என் மலர்
முக்கிய விரதங்கள்
உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு.
உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவேனில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இந்தச் சிறப்பு உண்டு. காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதாரம் செய்தது வைகாசி மாத அனுஷ நட்சத்திர நாளில்தான். நாயன்மார்களுள் கழற்சிங்கர், சோமாசி மாறர், திருஞான சம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், திருநீலநக்கர், முருகநாயனார், நமிநந்தியடிகள் ஆகியோர் அவதரித்ததும் வைகாசி மாதத்தில்தான். பெரிய புராணம் அருளிய சேக்கிழார் சுவாமிகளும் வைணவப் பெரியாரான நம்மாழ்வாரும் அவதரித்தது இந்த மாதத்தில் தான்.
திருத்தணியில் பல தீர்த்தங்கள் உள்ளன. இதில் குமார தீர்த்தமும் ஒன்று. இதில் வைகாசி விசாகத்தன்று நீராடி முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. வைகாசி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் இருப்பதால், ஆசைகள் ஈடேறி முடிவில் முக்தி கிடைக்கும். வைகாசி கிருஷ்ணபட்ச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் வித்யாதானம் செய்த பலனைத் தருவதுடன் எதிர்பாரா ஆபத்துகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும். வைகாசி மாத அஷ்டமிக்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்று இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பர். வெறும் நீரை நைவேத்தியம் செய்து அதையே குடிக்கவேண்டும். அதன் பலனாக செய்த பாவங்கள் அனைத்தும் போகும்.
இலங்கையின் கதிர்காமம், நல்லூர் கந்தசாமி கோயில், மாவிட்டபுர கந்தசாமி கோயில், வில்லூன்றி கந்தசாமி கோயில் கொழும்பு சுப்ரமண்யர் கோயில். மேலைப்பூ வேலி பூச்சந்தி கோயில்கள் இலங்கையின் அறுபடை வீடுகள். இலங்கை கதிர்காமத்தில் செப்பு ஓடாமல் வேயப்பட்ட கொட்டகைதான் முருகனின் கோயில். முன் வாசலில் குதிரைகள் உள்ளன. 7-வது திரையில் முருகன் மயில் மீது இரு தேவியருடன் அமர்ந்த ஓவியம் உள்ளது. திரைக்குப் பின் பெட்டியில் சடாட்சர மந்திரம் யந்திர வடிவில் உள்ளது. இங்கு பூஜை அபிஷேகம் யாவும் மரகத்வேலுக்குத்தான் இங்கு நடைபெறும் வைகாசி விசாக விழாவில் ஆறுமுகப் புறப்பாடு மிகப்பிரபலம்.
ஆதிசங்கரர் அருளிய பிரசாதம் : கேரளாவில் உள்ள கொல்லூர் முகாம்பிகை கோயிலில், இரவு பூஜையின்போது அம்பிகைக்கு சுக்கு கஷாயம் நிவேதனம் செய்வர். சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் இந்த விசேஷ பிரசாதம் வழங்கும் முறையை ஆதிசங்கரரே ஆரம்பித்து வைத்ததாக வரலாறு கூறுகிறது. அம்பிக்கைக்கு சமர்ப்பித்த சுக்கு கஷாயம் பிறகு, பக்தர்களுக்கு வழங்குவர்.
வைகாசியில் அனுமன் ஜெயந்தி: தமிழகத்தில் மார்கழி மாதம் அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், வடநாட்டில் வைசாக (வைகாசி) பவுர்ணமிக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. லக்னோவுக்கு அருகில் ஆலிகஞ்ச் என்ற இடத்தில் அருள்புரியும் அனுமனை வைகாசி பவுர்ணமி அன்று விசேஷமாக வழிபடுகிறார்கள். அன்று லக்னோ நகரிலிருந்து ஆலிகஞ்ச் திருத்தலத்தில் உள்ள அனுமன் கோயில்வரை ஆண்கள் கோவணம் மட்டும் அணிந்து சாஷ்டாங்கமாக வணங்கியபடி சென்று வழிபடுகிறார்கள். முதலில் சாஷ்டாங்கமாக கைகளை நீட்டி நமஸ்காரம் செய்யும்போது, கைவிரல்கள் மூடிய இடத்தில் ஒரு கல்லை அடையாளமாக வைத்து, பிறகு, எடுத்து நின்று அந்தக் கல் வைத்த இடத்திலிருந்து அடுத்து (படுத்தபடி) நமஸ்காரம் செய்வார்கள். இப்படியே தொடர்ந்து நமஸ்காரம் செய்து கோயிலை அடைவார்கள். இதற்கு சயன தபஸ் என்று பெயர்.

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரமன்று முருகப்பெருமானை விரதம்இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும், வருங்காலம் நலமாக உருவாகும்.
வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் வரும்நாளில் முருகப்பெருமானை முறையாக வழிபட்டால் வெற்றி நிச்சயம் வந்து சேரும். திருப்பரங்குன்றத்தை முதல் படைவீடாகவும், திருச்செந்தூரை 2-ம் படைவீடாகவும், பழனியை 3-ம் படைவீடாகவும், திருவேரகத்தை 4-ம் படைவீடாகவும், திருத்தணியை 5-ம் படைவீடாகவும், பழமுதிர்சோலையை 6-ம் படைவீடாகவும் கொண்டவன் அந்த ஆறுபடைவீட்டு அழகன். வாரி வாரி அருள் வழங்கும் அந்த வள்ளலை, வைகாசி விசாகத்தன்று இல்லத்துப் பூஜையறையில் அவனுக்குப் பிடித்த மாம்பழத்தை நைவேத்தியமாக வைத்தும், வாழைப்பழம் வைத்தும், கந்தரப்பம் வைத்தும் வழிபட்டு வந்தால் நமது வாழ்க்கை நன்றாக அமையும்.
வாரியார் சுவாமிகள் “முருகு, முருகு என்று நீ உருகு உருகு” என்பார். அந்த முருகப்பெருமானிடம் மும்மூர்த்திகளும் அடக்கம் என்று சொல்வார். காக்கும் கடவுளாகிய முகுந்தன், அழிக்கும் கடவுளாகிய ருத்திரன், படைக்கும் கடவுளாகிய காமலோற்பவன் ஆகிய மூவரின் முதல் எழுத்துக்களை ஒன்று சேர்த்தால் “முருகா” என்ற பொருள் கிடைக்கும். எனவே முருகனை வழிபட்டால் மும்மூர்த்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.
அகத்திய முனிவருக்கு தமிழ் இலக்கணம் போதித்தவர் என்றும், அவ்வையாருக்கு நாவல் கனி மூலம் தத்துவ ஞானத்தைப் போதித்தவர் என்றும் போற்றப்படும் முருகப்பெருமானை, விசாகத்தன்று உள்ளம் உருகி, கவசபாராயணம் செய்து வழிபட்டால் கடமையில் உள்ள தொய்வு அகலும்.
ஒவ்வொரு மாதத்திலும் ஒரு சிறப்பான நட்சத்திரம் அல்லது திதியைத் தேர்ந்தெடுத்து நாம் கொண்டாடுகிறோம். நட்சத்திர அடிப்படையில் வைகாசி விசாகம், ஆடிப்பூரம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், மாசிமகம் போன்றவைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங் களைக் கொண்டாடும் பொழுது அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமையும் என்பதை முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த விதத்தில் விசாக நட்சத்திரம் என்பது முருகனுக்கு உகந்த நட்சத்திரமாகும்.
அதிலும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரமன்று முருகப்பெருமானை விரதம்இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும், வருங்காலம் நலமாக உருவாகும். முருகப்பெருமானை நினைத்துக் கவசம் படித்தால் காரிய வெற்றி கிட்டும். பதிகம் படித்தால் படிப்படியாய் துயர் தீரும். துதிப்பாடல் படித்தால் தொல்லைகள் அகலும்.
இந்த இனிய நாள் தான் வைகாசி 22-ம் தேதி வியாழக்கிழமை (4.6.2020) அன்று வருகிறது. அதற்கு முதல் நாள் அவனது தந்தை சிவன், உமையவள், நந்தியைக் கொண்டாடும் பிரதோஷம் வருகிறது. எனவே தந்தை சிவனின் வழிபாடும், மூலமுதற் கடவுளாம் விநாயகப் பெருமான் வழிபாடும், கந்தனின் வழிபாடும் நாம் மேற்கொண்டால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குறிப்பாக நோய்த்தொற்று பரவி மக்கள் மனக்கவலையில் இருக்கும் இந்த நாளில் நமது ஒவ்வொரு அங்கங்களையும் வேல்கொண்டு காக்க என்று இடம்பெற்ற கந்தசஷ்டி கவசப் பாராயணம் செய்தால் நோயின் தாக்குதலிலிருந்து விடுபட இயலும்.
முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உண்டு. சரவணப் பொய்கையில் தோன்றியதால் ‘சரவணபவன்’ என்று அழைப்பர். கங்கையில் வளர்ந்ததால் ‘காங்கேயன்’ என்று கூறுவர். ஆறுமுகம் கொண்டதால் ‘சண்முகன்’ என்று சொல்வர். கார்த்திகைப் பெண்களினால் வளர்க்கப்பட்டதால் ‘கார்த்திகேயன்’ என்று கூறுவர்.
மயிலில் ஏறுவதால் ‘மயில் வாகனன்’ என்பர். பக்தர்கள் மனக்குகையில் வாழ்வதால் ‘குகன்’ என்பர். தந்தைக்கு உபதேசம் செய்ததால் ‘சுவாமிநாதன்’ என்பர். பிரம்மத்தில் உயர்ந்ததால் ‘சுப்ரமணியன்’ என்பர். கடம்ப மலரை உடையவன் என்பதால் ‘கடம்பன்’ என்பர். பட்சி வாகனன் என்பதால் ‘விசாகன்’ என்பர். இதுமட்டுமின்றி ‘வேலன்’ என்றும், ‘சேவற் கொடியோன்’ என்றும், ‘குமரன்’ என்றும் அழைக்கப்படும் முருகப்பெரு மானுக்கு வைகாசி விசாகத்தன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு அதன் பின்னர் முருகப்பெருமான் படத்தின் முன்னால் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகைப் பரிமளப் பொருட்களை இணைத்து, ஐந்து வகை நைவேத்தியம் வைத்தும் அத்துடன் மாம்பழத்தை நைவேத்தியமாக வைத்து “திருப்புகழ்” பாட வேண்டும். திருப்புகழ் பாடினால் எதிர்ப்புகள் அகலும். இனிய வாழ்வு மலரும். ஐந்து முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்பது சான்றோர் மொழி.
வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை உள்ளத்தில் நினைத்து இல்லத்தில் இருந்தபடியே வழிபடுவதன் மூலம் பகை விலகும். பாசம் பெருகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் ஏராளம் நடைபெறும். வருமானம் பெருகும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். அன்றைய தினம் மோர், பானகம், தயிர்சாதம், இளநீர் போன்றவைகளைத் தானம் செய்தால் குலம் தழைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத் திருக்கிறார்கள்.
‘ஜோதிடக் கலைமணி’ சிவல்புரி சிங்காரம்

பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உள்ளம் உருகி பாராயணம் செய்ய வேண்டும்.
சிவபெருமானுக்குரிய வழிபாடுகளில் பிரதோஷ கால விரத வழிபாடு முக்கியமானது. பிரதோஷம் என்பது ஆன்மாக்களின் முற்பிறப்புக் குற்றங்களை நீக்குவதாகும். சூரியனின் மறைதலோடு தொடங்கும் பிரதோஷ காலம் இறைவனின் திருவடிகளில் மனம் ஒடுங்கி சரணாகதி அடைய உகந்ததாகும்.
பிரதி மாதம் வளர்பிறை தேய்பிறையில் திரயோதசி திதி அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ள காலமே ‘பிரதோஷ காலம்’ எனப்படும்.
புராணக்காலத்தில் தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி, பாற்கடலை கடைய முடிவு செய்தனர். மேரு மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்தபோது, வாசுகி பாம்பு வலி தாங்க முடியாமல் விஷத்தை கக்கியது. அந்த விஷம் உலக உயிர்களை அழிக்காமல் இருக்க, சிவபெருமான் அதை உண்டாா். அம்பிகையால் சிவன் விழுங்கிய விஷம், அவரது கழுத்திலேயே நின்றது. இதையடுத்து இந்த உலகம் உய்யவும், தேவர்கள் மகிழவும் சிவபெருமான் கையில் தமருகம் ஏந்தி நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் திருநடனம் புரிந்தார். அவர் ஆடிய காலமே பிரதோஷ காலமாக வழிபாடு செய்யப்படுகிறது.
தேவர்களுக்கு திருநடனக் காட்சி தந்த நாள் ஒரு கார்த்திகை மாத சனிக்கிழமை ஆகும். ஆகவேதான் சனிப் பிரதோஷம் சிறப்பு பெறுகிறது. பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உள்ளம் உருகி பாராயணம் செய்ய வேண்டும். நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல், நெய்விளக்கு ஏற்றுதல், தானதருமம் செய்தல் போன்றவை புண்ணியம் தரும். அக்காலத்தில் இறைவனை நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கு நடுவில் தரிசனம் செய்து வணங்குதல் நன்று.
சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபாட்டால் கல்வி பெருகும். செல்வம் வளரும், நோய்கள் விலகும், கடன், மனக்கவலை அகலும். ஒரு பிரதோஷ பூஜை ஆயிரம் சிவபூஜை செய்தமைக்கு சமம். ஆகவே பலன்களும் அதிகம். இந்த பிரதோஷ காலத்தில் சிவபெருமானின் ஆலயத்தை ஐந்து முறை வலம் வந்தால், அளவற்ற நன்மைகள் அடையலாம்.

ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாத வளர் பிறை துவாதசி நாள் வரை பெண்கள் விரதம் இருந்து துளசி பூஜை செய்து வந்தால் வீட்டில் சகல பாக்கியங்களும் நிறைந்து காணப்படும்.

துளசி மாடத்தில் உள்ள துளசிக்கு விரதம் இருந்து வழிபாடு செய்யும் போது மகாலட்சுமி சுலோகம் சொல்லி தினந்தோறும் பால், தேன் கலந்து நைவேத்தியம் செய்து கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட வேண்டும். இதனால் மகாலட்சுமியின் அருளைப் பெறுவதுடன் அம்பிகையின் அருளும் கிட்டும்.

நீண்ட ஆயுளும், ஐஸ்வர்யமும், ஆரோக்கியமும் பெற மஞ்சள் வண்ணத்தைப் பார்க்கும் பொருள்களில் உபயோகப்படுத்துவது வழக்கம்.

திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதலில் இடம் பெறுவது மஞ்சள் தான். காரணம் அது ஒரு மங்கலப் பொருளாகக் கருதப்படுகிறது. எந்தப் பூஜையை நாம் செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை வைத்து, மலரும், குங்குமமும் வைத்துப் பூஜை செய்வது வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி, தலையில் விழுந்தால் அட்சதை.
அப்படிப்பட்ட அட்சதை, முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது ஆகும். சுமங்கலிப் பெண்கள் வீட்டிற்கு வந்தால் வெற்றிலை, பாக்கு, குங்குமத் தோடு மஞ்சளும் கொடுப்பார்கள். இங்ஙனம் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் விலகுவதாக நம்புகிறார்கள்.
நீண்ட ஆயுளும், ஐஸ்வர்யமும், ஆரோக்கியமும் பெற மஞ்சள் வண்ணத்தைப் பார்க்கும் பொருள்களில் உபயோகப்படுத்துவது வழக்கம். விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும்.

ஸ்ரீசக்கரத்தை விரதம் இருந்து வழிபடும் முறைகளை தெரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டும். அதற்கான எளிய விரத வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.
ஸ்ரீசக்கரத்தை விரதம் இருந்து வழிபடும் முறைகளை தெரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டும். அதற்கான எளிய விரத வழிபாட்டு முறை வருமாறு-
முதலில் ஸ்ரீசக்கரத்தை ஒரு பீடத்தில் வைக்க வேண்டும். பின்னர் விளக்கேற்றி வைத்து விரத வழிபாட்டைத் தொடங்க வேண்டும், முதலில் கீழ்கண்ட தமிழில் உள்ள விநாயகர் துதியை சொல்ல வேண்டும்.
பின்னர் குரு வாழ்க, குருவே துணை, என்று குருவணக்கம் செய்ய வேண்டும்.
பின்னர் சுத்தமான நீரால் ஸ்ரீசக்கரத்திற்கு அபிஷேகம் செய்து, கற்பூர தீபம் காட்ட வேண்டும். தொடர்ந்து தேன், பால், தயிர் போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாக அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கு இடையிலும் கற்பூர தீபம் காட்ட வேண்டும்.
அபிஷேகம் செய்யும் போது மந்திரங்களை அறியாதவர்கள் அபிராமி அந்தாதியையே, திருக்கடவூர் அபிராமி தோத்திரத்தையோ கூறலாம்.
பின்னர் சுத்தமான வெள்ளைத் துணியால் ஸ்ரீசக்கரத்தை ஒத்தி எடுக்க வேண்டும். அதன் பிறகு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை மந்திரங்கள் ஏற்கனவே 15-வது அத்தியாயதித்தில் உள்ளபடி கூறலாம். அதில் சிரமம் இருக்காது.
பின்னர் பயத்தம் பருப்பு பாயசம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றைப் படைத்து, தூபம் காட்டி நிவேதம் செய்ய வேண்டும்.
நிறைவாகக் கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். அப்போது நித்தியாதேவிகளின் காயத்ரி மந்திரங்களைச் சொல்லலாம். கற்பூர தீபம் மலையேறிய பிறகு பிரசாதத்தை விநியோகிக்கலாம்.
இவ்வாறு எளிய முறையிலும் ஸ்ரீசக்கர வழிபாடு செய்யலாம்.

சொர்ண ஆகர்ஷண பைரவரை விரதம் இருந்து தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி ஓரையிலும் தரிசிப்பது நல்ல பலன் தரும். கடன் பிரச்சினை தீர இவரை சரணடையலாம்.
பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். சொர்ண ஆகர்ஷண பைரவரை விரதம் இருந்து தேய்பிறை அஷ்டமியிலும், ராகு காலம் சனி ஓரையிலும் தரிசிப்பது நல்ல பலன் தரும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். கடன் பிரச்சினை தீர இவரை சரணடையலாம். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர்,
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப்புஷ்பத்தால் பூஜித்து வந்தால் நல்ல குழந்தைச் செல்வம் கிடைக்கும். பைரவரை வழிபட்டால் தொழிலில் லாபம், பதவி உயர்வு மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றமும் கிடைக்கும். அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார்.
அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம். பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. “காளம்’ (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, “காளி’ என பெயர் சூட்டினாள்.
காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, “பைரவர்’ என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, “காளபைரவர்’ எனப்பட்டு தற்போது, “காலபைரவர்’ ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர். பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
அஷ்ட பைரவர்களில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரும் ஒருவர். தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷம்! இவரை வணங்கினால், நமக்குச் செல்வங்களைத் தந்தருள்வார். நமது பொருளாதாரப் பிரச்சினைகள் யாவும் நீங்கி, வீட்டில் சகல செல்வங்களும் குடிகொள்ளும் என்பது ஐதீகம்!
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால வேளையிலும் தேய்பிறை அஷ்டமியிலும் சிறப்பு பூஜைகளும், ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனை களும் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டு வழிபட திண்டுக்கல், வேடசந்தூர், வடமதுரை, வாடிப்பட்டி எனப் பல ஊர்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
அந்த நாளில் பால், இளநீர், பன்னீர், பச்சரிசி மாவு, தேன் ஆகியவற்றால் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கு அபிஷேகங்கள் செய்து, செவ்வரளி மாலை சாத்தி, சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபட்டால், சனிக் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். தொல்லைகள் நீங்கி, வாழ்வில் முன்னேறலாம் என்கின்றனர் பக்தர்கள்.
தேய்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது ஆயிரம் லிட்டர் அளவில் பாலபிஷேகம் சிறப்புற நடைபெறும். அந்த நாளில், தீபமேற்றி அவரை வழிபட்டால், சொத்துப் பிரச்சினைகளில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

தீராத நோய்களையும் தீர்த்து ரட்சிக்கும் தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ‘தன்வந்திரி பகவான்’ தீராத நோய்களையும் தீர்க்கிறார் என்பது திண்ணம்.
உலகில் வாழும் மக்களை காத்தருள திருமால் எடுத்த அவதாரங்கள் 24 ஆகும். இதில் மிக முக்கியமான 10 அவதாரங்கள் தசாவதாரம் என அழைக்கப்படுகிறது. அவை மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி ஆகியவை ஆகும். இவை தவிர தத்தாத்தரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற பல்வேறு அவதாரங்களை திருமால் எடுத்து தன் அடியார்களை காத்து வருகிறார்.
ஒருமுறை துர்வாச முனிவரால் சாபத்திற்குள்ளானார் தேவேந்திரன். இதன் காரணமாக தேவேந்திரன் அனைத்து செல்வங்களையும் இழந்தார். இதனையடுத்து திருமாலின் அறிவுரையை ஏற்று தேவர்கள், அசுரர்கள் கூட்டு சேர்ந்து திருப்பாற் கடலை கடைந்தனர். அப்போது மிகக்கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. இதனை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்தி கொண்டார். எனவேதான் சிவபெருமான் நீலகண்டன் ஆனார்.
தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்தபோது காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை உள்ளிட்ட பல புனிதமான பொருட்கள் வந்தன. இறுதியாக திருமாலே தன்வந்திரியாக அமிர்த கலசத்தினை ஏந்தியவாறு பாற்கடலில் இருந்து தோன்றினார். தேவேந்திரனும் சாகா மருந்தான அமிர்த கலசத்தினை பெற்றுக்கொண்டு தான் இழந்த அனைத்தையும் பெற்று தேவலோகம் சென்றார். இவ்வாறு திருப்பாற்கடலை கடைந்தபோதுதான் திருமால் தேவர்களை காக்கும் பொருட்டு தன்வந்திரியாக அவதாரம் எடுத்தார்.
திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு 2 நாள் முந்தையதாக வரும் திரயோதசி நாளாகும். திருமாலின் 24 அவதாரங்களில் 17-வதாக தன்வந்திரி அவதாரம் உள்ளது. ரிக், யசூர், சாமம் மற்றும் அதர்வணம் போன்ற 4 வேதங்களையும் பிரம்மன் படைத்து அதன் சாரமாகிய ஆயுர் வேதத்தையும் படைத்தார். ஆயுர்வேதம் தழைத்தோங்கி வளர முதலில் பிரம்மன் சூரியபகவானுக்கு உபதேசித்தார். சூரிய பகவானிடமிருந்து ஆயுர்வேதத்தினை படித்த பதினாரு மாணவர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் தன்வந்திரி ஆவார் என வைவர்த்த புராணம் கூறுகிறது.
இவரை வைத்திய ராஜா ஆதர்ச மருத்துவர் என்றும் புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. இவர் சுருண்டு காணப்படும் மென்மையான திருமுடி, செவ்வரியோடிய கண்கள், வெண்சங்குக் கோடுகளுடன் கூடிய கழுத்து, பரந்த மார்பு, பட்டுப் பீதாம்பம், மலர் மாலைகள் தரித்த ஆபரணத்திருமேனி, 4 கரங்களில் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம், கீழ் இரு திருக்கரங்களில் ஒன்றில் அட்டை பூச்சியும், மற்றொன்றில் அமிர்த கலசத்தினையும் தாங்கி காட்சியருள்வார்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. விரதம் இருந்து இந்த பூஜையின்போது தன்வந்திரி பகவானை மனமுருக பிரார்த்தனை செய்து பூஜையில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதத்தினை உட்கொண்டாலே நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடான உண்மையாகும். இந்த திருக்கோவிலில் பூஜையின்போது சந்தனாதி தைலத்தினை அமிர்த கலசத்தில் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டும்,
ஒவ்வொரு ‘அம்மாவாசை’ தினத்திலும் மாலை 7&9 மணிக்குள் நடக்கும் சிறப்பு அபிசேக ஆராதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வேறு எங்கும் இல்லாத.தைல அபிசேகம், லேகிய நைவேத்தியம் உள்ள தனிப்பட்ட ஸ்தலம் இது. இந்த அபிசேகம் தனிநபர் பூஜையாக இல்லாமல் மக்கள் இணைந்து செய்யும் பூஜையாகவே நடத்தப்படுகிறது. சந்தனம் அபிசேகம் முடிந்து .....பிறகு தன்வந்திரி பகவான் கையில் உள்ள அமிர்த கலசம் மட்டும் துணியால் துடைக்கப்பட்டு அந்த கலசத்தில் மட்டும் ‘தைல அபிசேகம் ‘ செய்யப்பட்டு அந்த தைலம் முழுமையாக சேகரிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக, தீர்த்தமாக வழங்கப்படுகிறது. தைலத்தை நோயுள்ள இடங்களில் தேய்த்து கொள்ள/உள்ளே சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.
(தைலம்-சந்தனாதி தைலம்).
கோவிலிலேயே சிறப்பாக செய்யப்பட்ட லேகியம் படையலாக (நைவேத்தியம்) வைக்கப்பட்டு சிறப்பான அலங்காரம் பூஜை புனஷ்காரங்கள் வெகு விமரிசையாக செய்யப்படுகிறது. லேகியம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தைல அபிசேகம் கட்டணம் ரூ.70. செலுத்தி தைலம் வாங்கி அபிசேகத்திற்குக் கொடுப்பவர்களுக்கு சுமார் 50 மி.லி. தைலம் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. நோய்க்குத் தக்க உள், வெளிப் பிரயோகமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது
லேகியம் நைவேத்தியத்திற்குரூ. 330 கொடுப்பவர்களுக்கு சுமார் 100 கிராம் அளவு லேகியம் பிரசாதமாக தனியாக வழங்கப்படுகிறது. .
பூஜையின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு அர்ச்சகரால் அழகு தமிழ் மேற்கோள்காட்டி அற்புதமாக விளக்கப்படுகிறது.
“மருத்துவர் தலையாய கடமை நம்பிக்கை ஊட்டுதல்”என்பதற்கு இணங்க கோவில் அர்ச்சகர் தன்வந்திரி பகவான் பற்றி, சித்த மருத்துவம் பற்றி,தைலம்,லேகியம் பற்றி வெளிப்படையாக பெருமைபடப் பேசி பக்தர்களுக்கு நம்பிக்கை அளிப்பது அருமை. உடலின் வெளிப்புறத்தில் ஏற்படும் சுக வீனங்களுக்கு பூசிக்கொள்ள அமிர்த கலசத்தில் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்ட தைலத்தினையும், உடலின் உள்பகுதியில் ஏற்படும் சுகவீனங்களுக்கு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட லேகியத்தினை உட்கொள்வதன் மூலம் உடல் நோய்களிடமிருந்து முழுநிவாரணம் பெறலாம்.
தீராத வியாதிகளை உடையோர் அமாவாசை தினத்தில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையில் கலந்து கொண்டு லேகியம் மற்றும் சந்தனாதி தைலம் போன்றவற்றை கோவிலில் வாங்கி பட்டாச் சாரியார்களிடம் கொடுத்து அபிஷேகம் செய்து வீட்டிற்கு எடுத்துச் சென்று தினமும் பயன்படுத்தி நலம்பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த தைலம், லேகியம் போன்றவை தீர்த்தத்துடன் பூஜையில் கலந்து கொள்வோர் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. துளசி, ஆலிலை, அரசஇலை, வில்வ இலை, விஷ்ணுகிராந்தி, நாயுருவி, மரிக்கொழுந்து, பூர்ஜ இலை, தேவதாரு இலை போன்ற இலைகளையும், செவ்வந்திப்பூ, செண்பகம், பிச்சி, பாரிஜாதம், தாமரை, அரளி, புன்னகைப்பூ, மந்தாரை போன்ற பூக்களும் இவரது பூஜைக்கு உரியவை. மதங்களைக் கடந்து அனைத்து மதத்தினரின் நம்பிக்கை ஸ்தலமாம், தீராத நோய்களையும் தீர்த்து ரட்சிக்கும தாடிக்கொம்பு சௌந்திரராஜப் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள ‘தன்வந்திரி பகவான்’ தீராத நோய்களையும் தீர்க்கிறார் என்பது திண்ணம்.

கல்வி வளம்பெற ஹயக்ரீவர் வழிபாடு உகந்தது. சரஸ்வதி படம் வைத்து விரதம் இருந்து சகலகலாவல்லி மாலையை இல்லத்து பூஜையறையில் காலை மாலை நேரம் பாடி வழிபாடு செய்யலாம்.
மாணவர்களில் சிலருக்கு மறதி அதிகமாக இருக்கும். எதைச் சொன்னாலும் அடுத்த நிமிடம் மறந்து விடும். பெரியவர்கள் கூட ஒரு காரியத்தைச் செய்ய மறந்து விட்டால், ‘ஆஹா மறந்து போய்விட்டது. நாளை செய்கிறேன்’ என்பார்கள்.
‘மறதி’ என்ற மூன்றெழுத்துக்குள்ளேயே ‘மதி’ என்ற இரண்டெழுத்து இருக்கின்றது.
‘மதி’ என்றால் சந்திரன் என்று பொருள்.
சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம்பெற்றிருந்தால் தான் நினைவாற்றல் நன்றாக இருக்கும். நிகழ்காலத்தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளஇயலும். மேலும் ஜாதகத்தில் ‘ஞானகாரகன்’ கேதுவும், வித்யாகாரகன் புதனும் படிப்பு ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் கல்வியிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்க முடியும். மறதி இல்லாத மனிதராக வாழ்ந்து மகத்தான சாதனைகளைப் படைக்க முடியும்.
கல்வி வளம்பெற ஹயக்ரீவர் வழிபாடு உகந்தது. சரஸ்வதி படம் வைத்து விரதம் இருந்து சகலகலாவல்லி மாலையை இல்லத்து பூஜையறையில் காலை மாலை நேரம் பாடி வழிபாடு செய்யலாம்.
‘மறதி’ என்ற மூன்றெழுத்துக்குள்ளேயே ‘மதி’ என்ற இரண்டெழுத்து இருக்கின்றது.
‘மதி’ என்றால் சந்திரன் என்று பொருள்.
சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் பலம்பெற்றிருந்தால் தான் நினைவாற்றல் நன்றாக இருக்கும். நிகழ்காலத்தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளஇயலும். மேலும் ஜாதகத்தில் ‘ஞானகாரகன்’ கேதுவும், வித்யாகாரகன் புதனும் படிப்பு ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் கல்வியிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்க முடியும். மறதி இல்லாத மனிதராக வாழ்ந்து மகத்தான சாதனைகளைப் படைக்க முடியும்.
கல்வி வளம்பெற ஹயக்ரீவர் வழிபாடு உகந்தது. சரஸ்வதி படம் வைத்து விரதம் இருந்து சகலகலாவல்லி மாலையை இல்லத்து பூஜையறையில் காலை மாலை நேரம் பாடி வழிபாடு செய்யலாம்.
வளமும், நலமும் பெற்று வாழ சீர்காழி சட்டைநாதரை விரதம் இருந்து வழிபட்டு, வந்தால், இழந்த பணம் எந்த வடிவிலாவது திரும்பி வரும். ஜாமீன் கையெழுத்தால் ஏற்பட்ட பண பிரச்சினை தீரும்.
இன்றைய காலகட்டத்தில் பிரபஞ்ச சக்தியை விட, மனிதனை இயக்கும் சக்தியாக இருப்பது பணம். பணம் மனிதனைப் படைத்ததா? மனிதன் பணத்தை படைத்தானா? என்று எண்ணும் அளவிற்கு நாளுக்கு நாள் பணத்தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பணத்தால் சாதிக்க முடியாத செயலே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. 1 ரூபாய் காசாக இருந்தால் கூட உழைத்தால் மட்டுமே கிடைக்கும். பணம் சம்பாதிப்பது எளிதான செயல் அல்ல என்ற நிலை இருக்கும் போது, எதிர்பாராத பண இழப்பு சிலருக்கு வாழ்க்கை பாதையை தடம் புரட்டி விடுகிறது.
இன்று உலகம் முழுவதும் பண இழப்பு பல்வேறு நூதன முறையில் நடந்து வருகிறது. மிகக் குறிப்பாக பணத்தை பன் மடங்காக மாற்றி தருவது, அதாவது ‘ஒரு லட்சம் கொடுத்தால் 3 லட்சம் திரும்ப தருகிறேன்’ என்று கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் படித்து நல்ல அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப் பெரிய தொழில் அதிபர்களும் கூட இருக்கிறார்கள். பணத்தை கொடுத்தவர்கள் அசல் வந்தால் கூட போதும் என்று புலம்பு கிறார்கள். எந்த ஆதாரமும் இன்றி கொடுத்த பணம் எப்படி வரும்? பணத்தை பெருக்கி தருகிறேன் என்று கூறுபவர்கள் பெரும்பான்மையாக அறிமுகமான மிகவும் நம்பிக்கைக்குரிய உறவுகளாகவே இருக்கிறார்கள். உறவுகளை வெறுக்கவும், ஒதுக்கவும் முடியாமல் பணத்தை இழந்தவர்கள் படும் வேதனை அளப்பரியது.
புதிய தொழில் முயற்சிக்காக தொழிலில் பங்குதாரர் ஆக பணம் கொடுத்து ஏமாறுவது, வீடு மற்றும் மனை வாங்க இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது, அரசு உத்தியோகம் வாங்கித் தருகிறேன் என்று கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது என்று பல லட்சங்களைக் கொடுத்து வேதனையில் இருப்பவர்களே அதிகம். எந்த ஆதாரமும் இன்றி பல லட்சம் பணத்தை பறிகொடுத்தவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் நடைப்பிணமாக காலம் தள்ளுகிறார்கள். பெரிய பணம் கொடுக்கும் போது சுய ஜாதக பரிசோதனை மிகவும் அவசியமானதாகும்.
பரிகாரம்
பொதுவாக பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பன்னிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். இந்த பன்னிரெண்டு நட்சத்திரங்களும் இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டதற்கு அந்த நட்சத்திரங்களின் அதி தேவதைகள் உக்கிர சுபாவம் உடையவர்களாக இருப்பதே காரணமாகும்.
ஒருவருக்கு துன்பம் ஏற்படும் போது காலச் சக்கரத்தினால் பக்தர்களை காப்பாற்றக்கூடியவர் பைரவர் என்பதால், அவர் ‘ஆபதுத்தாரண பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஆபதுத்தாரணர்' என்றால் ‘பக்தர்களின் துன்பத்தை அடியோடு அழிப்பவர்’ என்று பொருள்.
வளமும், நலமும் பெற்று வாழ சீர்காழி சட்டைநாதரை விரதம் இருந்து வழிபட்டு, தினமும் மாலை வேளையில் சீர்காழி சட்டைநாதரின் ‘ஆபதுத்தாரணர் (பைரவர்) மாலை’யை பாராயணம் செய்து வந்தால், இழந்த பணம் எந்த வடிவிலாவது திரும்பி வரும். ஜாமீன் கையெழுத்தால் ஏற்பட்ட பண பிரச்சினை தீரும். கொடுத்த பணம் வசூலாகும். உழைப்புக்கு ஏற்ற வருமானமும், திறமைக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும். மேலும் கர்மவினை நீங்கி, காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள் நீங்க, தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள் தீர சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு.
மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனம் ஆகும். திருமாலின் ஆக்ரோஷ ஸ்வரூபமான ஸ்ரீ சுதர்ஸன மூர்த்தியே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர். சுதர்சனர் என்ற சொல்லுக்கு நல்வழி காட்டுபவர், காண்பதற்கு இனியவர் என்று பொருள். ஆனி மாத சித்திரை நட்சத்திர நாளில் சுதர்சன ஜெயந்தி விழா கொண்டாடுவார்கள்.
பெருமாளின் கையில் ஆயுதமாக அலங்கரிக்கும் சக்கரத்தாழ்வார் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். சங்கு, சக்கர, கதாபாணியான பெருமாளின் கரங்களில் எப்போதும் வலக்கையிலேயே இடம் பெற்று இருப்பவர் சக்கரத்தாழ்வார். ஆனால் சில இடங்களில் மாறுபட்டும் அமைந்திருப்பது உண்டு. பெருமாள் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்குத் தனிச் சன்னதி உண்டு. இவர் பதினாறு, முப்பத்திரண்டு என்ற எண்ணிக்கைகளில் கைகளை உடையவர்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் நான்காவது பிரகாரத்தில் தென்மேற்கில் தனியாக சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. சன்னதியின் முன்னால் சதுர வடிவ கருங்கல்லில் சக்கரத்தாழ்வாரின் உருவம் ஒரு பக்கமும், மறுபுறத்தில் யோக நரசிம்மரின் உருவமும் காணப்படுகிறது.
கருவறையில் அறுகோண சக்கரத்தில் சம்பங்கு நிலையிலும், பிரத்ய மூர்த்தியாகவும், மறுபக்கம் யோகநரசிம்மராகவும் காட்சியளிக்கிறார். அரங்க மண்டபத்தில் இவர் 16 கரங்களுடன் வீறுகொண்டெழும் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சக்கரத்தாழ்வார் சந்நதிக்குக் கிழக்கிலும், மேற்கிலும் வாயில்கள் உள்ளன. பொதுவாக சக்கரத்தாழ்வாரின் பின்னாலிருக்கும் நரசிம்ம சுவாமியை வணங்குவதற்கு சின்னதாக ஜன்னல் மட்டுமே அமைத்திருப்பர். ஆனால், இங்கு கிழக்கு வாசலில் வணங்கிவிட்டு, மேற்கு வாசல் வழியாக நரசிம்ம சுவாமியை தரிசிக்க முடிகிறது!
கிழக்கு வாசலிலிருந்து வணங்கும்போது, நிலைக் கண்ணாடி வழியாகவும் நரசிம்ம சுவாமியை வணங்கலாம். தனிக்கோயில் கொண்டுள்ள இம்மாதிரியான சக்கரத்தாழ்வார் சந்நதியை சுமார் நூறு மைல் சுற்றளவில் (ஸ்ரீரங்கம் நீங்கலாக) எங்குமே பார்க்க முடியாது. வலிப்பு நோய், மனநிலை மாறாட்டம், கண் திருஷ்டி மற்றும் பில்லி சூனியம் போன்றவற்றிலிருந்து விடுபட சக்கரத்தாழ்வார் வழிபாடு மிகவும் உகந்தது. அதனால் பொருள் உடையோர் முழுநம்பிக்கையுடன் ‘சுதர்சன ஹோமம்’ நடத்தி நற்கதியடைகிறார்கள்.
வாழ்க்கையில் ஏற்படும் சங்கடங்கள் நீங்க, தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள் தீர சனிக்கிழமைகளில் இவரை விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. இங்குள்ள சக்கரத்தாழ்வார் மிகவும் சக்தி வாய்ந்தவராக உள்ளார். இவர் உள்ள இடத்தைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் இருக்கின்றனர். இத்தகைய அமைப்பு வேறு கோவில்களில் காண முடியாததாகும்.

ரதி மன்மதன் கைகளில் 5 விதமான மலர் கணைகள் உள்ளதால், தொடர்ந்து 5 வியாழக்கிழமை விரதம் இருந்து பூஜையில் முழு சிரத்தையோடு பங்கேற்றால் காரிய சித்தியாகும் என்பது நம்பிக்கை.
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் முதலில் காட்சி தருவது சுமார் 30 ஆடி உயரத்திலான கொடி மரம்! அதனை தரிசித்து, கோயில் நுழைவு வாயிலின் வலதுபுறத்தில் அமைந்திருக்கும் பெருமாளின் படைத்தளபதியான விஷ்வக் சேனரை வழிபட வேண்டும். மூலவரான சுவாமிக்கு அமைக்கப்பட்டுள்ளது போல் அர்த்த மண்டபம், மஹா மண்டபத்துடன் கூடிய தனி விமானம் விஷ்வக் சேனருக்கும் உள்ளது. அருகிலேயே தல விருட்சமான வில்வ மரம் அமைந்துள்ளது.
கோவிலின் இடதுபுறத்தில் நம்மாழ்வார் சந்நிதியும், ஆனந்த விநாயகர் என்ற நாமத்துடன் இரட்டை விநாயகர் சந்நிதியும் அமைந்துள்ளன. இரட்டை விநாயகர், தாடிக்கொம்பு கோயிலுக்கு தனிச் சிறப்பு சேர்க்கிறார்.
கோவிலின் தசாவதார மண்டபத்தில் கலியுகத்தில் பெருமாள் எடுக்கப்போகும் கல்கி அவதாரத்தையும் சேர்த்து 10 அவதார காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. லட்சுமி நரசிம்மர், சந்தான வேணுகோபால சுவாமி ஆகியோர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். ஹயக்ரீவர், சரஸ்வதி, ஸ்ரீராம, லட்சுமணரின் திருமேனிகள் பாங்குற அமைக்கப்பட்டுள்ளன.
திருவோணம் நட்சத்திரத்தன்று ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கல்வி கடவுளாகவும், ஞாபக சக்தி அளிப்பவராகவும் போற்றப்படும் ஹயக்ரீவருக்கு விரதம் இருந்து தேன் அபிஷேகம் செய்தும், ஏலக்காய் மாலை சாத்துப்படி செய்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
மூலவருக்கு நேர் பின்புறத்தில் சர்வ நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்கு, அனைத்து விதமான நோய்களும் நீங்கி ஆரோக்கியமாக வாழ, அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. உள்நோய்களை நீக்குவதற்கு சுக்கு, மிளகு, திப்பிலி, கருப்பட்டி, தேன், நெய் கலந்த லேகியமும், சந்தனாதி தைலமும் தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப் பெற்று வெளிநோய்களுக்கு மருந்தாக வழங்கப்படுகிறது.
மூலவருக்கு பின்புறத்தில் வடமேற்கு திசையில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார் சூடி கொடுத்த சுடர் கொடியாளான ஆண்டாள். திருமணத் தடை நீங்கி, மாங்கல்ய பாக்கியம் கிடைப்பதற்கு பிரதி வியாழக் கிழமைதோறும் ரதி மன்மதன் சிறப்பு பூஜை ஆண்டாள் சந்நிதியில் நடத்தப்படுகிறது. ரதி மன்மதன் கைகளில் 5 விதமான மலர் கணைகள் உள்ளதால், தொடர்ந்து 5 வியாழக்கிழமை விரதம் இருந்து பூஜையில் முழு சிரத்தையோடு பங்கேற்றால் காரிய சித்தியாகும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு கல்யாண சவுந்தரவல்லித் தாயார் சமேத சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் தாயாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தில் தாயாருக்கும், அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்று ஒருநாள் மட்டுமே தாயாரையும், பெருமாளையும் ஒருசேர பிரார்த்திக்க முடியும். இதுதவிர, ஆடி மற்றும் தை வெள்ளிக் கிழமைகளில் தாயாருடன் சேர்ந்து பெருமாளின் ஊஞ்சல் சேவையை தரிசிக்கலாம்.
நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதுரை அருள்மிகு கள்ளழகர் ஆலயத்தில் நடைபெறும் அனைத்து வைபவங்களும் இத் தலத்தில் நடைபெறுகிறது. கள்ளழகருக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக் கடனை சவுந்தரராஜப் பெருமாளுக்கு வழங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
திண்டுக்கல் நகரிலிருந்து சுமார் 15 கி.மீட்டர் தொலைவில் சேலம் செல்லும் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ளது தாடிக்கொம்பு. திண்டுக்கல் நகரிலிருந்து தாடிக்கொம்பு செல்வதற்கு தொடர்ச்சியான பேருந்து வசதி உள்ளது. பஸ் நிறுத்தத்திலிருந்து, கிழக்கு நோக்கி சிறிது தூரம் நடந்தாலே, அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாள் கோயிலைக் காணலாம்.
கோவிலின் இடதுபுறத்தில் நம்மாழ்வார் சந்நிதியும், ஆனந்த விநாயகர் என்ற நாமத்துடன் இரட்டை விநாயகர் சந்நிதியும் அமைந்துள்ளன. இரட்டை விநாயகர், தாடிக்கொம்பு கோயிலுக்கு தனிச் சிறப்பு சேர்க்கிறார்.
கோவிலின் தசாவதார மண்டபத்தில் கலியுகத்தில் பெருமாள் எடுக்கப்போகும் கல்கி அவதாரத்தையும் சேர்த்து 10 அவதார காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. லட்சுமி நரசிம்மர், சந்தான வேணுகோபால சுவாமி ஆகியோர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். ஹயக்ரீவர், சரஸ்வதி, ஸ்ரீராம, லட்சுமணரின் திருமேனிகள் பாங்குற அமைக்கப்பட்டுள்ளன.
திருவோணம் நட்சத்திரத்தன்று ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. கல்வி கடவுளாகவும், ஞாபக சக்தி அளிப்பவராகவும் போற்றப்படும் ஹயக்ரீவருக்கு விரதம் இருந்து தேன் அபிஷேகம் செய்தும், ஏலக்காய் மாலை சாத்துப்படி செய்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
மூலவருக்கு நேர் பின்புறத்தில் சர்வ நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். இங்கு, அனைத்து விதமான நோய்களும் நீங்கி ஆரோக்கியமாக வாழ, அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. உள்நோய்களை நீக்குவதற்கு சுக்கு, மிளகு, திப்பிலி, கருப்பட்டி, தேன், நெய் கலந்த லேகியமும், சந்தனாதி தைலமும் தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப் பெற்று வெளிநோய்களுக்கு மருந்தாக வழங்கப்படுகிறது.
மூலவருக்கு பின்புறத்தில் வடமேற்கு திசையில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறார் சூடி கொடுத்த சுடர் கொடியாளான ஆண்டாள். திருமணத் தடை நீங்கி, மாங்கல்ய பாக்கியம் கிடைப்பதற்கு பிரதி வியாழக் கிழமைதோறும் ரதி மன்மதன் சிறப்பு பூஜை ஆண்டாள் சந்நிதியில் நடத்தப்படுகிறது. ரதி மன்மதன் கைகளில் 5 விதமான மலர் கணைகள் உள்ளதால், தொடர்ந்து 5 வியாழக்கிழமை விரதம் இருந்து பூஜையில் முழு சிரத்தையோடு பங்கேற்றால் காரிய சித்தியாகும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு கல்யாண சவுந்தரவல்லித் தாயார் சமேத சௌந்தரராஜப் பெருமாள் கோவிலில் பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் தாயாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தில் தாயாருக்கும், அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அன்று ஒருநாள் மட்டுமே தாயாரையும், பெருமாளையும் ஒருசேர பிரார்த்திக்க முடியும். இதுதவிர, ஆடி மற்றும் தை வெள்ளிக் கிழமைகளில் தாயாருடன் சேர்ந்து பெருமாளின் ஊஞ்சல் சேவையை தரிசிக்கலாம்.
நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதுரை அருள்மிகு கள்ளழகர் ஆலயத்தில் நடைபெறும் அனைத்து வைபவங்களும் இத் தலத்தில் நடைபெறுகிறது. கள்ளழகருக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக் கடனை சவுந்தரராஜப் பெருமாளுக்கு வழங்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
வெளி பிரகாரத்தின் வடகிழக்கில் சொர்ண ஆகர்ஷண பைரவர் காட்சி அளிக்கிறார். சிவன் கோவில் களில் மட்டுமே காணப்படும் பைரவர் சந்நிதி, தாடிக்கொம்பு பெருமாள் கோயிலில் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியின் போதும், பைரவருக்கு 6 கால சிறப்பு வழிபாடு நடைபெறும்.