என் மலர்
ஆன்மிகம்

நாகராஜா திருக்கோவில்
நாகராஜா கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விரத வழிபாடு புகழ் பெற்றது எப்படி?
தொழு நோயால் வருந்திய களக்காட்டு மன்னர் நாகராஜா கோவிலைப் பற்றிக் கேள்வியுற்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் விரதம் இருந்து இங்கு வந்து வழிபட, வியத்தகு முறையில் அவரது நோய் பூரணமாகக் குணம் அடைந்தது.
தொழு நோயால் வருந்திய களக்காட்டு மன்னர் நாகராஜா கோவிலைப் பற்றிக் கேள்வியுற்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் விரதம் இருந்து இங்கு வந்து வழிபட, வியத்தகு முறையில் அவரது நோய் பூரணமாகக் குணம் அடைந்தது. அதனால் இவ்வாலயத்தின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது.
மகிழ்ச்சியடைந்த மன்னர் இன்றிருக்கும் ஆலயத்தைக் கட்டினார் என்பர். அத்துடன் அம்மன்னர் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இவ்வாலயத்திற்கு வருகை தந்து தமது காணிக்கைகளைச் செலுத்திப் பூஜைகளும் நடத்திச் சென்றார் என்று இக்கோயில் கல்வெட்டு கூறுகின்றது. அதன் பின்னர் இன்று வரை எல்லா ஞாயிற்றுக்கிழமைகளையும் புனித நாட்களாகக் கருதிப் பல்லாயிரக்கணக்கான மக்கள் விரதம் இருந்து வந்து நாகராஜாவைத் தொழுது செல்கின்றனர்.
களக்காடு மன்னர் கி.பி. 1516 முதல் 1535 வரையிலும் களக்காட்டைத் தலைநகராகக் கொண்டு அன்றைய வேணாட்டை ஆண்ட பூதள வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா மாமன்னராகும். இவர் சோழர் குலத்து இளவரசியை மணமுடித்ததால் புலிமார்த்தாண்டவர்மா என்று அழைக்கப்பட்டார் என்று அறியலாம்.
இவர் பாண்டிய மன்னருடன் போராடி நெல்லை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளைப் பிடித்தடக்கினார் (கி.பி. 1535-ம் ஆண்டு) ஆடி மாதம் 26-ந்தேதி களக்காட்டில் இறந்தார் என்றும் வரலாறு குறிப்பிடுகிறது. நாகராஜர் ஆலயத்தில் கிடைத்தக் கல்வெட்டில் இருந்து இந்த அரசர்தான் பழைய கோவிலைக் கேரளக் கட்டிடக்கலையமைப்பிலே புதுப்பித்தார் என்று அறிய முடிகிறது. இவரே கேரள நாட்டு நம்பூதிரிகளைப் பூஜை செய்ய ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

Next Story