என் மலர்
முக்கிய விரதங்கள்
நமது கோரிக்கைகள் இனிது நிறைவேற உதவும் வள்ளலார் கூறிய செவ்வாய்க்கிழமை விரதத்தை பற்றியும், அதனை அனுஷ்டிக்கும் முறை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
“திங்கட்கிழமை இரவில் பலகாரங்கள் செய்து செவ்வாய்க்கிழமை அதிகாலையில் எழுந்து, நெற்றியில் திருநீறு அணிந்து நல்ல நினைப்புடன் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் காலைக்கடன்களை முடித்துவிட்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த தண்ணீரில் குளித்துவிட்டு விபூதியை தண்ணீரில் குழைத்து உடலெங்கும் பூசிக்கொண்டு, கணபதியை நினைத்து, பின்பு ஸ்ரீ பஞ்சாஷரத்தை 108 முறை ஜபித்து, பின்பு சிவனை நினைத்து தியானம் செய்ய வேண்டும் செய்துவிட்டு, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஒம் சிவ சூரியாய நம என்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து அதன் பின்பு அவ்விடத்தில் தானே நின்று கொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையல்நாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக் கொண்டு,
பின்பு ஓம் வயித்தியநாதாய நம என்ற மந்திரத்தை 108 அல்லது, 1008 இரண்டில் எந்த அளவாவது ஜபித்து, சிறிது மிளகை துணியில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று பூஜை செய்யுமிடத்தில் வைத்துவிட்டு, சிவனடியார் ஒருவருக்கு உபசாரத்தொடு செய்தவற்றை படைத்து, பின்பு பலகாரங்களோடு பச்சரிசிப் பொங்கல் முதலான உணவை அரையாகாரம் உட்கொண்டு, அன்று மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று சிவதரிசனம் செய்து, பாய், தலையணை இல்லாமல் மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்திரம் கேட்கவேண்டும் அல்லது பாடல்கள் பாடலாம். சிவனை நினைத்து தியானம் செய்யலாம். வெற்றிலைபாக்கு போடுவது, பகலில் தூங்குவதை விட்டு மிகவும் சுத்தமான முறையில் இவ்விரதம் கடைபிடிக்க வேண்டும்.
-என்று வள்ளலார் குறிப்பிட்டிருக்கிறார்.
இதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும்.
புரட்டாசி மாத அமாவாசைக்கு பின் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரையான ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவாகும். இந்த நவராத்திரியானது, 17-10-2020 (சனிக்கிழமை) அன்று தொடங்கி, 25-10-2020 (ஞாயிற்றுக்கிழமை) வரை உள்ளது. இந்த ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகியோரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கை (பார்வதி) வழிபாடு. இடையில் மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. முப்பெரும் தேவிகள் முக்கியத்துவம் பெறும் விழாவாக இந்த நவராத்திரி விழா உள்ளது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தினம் ஒரு சக்தியாக நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால், வளமான வாழ்வு நம்மை வந்தடையும்.
முதல் நாள்:
சக்தியை, முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். இவள் தெத்துப்பல் திருவாயும், முண்ட மாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்தவள் என்பதால் சாமுண்டா எனவும் அழைப்பர். கோபம் கொண்டவளாக காட்சியளிக்கும் இந்த அன்னையின் கோபம் மற்றவர்களை திருத்தி நல்வழிப் படுத்தும். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.
இரண்டாம் நாள்:
அன்னையை வராகி தேவியாக வழிபட வேண்டும். வராகி (பன்றி) முகமும் தெத்துப்பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்துப்பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம். தயிர் சாதம் நிவேதனம் சிறந்தது.
மூன்றாம் நாள்:
சக்தித் தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே ஆகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளது அருட்பார்வை கட்டாயம் வேண்டும். மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள்புரிபவளும் இந்த அன்னையே ஆவாள். வெண் பொங்கலை நைவேத்தியம் செய்யலாம்.
நான்காம் நாள்:
சக்தித் தாயை, வைஷ்ணவி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை தன் கையில் கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன் ஆகும். எலுமிச்சை சாதத்தை அன்னைக்கு நைவேத்தியமாக படைப்பது நலம் தரும்.
ஐந்தாம் நாள்:
அன்னையை மகேஸ்வரி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற இந்த அன்னையின் அருள் அவசியம் வேண்டும். புளியோதரை நிவேதனம் சிறந்தது.
ஆறாவது நாள்:
அன்னையை கவுமாரி தேவியாக நினைத்து வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் கையில் ஏந்தியவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி விடுபவள். வீரத்தை தருபவள். தேங்காய் சாதம் படைத்து வழிபட வேண்டும்.
ஏழாம் நாள்:
அன்னையை மகாலட்சுமியாக கருதி வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும். கல்கண்டு சாதத்தை நிவேதனம் செய்யுங்கள்.
எட்டாம் நாள்:
அன்று அன்னையை, நரசிம்கி ஆக வழிபாடு செய்ய வேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.
ஒன்பதாம் நாள்:
அன்னையை பிராக்மி ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்விச் செல்வம் பெற இந்த அன்னையின் அருள் மிகவும் அவசியமாகும். நைவேத்தியமாக அக்கார வடிசலை படைக்கலாம்.

ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக அன்னையை விரதம் இருந்து வழிபடக்கூடிய ஒரு விழாவாக, நவராத்திரி விழா இருப்பதே காரணம். புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானுக்கு ஒரு ராத்திரி ‘சிவராத்திரி’. அம்பாளுக்கு ஒரு ராத்திரி ‘நவராத்திரி’ என்பது ஆன்றோர்கள் வாக்கு. அம்மனை வழிபடுவதற்கு என்று பல விழாக்கள் இருந்தாலும், நவராத்திரி அதில் இருந்து வேறுபட்டும், முக்கியத்துவம் பெற்றும் விளங்குகிறது. இதற்கு ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக அன்னையை விரதம் இருந்து வழிபடக்கூடிய ஒரு விழாவாக, நவராத்திரி விழா இருப்பதே காரணம். புரட்டாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 10-வது நாளான தசமி அன்று ‘விஜயதசமி’ வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றிபெற்றார். பெரும்பாலும் கோவில்களில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். அவற்றை பிரம்மோற்சவ விழா என்று அழைப்பார்கள். அதுபோல் வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத்திரி விழா, வீடுகளில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் என்று கூறினால் அது மிகையாகாது.
சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங்களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண்டாடும் தனிச்சிறப்பு பெற்றது.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும். முதல் மூன்று நாட்களில் துர்க்கையை மகேசுவரி, கவுமாரி, வராகியாகவும், இடை மூன்று தினங்களில் லட்சுமிதேவியை மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியை, சரஸ்வதி, நரசிம்கி, சாமுண்டியாகவும் முறையாக விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும்.
லட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெரு மாளை அடையும் பொருட்டு, ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரணமாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதாகவும் கூற்று உள்ளது. இந்தியா மட்டுமின்றி இலங்கை உள்பட ஆசிய நாடுகள் மற்றும் உலகில் உள்ள மக்களால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.
நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது. இதன் தத்துவம் தாமச குணம், ரஜோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களையும் குறிக்கும். முதல் இரண்டு குணங்களைக் கடந்து சத்துவ குணத்தை அடையும் வழியையே, இந்த நவராத்திரி கொலுப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தான் என்று புராணம் கூறுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் கூறுகிறார்கள். இவ்விரதம் இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள்.
இந்த விரதம் பெண்களுக்கே உரியதாகும். அனைத்து வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்களும் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயனாகும். அதே போல் இவ்விரதத்தை மேற்கொள்ளும் கன்னிப் பெண்கள் திருமணப் பயனையும், திருமணமான பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள். மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.

புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை நினைத்து வழிபடுவதும் நன்மை பயக்கும் காரியமாகும்.
புண்ணியம் நிறைந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதத்தை வழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும், மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கு ஏதுவான மாதமாகவும் பக்தர்கள் சொல்கிறார்கள். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது, பெரும்பேறு தரும் என்பார்கள். எனவே புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் ஒன்றையும் தவறவிடாமல் பெருமாளை வழிபட்டு வருவது சிறப்பானதாகும்.
அதேபோல், புரட்டாசி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை நினைத்து வழிபடுவதும் நன்மை பயக்கும் காரியமாகும். இந்த நாளில் சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து, லட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும் விசேஷமானது. நீண்டகால கடன் தொல்லையில் இருந்து விடுபட மகாலட்சுமி வழிபாடு வழிகாட்டும்.
புரட்டாசி வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபடுவதால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும், விரதம் இருந்து லட்சுமிதேவியை வழிபடுவதோடு, சில விஷயங்களையும் பின்பற்றினால் துன்பங்கள் விலகி லட்சுமியின் அருள்கடாட்சம் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் பணமும், தானியமும் குறையாத அருளைப் பெறலாம்.
வெள்ளிக்கிழமைகளில் லட்சுமிதேவிக்கு கற்பூர தீபாராதனைக் காட்டுவதோடு, வீடு முழுமைக்கும் தீபாராதனைக் காட்டுங்கள். இதை செய்வதன் மூலம், நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் வருவது மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும்.
வெள்ளிக்கிழமைகளில் தேன் கலந்த பாயசம் படைத்து வணங்கி, குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் பணப் பஞ்சம் தீரும்.
வெள்ளிக்கிழமை மாலை வேளையில், லட்சுமி ஸ்தோத்திரத்தை ஓதுவது சிறந்தது. மந்திரத்தை படிக்கும்போது வீட்டின் கதவை திறந்து வைத்திருக்க வேண்டும். விஷ்ணு புராணத்தின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை லட்சுமி ஸ்தோத்திரத்தை பாராயணம் செய் வது மிகச்சிறந்த பலனை தரவல்லது.
வெள்ளிக்கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். எறும்புகளுக்கு இனிப்பு பொருட்களை கொடுக்கலாம்.
வெள்ளிக்கிழமையன்று புளிப்பு சுவை கொண்ட பழங்கள், ஊறுகாய் போன்ற உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது. அதேசமயம் வெள்ளிக்கிழமை இனிப்பு சுவை கொண்ட பொருட்கள், பதார்த்தங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நாள் ஆகும். மேலும், லட்சுமி தேவியை வணங்கும்போது புளிப்பு சுவை கொண்ட உணவை பிரசாதமாக படைக்கக்கூடாது.
வெள்ளிக்கிழமை அன்று மறந்தும் கூட யாருக்கும் கடன் கொடுக்கக்கூடாது. வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்ட பணம் திரும்ப வருவது கடினம் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை அன்று கடன் கொடுப்பதால் உறவுகளிலும் கசப்பும், விரிசலும் ஏற்படக்கூடும்.

முன்னோர்களை திருப்தி செய்ய ஒவ்வொரு அமாவாசை அன்றும் விரதம் இருந்து தர்ப்பணமும், மற்றும் அவர்களின் இறந்த தினத்தன்று திதி கொடுப்பதும் செய்து வரப்படுகிறது.
மறைந்த முன்னோர்களின் ஆசி நமக்கு என்றென்றும் தேவை என்பது ஐதீகம். அதனால் தான் முன்னோர்களை திருப்தி செய்ய ஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்ப்பணமும், மற்றும் அவர்களின் இறந்த தினத்தன்று திதி கொடுப்பதும் செய்து வரப்படுகிறது. அமாவாசை மாதா மாதம் வந்தாலும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்றும் தர்ப்பணம் செய்ய மற்றும் திதி கொடுக்க மிகவும் உகந்த நாட்களாகும். இந்த மூன்றிலும் மகாளய அமாவாசை எனப்படும் தை அமாவாசை மிக உயர்ந்த தினமாகும்.
மகாளயம் என்பது ஆவணி மாத பவுர்ணமிக்கு அடுத்த நாள் முதல் புரட்டாசி அமாவாசைக்கு முதல் நாள் வரை வரும் இரு வார காலம் ஆகும். அந்த நாட்களில் முன்னோர் மறைந்த திதி அன்று தர்ப்பணம், திதி கொடுத்தல் ஆகியவை செய்வது மிகவும் நல்லது. இந்த மகாளய பட்சத்தில் முன்னோர்கள் பூவுலகில் சஞ்சரிப்பதாக ஐதீகம் உள்ளது. அதனால் அந்த நாட்களில் திதி கொடுப்பது அவசியம்.
அப்படி திதி கொடுக்க முடியாதவர்கள் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து திதி கொடுக்கலாம். முடிந்தால் ஏதேனும் புனித நதியில் நீராடி முன்னோர் கடமையை முடிப்பது நல்லது. புரட்டாசி அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய உகந்த புண்ணிய தலங்கள் கங்கை நதிக்கரை, ராமேஸ்வரம், பம்பை நதிக்கரை மற்றும் பல இடங்கள். முடியாதவர்கள் உள்ளூரில் உள்ள இடங்களிலும் மூத்தோர் கடமைகளை முடிக்கலாம்.
அவரவர் வசதிக்கேற்ப ஏழைகளுக்கு முடிந்த உதவியை செய்வது மிகவும் நல்லதாகும். மற்றவை உங்கள் வீட்டு வழக்கப்படி செய்யலாம்.

புதன் கிழமையை... பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்பேர்ப்பட்ட புதன்கிழமை நன்னாளில், பெருமாளை விரதம் இருந்து சேவியுங்கள். பெருமாளின் பேரருளால், பொன்னும் பொருளும் கிடைக்கப் பெற்று இனிதே வாழ்வீர்கள்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள். இந்த நன்னாளில், விரதம் இருந்து பெருமாளை கோவிலுக்குச் சென்று வழிபடுங்கள். குறைவின்றி வாழவைப்பான் கோவிந்தன்.
புண்ணியம் நிறைந்த மாதம் என்று புரட்டாசி மாதத்தைச் சொல்லுவார்கள். புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம். விரதம் இருந்து பெருமாள் கோவில்களுக்குச் சென்று பெருமாளை தரிசிப்பது இந்த மாதத்தில் ரொம்பவே விசேஷம்.
புரட்டாசி மாதத்தில்தான் பெருமாள் கோவில்கள் பலவற்றிலும் பிரம்மோத்ஸவ விழாக்கள் விமரிசையாக நடைபெறும். பத்துநாள் நடைபெறும் விழாவில், தினமும் பெருமாளுக்கு ஒவ்வொரு விதமான அலங்காரங்கள் நடைபெறும். தினமும் திருவீதியுலாக்கள் நடைபெறும்.
திருப்பதியிலும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோத்ஸவம் நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சி ஸ்ரீரங்கம், குணசீலம் பிரசன்னவேங்கடாசலபதி முதலான ஆலயங்களில் விழாக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
பொதுவாகவே, புதன் கிழமை என்பது விரதம் இருந்து பெருமாளை வழிபடுவதற்கு உரிய நாள். மகாவிஷ்ணுவுக்கு உரிய மகத்தான நாள்.
புதன்கிழமையும் சனிக்கிழமையும் பெருமாளை விரதம் இருந்து வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாட்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். புரட்டாசி மாதத்தில், இந்த நாட்களில் ஏதேனும் ஒருநாளில், அவசியம் பெருமாள் கோவிலுக்குச் செல்வதும் பெருமாளை விரதம் இருந்து வழிபாடு செய்வதும் பன்மடங்கு பலன்களைத் தந்தருளக்கூடியது.
குறிப்பாக, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவது, இல்லத்தில் ஐஸ்வரியத்தைத் தந்தருளும் என்பதாக ஐதீகம். அதேபோல், விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லிப் பாராயணம் செய்வதும் ‘ஓம் நமோ நாராயணாய;’ என்று திருமாலின் திருநாம மந்திரத்தைச் சொல்லி ஜபிப்பதும் மனதில் குழப்பமற்ற நிலையில் இருந்து மீட்டெடுக்கும். நிம்மதியையும் மனத்தெளிவையும் கொடுக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பஞ்சமியும் செவ்வாயும் இணைந்த நாளில், வாராகி தேவியை விரதம் இருந்து வழிபடுங்கள். வளமும் நலமும் பலமும் அருளும் தந்து காப்பாள் தேவி.
செவ்வாய்க்கிழமை என்பது அம்பாளுக்கு உரிய நாள். முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான நாள். இந்தநாளில் அம்பாள் வழிபாடு அருள் சேர்க்கும். பொருள் கொடுக்கும். தீயதை அழிக்கும். நல்லனவற்றையெல்லாம் வழங்கும் என்பார்கள். அதனால்தான், செவ்வாய்க்கிழமைகளில், அம்மன் கோயில்களுக்கு ஏராளமானவர்கள் வந்து தரிசித்து பூஜிப்பது வழக்கம். செவ்வாய்க்கிழமைகளில், வீட்டில் காலையும் மாலையும் அவசியம் விளக்கேற்றி, அம்பாள் ஆராதனை செய்யவேண்டும்.
அதேபோல், அம்பாளுக்கும் பெண் தெய்வங்களுக்கும் உகந்தது சிகப்பு நிற மலர்கள். எனவே செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுவது இன்னும் விசேஷமானது.
சதுர்த்தி திதி என்பது விநாயகருக்கு உகந்தது. ஏகாதசி என்பது பெருமாளுக்கு உகந்தது. சஷ்டி திதி என்பது முருகப் பெருமானுக்கு உகந்தது. திரயோதசி திதி என்பது சிவபெருமானுக்கு உகந்தது. அஷ்டமி திதி என்பது காலபைரவரை வழிபடுவதற்கு உரிய நாள். அதேபோல், பஞ்சமி திதி என்பது வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய நாள்.
சப்தமாதர்களில் ஒருத்தி வாராகிதேவி. பஞ்சமி திதியில் விரதம் இருந்து வாராகி தேவியை வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்குவாள். இன்னல்களையெல்லாம் போக்கி அருளுவாள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வாள். தீயசக்திகளை நெருங்கவிடாமல் காத்தருள்வாள் வாராஹி தேவி.
பஞ்சமி திதியில் விரதம் இருந்து வாராகியை வழிபடுங்கள். நம் பஞ்சத்தையெல்லாம் போக்கியருளுவாள். சுபிட்சத்தை தந்தருள்வாள் தேவி. தோஷங்கள் அனைத்தையும் விலக்கி, சந்தோஷத்தைப் பெருக்கித் தருவாள் வாராகியம்மன்.

இன்று சிவனை வணங்குவோர் விரதம் இருந்து அப்பனை காலையில் வீட்டில் நித்ய பூஜையிலும் மாலையில் கோயிலுக்கு சென்று சிவனை வணங்குவோருக்கு மறுபிறவியே இல்லை...
சோமாவாரம்...

அந்த அளவுக்கு சிவனுக்கு பிடித்த நாள் திங்கள் கிழமை...
விரதம் என்றால் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை...
அசைவம் தொடாமல் வேறு ஏதும் தவறான பழக்கங்களை செய்யாமலும் அன்றைய தினம் தீருநிறு அணிந்து சிவனை வணங்கிணாலே போதும்....
அதே போல் தங்கம் வைரம் இவற்றால் பயமே தவிர பாதுகாப்பு இல்லை...
ஆனால் கழுத்தில் அணியும் ருத்திராச்சம் இருக்கிறதே அதற்கு உள்ள சக்தி உலகத்தில் எதற்கும் இல்லை...
32 ருத்திராச்சம் கொண்ட ஐந்து முகம் கொண்ட ருத்திராச்ச மாலையை அணிந்தால் எதிரியும் உன்னை பார்த்து வணங்குவான்...
தினமும் தவறாது நெற்றில் திருநீறு பூசுபவர்களுக்கு நான் என்ற அகந்தை முற்றிலும் அழிக்கப்ட்டு அன்பே வடிவாய் வாழ்பார்கள்..

சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.
பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.
சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார்.
ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.
புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

பைரவரை விரதம் இருந்து வழிபட்டால் பில்லி, சூனியம் ஏவல் கடுமையான நோய், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மேலும் எந்த கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.
* விரதம் இருந்து ஞாயிறு அன்று ராகுகாலத்தில் வாசனை தைல அபிஷேகம் செய்து வடைமாலை சார்த்தி அா்ச்சனை செய்தால் திருமணம் கைக்கூடும்.
* விரதம் இருந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவரை சிகப்பு அரளியால் அா்ச்சித்து வடைமாலை சார்த்தி தேன் கலந்த பேரிச்சை வெல்லப் பாயசம் நிவேதனம் செய்து வந்தால் குழந்தை பேறுசித்திக்கும்.....
* வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வில்வ இலையால் அா்ச்சித்தால் வறுமை நீங்கும்
* விரதம் இருந்து சிவாலயங்களில் உள்ள பைரவரை வழிபட்டால் சனீஸ்வரரால் ஏற்படும் பாதிப்புக்கள் வெகுவாக குறைந்துவிடும்.
* சித்திரை மற்றும் ஐப்பசி மாதத்தி்ல் பரணி நட்சத்திரத்தில் இவரை விரதம் இருந்து பூஜித்தால் அதிவிசேஷம். வெள்ளி செவ்வாய் இவருக்கு உகந்த தினங்கள். கா்மவினை தொந்தரவு பில்லி, சூனியம் ஏவல் கடுமையான நோய், வழக்குகளில் வெற்றி இழந்த பொருட்கள் கிடைக்கவும், விபத்துக்கள் ஏற்படாதிருக்கவும் இம்மாதங்களில் விரதம் இருந்து வழிபடலாம்....

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களுக்கு தாங்களே துளசி மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்குகின்றனர். குவியும் பக்தர்களால் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா களைகட்ட தொடங்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது ஆகும். இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுவார்கள். கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் நாளான வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) இரவில் நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 1, 10, 11 ஆகிய முக்கிய விழா நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அரசின் வழிகாட்டுதல்படி, 2-ம் நாள் முதல் 9-ம் நாள் வரையிலும், 12-ம் நாளிலும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். கடற்கரைக்கு பதிலாக, கோவிலின் முன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனைக் காணவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது ஊரில் உள்ள கோவில்களிலேயே துளசிமாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். கோவில்களின் அருகிலேயே தசரா பிறை அமைத்து, அங்கு தங்கியிருந்து அம்மன் புகழை பாடி வழிபடுகின்றனர்.
தசரா திருவிழா தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், தினமும் ஏராளமான பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கோவிலில் குவிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்கின்றனர். கடலில் புனித நீராடி, கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களுக்கு தாங்களே துளசி மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்குகின்றனர்.
மேலும் கோவிலில் கொடியேற்றப்பட்டதும், விரதம் இருக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக காளி, சிவன், பார்வதி, விநாயகர், முருகர், ராமர், லட்சுமணர், அனுமர், நாரதர், கிருஷ்ணர் போன்ற பல்வேறு சுவாமி வேடங்களையும், அரசர், அரசி, குறவன், குறத்தி, போலீஸ்காரர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் அணிவார்கள். பின்னர் உள்ளூர் பகுதியிலேயே காணிக்கை வசூலித்து, விழாவின் நிறைவு நாள் அல்லது அதற்கு பின்னர் கோவிலுக்கு சென்று காணிக்கையை செலுத்துகின்றனர்.
11-ம் நாளில் கோவிலில் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கப்பட்டதும், உள்ளூரில் உள்ள கோவில்களிலேயே பக்தர்கள் காப்புகளை களைந்து விரதத்தை முடிக்கின்றனர்.
தசரா திருவிழாவை முன்னிட்டு, உடன்குடி பகுதியில் வேடப்பொருட்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களது உடல் அளவுக்கு ஏற்ப வேடப்பொருட்களை தயார் செய்வதற்கு ‘ஆர்டர்’ கொடுத்து அவற்றை வாங்கி செல்கின்றனர்.
குலசேகரன்பட்டினம் பகுதியில் காணும் இடமெல்லாம் பக்தர்கள் தலையாகவே காட்சி அளிப்பதால், தசரா திருவிழா இப்போதே களைகட்ட தொடங்கி உள்ளது.

எந்த சூழ்நிலையையும் சமாளித்து எதிர்கொள்ள மன தைரியம் தான் முதலில் முக்கியம் தேவை. அப்படிப்பட்ட அஞ்சா நெஞ்சத்தை நாம் பெற வேண்டுமென்றால், என்ன செய்வது? அஞ்சா நெஞ்சத்தை கொண்ட ஹனுமனை தான் விரதம் இருந்து வழிபட வேண்டும்.
ஹனுமன் விரத வழிபாட்டை, இந்த முறைப்படி செய்து வருபவர்களுக்கு, மனது உறுதியாகும். எந்த பிரச்சினை வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற துணிச்சல் ஏற்படும். தொட்ட காரியம் எல்லாம் ஜெயமாகும். நம்பிக்கையோடு வைக்கும் இந்த ஒரு பொட்டுக்கும், கோடி பலனை நீங்கள் பெறப் போகிறீர்கள். உங்கள் மனதில் இருக்கும் கோழைத்தனத்தை தூக்கி எறிந்துவிட்டு, தைரியமாக வழிபாட்டை செய்து பாருங்கள்!
இந்த பரிகாரத்திற்க்கு முதலில் ஹனுமனின் திருவுருவப்படம் கட்டாயம் தேவை. அந்த ஹனுமானின் திரு உருவப்படமும் ராம் ராம் என்ற எழுத்தில் கடைகளில் கிடைக்கின்றது. அதாவது குட்டி குட்டியான வார்த்தைகள், ராம் ராம் என்று எழுதி இருக்கும். பார்த்தால் ஹனுமனின் திருவுருவப்படம் தெரியும். உற்று நோக்கினால் தான் அதன் உள்ளே ராம் ராம் என்று எழுதி இருப்பது நமக்குத் தெரியும். அப்படிப்பட்ட ஒரு திருவுருவப்படத்தை, உங்கள் வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்படிப்பட்ட எழுத்து உள்ள படம் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், சாதாரண அனுமன் படம், வால் உள்ள படமாக வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் படத்தை தினம்தோறும் அடிக்கடி நீங்கள் பார்த்து வந்தாலே உங்களது மன தைரியம் அதிகரிக்கும். அது வேறு விஷயம்! இதோடு விட்டுவிடாமல், தினம்தோறும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு, முடிந்தவர்கள் வெறும் வயிற்றில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
உங்களது வலது கை மோதிர விரலால் கொஞ்சமாக சந்தனத்தை பன்னீரில் குழைத்து, எடுத்து அனுமனின் வலது கால் பாதம் முதல், பொட்டுவைக்க தொடங்க வேண்டும். வலது காலில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக, ஏறுமுகமாக மேல் பக்கத்தில் ஏறி, அவரது நெற்றியில் பொட்டு, அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கீழ் பக்கமாக இறங்கி இடதுகால் முடியும்வரை, அனுமனை கீழிருந்து மேல் நோக்கி சுற்றிவந்து பொட்டை வைத்து மனதார உங்களது கஷ்டத்தை சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். இறுதியாக அவரது நெற்றியில் மட்டும் ஒரு குங்குமப் பொட்டு வைத்து விடுங்கள். ராம் ராம் ராம் என்று உச்சரித்துக் கொண்டே போட்டு வையுங்கள்.
ஒரு 21 நாட்கள் நீங்கள், இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் உங்களுடைய மனது எப்படி மாறியது? உங்களுடைய கஷ்டங்கள் எப்படி போனது? என்றே தெரியாது! அந்த அளவிற்கு உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உங்களால் உணர முடியும். இந்த பரிகாரத்தை செய்து முடித்த பின்பும் உங்களது மனதும், மூச்சுக்காற்றும் ராம் ராம் ராம் என்ற மந்திரத்தை ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். காலப்போக்கில் உங்களுடைய வாழ்க்கையில் வித்தியாசமான உணர்வை நீங்கள் உணர்வீர்கள்.
உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் வராது. யார் உதவி என்று உங்களை வந்து கேட்டாலும், மறுக்காமல் செய்ய தொடங்கி விடுவீர்கள். பிரச்சனை வந்துவிட்டதா? பார்த்துக் கொள்ளலாம்! என்று துணிவோடு எதிர்த்து நினைப்பீர்கள். உங்களுடைய மனது அப்படி பக்குவப்பட்டு இருக்கும். இதை படித்தோ அல்லது யாரோ ஒருவர் சொல்லியோ உங்களால் நிச்சயம் உணர முடியாது. 21 நாட்கள் முழு ராமர் பக்தராக இருந்து பாருங்கள். இதனால் உங்களது வாழ்க்கையில் சன்னியாசம் வந்துவிடுமோ என்ற பயம் கூட தேவையில்லை. ராமர் சீதையை சேர்த்து வைத்த அந்த ஹனுமன், உங்கள் இல்லற வாழ்க்கையில் பிரச்சனைகளை தரமாட்டார், என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.