search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாரியம்மன்
    X
    மாரியம்மன்

    விரதம் இருந்து வழிபாடு செய்வதால் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் நத்தம் மாரியம்மன்

    பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மனாக நத்தம் மாரியம்மன் திகழ்வதால் ஆண்டுதோறும் விரதம் இருந்து நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    திருவிழா காலத்தில், பக்தர்கள் காப்பு கட்டுதல், 15 நாட்கள் விரதமிருத்தல், அக்னிசட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல் மற்றும் கழுமரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்தல் என்று பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

    பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மனாக மாரியம்மன் திகழ்வதால் ஆண்டுதோறும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    Next Story
    ×