என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராகு கேது
    X
    ராகு கேது

    ராகு கேது தோஷத்தை நிவர்த்தி செய்யும் விரதம்

    ராகு, கேது நவக்கிரகங்களில் சர்வ வல்லமை பெற்றவர்களாகத் திகழத் தொடங்கினார்கள். ராகு, கேதுவுக்கு எப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    ராகு, கேது நவக்கிரகங்களில் சர்வ வல்லமை பெற்றவர்களாகத் திகழத் தொடங்கினார்கள். ராகு தசை, கேது தசை காலங்களில் ஜாதகர் தம் முற்பிறவியின் பயனை அனுபவிக்கத் தவற மாட்டார். ஜாதகத்தில் ராகு-கேது கேடு செய்பவராக இருந்தால் அவர்களுக்குச் சாந்தி செய்தால் நன்மை கிடைக்கும். பரிகாரமாக அவர்களைப் பூசித்து வந்தால் நன்மை பல கிடைக்கும்.

    ராகுவும், கேதுவும் தங்களை காட்டிக் கொடுத்த சூரிய சந்திரர்களை விழுங்கி விட வேண்டுமென்ற நோக்கத்தில் அவர்களை இடப்புறமாக சுற்றிக் கொண்டு வருவதாகவும், அவர்களால்தான் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதாகவும் இதிகாசங்கள் கூறுகின்றன. ராகுவை கரும்பாம்பு என்றும், கேதுவை செம்பாம்பு என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

    ராகு கேது வாராமல் எந்த நாளும் இல்லாததால் எந்தக் கிழமையும் அவர்களுக்கு ஏற்றது. நீங்களே ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். முறையாக அந்தக் கிழமைகளில் நீராடி புளிப்பு அன்னம் உளுந்து சேர்ந்த பலகாரம் தயாரித்து நுனி இலையில் படைக்கவும். தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். மந்தாரை மலர்கட்டி, மந்தாரை மலராலேயே பூஜிக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த கிழமையில் விரதம் இருப்பதும் அவசியமாகும். பிரசாதத்தை யாராவது ஒருவருக்கோ, பலருக்கோ கொடுத்து பூஜிக்கச் சொல்லவும். தாம்பூலம், தட்சிணை கொடுத்துநமஸ்காரம் செய்யவும்.

    பொதுவாக, ராகு திசை நடைபெறும் காலத்தில் முற்பகுதியில் எல்லாவித செல்வங்களையும் வசதிகளையும் கொடுப்பார். ஆனால் பிற்பகுதியில் கொடுத்தவை அனைத்தையும் பறித்துக் கொள்வார். இதில் இருந்து விடுபட கபிஸ்தலம் சென்று கஜேந்திர வரதராஜ பெருமாளை வழிபட வேண்டும். 
    Next Story
    ×