என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை ‘சித்ரா பவுர்ணமி’ என்பார்கள். தாயை இழந்தவர்கள் இந்த தினத்தில் விரதமிருந்து, தான - தருமம் செய்வது சிறப்புக்குரியது.
    திதிகள் எனப்படும் சந்திர நாட்களுள், பவுர்ணமியும் ஒன்று. இந்து சமயத்தவரால் பவுர்ணமி திதியானது, சிறந்த தினமாகப் பார்க்கப்படுகிறது. அம்பிகை வழிபாடு, பவுர்ணமி தினங்களில்தான் முக்கியத்துவம் பெறுகின்றது. சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை ‘சித்ரா பவுர்ணமி’ என்பார்கள். தாயை இழந்தவர்கள் இந்த தினத்தில் விரதமிருந்து, தான - தருமம் செய்வது சிறப்புக்குரியது.

    மனிதர்களின் பாவ புண்ணியங்களைக் கணக்கெடுத்து எமதர்மனிடம் கொடுக்கும் பணியைச் செய்யும் சித்ரகுப்தர் அவதரித்த தினம் சித்ரா பவுர்ணமி ஆகும். இத்தினத்தில் அவரை வழிபடுவதும் முக்கியமானது. அறியாமையால் மனிதர்கள் செய்யும் தவறுகள், சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தனை வழிபடுவதால் நீங்கும் என்பது நம்பிக்கை.

    உலக உயிர்கள் அனைத்தின் பாவ- புண்ணியங்களை கணக்கெடுப்பது, பின்னர் அதற்கு ஏற்றாற்போல் நீதியை வழங்குவது போன்ற பணியை எமதர்மன் செய்து வருகிறார். இரண்டு பணிகளையும் அவர் ஒருவரே செய்து வந்ததால், துரிதமாக செயல்பட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். ஒருமுறை சிவபெருமானை சந்தித்து, தனக்கு ஒரு உதவியாளரை நியமிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். ஈசனும், ‘உரிய நேரம் வரும்போது, உதவியாளன் வந்துசேர்வான்’ என்று அருளினார்.

    இந்த நிலையில் ஒரு முறை கயிலையில் சிவபெருமான் ஒரு சித்திரம் வரைந்தார். அதைக் கண்ட பார்வதி தேவி, அதன் அழகால் ஈர்க்கப்பட்டு, அந்த சித்திரத்திற்கு உருவமும், ஒலியும் கொடுத்தார். சித்திரத்தில் இருந்து வந்ததால், ‘சித்திர புத்திரன்’ என்று பெயர் பெற்றார். அதுவே நாளடைவில் ‘சித்ரகுப்தன்’ என்றானது.

    சில காலம் கயிலையில் இருந்த சித்ரகுப்தன், எமதர்மனிடம் சென்று சேரும் நேரம் வந்தது. இந்திரன் தனக்கு பிள்ளை வரம் வேண்டும் என்று, தன் மனைவி இந்திராணியுடன் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து வந்தான். இந்திரன் தவம் செய்த இடத்தில் இருந்த காமதேனுவின் வயிற்றில் சித்ரகுப்தனை உதிக்கச் செய்த இறைவன், அவனை இந்திரனுக்கு புத்திரனாகும்படி செய்தார். காமதேனுவின் வயிற்றில் இருந்து உதிக்கும்போதே, கையில் சுவடியும், எழுத்தாணியும் பிடித்தபடி உதித்தவர் சித்ரகுப்தர். இதனால் பின்னாளில் அவர் எமனுக்கு உதவியாளரான, உலக உயிர்களின் பாவ- புண்ணியங்களை கணக்கிடுபவராக மாறினார்.
    அறியாமல் செய்த பாவங்களில் இருந்து விடுபட விரும்புபவர்கள் சித்ரா பவுர்ணமி அன்று விரதம் இருந்து சித்ரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும்.
    பவுர்ணமி தினமானது மாதம் ஒரு முறை வந்தாலும், சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு பல தனிச் சிறப்புக்கள் உள்ளன. சார்வரி வருடத்தின் சித்ரா பவுர்ணமி, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று 6-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7.28 மணிக்கு ஆரம்பித்து 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.14 மணி வரை சுவாதி நட்சத்திரத்தில் நிகழ்கிறது.

    சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் உச்சமாக இருப்பார். கிரகங்கள் உச்ச வீட்டில் சஞ்சாரம் செய்யும் போது பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதன் வலிமையும் மிகுதியாக இருக்கும். உச்ச கிரகங்களின் கதிர் வீச்சு பூமிக்கு மிகுதியாக கிடைக்கும். மேஷ ராசியில் நீச்சம் பெறும் கிரகம், சனி. ஒரு கிரகம் நீச்சம் பெறும் போது பூமிக்கு வெகு தொலைவில் இருக்கும். நீச்சம் பெற்ற கிரகத்தின் அதிர்வலைகள் பூமிக்கு குறைவாக கிடைக்கும்.

    மனிதர்களின் பூர்வ ஜென்ம பாவ-புண்ணியங்கள் எல்லாம் சனி கிரகத்தில் தான் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இருளை நீக்கும் வலிமை வெளிச்சத்திற்கு மட்டுமே உண்டு. சனி கிரகத்தில் பதிவாகி இருக்கும் கர்ம வினைகளை அழிக்கும் சக்தி, ஆத்மகாரகனான சூரியனும் மனோகாரகனான சந்திரனும் பலம்பெறும் சித்ரா பவுர்ணமிக்கு உண்டு. அதாவது சனியின் நீச்ச வீட்டில் உச்சமாகும் சூரியன் தன் முழு வலிமையுடன் சந்திரனை பார்க்கும் சித்ரா பவுர்ணமி நாளில், சூரிய ஒளியால் பகல் பொழுதும், சந்திர ஒளியால் இரவு பொழுதும் பிரகாசமாகவும் வெளிச்சமாகவும் இருக்கும் போது மனிதர்கள் செய்யும் பூஜைகள், வழிபாடுகள், தான தர்மங்கள் பல மடங்காகி புண்ணிய பலன் மிகுதியாகும்.

    மனிதர்களின் பாவ புண்ணிய கணக்கை எழுதும் சித்ரகுப்தனின் கணக்கு புத்தகம் என்பது, சனி கிரகமாகும். எனவே இந்த நாளில் விரதம் இருந்து சித்ர குப்தனை வழிபட கர்ம வினை நீங்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

    மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்ர குப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி, ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். நாம் செய்யும் புண்ணிய செயல் களையும் பாவ செயல்களையும் தவறாமல் நடுநிலையாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின் படி ஆராய்ந்து மறையாத எழுத்துக்களால் கணக்குப் புத்தகத்தில் எழுதுவதாக நம்பிக்கை. ‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’ என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் சித்ரகுப்தர். அதனால் எமதர்மனின் உதவியாளரான சித்ரகுப்தனை வழிபட்டு புண்ணிய பலனை அதிகரிக்க முடியும்.

    சித்ரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படம் வைத்து மலர் அலங்காரம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, சம்பா அரிசியில் தயாரித்த அவல், பச்சரிசி வெல்லம் கலந்த இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி, நல்ல எண்ணங்களை புகுத்தி, தீப தூபம் காட்டி, சித்ர குப்தனை மனதார வழிபட பாவ பலன் குறைந்து புண்ணிய பலன் பெருகும்.

    மனிதர்கள் செய்யும் பாவங்களை அறிந்து செய்யும் பாவம், அறியாமல் செய்த பாவம் என இரண்டாக வகைப்படுத்தலாம். அறியாமல் செய்த பாவங்களில் இருந்து விடுபட விரும்புபவர்கள் சித்ரா பவுர்ணமி அன்று விரதம் இருந்து சித்ரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதே போல் தெரிந்து செய்த பாவத்திற்கு மன்னிப்பு கோரி பாவச் சுமையை குறைத்துக் கொள்ளலாம்.

    அதுபோலவே அன்று செய்யும் தான, தர்மங்கள் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக புண்ணியம் பெற்றுத் தரும். முக்கியமாக நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் முதலிய எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கினால் வாழ்வு சிறக்கும்.

    இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளில் காலபுருஷ 5-ம் அதிபதியான சூரியன், சுக்ரனின் நட்சத்திரத்திலும், சந்திரன் ராகுவின் நட்சத்திரமான சுவாதியிலும் சஞ்சரிக்கிறது. சூரியனின் அதிதேவதை சிவன், சந்திரனின் அதிதேவதை அம்பிகை. எனவே சிவசக்தியை சித்ரா பவுர்ணமியில் வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பாவங்கள் குறைவதோடு ராகு-கேது தோஷம், பூர்வ ஜென்ம தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், கல்வி தோஷம் ஆகிய தோஷங்கள் நிவர்த்தியாகும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை விரதம் இருந்து கிரிவலம் வருபவர்களுக்கு, பிறவிப் பணி நீங்கும் என்று அருணாச்சல புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருப்பதாக ஐதீகம். பவுர்ணமி நாட்களில் இந்த மலையை பக்தா்கள் அனைவரும் விரதம் இருந்து கிரிவலம் வந்து வழிபாடு செய்வாா்கள். இந்த மலையை வலம் வர வேண்டும் என்ற நினைப்போடு, ஓரடி எடுத்து வைத்தாலே, யாகம் செய்த பலன் கிடைக்கும். மேலும் பூமியை சுற்றி வந்த பலனும் சேரும்.

    இரண்டடி எடுத்து வைத்தால், ராஜசூய யாக பலன் உண்டு. சர்வ தீர்த்தங்களிலும் நீராடிய பலனும் வந்து சேரும். மூன்றடியில் தான பலனும், நான்கடியில் அஷ்டாங்க யோக பலனும் உண்டாகும். இப்படி ஒவ்வொரு பலன்கள் வந்து சேரும். திருவண்ணாமலையை விரதம் இருந்து கிரிவலம் வருபவர்களுக்கு, பிறவிப் பணி நீங்கும் என்று அருணாச்சல புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    இது தவிர எந்தெந்த கிழமைகளில், விரதம் இருந்து கிரிவலம் வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும் இங்கே பார்க்கலாம்.

    * ஞாயிற்றுக்கிழமை அன்று திருவண்ணாமலை மலையை வலம் வந்தால் சூரிய மண்டலத்தைப் பிளந்து சிவபதம் அடையலாம்.

    * திங்கட்கிழமை அன்று வலம் வந்தால் ஏழு உலகங்களையும் ஆளலாம்.

    * செவ்வாய்க்கிழமை அன்று வலம் வந்தால் கடனையும் தரித்திரத்தையும் தொலைத்து, பிறவிப்பிணி நீங்கப்பெறலாம்.

    * புதன்கிழமை அன்று வலம் வந்தால் சகல கலைகளும் தெரிந்த தேவர்களாக மாறலாம்.

    * வியாழக்கிழமை அன்று வலம் வந்தால், முனிவர்களுக்கும் மேலான பதவியை அடையலாம்.

    * வெள்ளிக்கிழமை அன்று வலம் வந்தால் விஷ்ணுபதம் கிடைக்கும்.

    * சனிக்கிழமை அன்று வலம் வந்தால் நவக்கிரகங்களின் அருளைப் பெறலாம்.

    எம்.ஏ.நிவேதா, திருச்சி.
    சிவனுக்கு உகந்த விரதங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. பிரச்சனைகள் தீரவும், கோரிக்கைகள் நிறைவேறவும் சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியவை நிறைவேறும்.
    இந்து மதத்தில் கடைபிடிக்கப்ப்டும் விரதங்களும், பூஜைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதிலும் சிவனுக்கு உகந்த விரதங்கள் மிகவும்  சிறப்பு வாய்ந்தவை. பிரச்சனைகள் தீரவும், கோரிக்கைகள் நிறைவேறவும் சிவனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியவை நிறைவேறும். பிரதோஷ தினமான இன்று சிவபெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.

    பாவம் போக்கும்  இந்த விரதத்தை இன்று நாள் முழுவதும் உணவு அருந்தால் விரதம் இருந்து மாலையில் வீட்டில் சிவன்பெருமான் படத்தில் முன் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். மேலும் சிவபெருமானுக்கு பிடித்த நைவேத்தியத்தை வைத்து பூஜை செய்து மாலை 6  மணிக்கு மேல் பிரசாதத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

     சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு. அவையாவன:
     
    * சோமவார விரதம் - திங்கட்கிழமை தோறும்
    * திருவாதிரை விரதம் - மார்கழி திருவாதிரை
    * மகாசிவராத்திரி - மாசி தேய்பிறை சதுர்த்தசி
    * உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமி
    * கல்யாண விரதம் - பங்குனி உத்திரம்
    * பாசுபத விரதம் - தைப்பூசம்
    * அஷ்டமி விரதம் - வைகாசி பூர்வபட்ச அஷ்டமி
    * கேதார விரதம் - தீபாவளி அமாவாசை.
    சித்திரை மாதத்தில் வருகின்ற சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி விரதம் இருந்து வணங்கி வழிபடுபவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.
    பல சிறப்புகளை கொண்ட இந்த சித்திரை மாதத்தில் சிவனை வழிபடுவதற்குரிய சிறப்பு தினமாக சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினம் வருகிறது இந்தப் பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை எப்படி வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    பல சிறப்புகள் நிறைந்த சித்திரை மாதத்தில் அனேகமாக அனைத்து தினங்களும் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம் மேற்கொள்வதற்கும் ஏற்றதாக இருக்கிறது. அதிலும் மற்ற மாதங்களில் வரும் பிரதோஷ தினங்களை காட்டிலும் மங்களங்களை அதிகம் தரும் மாதமான சித்திரை மாதத்தில் வருகின்ற இந்த சித்திரை வளர்பிறை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை முறைப்படி விரதம் இருந்து வணங்கி வழிபடுபவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கப் பெறுவார்கள்.

    சித்திரை மாத வளர்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம்.

    கொரோனா ஊரடங்கு உத்தரவால் கோவில் மூடிப்பட்டுள்ளதால் வீட்டிலேயே சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைத்து பூஜை செய்து வழிபாடு செய்யலாம்.

    இம்முறையில் சித்திரை வளர்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை விரதம் இருந்து வணங்குவதால் உங்களின் தரித்திரங்கள், துரதிர்ஷ்டங்கள் நீங்கி வாழ்வில் வளமை பெருகும். திருமண தடை, குழந்தை பேறில்லாமை போன்ற குறைகள் நீங்கும். நவகிரகங்களில் புதன் பகவான் பெருமாளின் அம்சமாக இருப்பதால், அவரின் அருட்பார்வை உங்களுக்கு வாழ்வில் சுகங்கள், செல்வ சேர்க்கை உண்டாக்கும்.
    சனியின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் விரத வழிபாடே சிறந்தது ஆகும். இதற்கு சனிக்கிழமைகளில் விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
    சனியின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் விரத வழிபாடே சிறந்தது ஆகும். புதிய நீலத்துணியில் கறுப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும். பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும்;பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும்;வைத்தப்பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.

    அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும்; அந்த நீலப்பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும்;இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும்;இவ்வாறு 16 சனிக்கிழமைகள் விரதம் இருந்து கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும்.
    பங்குனி மாதத்தில் வருகின்ற சஷ்டி தினங்கள் மகத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றன. சஷ்டி விரதம் மேற்கொண்டு முருகனை வழிபடுவதால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    பங்குனி மாதம் தெய்வங்களுக்கு விரதங்கள் இருப்பதும் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு சிறந்த மதமாக இருக்கிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் போன்று இந்த பங்குனி மாதம் தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாக இருக்கிறது. எனவே இந்த பங்குனி மாதத்தில் வருகின்ற சஷ்டி தினங்கள் மகத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றன. அதிலும் இன்றைய சஷ்டி தினம் வியாழக்கிழமை அன்று வருவது கூடுதல் சிறப்பாகும். இன்று சஷ்டி விரதம் மேற்கொண்டு முருகனை வழிபடுவதால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    இன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

    பங்குனி வளர்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நெடுநாட்களாக நீடித்து வந்த எத்தகைய பிரச்சனைகளும் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு கூடியவரையில் அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறு உண்டாகும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். உங்களுக்கு இருந்து வந்த பொருளாதார கஷ்டங்கள் விரைவில் தீரும்.
    இந்த விரதத்தை தொடர்ந்து 62 வெள்ளிக்கிழமைகள் செய்து வர வேண்டும். இந்த விரதத்தால் கால பைரவரின் அருளாசி பெருமளவு கிடைக்கும். பல மடங்கு செல்வ வளம் உண்டாகும்.

    வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் காலபைரவருக்கு நமது பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்;அவ்வாறு செய்யும் போது சந்தனாதித்தைலம், அத்தர், புனுகு, ஜவ்வாது,சிகப்பு அரளிமாலை அல்லது பூக்கள் போன்றவைகளை பூசாரியிடம் பூஜைக்குத் தர வேண்டும்.

    இவ்வாறு 62 வெள்ளிக்கிழமைகளுக்கு விரதம் இருந்து தொடர்ந்து வழிபாடு செய்து வர வேண்டும்.

    இதில் இந்த விரத வழிபாட்டை 31 வெள்ளிக்கிழமைகள் செய்து முடித்தப்பின்னர்,குறைந்தது ஒரு ஏழைப்பெண்ணுக்கு தங்கத்தில் தாலி செய்து கொடுக்க வேண்டும்;

    அதிகபட்சமாக 3 இன் மடங்குகளில்( 3,6,9,12,15) ஏழைப் பெண்களுக்கு அவர்களின் குல வழக்கப்படி தாலி செய்து தானம் செய்தால்,கால பைரவரின் அருளாசி பெருமளவு கிடைக்கும். பல மடங்கு செல்வ வளம் உண்டாகும்.
    கால பைரவரை இடைவிடாமல் தொடர்ந்து விரதம் இருந்து வழிபட்டு வருபவர்களுக்கு ஆகம தந்திர சாஸ்திரங்களில் உயர்ந்த நிலை கிடைக்கும்.
    கால பைரவரை இடைவிடாமல் தொடர்ந்து விரதம் இருந்து வழிபட்டு வருபவர்களுக்கு ஆகம தந்திர சாஸ்திரங்களில் உயர்ந்த நிலை கிடைக்கும். வாழ்க்கையில் பல தரப்பட்ட காரணங்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய பரிகாரங்களாக கால பைரவர் வழிபாடு முறைகளை வகுத்து தந்துள்ளனர்.

    1. தலை குனியா வாழ்க்கை.
    2. சுப மங்களம் ஊர்ஜிதம்.
    3. தீயவினைகள் முற்றிலும் அழிவு.
    4. பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.
    5. தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல்.
    6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்.
    7. கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.
    8. வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல்.
    9. இறைவனை எளிதாக உணர்தல்.
    10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதல்
    விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
    விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம்.

    சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும்.

    “ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று.

    இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது.

    ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.

    விரதங்களும் பலன்களும்

    விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.

    * திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவான் பரிபூர அன்பைப் பெறலாம்.
    * செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
    * புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள. தீரும்.
    * வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
    * வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
    * சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
    * ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

    ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.

    அட்சய திருதியை நாளில் விரதம் இருந்து குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும்.
    திதிகள் பதினைந்தில், திருதியை திதி முக்கியமான ஒன்று. பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதியே, திருதியை. இந்த திருதியை திதியானது, சித்திரை மாதத்தில் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஏனெனில் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை திதியை, ‘அட்சய திருதியை’ என்று அழைக்கிறோம்.

    ‘சயம்’ என்றால் ‘தேய்தல்’ என்று பொருள். ‘அட்சயம்’ என்றால் ‘தேயாதது’, ‘வளர்தல்’ என்று பொருள் கொள்ளலாம். அதனால்தான் எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை, ‘அட்சய திருதியை’ என்று பெயர் பெற்றது.

    துரியோதனனின் சூழ்ச்சியால், பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உண்டானது. வனத்தில் இருந்தபோது, ஆகாரத்துக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க கண்ணன் ஒரு ஏற்பாட்டைச் செய்தார். அதன்படி பாண்டவர்களுக்கு, சூரிய தேவனால் அட்சய பாத்திரம் ஒன்று வழங்கப்பட்டது. அந்த பாத்திரத்தில் இருந்து அவர்கள் விருப்பப்பட்ட உணவை, அள்ள அள்ள குறையாத வகையில் பெற்று அவர்கள் உண்டு வந்தனர். இந்த அட்சய பாத்திரம், பாண்டவர்களுக்கு ஒரு அட்சய திருதியை நாளில்தான் கிடைத்ததாம்.

    சாபம் காரணமாக பிட்சாடனராக உருமாறிய சிவபெருமான், தன் கையில் ஒட்டிக்கொண்டிருந்த கபாலம் (பிரம்மனின் தலை ஓடு), நிரம்பும் அளவுக்கு, காசியில் அன்னபூரணியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அதுவும் அட்சய திருதியை நாளில்தான்.

    விரதம் இருக்கும் முறை

    அட்சய திருதியை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறையில் போடப்பட்ட கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.

    பிறகு கும்பத்தின் முன்பு வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அருகில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும்.

    அட்சய திருதியை நாளில், ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது, எந்த வகையிலாவது பிறருக்கு உறுதுணையாக இருப்பது போன்ற செயல்களால் புண்ணியம் சேரும். நற்பண்புகள் நிறைந்த மனைவி அமையவும், நல்ல வரன் கிடைக்கவும், இந்த விரதம் சிறப்பானது.
    விரதம் இருந்து முருகனின் அறுபடை வீடுகளுக்கு சென்று வழிபாடு செய்தால் எந்த வகையான வேண்டுதல்கள் நிறைவேறும் என்று குறித்து பார்க்கலாம்.
    சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால். ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.

    திருப்பரங்குன்றம் : இங்கு பரம்பொருளை விரதம் இருந்துவழிபட்டால் திருமணம் நடைபெறும்.

     திருச்சரலைவாய் (திருச்செந்தூர்): இங்கு முருகப்பெருமானை, விரதம் இருந்துகடலில் நீராடி, பின் வழிபடுதல் நல்லது. வியாதி, பகை ஆகியன நீங்கும். மனம் தெளிவு பெறும்.

     திரு ஆவினன்குடி (பழனி): ஞானப்பழமாக இருக்கின்ற முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால், தெளிந்த ஞானம் கிடைக்கும்.

    சுவாமிமலை (திருஏரகம்): தந்தைக்கு உபதேசம் செய்த முருகப்பெருமானை  விரதம் இருந்து வழிபட்டால். ஞானம், சுகவாழ்வு, மகிழ்வு ஆகியன பெறலாம்.

     திருத்தணிகை (குன்று தோராடல்): குன்றிலே குடியிருக்கின்ற திருத்தணிகை முருகனை விரதம் இருந்து வழிபட்டால், மனதிலிருக்கும் கோபம் முழுமையாக நீங்கும்.

     பழமுதிர்ச்சோலை : இங்குள்ள முருகனை விரதம் இருந்து வழிபட்டால் பொன், பொருள், வருமானம் பெருகும். அங்குள்ள சுனையில் நீராடுதல் மிகவும் சிறப்பு.  தன்னை வழிபட்டவருக்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். 
    ×