என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    இந்த சத்யநாராயண விரதத்தின் மகிமை என்ன? அதை ஒரு கதை மூலமாகத் தெரிந்துகொள்ளலாம்.
    உல்காமுகன் என்று ஒரு மன்னன் இருந்தான். ஒருநாள் அவனுடைய அரண்மனைக்கு ஒரு வணிகன் வந்தான். அங்கே மன்னனும் அவனுடைய மனைவியும் ஏதோ பூஜை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தான். பூஜை முடியும்வரை காத்திருந்த அவன், பிறகு மன்னரிடம் அவர்கள் மேற்கொண்ட பூஜையின் முக்கியத்துவம் என்ன என்று கேட்டான்.

    நாட்டில் சத்யமும் நீதியும் நிலைத்திருப்பதற்காகத்தான் இந்த விரத பூஜையைத் தானும் தன் மனைவியும் மேற்கொண்டிருப்பதாக மன்னன் பதிலளித்தான். அந்த வணிகனுக்கும் தனக்குக் குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்தது. அதை மன்னரிடம் சொன்னான். அவன் தனக்குக் குழந்தை பாக்கியம் அருளவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறும், அவ்வாறு அந்தப் பேற்றினைப் பெறக்கூடிய அவன், சத்யநாராயண விரதம் இருந்து கடவுளுக்கு நன்றி தெரிவிக்குமாறும் மன்னன் சொன்னார்.

    அதை அப்படியே ஏற்றுக்கொண்ட வணிகன் தன் ஊர் திரும்பினான். தனக்குக் குழந்தை பிறக்க வேண்டிக்கொண்டான்.  கடவுளும் அவனுடைய ஏக்கத்தைப் போக்குவதற்காக உரிய காலத்தில் அவன் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகும் பேற்றினை அருளினார். ஆனால், குழந்தை பிறந்த சந்தோஷத்தில் அவன் விழா, கொண்டாட்டம் என்று நாளைக் கடத்தினானே தவிர, மன்னர் அறிவுறுத்தியதுபோல சத்யநாராயண பூஜை செய்து கடவுளுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டான்.

    மன்னரின் அறிவுரையைக் கணவன் சொல்லிக் கேட்டிருந்த மனைவி அவனுக்கு அந்த விரதத்தைப் பற்றி நினைவுபடுத்தத்தான் செய்தாள். ஆனால், அவன்தான் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தான். ஆனாலும் அவள் தொடர்ந்து அவனை நச்சரித்துக்கொண்டே இருந்தாள். நன்றி தெரிவிக்காவிட்டால் கடவுளுக்கு நஷ்டமா என்ன என்றெல்லாம் அவன் யோசிக்க ஆரம்பித்துவிட்டிருந்தான்.

    ஆனால், மனைவியின் தொடர்ந்த வற்புறுத்தலை மேலும் வளர்க்காமல் இருக்கவும், மனைவியை சமாதானப்படுத்தவும் ‘நம்ம பொண்ணுக்குக் கல்யாணம் ஆகட்டும், அப்புறமா சத்யநாராயண பூஜையை வெச்சுக்கலாம்’ என்று அவளிடம் தெரிவித்தான். அவன் சொன்னதுபோல அவர்களுடைய பெண்ணுக்குத் திருமணமும் ஆயிற்று. ஆனால் அதற்குப் பிறகும் அவன் அந்த விரதத்தை மேற்கொள்ளாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே போனான்.

    அவன் மனைவியும் அவனிடம் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்விட்டாள். ஒருசமயம் தன் மருமகனையும் அழைத்துக்கொண்டு வியாபார விஷயமாகப் பிரயாணம் புறப்பட்டுப் போனான் வணிகன். ஆனால், போன ஊரில் அவர்கள் இருவர் மீதும், சந்தேகத்தின் அடிப்படையில் அந்த ஊர் மக்கள் திருட்டுக் குற்றம் சாட்டினார்கள். அரசாங்கக் காவலர்களும் அவர்களைக் கைது செய்து மன்னர் முன்னால் நிறுத்தினார்கள்.

    வணிகன் தன் மருமகனுடன் இங்கே இப்படி குற்றவாளியாகப் பழி சுமத்தப்பட்டு சிறைப்பட்ட சமயத்தில், அவனுடைய சொந்த ஊரில் அவன் வீட்டில் இருந்த பொருட்களெல்லாம் திருடு போய்விட்டன. அடுத்த வேளை சாப்பாட்டுக்குகூட வசதி இல்லாமல் அவனுடைய மனைவியும் மகளும் தவிக்க ஆரம்பித்தார்கள்.

    பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம்... அப்போது அந்த மனைவிக்கு அத்தனை நாள்வரை மனசுக்குள்ளேயே தேங்கியிருந்த, அதுவரை கணவன் தன்னுடன் சேர்ந்து அனுஷ்டிக்காமல்விட்ட சத்யநாராயண பூஜை நினைவுக்கு வந்தது. வீடு வீடாகப் போய் பிச்சை எடுத்த தாயும் மகளும், ஒரு வீட்டில் சத்யநாராயண பூஜை நடத்தப்படுவதைப் பார்த்தார்கள். அதைப் பார்த்தாவது மனநிறைவடையலாம் என்று முடியும்வரை காத்திருந்தார்கள்.

    பூஜை முடிந்ததும் அவர்கள் எதிர்பார்த்தபடியே கொஞ்சம் பிரசாதம் கொடுக்கப்பட்டது. அதை சாப்பிட்டதும், தானும் அந்த பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்று மனைவி தீர்மானித்தாள். கணவன் பக்கத்தில் இல்லாவிட்டாலும் தான் தனியாகவாவது அந்த பூஜையை நிறைவேற்ற முடிவுசெய்தாள். அந்த வீட்டில் தான் பார்த்ததை மனதில் வைத்துகொண்டு மிகவும் எளிமையாக சத்யநாராயண பூஜையைச் செய்து விரதத்தையும் முடித்தாள்.

    அதேசமயம், வெளியூரில் கைதான அவளுடைய கணவனும் மருமகனும் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் தான் அப்படி அவர்களைத் தவறாகக் கருதியதாலும், நடத்தியதாலும் மான நஷ்ட ஈடாக, நிறைய பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினான் அந்த ஊர் மன்னன். அந்த வெகுமதிகளை வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய அந்த வணிகன் நடந்ததையெல்லாம் தன் மனைவி, மகளிடம் சொன்னான்.

    இவர்களும் தாங்கள் செய்த எளிமையான சத்யநாராயண விரதம், பூஜையைப் பற்றிச் சொன்னார்கள். அதைக்கேட்ட பிறகுதான் அந்த பூஜா விரதத்தை மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்தியதற்குத் தனக்கு தண்டனை கிடைத்ததையும், மனைவி தன் சார்பாக அந்த விரதத்தை மேற்கொண்டதால் அந்த தண்டனையிலிருந்து விடுதலையோடு கூடவே வெகுமதியும் கிடைத்ததையும் அவன் புரிந்துகொண்டான். அந்தக் குடும்பத்தில் அப்புறம் வருத்தமோ வேதனையோ தலைகாட்டவே இல்லை.
    வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதம் இருப்பது சிறப்பு. மேலும் வாழ்வில் சில ஒழுங்குகளை கடைபிடித்தால் லட்சுமி என்றும் நிலைத்திருப்பாள்.
    1. ஹோமம்: ஸ்ரீஸக்தம் ஹோமம் செய்ய வேண்டும். ஸ்ரீஸக்தம் என்பது வேதம் என்னும் உத்யானத்தில் பாரிஜாத மரம் போன்றது. வாக்குகளுக்கு அப்பாற்பட்ட லட்சுமியின் பெருமைகளை உணர சாதுக்களுக்கு ஸ்ரீஜுக்தம் கண்களாக அமைந்திருக்கின்றது என்கிறார் மகாகவி வேங்கடாத்ரீ. ஸ்ரீஸக்தத்தில் லட்சுமி தன்னிடம் வந்திருக்க வேண்டும் என்று வேண்டப் பெறுகிறது. இது வேள்வியின் மூலம் மகாலட்சுமியின் அருளைப்பெறும் வழியை காட்டுகிறது. இது செய்ய இயலாதவர்கள் பாராயணம் செய்யலாம்.

    2. பாராயணம்: கனகதாரா தோத்திரம் ஸ்ரீஸ்துதி போன்ற திருவருளும் தேவி யின் பெருமை பேசும் திருநூல் களை தினமும் பாராயணம் செய்து வரலாம். பாராயணம் செய்ய வும் இயலாதவர்கள் ஜபம் செய்யலாம்.

    3. ஜபம்: வில்ல மரத்தடியில் அமர்ந்து ஹக்ரீவ மந்திரத்தை ஜபித்தாலும் திருவருளைப் பெறலாம்.

    4.விரதங்கள்: சிலவிரதங்களை மேற்கொண்டும் மகாலட்சுமியின் அருளை பெறலாம். அவையாவன.
    சம்பத் கவுரி விரதம் மங்ள கவுரி விரதம்
    கஜ கவுரி விரதம் விருத்தகவுரி விரதம்
    லலிதா கவுரி விரதம் துளசி கவுரி விரதம்
    கேதார கவுரி விரதம் பதரிகவுரி விரதம்
    சவுபாக்ய கவுரி விரதம் லாவண்ய கவுரி விரதம்
    சம்பா கவுரி விரதம் வரலட்சுமி விரதம்

    மேலும் லட்சுமிக்கே உரியது வரலட்சுமி விரதம். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதம் இருப்பது சிறப்பு. மேலும் வாழ்வில் சில ஒழுங்குகளை கடைபிடித்தால் லட்சுமி என்றும் நிலைத்திருப்பாள்.

    1. சாப்பிடுவதில் ஒழுங்கு:  சாப்பிடுவதில் ஒழுங்கு வேண்டும். பசித்தபின் புசி, கூழானாலும் குளித்துக்குடி, பல்விளக்காமல் காபி குடிக்காதே, குறிப்பிட்ட நேரத்தில் குறைவாக சாப்பிட வேண்டும்.  தூய உணவை உட்கொள்ள வேண்டும். சாப்பிடு வதற்கு முன் நீர் குடி, உண்டபின் நீர் குடிப் பது நல்லது. சாப்பிடுவதற்கு முன் அதனை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். கிழக்கு நோக்கி உண்டால் நலம் விளையும். காலை உணவை 8 மணிக்குள்ளும், மதிய உணவை 1 மணிக்குள்ளும், இரவு உணவை 7 மணிக்குள்ளும் சாப்பிட வேண்டும். உடன் உறங்க கூடாது. மூன்று வேளை உண்பவன் ரோகி, இரண்டு வேளை உண்பவன் போகி, ஒருவேளை உண்பவன் யோகி.
    வாரம் ஒருமுறையேனும் உண்ணாதிருக்க வேண்டும். அடிக்கடி சாப்பிடுவது அஜிரணத்திற்கு வழி வகுக்கும். சமையல் அறையில் சுத்தம் தேவை. அங்கே அன்னலட்சுமி இருக்கிறாள்.

    2. உடுத்துவதில் ஒழுங்கு: தூய எளிய ஆடைகளை உடுத்த வேண்டும். பெண்கள் பூச்சூடி பொட்டுடன் திகழ வேண்டும். ஆண்கள் உரிய முறையில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொள்ள வேண்டும். வில்வம், தும்பை, தாமரை ஆகியவற்றை ஆடவர், மகளிர் தலையில் சூடக்கூடாது. ஓராடையுடன் பூஜை செய்யக்கூடாது.

    3. பேசுவதில் ஒழுங்கு: தேவை யான விஷயங்களை மட்டும் தெளிவாகப் பேச வேண்டும். அளவுடன், ஆர்வத் துடன், இனி மையாகப் பேச வேண்டும். உண் மையை எண்ணிய பின் பேசுதல் வேண் டும், ஏற்புடைய முறையில் ஐயந் தீறக பேச வேண்டும். ஒத்துக் கொள்ளுமாறு, ஓசை குறைத்துக் பேச வேண் டும். இவை லட்சுமிகரமாகும்.
    4. அன்றாடக் கடமைகள்:

    அன்றாடம் செய்ய வேண்டிய கடமை களை செய்ய வேண்டும். காலையில் எழுதல், கடவுளை தொழுதல், கழிவினைக் கழிதல், பல் துலக்கல், குளித்தல், அனுஷ்டானம் செய்தல், பூஜை செய்தல், வேலையில் ஈடுபடுதல், சந்தியாவந்தனம் செய்தல், திருக்கோயிலுக்கு சென்று வருதல், உலவி வருதல், படித்தல், பாராயணம் செய்தல், கேட்டல், உரிய முறையில் உறங்கல் என நாட்கடமைகள் பல உள்ளன. அவற்றை உரிய நேரத்தில் உரிய முறையில் செய்பவர்களிடம் லட்சுமி என்றும் இருப்பாள்.

    5. வாழ்நாள் கடமைகள்: மனிதனுக்குரிய வாழ்நாள் கடமைகள் பல. அவற்றுள் தென்புலத்தார். தெய்வம், விருந்து, சுற்றம், தான் என்று ஐந்திடத்தும் செய்ய வேண்டிய அறநெறியை வழுவாமல் செய்ய வேண்டும். தென்புலத்தார் என்போர் நம் மூதாதையர். இறந்துவிட்ட அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். தெய்வத்திற்கு உரிய கடன்களை செலுத்த வேண்டும். விருந்தினரை உபசரிக்க வேண்டும். சுற்றத்தினரைப் பேண வேண்டும். தன்னையும் நெறி வழுவாமல் காத்துக் கொள்ள வேண்டும். இந்த ஐந்தும் ஒரு மனிதனின் தலையாய வாழ்நாள் கடமைகள். இவற்றை முறையாக செய்து வந்தால் லட்சுமி நீங்காதிருப்பாள்.

    6. உழைப்பே லட்சுமி நிலைத்திருக்க ஒரே வழி: குந்தி தின்றால் குன்றும் மாளும் என்பது பழமொழி. ஆதலின் உழைக்க வேண்டும். திருமாலின் மார்பிலிருக்கும் லட்சுமி உழைப்பவரின் காலில் இருப்பாள்.
    வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால், வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.
    முருகப்பெருமானுக்கு, வைகாசி விசாகத்திருநாள் ஓர் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் முருகப்பெருமான் அவதரித்ததாக சொல்லப்படுகிறது.

    ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் சென்று முறை யிட்டனர். சிவபெருமான், அசுரர்களுடைய கொடுமையை களைந்து தேவர்களை காத்தருள விரும்பினார். அதன்படி தமது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளைத் தோற்றுவித்தார். அவை தேவர்களால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கையானது, அந்த பொறிகளை சரவணப் பொய்கையிலே கொண்டுபோய் சேர்த்தது.

    சரவணப்பொய்கையில் சேர்ந்த ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாக உருப்பெற்றன. இதுவே ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. அது ஒரு வைகாசி மாதம் விசாகம் நட்சத்திர தினமாகும். எனவே தான் வைகாசி விசாகத்தில் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

    உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு முருகன், சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால் சைவ மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.

    வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால், வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும். பகை விலகும். பாசம் பெருகும். எதிர்ப்புகள் அகலும். அன்றைய தினம் குடை, மோர், பானகம், தயிர்சாதம் போன்றவற்றை தானம் செய்தால், குலம் தழைக்கும் என்பது முன்னோர் களின் வாக்கு.

    அன்றைய தினம் அதிகாலையில் விநாயகப்பெருமானை வழிபட்டு, வீட்டின் பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைக்க வேண்டும். அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கு வைத்து, அதில் ஐந்து வித எண்ணை ஊற்றி, ஐந்துவித புஷ்பம் சமர்ப்பித்து, ஐந்து வகை பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.

    இந்த நன்னாளில் முருகப் பெருமானை நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து வழிபட்டால் நல்லன யாவும் நடை பெறும். பசும் பாலால் அபிஷேகம் செய்தால் ஆயுள் கூடும். பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால், பட்ட கடன்கள் தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

    சர்க்கரையால் அபிஷேகம் செய்தால், சந்தித்தவர்கள் எல்லாம் நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து வழிபட்டால், இனிய சந்ததிகள் பிறக்கும். எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், எம பயம் நீங்கும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்து பார்த்தால், மகிழ்ச்சி தரும் விதத்தில் செல்வநிலை உயரும். திருநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், திக்கட்டும் புகழ் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

    அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், அரசு வழி ஆதரவு நமக்கு கிடைக்கும். சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால், சரும நோய் அத்தனையும் தீர்ந்து போகும். பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால், பார்போற்றும் செல்வாக்கு நமக்கு சேரும். தேன் அபிஷேகம் செய்து பார்த்தால், தித்திக்கும் சங்கீதம் விருத்தி யாகும்.

    குழந்தை பாக்கியத்திற்காக கோவில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அப்படிப் பட்டவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் மழலைப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    முறைப்படி விரதம் அனுசரித்து ஸ்ரீ சக்கரபூஜை செய்பவர் யோகமும், குரு பலனும், கிடைத்து பரம ரகசியங்களை அறிந்து தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெற முடியும்.
    அம்பிகைஅக்னி குண்டத்தில் தோன்றியவள். தேவர்களின் காரியங்களைச் சிறப்பாகச் சாதிப்பதற்காகவே அவள் தோன்றினாள். அக்னி குண்டத்தில் தோன்றிய அன்னையை வழிபடுவதே “சண்டிஹோமம்” என்று அழைக்கப்படுகிறது.

    யாககுண்டத்தில் வளரும் தீயில் உருப்பெற்று எழும் ஸ்ரீ சக்கரத்தின் உச்சியில் உள்ள பிந்துவில் அன்னையானவள் பரமசிவனின் மடியில் எழுந்தருளி இருக்கிறாள். அவளிடமிருந்து அவனையும், அவனிடமிருந்து அவளையும் பிரிக்க இயலாது.

    காமேஸ்வரன் திருமடியில் எழுந்தருளியிருக்கும் அன்னை மஹாத்ரிபுரசுந்தரியானவள் நான்கு கரங்கள் கொண்டருள்கிறாள். அங்குசமும் பாசமும் பின்னிரு கரத்திலும் கரும்பும், பஞ்சபாணங்களும் அவளின் முன்னிரு கரத்திலும் மிளிர்கின்றன.

    இக்காமவல்லியை உபாசிக்கும் மரபே ஸ்ரீ வித்யையாகும். ஸ்ரீ வித்யையின் முக்கிய இடத்தை ஸ்ரீ சக்கர உபாசனை பெறுகிறது. ஸ்ரீ சக்கர மத்தியில் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், ஆகியோரைக் கால்களாகவும், சதாசிவனைப் பலகையாகவும் கொண்ட பஞ்ச பரும்மாசனத்தில் “ஸர்வானந்தமயபீடம்” என்கிற பிந்து வடிவமான மஹா பீடத்தில் காமேஸ்வரனின் இடது மடியில் அன்பு வடிவமான பாசத்தையும், கோபமாகிய அங்குசத்தையும், மனமாகிய கரும்பு வில்லையும், ஐந்து தன்மாத்திரைகளைக் குறிக்கும் பஞ்சபாணங்களையும் ஏந்தியவளாக ஸ்ரீ மத் லலிதா மஹாத்ரிபுர சுந்தரி எழுந்தருளியிருப்பாள் என்று சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன.

    ஆக, அன்னையை இவ்வாறு மனதில் நிலை நிறுத்தி மனச்சுத்தி பேணி, வைதீக மரபின் வண்ணம் அக்னியிலும், ஆகம மரபின் வண்ணம் விக்கிரகத்திலும், தாந்திரீக மரபின் வண்ணம் ஸ்ரீ சக்கரத்திலும் ஆவாகித்து வழிபடுவர். அம்பிகையை ஸ்ரீ சக்கரம் என்ற யந்திரத்தின் நடுவில் பிந்துவில் எழுந்தருளச் செய்து, அவள் பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி அவளைச் சுற்றி ஒவ்வொரு கோணங்களில் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து வழிபடுவதே ஸ்ரீ சக்கர பூஜையாகும்.
    பூஜா மந்திரத்தாலும் ஆசமனத்தாலும் தூய்மை செய்த ஒருவர் குருவழிபாடு புரிந்து சங்கல்பித்துக் கொண்டு, தேகரட்சை செய்து கொள்ள வேண்டும். தேவி எழுந்தருளும் ஸ்ரீ சக்கரத்தினைச் சுற்றிலும் மதில்களாகவும், கோட்டைகளாகவும், நாற்பத்து நான்கு வரிசைகளை பாவனையுடன் பூசிக்க வேண்டும். இதுவே ஸ்ரீ சக்கர பூஜையின் முதல் அம்சமாகச் சொல்லப்பெறுகிறது.

    அடுத்துப் பூஜை செய்பவர் தமது உடலை மந்திரங்களின் மூலம் தெய்வீகமாக்கிக் கொள்ள வேண்டும். விக்னங்களை நீக்கிடும் விநாயகர் வழிபாட்டையாற்ற வேண்டும். இதன் பின், தெய்வீகச் சரீரமெங்கும் தேவர்களை ஆவாஹித்துத் தெய்வமயமாகச் ,சக்தி மயமாகத் தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கிற இடத்தையும் சாதகன் அமைத்துக் கொள்ள வேண்டும்.

    உடம்பில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்கிற ஆறு சக்கரங்களையும் எழுப்பி தேவதைகளை நியாசம் செய்தல் வேண்டும். இவ்வாறு பதினெட்டு வகையான நியாசங்கள் உள்ளன.  இப்படியெல்லாம் தன்னை சுத்தி செய்து தெய்வீகப்படுத்திக் கொண்ட பின்னரே, ஒருவர் ஸ்ரீ சக்கரபூஜையினுள் நுழைய முடியும். ஸ்ரீ சக்கரபூஜையில் பாத்திரங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

    கலசபாத்திரம், சாமான்யார்க்கிய பாத்திரம், குரு பாத்திரம், சுத்தி பாத்திரம், விசேஷார்க்கிய பாத்திரம், அலி பாத்திரம், பலி பாத்திரம், ஆத்மபாத்திரம், இவ்வாறாக அப்பாத்திரங்கள் பல்திறத்தன.. அவை பூஜையின் ஒவ்வொரு நிலைகளில் சாதகனால் பாவிக்கப்பெறுகிறது. உள்ளக் கமலத்தில் உறையும் உன்னதமானவளை.. மானசீகமாக, உள்ளே, அந்தராத்மாவில் பூஜித்துப் பின்னர், சுழு முனை வழியே பிரமரந்திரம் வரை கொண்டு சென்று, உபசாரங்கள் வழங்கி நாசித்துவாரத்தின் வழியே திரிகண்டமுத்திரையில் குவித்து, புஷ்பாஞ்சலியுள் புகுவித்து, புறத்தே அமைந்துள்ள ஸ்ரீ சக்கர மஹாயந்திர மத்தியில் ஆவாஹனம் செய்வர்.

    சதுஷ்ஷஷ்டி உபசாரங்கள் என்ற அறுபத்து நான்கு உபசாரங்களை அன்னைக்கு வழங்கிப் பூஜித்து, அம்பாளைச் சுற்றி எட்டெட்டு வரிசையில் சேரும் ஆவரண சக்திகளை பூஜிப்பர். இது பரிவாரார் அர்ச்சனை என்று குறிப்பிடப்பெறும். நிறைவாக, நவாவர்ணபூஜையும், லலிதா சஹஸ்ரநாம அல்லது திரிசதி நாம அர்ச்சனையும், நைவேத்தியத்துடன் விசேட பூஜையும் செய்வர். அதன் பின் பலிதானம், சுவாஸினீ பூஜை என்பவற்றினையும் ஆற்றுவர்.

    எம் தாயே, நாங்கள் தவறே செய்யினும் பொறுத்தருள வேண்டும். என்று விண்ணப்பம் செய்து பூஜாபலனையும் நிறைவில் அன்னையின் வரதஹஸ்தம் என்ற வரமருளும் இடது திருக்கரத்தில் சமர்ப்பிக்கப்பெற்று ஸ்ரீ சக்கரபூஜை நிறைவு பெறும். ஸ்ரீ சக்கர உபாசனை பயனும், அருளும்.

    ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரவழிபாட்டை சீரமைத்துப் பரவச் செய்தார் என்பது நம்பிக்கை. ஸ்ரீ வித்யோபாசனை என்று போற்றப்படுகிற ஸ்ரீ சக்கர வழிபாடு இன்று சக்தி வழிபாட்டாளர்களிடம் சிறப்புற்று விளங்குகிறது. ஆதிசங்கர சிருங்கேரியில் ஸ்ரீ சக்கரத்தின் மீது சாரதா தேவியைப் பிரதிஷ்டை செய்திருப்பதாகச் சொல்லுவர்.
    காஞ்சியில் காமகோடி பீட வாசினியாக எழுந்தருளியிருக்கிற அன்னை காமவல்லி முன்பாக ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரபூஜை செய்திருக்கிறார்.

    சிதம்பரத்தில் ஆடவல்ல பெருமானின் வலப்பக்கத்தில் சிவசக்கரமும் சக்தி சக்கரமும் இணைந்து சம்மேளனமாக இருக்கிறது. இதனையே சிதம்பர ரகசியமாக வழிபடுகிற சிறப்பும் அமைந்திருக்கிறது. அன்னை சிவகாமி சந்நதியில் சிறப்பான ஸ்ரீ சக்கரம் ஒன்று அமைந்திருப்பதாகவும் குறிப்பிடுவர். குற்றாலத்தில் ஸ்ரீ சக்கரபீடம் இருப்பதாகவும் திருப்பெருந்துறை ஆவுடையார் கோயிலில் அம்பாள் சந்நதியில் ஸ்ரீ சக்கரமே பிரதிஷ்டை செய்யப் பெற்றிருப்பதாகவும் (அம்மைக்கு இங்கு திருவுருவம் இல்லை) திருவானைக்காவில் அகிலாண்டநாயகியின் காதணிகளில் ஸ்ரீ சக்கரம் பொறிக்கப்பெற்றிருப்பதா கவும் குறிப்பிடுவர். இவ்வாறாக, தேவாரப் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவஸ்தலங்களிலும் அன்னையின் ஸ்ரீ சக்கரம் சிறப்புடன் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

    ஸ்ரீ வித்யா உபாசனையை நன்கு நெறிப்படுத்தியவர்களில் ஆதிசங்கரர் வித்யாரண்யர், நீலகண்டர், பாஸ்கரராஜர் ஆகியோர் முதன்மை பெறுகின்றனர். முறைப்படி ஸ்ரீ வித்யையை அனுசரித்து ஸ்ரீ சக்கரபூஜை செய்பவர் யோகமும், குரு பலனும், கிடைத்து பரம ரகசியங்களை அறிந்து தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெற முடியும். பாஸ்கரராஜர் போன்ற முக்கிய ஆச்சார்யார்களின் வரலாற்றை இதற்கு உதாரணமாக சொல்கிறார்கள்.

    திருமண தடை நீக்கும் தலங்களில் மிகவும் சிறப்பான தனித்துவம் கொண்ட தலமாக தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் திகழ்கிறது.
    திருமண தடை நீக்கும் தலங்களில் மிகவும் சிறப்பான தனித்துவம் கொண்ட தலமாக தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் திகழ்கிறது. இங்குள்ள மண்டபத்தில் ரதி மன்மதன் சிலைகள் உள்ளன.

    திருமணமாகாத ஆண்கள் ரதிக்கு 5- வியாழக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து பூஜை செய்யவேண்டும். முதலில் ரதியின் சிற்பத்தினைக் தண்ணீரால் கழுவவேண்டும். பின்னர் மஞ்சளை குழைத்து சிற்பம் முழுவதும் பூசி குங்குமப் பொட்டு வைக்கவேண்டும். இதன்பிறகு ஒரு மாலையை ரதியின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில் போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்யவேண்டும். இதன்பிறகு ரதியின் கழுத்தில் கிடக்கும் மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு மூன்று முறை ரதியை வலம் வரவேண்டும்.

    இதையடுத்து பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும். இந்த பூஜைக்கு 200 கிராம் மஞ்சள் தூள், மாலை 2, ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சூடம், பத்தி, குங்குமம், தேவைப்படும். திருமணமாகாத கன்னி பெண்கள் மன்மதனுக்கு 5- வியாழக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து வழிபாடு செய்யவேண்டும்.

    முதலில் தண்ணீரால் சிற்பத்தினைக் கழுவி, பின்னர் மஞ்சளைக் குழைத்து சிற்பம் முழுவதும் பூசி, குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மாலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில்போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்யவேண்டும். பின்னர் சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு சிற்பத்தினை 3 முறை வலம் வந்து, பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் ஆகும்.

    பூஜைக்கு 200 கிராம் மஞ்சள்தூள் இரண்டு மாலைகள்,ஒரு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சூடம், பத்தி, குங்கும் தேவைப்படும். திருமணம் ஆனவுடன் சவுந்தரராஜப் பொருமளை தம்பதியுடன் வந்து வழிபட வேண்டும். இந்த வழக்கப்படி பூஜை செய்து திருமண வரம் பெற்றவர்கள் ஏராளம்.
    ஒரு தடவை விஷ்ணுபதி புண்ணிய கால விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், பல ஏகாதசி விரதங்களை கடைப்பிடித்த பலனை பெறுகிறார்கள் என சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளன.
    தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி 1, ஆவணி 1, கார்த்திகை 1, மாசி 1-ந்தேதிகளில் பித்ருக்கள் சாப விமோசன புண்ணிய கால பூஜை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    ஒரு வருடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வரக்கூடிய விஷ்ணுபதி புண்ணிய நாட்களில் பெருமாளையும், தாயாரையும் வணங்கி வேண்டுதல்களை செய்வது ஐதீகம். தமிழ் மாதக் கணக்கின்படி வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். அது, ஜோதிட ரீதியாக சூரியனின் ஸ்திர ராசி சஞ்சார காலமாகவும் அமைகிறது.

    மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம். இந்த அவதாரத்தை எடுத்த நோக்கம் நிறைவேறிய பின்னரும் கூட நரசிம்மரின் கோபம் குறையவில்லை. அந்த கோபத்தை சமாளிக்க இயலாத அனைத்துத் தேவர்களும், முனிவர்களும், மகாலட்சுமியைச் சரணடைந்து நரசிம்மரின் உக்ரத்தைத் தணிக்க வேண்டினார்கள்.

    மகாலட்சுமியும் அவர்களது வேண்டுகோளை ஏற்று, உக்ர நரசிம்மர் அருகில் சென்றாள். அவளது நிழல் நரசிம்மர் மீது பட்டவுடன், நரசிம்மரும், மகாலட்சுமியும் இணைந்து, சாந்த சொரூபமான லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தனர். அவ்வாறு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் மகாவிஷ்ணு, காட்சி கொடுத்த புனித நேரமே ‘விஷ்ணுபதி புண்ணிய காலம்’ என்றும் சான்றோர்கள் எடுத்துரைக்கின்றனர்.

    இந்த புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் பெருமாள் ஆலயத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று வழிபடலாம். ஒரு தடவை விஷ்ணுபதி புண்ணிய கால விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், பல ஏகாதசி விரதங்களை கடைப்பிடித்த பலனை பெறுகிறார்கள் என சாஸ்திரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த விரதத்தை கடைப் பிடித்து, வாழ்க்கைக்குத் தேவையானவற்றை பெற்று வளமான வாழ்வை அடைவதுடன், மோட்சத்தையும் பெறலாம்.

    அன்றைய தினம் பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள் கொடி மரத்தை வணங்கி, 27 தடவை பிரகாரத்தை வலம் வர வேண்டும். எண்ணிக்கைக்காக கைகளில் 27 பூக்களை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடி மரத்திற்கு முன் வைக்கலாம்.

    வலம் வந்த பின்னர் மீண்டும் கொடி மரத்தை வணங்கி விட்டு, கோவிலில் அருள்பாலிக்கும் தாயார் மற்றும் பெருமாளை தரிசனம் செய்து வேண்டுதல்களை சமர்ப்பிக்கலாம். இறை சக்தியால் அடுத்து வரக்கூடிய மூன்று விஷ்ணுபதி புண்ணிய காலம் பூர்த்தி அடைவதற்குள்ளாக பக்தர்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    முன்னோர்கள் சாபம் உள்ள பல குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது. எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவுகள் நிம்மதியே இருக்காது. ஒரு சிலருக்கு குடும்பத்துடன் ஆரோக்கியப் பாதிப்புகள் வந்து கொண்டேயிருக்கும்.

    யார் கொடுத்த சாபமோ இப்படி வாழ்க்கை இருக்கின்றதே என்று நம்மில் பலரும் புலம்புவதைக் கேட்டிருப்போம். இதை நிவர்த்தி செய்ய தாடிக்கொம்பு பெருமாள் ஆலயத்தில் நடைபெறும் பித்ருக்கள் சாப விமோசன விஷ்ணுபதி புண்ணிய கால பூஜையில் பங்கேற்பது நலம்.
    கண் நிறைந்த கணவனைப் பெறுவதற்குச் செய்யப்படும் விரதம் இது என்று கிராமத்து பெரியவர்களால் கூறப்படுகிறது. இந்த விரதம் குறித்து அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு ஆடி மாத செவ்வாய்க்கிழமையையும் ஒரு திருநாளாகக் கொண்டாடுவது தென் பாண்டி நாட்டின் தனிச் சிறப்பு. அன்று கன்னிப் பெண்கள் கூடி ஊர்வலமாய் நதிக்கோ, வாய்க்காலுக்கோ, குளத்திற்கோ சென்று தெய்வ வழிபாடு செய்வார்கள்.

    அன்று முழுவதும் நல்ல கணவன் கிடைக்க விரதம் இருப்பார்கள். கண் நிறைந்த கணவனைப் பெறுவதற்குச் செய்யப்படும் விரதம் இது என்று கிராமத்து பெரியவர்களால் கூறப்படுகிறது. பொழுது விடியும் முன்பே மணமாகாத பல பெண்கள் எல்லோரும் தெருக்கோடியில் கூடுவார்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு பனைநார் ஓலைப் பெட்டி அல்லது பிரம்புப் பெட்டி இருக்கும்.அதில் மாற்றுப் பாவாடை, சட்டை, மஞ்சள், குங்குமம், நாவற்பழம், வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவை இருக்கும்.

    இவை தவிர நல்லெண்ணை, திரிநூல், சூடம், தீப்பெட்டியும் இருக்கும் . அவ்வூர் தெய்வங்களை நினைத்து பாடியபடியே நீர் நிலைகள் இருக்கும் இடங்களுக்கு செல்வர். எல்லோரும் ஒன்று கூடிச் செல்லும் போது மிக அழகாயிருக்கும். ஆற்றங்கரையை அடைந்ததும் கன்னிப்பெண்கள் எல்லோரும் நன்றாய்ப் பச்சை மஞ்சளைத் தேய்த்துக் குளித்து விட்டுப் புத்தாடை அணிவார்கள். புருவத்தின் மத்தியிலிருந்து வகிடு வரை பல்வேறு நிறங்களில் குங்குமத் திலகங்கள் இட்டுக் கொள்வார்கள்.

    பாதங்களில் நலுங்கு மஞ்சளைப் பூசிக் கொண்டு பின் அருகிலுள்ள அரசடிப் பிள்ளையாரையோ அல்லது ஆலயத்திலுள்ள மூர்த்தியையோ கண்டு, நல்ல கணவனை அளிக்குமாறு பிரார்த்தித்து வழிபடுவார்கள். பின்பு தாங்கள் கொண்டு வந்த வாசனை மலர்களால் அர்ச்சித்து விட்டு, நாவல் பழத்தை நிவேதனம் செய்வார்கள். கற்பூரம் காட்டி வழிபட்டு நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுப்பார்கள். மீண்டும் எல்லோரும் ஒன்று கூடி வரிசையாய் நின்று பாடலைப் பாடிக் கொண்டு வீடு திரும்புவார்கள்.

    வீட்டிற்கு சென்றதும் மாலையில் பொங்கல் வைத்து வழிபட்டு விரதம் முடித்து சாப்பிடுவார்கள். துருவிய தேங்காயும் சேர்த்துக் கொள்வார்கள். சில வீடுகளில் பலவித வடாம் பொரித்துப் சாப்பிடுவதும் உண்டு. கடைசி ஆடிச் செவ்வாய் அன்று வருடத்திற்கொரு முறை கிராமத்தில் உள்ள வசதி படைத்த வீட்டார்கள் முறைப்படி ஒவ்வொருவராக எல்லாக் குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று அவர்களை தெய்வமாக வழிபட்டு வடை, பாயசத்துடன் விருந்தளிப்பர்.

    சிலர் புதிய பாவாடை, சட்டைகள் வாங்கிக் கொடுப்பதுண்டு. அதனுடன் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், இருபத்தைந்து காசு வைத்து கொடுப்பதும் சில தென்மாவட்ட கிராமங்களில் இன்றும் ஆடிச்செவ்வாய்களில் வழக்கமாக இருந்து வருகிறது.
    வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வதால் கிடைக்கப் பெறும்.
    வளர்பிறை சதுர்த்தியில் வானில் சந்திரனைப் பார்ப்பது அல்லது நான்காம் பிறையைப் பார்ப்பது கேடு விளைவிக்கும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஆனால், பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவே சங்கடஹர சதுர்த்தி ஆகும். இது செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் விசேஷம்.

    வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மஹா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்வதால் கிடைக்கப் பெறும்.

    சங்கடஹர சதுர்த்தி – புராணத் தகவல்கள் :

    1. முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.

    2. சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு(பெயர் அறிய முடியவில்லை) எடுத்துரைத்தார் என்று ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.

    3. ஸ்ரீகிருஷ்ணர் நான்காம் பிறையை கண்டதால் அவருக்கு அபவாதம் ஏற்பட்டது. எனவே அவர் இந்த விரதத்தை மேற்கொண்டு கணேசனை பூஜித்து அதிலிருந்து மீளப் பெற்றார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    4. வனவாசத்தின் போது, கண்ணபிரான் இவ்விரதத்தைப் பற்றி பஞ்ச பாண்டவர்களிடம் எடுத்துரைத்ததாகவும், அதன்படி இதனை அனுஷ்டித்து யுதிஷ்டிரர் நாட்டை மீண்டும் அடைந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    5. இந்த நாளில் தான், விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று, சந்திரன் சாப விமோசனம் அடைந்தான். எனவே இந்நாளில் சந்திரன் பிரதானமாகிறான்.

    6. தமயந்தி நளனை அடைந்தது இந்த விரதத்தின் மகிமையால் தான் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

    7. இந்த விரதத்தை முதன் முதலில் அங்காரகன் (செவ்வாய்) கடைபிடித்து நவகிரக பதவி அடைந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. எனவே தான் செவ்வாய்க்கிழமை வரும் விரதம் விசேஷமாக கருதப்படுகிறது.

    8. மேலும், இந்திரன், இராவணன் போன்றோர் இந்த விரதத்தின் மூலம் பலன் அடைந்திருக்கின்றனர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
    பெண்களுக்கு ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் விரதம்தான் ரம்பா திருதியை. இந்த விரத பூஜைக்கு தீந்திரிணி கௌரிவிரதம் என்று பெயரும் உண்டு.
    செல்வம் அள்ளித்தரும் அட்சய திருதியை எல்லோருக்கும் தெரியும். பெண்களுக்கு அதே ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் விரதம்தான் ரம்பா திருதியை! கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள் ரம்பா திருதியை கொண்டாடப்படுகிறது. தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின்பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனியை வழிபட்ட நன்னாள் இது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

    கார்த்திகை மாதத்தில் அமாவாசைக்கு இரண்டாவது நாள்தான் துவிதியை திதி. இந்த நன்னாளில் மஞ்சளால் அம்பிகையை பிரதிமையாக (பொம்மையாக) செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை. மஞ்சள்கொண்டு கௌரிதேவியை செய்து வணங்கியதால், இந்த விரத பூஜைக்கு (திந்திரிணி- மஞ்சள்) தீந்திரிணி கௌரிவிரதம் என்று பெயர் ஏற்பட்டது. முறையாக ரம்பை செய்த பூஜையை ஏற்றுக் கொண்ட கௌரிதேவி, மறுநாள் தங்க நிறத்தில் ஸ்வர்ணதேவியாக அவளுக்குக் காட்சி தந்தாள்.

    மேலும், ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த தேவி, மீண்டும் தேவலோகத்தில் முதல் அழகியாகும்படி அவளுக்கு அருள்புரிந்ததோடு, அவளது முக அழகையும் ஐஸ்வரியங்களையும் இன்னும் அதிகமாக்கி அருளினாள். தவிர, 'நீ மேற்கொண்ட இந்த விரத நாள், இன்று முதல் உனது பெயரால் 'ரம்பா திருதியை’ என்று பெண்கள் கொண்டாடும் தங்கத் திருவிழாவாக ஆகட்டும்'' என்றும் ஆசீர்வதித்தாள்.

    கௌரி அன்னையாக பார்வதிதேவி காட்சி தந்தபோது, அழகுக்கு உரியவனாம் கார்த்திகேயனை மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாக- பொன்மேனியளாகக் காட்சி தந்தாள். இதன் காரணமாகத்தான், எங்கெல்லாம் காத்யாயனி கோயில்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் கௌரிக்கும் சந்நிதிகள் இருக்கும். பெண்கள் புதிதாக பொன் நகை வாங்கியதும், அதை இந்த அம்மன் சந்நிதியில் வைத்து ஸ்வர்ணபூஜை செய்து நகைகளைப் பெற்று அணியும் வழக்கம் உள்ளது.

    ஆக, அழகும் ஐஸ்வரியங்களும் அள்ளித் தரும் நன்னாள்தான் ரம்பா திருதியை. அன்றைய தினம் ரம்பாதேவி யந்திரத்தையோ, கௌரிதேவியாம் காத்யாயனி யந்திர வடிவையோ பூஜையறையில் வைத்து வழிபட்டால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். வடஇந்தியாவில் ரம்பாதேவி யந்திரம் வைத்து அன்றைய தினம் விசேஷ பூஜைகள் செய்வர்.


    திருமுறைக்காடு என்ற சிறப்புப் பெற்ற இந்தத் தலம், குன்றத்தூர் முருகன் கோயிலில் இருந்து திருநீர்மலைக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. ரம்பா திருதியை நன்னாளில் நீங்களும் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்களேன்!
    விரதம் இருந்து திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருத்தலத்தில் உள்ள புதன் பகவானுக்கு தீபமேற்றி வழிபட்ட பின்பு, அடுத்து வரும் கால கட்டங்களில் உங்களுக்கு நடக்கப்போகும் புதன் திசையானது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
    கல்விக்கும், தொழிலுக்கும், அதிபதியாக இருக்கும் புதன் பகவானுக்கு, நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் தனி ஆலயம் உண்டு. இந்தக் கோவிலில் இருக்கும் ருத்ர பாதத்தினை விரதம் இருந்து வழிபட்டால் 21 தலைமுறையினர் செய்த பாவத்தை போக்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறது சாஸ்திரம்.

    மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் புதன் திசை என்பது 17 ஆண்டுகள் வரும். இதனால்தான் திருவெண்காட்டில் இருக்கும் புதன் பகவானுக்கு, 17 அகல் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த முறைப்படி விரதம் இருந்து புதன் பகவானுக்கு இத்திருத்தலத்தில் தீபமேற்றி வழிபட்ட பின்பு, அடுத்து வரும் கால கட்டங்களில் உங்களுக்கு நடக்கப்போகும் புதன் திசையானது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றாலும், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும், கடன் தொல்லை, தீராத நோய் தீர, குழந்தை வரம் பெற, திருமண யோகம் வர, தீராத பாவங்கள் தீர இத்திருத்தலத்தில் இருக்கும் புதன் பகவானுக்கு 17 தீபங்களை ஏற்றினாலே போதும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

    சிலபேருக்கு இத்திருத்தலத்திற்கு சென்று புதன் பகவானுக்கு தீபம் ஏற்றினால் யோகம் வரும் என்று தெரிந்திருக்கும். இதைத் தெரிந்து, இந்த கோவிலுக்கு செல்பவர்கள், நேராக புதன் பகவானை தரிசனம் செய்ய சென்று விடுவார்கள். ஆனால், இது மிகப்பெரிய தவறு. முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அதன் பின்பு மூலவரையும் பின்பு அம்பாள், அகோரமூர்த்தி, இறுதியாகத் தான் புதன் பகவானை வழிபட்டு 17 தீபங்கள் ஏற்றி மனதார பிரார்த்தனை செய்து கொண்டு செல்ல வேண்டும்.
    சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.
    சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும்.

    இந்த எல்லா தோஷத்தைப்போக்கும் பெருமான் திரு முருகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு
    கெடுதலும் அண்டாது.

    வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் கந்தசஷ்டி கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும்.

    சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.
    சிவபெருமனை விரதம் இருந்து வழிபாடு செய்ய உகந்த காலம் எது? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம். பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர். பிரதோஷ காலத்தில், சகல தேவர்களும், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின்றனர்.

    அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசியமில்லை. பிரதோஷ காலங்களில் விரதம் இருந்து சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும்; சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்; சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிப்பதால், இந்திரனுக்கு சமமான புகழ் கிட்டும்; பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் செய்யப்படும் எந்த கைங்கர்யமும் பலவாகப் பெருகி, அளவற்ற பலனை கொடுக்கும்.

    பிரதோஷ காலத்தில் சிவன் கோவில் வழியாகப் போனான் ஒருவன். போகும் போது வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டே போனான். வெற்றிலை பாக்கு போட்ட பிறகு, விரலில் கொஞ்சம் சுண்ணாம்பு இருந்தது. அதை வழியிலிருந்த சிவன் கோவில் சுவரில் தடவி விட்டுப் போனான். ஆனால், அதுவே பெரும் புண்ணியமாகி விட்டது. இவன் தடவிய சுண்ணாம்பு, மதில் சுவரில் இருந்த ஒரு சிறிய பள்ளத்தை அடைத்து விட்டது.

    உடனே, சிவன் கோவிலில், கைங்கரியம் செய்த புண்ணியம் இவனுக்கு சேர்ந்து விட்டது. இப்படியாக சிவ கைங்கர்யம், வழிபாடு எல்லாவற்றுக்குமே புண்ணியம் சொல்லப்படுகிறது. சிவன் கோவிலில், “சோம சூத்ர பிரதட்சணம்’ என்று ஒன்று உண்டு. இது, கொஞ்சம் சிக்கலானது. புரிந்து கொள்வது கூட சிரமம்; புரிந்து செய்தால் புண்ணியம். பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வது புண்ணியம்.
    ×