search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகர்
    X
    விநாயகர்

    மாசி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம்

    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து தேய்பிறையில் வரும் 4-ம் நாள் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.
    விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் விரதமாகவும், சங்கடங்கள் அனைத்தையும் (ஹர – அழித்தல்) தீர்க்கக்கூடிய விரதமாகவும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கருதப்படுகின்றது.

    ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து தேய்பிறையில் வரும் 4-ம் நாள் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

    சங்கடஹர சதுர்த்தி விரதத்தை ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை தொடங்கி ஓராண்டு அல்லது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு அனுஷ்டிப்பார்கள். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

    பகல்பொழுது விரதமிருந்து மாலை ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானை வழிபட்டு வீட்டுக்கு வந்து விரதத்தைப் பூர்த்திசெய்வார்கள். இவ்விரதத்தை அனுஷ்டிப்போர்க்கு அனைத்துப் பாவங்களும் அகலும். குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். சனி தோஷம் உள்ளவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கத்தில் பெரும்பகுதி குறையும்.
    Next Story
    ×