என் மலர்
ஆன்மிகம்

சிவன்
சித்திரை மாதத்தில் சிறப்பு வாய்ந்த விரதங்கள்
தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை ஆகும். சித்திரையில் ஏராளமான சிறப்பு மிக்க விரத வழிபாட்டு நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை தொகுப்பாக காண்போம்.
தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை ஆகும். இந்த மாதத்தில் தான் சூரியன், ராசிகளில் முதலாவதாக விளங்கும் மேஷத்தின் பயணம் செய்வார். சித்திரையில் ஏராளமான சிறப்பு மிக்க விரத வழிபாட்டு நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை தொகுப்பாக காண்போம்.
தமிழ் புத்தாண்டு
சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை நித்திய கடமைகளை முடித்து, கோவில் களுக்குச் சென்று அன்றைய ஆண்டில் எல்லா வளங்களும் பெற இறைவனை வழிபடுகின்றனர். மதிய வேளையில் உறவினர் மற்றும் நண்பர்களுடன் விருந்து உண்டு மகிழ்வார்கள். சிறியவர்கள் அனைவரும், பெரியவர்களிடம் ஆசிபெறுவார்கள். பகிர்ந்து உண்ணல், பரிசு வழங்குதல், உறவுகளுடன் மகிழ்ந்திருத்தல் ஆகியவை தமிழ் புத்தாண்டின் நிகழ்ச்சிகளாகும்.
கேரள மாநிலத்தில் சித்திரை முதல் நாளானது, ‘சித்திரை விசு’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத கடைசி நாள் இரவில், தங்கம் - வெள்ளி பொருட்கள், நவரத்தினங்கள், பழவகைகள், காய்கனிகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர். மறுநாள் அதி காலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட் களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
அட்சய திருதியை
சித்திரை மாதத்தின் வளர்பிறையின் மூன்றாவது நாளான திருதியை திதியை ‘அட்சய திருதியை’ என்று அழைப்பார்கள். ‘அட்சய’ என்பதற்கு ‘அள்ள அள்ள குறையாத’ என்று பொருள்படும். இந்நாளில் செய்யப்படும் நல்ல செயல்களான, தான தருமங்கள் அள்ள அள்ள குறையாத அதிக பலன்களைத் தரும். பார்வதிதேவி, தனது பிறந்த வீட்டுக்கு வந்ததும், பரசுராமர் அவதரித்ததும் இந்நாளில்தான் என்று புராணங்கள் சொல்கின்றன.
அட்சய திருதியை அன்று தயிர்சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் செய்தால் திருமணத்தடை அகலும். உணவு தானியங்கள் தானம் செய்தால் விபத்துகள் ஏற்படாது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.
மத்ஸ்ய ஜெயந்தி
திருமாலின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமாக விளங்குவது, ‘மச்ச அவதாரம்’ சித்திரை மாதம் வளர்பிறை திருதியையில் (அமாவாசை அடுத்த மூன்றாவது நாள்) இந்த அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. எனவே ஆண்டு தோறும் சித்திரை வளர்பிறை திருதியையில் ‘மத்ஸ்ய ஜெயந்தி’ கொண்டாடப்படுகிறது. அநீதியின் வடிவமான சோமுகாசுரன் என்னும் குதிரை முக அரக்கனிடம் இருந்து, வேதங்களை காப்பாற்றி உலக உயிர் இயக்கத்திற்கு காரணமாக திகழ்ந்த மச்ச மூர்த்தியை இந்த நாளில் வழிபட்டால், துன்பங்கள் நீங்கும்.
லட்சுமி பூஜை
சித்திரை மாத வளர்பிறை பஞ்சமியில், திருமகள் பூலோகத்திற்கு வந்ததாகக் கருதப்படுகிறது. எனவே இந்நாளில் லட்சுமி பூஜை செய்து வழிபட்டால் செல்வம் பெருகும். சித்திரை மாத வளர்பிறை அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாகக் கருதப் படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது.
பைரவர் விரதம்
சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரம் அன்று பைரவ விரதம் பின்பற்றப்படுகிறது. அன்றைய தினத்தில் பகல் உணவு மட்டும் உண்டு விரதமுறையை கடைப்பிடிக்க வேண்டும். அன்றைக்கு திருமுறை ஓதுதல் வழக்கத்தில் உள்ளது. இவ்விரத முறையை பின்பற்றினால் சுபிட்சமான வாழ்வுடன், இறுதியில் முக்தி கிடைக்கும்.
சித்திரை திருவிழா
ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் பன்னிரண்டு நாட்கள், மதுரையில் ‘சித்திரை திருவிழா’ நடைபெறுகிறது. இவ்விழாவில் மீனாட்சி கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குதல் என இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்விழாவினைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருகை தருவார்கள். பத்தாம் நாள் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணமும், 11-ம் நாள் தேரோட்டமும் நடைபெறும். சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில், அழகர் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது.
சித்ரா பவுர்ணமி
சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி ‘சித்ரா பவுர்ணமி’ என்ற பெயரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில்தான், நம்முடைய பாவ - புண்ணிய கணக்குகளை நிர்ணயம் செய்பவரும், எமதர்மனின் உதவியாளருமான சித்திரகுப்தனுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமான், அம்பிகை வழிபாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ் விழாவன்று மக்கள் பொங்கல் வைத்தும், அன்னதானம் செய்தும் வழிபடுவாா்கள். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளின் கரைகளில் மக்கள்கூடி நிலவொளியில் அமர்ந்து ‘சித்ரான்னம்’ என்று சொல்லக்கூடிய, பலவகையான கலவை சாத வகைகளை உண்டு மகிழ்வார்கள்.

Next Story