search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    கோரிக்கைகள் இனிது நிறைவேற வள்ளலார் கூறிய செவ்வாய்க்கிழமை விரதம்

    நமது கோரிக்கைகள் இனிது நிறைவேற உதவும் வள்ளலார் கூறிய செவ்வாய்க்கிழமை விரதத்தை பற்றியும், அதனை அனுஷ்டிக்கும் முறை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
    “திங்கட்கிழமை இரவில் பலகாரங்கள் செய்து செவ்வாய்க்கிழமை அதிகாலையில் எழுந்து, நெற்றியில் திருநீறு அணிந்து நல்ல நினைப்புடன் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் காலைக்கடன்களை முடித்துவிட்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த தண்ணீரில் குளித்துவிட்டு விபூதியை தண்ணீரில் குழைத்து உடலெங்கும் பூசிக்கொண்டு, கணபதியை நினைத்து, பின்பு ஸ்ரீ பஞ்சாஷரத்தை 108 முறை ஜபித்து, பின்பு சிவனை நினைத்து தியானம் செய்ய வேண்டும் செய்துவிட்டு, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஒம் சிவ சூரியாய நம என்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து அதன் பின்பு அவ்விடத்தில் தானே நின்று கொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையல்நாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக் கொண்டு,

    பின்பு ஓம் வயித்தியநாதாய நம என்ற மந்திரத்தை 108 அல்லது, 1008 இரண்டில் எந்த அளவாவது ஜபித்து, சிறிது மிளகை துணியில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று பூஜை செய்யுமிடத்தில் வைத்துவிட்டு, சிவனடியார் ஒருவருக்கு உபசாரத்தொடு செய்தவற்றை படைத்து, பின்பு பலகாரங்களோடு பச்சரிசிப் பொங்கல் முதலான உணவை அரையாகாரம் உட்கொண்டு, அன்று மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று சிவதரிசனம் செய்து, பாய், தலையணை இல்லாமல் மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்திரம் கேட்கவேண்டும் அல்லது பாடல்கள் பாடலாம். சிவனை நினைத்து தியானம் செய்யலாம். வெற்றிலைபாக்கு போடுவது, பகலில் தூங்குவதை விட்டு மிகவும் சுத்தமான முறையில் இவ்விரதம் கடைபிடிக்க வேண்டும்.

    -என்று வள்ளலார் குறிப்பிட்டிருக்கிறார்.

    இதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
    Next Story
    ×