search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரம்பா திருதியை
    X
    ரம்பா திருதியை

    பெண்களுக்கு ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் தீந்திரிணி கௌரிவிரதம்

    பெண்களுக்கு ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் விரதம்தான் ரம்பா திருதியை. இந்த விரத பூஜைக்கு தீந்திரிணி கௌரிவிரதம் என்று பெயரும் உண்டு.
    செல்வம் அள்ளித்தரும் அட்சய திருதியை எல்லோருக்கும் தெரியும். பெண்களுக்கு அதே ஐஸ்வரியத்தோடு பேரழகையும் அள்ளித் தரும் விரதம்தான் ரம்பா திருதியை! கார்த்திகை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாம் நாள் ரம்பா திருதியை கொண்டாடப்படுகிறது. தேவலோகப் பேரழகியான ரம்பை, தன் அழகும் ஐஸ்வரியமும் கூடுவதற்காக இந்திரன் அறிவுரையின்பேரில் கௌரிதேவியாகிய காத்யாயனியை வழிபட்ட நன்னாள் இது என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

    கார்த்திகை மாதத்தில் அமாவாசைக்கு இரண்டாவது நாள்தான் துவிதியை திதி. இந்த நன்னாளில் மஞ்சளால் அம்பிகையை பிரதிமையாக (பொம்மையாக) செய்து, விரதம் இருந்து பூஜை செய்தாள் ரம்பை. மஞ்சள்கொண்டு கௌரிதேவியை செய்து வணங்கியதால், இந்த விரத பூஜைக்கு (திந்திரிணி- மஞ்சள்) தீந்திரிணி கௌரிவிரதம் என்று பெயர் ஏற்பட்டது. முறையாக ரம்பை செய்த பூஜையை ஏற்றுக் கொண்ட கௌரிதேவி, மறுநாள் தங்க நிறத்தில் ஸ்வர்ணதேவியாக அவளுக்குக் காட்சி தந்தாள்.

    மேலும், ரம்பையின் பூஜையில் மகிழ்ந்த தேவி, மீண்டும் தேவலோகத்தில் முதல் அழகியாகும்படி அவளுக்கு அருள்புரிந்ததோடு, அவளது முக அழகையும் ஐஸ்வரியங்களையும் இன்னும் அதிகமாக்கி அருளினாள். தவிர, 'நீ மேற்கொண்ட இந்த விரத நாள், இன்று முதல் உனது பெயரால் 'ரம்பா திருதியை’ என்று பெண்கள் கொண்டாடும் தங்கத் திருவிழாவாக ஆகட்டும்'' என்றும் ஆசீர்வதித்தாள்.

    கௌரி அன்னையாக பார்வதிதேவி காட்சி தந்தபோது, அழகுக்கு உரியவனாம் கார்த்திகேயனை மடியில் வைத்தபடி கார்த்தியாயினியாக- பொன்மேனியளாகக் காட்சி தந்தாள். இதன் காரணமாகத்தான், எங்கெல்லாம் காத்யாயனி கோயில்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் கௌரிக்கும் சந்நிதிகள் இருக்கும். பெண்கள் புதிதாக பொன் நகை வாங்கியதும், அதை இந்த அம்மன் சந்நிதியில் வைத்து ஸ்வர்ணபூஜை செய்து நகைகளைப் பெற்று அணியும் வழக்கம் உள்ளது.

    ஆக, அழகும் ஐஸ்வரியங்களும் அள்ளித் தரும் நன்னாள்தான் ரம்பா திருதியை. அன்றைய தினம் ரம்பாதேவி யந்திரத்தையோ, கௌரிதேவியாம் காத்யாயனி யந்திர வடிவையோ பூஜையறையில் வைத்து வழிபட்டால் சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். வடஇந்தியாவில் ரம்பாதேவி யந்திரம் வைத்து அன்றைய தினம் விசேஷ பூஜைகள் செய்வர்.


    திருமுறைக்காடு என்ற சிறப்புப் பெற்ற இந்தத் தலம், குன்றத்தூர் முருகன் கோயிலில் இருந்து திருநீர்மலைக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. ரம்பா திருதியை நன்னாளில் நீங்களும் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்களேன்!
    Next Story
    ×