தி, இத் தலத்தில் ரத்தினமாக மாறிய நிகழ்வும் அரங்கேறியுள்ளது. தாயை இழந்த மான்குட்டிகளைக் காக்க இறைவனும், இறைவியும் இத்தலத்தில் தாய் மானின் உருவமாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள். இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவனால் ஈர்க்கப்பட்ட காஞ்சி மாமுனிவர், இங்கு நான்கு முறை வந்து இறைவனை பூஜித்து வழிபாடு நடத்தியுள்ளார்.
சம்பந்தர் தேவாரம் :
திருஞான சம்பந்தர் பதினோரு பாடல்களில் இத்தலத்தை பற்றி பாடி இருக்கிறார். அருணகிரிநாதரும் திருப்புகழில் இத்தல முருகனைப் பாடியுள்ளார். வடலூர் ராமலிங்க சுவாமிகளும் திருவருட்பாவில் இத்தலத்தை குறிப்பிட்டுள்ளார்.
பெருகு சந்தனம் காரகில் பீலியும் பெருமரம் நிமிர்ந்து உந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறை புனிதன் எம்பெருமானைப்
பரிவினால் இருந்து இரவியும் மதியமும் பார்மன்னன் பணிந்து ஏத்த மருதவானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே - என்று தேவாரத்தில் இத்தல இறைவனை சம்பந்தர் போற்றி புகழ்பாடி இருக்கிறார்.

ஆலய அமைப்பு:
இரண்டு நிலை கருவறையில் இறைவன் அருள் பாலிக்கிறார். ‘ஆம்ரம்' என்றால் 'மாமரம்' என்று பொருள். இத்தலத்து இறைவன் மாமர வனத்தில் காட்சியளித்ததால், ஆம்ரவனேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். கருவறை முன்பு விநாயகர், முருகர் காட்சி தருகின்றனர். கோவில் நுழைவு வாயிலின் மேல் பகுதியில் மான்குட்டிக்குத் தாயாக அவதரித்த புராண வரலாறு சுதைச்சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தை யொட்டிய கோவில் பிரகாரத்தின் தெற்கே தலமரமான மாமரம் அமைந்துள்ளது.
கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் எதிரில் நந்திமண்டபம் அமைந்துள்ளது. அதன் அருகே கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சன்னிதிகள் அமைந்து உள்ளன. அதைத்தொடர்ந்து பண்டிதர்சாமி கோவிலும், அதனுள் ஏராளமான வேல்களும் கம்பீரத்துடன் காட்சி அளிக்கின்றன. கருப்புச்சாமி வாகனமான இரண்டு குதிரைகளும் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றன. இவைதான் கிராமத்தின் காவல் தெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலாம்பிகை:
நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், கீழிரு கரங்கள் அபய, வரத முத்திரையோடும் நின்ற கோலத்தில் அன்னை பாலாம்பிகை எழிலாக காட்சி தருகிறாள். கருவறைக்கு எதிரே நந்தி உள்ளது.
கோவிலில் தென்மேற்கே அருணகிரிநாதர் பாடிய முருகன், மயில் வாகனத்தில் எழிலாக வள்ளி தெய்வானையோடு காட்சி தருகிறார். இவரை ‘மாங்கனி உடைந்து தேங்கவயல் வந்து மாண்பு நெல் விளைந்த வளநாடா’ என திருப்புகழ் கூறுகிறது. இதையடுத்து தண்டாயுதபாணி, கஜலட்சுமி, சண்டிகேசுவரர் சன்னிதிகள் அமைந்துள்ளன. வடகிழக்கில் நவக்கிரக சன்னிதி உள்ளது. அதில் சூரியன் தன் இரு தேவியரோடு காட்சி தருகிறார். அருகே பைரவர் சன்னதியும் உள்ளது.
இக்கோவிலில் சுவாமி சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன. சமயக்குரவர் நால்வர், கைத்தடியைத் தாங்கி நிற்கும் சுந்தரர் கோலம் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்குகிறது.

கல்வெட்டுகள்:
இக்கோவிலில் பிற்காலச் சோழரான திரிபுவன சக்கரவர்த்தி ராஜராஜதேவரின் இரண்டு கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. அதில் நிலதானம், விதிக்கப்பட்ட வரிகள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
விழாக்கள் :
பங்குனி மாதத்தில் முதல் மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இறைவனை வழிபடுவது இத்தலத்தின் சிறப்பு அம்சமாகும். மேலும் சிவாலயங்களில் நடக்கும் அனைத்து விழாக்களும் இங்கு எளிய முறையில் நடத்தப்படுகின்றன.
காயத்திரி தீர்த்தம்:
செவ்வாயும், சதுர்த்தியும் சேரும் தினத்தில் இத்தலத்து தீர்த்தமான காயத்திரி நதியில் நீராடினால் பலமடங்கு பலன் கிடைக்கும், துன்பங்கள் நீங்கும் என்று தல வரலாறு கூறுகிறது.
அமைவிடம் :
திருச்சி - லால்குடி வழித்தடத்தில் 15 கி.மீ. தொலைவில் மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோவில் அமைந்துள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன.
- பனையபுரம் அதியமான்

சிவத்தலங்கள் அனைத்திலும் சன்னிதிக்கு முன்பாக, காவலாக அமர்ந்துள்ள நந்திக்கு, இறைவன் பிரத்யேகமாக அருள்பாலித்த இடம் ஆந்திரா மாநிலம் நந்தியால் அருகே உள்ள மகாநந்தி தலம் ஆகும்.
நந்தி என்றால் ‘பிறரை மகிழ்விப்பவர்’ என்று அர்த்தம். அந்தப் பெயர் இறைவனின் வாகனமாக விளங்கும் நந்தி தேவருக்கு சிறப்பாக பொருந்தும். பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான், நந்திக்கு நிறைய அதிகாரங்களை வழங்கியுள்ள காரணத்தால், அவருக்கு ‘அதிகார நந்தி’ என்ற பெயரும் உண்டு. உலகின் முதல் குருவான நந்தியிடம், அனங்கன், இந்திரன், சோமன், கந்தர்வர்கள் உள்ளிட்ட பல தேவர்கள் வேதங்களைக் கற்றதாக ஐதீகம்.
சிவபெருமானின் வாகனம் மற்றும் கொடி ஆகியவற்றில் உள்ள நந்திதேவர், வெண்மை நிறம் கொண்டவர். அறம், தூய்மை மற்றும் ஆண்மை ஆகியவற்றின் அடையாளமான தர்ம தேவனின் வடிவத்தில், சிவனுடைய வாகனமாக விளங்குபவர். சிவன், பார்வதி ஆகிய இருவர் முன்பாக ஆனந்த வடிவாகவும் அமர்ந்திருக்க கூடியவர் நந்தியம்பெருமான்.
சிவபெருமானின் நெற்றிக்கண் பார்வைக்கு, நேர் எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறு யாராலும் முடியாது. அப்படியொரு வரத்தை சிவபெருமானே நந்திக்கு வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில், சிவத்தலங்கள் அனைத்திலும் சன்னிதிக்கு முன்பாக, காவலாக அமர்ந்துள்ள நந்திக்கு, இறைவன் பிரத்யேகமாக அருள்பாலித்த இடம் ஆந்திரா மாநிலம் நந்தியால் அருகே உள்ள மகாநந்தி தலம் ஆகும்.
பல யுகங்களுக்கு முன்னர் சிலாத மகரிஷி, நல்லமலை தொடர் பகுதியில் இருந்த வில்வ மரக்காடுகளின் இடையே ஆசிரமம் அமைத்து தங்கியிருந்தார். அவருக்கு தனக்குப் பின்னர் ஈசனை வழிபட ஒரு மகன் வேண்டும் என்ற ஆவல் இருந்தது. மகேஸ்வரனிடம் குழந்தைப் பேறு அருளுமாறு சிலாத மகரிஷி வேண்டினார்.
அதன்படி இறைவன் அருளால், மல்லிகார்ஜூனன், நந்தனன் என்று இரண்டு மகன்கள் பிறந்தார்கள். பெரிய மகன் மல்லிகார்ஜூனன், ஸ்ரீசைலத்தில் இருக்கும் மல்லிகார்ஜுனரை நினைத்து தவம் செய்தான். அதன் மூலம், ஈசனைத் தன் இதயத்தில் குடிகொள்ளும் வரம் பெற்றான். இளைய மகன் நந்தனன், தனது தந்தையிடம் வேதங்களையும், உபநிடதங் களையும் கற்றுத் தேர்ந்து, கயிலைநாதனை நோக்கித் தவம் புரிந்தான். அவனுக்கு காட்சியளித்த சிவபெருமான், “என்ன வரம் வேண்டும்?” என்றார்.
அதற்கு நந்தனன், “நான் எப்போதும் உங்களுக்கு சேவை செய்யும் பெரும் பேற்றை தந்தருள வேண்டும்” என்று வேண்டினார்.
நந்தனின் உள்ளத்தில் இருந்த அன்பை உணர்ந்த சிவன், அவரைத் தன் வாகனமாக விளங்குமாறு அருள் செய்ததுடன், தனது பூத கணங்களுக்கு தலைவராகும் தகுதியையும் அளித்தார். அப்படிப்பட்ட வரத்தை நந்தி பெற்ற திருத்தலம் என்பதால், நந்திக்கு உரிய தலமாக மகாநந்தி தலம் அறியப்படுகிறது. நந்தனன் தவம் செய்யும்போது உருவான புற்றே, இந்த தலத்தில் லிங்க வடிவில் வழிபடப்படுகிறது. இந்த தலத்து இறைவன் மகாநந்தீஸ்வரராக காட்சி தருகிறார். இங்கு சிவபெருமானுக்கு சுக்கு, சர்க்கரை, வெண்ணெய் மூன்றும் கலந்து நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
கலியுகத்தில் நந்த சக்ரவர்த்தியால் கட்டமைக்கப்பட்ட இந்த திருத்தலம், பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 7-ம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னர்களும், 11-ம் நூற்றாண்டில் அப்பகுதியை ஆண்ட நந்த வம்சத்து அரசர்களும் கோவிலை பெரிதாக அமைத்துள்ளார்கள். விஜயநகர மன்னர்களில் கிருஷ்ணதேவராயரின் சகோதரர் சிம்மதேவராயர், இந்த ஆலயத்தின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி இருக்கிறார். 17-ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட கர்நூல் நவாப், மகாநந்தி சிவராத்திரி திருவிழாவுக்கு ஆண்டுதோறும் நன்கொடைகள் அளித்து வந்துள்ளார்.
கருவறையில் மகாநந்தீஸ்வரர் மேற்குத் திசை நோக்கி உள்ளார். சுயம்பு லிங்கம் என்பதால், பக்தர்கள் அவர்களாகவே லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யலாம். நந்தீஸ்வரர் முழுமையான லிங்க வடிவில் இல்லாமல், பசுவின் கால் பட்டு உடைந்த புற்று வடிவில் இருக்கிறார். அதன் நடுவில் இருந்து நீர், தீர்த்தமாக பெருகி வெளிவருகிறது. அதன் பீடம் தரையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. நந்தீஸ்வரர் சன்னிதிக்கு முன்புறமாக, தலத்துக்குப் பெருமை சேர்க்கும் நந்தி, பிரமாண்டமான வடிவில் இறைவனை எப்போதும் தரிசித்தவாறு காட்சி தருகிறார். தலத்தின் மூலவர் ஸ்ரீமகாநந்தீஸ்வரர் மற்றும் அம்பிகை ஸ்ரீகாமேஸ்வரி.

ஆச்சரியம் நிறைந்த அற்புத தீர்த்தம்
கங்கையைத் தலையில் அணிந்த கங்காதரரின் காலடியில் இருந்து, இத்தலத்தின் புஷ்கரணி தோன்றுகிறது. சுயம்பு லிங்கத்தின் கீழே எங்கிருந்து நீர் வருகிறது என்பது இன்றுவரை அறியப்படாத புதிராகவே உள்ளது. கருவறையில் தோன்றும் புனித நீர், சன்னிதிக்கு அடுத்த முக மண்டபத்துக்கு எதிரே உள்ள ருத்ர குண்டத்தில் சென்று சேருகிறது. ஈசன் சன்னிதியில் இருந்து பெருகும் நீர், ருத்ர குண்டத்துக்குள் ஒரு நந்தியின் வாயில் இருந்து கொட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளது. பளிங்கு போல சுத்தமாக உள்ள இந்த நீர், கோடையிலும், கொட்டும் மழையிலும் ஒரே அளவாக சுரப்பது ருத்ர குண்டத்தின் சிறப்பாக பக்தர்களால் குறிப்பிடப்படுகிறது.
60 அடி அகலமும், 5 அடி ஆழமும் கொண்ட ருத்ர குண்டத்தில் நீராடினால், பல பிறவிகளில் சேர்த்த பாவங்களைப் போக்கலாம் என்பது ஐதீகம். மேலும் இந்த நீர், தீராத நோய்களையும் தீர்க்கும் மருத்துவ குணம் நிறைந்தது. அந்த தண்ணீர் ஆலயத்துக்கு வெளியே உள்ள இரட்டைக் குளங்களை அடைவதால், ஆலயம் மூடி இருந்தாலும் இந்த நீரில் நீராடலாம். அந்த குளங்களில் இருந்து வெளியேறும் நீர், கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்திற்கு பாசன நீராகவும் பயன்படுகிறது.
வைகாசி மாதம், சுத்த சப்தமி அன்று எல்லா நதிகளும், சமுத்திரங்களும், இங்குள்ள ருத்ர குண்டத்தில் வந்து சேர்வதாக புராணங்கள் சொல்கின்றன. அன்றைய தினம் இங்கு நீராடினால் அத்தனை புனித தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும். அந்த நாளில் இங்கு கும்பமேளா போல மக்கள் கூடி நீராடுகிறார்கள்.
நவநந்தி தலங்கள்
மகாநந்தி தலத்தைச் சுற்றி சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவில், விநாயக நந்தி, கருட நந்தி, சூரிய நந்தி, சோம நந்தி, சிவ நந்தி, விஷ்ணு நந்தி, பிரம்ம நந்தி, நாக நந்தி ஆகிய நந்தி களுடன் இந்த தல நந்தியையும் சேர்த்து மொத்தம் ஒன்பது நந்தி தலங்கள் அமைந்துள்ளன. இந்த ஒன்பது தலங்களும் ‘நந்தி மண்டலம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நந்திகளுக்கு நாயகனாக, மகாநந்தியில் உள்ள சிவன் மகாநந்தீஸ்வரர் திகழ்கிறார். பிரம்ம நந்தி தலம், நந்தியால் ரெயில் நிலையம் அருகே உள்ளது.
நந்தியாலுக்கு மேற்கே உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் நாக நந்தி உள்ளது. சூரிய நந்தியானது, நந்தியாலுக்கு கிழக்கே இருக்கிறது. சிவ நந்தி என்பது நந்தியாலில் இருந்து 14 கி.மீ தொலைவிலுள்ள காதமாலா ஏரி அருகே உள்ளது. கருட நந்தியானது மகாநந்திக்கு மேற்கேயும், விஷ்ணு நந்தியானது மகாநந்திக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளன. சோம நந்தி என்பது நந்தியாலுக்கு மேற்கே ஆத்மகூர் அருகிலும், விநாயக நந்தி என்பது மகா நந்தியிலும் அமைந்துள்ளது. காலையில் தொடங்கி, மாலைக்குள் நவ நந்திகளையும் தரிசனம் செய்பவர்கள் இந்த பூமியையே வலம் வந்த பலனை பெறுகிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அமைவிடம்
இந்தத்தலம் ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நந்தியாலில் இருந்து 16 கி.மீ தூரத்தில் மகாநந்தி தலம் அமைந்துள்ளது.
ஆனைமலையின் வடபுறம் உள்ள நரசிங்கம் கிராமப்பகுதியில் பழமையான முருகன் குடவரைக் கோவிலுக்கு அருகில், யோக நரசிங்கப் பெருமாளுக்கும் ஒரு குடவரை ஆலயம் உள்ளது.
மதுரைக்கு வடகிழக்கே, மேலூர் வழியில், 4 கி.மீ. தொலைவிலுள்ள ஒத்தக்கடைக்கு அருகே, யானை படுத்திருப்பது போல், தென்மேற்கு - வடகிழக்குப் போக்கில் சுமார் 250 அடி உயரமும், 5 கி.மீ. நீளமும் உள்ள மலையே ஆனைமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆனைமலையின் வடபுறம் உள்ள நரசிங்கம் கிராமப்பகுதியில் பழமையான முருகன் குடவரைக் கோவிலுக்கு அருகில், யோக நரசிங்கப் பெருமாளுக்கும் ஒரு குடவரை ஆலயம் உள்ளது.
ஆலய வாசலுக்கே செல்லும் வகையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி மினிபஸ் வசதியுள்ளது. இரண்யகசிபுவை அடக்கிட நரசிம்மராக வந்தவர்க்குக் கோவில் உள்ள ஊரை நரசிங்கம் என்பது பொருத்தமாக இருப்பது போல, இதன் பண்டைப் பெயர்களான நரசிங்க மங்கலமும் இரணியமுட்டமும் பொருத்தமாகவே உள்ளன.
கி.பி. 8,9ம் நூற்றாண்டுகளில் மிக வளப்பமாக இருந்த இப்பகுதியில், மதுரையை ஆண்ட சடையவர்மன் பராந்தக பாண்டியனின் அமைச்சர் மாறன் காரி யோக நரசிம்மருக்குக் கோவில் எழுப்பியதாகத் தெரிகிறது. சுமார் 6 அடி அகல, நீள, உயரக் கருவறையும், யோக நரசிம்மப் பெருமாள் திருவுருவும், கருவறைக்கு முன் உடையவரும் நம்மாழ்வாரும் உள்ள அர்த்த மண்டபமும் குடைவு அமைப்புகள். பிற மண்டபங்கள் கட்டுமானமே. கருடாழ்வார் மண்டபமும், ஆலய வளாகத்தின் வடகீழ் பகுதியில் உள்ள நரசிங்கவல்லித் தாயாரின் தனிக்கோவிலும் பிற்கால அமைப்புகளாகத் தெரிகின்றன.
ஆலயத்தை ஒட்டி கிழக்கு, வடகிழக்காக, மலையின் அடிவாரத்திலேயே சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் சதுரவடிவ நன்னீர்ப் பொய்கை உள்ளது. காலவசத்தால், சம்பு, தர்ப்பை மற்றும் காட்டுச் செடிகள் வளர்ந்து, நீர்ப்பரப்பே தெரியாத அளவுக்கு மறைந்திருந்த பொய்கையின் நிலை தற்போது மாறிவிட்டது. பக்தர்கள் மனதில் பெருமாள் ஏற்படுத்திய உந்துதலால், பொய்கை பழைய பொலிவை மீளப் பெற்றுள்ளது. குடவரைக் கோவிலை திருச்சுற்றிட வாய்ப்பில்லாததால் பண்டைய மரபுப்படி, திருக்குளத்தைச் சுற்றி வந்த பின் ஆலய தரிசனம் செய்தல் சிறப்பு.
கங்கை நீரும், காவிரி நீரும் போற்றப்படுவது போல, மிகச் சுவையாக உள்ள இந்தப் பொய்கையின் தீர்த்தமும் பல உடல், மன அல்லல்களைப் போக்கும் தனித்தன்மையும், சிறப்பும் பெற்றிருப்பதை, முந்தைப் புராணங்களும், இன்றையோரின் விவரிப்புக்களும் தெரிவிக்கின்றன.
மாசிப் பவுர்ணமியில், பெருமாள் ஆலயத் திருக்குளங்களில் நடைபெறும் கஜேந்திர மோக்ஷ திருவிளையாடல் இத்திருக்குளத்தில் இன்றும் நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் கொடி மரம் இல்லாததால், நின்ற கோலத்திலுள்ள நரசிம்ம உற்சவர் திருமேனி கோவிலுக்கு வெளியே வருவதில்லை. இங்கிருந்து 4 கி.மீ.ல் உள்ள, ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த திருமோகூர் காளமேகப் பெருமான் உற்சவ மூர்த்தியே இத்திருவிழாவிற்காக நரசிங்கத்திற்கு எழுந்தருளுகிறார்.
ஆலயங்களில் நிறுவப்படும் கொடிமரத்தின் உயரம் கருவறைக்கு மேல் எழுப்புகின்ற விமானத்தின் நீள, அகல, உயர பரிமாணத்தின் படி அமைப்பதே பொது மரபு. யோக நரசிம்மரின் குடவரைக் கருவறைக்கு மேல் ஆனைமலை வானளாவி இருப்பதும், இங்கு கொடிமரம் வைக்கப்படாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

சென்னை வியாசர்பாடி பகுதியில் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் ஸ்ரீலஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் இருக்கிறது. சித்தர்களில் ஒருவராக அறியப்படும் இவர், ‘ஆனந்தாசிரமம்’ என்ற சாது சங்கத்தை அமைத்து, பலரது அஞ்ஞானத்தைப் போக்கியிருக்கிறார்.
முருகப்பெருமானின் சிறப்பு மிக்க தலங்களில் ஒன்றான திருப்போரூரில் முத்துசாமி பக்தர்- செங்கமலத்தம்மாள் ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் சிவப்பிரகாசம். இவர் சிறு வயதிலேயே சைவ சமயத்தின் பஞ்சாட்சரத்தை உச்சரிப்பதிலும், சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதிலும் தன்னுடைய சிந்தனையை செலுத்தினார்.
இந்த நிலையில் சிவப்பிரகாசத்தின் குடும்பத்தினர் சென்னை நகருக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு சைவ ரத்தின தேசிகரிடம் வேதாந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். சிவப்பிரகாசம், சிறுவயதிலேயே தனிமையை நாடினார். யோக பயிற்சிகளில் ஈடுபட்டு, அவ்வப்போது சமாதி நிலையை அடைந்துவிடுவார். ஒரு முறை அவர் சமாதி நிலையில் இருந்தபோது, அவரது குடும்பத்தினர் சிவப்பிரகாசம் இறந்து விட்டதாகக் கருதினர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் சமாதி நிலையில் இருந்து மீண்டதும்தான் அனைவருக்கும் உண்மை புரிந்தது.
அவரது 16-வது வயதில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஆனால் அந்த இல்லற வாழ்வில் இருந்து விடுபட நினைத்த அவர், திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதி இருந்த இடத்திற்குச் சென்று துறவு கோலம் பூண்டார். அவரை குடும்பத்தினர் இல்லறத்திற்கு அழைத்து வந்தனர். வீடு வரை வந்தவர், வீட்டிற்குள் செல்லாமல், திண்ணையிலேயே அமர்ந்து கொண்டார்.
தாயார் கொண்டு வந்து கொடுத்த உணவை கரத்தில் பெற்று உண்டார். மூன்று உருண்டை உணவை பெற்று சாப்பிட்டவர், அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். பின்னர் அவர் துன்பங்கள் சூழ்ந்திருந்த இல்லத்திற்குச் சென்று, ஒரு கவளம் உணவை கரத்தில் வாங்கி உண்பார். அதன் மூலம் அந்த இல்லங்கள் சுபீட்சமான வாழ்வை அடைந்தன. கரத்தையே பாத்திரமாக ஆக்கி உணவை வாங்கி அருந்திய காரணத்தால் ‘கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டார்.
திருவான்மியூர், வேப்பேரி, சூளை, செங்கல்வராய தோட்டம் என தனது தவ வாழ்க்கையை பல இடங்களில் கழித்து வந்தார். அவர், சாதுக்களுக்காக ஒரு மடத்தை அமைக்க விரும்பினார். இதையறிந்த ஒரு தொண்டா், வியாசர்பாடியில் ஒரு இடத்தை வாங்க உதவி செய்தார். அங்கு சுவாமிகள், ‘ஆனந்தாசிரமம்’ அமைத்தார். அது ‘சாமியார் தோட்டம்’ என்றும் பெயர் பெற்றது.
தன்னை நாடிவரும் அன்பர்களுக்கு அவர்களின் துன்பங்களைப் போக்கி வந்த சிவப்பிரகாச சுவாமிகள், தன்னுடைய உடலில் இருந்து ஆன்மாவைப் பிரிக்கும் காலம் நெருங்கியதை உணர்ந்தார். அந்தச் செய்தியை மூன்று நாட்களுக்கு முன்பாகவே தன்னுடைய பக்தர்களுக்கு அறிவித்தார். பின்னர் யோகத்தில் ஆழ்ந்தவர் 4.4.1918-ம் ஆண்டு சமாதி அடைந்தார். அவரது சமாதியின் மீது சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் உருவானது.
கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள், ‘ஆன்ம புராணம்’, ‘தத்துவாத சந்தானம்’ என்ற அத்வைத நூல்களை தமிழில் வெளியிட்டுள்ளார். இவரது 144-வது அவதார தினம், வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் தில்லைஸ்தானம் என்ற இடத்தில் இளங்கோவை அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் தில்லைஸ்தானம் என்ற இடத்தில் இளங்கோவை அம்மன் ஆலயம் உள்ளது. இந்த அம்மன் இங்கு வந்ததற்கு தல வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது.
கேரளாவில் உள்ளது ஒரு மலைக் கிராமத்தில் ஒரு சிறிய ஆலயம். அந்த ஆலயத்தில் அருள்புரிந்து கொண்டிருந்தாள், அன்னை இளங்காளி அம்மன். சரியான பராமரிப்பு இல்லாத ஆலயம். மக்களும் ஆலயத்திற்கு வருவதில்லை. முறையான வழிபாடுகள் கிடையாது. இதனைக் கண்ட அன்னையின் மனதில் வெறுமை சூழ்ந்தது. ‘நான் ஏன் இங்கு இருக்க வேண்டும்’ என தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். வேறு இடம் சென்றாள் என்ன? அன்னையின் மனதில் தோன்றியது. இந்த எண்ணம்.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே இருக்க முடியும். அன்னை முடிவெடுத்தாள். மூலவர் அன்னை காற்று வடிவமாக அரூபமாக வெளியே வந்தாள். தெற்கு நோக்கி காற்று வடிவில் பயணத்தைத் தொடங்கினாள். காட்டின் வழியே காற்று வடிவில் பயணம் செய்த அன்னை, பல காத தூரத்தைக் கடந்தாள்.
‘எங்கே கோவில் கொள்வது?’ அன்னைக்குப் புரியவில்லை. மனதிற்கும் பிடித்த இடம் எதுவும் அமையவில்லை. காட்டில் ஓரிடத்தில் சிறுவன் ஒருவன் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவனுக்கு பன்னிரண்டு வயது இருக்கும். இடுப்பில் ஒரு துண்டு. தோளில் ஒரு துண்டு. கையில் நீண்ட ஒரு மூங்கில் கழி. அன்னை அவன் எதிரே போய் நின்றாள்.
“தம்பி” அழைத்தாள் அன்னை.
குரல் கேட்டு சுற்றிலும் பார்த்தான் சிறுவன். யாரையும் காணவில்லை.
கல் மீது அமர்ந்த அந்த சிறுவன், கையில் இருந்த கொய்யாப் பழத்தை சுவாரசியமாக கடித்து உண்ணத் தொடங்கினான்.
“தம்பி” மறுபடியும் அழைத்தாள் அன்னை.
குரல் கேட்டு திடுக்கிட்டான் சிறுவன். சுற்றிலும் பார்த்தான். இப்போதும் யாரையும் காணவில்லை.
திகிலுடன் “யாரது?” என்று கூவினான்.
காற்று வடிவில் இருந்த அன்னை “நான்தான்” என்றாள்.
குரல் மட்டும் கேட்கிறது. யாரையும் காணவில்லையே என்று எண்ணிய சிறுவன் பயம் கலந்த துணிவுடன் “நான்தான் என்றால் யார்? பேயா?” என்று கேட்டான் சற்றே நடுங்கிய குரலில்.
“இல்லை. என் பெயர் இளங்காளி அம்மன்” என்றாள் அன்னை.
“இல்லை. நான் நம்ப மாட்டேன். நீ காளி என்றால் என் முன்னே வரலாமே. உன் தலையையும் பார்க்க முடியவில்லை, காலையும் பார்க்க முடியவில்லை. கால் இல்லை என்றால் அவர்கள் பேய் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் நீ உன்னுடைய கால்களை மட்டுமாவது எனக்கு காட்டு. அப்போதுதான் நான் நம்புவேன்” என்றான்.
“இதோப் பார் குனிந்து எதிரே பார்”
சிறுவன் குனிந்து எதிரேப் பார்த்தான்.
எதிரே இரண்டு பாதங்கள் தெரிந்தன. அந்தப் பாதத்தின் கணுக்காலில் ஒரு பாம்பு சுற்றிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட சிறுவனின் உடம்பு வியர்க்கத் தொடங்கியது. கரம் குவித்து அன்னையின் பாதத்தையும், சீறும் நாகங்களையும் வணங்கினான்.
“தாயே! நான் என்ன செய்ய வேண்டும்?”
“எனக்கு ஒரு உதவி வேண்டும்”
“சொல்லுங்கள் தாயே” என்றான் சிறுவன்.
“எனது இரண்டு பாதங்களையும் ஒரு மரப்பெட்டியில் வைத்து ஆற்றில் விட வேண்டும்”
“ஏன் தாயே?”
“கேள்வி வேண்டாமே! சொன்னதை செய்”
“ஆகட்டும் தாயே” என்ற சிறுவன் அருகே இருந்த காவிரி நதிக்கரை வந்தான்.
காவிரியில் தண்ணீர் சீராக ஓடிக் கொண்டிருந்தது. அக்கரையில் உள்ள தன் வீட்டிற்குச் சென்றவன், அங்கு இருந்த ஒரு மரப்பெட்டியை எடுத்து கொண்டு திரும்ப அன்னை இருந்த இடத்திற்கு வந்தான்.
பெட்டியைத் திறந்தான். இரண்டு பாதங்களும் நாகங்களுடன் பெட்டியில் அமர்ந்து கொண்டன.
“பெட்டியை மூடு. இறுக கட்டு. பிறகு ஆற்றில் விட்டு விடு” என்று குரல் ஒலிக்க, சிறுவன் பெட்டியை மூடினான். அருகே படர்ந்து இருந்த கோவை கொடிகளை பறித்து பெட்டியை இறுகக் கட்டினான்.
காவிரியில் திடீரென நுங்கும் நுரையுமாக வெள்ளம் வரத்தொடங்கியது. அந்தப் பெட்டியை சிறுவன் அந்த வெள்ளத்தில் மிதக்க விட்டான். பெட்டி தன் பயணத்தைத் தொடங்கியது. காவிரி வெள்ளத்தில் பயணம் செய்த அந்தப் பெட்டி ஓரிடத்தில் கரை ஒதுங்கியது.
அந்த நேரம் காவிரியில் நீராட வந்தார், ஒரு முதியவர். அந்த ஊரின் பெரிய மனிதர் அவர். தன் கண்ணில் பட்ட பெட்டியை எடுத்துக் கொண்டு, வீட்டிற்கு வந்தார்.
ஆனால் பெட்டியை திறந்து பார்க்காமல், பரண் மேல் வைத்து விட்டார். பின்னர் அந்தப் பெட்டியைப் பற்றி மறந்து விட்டார்.
சில நாட்கள் கடந்தன. ஒரு நாள் அவர் பண்ணையில் இருந்த ஒரு பசு திடீரென இறந்தது. பெரியவருக்கு காரணம் புரியவில்லை. மறுநாள், அதற்கு அடுத்த நாளும் மற்றொரு பசு இறந்து போனது. பதறிப்போனார் பெரியவர். அன்று இரவு, அவரது கனவில் தோன்றிய இளங்காளி அம்மன், “நீ ஆற்றில் இருந்து எடுத்து வந்த பொட்டியில் நான்தான் இருக்கிறேன். என்னை நீ மறந்துவிட்டாய். எனக்கு ஒரு கோவில் கட்டு. இந்த ஊரின் காவல் தெய்வமாக இருந்து மக்களை காப்பேன்” என்றாள்.
திடுக்கிட்டு விழித்த பெரியர், பரண் மேல் இருந்த பெட்டியை எடுத்துப் பார்த்தார். பெட்டிக்குள் ஒன்றுமே இல்லை. அன்னையின் திருவிளையாடல் என்று எண்ணிய பெரியவர், ஊர் மக்கள் உதவியோடு ஆலயம் கட்டினார். மூலவராக தான் கனவில் கண்ட அன்னையின் உருவத்தை சிலையாக வடித்தார். நான்கடி உயரம், நின்ற கோலம். நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் சூலம், உடுக்கை, கீழ் இரு கரங்களில் பாசம், கபாலம், அன்னையின் கழுத்து மாலை, கால் சிலம்பு, கை வளையல்கள், இடுப்பு ஒட்டியானம் என்று அனைத்தும் பாம்பின் வடிவங்கள்.
கோவை கொடிகளால் சுற்றப்பட்ட பெட்டியில் வந்ததால், அன்னைக்கு ‘இளங்கோவை அம்மன்’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது. இந்த ஆலயமே தில்லைஸ்தானத்தில் உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. மூலவர் வடதிசை நோக்கி அருள் பாலிக்கிறாள். ஆலயத்தின் மேல் திசையில் திருக்குளம் உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தலத்திற்கு அருகே உள்ளது, தில்லைஸ்தானம். கல்லணை - சுவாமிமலை சாலையில் கல்லணையில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், திருவையாறில் இருந்து 1½ கி.மீ தொலைவிலும் ஆலயம் இருக்கிறது. தில்லைஸ்தானம் பேருந்து நிறுத்தம் அருகேயே ஆலயம் உள்ளது.
ஜெயவண்ணன்

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், மய்யில் (வேளம்) என்ற இடத்தில் மகாகணபதி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம், மய்யில் (வேளம்) என்ற இடத்தில் மகாகணபதி கோவில் உள்ளது. இத்தல இறைவனுக்கு யானைத் தந்தங்களைப் போன்ற தங்கக் கொம்புகளைச் சமர்ப்பித்து வழிபட்டால், அவர் வேண்டியதை உடனடியாக நிறைவேற்றித் தருவார் என்கிற நம்பிக்கை இங்கு வழிபடும் பக்தர்களிடம் நிறைந்திருக்கிறது.
தல வரலாறு :
பரசுராமர், கேரளத்தில் 108 எனும் எண்ணிக்கையில் சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள் மற்றும் தேவி ஆலயங்களை நிறுவினார். அதோடு அவற்றைச் சிறந்த முறையில் பராமரிப்பதற்காக பல அந்தணர் குடும்பங்களையும் அங்கு குடியேற்றினார். கண்ணூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சில இடங்களிலும் பல அந்தணர் குடும்பங்கள் குடியேறியிருந்தன.
இந்தப் பகுதியில் வசித்து வந்த அந்தணர்கள் அனைவரும், தளிப்பிரம்பா என்ற இடத்தில் அமைந்த ராஜராஜேஸ்வரர் கோவிலில் இருக்கும் இறைவனையே தங்கள் முதற்கடவுளாக நினைத்து வழிபட்டனர். அவர்களிடையே வேதங்கள், சடங்குகள் தொடர்பாக, ஏதாவது ஐயங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, அவர்களுக்குள்ளாகவே வாதிட்டு, சிறந்ததொரு முடிவுக்கு வருவது என்கிற வழக்கத்தையும் அவர்கள் மரபு வழியாகப் பின்பற்றி வந்தனர்.
தளிப்பிரம்பா ராஜராஜேஸ்வரர் ஆலய வழிபாட்டு உரிமை, இப்பகுதியில் குடியிருந்த அனைவருக்கும் பொதுவானதாக இருந்த போதிலும், தளிப்பிரம்பாவில் வசித்த அந்தணர்கள் மட்டும் அந்த ஆலயத்தின் மீது அதிக அளவில் உரிமை கொண்டாடினர். அதனடிப்படையில், கோவிலின் ஆலயமணியைத் தளிப்பிரம்பா அந்தணர்களில் ஒருவரே அடித்து ஒலியெழுப்ப வேண்டும் என்ற வழிமுறையும் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அருகில் உள்ள வேளம் கிராமத்தைச் சேர்ந்த சில அந்தணர்கள், தளிப்பிரம்பா கோவிலுக்கு வந்தனர். அவர்களில் ஒருவர் நுழைவு வாசலில் இருந்த ஆலயமணியைப் பக்தியுடன் அடித்து ஒலி எழுப்பினார். அதனையறிந்த தளிப்பிரம்பா அந்தணர்கள், அவரைக் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று தெரிவித்ததுடன், அவரை வலுக்கட்டாயமாகக் கோவிலை விட்டு வெளியேற்றவும் செய்தனர்.
கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டதால் வேதனை அடைந்த அந்த அந்தணர், தான் குடியிருக்கும் வேளம் ஊரிலும் தளிப்பிரம்பா ஆலயத்தைப் போன்றதொரு ஒரு ஆலயத்தைக் கட்ட முடிவு செய்தார். வேளத்தில் இருந்த பழமையான வைத்தியநாதர் ஆலயத்தின் வடக்குப் பகுதியில், தளிப்பிரம்பாவில் இருக்கும் ஆலயம் போன்றதொரு புதிய ஆலயத்தைக் கட்டுவித்து, அந்த ஆலயத்தின் கருவறையில் ராஜராஜேஸ்வரர் எனும் பெயரிலான சிவலிங்கம் ஒன்றை நிறுவும் பணிகளையும் தொடங்கினார்.
அதனையறிந்த தளிப்பிரம்பா அந்தணர்கள், ஆலயப் பணிக்கு பல்வேறு இடையூறுகளைச் செய்தனர். அதனைக் கண்டு மனம் வருந்திய அந்த அந்தணர், கோவிலின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த விநாயகப் பெருமான் சன்னிதியில் கலசாபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் பின்னர், இடையூறு இன்றி கோவில் பணிகள் நிறைவடைந்தது. வைத்தியநாத சுவாமி கோவில், புதியதாக கட்டப்பட்ட ராஜராஜேஸ்வரர் கோவில் என இரு சிவாலயங்கள் இருந்தாலும், தடைகளை நீக்கியருளிய விநாயகர் ஆலயமே அங்கு சிறப்பு பெற்று விளங்குகிறது. இந்த ஆலயம் வேளம் மகாகணபதி கோவில் என்று அழைக்கப்படுகிறது.
ஆலய அமைப்பு :
கோவில் வளாகத்தின் மேற்குப் பகுதியில் வைத்தியநாதசுவாமி ஆலயக் கருவறை, அதற்கு வடக்கே ராஜராஜேஸ்வரர் ஆலயக் கருவறை என்று இரண்டு கருவறைகளுடன் இரு சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. இவற்றுள் வைத்தியநாத சுவாமி கருவறை சிறியதாகவும், ராஜராஜேஸ்வரர் கருவறை பெரியதாகவும் இருக்கின்றன. ஒரே நடையில் இரு சிவாலயங்கள் அமைந்திருப்பது இங்கு மட்டுமே என்பது ஆலயத்தின் முக்கியச் சிறப்பு.
ராஜராஜேஸ்வரர் கோவிலின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் சன்னிதியில், மகாகணபதி தெற்கு நோக்கிப் பார்த்த நிலையில் வீற்றிருக்கிறார். இவரைப் பக்தர்கள் தட்சிணாமூர்த்தியின் வடிவமாகக் கருதி வழிபடுகின்றனர். வைத்தியநாத சுவாமி ஆலயத்தின் மேற்குப்புறம் பார்வதி தேவி, மேற்கு நோக்கிப் பார்த்த நிலையில், அன்னபூர்ணா தேவி வடிவில் இருக்கிறாள். வடமேற்கு மூலையில் கிருஷ்ணர் சன்னிதி ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. கோவிலுக்கு வெளியே அழகிய தீர்த்தக் குளம் உள்ளது.
இக்கோவிலில் திருமணத்தடை நீக்கத்திற்கு வேண்டிக் கொள்பவர்கள், திருமணம் உறுதிக்காக நடைபெறும் உறுதிப்படுத்தும் நிகழ்வுக்கு முன்பாக, இக்கோவிலுக்கு வந்து கணபதிக்கு நன்றி செலுத்தும் விதமாக, 21 கதலிப் பழங்கள் கோர்க்கப்பட்ட மாலையை சமர்ப்பித்து வழிபடுகின்றனர்.
தங்க கொம்பு சமர்ப்பித்து வழிபாடு :
மகாகணபதி கோவில் வழிபாட்டில், கணபதி வேள்வி, சொர்ணக் கொம்பு, வட்டலப் பாயசம் படைத்தல், மலர் சமர்ப்பித்தல், நெய் விளக்கேற்றுதல் போன்றவை சிறப்புடையதாக இருக்கிறது. இத்தல இறைவனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியிலான யானைத் தந்தங்கள் போன்ற சிறிய கொம்புகளைச் சமர்ப்பித்து வழிபடும் வித்தியாசமான வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என்று ஒற்றை இலக்க வரிசையில் இந்த தங்கக் கொம்புகளை வாங்கிக் கருவறை வாசலில் வைத்து வேண்டுகின்றனர். அங்கிருக்கும் அர்ச்சகர் அதனை எடுத்துக் கணபதியின் பாதங்களில் சமர்ப்பித்துப் பூஜை செய்கிறார். கோவில் அலுவலகத்தில் இந்த தங்கக் கொம்புகளைப் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ள முடியும். சொர்ணக் கொம்பு சமர்ப்பித்து, வேண்டுதல் நிறைவேறியவர்கள் கணபதிக்கு நன்றி செலுத்தும் விதமாகப் பாயசம் படைத்து வழிபடுகின்றனர்.
அமைவிடம் :
கேரள மாநிலம், கண்ணூரில் இருந்து 21 கிலோமீட்டர், தளிப்பிரம்பா எனுமிடத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மய்யில் (வேளம்) எனுமிடத்தில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்லக் கண்ணூரிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.
தேனி மு.சுப்பிரமணி

இத்திருக்கோவில் 108 திவ்விய தேச தலத்தில் 49-வது திவ்யதேசம் ஆகும். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் முதல் பிராகாரத்தில் மூலவர் எழுந்தருள்புரியும் கட்டத்திற்கு வடகிழக்கே தனிச் சந்நிதியாக அமையப்பெற்றுள்ளது.
(அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவிலினுள் உள்ள சந்நிதி திவ்யதேசம்)
இத்திருக்கோவில் 108 திவ்விய தேச தலத்தில் 49-வது திவ்யதேசம் ஆகும். காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலின் முதல் பிராகாரத்தில் மூலவர் எழுந்தருள்புரியும் கட்டத்திற்கு வடகிழக்கே தனிச் சந்நிதியாக அமையப்பெற்றுள்ளது.
நிலாத் துண்டப் பெருமாள் நின்றத் திருகோலத்தில், மேற்குப் பார்த்த வண்ணம் அழகிய திருமேனி கொண்டு, சேவார்த்திகளுக்கு அருள்பாலித்துக் கொண்டுள்ளார்.
ஒரு கற்பக் காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து அமிர்தத்தைப் பெறவேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் சுற்றிப் பிணைத்து, அதன் தலைப்புறம் அசுரர்களும், வால்புறம் தேவர்களும் நின்று இழுத்துக் கடைந்தனர்.
அப்படிக் கடையும்போது வாசுகி வலிதாங்காமல் விஷம் கலந்த பெருமூச்சு விட்டான். அவ்விஷமானது கடலிலே கலக்கும் போது ஆழ்கடலிலிருந்து கொடிய விஷம் வெளிப்பட வெப்பம் தாளாமல் அனைவரும் ஒடினர். அப்படியும் முடியாமல் அவர்களின் தேகம் கருத்தது.
தேவர்களுக்கு ஆறுதல் கூறிய திருமாலின் உருவமும், அவ்விஷ வெப்பத்தால் கரிய நிறத்தை அடைந்துவிட்டது. தாம்கரிய நிறமாகிவிட்டதை கண்டு மனம் வருந்திய திருமால் இந்தத் துன்பம் காஞ்சிப்பதியை அடைந்து அழகிய லிங்கம் ஒன்றை நிறுவி பக்தியுடன் ஈசனை வழிபட்டார். அவரால் நிறுவி வழிபடப்பட் அழகிய சிவ லிங்கத் திருமேனிதான் கண்ணேசலிங்கம் ஆகும்.
திருமாலின் வழிபாட்டினால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்குத் காட்சி அளித்து, துளப மார்பினை உடையவனே! உன்னை வருத்திவரும் வெப்பத்தின் கொடுமை நீங்க யாம் ஒரு வழி கூறுகிறோம் எனச் சொல்லி, மாவடி நிழலிலே எழுந்தருளியுள்ள எம் சந்நிதிக்கு வந்தாயானால், இளம் சந்திரனுடைய குளுமை பொருந்திய கிரணங்கள் வீசும் இடத்திலே இருந்து அதன் குளிர்ச்சியால் துன்பம் நீங்கப்பெறுவாய் என்று அருளினார்.
சிவபெருமான் அருளியபடியே திருமால், பிறைச் சந்திரனுடைய குளிர்ச்சிப் பொருந்திய கிரணங்கள் விழும் இடத்தை அடைந்து அங்கே இருந்தவாறு இறைவனைத் துதித்தார். அக்கணம் அவரை வதைத்து வந்த கொடிய வெப்பத்தின் வருத்தம் நீங்கப் பெற்றார்.
அன்று முதல் கச்சி நிலாத் துண்டப் பெருமாள் என்ற பெயரோடு திருமால் எழுந்தருளியிருக்கிறார்.

தாங்கள் செய்து வரும் வணிகம் பெருகி, வாழ்க்கை சிறப்பாக அமைந்திடச் சிறப்பு வழிபாடு செய்யும் கோவிலாகக் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலப்புள்ளி பாறா (எலப்புள்ளி பாறை) என்ற இடத்தில் அமைந்திருக்கும் மாங்கரை அம்மன் கோவில் இருக்கிறது.
தல வரலாறு :
சோழ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த நாகப்பட்டினம் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வணிகர்கள் சிலர் வசித்தனர். அவர்கள் இங்கு கிடைத்த பாசிப்பயறுவை வாங்கி, அதனை மாட்டு வண்டிகளில் சேரநாட்டின் மலபார் பகுதிக்குக் கொண்டு சென்று விற்பார்கள். பின்னர் அங்கிருந்து குறுமிளகுவை வாங்கி வந்து இங்கு விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர் மலபார் பகுதியில் இருந்து திரும்பும் போது, இரவு வேளையில் ‘பாறை’ என்னும் இடத்தில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு மறுநாள் புறப்படுவார்கள்.
அப்படி ஒரு முறை, மலபார் சென்ற வணிகர்கள், அங்கு பாசிப்பயறை விற்றுவிட்டு, குறு மிளகை வாங்கிக்கொண்டு திரும்பினர். வழக்கம் போலவே, இரவு வேளையில் பாறை என்ற இடத்தில் தங்கியிருந்தனர். அப்போது அங்கு கொலுசு சத்தம் கேட்டது. தூங்கிக் கொண்டிருந்த வணிகர்களில் ஒருவர், கொலுசு சத்தத்தைக் கேட்டு விழித்துப் பார்த்தார்.
அங்கே, கொலுசு அணிந்த சிறுமி ஒருத்தி நின்றிருந்தாள். உடனே வணிகர் அந்தச் சிறுமியிடம், “யார் நீ? இந்த இரவு வேளையில் இங்கு ஏன் வந்திருக் கிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த சிறுமி இருமியபடி, “எனக்குத் தலைவலியும், இருமலும் இருக்கிறது. எனக்குச் சிறிது மிளகு கொடுத்தால், அதை அரைத்துத் தலைக்குப் பற்று போட்டுக் கொள்வேன். என் தலைவலியும் தீரும்” என்று சொன்னாள்.
அதனைக் கேட்ட அவர், “எங்களிடம் ஏது மிளகு? எங்களிடம் இருப்பதெல்லாம் பாசிப்பயறு மூட்டைகள்தான். வேறு எங்காவது போய்க் கேட்டு மிளகு வாங்கிக் கொள்” என்று சொன்னார். அதனைக் கேட்ட அந்தச் சிறுமி புன்னகைத்தபடி அங்கிருந்து சென்று விட்டாள்.
மறுநாள் காலையில் அங்கிருந்து கிளம்பிய வணிகர்கள், தாங்கள் வாங்கி வந்திருந்த மிளகு மூட்டையுடன் நாகப்பட்டினம் திரும்பினர். அங்கு வந்து மூட்டைகளைப் பிரித்துப் பார்த்த அவர்கள் அதிர்ந்து போயினர். அந்த மூட்டைகளில், மிளகு இல்லை. அனைத்தும் பாசிப்பயறாகவே இருந்தன.
அதனைக் கண்டு வருத்தமடைந்த அவர்கள், “இது எப்படி நடந்தது?” என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது அவர்களில் ஒருவர், முதல் நாள் இரவில் ஒரு சிறுமி வந்து தன்னிடம் மிளகு கேட்டதையும், எங்களது மூட்டைகளில் மிளகு இல்லை, பாசிப்பயறுதான் இருக்கிறது என்று அவளிடம் தான் பொய் சொன்னதையும் சொன்னார்.
உடனே அங்கிருந்த வணிகர்கள் அனைவரும், ‘சிறுமி உருவத்தில் வந்து மிளகு கேட்டவர் இறைவியாகத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால், நாம் வைத்திருந்த மிளகு மூட்டைகளெல்லாம் பாசிப்பயறு மூடைகளாக மாறியிருக்காது’ என்று நினைத்து வருந்தினர். பின்னர் அவர்கள், தங்களின் தவறுக்கு மன்னிப்பு வேண்டியதுடன், இறைவி சிறுமியாக வந்த இடத்தில் அவருக்குக் கோவில் கட்டி வழிபடுவதாகவும் வேண்டிக் கொண்டனர்.
அப்போது, அந்த மூட்டைகளில் இருந்த பச்சைப் பயறு அனைத்தும் மிளகாக மாறியதைக் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அதன் பிறகு, அந்த வணிகர்கள் தங்கள் வாக்கைக் காப்பாற்றுவதற்காகச் சிறுமி வந்த இடத்தில் இருந்த மாமரத்துக்கு அருகில் அம்மனுக்குத் தனியாக ஒரு கோவிலைக் கட்டினர் என்றும், அந்தக் கோவிலில் இருக்கும் அம்மனுக்கு ‘மாங்கரை அம்மன்’ என்ற பெயரே நிலைத்து விட்டது என்றும் ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு :
அந்த வணிகர்களின் மரபு வழியில் வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிர்வாகத்தில் தான் ஆலயம் இருக்கிறது. ஆலயம் தமிழ்நாட்டின் கட்டுமான அமைப்பிலேயே கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் மாங்கரை அம்மன் எட்டு கரங்களுடன், வலது காலை மடித்து மகிஷாசுரன் தலையிலும், இடது காலை அசுரனின் பின்புறத்திலும் அழுத்தியபடி அமர்ந்த நிலையில் இருக்கிறார். கோவில் வளாகத்தில் விசுவ நாதர், விசாலாட்சி, கணபதி, வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான், சிவகாமி அம்மனுடனான நடராசர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், மகாலட்சுமி, சண்டிகேசுவரர், வேட்டைக் கருப்பணசாமி ஆகியோருக்கான சன்னிதிகளும், நவக்கிரகச் சன்னிதியும் இருக்கின்றன.
இங்குள்ள அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், நவராத்திரி உள்ளிட்ட அம்மனுக்குரிய சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. சிவபெருமானுக்குப் பிரதோஷம் உள்ளிட்ட சிவனுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் நாளில் சித்திரை விசு கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத அனுஷம் நட்சத்திர நாளில் ஆலய ஆண்டு விழா நடக்கிறது. ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழாவும், சூரசம்ஹாரமும், தொடர்ந்து தெய்வானை திருமணமும் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன.
பொதுவாக, அம்மன் கோவில்களில் திருமணத்தடை, குழந்தைப்பேறு, உடல் நலம் வேண்டி வழிபடுவதைப் போன்று, இக்கோவிலிலும் பக்தர்கள் தங்களுக்கு வேண்டியதைக் கேட்டு வழிபட்டுச் செல்கின்றனர். வணிகத் தொழில் செய்பவர்கள், தங்களது வணிகம் பெருகி வாழ்க்கைச் சிறக்க இங்கு வந்து சிறப்பு வழிபாடுகளைச் செய் கிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
கேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எலப்புள்ளி பாறா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்லப் பாலக்காடு நகரில் இருந்து அதிக அளவில் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
-தேனி மு.சுப்பிரமணி

அரியலூர் மற்றும் செந்துறை பகுதியை ஆட்சிபுரிந்த சிற்றரசர் ஒருவரால் உருவாக்கப்பட்டதே ‘செந்துறை மகாதேவர் கோவில்.’ இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மன்னராட்சி காலத்தில், அரசர்கள் தங்களின் குடிமக்களை நல்வழிப்படுத்த ஆலயங்களை எழுப்பினர். ஒவ்வொரு ஊரையும் நிர்மாணிக்கும் போது, முதலில் அங்கு ஒரு கோவிலை ஸ்தாபனம் செய்வதை மரபாக கடைப்பிடித்தனர். அப்படி அமைக்கப்படும் கோவில்கள், வெற்றியின் சின்னமாகவோ, திட்டத்தின் அடையாளமாகவோ அல்லது இறையனுபூதி பெற்ற அடியாரின் நினைவாகவோ எழுப்பப்பட்டதாக இருக்கும். கோவிலானது மக்கள் மனதில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காகவே இத்தகைய பின்புலம் உருவாக்கப்பட்டது. இந்த அடிப்படையில் அரியலூர் மற்றும் செந்துறை பகுதியை ஆட்சிபுரிந்த சிற்றரசர் ஒருவரால் உருவாக்கப்பட்டதே ‘செந்துறை மகாதேவர் கோவில்.’
சிவந்த மண்ணையும் நீர்வளத்தையும் கொண்டிருந்ததால் ‘தன்பொழில் செந்துறை’ என்றும், ஊரின் ஒரு பகுதி காரைச்செடிகள், வெள்வேலமரம், புளி, இலுப்பை, கருங்காலி, வன்னி, விளா போன்ற மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்தமையால் ‘காரைக்காட்டு தண்டநாடு’ என்றும் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளதாக விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டு கூறுகிறது. காலப்போக்கில் நெய் வனம் என்று அழைக்கப்பட்ட இந்த வனத்தில், மகாசித்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அதனால் இந்த ஊர் ‘சித்தர்துறை’ என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி ‘செந்துறை’ என்றானதாக சொல்லப்படுகிறது.
அந்த சித்தர் உருவாக்கிய ஏரி, ‘சித்தர் ஏரி’ என்று பெயர் பெற்று, தற்போது சித்தேரி என்று வழங்கப்படுகிறது. இந்த மகாசித்தர் ஒரு வில்வமரத்தின் கீழ் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மாகேஸ்வர பூஜை வழிபாடுகள் செய்து வந்தார். அதன்பலனாக அவர் அஷ்டமா சித்திகளும் கைவரப் பெற்றவராக விளங்கினார். இவரின் சக்தியை புரிந்த மக்கள் இவரை நாடிவந்து அருளாசிப் பெற்றுச் சென்றனர்.
பல ஆண்டுகள் குழந்தை பேறின்றி கவலையோடு இருந்த, இப்பகுதியை ஆட்சிபுரிந்த சிற்றரசனுக்கு சித்தர் பற்றிய தகவல் கிடைத்தது. அவன் சித்தரை சந்தித்து அவரைப் பணிந்தான். அவன் தனக்கு என்ன வேண்டும் என்று சொல்லும் முன்பே, “நீ வந்திருப்பதன் நோக்கம் எனக்குத் தெரியும். குழந்தை வரம் கேட்டு வந்திருக்கிறாய். இப்பகுதியில் ஒரு சிவாலயம் எழுப்பி வழிபடு. உனக்கு குழந்தைபேறு கிடைக்கும்” என்று கூறினார். அதுகேட்ட சிற்றரசன் மெய்சிலிர்த்து, அவர் சொன்னபடியே ஒரு பெரிய சிவாலயத்தை கட்ட திட்டமிட்டான். ராஜராஜசோழனின் அனுமதி பெற்று, சிற்றரசன் இந்த ஆலயத்தை கட்டியதாகவும், பின்னர் அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததாகவும் தல வரலாறு சொல்கிறது.
சிற்றரசனுக்கு அருள்பாலித்த சித்தரின் சமாதி ஆலயத்தின் வடக்கு வீதியில், ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது. சிற்றரசனின் வேண்டுகோளை தீர்த்துவைத்த இத்தல இறைவனின் திருநாமம் ‘தீர்க்கபுரீஸ்வர்’ என்பதாகும். இவர் தற்போது ‘சிவதாண்டீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
தஞ்சை பெரியகோவில் கட்டுவதற்கு முன்பாக கட்டப்பட்டுள்ள இவ்வாலயம், வரலாற்றுச் சிறப்பும் பழமையும், பெருமையும் கொண்ட தாகும். இவ்வாலயம் பற்றிய குறிப்புகள் 5 கல்வெட்டுகளிலும், 2 செப்பேடுகளிலும் இடம்பெற்றுள்ளன. முழுக்க முழுக்க வெள்ளைக்கல் எனப்படும் சுண்ணாம்புக் கல்லால் இவ்வாலயம் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டுமானங்களை செந்துறையைச் சுற்றியுள்ள ராயம்புரம், சென்னிவனம், ஓட்டக்கோயில், தாமரைப்பூண்டி, பெரியாக்குறிச்சி, கொடுக்கூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்களிலும் காணமுடிகிறது. கருங்கல்லால் ஆன கோவில்கள் எதுவும் இப்பகுதியில் இல்லை.
ஆலய அமைப்பு :
ஊருக்கு வடகிழக்கில் அமைந்துள்ள இவ்வாலயம், கிழக்கு நோக்கி ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் ரம்மியமாக காட்சியளிக்கிறது. ஒரேயொரு திருச்சுற்றுடன் கருவறை அர்த்த மண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று மாளிகை மற்றும் பரிவார ஆலயங்கள் அமைந்துள்ளன. ராஜகோபுரத்தை அடுத்து கொடிமரம், பலிபீடம், நந்தியம் பெருமான் உள்ளனர். தொடர்ந்து உள்கோபுரம் காணப்படுகிறது. அதன் இடதுபுறம் விநாயகப் பெருமானும், வலதுபுறமாக முருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர். ராஜகோபுரத்திற்கும் உட்கோபுரத்திற்கும் இடைபட்ட பகுதியில், இடதுபுறம் ஆலய யாகசாலை மண்டபமும், வலதுபுறம் வாகனமண்டபமும் இடம் பெற்றுள்ளன.
உள்கோபுரம் அடுத்த மகாமண்டபத்தின் வாசலைத் தாண்டி ஆலயத்திற்குள் நுழைந்தால், கருவறையில் வேண்டிய வரம் தரும் சிவதாண்டீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தில் விநாயகர், நடராஜர் மற்றும் உற்சவர் திருமேனிகள் இடம் பெற்றுள்ளன. பிரகாரச்சுற்றில் மேற்கில் மடப்பள்ளி, வன்னிமரம், அறுபத்துமூவர் மற்றும் சப்தமாதர்கள் சன்னிதிகளும், வடக்கு பிரகாரத்தில் தல விநாயகரான கோடிவிநாயகர், நால்வர், சிவன், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான் சொக்கநாதர், விசுவநாதர், பஞ்சலிங்கங்கள் மற்றும் கஜலட்சுமி எழுந்தருளியுள்ளனர்.
மூலவர் கருவறை அமைந்துள்ள இடத்திற்கு நேர் கிழக்காக, பிரகாரச்சுற்றில் அம்பாளின் கருவறையும், அண்ணாமலையாரின் சிறிய சன்னிதியும் இடம்பெற்றுள்ளன. சுவாமி மற்றும் அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சண்டிகேஸ்வரர் இருக்கிறார். திருச்சுற்று மாளிகையின் வடகிழக்கு மூலையில் நடராஜர் சபை உள்ளது. இதில் கயிலாயக் காட்சியும், நால்வர் மற்றும் வள்ளலார் படங்கள் காணப்படுகின்றன. அடுத்தாற்போல நவக்கிரக சன்னிதி அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கிழக்கில் பைரவர், சூரியர், சந்திரர் (சிவலிங்க வடிவில்) இடம்பெற்றுள்ளனர்.
இந்துசமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் இவ்வாலயத்தில், தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன. தவிர சிவாலயங்களில் நடைபெறும் மாத உற்சவங்களும், சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடிப்பூரம், புரட்டாசி நவராத்திரி விழா, கார்த்திகை தீபவிழா, சோமவார உற்சவம், மார்கழி தரிசனம், தைப்பூசம் போன்ற வருடாந்திர விழாக்களும் சிறப்பாக நடத்தப்பெறுகிறது. பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப் பெறுகிறது.
சித்திரைமாதம் முதல்நாளன்று சூரியன் காலை 6.05 மணிக்கு இவ்வாலய பெருமானை வழிபடுகிறார். இந்நாட்களில் சுவாமியும், அம்பாளும் வீதியுலா செல்கிறார்கள். இந்தக் கோவில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்:
சென்னை - திருச்சி கார்டுலைன் ரெயில் மார்க்கத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது, அருகாமை ரெயில்நிலையம் செந்துறை மற்றும் அரியலூர். சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், அரியலூர், ஜெயங்கொண்டம், திட்டக்குடி, பெண்ணாடம் ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது.
நெய்வாசல் நெடுஞ்செழியன்

இலங்கை சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட ஆலயமே, ‘ரம்போடா அனுமன் ஆலயம்’ ஆகும். இங்கு அமைக்கப்பட்ட தனிக் கோவிலாக, இந்தக் கோவில் இருக்கிறது.
லட்சுமணனால் மூக்கறுபட்ட சூர்ப்பனகை, தன் சூழ்ச்சி வலையால் ராவணனுக்கு சீதையின் மீது அளவுகடந்த விருப்பம் ஏற்படும்படிச் செய்தாள். பெண் பித்து தலைக்கேறிய ராவணன், சீதையை தந்திரமாக கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தான்.
இதையடுத்து சீதையைத் தேடும் பணியில் ராமனும், அவருக்கு உதவிய சுக்ரீவனின் படை வீரர்களும் ஈடுபட்டனர். அப்போது சடாயுவின் சகோதரர் சம்பாதியின் மூலமாக, சீதை இலங்கையில் உள்ள அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. அங்கு செல்ல அனுமனால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்த ராமபிரான், தன்னிடம் இருந்த மோதிரத்தை அடையாளமாக சீதையிடம் காட்டும்படி கூறி அனுமனிடம் கொடுத்து அனுப்பிவைத்தார்.
இலங்கைக்கு பறந்து சென்ற அனுமன், இலங்கையில் அசோகவனம் அருகே உள்ள ரம்போடா என்ற இடத்தில், தன் பாதங்களை வைத்து, அன்னை சீதையைத் தேடினார். ஒரு வழியாக அசோக வனத்தில் அரக்கியர்கள் காவலில் இருந்த சீதையைக் கண்டுபிடித்தார். பின்னர் அரக்கியர்களை மயங்கச் செய்து, ராமன் தந்த மோதிரத்தைக் காட்டி, தான் ராமனின் தூதன் என்று தன்னை அறிமுகம் செய்தார்.
அதன்பிறகே ராமபிரான், ராவணனுடன் போர்புரிந்து வதம் செய்ததாகவும், சீதை மீட்கப்பட்டதாகவும் ராமாயண இதிகாசம் எடுத்துரைக்கிறது.
இந்த வகையில், இலங்கையில் அனுமன் முதன் முதலில் தன் காலடித் தடத்தை பதித்த இடமாக, இலங்கையில் உள்ள ரம்போடா மலைமுகடு பகுதி நம்பப்படுகிறது. இந்த இடத்தில் இலங்கை சின்மயா மிஷனால் உருவாக்கப்பட்ட ஆலயமே, ‘ரம்போடா அனுமன் ஆலயம்’ ஆகும். இங்கு அமைக்கப்பட்ட தனிக் கோவிலாக, இந்தக் கோவில் இருக்கிறது.
இந்த வரலாற்றை உறுதிப்படுத்தும் விதமாக சீதை சிறையிடப்பட்ட அசோகவனம், தற்போது ‘சீதா எலியா’ என்று வழங்கப்படுகிறது. சீதை அக்னிப் பிரவேசம் செய்த இடம், ராவணன் மாளிகை, கோட்டை என பல்வேறு பகுதிகளும் இந்தப் பகுதிகளில் நிறைந்துள்ளன.
ஆலய அமைப்பு
கொழும்பில் இருந்து, மலைகள் நிறைந்த நுவரெலியா செல்லும் சாலையில், சாலையோர மலை முகட்டில், ரம்போடா அனுமன் கோவில் அமைந்துள்ளது. மேலே செல்ல சாலை வசதி இருக்கிறது. எழிலான தனிக்கோவிலில் அனுமன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் இடது மற்றும் வலது புறங்களில் மலைகள் நிறைந்துள்ளன. நேர் எதிரே பதினாறு அடி உயர பக்த அனுமன் கைகூப்பி வணங்கிய கோலத்தில், ராம பக்தனாகப் பணிவுடன் நிற்பது நம்மைப் பரவசப்படுத்துகிறது. ஆலயத்தின் பின்புறம் உயரமான மலைகள் பசுமைப் போர்வையைப் போர்த்தியபடி, கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.
ஒரே கல்லால் ஆன பதினாறு அடி உயர பக்த அனுமன் சிலை, 2001-ம் ஆண்டில் இந்த ஆலயத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை நாட்டின் முக்கியமான வழிபாட்டுத் தலம் என்ற பெருமையை இந்த ஆலயம் பெற்றிருக்கிறது. இலங்கைக்கு வரும் பயணிகள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆலயமாகவும் இது விளங்குகிறது. அடித்தளத்தில் பிரமாண்ட தியான மண்டபம் அமைந்துள்ளது. இலங்கையில் சின்மயா மிஷன் கோவில் எழுப்ப, 1980-ல் பூஜ்ய குருதேவ் சுவாமி சின்மயானந்தா தேர்வு செய்த இடம் இது. இதன்பின் 2001-ம் ஆண்டில்தான் பக்த அனுமன் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் பவுர்ணமி நாளன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அன்று மட்டும் சுமார் மூவாயிரத்திற்கும் மேலான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். ரம்போடா அனுமன் கோவிலை, இலங்கை நாட்டின் சின்மயா மிஷன் நிர்வாகம் செய்து வருகிறது.
அமைவிடம்
இலங்கை நாட்டின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில், பெரதெளியா- நுவரெலியா நெடுஞ்சாலையில், கொழும்பில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவிலும், பெரதெளியாவில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலும் அனுமன் ஆலயம் இருக்கும் மலைப் பகுதி அமைந்திருக்கிறது. இம்மலைகளின் வடபகுதி ‘ரம்போடா’ என்றும், தென்பகுதி ‘ராவணா போடா’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொருள், ‘ராமன் படைவீரர்கள் பகுதி’, ‘ராவண படைப்பிரிவு பகுதி’ என்பதாகும்.
பனையபுரம் அதியமான்