என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நரசிம்மர்
    X
    நரசிம்மர்

    திருமண தடை நீங்க வேண்டுமா? நரசிம்மருக்கு 9 வாரம் விரதம் இருங்க

    திருமண வரம் வேண்டி தவிப்பவர்கள் விரதம் இருந்து 9 வாரம் நரசிம்மரை வேண்டிக் கொண்டு தீபம் ஏற்றி வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
    செவ்வாய் தோஷம்தான் இப்போது நிறைய பேரை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறது. திருமண தடைகளை செவ்வாய் தோஷம் ஏற்படுத்துவதாக நிறையப் பேர் கருதுகிறார்கள். அந்த தோஷத்தை விரட்டி அடிக்க எத்தனையோ விதமான விரத வழிபாடுகளை செய்து இருப்பார்கள்.

    செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி 9 வாரம் வழிபட்டால் தோஷத்தை எளிதாக கடக்கலாம். 9 வாரம் விரதம் இருந்து நரசிம்மருக்கு யார் ஒருவர் தீபம் ஏற்றி வழிபடுகிறாரோ நிச்சயமாக அவர்கள் குறை தீரும். குறிப்பாக திருமண வரம் வேண்டி தவிப்பவர்கள் விரதம் இருந்து 9 வாரம் நரசிம்மரை வேண்டிக் கொண்டு தீபம் ஏற்றி வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
    Next Story
    ×