என் மலர்
முக்கிய விரதங்கள்
தன்னை வழிபடும் பக்தர்களின் நல்வாழ்வுக்காக, அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது.
தெய்வத்தின் பார்வை தன் மீது பட்டு, துன்பங்கள் நீங்க வேண்டும் என்பதற்காகவே பக்தர்கள் பலரும் விரதம் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் தன்னை வழிபடும் பக்தர்களின் நல்வாழ்வுக்காக, அம்மனே பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது.
அது என்ன பச்சைப்பட்டினி விரதம்? அதை அறிந்து கொள்வதற்கு முன்பாக, அம்மனின் ஆலய வரலாற்றை பார்ப்போம்.
எத்தனை முறை படித்தாலும், கேட்டாலும் திகட்டாதது, நம் தெய்வங்களின் அவதார வரலாறுகள். புராண காலத்தில் கம்சனின் அழிவுக்காக நிகழ்ந்த கிருஷ்ண அவதாரத்தின்போது, தோன்றிய சக்தியின் அம்சமான மாயாதேவிக்கு முக்கிய பங்குண்டு.
தேவகியின் குழந்தையாக கண்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்தனர். பின் இவ்விரு குழந்தைகளும் பெருமாளின் திருவிளையாடலால் இடம் மாறின. தேவகியின் குழந்தையே தன் உயிரைக் குடிக்கும் சத்ரு என்பதை அறிந்த கம்சன், குழந்தைகள் இடம் மாறியதை அறியாமல் தேவகியிடம் இருந்த பெண் குழந்தையான மாயாதேவியைக் கொல்வதற்காக, அவளின் இரு பாதங் களைப் பிடித்து சுவற்றில் அறைந்தான்.
அப்போது அந்தக் குழந்தை அவன் கைகளில் இருந்து மேலெழும்பி ஆதிபராசக்தியாக இரு கைகளிலும் வில், அம்பு, சங்கு, சக்கரம், சூலம், பாசம், வாள் முதலிய ஆயுதங்களை தாங்கி தன் சுயரூபத்தைக் காட்டி அருளினாள். அந்த தேவியே மக்களின் தீமைகளைக் களைந்து நல்வாழ்வு அருளும் விதமாக ஆங்காங்கே அம்மனாக வணங்கப் படுகிறாள் என்பது நம்பிக்கை. அந்த வகையில், தமிழகத்தில் அமைந்துள்ள அம்மன் ஆலயங்களில் தலைமை பீடமாக விளங்கும் பெருமை கொண்டது சமயபுரம் மாரியம்மன் கோவில்.
சுமார் 700 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் நாயகியான, சமயபுரம் மாரியம்மனின் சிறப்புகள் ஏராளம். சுதையாலான சுயம்பு வடிவாக தன்னுள் 27 நட்சத்திரங்களை கொண்டு, 27 இயந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மாரியம்மன் அருள்பாலிப்பது இத்தலத்தில்தான். மேலும் நன்மை - தீமைகளை வரையறுத்து உலகையே ஆட்சி செய்யும் நவக்கிரகங்களை, நவ சர்ப்பங்களாக தன் திருமேனியில் அமர்த்தி அருள்புரிவது தனிசிறப்பு. இங்கு வருவோரின் ராகு-கேது தோஷங்களைப் போக்கும் வலிமை கொண்டவள் இத்தலத்து அன்னை.
சரி.. இனி அன்னையின் பச்சைப்பட்டினி விரதம் பற்றிப் பார்ப்போம்.
‘ஆயிரம் கண்ணுடையாள்’ என்று போற்றப்படும் இத்தல அம்மன், இங்கு ஆதிசக்தியாய் வீற்றிருக்கிறாள். அவள் தன்னை நாடி வரும் பக்தர்கள் மட்டுமின்றி, இவ்வுலகையே காக்கும் நோக்கில் மும்மூர்த்திகளை நோக்கித் தவம் புரிகிறாள். நாடு தழைக்கவும், உயிர்களைக் காக்கவும் மஞ்சள் பிரியையான பராசக்தி, தன் மாதுளம் மேனியில் மஞ்சள் நிற ஆடை உடுத்தி, பக்தர்கள் சகலசவுபாக்கியங்களும் பெற வேண்டி 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதத்தை மேற்கொள்கிறாள்.
வருடந்தோறும் மாசி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமை அன்று பூச்சொரிதல் மற்றும் காப்புக்கட்டுதலுடன் இந்த விழா தொடங்கும். அன்றைய தினம் முதல் பங்குனி மாதத்தின் கடைசி ஞாயிறு வரை இவ்விரதத்தை அனுஷ்டித்து, கடும் தவத்தில் இருப்பார், சமயபுரம் மாரியம்மன்.
அன்னை விரதமிருக்கும் இந்த 28 நாட்களும், அன்னைக்கு வழக்கமாக படைக்கப்படும் நைவேத்தியங்கள் செய்யப்படுவதில்லை. பட்டினி இருக்கும் அம்மனுக்கு, உப்பில்லா நீர் மோரும், இனிக்கும் கரும்பு பானகமும், குளிர்ச்சி தரும் இளநீர் மற்றும் கனி வகைகள் மட்டுமே படைக்கப்படுகின்றன. படைத்த அன்னையே விரதம் இருக்கும்போது, மக்கள் சும்மா இருப்பார்களா? அன்னையை மனதில் இருத்தி அந்த ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் அம்மன் படத்தை வைத்து வழிபட்டு விரதம் கடைப்பிடிக்கிறார்கள். அடுப்புத் தீயில் தாளிக்காமல், காலில் செருப்பணியாமல், இளநீரும் நீர்மோரும் அருந்தி மஞ்சள் ஆடை உடுத்தி, மகமாயியின் அருளை வேண்டி இருக்கும் விரதம் இது. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், அவர்கள் கேட்ட வரங்களை எல்லாம் தந்து நல் வாழ்க்கையை அமைத்துத் தருகிறாள், அன்னை.
அம்பாள் பட்டினி இருந்தாலும், இவ்வேளையில் சோர்வைக் காட்டாமல் சாந்த சொரூபிணியாக விளங்குவாள். முகமெங்கும் மலர்ந்து, தன்னை நாடி வருபவர்களின் துன்பங்களை காது கொடுத்துக் கேட்டு, அவர்களின் மனப் பிணி, உடற்பிணிகளை போக்குகிறாள். 12 ராசிகளின் அதிபதியாகவும் அம்மன் இருப்பதால், இத்தருணத்தில் இங்கு வந்து அவளை வழிபடுவோரின் அனைத்து கிரக தோஷங்களும் விலகுவதாக ஐதீகம்.
மேலும் நவக்கிரகங்களின் ஆதிக்கத்தை உள்ளடக்கி அவற்றை நவ சர்ப்பங் களாக கொண்டு அருள்பாலிப்பதால், இந்த காலகட்டத்தில் வந்து வணங்குவோரின் நவக்கிரக தோஷங்கள் நீங்கும். இங்கு வரும் பக்தர்கள் தங்கள் உடற்பிணி நீங்கும் பொருட்டு மாவிளக்கு போடுதல், துள்ளு மாவு தானம் செய்தல், தீச்சட்டி ஏந்துதல், நீர்மோர் பானகம் தானம் செய்தல், எலுமிச்சை மாலை போடுதல், கரும்புத்தூளி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற பல நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.
இத்திருத்தலத்தில் மட்டும்தான் பக்தர்கள் தெய்வத்தை நோக்கி விரதம் இருக்கும் மரபு மாறி, மாரியம்மன் தன்னை நாடி வரும் மக்களின் நலன் வேண்டியும், அவர்களுக்கு எந்த தீயசக்தியாலும் பாதிப்பு வராமல் காக்கவும் முப்பெரும் தெய்வங்களான மும்மூர்த்திகளை நோக்கி பச்சைப்பட்டினி விரதம் இருக்கிறாள். மேலும் கடுமையான தவம் செய்து இச்சா, கிரியா, ஞான சக்திகளைப் பெற்று அருள் புரிகிறாள். விரதத்துடன் மஞ்சள் உடை அணிந்து அருள் பொங்கும் முகத்துடன் வேண்டும் வரங்களை வாரி வழங்கி மகிழும் அம்மனைக் காண தினமும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு வருகை புரிகின்றனர்.
இந்தப் பூவுலக வாழ்வில் முன்வினைகளால் நமக்கு ஏற்படும் துன்பங்களையும், கிரகங்களின் பாதிப்பினால் உண்டாகும் வேதனைகளையும், அறியாமையினால் நமக்குள் இருந்து முன்னேற்றத்திற்கு தடையாகும் நம் ஆணவத்தையும் அடியோடு அகற்றி நிம்மதி அருளும் அம்மனின் விரதம் காண நீங்களும் சென்று பேரின்பம் அடையலாமே.
சேலம் சுபா

சிவபெருமானை அடைவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும். அவரை சரண் அடைபவர்கள் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் வெற்றி இன்புற்றிருப்பர்.
சிவபெருமானை அடைவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும். அவரை சரண் அடைபவர்கள் வாழ்வில் எல்லா நலன்களும், வளங்களும் வெற்றி இன்புற்றிருப்பர். சிவபெருமானை வழிபடுவதற்கு நிறைய சாஸ்திரங்கள் இருக்கின்றன. சிவாலயங்களில் வழிபடுவதற்கான முறைகளும் ஏராளமாக இருக்கின்றன. சிவன் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். ஒருவரை ஒன்றும் இல்லாதவராக ஆக்கவும் முடியும். செல்வந்தராக மாற்றவும் முடியும். ஈசனை எப்படி விரதம் இருந்து வழிபடுவது என்பதைப் பற்றிய பதிவு தான் இது.
சிவாலயங்களில் வணங்கும் பொழுது பலிபீடத்திற்கு அருகில் தான் வணங்க வேண்டும். நீங்கள் உங்களது வாழ்க்கையில் வெற்றி அடைய விரும்பினால், செல்வந்தராக நினைத்தால் நிச்சயம் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் அவசியம் செய்ய வேண்டும். சிவாலயத்தில் கால் நீட்டி உட்காரக்கூடாது. அதிலும் வடக்கு மற்றும் கிழக்கு திசைகளில் இவற்றை செய்யக்கூடாது. மேலும் இருகரம் குவித்து தலைமேல் வைத்து வணங்குவது நல்லது.
சன்னிதி கிழக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு தென்கிழக்கு மூலையில் நமஸ்கரித்து கொள்ள வேண்டும். தெற்கு மற்றும் மேற்கு நோக்கிய சந்நிதி இருந்தால் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் நமஸ்கரித்து கொள்ள வேண்டும். சன்னிதி வடக்கு நோக்கி இருந்தால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் நமஸ்கரித்து கொள்ள வேண்டும். கிரகணத்தின் போதும், பிரதோஷ தினங்களிலும் சிவாலய வழிபாடு நல்ல பலன்களை தரும்.
சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகில் நின்று மூன்று முறை வணங்க வேண்டும். அதுபோல் மூன்று முறை வலம் வர வேண்டும். வலம் வரும்பொழுது கொடி மரத்தையும் சேர்த்து வலம் வர வேண்டும். ஆலயத்திற்குள் இருக்கும் மற்ற சன்னதிகளில் விழுந்து வணங்க கூடாது. அடி பிரதட்சணம் செய்யும் பொழுது பொறுமையுடன் செய்ய வேண்டும். எவரிடமும் பேசிக்கொண்டே செய்யக்கூடாது. அடி பிரதட்சணம் செய்யும் பொழுது நிலம் பார்க்க பொறுமையுடன் செய்ய வேண்டும்.
பூமி அதிர நடக்கக் கூடாது. உட்பிரகாரத்தில் பிரதட்சணம் செய்வதைவிட வெளிப்பிரகாரத்தில் செய்யும் பிரதட்சணம் அதிக பலன் தரும். வெளிப்புறப் பிரகாரத்தில் கொடி மரத்தையும் சேர்த்து பிரதட்சணம் செய்ய வேண்டும். ஆலயத்தில் அபிஷேகம் நடைபெறும் சமயத்தில் எந்த பிரதட்சணமும் செய்யக்கூடாது. ஆலயத்திற்குள் இறைவனை அன்றி பிறரை வணங்கக்கூடாது. அபிஷேகம் நடைபெறும் சமயத்தில் அபிஷேகத்தை தவிர வேறு எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. வெளியேறும் பொழுது கொடிமரம் அருகில் ஒருமுறை நமஸ்கரித்து விட வேண்டும். சிவானந்தலஹரி என்னும் நூல் பார்வதி தேவியுடன் இருக்கும் சிவபெருமானை வழிபடுகிறவர்கள் பிறவிப்பயன் அடைவார்கள் என்கிறது. நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் நினைத்ததெல்லாம் நடக்கும். ஆரோக்கியத்தில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். இலுப்பை எண்ணெய் காரிய சித்தி ஆகும்.
செல்வம் பெருகும். தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் வாழ்வில் சங்கடங்கள் தீரும். உட்பிரகாரத்தில் வழிபடும் பொழுது வலது பக்கம் நின்று வழிபட வேண்டும். பங்குனி உத்திரம் தினத்தன்று சிவனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும். சிவனுக்கு உரிய மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்தால் செல்வவளம் மிகுதியாகும்.
ஈசன் விரும்பும் எருக்கம் பூ, அருகம்புல், திருநீரு, ஊமத்தை போன்றவற்றை அளிப்பதால் குபேர யோகம் கிடைக்கப்பெறும். திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதியர்கள் வியாழக்கிழமை அன்று மாலை ஐந்து முதல் ஏலு மணிக்குள்ளாக சிவாலயம் சென்று தட்சிணாமூர்த்தி அஷ்டகம் ஒன்பது முறை வாசிப்பதால் நல்லது நடக்கும். உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் காக்கும் பொருட்டு சிவ மேனியில் சந்தனத்துடன் கஸ்தூரி மஞ்சள், கோரோசனை, குங்குமப்பூ மற்றும் பச்சை கற்பூரம் ஆகியவற்றை கலந்து காப்பு அணிவிக்கிறார்கள்.
இக்கோலத்தை தரிசிப்பவர்களுக்கு கோடி வருடம் சிவலோக பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பல்வேறு புஷ்பங்கள் மற்றும் நீர்கொண்டு ஈசனை வழிபடுவதால் மன அமைதி கிடைக்கும். மன இறுக்கம் தளர்ந்து விடும். சிவாலய திருப்பணிகளில் உங்களால் முடிந்த உதவிகளை செய்வதன் மூலம் உங்கள் சந்ததியினரே வளமாக வாழ்வார்கள். சிவன் சொத்திற்கு ஆசைப்படுபவர்களின் குலம் மொத்தமாக நாசம் அடைவது போல் நீங்கள் செய்யும் சிறு உதவியும் குலம் தழைக்க உதவும். சிவனுக்கு சாற்றிய வில்வத்தை ஒரு மாத காலத்திற்கு நீரில் கழுவிவிட்டு மீண்டும் உபயோகம் செய்யலாம்.
சதபத்ரம், தாமரை, வில்வம் இவற்றால் அர்ச்சனை செய்பவர்களுக்கு பெரும் செல்வம் கிட்டும். ஜாதி மலர், அரளி, அத்தி, முல்லை, நீலோத்பவம் இவைகளால் அர்ச்சனை செய்பவர்களுக்கு சகல வளங்களும் நிறைந்து காணப்படும். ஒரே ஒரு கொன்றை மலரை ஈசனுக்கு சாத்துபவர்களுக்கு பெறற்க்கரிய பாக்கியங்கள் கிட்டும். சகல தோஷங்களும் நீங்க வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். வில்வ அர்ச்சனை செய்யும் பொழுது அந்த இலையின் பின்பக்க நரம்பு இறைவனின் திருமேனி மீது படும்படி செய்ய வேண்டும்.

அம்மையப்பனின் இணைவாக பங்குனி மாதம் சிறப்புப் பெறுவதால் சைவ, வைணவ பேதமின்றி அனைத்து ஆலயங்களிலும் தெய்வத் திருமணங்கள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன.
தெய்வ திருமணங்கள் பலவும் நடந்தேறிய மாதம் பங்குனி மாதம். பார்வதி - பரமேஸ்வரன், ஆண்டாள் - ஸ்ரீரங்கநாதர், தெய்வானை - முருகன் என தெய்வத் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. காமாட்சி அன்னை ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானதும் இந்த பங்குனி மாதத்தில்தான்.
ஜோதிடத்தில் சந்திரனை தாயாகவும், சூரியனைத் தந்தை என்றும் உருவகப்படுத்துவார்கள். சந்திரனாகிய தாய், தந்தையாகிய சூரியனுக்கு உரிய நட்சத்திரமான உத்திரத்தில் சஞ்சரித்து பவுர்ணமியைத் தோற்றுவிப்பது பங்குனி மாதத்தில். கார்த்திகை மாதத்தைப் போலவே, அம்மையப்பனின் இணைவாக இந்த மாதமும் சிறப்புப் பெறுவதால் சைவ, வைணவ பேதமின்றி அனைத்து ஆலயங்களிலும் தெய்வத் திருமணங்கள் இந்த மாதத்தில் நடைபெறுகின்றன.
குரு அருள்
நவகிரகங்களின் தலைவனான சூரியன் தனது ஆசிரியரான குருவின் வீட்டில் அதாவது மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் இது. ஆண்டு முழுவதும் தான் பெற்ற பயிற்சியை தனது ஆசிரியரிடம் செய்து காட்டி தெளிவு பெறுவதாகக் கொள்ளலாம். பங்குனியில் குருவின் வீட்டில் சஞ்சரித்து முழுமையாக பக்குவம் அடைந்து அடுத்துவரும் சித்திரை மாதத்தில், அதாவது மேஷ ராசியில் சூரியன் முழுமையான உச்ச பலத்தோடு ஒளி வீசுவார். உச்ச வலிமை பெறுவதற்கு முன்னதாக ஆசிரியரிடம் பயிற்சி பெற்று பக்குவப்பட வேண்டும் என்பதை இந்தப் பங்குனி மாதம் நமக்கு நன்றாக உணர்த்துகிறது.
அதே போன்று கணக்குத் தணிக்கையாளர் என்று நவகிரகங்களில் குரு பகவானைக் குறிப்பிடுவார்கள். அரசு அலுவலகங்கள், கருவூலங்கள், வங்கிகள் என சூரியன் சார்ந்த அனைத்துத் துறைகளும் கணக்குத் தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதும் இந்த மாதத்தில்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் அரசன் முதல் ஆண்டி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மாதமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குகிறது.

கொரோனா வைரஸ் எதிரொலியால் சபரிமலைக்கு செல்வதை தவிர்த்து, சென்னையில் உள்ள ஐயப்பன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து பக்தர்கள் விரதத்தை முடித்துக்கொள்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டு தோறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை மட்டுமின்றி, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்படுகிறது.
இந்த நாட்களிலும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தற்போது பக்தர்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்குமாறு கேரள மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதையே சபரிமலை தேவசம் போர்டும் வலியுறுத்தியது.
சபரிமலை வருவதற்காக மாலை அணிந்து, விரதம் இருப்பவர்கள், உள்ளூர் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மாலையை கழற்றி, விரதத்தை முடித்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடன் சபரிமலைக்கு பக்தர்கள் வரலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதனை ஏற்று ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதை தவிர்த்து, உள்ளூரில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து மாலைகளை கழற்றி விரதத்தை முடித்து கொள்கின்றனர். குறிப்பாக நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மீனம் மாத பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள பக்தர்கள் செல்வதை தற்போது தவிர்த்து உள்ளனர்.
அந்தவகையில் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள மகாலிங்கபுரம் ஐயப்பன்- குருவாயூரப்பன் கோவில், அண்ணாநகர், கே.கே.நகர், ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகழ்மிக்க ஐயப்பன் கோவில்கள் உள்ளன. சபரி மலைக்கு செல்ல மாலை போட்டு விரதம் இருந்த பக்தர்கள் இருமுடி கட்டிக் கொண்டு சென்னையில் உள்ள புகழ்மிக்க ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து குருசாமி மூலம் மாலையை கழற்றி விரதத்தை முடித்துக்கொள்கின்றனர்.
இதுகுறித்து ஐயப்ப பக்தர்கள் கூறும்போது, “கொரோனா வைரஸ் எதிரொலியாக சபரிமலைக்கு பக்தர்கள் வருவதை தற்போது தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகமும், கேரள மாநில அரசும் கேட்டுக்கொண்டது. அதன்படி நாங்கள் சபரிமலைக்கு செல்வதை தவிர்த்து உள்ளோம். கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட உடன் மீண்டும் விரதம் இருந்து மாலை அணிந்து சபரிமலைக்கு கண்டிப்பாக செல்வோம். தற்போது சென்னையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டிக்கொண்டு வந்து நெய் அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்து மாலையை கழற்றி உள்ளோம். சபரி மலைக்கு ஒரு சிலர் மட்டும் சென்று உள்ளனர்” என்றனர்.

சாவித்திரி அனுஷ்டித்து வந்த நோன்பு, அவளது காலம் வரை ‘கவுரி நோன்பு’ எனக் கூறப்பட்டது. அதன் பின்னர் ‘சாவித்திரி நோன்பு’ என்ற பெயர் பெற்றது.
விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சொம்பில் மாவிலை, தேங்காய் வைத்து, அதற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்டி, அருகில் இஷ்டமான அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாக ஆவாஹாகனம் செய்துகொள்ள வேண்டும். கார் அரிசியும், காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனமாக வைத்து வழிபடவேண்டும். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து, கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்த பிறகு, எருமை மாட்டிற்கு தீவனம் அளிக்க வேண்டும்.
சாவித்திரி அனுஷ்டித்து வந்த நோன்பு, அவளது காலம் வரை ‘கவுரி நோன்பு’ எனக் கூறப்பட்டது. அதன் பின்னர் ‘சாவித்திரி நோன்பு’ என்ற பெயர் பெற்றது. ‘மாசிக்கயிறு பாசி படியும்’ என்பது சொல் வழக்கு. எனவே பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, கணவரை நோய் நொடியின்றி காக்க, இந்த நோன்பு கவசமாக இருக்கிறது. இந்த நோன்பை நோற்பதன் பலனாக சாவித்திரி நூறு பிள்ளைகளுடன் சவுபாக்கிய வசதியாக பல்லாண்டு காலம் வாழ்ந்தாள் என்கிறது புராணம். நாமும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து சகல சவுபாக்கியங்களும் பெறலாம்.

அறுபடை வீடு முருகனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகளும், கிடைக்கும் பலன்களை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
* திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் நடைபெறும்.
* திருச்சரலைவாய் (திருச்செந்தூர்): விரதம் இருந்து இங்கு முருகப்பெருமானை, கடலில் நீராடி, பின் வழிபடுதல் நல்லது. வியாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.
* திரு ஆவினன்குடி (பழனி): விரதம் இருந்து ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை வழிபட்டால், தெளிந்த ஞானம் கிடைக்கும்.
* சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால். ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.
* திருத்தணிகை (குன்று தோராடல்): குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை முருகனை விரதம் இருந்து வழிபட்டால், மனதிலிருக்கும் கோபம் முழுமையாக நீங்கும்.
* பழமுதிர்ச்சோலை : விரதம் இருந்து இங்குள்ள முருகனை வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனையில் நீராடுதல் மிகவும் சிறப்பு.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து தேய்பிறையில் வரும் 4-ம் நாள் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.
விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் விரதமாகவும், சங்கடங்கள் அனைத்தையும் (ஹர – அழித்தல்) தீர்க்கக்கூடிய விரதமாகவும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கருதப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து தேய்பிறையில் வரும் 4-ம் நாள் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை தொடங்கி ஓராண்டு அல்லது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு அனுஷ்டிப்பார்கள். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.
பகல்பொழுது விரதமிருந்து மாலை ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானை வழிபட்டு வீட்டுக்கு வந்து விரதத்தைப் பூர்த்திசெய்வார்கள். இவ்விரதத்தை அனுஷ்டிப்போர்க்கு அனைத்துப் பாவங்களும் அகலும். குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். சனி தோஷம் உள்ளவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கத்தில் பெரும்பகுதி குறையும்.

ராகு தோஷம் உள்ளவர்களுக்கு திருமண தடை, வாழ்க்கையில் பிரச்சனை, பணக்கஷ்டம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் தீர இந்த விரதத்தை கடைப்பிடித்தால் படிப்படியாக நிவாரணம் கிடைப்பதை காணலாம்.

தினசரி விரதம் இருந்து துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். அதுவும் ராகு காலத்தில் படிப்பது மிகவும் சிறந்தது.
தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.
துர்க்கைக்கு ஜாதகத்தில் அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு விரதம் இருந்து 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.
ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.

தங்களது கணவருக்கு இடையூறுகள் வராமல் இருக்க ஒவ்வொரு பெண்களும் அனுஷ்டிக்கும் விரதமே ‘காரடையான் நோன்பு’ ஆகும். இந்த நோன்பு 14-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
பூஜை நேரம்: அதிகாலை 4-5.30
திருமணமான பெண்கள் கடைசிவரை கற்புநெறி தவறாது வாழ்ந்து, கணவனுக்கு பணிவிடை செய்து அவனுக்கு முன்பாக இறைவனை அடையவேண்டும் என வேதம் உரைக்கின்றது. அதன்படி வாழ விரும்பிய ஒரு பெண், அற்ப ஆயுள் கொண்ட தன் கணவனின் உயிரை பறித்துச் சென்ற எமனிடம் வாதாடி, கணவனை உயிர்பிழைக்க வைத்து, தன் மாங்கல்ய பாக்கியத்தை நிலைநிறுத்திக் கொண்டாள்.
அவளைப் போற்றும் விதமாகவும், தங்களது கணவர்களுக்கு அதுபோன்ற இடையூறுகள் வராமல் இருக்கவும் ஒவ்வொரு பெண்களும் அனுஷ்டிக்கும் விரதமே ‘காரடையான் நோன்பு’ ஆகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் தொடங்கும் வேளையில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து, பங்குனி முதல் நாள் காலையில் இந்த விரதத்தை முடிப்பார்கள். இந்த நோன்பை ‘காமாட்சி நோன்பு’, ‘கேதார கவுரி விரதம்’, ‘சாவித்திரி விரதம்’ என்றும் சொல்வார்கள்.
சத்தியவான் சாவித்திரி ஆகிய இருவரும்தான், இந்த விரதத்தின் நாயகன், நாயகியர். நெடுநாட்கள் பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்த மந்திரதேசத்து மன்னன் அசுவபதி, மகப்பேறு கிடைப்பதற்காக தான தர்மங்கள் செய்து வந்தான். அதன் பயனாக அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சகல சாமுத்திரிகா லட்சணங்களையும் கொண்டிருந்த அந்தக் குழந்தைக்கு ‘சாவித்திரி’ என்று பெயரிட்டு வளர்த்தான்.
அவளுக்கு எட்டு வயதானபோது அசுவபதியின் அரண்மனைக்கு வந்த நாரதர், தாய் - தந்தையரை தெய்வமாக மதிக்கும் ஒருவனை அவள் மணந்து கொள்வாள் என்றும்; அவளது கணவனாக வருபவன் 21 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வான் என்றும் கூறிச் சென்றார். ‘அழகிலும் வீரத்திலும் சிறந்த தன் மகளுக்கு இப்படியொரு நிலையா?’ என கவலைப்பட்ட மன்னன், இறைவனை சரணடைந்தான். பின்னர் எது நடந்தாலும் நடக்கட்டும் என உரிய பருவம் வந்ததும் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்தான். அவள் விருப்பத்திற்கு மணமகனை தேர்வு செய்ய அனுமதித்தான்.
சாவித்திரி தேரில் அமர்ந்து தன் தந்தை நியமித்திருந்த மெய்க்காப்பாளர், அரசவை பரிவாரம், முதியோர் ஆகியோர் புடைசூழ, பல இடங் களுக்குப் பயணம் செய்தாள். இடையிடையே பல அரசவைகளிலும் இறங்கி பல இளவரசர்களையும் கண்டாள். ஆனால் அவள் உள்ளம் கவரும் மணவாளனாக யாரும் இருக்கவில்லை. இறுதியாக கொடிய விலங்குகள் வசிக்கும் கானகத்தில் ஒரு ஆசிரமம் தென்பட அங்கு சென்றாள். மனிதர்களைக் கண்டு பயப்படாத விலங்குகள், மனிதன் தரும் இரையை நேரடியாக வந்து வாங்கித்தின்ற ஏரி மீன்கள், மனிதர்களின் தோளில் அமர்ந்த பறவைகள் என வித்தியாசமான காட்சியைக் கண்டாள். அந்த இடம் அவளுக்குப் பிடித்துப் போய்விட அங்கேயே சில நாட்களுக்கு முகாமிட எண்ணினாள்.
அப்போதுதான் சாளுவதேசத்து மன்னன் துயமத்சேனன் என்பவனின் மகனும், இளவரசனுமான சத்தியவானைப் பார்த்தாள். துயமத்சேனன் சாளுவதேசத்தில் சிறந்த ஆட்சியைத் தந்தார். ஆனால் வயதானவுடன் கண்பார்வை குறைய, எதிரிகள் அவரைத் தோற்கடித்து நாட்டை கைப்பற்றிக் கொண்டனர். துயமத்சேனன் தன் மனைவி, இளவயது மகன் ஆகியோருடன் காட்டில் வாழத் தொடங்கினார்.
சத்தியவானுக்கு தந்தை இழந்த நாட்டைத் திரும்பப் பெற்று அரசாளவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வயதான பெற்றோர்களை தனித்து விட்டு செல்ல முடியாமல, அவர்களுக்கு பணிவிடை செய்தவாறு காட்டி லேயே காலத்தைக் கழித்தான். சத்தியவானின் செயல் சாவித்திரியைக் கவர, அவன்மீது காதல் கொள்கிறாள். அவனையே திருமணம் செய்வதென்று முடிவும் செய்கிறாள்.
இதை அறிந்ததும் தன் மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார், அசுவபதி. அதற்கு முன்னதாக நாரதர் மூலமாக உண்மையை சாவித்திரியிடம் கூறச் செய்கிறார். சாவித்திரியோ, சத்தியவானை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தாள். வேறுவழியின்றி திருமணம் நடைபெறுகிறது. அரண்மனைவாசியான அவள், காட்டிற்குச் சென்று பல சிரமங்களை அனுபவித்தாலும் அதை ஏற்றுக் கொண்டாள். தன் கணவனின் வாழ்நாள் அதிகரிக்க பல விரதங்களையும், நோன்பு களையும் அனுஷ்டித்தாள்.
இருப்பினும் நாரதர் கூறியிருந்தபடி சத்தியவானின் இறுதிநாள் வந்தது. அன்று சாவித்திரி தடுத்தும் கேளாமல் அவன் விறகு சேகரிக்க காட்டுக்குப் புறப்பட்டான். சாவித்திரியும் உடன் சென்றாள். நண்பகல் வேளையில் சாவித்திரியின் மடியில் தலைவைத்து படுத்திருந்த சத்தியவானின் உயிரை, எமதர்மன் பறித்துச் சென்றார்.
சாவித்திரியின் கற்புத் திறத்தால், எமதர்மரின் உருவம் அவள் கண் களுக்குத் தெரிந்தது. அவள் தன் கணவனின் உடலைக் கீழே கிடத்தி விட்டு, எமனைப் பின்தொடர்ந்தாள். அவளது காலடி ஓசை கேட்டுத் திரும்பிய எமன், அவள் தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்து, அவளை திரும்பிப் போகச் சொன்னார்.
எமதர்மரின் பாதங்களில் விழுந்து சாவித்திரி வணங்கினாள். அவளை “தீர்க்க சுமங்கலி பவ” என்று எமன் வாழ்த்தினார்.
அதற்கு சாவித்திரி “நீங்கள் வாழ்த்தியது உண்மையானால் அதன்படி நான் வாழ அருள்புரியுங்கள். நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும்” என்று கேட்டாள்.
சாவித்திரியின் புத்திசாலித்தனத்தை ரசித்த எமதர்மர், “இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது. எனவே நீ கேட்பதை என்னால் செய்ய இயலாது. அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருகிறேன்” என்றார்.
சாவித்திரி சமயோசிதமாக, “என் மாமனார், மாமியார் மீண்டும் கண் பார்வை பெறவேண்டும். இழந்த நாட்டை திரும்பப் பெற்று ஆட்சிபுரிய வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும்” என்றாள்.
சற்றும் யோசிக்காத எமதர்மன் அவள்கேட்ட அனைத்து வரங்களையும் தருவதாக வாக்களித்தார். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாவித்திரி, “எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே. ஆகவே அவரது உயிரை திரும்பக் கொடுங்கள்” என்று யாசித்தாள்.
சாவித்திரியின் பதிபக்தியை மெச்சிய எமன், “இதுவரை என்னை யாரும் பார்த்ததும் இல்லை. உன் கற்பின் மகிமையால் நீ, என்னைப் பார்த்தது மட்டுமின்றி, என்னிடமே வாதம் செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டாய். நீ என்னிடம் கேட்டுப் பெற்ற வரங்கள் அனைத்தும் கிடைக்கும். மாசியும் பங்குனியும் சேரும் சமயத்தில், உன் கணவன் பிழைப்பான். உலகம் உள்ளளவும், உன்னை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு உன் ஆசி கிடைக்கட்டும். அந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், மனமொத்த தம்பதியராக வாழ்வார்கள்” என்று அருளாசி கூறி மறைந்தார்.
சாவித்திரி காட்டில் கணவனை விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பி வந்து, அவன் உடலைத் தன் மடியில் கிடத்தினாள். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழிப்பதுபோல் சத்தியவான் விழித் தெழுந்து, “உன்னைப் போன்ற பெண் ஒருத்தி, என்னை மீட்டு வந்ததாகக் கனவு கண்டேன்'' என்று கூறினான்.
அவன் உயிரை எமன் எடுத்துச் சென்றதையும்; எமனுடன் போராடி அவன் உயிரையும், மேலும் பல வரங்களையும் பெற்று வந்த விவரத்தையும் சாவித்திரி கூறினாள். சாவித்திரியும் சத்தியவானும் தங்கள் குடிலுக்குத் திரும்பி வந்தனர். சாவித்திரி எமனிடம் பெற்ற வரத்தின்படி சத்தியவானின் பெற்றோர் கண்பார்வை பெற்றதுடன் இழந்த நாட்டையும் திரும்பப் பெற்றனர்.
எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதிவிரதத்தைப் போற்றவும், உயிருடன் இருக்கும் தங்கள் கணவர்கள், சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பாகும்.
நெய்வாசல் நெடுஞ்செழியன்

அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரம் ஆகும்.
எனவே தான் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருவுருவமாக காட்சி அளிக்கிறார்.
மும்மூர்த்திகளை நோக்கி, அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இக்கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும்.
அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும். அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
மாசி 25-ந்தேதி, மார்ச் 8-ந்தேதி மாசி மகம் வருகிறது. அதற்கு அடுத்த நாளான 9-ந்தேதியே பவுர்ணமி வருகிறது.
சிறப்புகள்
மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார். மக நட்சத்திரத்தில் சிம்ம ராசிக்குரியது. அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிங்க ராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். இத்தினத்தில் தீர்தோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் கும்பகோணத்தில் மாசி மகம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இதே போல வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
வழிபாட்டுக்கு உகந்த மாசி மகம்
மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய 3 தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.
இந்நாள் முருகப் பெருமானுக்கும் உகந்த நாளாகும். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்கு காரணமான தந்தைக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாளும் மாசி மகம்தான். சிவன், விஷ்ணு,முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும். பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் சிறப்பு.
நீராடல்
தீர்த்த நீராடலுக்கு முக்கியத்துவம் தரும் விழா மாசி மகம் ஆகும்.மாசி மாதத்தில் பவுர்ணமியையட்டி வரும் மகம் நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கும். தீர்த்தங்களுடன் அமைந்த பெரும்பாலான கோயில்களில் இந்நாளில் தெப்பத்திருவிழா நடக்கும். ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபடுவர். மக நட்சத்திரத்தை “பித்ருதேவ நட்சத்திரம்“ என்று அழைப்பார்கள்.
உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன், பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியதையனது மக நட்சத்திரத்திற்கு உரிமை உடைய பித்ருதேவனுக்குதான்.
ஆண் குழந்தை பெற
எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும் பித்ருக்களை வணங்கினால் அந்த சுபநிகழ்ச்சி தடையில்லாமல் நடக்கும். பித்ருதேவனின் ஆசியும் கிடைக்கும். அதனால்தான் மாசிமகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய்ய வேண்டும். மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடுவதை “பிதுர் மகா ஸ்நானம் “ என்கிறது சாஸ்திரம். அன்றிரவு பவுர்ணமி வேளையில் விழித்திருந்து அம்மன் சன்னதிகளில் நடக்கும்,பூஜைகள் அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பது மிக்க நன்மை தரும். சதுரகிரி, திருவண்ணாமலை, திருநீர்மலை உள்ளிட்ட மலை சேத்திரங்களில் கிரிவலம் செய்வது சாலச் சிறந்தது. ஆண் குழந்தை வேண்டுபவர்கள், இந்நாளில் முருகனை வேண்டி விரதமிருந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும். மாசி மகத்தன்று முருகப்பெருமானை வழிபடுவதால் ஆண் குழந்தை பிறக்கும். அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
வளமான வாழ்க்கை
மகத்திற்கு அழிவே இல்லை. அதுவும் மாசிமகம் இன்னும் சக்தி படைத்தது. அதனால் தாட்சாயினியாக அம்மன் மக நட்சத்திரத்தில் தோன்றிய பிறகுதான் சக்தி பீடங்கள் உருவாகி உலகநாயகியாக போற்றப்படுகிறார் அன்னை சக்திதேவி. மாசிமகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணுபகவானையும் பித்ருக்களையும் வணங்கினால் சகலநலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும்
பொதுவாகவே பவுர்ணமி அன்று இருக்கும் விரதம் நமக்கு சிறப்பான பலன் தரும். மாசி மாத பவுர்ணமியன்று சத்யநாராயண பூஜை செய்வதும், மாலை நேரத்தில் சூர்ய அஸ்தமனத்திற்கு பின்னர் அம்மன் கோயில் களில் வழிபாடு செய்வதும் அதிக நன்மைகள் தரும். மாசி மாத பவுர்ணமி கிரிவலத்தின்போது வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்தால் உங்களின் பல மனிதப்பிறவிகளின் கர்மங்கள் உடனே தொலைந்ததாக அர்த்தம்.
பிறவா பேரருள் உங்களுக்கு வாய்க்கும். மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை திருத்தலத்தில் கிரிவலம் செல்லுவது அற்புத பலன்களை அள்ளித்தரும். கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிவோர்கள்,வழக்கறிஞர் ஆகியோர் அதிகப் பலன்களை அடைய முடியும். கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசிபவுர்ணமியன்று கிரிவலம் வருவதால்,கணவனின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.
கொடுத்த கடனை திருப்பிப் பெறமுடியாமல் நொடித்துபோனவர்கள் மாசிபவுர்ணமி கிரிவலத்தால், அதிலிருந்து மீளமுடியும். மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்லுவதால் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள்,மின் அணுத்துறையில் பணிபுரிவோர்கள்,நீதித் துறையில் இருப்பவர்கள் நியாயமான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

எட்டுவகை லட்சுமியின் அருளும் இருந்தால், நமக்கு ஏராளமான செல்வங்கள் வந்து சேரும். எட்டுவகை லட்சுமியின் அருள் கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.
சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உமாதேவியாரை வணங்கி மனம் உருகி இருக்கும் விரதம் வெள்ளிக்கிழமை விரதம் எனப்படும். அரக்கர்களால் அவதிப்பட்ட தேவர்கள் அம்பாளை நோக்கி தொழுது வேண்டினர். அப்போது அம்பாள் அவர்களுக்கு அபயம் அளித்து அரக்கர்களை வதம் செய்தாள். தேவர்களையும், முனிவர்களையும் காத்து ரட்சித்தாள். இதை முன்னிட்டே அம்பாளை தொழும் வெள்ளிக்கிழமை விரதம் இருக்கும் வழக்கம் ஏற்பட்டது.
எட்டுவகை லட்சுமியின் அருளும் இருந்தால், நமக்கு ஏராளமான செல்வங்கள் வந்து சேரும். சகல சித்தியும் தரும் ஆதிலட்சுமி, சிறப்புகள் வழங்கும் சந்தான லட்சுமி, அரச போகம் தரும் கஜ லட்சுமி, செல்வம் தரும் தன லட்சுமி, பசி தீர்க்க உணவளிக்கும் தான்ய லட்சுமி, கவலையைப் போக்கும் மகாலட்சுமி, வெற்றியைத் தரும் விஜய லட்சுமி, வீரம் கொடுக்கும் வீர லட்சுமி ஆகிய எட்டு வகை லட்சுமிகளையும் விரதமிருந்து வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வருகைப்பதிகம் பாடவேண்டும்.
தன லட்சுமியின் அருளைப் பெற வேண்டுமானால், வசதி இல்லாதவர்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டும். தான்ய லட்சுமியின் அருளைப் பெற, பசியோடு வருபவர்களுக்கு உணவளிக்க வேண்டும். வித்யா லட்சுமியின் அருள் கிடைக்க, படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு புத்தகம், பேனா வாங்கிக் கொடுக்க வேண்டும். இதுபோல அந்தந்த லட்சுமிக்கு விரத வழிபாடுகளையும், அவை மகிழ்ச்சியடையும் விதத்தில் செயல்பாடுகளையும் செய்தால் செல்வச் செழிப்புடன் வாழலாம்.