search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    பங்குனி மாத சஷ்டி விரதம் இருந்து இதை செய்தால் மிகுதியான பலன்கள் உண்டு

    பங்குனி மாதத்தில் வருகின்ற சஷ்டி தினங்கள் மகத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றன. சஷ்டி விரதம் மேற்கொண்டு முருகனை வழிபடுவதால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    பங்குனி மாதம் தெய்வங்களுக்கு விரதங்கள் இருப்பதும் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு சிறந்த மதமாக இருக்கிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் போன்று இந்த பங்குனி மாதம் தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாக இருக்கிறது. எனவே இந்த பங்குனி மாதத்தில் வருகின்ற சஷ்டி தினங்கள் மகத்துவம் மிக்கதாக கருதப்படுகின்றன. அதிலும் இன்றைய சஷ்டி தினம் வியாழக்கிழமை அன்று வருவது கூடுதல் சிறப்பாகும். இன்று சஷ்டி விரதம் மேற்கொண்டு முருகனை வழிபடுவதால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    இன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

    பங்குனி வளர்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நெடுநாட்களாக நீடித்து வந்த எத்தகைய பிரச்சனைகளும் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு கூடியவரையில் அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறு உண்டாகும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். உங்களுக்கு இருந்து வந்த பொருளாதார கஷ்டங்கள் விரைவில் தீரும்.
    Next Story
    ×