search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகராஜா கோவில்
    X
    நாகராஜா கோவில்

    ஆயில்யம் நட்சத்திர நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய கோவில்

    ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விரதம் இருந்து நாகராஜா கோவிலுக்கு வந்து வழிபாடுகள் செய்தால் அதிக பலன்களை பெற முடியும். அதோடு குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அனைத்து பாக்கியங்களையும் பெற முடியும்.
    நாகராஜா கோவிலுக்கும் ஆயில்யம் நட்சத்திரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே ஆயில்யம் நட்சத்திர நாட்களில் விரதம் இருந்து இந்த ஆலயத்துக்கு வந்து வழிபாடுகள் செய்தால் அதிக பலன்களை பெற முடியும்.

    ராம அவதாரத்தில் லட்சுமணர் ஆயில்யம் நட்சத்திரத்தில் அவதரித்தார். கிருஷ்ண அவதாரத்தின் போது அனந்தன் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தார். தற்போதைய கலியுகத்தில் நாகராஜா ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்ததாக ஐதீகம். எனவே தான் நாகராஜா ஆலயத்தில் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    ஆயில்யம் நட்சத்திர நாளில் விரதம் இருந்து உரிய முறைப்படி வழிபாடு செய்தால் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் தீரும். அதோடு குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அனைத்து பாக்கியங்களையும் பெற முடியும்.

    2020-ம் ஆண்டு ஆயில்ய நாட்கள்

    ஏப்ரல்    04.04.2020    சனிக்கிழமை
    மே    01, 28.05.2020    வெள்ளி, வியாழன்
    ஜூன்    26.06.2020    வியாழக்கிழமை
    ஜூலை    22.07.2020    புதன்கிழமை
    ஆகஸ்டு    18.08.2020    செவ்வாய்க்கிழமை
    செப்டம்பர்    15.09.2020    செவ்வாய்க்கிழமை
    அக்டோபர்    12.10.2020    திங்கட்கிழமை
    நவம்பர்    09.11.2020    திங்கட்கிழமை
    டிசம்பர்    06.12.2020    ஞாயிற்றுக்கிழமை

    Next Story
    ×