என் மலர்
முக்கிய விரதங்கள்
திருமண வரம் வேண்டி தவிப்பவர்கள் விரதம் இருந்து 9 வாரம் நரசிம்மரை வேண்டிக் கொண்டு தீபம் ஏற்றி வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
செவ்வாய் தோஷம்தான் இப்போது நிறைய பேரை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது. திருமண தடைகளை செவ்வாய் தோஷம் ஏற்படுத்துவதாக நிறையப் பேர் கருதுகிறார்கள். அந்த தோஷத்தை விரட்டி அடிக்க எத்தனையோ விதமான விரத வழிபாடுகளை செய்து இருப்பார்கள்.
செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி 9 வாரம் வழிபட்டால் தோஷத்தை எளிதாக கடக்கலாம். 9 வாரம் விரதம் இருந்து நரசிம்மருக்கு யார் ஒருவர் தீபம் ஏற்றி வழிபடுகிறாரோ நிச்சயமாக அவர்கள் குறை தீரும். குறிப்பாக திருமண வரம் வேண்டி தவிப்பவர்கள் விரதம் இருந்து 9 வாரம் நரசிம்மரை வேண்டிக் கொண்டு தீபம் ஏற்றி வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

சித்ரா பவுர்ணமியில் அவரவர் விருப்பப்படி விரதம் இருக்கலாம். ஜாதகத்தில் சந்திர திரை நடப்பவர்கள் பவுர்ணமி விரதம் இருந்து வர சகல யோகங்களும் உண்டாகும்.
சித்ரா பவுர்ணமியில் அவரவர் விருப்பப்படி விரதம் இருக்கலாம். அம்மன் கோவில்களில் வழிபாடு செய்து கல்கண்டு சாதம், பால் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக தருவதால் சந்திரனின் பரிபூரண அருள் கிடைக்கும். ஜாதகத்தில் சந்திர திரை நடப்பவர்கள் பவுர்ணமி விரதம் இருந்து வர சகல யோகங்களும் உண்டாகும்.
பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் சித்ரா பவுர்ணமி நாளில் வழக்கமாகச் செய்யும் அபிஷேகங்களுடன் மருக்கொழுந்து இலைகளால் அர்ச்சிப்பதும் புண்ணிய பலன்களைத் தரும்.

நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் சனி கிரகத்தின் பார்வை தான் ஒருவருடைய பாவ - புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிறது.
நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சனி கிரகம் இருக்கிறது. இதன் பார்வை தான் ஒருவருடைய பாவ - புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிறது. சனியின் ஆதிக்கம் கொண்டவர்கள், நீதி நேர்மையுடனும், நன்னடத்தையோடும் வாழ விரும்புவார்கள். ஆனால் இவர்களது சத்தியத்திற்கு அவ்வப்போது சோதனை வந்து போகும். இந்த நபர்கள் தயாள குணம், தர்ம சிந்தனையை கடைப்பிடிப்பார்கள். இவர்களுக்கு தலைமைப் பதவி தேடி வரலாம். ஏழரைச் சனி அல்லது அஷ்டமச் சனி முடியும் தருவாயில் ஒரு வருக்கு சனி கொடுக்கும் வாழ்வானது, நிரந்தர யோகமாக அமையும். ஏழு தலைமுறைகளுக்காக சொத்துகளைச் சேர்க்கும் யோகத்தை தருவது சனி பகவான் தான்.
ஒருவருடைய வாழ்க்கையில் நடைபெறும் பாவ புண்ணிய கணக்குகளை சரிப்பார்த்து,அவர்கள் மனம் திருந்துவதற்கு சில கடுமையான சோதனைகளைக் கொடுத்து திருத்தும் தர்ம தேவதையே சனி பகவான். அவரின் சோதனைக்கு உட்படாதவர்களே யாரும் இருக்க முடியாது.
சனிக்கிழமைதோறும் விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைத்தல் வேண்டும். சனி பகவானின் வாகனமான காகத்திற்கு தினமும் எள் கலந்த சாதம் வைக்கலாம். இதனால் ஜோதிடம் மற்றும் ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல் ஒரு ஜீவனுக்கு உணவளித்த மனதிருப்தியும் கிடைக்கும்.
சனி பகவானுக்கு உகந்த உலோகம் இரும்பு என்பதால், சனிக்கிழமை தோறும் இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடலாம்.
கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் அவரின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மரங்களில் வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி மட்டும் தான்.ஈஸ்வரனின் அருளைப் பெற்ற சனி பகவானை சந்தோஷப்படுத்த, சனிக்கிழமை தோறும் சிவபெருமானுக்கு வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சாற்றி வணங்கலாம்.
பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்க வேண்டும். சனி பிரதோஷ வழிபாடு அனைத்திலும் சிறந்தது.
சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும். குறிப்பாக சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. இதுவும் ஆரோக்கிய ரீதியாக நமது நன்மையைக் கருதி சொல்லப்பட்டது.
அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்வதுடன், உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள். ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம். அன்னதானத்திற்கு உதவி செய்யலாம். இவை நம்மை மனித நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர்த்தும்.இதை தானே நியாய தேவதையான சனி பகவானும் நம்மிடம் எதிர்பார்ப்பது.
சனி பகவானுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் சனி தோஷம் நீங்காது. ஆனால் சனி தோஷத்தால் ஏற்படும் துன்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும்.

தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை ஆகும். சித்திரையில் ஏராளமான சிறப்பு மிக்க விரத வழிபாட்டு நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை தொகுப்பாக காண்போம்.
தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை ஆகும். இந்த மாதத்தில் தான் சூரியன், ராசிகளில் முதலாவதாக விளங்கும் மேஷத்தின் பயணம் செய்வார். சித்திரையில் ஏராளமான சிறப்பு மிக்க விரத வழிபாட்டு நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை தொகுப்பாக காண்போம்.
தமிழ் புத்தாண்டு
சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை நித்திய கடமைகளை முடித்து, கோவில் களுக்குச் சென்று அன்றைய ஆண்டில் எல்லா வளங்களும் பெற இறைவனை வழிபடுகின்றனர். மதிய வேளையில் உறவினர் மற்றும் நண்பர்களுடன் விருந்து உண்டு மகிழ்வார்கள். சிறியவர்கள் அனைவரும், பெரியவர்களிடம் ஆசிபெறுவார்கள். பகிர்ந்து உண்ணல், பரிசு வழங்குதல், உறவுகளுடன் மகிழ்ந்திருத்தல் ஆகியவை தமிழ் புத்தாண்டின் நிகழ்ச்சிகளாகும்.
கேரள மாநிலத்தில் சித்திரை முதல் நாளானது, ‘சித்திரை விசு’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத கடைசி நாள் இரவில், தங்கம் - வெள்ளி பொருட்கள், நவரத்தினங்கள், பழவகைகள், காய்கனிகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர். மறுநாள் அதி காலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட் களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
அட்சய திருதியை
சித்திரை மாதத்தின் வளர்பிறையின் மூன்றாவது நாளான திருதியை திதியை ‘அட்சய திருதியை’ என்று அழைப்பார்கள். ‘அட்சய’ என்பதற்கு ‘அள்ள அள்ள குறையாத’ என்று பொருள்படும். இந்நாளில் செய்யப்படும் நல்ல செயல்களான, தான தருமங்கள் அள்ள அள்ள குறையாத அதிக பலன்களைத் தரும். பார்வதிதேவி, தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் இந்நாளில்தான் என்று புராணங்கள் சொல்கின்றன.
அட்சய திருதியை அன்று தயிர்சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் செய்தால் திருமணத்தடை அகலும். உணவு தானியங்கள் தானம் செய்தால் விபத்துகள் ஏற்படாது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.
மத்ஸ்ய ஜெயந்தி
திருமாலின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமாக விளங்குவது, ‘மச்ச அவதாரம்’ சித்திரை மாதம் வளர்பிறை திருதியையில் (அமாவாசை அடுத்த மூன்றாவது நாள்) இந்த அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. எனவே ஆண்டு தோறும் சித்திரை வளர்பிறை திருதியையில் ‘மத்ஸ்ய ஜெயந்தி’ கொண்டாடப்படுகிறது. அநீதியின் வடிவமான சோமுகாசுரன் என்னும் குதிரை முக அரக்கனிடம் இருந்து, வேதங்களை காப்பாற்றி உலக உயிர் இயக்கத்திற்கு காரணமாக திகழ்ந்த மச்ச மூர்த்தியை இந்த நாளில் வழிபட்டால், துன்பங்கள் நீங்கும்.
லட்சுமி பூஜை
சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில், திருமகள் பூலோகத்திற்கு வந்ததாகக் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் லட்சுமி பூஜை செய்து வழிபட்டால் செல்வம் பெருகும். சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாகக் கருதப் படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
பைரவர் விரதம்
சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரம் அன்று பைரவ விரதம் பின்பற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் பகல் உணவு மட்டும் உண்டு விரதமுறையை கடைப்பிடிக்க வேண்டும். அன்றைக்கு திருமுறை ஓதுதல் வழக்கத்தில் உள்ளது. இவ்விரத முறையை பின்பற்றினால் சுபிட்சமான வாழ்வுடன், இறுதியில் முக்தி கிடைக்கும்.
சித்திரை திருவிழா
ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் பன்னிரண்டு நாட்கள், மதுரையில் ‘சித்திரை திருவிழா’ நடைபெறுகிறது. இவ்விழாவில் மீனாட்சி கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குதல் என இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்விழாவினைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருகை தருவார்கள். பத்தாம் நாள் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணமும், 11-ம் நாள் தேரோட்டமும் நடைபெறும். சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில், அழகர் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது.
சித்ரா பவுர்ணமி
சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி ‘சித்ரா பவுர்ணமி’ என்ற பெயரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில்தான், நம்முடைய பாவ - புண்ணிய கணக்குகளை நிர்ணயம் செய்பவரும், எமதர்மனின் உதவியாளருமான சித்திரகுப்தனுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமான், அம்பிகை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ் விழாவன்று மக்கள் பொங்கல் வைத்தும், அன்னதானம் செய்தும் வழிபடுவாா்கள். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் மக்கள்கூடி நிலவொளியில் அமர்ந்து ‘சித்ரான்னம்’ என்று சொல்லக்கூடிய, பலவகையான கலவை சாத வகைகளை உண்டு மகிழ்வார்கள்.

தொழு நோயால் வருந்திய களக்காட்டு மன்னர் நாகராஜா கோவிலைப் பற்றிக் கேள்வியுற்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் விரதம் இருந்து இங்கு வந்து வழிபட, வியத்தகு முறையில் அவரது நோய் பூரணமாகக் குணம் அடைந்தது.
தொழு நோயால் வருந்திய களக்காட்டு மன்னர் நாகராஜா கோவிலைப் பற்றிக் கேள்வியுற்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் விரதம் இருந்து இங்கு வந்து வழிபட, வியத்தகு முறையில் அவரது நோய் பூரணமாகக் குணம் அடைந்தது. அதனால் இவ்வாலயத்தின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது.
மகிழ்ச்சியடைந்த மன்னர் இன்றிருக்கும் ஆலயத்தைக் கட்டினார் என்பர். அத்துடன் அம்மன்னர் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாலயத்திற்கு வருகை தந்து தமது காணிக்கைகளைச் செலுத்திப் பூஜைகளும் நடத்திச் சென்றார் என்று இக்கோயில் கல்வெட்டு கூறுகின்றது. அதன் பின்னர் இன்று வரை எல்லா ஞாயிற்றுக்கிழமைகளையும் புனித நாட்களாகக் கருதிப் பல்லாயிரக்கணக்கான மக்கள் விரதம் இருந்து வந்து நாகராஜாவைத் தொழுது செல்கின்றனர்.
களக்காடு மன்னர் கி.பி. 1516 முதல் 1535 வரையிலும் களக்காட்டைத் தலைநகராகக் கொண்டு அன்றைய வேணாட்டை ஆண்ட பூதள வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா மாமன்னராகும். இவர் சோழர் குலத்து இளவரசியை மணமுடித்ததால் புலிமார்த்தாண்டவர்மா என்று அழைக்கப்பட்டார் என்று அறியலாம்.
இவர் பாண்டிய மன்னருடன் போராடி நெல்லை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளைப் பிடித்தடக்கினார் (கி.பி. 1535-ம் ஆண்டு) ஆடி மாதம் 26-ந்தேதி களக்காட்டில் இறந்தார் என்றும் வரலாறு குறிப்பிடுகிறது. நாகராஜர் ஆலயத்தில் கிடைத்தக் கல்வெட்டில் இருந்து இந்த அரசர்தான் பழைய கோவிலைக் கேரளக் கட்டிடக்கலையமைப்பிலே புதுப்பித்தார் என்று அறிய முடிகிறது. இவரே கேரள நாட்டு நம்பூதிரிகளைப் பூஜை செய்ய ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

ராகு, கேது நவக்கிரகங்களில் சர்வ வல்லமை பெற்றவர்களாகத் திகழத் தொடங்கினார்கள். ராகு, கேதுவுக்கு எப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
ராகு, கேது நவக்கிரகங்களில் சர்வ வல்லமை பெற்றவர்களாகத் திகழத் தொடங்கினார்கள். ராகு தசை, கேது தசை காலங்களில் ஜாதகர் தம் முற்பிறவியின் பயனை அனுபவிக்கத் தவற மாட்டார். ஜாதகத்தில் ராகு-கேது கேடு செய்பவராக இருந்தால் அவர்களுக்குச் சாந்தி செய்தால் நன்மை கிடைக்கும். பரிகாரமாக அவர்களைப் பூசித்து வந்தால் நன்மை பல கிடைக்கும்.
ராகுவும், கேதுவும் தங்களை காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களை விழுங்கி விட வேண்டுமென்ற நோக்கத்தில் அவர்களை இடப்புறமாக சுற்றிக் கொண்டு வருவதாகவும், அவர்களால்தான் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன. ராகுவை கரும்பாம்பு என்றும், கேதுவை செம்பாம்பு என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ராகு கேது வாராமல் எந்த நாளும் இல்லாததால் எந்தக் கிழமையும் அவர்களுக்கு ஏற்றது. நீங்களே ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். முறையாக அந்தக் கிழமைகளில் நீராடி புளிப்பு அன்னம் உளுந்து சேர்ந்த பலகாரம் தயாரித்து நுனி இலையில் படைக்கவும். தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். மந்தாரை மலர்கட்டி, மந்தாரை மலராலேயே பூஜிக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த கிழமையில் விரதம் இருப்பதும் அவசியமாகும். பிரசாதத்தை யாராவது ஒருவருக்கோ, பலருக்கோ கொடுத்து பூஜிக்கச் சொல்லவும். தாம்பூலம், தட்சிணை கொடுத்துநமஸ்காரம் செய்யவும்.
பொதுவாக, ராகு திசை நடைபெறும் காலத்தில் முற்பகுதியில் எல்லாவித செல்வங்களையும் வசதிகளையும் கொடுப்பார். ஆனால் பிற்பகுதியில் கொடுத்தவை அனைத்தையும் பறித்துக் கொள்வார். இதில் இருந்து விடுபட கபிஸ்தலம் சென்று கஜேந்திர வரதராஜ பெருமாளை வழிபட வேண்டும்.

நாகதோஷம், திருமண தடை, குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு நாகராஜர் கோவிலில் பரிகாரங்கள் செய்யப்படுகிறது. இங்கு பக்தர்கள் கடைபிடிக்கும் விஷேச விரதங்களை பார்க்கலாம்.
நாகராஜர் கோவிலில் உள்ள துர்க்கை சிலை, இங்குள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது. எனவே அன்னையை ‘தீர்த்த துர்க்கை’ என்று அழைக்கிறார்கள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
‘ஓடவள்ளி’ என்ற கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. வேணாட்டு அரசனான வீர உதய மார்த்தாண்டன் இந்த ஆலயத்தை புதுப்பித்துள்ளான். இந்த மன்னன், ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து விசேஷ வழிபாடுகள் நடத்தினான். அரசன் தொடங்கிய இந்தப் பழக்கம் இன்றும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.

‘வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ, துள்ளி ஓடும் தொடர் வினைகளே’ என்பது முன்னோர் வாக்கு. எனவே தும்பிக்கையானை நம்பிக்கையோடு விரதம் இருந்து வழிபட்டால் இன்பங்களை எதிர்கொள்ள இயலும்.
பிள்ளையார் சுழி போட்டு காரியத்தைத் தொடங்கினால், எல்லையில்லாத நற்பலன்கள் கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். ஆனைமுகன் சன்னிதி.. அது கொடுக்கும் நிம்மதி.. விநாயகரை வழிபடுவதற்கு நேரம் காலம் பார்க்க வேண்டியதில்லை, நினைத்த நேரத்தில் வழிபடலாம். அவரை ஆலயங்களுக்குச் சென்றும் வழிபடலாம்; ஆற்றங்கரையிலும், அரசமரத்தடியிலும், வேப்பமரத்தடியிலும், வன்னி மரத்தடியிலும், வில்வ மரத் தடியிலும் கூட கண்டு கைகூப்பி வழிபடலாம். இவையெல்லாம் விருத்தியம்சங்களை நமக்கு வழங்கும் விருட்ச விநாயகர் வழிபாடாகும். துளசி மாடத்திலும் கூட ஒரு விநாயகரை வைத்து வழிபடுவது நம் பண்பாடு.
உலகத்திலேயே பிள்ளையாருக்காக தனியாக அமைக்கப்பட்ட முதல் குடவரைக் கோவில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருத்தலமாகும். பிள்ளையார் பெயரிலேயே இந்த ஊர் அமைந்து இன்று கற்பக விருட்சமாக, கைநிறைய கனதனங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார், இந்த விநாயகர்.
திருச்சியில் உள்ள பிள்ளையார், மலையின் உச்சியில் இருக்கிறார். காரைக்குடி அருகில் கோட்டையூரில் சொற்கேட்ட விநாயகர் வீற்றிருக்கிறார். செல்வ விநாயகர், சித்தி விநாயகர், வரம் தரும் விநாயகர், வரசித்தி விநாயகர், வல்லப கணபதி, கள்ளவாரணப் பிள்ளையார், கன்னிமூல கணபதி, லட்சுமி கணபதி, சொர்ண கணபதி, கலங்காத கண்ட விநாயகர் என்று ஊருக்கு ஊர் உன்னதமாக ஏராளமான பெயர்களில் விநாயகர் காட்சியளிக்கிறார்.
சாணத்தில் செய்தாலும், சந்தனத்தில் செய்தாலும், மண்ணில் செய்தாலும் மனமிரங்கி வழிபட்டால், செய்யும் செயல்களிலே சிறப்பான வெற்றியை வரவழைத்து தருபவர் பிள்ளையார். மரங்களின் கீழ் உள்ள விநாயகர் எல்லாம் மகத்தான வெற்றியை வழங்குபவர்கள். இவர்களை வழிபட்டால் விருத்தியம்சம் கூடும். உடல் ஆரோக்கியம் சீராகும். இயற்கை காற்று நம் உடல்மீது படுவதால் மனதிற்கும் நல்லது, உடலுக்கும் நல்லது.
எந்த மரத்தடியில் விநாயகர் இருக்கின்றாரோ, அதற்கு உகந்த நாளில் நமக்குப் பொருத்தமான நட்சத்திரத்தில் சென்று அபிஷேகமும், வஸ்திர தானமும் செய்து வழிபட்டால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். நம்மால் முடிந்த நைவேத்தியம் படைத்தும் வழிபடலாம். வழிபாடு முடிந்தபிறகு நைவேத்தியத்தை முதலில் குழந்தை களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
அரசமரத்தடி பிள்ளையாரை விரும்பிச் சென்று பணிபவர் களுக்கு, உடனடியாக நற்பலன் கிடைக்கும். கேதுவிற்குரிய நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் மோதகம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் தோஷங்கள் குறைந்து, சந்தோஷங்கள் வந்து சேரும்.
வேப்ப மரத்துப் பிள்ளையாரை விரும்பிச் சென்று பணிபவர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிபிறக்கும். ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் அகலும். பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் மிஞ்சும் விதத்தில் செல்வம் வந்து சேரும்.
வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். ஞாலம் போற்றும் வாழ்வமையும். நீங்கள் செய்யும் செயல்கள் செவ்வனே நிறைவுபெறும்.
நாவல் மரத்தடி விநாயகரை வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். மகிழ மரத்தடி விநாயகர் மன அமைதியைக் கொடுப்பார். அருகம்புல் மாலையை ஆனைமுகனுக்கு சாற்றி வழிபட்டால் பேரும், புகழும் உங்களைத் தேடிவரும். அரசமரத்தடி விநாயகரை வழிபட்டால் ஆரோக்கியம் சீராகும். புத்திரப்பேறு கிட்டும்.
விநாயகர் வழிபாட்டிற்கு நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டியதில்லை. எந்த நேரமும், எங்கு வேண்டுமானா லும் நினைத்து வழிபடலாம். வெற்றிகள் வந்து சேரும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். கவலைகள் மாறும். கனதனம் சேரும்.
‘வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ, துள்ளி ஓடும் தொடர் வினைகளே’ என்பது முன்னோர் வாக்கு. எனவே தும்பிக்கையானை நம்பிக்கையோடு விரதம் இருந்து வழிபட்டால் இன்பங்களை எதிர்கொள்ள இயலும்.
அலமு ஸ்ரீனிவாஸ்

ஆறு முகமும், பன்னிரண்டு கரங்களும் இருப்பதால், தன்னை விரதம் இருந்து வணங்கும் பக்தர்களுக்கு கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக விளங்குகின்றார், முருகப்பெருமான்.
தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாள் பங்குனி உத்திர திருநாளாகும். தெய்வத் திருமணங்கள் நடந்த பங்குனி உத்திரத் திருநாளில் நாமும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டால் நமது வாழ்விலும் மறு மலர்ச்சி ஏற்படும். மணக்கோலம் காண வழிபிறக்கும்.
ஆறு முகமும், பன்னிரண்டு கரங்களும் இருப்பதால், தன்னை வணங்கும் பக்தர்களுக்கு கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக விளங்குகின்றார், முருகப்பெருமான். சிவனின் மைந்தன் செந்தில் வடிவேலனுக்கு உத்திரப் பெருவிழா கொண்டாடும் மாதம், பங்குனி மாதம் ஆகும். எத்தனை உத்திர நட்சத்திரங்கள் வந்தாலும் பங்குனி மாதம் வரும் பொழுது அது ‘பங்குனி உத்திரம்’ என்று சிறப்பாக அழைக்கப் படுகிறது. மாதங்களில் கடைசி மாதம் பங்குனியாக இருந்தாலும் நம்மை முதன்மையான மனிதராக மாற்றுவதற்கும், முக்கியமாக இல்லறம் என்னும் நல்லறத்தை ஏற்பதற்கும் இந்தப் பங்குனித் திருநாளில் விரதமிருந்து வள்ளி மணாளனை வழிபட வேண்டும்.
இத்தகைய சிறப்புமிக்க திருநாள் 6.4.2020 (திங்கட்கிழமை) அன்று வருகிறது. அன்றைய தினம் வீட்டு பூஜையறையில் வள்ளி - தெய்வானை உடனிருக்கும் முருகப்பெருமானின் படத்தை வைத்து பஞ்சமுக விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே, ஈசன் மகனே ஒரு கை முகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியேகை தொழுவேன் நான்!
என்று முன்னோர்கள் பாடியதைப்போல நாமும் நம்பிக்கையோடு பாடி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பங்குனி உத்திரத் திருநாளில் முருகப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்ல ராமர் - சீதை திரு மணம் நடைபெற்றதும், மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திரு மணம் நடைபெற்றதும், ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்ததும் இந்த நாளில்தான் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.
தெய்வங்களுக்குத் திருமணம் நடைபெற்ற இந்த நாளில் மனிதர்களாகிய நாம் விரதமிருந்து, மால்மருகனை வழிபட்டால் மணமாலை சூடுகின்ற மங்கல நாளைக் காண இயலும். எனவே இந்த விரதத்தை ‘கல்யாண விரதம்’ என்று வர்ணிப்பார்கள்.
வீட்டைத் தாங்குவது உத்திரம். அதைப்போல் நம் முடைய வாழ்க்கையைத் தாங்கிப் பிடிப்பது உத்திரம் நட்சத்திரம். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் சிலர் தவிப்பார்கள். ஜாதகத்தில் அங்காரக தோஷம், களத்திர தோஷம் போன்ற தோஷங்கள் அமைந்தவர் களுக்கு எல்லாம் வரன்கள் வாசல் தேடிவந்து திரும்பிச் செல்லும் சூழ்நிலை அமையும். வரன்கள் வாசல் தேடி வர, பங்குனி உத்திர திருநாளில் முழுமையாக விரதம் இருந்து, கந்தப்பெருமானை சொந்தப் பெருமானாக நினைத்து வழிபட்டால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
முழுநாளும் விரதம் இருந்து ‘வேலை வணங்குவதே வேலை’ எனக்கொண்டால் நாளும், பொழுதும் நலமாக இருக்கும். வாழ்க்கை வளமாக இருக்க எதையேனும் ஒன்றை நாம் நம்புகிறோம். அந்த நம்பிக்கையை சிவன் மீது மாசி சிவ ராத்திரியன்று பரிபூரணமாக வைக்கிறோம். தந்தை மீது நம்பிக்கை வைத்த நாம், பங்குனி மாதம் தனயன் முருகன் மீதும் நம்பிக்கை வைக்கவேண்டும். குத்துவிளக்கின் கீழே இடும் கோலம் வெறும் கோலமாக இல்லாமல், நடுவீட்டுக் கோலம் என்று அழைக்கப்படும் முக்கோண, அறுகோண, சதுரங்கள் அமைந்த கோலங்களாக இடவேண்டும். கோலத்தில் புள்ளி அதிகமிருந்தால் தான் ‘புள்ளி’ எனப்படும் வாரிசு பெருகும் என்பார்கள்.
வழிபாட்டின் பொழுது மாங்கனி கிடைத்தால் மாங்கனி வைக்கலாம். இல்லையேல் தேன்கதலியோடு தேனும், தினை மாவும் நைவேத்தியமாக வைத்து நாமே அதைச் சாப்பிடலாம். அருகில் இருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. அன்றைய தினம் சண்முகருக்கு சர்க்கரை அபிஷேகம் செய்தால், அவன் அக்கறையோடு நமக்கு அருள் தருவான். பஞ்சாமிர்தத்தால் அந்தப் பாலகனுக்கு அபிஷேகம் செய்தால் அஞ்சாத வாழ்வை அளிப்பான். பாலாலும், பன்னீராலும் அபிஷேகம் செய்து பார்த்தால் வாழ்நாளை நீடித்துக் கொடுப்பார். பங்குனி உத்திரத்தன்று ஆலயங்களுக்கு அருகில் தண்ணீர் பந்தல் வைத்து பக்தர்களுக்கெல்லாம் மோர் மற்றும் பானகம் கொடுத்தால் எண்ணிய பலன் நமக்குக் கைகூடும். அந்த அடிப்படையில் பார்போற்றும் வாழ்வமைய நாம் பரமசிவனின் மைந்தனை மனதில் நிறுத்தி வழிபடுவோம்.
காவிரியின் நீர் பெருகி கரை உடைந்து வந்துவிட்டால் கடைசியிலே சேரும் இடம் `கொள்ளிடம்'. கவலை யென்று வந்துவிட்டால் கைகூப்பித் தொழுதவருக்கு கவலை தீரும்; கந்தன் என்று சொல்லுமொரு சொல்லிடம். எனவே உத்திர நாளில் ‘கந்தா! கந்தா!’ என்று கனிவோடு கூறினால், ‘இந்தா! இந்தா!’ என்று வரங்களை நமக்கு வடிவேலன் தருவார்.
-‘ஜோதிடக்கலைமணி’ சிவல்புரி சிங்காரம்

அன்னை பராசக்திக்கு விருப்பமான வருடாந்திர விசேஷங்களில் ஒன்று நவராத்திரி. நான்கு நவராத்திரிகள் மட்டுமே முக்கியமானதாக கருதப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்பெறும் நவராத்திரியின் போது அம்பிகையை, மூன்று அம்சங்களாகக் கருதி வழிபடுகிறோம். கல்வியை தரும் அன்னை சரஸ்வதி தேவிக்கு மூன்று நாட்களும், செல்வத்தினை வழங்கும் மகாலட்சுமிக்கு மூன்று நாட்களும், தொடர்ந்து ஆற்றலையும், நம்பிக்கையும் வழங்கும் துர்க்கைக்கு மூன்று நாட்களும் ஆக ஒன்பது நாட்களும் நவராத்திரி கொண்டாடப்படும்.
ஆடி மாதப் பிரதமை தொடங்கும் ஆஷாட நவராத்திரியில் வராஹி அம்பிகையை முன்னிறுத்தி வழிபாடு செய்வார்கள். மாசி மாத பிரதமையிலிருந்து தொடங்கும் சியாமளா நவராத்திரியில் ராஜ மாதங்கி என்னும் சியாமளா தேவியை முன்னிறுத்தி வழிபாடு செய்வார்கள். அதே போல் வசந்த நவராத்திரியில் உலகை ஆளும் பராசக்தி அன்னையை முன்னிறுத்தி வழிபடுவார்கள்.
ஒரே பராசக்திதான். ஆனால் பல ரூபங்களாக நின்று பக்தர்களுக்கு அன்னை அருள்கிறாள். ஐந்து அடிப்படைத் தொழில்களைச் செய்வதற்காக ஐந்து அம்சங்களாகப் பிரிந்து அருளாட்சி செய்கின்றாள். படைக்கும் சக்தி ப்ரம்மரூபிணியான சரஸ்வதியாகவும், காக்கும் சக்தி விஷ்ணு ரூபிணியான லட்சுமியாகவும், அழிக்கும் சக்தி ருத்ர ரூபிணியான துர்க்கையாகவும், மறைக்கும் சக்தி ஈஸ்வரனின் ரூபிணியான ஈஸ்வரியாகவும், அருளும் சக்தி சதா சிவனின் ரூபிணியான பராசக்தியுமாகவும் அருள்பாலிக்கின்றார்கள்.

தொழில் தொடர்பான பிரச்சினைகள் வேலையின்மை பொருளாதார நெருக்கடி பொருள் இழப்பு ராகு தசை- சனி புத்தி சனி தசை - ராகு புத்தி இருப்பவர்கள் மகம் நட்சத்திரம் வரும் பவுர்ணமி நாளில் விரதம் இருப்பது நல்லது.
தொழில் தொடர்பான பிரச்சினைகள் வேலையின்மை பொருளாதார நெருக்கடி பொருள் இழப்பு ராகு தசை- சனி புத்தி சனி தசை - ராகு புத்தி இருப்பவர்கள் இந்த மகம் நட்சத்திரம் வரும் பவுர்ணமி நாளில் விரதம் இருப்பது நல்லது.
விரதம் இருந்து பார்வதி பரமேஸ்வரனை வழிபடுவதுடன் காசி கயா ராமேஸ்வரம் போன்ற இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த நீரை உங்கள் ஊரின் சிறப்பு பெற்ற சிவன் கோவிலில் அருளும் இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம் செய்யுங்கள். பின்னர் அந்த அபிஷேக நீரை தொழில் நிறுவனம் வீடுகளில் தெளித்து வர தொழில் விருத்தி பெறும்.

குலதெய்வத்தை பங்குனி உத்திர நட்சத்திரன்று விரதம் இருந்து கண்டிப்பாக வழிபடவேண்டும் என்பது, தென் மாவட்ட மக்களுக்கு எழுதப்படாத நியதியாகும்.
‘குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் இருக்கக்கூடாது’, ‘குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறக்கக்கூடாது’, ‘மனிதனை வாழவைக்கும் போதும், கொல்லும்போதும் குலதெய்வம் கூட வரும்’ என்பது போன்றவை, கிராமங்களில் பேசப்படும் பழமொழியாகும்.
குலதெய்வம் என்பது வெறும் வாய்வழியில் வரும் கதைகள் அல்ல? நமது பரம்பரையில் வந்த முன்னோர்கள். அந்த முன்னோர்களை தெய்வமாக நமது பரம்பரையினர் வழிபட்டு வந்தனர். ஒரு கிராமத்தில் ஒரு சாதியை சேர்ந்தவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்களில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு குலதெய்வம் இருக்கும். அந்த தெய்வத்தைத்தான் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் வழிபட்டு வருவார்கள்.
இந்த குலதெய்வம் பெரிய கோவிலாக இருக்காது. தினமும் பூஜை நடக்காது. மலை, காடுகள், குளத்துக்கரை, ஆற்றின் கரை, கண்மாய் போன்ற இடங்களில்தான் குலதெய்வ கோவில்கள் இருக்கும். அதற்கு சரியான போக்குவரத்து இருக்காது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை அன்று இரவில் சென்று விளக்கு போட்டு குலதெய்வ வழிபாடு செய்வதும் உண்டு. பெரும்பாலும் பங்குனி உத்திரம் அன்று கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.
குலதெய்வம் கோவில் என்பது ‘சாஸ்தா கோவில்’, ‘அய்யன் கோவில்’, ‘அய்யனார் கோவில்’ என்றும் அழைக்கப்படும்.
அரிக்கும், அரணுக்கும் பிறந்தவர் சாஸ்தா. இந்த சாஸ்தாவை மக்கள் பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். இந்த சாஸ்தா, அய்யனார் கோவிலில் பூரண, புஷ்கலையுடன் மூலவராக காட்சி அளிப்பார். அவருக்கு கருப்பசாமி, சுடலைமாடன், சங்கிலி பூதத்தார், அக்னி மாடசாமி, உதிரமாடசாமி, பலவேசக்காரன் என பல்வேறு பெயர்களில் காவல் தெய்வங்கள் இருக்கும். பிரம்ம சக்தி, பேச்சியம்மன், இசக்கியம்மன், மாடத்தி அம்மன் என்று பெண் தெய்வங்களும் பல பெயர்களில் இருக்கும்.
முதலில் சாஸ்தாவுக்கு சைவ படையல் போட்டுவிட்டு, காவல் தெய்வங்களுக்கு அசைவ படையல் போட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். தங்களுடைய வீட்டில் எந்த விசேஷம் வந்தாலும் மக்கள் முதலில் சென்று வழிபாடு நடத்துவது தங்களுடைய குலதெய்வ கோவிலுக்குத் தான். திருமணம், கிரகபிரவேசம், பூப்புனித நீராட்டு விழா ஆகியவற்றிற்கு முதல் பத்திரிகை அங்குதான் வைப்பார்கள். குழந்தை பிறந்த உடன் மொட்டை போட்டு காது குத்துவதும் அங்குதான்.
சாஸ்தா அவதரித்த பங்குனி உத்திரம் நட்சத்திரம் அன்று குலதெய்வ கோவிலுக்கு மக்கள் சென்று வழிபாடு நடத்துவார்கள். சாஸ்தா கோவிலுக்கு செல்வதற்கு முந்தைய நாளில் வீட்டை சுத்தம் செய்து, பூஜைக்கு தேவையான பொருட்களை வீட்டில் வைத்தே, தயாராக எடுத்துக்கொண்டு குடும்பத்தோடு வாகனங்களில் செல்வார்கள். திருமணம் ஆன பெண் தனது கணவர் வீட்டு சாஸ்தா கோவிலுக்குத்தான் செல்ல வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அழைத்து சென்று வழிபட வேண்டும். இல்லை என்றால் அந்த வழிபாட்டை சுவாமி ஏற்பது கிடையாது என்பதால், அண்ணன் - தம்பி சண்டை போட்டு இருந்தாலும் அன்று மட்டும் ஒன்றாக சேர்ந்து கோவிலுக்கு செல்வார்கள்.
கோவிலில் சாஸ்தா வழிபாடு முடிந்த பிறகு, காவல் தெய்வங்களுக்கு ஆடு, கோழி பலியிட்டு அசைவ படையல் போட்டு வழிபாடு நடத்தி, அனைவருக்கும் சமமான உணவு பரிமாறி சாப்பிட வேண்டும். இது தான் குலதெய்வ வழிபாட்டின் பிரதானமாகும்.
குலதெய்வத்திற்கும், மற்ற தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், மற்ற தெய்வங்களை யார் வேண்டுமானாலும் வழிபடுவார்கள். குலதெய்வத்தை, அந்த வம்சாவழியினர்தான் வழிபடுவார்கள். குலதெய்வத்தின் முன்பு தங்களுடைய குறைகளை சொல்லி கண்ணீர் விட்டால், மறு நிமிடமே அதற்கு தீர்வு கிடைக்கும் என்பது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
குலதெய்வத்தை பங்குனி உத்திர நட்சத்திரன்று கண்டிப்பாக வழிபடவேண்டும் என்பது, தென் மாவட்ட மக்களுக்கு எழுதப்படாத நியதியாகும். பங்குனி உத்திர நட்சத்திரமான பவுர்ணமி அன்று எதற்கு இந்த வழிபாடு நடத்தப்படுகிறது என்றால் பவுர்ணமிபோல் நமது வாழ்க்கையும் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
எனவே குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள் உடனே அதைத் தொடங்குங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும். குலதெய்வ வழிபாட்டை யார் ஒருவர் ஒழுங்கான முறையில் செய்து வருகிறார்களோ, அவர்களை எந்த கிரகத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. வருகிற வினைகள் எல்லாம் நல்ல வினையாகவே மாறும். குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி உள்ளது.
குலதெய்வம் தெரியாதவர்கள் காலபைரவரை வழிபடலாம். சாஸ்தா கோவில் தெரியாதவர்களுக்கு அச்சன் கோவில் தர்மசாஸ்தா, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் காரையாற்றில் உள்ள சொரிமுத்து அய்யனார், திருச்செந்தூர் முருகன் ஆகிய 3 தெய்வங்களை வழிபட்டாலே அவர்களுடைய சாஸ்தாவை வழிபட்ட பலன் கிடைக்கும்.
தென் மாவட்டத்தில் சாஸ்தா கோவில் இல்லாத ஊரே இல்லை. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் பங்குனி உத்திர நட்சத்திர நாளன்று தங்களுடைய குலதெய்வத்தை வழிபாடு செய்ய வந்து விடுவார்கள். வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி பங்குனி உத்திரத்தன்று தங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும்.
புலவனூரான்