search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயில்
    X
    தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயில்

    விரதம் இருந்து வழிபாடு செய்தால் திருமண தடை நீக்கும் கோவில்

    திருமண தடை நீக்கும் தலங்களில் மிகவும் சிறப்பான தனித்துவம் கொண்ட தலமாக தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் திகழ்கிறது.
    திருமண தடை நீக்கும் தலங்களில் மிகவும் சிறப்பான தனித்துவம் கொண்ட தலமாக தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில் திகழ்கிறது. இங்குள்ள மண்டபத்தில் ரதி மன்மதன் சிலைகள் உள்ளன.

    திருமணமாகாத ஆண்கள் ரதிக்கு 5- வியாழக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து பூஜை செய்யவேண்டும். முதலில் ரதியின் சிற்பத்தினைக் தண்ணீரால் கழுவவேண்டும். பின்னர் மஞ்சளை குழைத்து சிற்பம் முழுவதும் பூசி குங்குமப் பொட்டு வைக்கவேண்டும். இதன்பிறகு ஒரு மாலையை ரதியின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில் போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்யவேண்டும். இதன்பிறகு ரதியின் கழுத்தில் கிடக்கும் மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு மூன்று முறை ரதியை வலம் வரவேண்டும்.

    இதையடுத்து பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் ஆகும். இந்த பூஜைக்கு 200 கிராம் மஞ்சள் தூள், மாலை 2, ஒரு தேங்காய், 2 வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சூடம், பத்தி, குங்குமம், தேவைப்படும். திருமணமாகாத கன்னி பெண்கள் மன்மதனுக்கு 5- வியாழக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து வழிபாடு செய்யவேண்டும்.

    முதலில் தண்ணீரால் சிற்பத்தினைக் கழுவி, பின்னர் மஞ்சளைக் குழைத்து சிற்பம் முழுவதும் பூசி, குங்குமப் பொட்டு வைத்துப் பின்பு, ஒரு மாலையைச் சிற்பத்தின் கழுத்திலும் மற்றொரு மாலையைக் கையில்போட்டும்,தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து பூஜை செய்யவேண்டும். பின்னர் சிற்பத்தின் கையில் உள்ள மாலையை பூஜை செய்பவர் தன் கழுத்தில்போட்டுக் கொண்டு சிற்பத்தினை 3 முறை வலம் வந்து, பெருமாள் சன்னதியில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் ஆகும்.

    பூஜைக்கு 200 கிராம் மஞ்சள்தூள் இரண்டு மாலைகள்,ஒரு தேங்காய், இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சூடம், பத்தி, குங்கும் தேவைப்படும். திருமணம் ஆனவுடன் சவுந்தரராஜப் பொருமளை தம்பதியுடன் வந்து வழிபட வேண்டும். இந்த வழக்கப்படி பூஜை செய்து திருமண வரம் பெற்றவர்கள் ஏராளம்.
    Next Story
    ×