என் மலர்
முக்கிய விரதங்கள்
கொரோனா வைரசால் சமயபுரம் அம்பாளின் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளும் அனைத்து பக்தர்களும் நாளை (5-ம் தேதி) வீட்டிலேயே விரதத்தை முடித்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழாவும் அதனைத் தொடர்ந்து வரும் சித்திரை தேர்த்திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா நாட்களில் தினமும் பல்லயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாகவும் வந்து வழிபட்டு செல்வார்கள்.
இந்நிலையில் இந்தஆண்டு இந்திய அரசு கொரோனா நோய் தொற்று காரணமாக நோய் பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு தினசரி கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கப்பட்ட பூச்சொரிதல் விழா வரும் 4-ந்தேதியுடன் முடிவடைகிறது. அன்றுடன் சமயபுரம் அம்பாளின் பச்சை பட்டினி விரதமும் நிறைவடைகிறது.
பச்சைப்பட்டினி மேற்கொள்ளும் அனைத்து பக்தர்களும் வரும் 5-ந்தேதி காலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் தங்கள் வீட்டிலேயே அம்மன் படத்தை வைத்து நைவேத்தியமாக தயிர்சாதம், இளநீர், கஞ்சி, நீர்-மோர் பானகம் முதலியனவற்றை வைத்து மாலையை கழற்றி, காப்பு அவிழ்த்து விரதத்தை முடித்து கொள்ளலாம் என்று கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மனாக நத்தம் மாரியம்மன் திகழ்வதால் ஆண்டுதோறும் விரதம் இருந்து நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
திருவிழா காலத்தில், பக்தர்கள் காப்பு கட்டுதல், 15 நாட்கள் விரதமிருத்தல், அக்னிசட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல் மற்றும் கழுமரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்தல் என்று பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மனாக மாரியம்மன் திகழ்வதால் ஆண்டுதோறும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இறைவனுடன் நாம் தொடர்பு கொண்டால் இன்னல்கள் அகலும் என்பது முன்னோர் வாக்கு. சிறிய விக்கிரகங்கள் சாமி சிலைகள், பொம்மைகள் போன்றவற்றை வீட்டில் வைத்து முறையாக விரதம் இருந்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
இறைவனுடன் நாம் தொடர்பு கொண்டால் இன்னல்கள் அகலும் என்பது முன்னோர் வாக்கு. கண்ணுக்கு புலப்படாத இறைவனை நாம் கருத்தில் நிறுத்தி வழிபடுவதும், நம் குறையைச் சொல்வதும், தொலைபேசியில் மறுமுனையில் உள்ளவரை மனதால் நினைத்து நம் கருத்துக்களைச் சொல்வது போலத்தான் ஆகின்றது.
நம்மோடு உடன் இருப்பவர்களிடம் பேசாமலும், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்காமலும் இருந்தால் இறைவன் எப்படி நமக்கு உதவிக்கரம் நீட்டுவார். எனவே நமக்கு பொருத்தமான அளவுள்ள சிறிய விக்கிரகங்கள் சாமி சிலைகள், பொம்மைகள் போன்றவற்றை வீட்டில் வைத்து முறையாக விரதம் இருந்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
தொலைபேசியிலும், அலைபேசியிலும் எதிர்முனையில் உள்ளவர்களின் தோற்றத்தை பார்க்க இயலாது. தோற்றத்தைப் பார்த்து பேசும் பொழுது நமக்கு உற்சாகம் அதிகரிக்கும். எனவே தான் உருவ வழிபாடு நமக்கு உறுதுணை புரிகிறது. அதே சமயத்தில் அந்த உருவ சிலைக்கு தினமும் தவறாமல் பூஜையும், நைவேத்தியமும் செய்வது அவசியமாகும். அப்பொழுதுதான் பலன் கிடைக்கும்.

ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விரதம் இருந்து நாகராஜா கோவிலுக்கு வந்து வழிபாடுகள் செய்தால் அதிக பலன்களை பெற முடியும். அதோடு குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அனைத்து பாக்கியங்களையும் பெற முடியும்.
நாகராஜா கோவிலுக்கும் ஆயில்யம் நட்சத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விரதம் இருந்து இந்த ஆலயத்துக்கு வந்து வழிபாடுகள் செய்தால் அதிக பலன்களை பெற முடியும்.
ராம அவதாரத்தில் லட்சுமணர் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தார். கிருஷ்ண அவதாரத்தின் போது அனந்தன் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தார். தற்போதைய கலியுகத்தில் நாகராஜா ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்ததாக ஐதீகம். எனவே தான் நாகராஜா ஆலயத்தில் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
ஆயில்யம் நட்சத்திர நாளில் விரதம் இருந்து உரிய முறைப்படி வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் தீரும். அதோடு குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அனைத்து பாக்கியங்களையும் பெற முடியும்.
2020-ம் ஆண்டு ஆயில்ய நாட்கள்
ஏப்ரல் 04.04.2020 சனிக்கிழமை
மே 01, 28.05.2020 வெள்ளி, வியாழன்
ஜூன் 26.06.2020 வியாழக்கிழமை
ஜூலை 22.07.2020 புதன்கிழமை
ஆகஸ்டு 18.08.2020 செவ்வாய்க்கிழமை
செப்டம்பர் 15.09.2020 செவ்வாய்க்கிழமை
அக்டோபர் 12.10.2020 திங்கட்கிழமை
நவம்பர் 09.11.2020 திங்கட்கிழமை
டிசம்பர் 06.12.2020 ஞாயிற்றுக்கிழமை

செவ்வாய் கிழமை விரதம் இருந்து முருகனை வழிபாடு செய்ய உகந்த நாள் என்று முன்னோர்கள் சொல்லுவார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள்.
பொருளாதார நிறைவை வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும்
சக்தி தேவி.
முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும்.
செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்பு களையும், மாபெரும் சக்தியையும் பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.
கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு.
இந்த விரதத்தை மேற்கொள்ளும் போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் வழிபட வேண்டும். முன்னதாக விநாயகர் படத்தையும் வைத்து வழிபட வேண்டும்.
அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம்.
பொருளாதார நிறைவை வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும்
சக்தி தேவி.
முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமையில் இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும்.
செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்பு களையும், மாபெரும் சக்தியையும் பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.
கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு.
வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லி வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம். வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுக வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும்.
அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம்.
துர்க்கை அம்மன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி மனதார உங்கள் கோரிக்கைகளை வைத்து வழிபட்டு வந்தால் தெய்வக் குற்றம் நீங்கும். சாபத்தினால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.
சிலருக்கு தெய்வ குற்றம் உண்டாகி இருக்கும். அது தெரியாமல் கூட இருக்கலாம். பக்தர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமானது திருமண தடை. திருமண தடை நீக்க பரிகாரங்கள் ஏராளம் உள்ளன. திருமண தடைக்கு தெய்வ குற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்பிறவியில் தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது தெய்வ குற்றம் செய்து இருப்பீர்கள். நீங்கள் என்று இல்லை. உங்கள் பெற்றோர் அல்லது முன்னோர்கள் செய்து இருப்பார்கள். அதன் விளைவாக தான் திருமணம் கைகூடி வராமல் தள்ளி சென்று கொண்டே இருக்கும். ஜாதகத்தில் தோஷம் என்பது பொதுவானது. ஆனால் எந்த தோஷமும் இன்றி சிலருக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். மேலும் சிலருக்கு எந்த வேலையை தொடங்கினாலும் அதில் சில தடைகள் வந்துகொண்டே இருக்கும். அது போன்றவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.
துர்கை அம்மனுக்கு இதை செய்வதால் தெய்வ குற்றம் நீங்கும். அதை பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம் வாருங்கள். தெய்வக்குற்றம் மட்டும் இல்லை. சாபம் கூட திருமணம் மற்றும் தொழில் தடைக்கு காரணமாக இருக்கலாம். இந்த பிறவியிலோ அல்லது போன பிறவியிலோ யாருடைய சாபதிற்ககோ நீங்கள் ஆளாகி இருக்கலாம். சாபம் என்பது வழி வழியாக தொடர்கதையாக வருவது. ஒருவருக்கு இழைக்கபட்ட அநீதியானது சாபமாக மாறும் போது அது கட்டாயம் பலிக்கும். ஆனால் அதன் பலனை அனுபவிக்கும் போது அவர்களுக்கே தெரியாமல் போகலாம். அவர்களது சந்ததியினரும் கூட இந்த பலனில் பங்கு கொள்வார்கள். நீங்கள் கேட்டிருக்கலாம்.. சிலர், உன் குடும்பமே தழைக்காமல் போகும். உன் சந்ததியே துன்பமுறும் என்றெல்லாம் வயிற்றெரிச்சலுடன் சாபம் இடுவார்கள்.
அவையெல்லாம் பலிக்குமா? என்று கேட்டால் தெரியாது தான். ஆனால் சில சாபங்கள் மிகவும் கொடூரமான விதத்தில் இருக்கும். சாபம் பலிக்காது என்று கூற சான்றுகள் இல்லை. பலிக்கும் என்பதற்கு சில புராணங்கள் எடுத்துக்காட்டாக இருப்பது அனைவரும் அறிந்ததே. கண்ணகிக்கு இழைக்கபட்டது அநீதி. அதன் விளைவாக மதுரையே நிர்மூலமானது. அது போல் சபத்தினால் கூட தடைகள் ஏற்படக்கூடும். அந்த மாதிரியான தடைகளை நீக்கி நல்லது நடக்க இந்த வழிபாடு பெருமளவு துணை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. 1. துர்க்கை அம்மன் சன்னதியில் வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் காலை பத்தரை மணி முதல் பணிரெண்டு மணிக்குள்ளாக தாமரைத் தண்டினாலான திரி கொண்டு நெய் தீபம் ஏற்றி மனதார உங்கள் கோரிக்கைகளை வைத்து வழிபட்டு வந்தால் தெய்வக் குற்றம் நீங்கும். சாபத்தினால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை செய்து அனைவரும் பலனடையலாம். தெய்வக்குற்றம் மற்றும் சாபம் நீங்குவதற்கான பரிகாரம் தான் இது. 2. தொடர்ந்து ஆறு வாரங்கள் இதை செய்து முடித்த பின்னர் அஸ்த நட்சத்திரம் வரும் நாளில் துர்க்கை சன்னதிக்கு சென்று சிகப்பு நிறத்தாலான பட்டு துணி ஒன்றை அம்மனுக்கு சாற்றி, சிகப்பு தாமரை பூவினை துர்க்கை அம்மனின் மலர் பாதங்களில் வைத்து 27 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை மாலையாக கோர்த்து அந்த மாலையை அம்மனுக்கு சாற்றி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்த பின் தங்களால் முடிந்த அளவிற்கு பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கலாம். அர்ச்சனை செய்த அந்த குங்குமத்தை வீட்டிற்கு கொண்டு வந்து தினமும் நெற்றியில் இட்டு வருவதன் மூலம் தடைகள் நீங்கும். விரைவில் நாம் எதிர்பார்ப்பது கைகூடி வரும்.

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கல நாண் நிலைக்கவும்,தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பது மரபு.
கயிலாயத்தில்,ஒரு சமயம் ஈசனின் கண்களை விளையாட்டாகப் பார்வதி தேவியார் பொத்தியதால், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது.அந்த கணம் உலகில் வாழும் ஜீவன்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானதால், கோபம் கொண்ட இறைவன், பார்வதியை பூலோகம் சென்று தவம் செய்யும்படி கட்டளையிட்டார். பூலோகம் வந்த பார்வதி, காஞ்சி மாநகருக்கு வந்து கம்பா நதிக்கரையில் அமர்ந்து மண்ணால் சிவலிங்கம் நிறுவி விரதம் மேற்கொண்டு பூஜித்துக் கொண்டிருந்தாள்.
தேவியை சோதிக்க விரும்பிய ஈசன், கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுக்க செய்தார். வெள்ளம் பார்வதி தேவி பூஜை செய்யும் லிங்கத்தையும் அடித்துச் செல்ல வந்தது. உடனே தேவி சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இறைவனை வேண்டினாள். இறைவனும் நேரில் காட்சி கொடுக்க, இறைவனுடன் பார்வதியும் இணைந்தாள்.
அன்னை காமாட்சியே இந்த விரதத்தினை மேற்கொண்டதால் காரடையான் நோன்பு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் பெற்றது.
மஹா பதிவிரதையான சாவித்திரி செந்நெல்லையும் காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெய்யுடன் ஸ்ரீகாமாட்சிஅன்னைக்குச் சமர்ப்பித்து வழிபட்டதால், தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டாள். நோன்பு அன்று காரடை தயார் செய்து, “உருகாத வெண்ணெயும் ஓரடையும் வைத்து நோன்பு நோற்றேன். ஒரு நாளும் என் கணவர் பிரியாமலிருக்க வேண்டும்” என்று சுமங்கலிகள் பூஜையின் போது வேண்டிக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.
சுமங்கலிப் பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கல நாண் நிலைக்கவும்,தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பது மரபு.
தேவியை சோதிக்க விரும்பிய ஈசன், கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுக்க செய்தார். வெள்ளம் பார்வதி தேவி பூஜை செய்யும் லிங்கத்தையும் அடித்துச் செல்ல வந்தது. உடனே தேவி சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இறைவனை வேண்டினாள். இறைவனும் நேரில் காட்சி கொடுக்க, இறைவனுடன் பார்வதியும் இணைந்தாள்.
அன்னை காமாட்சியே இந்த விரதத்தினை மேற்கொண்டதால் காரடையான் நோன்பு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் பெற்றது.
மஹா பதிவிரதையான சாவித்திரி செந்நெல்லையும் காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெய்யுடன் ஸ்ரீகாமாட்சிஅன்னைக்குச் சமர்ப்பித்து வழிபட்டதால், தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டாள். நோன்பு அன்று காரடை தயார் செய்து, “உருகாத வெண்ணெயும் ஓரடையும் வைத்து நோன்பு நோற்றேன். ஒரு நாளும் என் கணவர் பிரியாமலிருக்க வேண்டும்” என்று சுமங்கலிகள் பூஜையின் போது வேண்டிக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.
சுமங்கலிப் பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கல நாண் நிலைக்கவும்,தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பது மரபு.
நாகராஜ விரத பூஜை செய்பவர்கள் முற்பிறவியில் செய்த சர்ப்பதோஷங்கள் விலகி, சத்புத்திர சந்ததிகள் ஏற்பட்டு சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்று கூறுகிறது சர்ப்ப தோஷ பரிகார நூல்.
நாக ராஜ விரதத்தை சுக்ல சஷ்டி விரதம் எனவும் கூறுகிறார்கள். இந்த நாகராஜ விரத பூஜை செய்பவர்கள் முற்பிறவியில் செய்த சர்ப்பதோஷங்கள் விலகி, சத்புத்திர சந்ததிகள் ஏற்பட்டு சகல சவுபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்று கூறுகிறது சர்ப்ப தோஷ பரிகார நூல்.
இந்த விரதத்தையும் பூஜையையும் பெண்களே செய்ய வேண்டும். ஏதாவது ஒரு மாதத்தில் சுக்ல பட்ச சஷ்டி அன்று செய்ய வேண்டும். இதற்கு வெள்ளியிலோ, தங்கத்திலோ, செம்பிலோ, நாகவடிவம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சுக்ல பஷ சஷ்டியன்று அதி காலையில் குளித்து ஆசார அனுஷ்டானங்களை முடித்து விநாயகரை வழிபட வேண்டும்.
பூஜைஅறையிலோ கூடத்திலோ கலசம் அமைத்து அலங்கரித்து, நாகவடிவத்தை வைத்து சந்தனம் மற்றும் கும்குமம் திலகமிட்டு பசும்பால், தேன், கல்கண்டு, கனி வகைகள், வைத்து நிவேதினம், செய்து தூபதீபம் காட்டுப் பிராத்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனை முடிந்ததும் பசும் பாலில் தேனைக் கலந்து பிறருக்கு பிரசாகமாக தந்துவிட்டு, விரதமிருப்பவர்களும் சாப்பிடலாம்.
காலையில் உபவாசமிருந்து பகல் நிவேதனப் பொருட்களைச் சாப்பிட்டுவிட்டு, வேறு உணவு ஏதும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மாலையில் புற்றுக்கு பால் ஊற்றி தூப தீப ஆராதனை செய்து விட்டு வர வேண்டும். அதன்பிறகு இரவு பலகாரம் சாப்பிட லாம். நாகராஜ விரத மிருப்பவர்கள் முறைப்படி இதைக் கடைப்பிடித்தால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும். அதற்கு அடையாளமாக நேரிலோ கனவிலோ சர்ப்பம் படம் விரித்து ஆடுவதைக் காண லாம் என சர்ப்ப தோஷ பரிகார நூல் கூறுகிறது.

வசந்த நவராத்திரியும் தவிர்க்க முடியாத நவராத்திரி விரதத்தில் ஒன்றாக இருக்கிறது. வசந்த நவராத்திரியை ‘லலிதா நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள்.
25-3-2020 முதல் 3-4-2020 வரை
அன்னை பராசக்திக்கு விருப்பமான வருடாந்திர விசேஷங்களில் ஒன்று நவராத்திரி. ஒவ்வொரு மாதமும் அமாவாசை பிரதமையில் இருந்து தசமி வரை உள்ள பத்து நாட்களும் நவராத்திரியாகவே கருதப்பெறுகிறது. ஆனால் நான்கு நவராத்திரிகள் மட்டுமே முக்கியமானதாக கருதப்படுகிறது. அவை:- புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்பெறும் நவராத்திரி ‘சாரதா நவராத்திரி’, மாசி மாதத்தில் கொண்டாடப்படும் ‘சியாமளா நவராத்திரி’, ஆடி மாதத்தில் கொண்டாடப்பெறும் ‘ஆஷாட நவராத்திரி’, வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ‘வசந்த நவராத்திரி’ ஆகியவையாகும்.
இவற்றில் புரட்டாசி நவராத்திரியும், பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரியுமே பழக்கத்தில் இருக்கின்றன. அதிலும் அதிகமான மக்களால் கடைப்பிடிக்கப்படும் நவராத்திரி விரதமாக புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியே முக்கியமானதாக இருக்கிறது. அதே நேரம் வசந்த நவராத்திரியும் தவிர்க்க முடியாத நவராத்திரி விரதத்தில் ஒன்றாக இருக்கிறது. வசந்த காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருப்பதால், வசந்த நவராத்திரி பூஜைகள் பகலிலேயே நடைபெறுகின்றன. வசந்த நவராத்திரியை ‘லலிதா நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள்.
வசந்த நவராத்திரி என்பது கானகத்தில், கந்த மூலிகைகளைக் கொண்டு செய்யக் கூடியதாகும். இதை ராமபிரான் கானகத்தில் இருந்தபோது, நாரத முனிவர் நடத்தி வைத்ததாக, ராம சரிதம் சொல்கிறது. புராணத்தில் பங்குனியும், புரட்டாசியும் எமதர்ம ராஜனின் கோரைப்பற்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத காலங்களும் நோய்க் கிருமிகள் பரவும் காலமாக இருப்பதாகவும், தெய்வத்தின் அருள் மனிதருக்குக் கிடைப்பதில் தடை ஏற்படும் காலம் என்றும் சொல்லப்படுகிறது. எனவேதான் இந்த காலகட்டத்தில் அம்பாளை வழிபடும் நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வசந்த நவராத்திரி கொண்டாடுவதற்கான ஒரு குட்டிக்கதை சொல்லப்படுகிறது. அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள்.
முன்னொரு காலத்தில் அயோத்தி தேசத்தை துருவசிந்து என்ற மன்னன் ஆட்சி செய்தான். அந்த மன்னனுக்கு மனோரமா, லீலாவதி என்று இரண்டு மனைவிகள். ஒருமுறை வேட்டைக்காக காட்டிற்கு சென்ற மன்னன், சிங்கத்தால் மரணம் அடைந்தான். இதையடுத்து மன்னனின் மனைவியர்களில் யாருடைய மகனுக்கு முடிசூட்டுவது என்ற பிரச்சினை எழுந்தது. முறைப்படி மனோரமாவின் மகன் சுதர்சனனுக்கு முடிசூட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் லீலாவதியின் தந்தை சத்ருஜித் தன்னுடைய பேரனும், லீலாவதியின் மகனுமான யுதஜித்தை அரசனாக்க விரும்பினான். அதற்கான முயற்சியிலும் இறங்கினான்.
இதையறிந்த மனோரமாவின் தந்தை வீரசேனன், சத்ருஜித்தை எதிர்த்தான். இதனால் இருவருக்கும் போர் மூண்டது. இதில் வீரசேனன் கொல்லப்பட்டான். இதையடுத்து மனோரமாவும், சுதர்சனனும் உயிர்தப்பி காட்டிற்குள் சென்றனர். அவர்கள் இருவரும் காட்டிற்குள் இருந்த பரத்வாஜ் முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்தனர்.
இந்த நிலையில் அயோத்தியின் ஆட்சிப்பொறுப்பை அடைந்த யுதஜித், தன்னுடைய படையினரை அனுப்பி சுதர்சனனை கண்டுபிடிக்க உத்தரவிட்டான். அந்தப் படையினர், சுதர்சனனும் அவனது தாயும் பரத்வாஜ் முனிவரின் ஆசிரமத்தில் இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து சுதர்சனனை தன்னுடைய கைதியாக அனுப்பிவைக்கும்படி, பரத்வாஜ் முனிவருக்கு யுதஜித் தூது அனுப்பினான். ஆனால் தன்னை நாடி வந்தவர்களை காப்பது தன்னுடைய கடமை என்று கூறி, அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார், முனிவர். இதனால் கோபம் அடைந்த யுதஜித், போர் தொடுக்க முடிவு செய்தான். ஆனால் அவனோடு இருந்த அமைச்சர்கள், ‘முனிவர்களை எதிர்ப்பது நமக்கு நல்லதல்ல’ என்று அறிவுரை கூறியதைத் தொடர்ந்து, யுதஜித் அந்த முடிவை கைவிட்டான்.
இந்த நிலையில் ஆசிரமத்தில் இருந்த சுதர்சனுக்கு ‘க்லீம்’ என்ற அம்பாளின் பீஜ மந்திரத்தை பரத்ராஜ் முனிவர் உபதேசித்தார். அதை இடைவிடாது சொல்லி வந்த சுதர்சனன் ஒரு கட்டத்தில் தவ நிலைக்கு சென்றான். அவன் உச்சரித்த மந்திரத்தில் வீரியம், அன்னை பராசக்தியை அவன் முன்பாகத் தோன்றும்படி செய்தது. சுதர்சனன் முன்பாக தோன்றிய தேவி, அவனுக்கு சக்தி வாய்ந்த, அழிவில்லாத ஆயுதங்களை பரிசாக வழங்கினாள்.
சில காலங்களுக்குப் பிறகு, பனாரஸ் நாட்டு அரசனின் ஒற்றர்கள், பரத்வாஜ் முனிவரின் ஆசிரமம் வழியாக சென்றபோது, ஆயுதங்களை லாவகமாக கையாண்ட சுதர்சனனைக் கண்டனர். அவர்கள் பனாரஸ் அரசனின் மகளான சசிகலாவிற்கு, சுதர்சனன் ஏற்ற துணையாக இருப்பான் என்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பனாரஸ் மன்னன், சுதர்சனனை முறைப்படி அழைத்து தன் மகளை மணம் முடித்துக் கொடுப்பது பற்றி பேசினான். சுதர்சனனும் சம்மதம் தெரிவிக்கவே, திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையறிந்த யுதஜித், பனாரஸ் நாட்டின் மீது படையெடுத்து வந்தான். அப்போது சுதர்சனன் தன்னிடம் இருந்த சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கொண்டு, யுதஜித்தை தோற்கடித்து, தன் மாமனாரை காப்பாற்றினான். சுதர்சனனிடம் இருந்த ஆயுதங்கள், யுதஜித்தின் படைகளை துவம்சம் செய்து அழித்தொழித்தது. போர் முடிந்ததும், சுதர்சனன் - சசிகலா திருமணம் விமரிசையாக நடைபெற்றது. அனைவரும் தேவியின் மந்திரத்தை உச்சரித்து அவளை வணங்கினர்.
இதனால் மனம் மகிழ்ந்த அன்னை பராசக்தி, அவர்களின் முன்பாக தோன்றி ‘என்னை வருடந்தோறும் இதே வசந்த காலத்தில் வழிபாடு செய்யுங்கள். உங்கள் துன்பங்கள் யாவும் மறைந்து நன்மைகள் விளையும்’ என்று கூறி மறைந்தாள்.
திருமணத்திற்கு பிறகு சுதர்சனன் தன் மனைவியுடன் பரத்வாஜ் முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றான். அவனை வாழ்த்திய முனிவர், அவனை அயோத்தியின் அரச னாக முடிசூட்டிக்கொள்ளும்படி அனுப்பிவைத்தார். மன்னனாக பொறுப்பேற்ற சுதர்சனன், நாட்டு மக்களுடன் ஆண்டுதோறும் வசந்த காலத்தில் வசந்த நவராத்திரியை கொண்டாடி மகிழ்ந்தான்.
இந்த புண்ணிய தினங்களில் அருகிலுள்ள ஆலயங்களுக்குச் சென்று, அம்பாளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடுங்கள். வசந்த நவராத்திரி நாட்களில் அனுதினமும் அம்பாளுக்கு நிகழும் ஆராதனைகளைத் தரிசிப்பதால், விசேஷ பலன்கள் கைகூடும். வீட்டிலும் அனுதினமும் சித்ரான்னங்கள் படைத்து, லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலான தேவி துதிப் பாடல்களைப் பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால், அனைத்து நோய்களும் விலகி, சகல நன்மைகளும் அந்த இல்லத்தில் பொங்கிப் பெருகும்.

விரதத்தின் மூலமாகத்தான் அருணகிரிநாதர், முருகப்பெருமானின் அருளைப்பெற்றார். முருகப்பெருமானுக்கு உகந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்வில் வளம் காணலாம்.
கந்தப்பெருமான் மீது நம்பிக்கை வைத்து சிந்தை மகிழ வழிபட்டால், எந்த நாளும் இனிய நாளாக அமையும் என்பது முன்னோர்களின் வாக்கு. அந்த அடிப் படையில் கார்த்திகைத் திருநாளில் நேர்த்தியாக முருகனை நாம் வழிபட்டால் பாராட்டும், புகழும் கிடைக்கும். அதனால்தான் ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை’ என்று சொல்லிவைத்தார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானை வழிபட உகந்த நாள் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை தினமாகும்.
‘திரு’ என்ற அடைமொழி, சிறப்புமிக்க சில ஊர்களோடு இணைந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். குறிப்பாக திருப்பத்தூர், திருமயம், திருவாடானை, திருவாரூர், திருப்பதி, திருப்புங்கூர், திருவாடுதுறை, திருப்பூர், திருவண்ணாமலை, திருவானைக்காவல், திருநெல்வேலி, திருமழபாடி, திருத்தணி உள்ளிட்ட எண்ணற்ற தலங்கள் ‘திரு’ என்ற அடைமொழியுடன் இருப்பதைக் காணலாம்.
அதேபோல பெருமைக்குரிய நட்சத்திரங்களில் ‘திரு’ என்ற அடைமொழியுடன் கொண்டாடப்படும் திருநாள் ‘திருக்கார்த்திகை’ ஆகும். அந்த நாளன்று முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டால் அந்த முத்துக் குமரன் உங்களுக்கு முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான்.
திருக்கார்த்திகை தினம் அருள்வழங்கும் முருகப்பெருமானை வழிபட்டால் பொருள் வளம் பெருகும். ஆலயம் சார்ந்த மலைகளை வலம் வந்து வழி பட்டால், வாழ்வில் மகத்துவம் காணலாம்.
அதற்கு முதல் நாள் பரணி நட்சத்திரம் தொடங்குகிறது. பாவங்கள் போக்க பரணி தீபம் ஏற்றும் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். நட்சத்திரத்தின் பெயரும், மாதத்தின் பெயரும் ஒன்றாக அமைவது இந்த மாதத்தில்தான். இந்த மாதத்திற்கு மற்றொரு பெருமை, ‘கை’ என்ற எழுத்தில் முடியும் மாதம் இது. வாழ்க்கை என்ற கை சிறப்பாக அமைய, இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய மாதமிது. பரணி தீபத்தன்று பிரதோஷமும் வருகின்றது. சோமவாரம் என்பதால் சங்காபிஷேகமும் நடைபெறும். பரணிதீபம், பிரதோஷம், சங்காபிஷேகம் என முப்பெரும்விழா நடைபெறும் இந்த நன்னாளில், இல்லத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டும். இனிய வாழ்வு அமைய முருகப்பெருமான் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள்.
‘பரணி தரணி ஆளும்’ என்பார்கள். பரணி நட்சத்திரமன்று நாம் முருகப்பெருமானை முறையாக வழிபட்டால், தரணி ஆளக்கூடிய யோகம் கிடைக்கும். அதாவது புகழ், கீர்த்தி, செல்வாக்கு, செல்வ வளம், பதவி, பட்டம் ஆகிய அனைத்தும் வந்து சேரும்.
தீபம் ஏற்றுவதன் மூலம் முழுமையான பலன் நமக்குக் கிடைக்கும் நாள்தான் திருக்கார்த்திகை. அதற்கு முதல் நாள் வரும் பரணி நட்சத்திரமன்று மாலையில் நாம் இல்லங்களில் விளக்கேற்றி வைத்தால் உன்னதமான வாழ்க்கை அமையும். வீட்டில் நல்லெண்ணெய்யிலும், ஆறுமுருகப்பெருமான் சன்னிதியில் இலுப்பை எண்ணெய்யிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்பது மரபு. ஒளி விளக்கு ஏற்றினால் ஒளிமயமான எதிர்காலம் அமையும். வீட்டில் விளக்கேற்றும் பொழுது, படிக்கு மூன்று விளக்கு ஏற்ற வேண்டும்.
மறுநாள் திருக்கார்த்திகை அன்று வீட்டை சுத்தம் செய்து முருகப்பெருமானை வரவேற்க வேண்டும். பூஜை அறையில் முழு முதற்கடவுள் விநாயகப்பெருமானின் படத்தோடு, அவரது தம்பியான முருகப்பெருமானின் படத்தையும் வைத்து மாலை சூட்ட வேண்டும். பஞ்சமுக விளக்கேற்றி, அதில் ஐந்து வகையான எண்ணெய் ஊற்றி, கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் எல்லாவற்றையும் பாராயணம் செய்து வழிபட்டால் இனிய வாழ்க்கை அமையும்.
‘வந்த வினையும், வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே!’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். கார்த்திகை தினத்தில் கந்தன் பேரை உச்சரித்தால் வந்த துயரங்கள் வாசலோடு நின்றுவிடும். எந்த நாளும் இனிய நாளாக மாற வழிபிறக்கும். கந்தனுக்கு பிடித்த அப்பத்தை நைவேத்தியமாக வைத்துப் படைக்கலாம். அதோடு முப்பழமும், பருப்பு பாயசமும் வைத்து நைவேத்தியம் செய்வது நல்லது.
கார்த்திகை தினத்தன்று இரவு வரை விரதமிருந்து வழிபடுவது மிகச்சிறந்த பலனை வழங்கும். அப்படி இயலாதவர்கள் ஒரு நேரமாவது விரதமிருக்கலாம். கார்த்திகைத் திருநாளில் அன்னதானம் செய்தால், ஆச்சரியப் படத்தக்க சம்பவங்கள் அதிகம் நடைபெறும். காக்கைக்கும் உணவளிக்க வேண்டும். ஜோதி வடிவான இறைவனை நினைத்து சிவாலயங்கள் தோறும் சொக்கப்பனை ஏற்றி வழிபாடு செய்வார்கள். அதிலுள்ள கம்பு அனலில் எரிந்து முடிந்ததும், அதை எடுத்து வந்து வீட்டில் வைத்துள்ள செடிகளில் நட்டுவைத்தால் செடிகள் நன்றாக வளரும் என்பது நம்பிக்கை.
இந்த விரதத்தின் மூலமாகத்தான் அருணகிரிநாதர், முருகப்பெருமானின் அருளைப்பெற்றார். இழப்புகளை ஈடுசெய்யும் விரதமான இந்த விரதத்தை எல்லோரும் கடைப்பிடித்து வாழ்வில் வளம் காணலாம்.
“ஜோதிடக்கலைமணி” சிவல்புரி சிங்காரம்

விரதம் என்று காலை முதல் மாலை வரை உண்ணாமல் இருப்பது நமது இந்திய கலாச்சாரத்தில் பலரும் கடைபிடிக்கும் விஷயம்.
விரதம் என்று காலை முதல் மாலை வரை உண்ணாமல் இருப்பது நமது இந்திய கலாச்சாரத்தில் பலரும் கடைபிடிக்கும் விஷயம். மாதத்தில் ஒருநாள் விரதம் இருந்தால் நல்லது என்றும் சொல்கிறார்கள். சிலர் வாரத்தின் பாதிக்கிழமைகளை விரதத்திலேயே கழிப்பார்கள். இதனால், சிலர் ஒல்லியாக பலவீனமாக காணப்படுவார்கள் ‘தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பேன்’ என்று சபதம் செய்வார்கள். முறையாக எப்படி விரதம் இருக்க வேண்டும்?
விரதம் (Fasting) என்பதை பண்டைய காலத்தில் நமது முன்னோர் ‘உபவாசம் இருப்பது’ என்றுதான் சொல்லியுள்ளார்கள். உபவாசம் செய்வதன் நோக்கம் உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்துவது. மாதம் ஒருமுறை உபவாசம் இருப்பது, நம் வாழ்க்கை முறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். இன்னும் சிலர் உபவாசம் இருப்பதை எதுவும் உண்ணாமல் இருப்பது என்று நினைக்கிறார்கள். அது தவறு. எதுவும் சாப்பிடாமல் காலை முதல் மாலை வரை இருந்தால் கோபம் வரும்.
எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். மற்றவர்கள் மீது எரிச்சல் படுவார்கள். எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக ஏற்படும். உபவாசம் இருப்பதன் முக்கிய நோக்கமே தன்னைத்தானே அகத்தாய்வு (introspection) செய்து கொள்ளவும், நேர்மறை எண்ணங்களை (Positive thoughts) வளர்த்துக் கொள்ளவும், மனதை புதிப்பிக்கவுமே விரதம் மேற்கொள்ளப்படுகிறது. மாதத்தின் ஒருநாள் செய்தித்தாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, சினிமா பார்ப்பது, செல்போன் பேசுவது போன்ற அன்றாட நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு மனதுக்கும் உடலுக்கும் ஓய்வளிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் எதுவும் அந்த நாளில் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். முழுமையாக பட்டினி இருக்கக்கூடாது.
பழச்சாறு, மோர், பானகம், எலுமிச்சைச்சாறு, இளநீர் போன்ற நீர்ச்சத்துக்கள் உள்ள பானங்களை போதுமான இடைவேளைகளில் அருந்திக் கொள்ளலாம். வேக வைத்த காய்கறிகளை சாப்பிடலாம். முளை கட்டிய தானியங்களை சாப்பிடலாம். சோயா பீன்ஸ், சுண்டக்கடலை, நவதானியங்கள் போன்ற நல்ல கலோரி அளவுள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் கஞ்சி அல்லது ஓட்ஸ் கஞ்சி குடிக்கலாம். உடலுக்கு சக்தி இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உபவாசம் இருக்கும் நாளில் ஆன்மிகச் சிந்தனையுள்ள புத்தகங்களை படிப்பதும் நல்ல மனநிலையைக் கொடுக்கும். உணவு, பசி, மனம் மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எந்த வகையான உணவுகள் உண்ணுகிறோமோ அதற்கேற்ற எண்ணங்களே வரும்.
வயிறு காலியாக இருக்கும் போதுதான் பொறாமை, கோபம், அகத்தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். உங்கள் முகபொலிவையும் பாதிக்கும். தேவையான இயற்கை உணவுகள் எடுத்துக்கொண்டு உபவாச பயிற்சியை மேற்கொண்டால் வயதான தோற்றம் மாறும். முகம் புத்துணர்வுடன் இருக்கும். போதுமான நீர்ச்சத்துக்கள் உடலில் தங்கும். உங்கள் ஜீரண உறுப்பு மண்டலம் நலமுடன் இருக்கும். போதுமான அளவு நீர்ச்சத்து உள்ள பானங்களை எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். வாயுத்தொல்லை, குடல் சம்பந்தமான பிரச்னைகள் இதனால் ஏற்படாது. தோல் மெருகேறும். பலவிதமான நோய்களை வராமல் தடுக்க முறையான உபவாசம் வழிவகுக்கும். மாதம் ஒருநாள் உபவாசம் இருந்தாலே போதும். போதுமான பயிற்சி இருப்பவர்கள் வாரம் ஒருமுறை கூட உபவாசம் இருக்கலாம்.

சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும். சனி மகாபிரதோஷ நாளில் நாம் இருக்கும் விரதம், ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும்.
வரும் சனிக்கிழமை சனிப்பிரதோஷம் வருகிறது. சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகும். ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். கிரக தோசத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவங்களும் நீங்கி சிவன் அருள் கிடைக்கும். சனி மகாபிரதோஷ நாளில் நாம் இருக்கும் விரதம், ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும்.
பிரதோஷ காலம்
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது. பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும்.
பிரதட்சணம்
பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம். பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமாக இடவலமாக மேற்கொள்ளப்படும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.
ஐதீகம்
சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும், அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.
தரிசன முறை
நந்தியெம் பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக் கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது. மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெப, தவங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.
முன்னேற்றம்
பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன்பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜைதான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது. பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.