என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    இந்த புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.
    தமிழ் மாதங்களில் 6–வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது வழக்கம். ‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    புரட்டாசி மாதம் மகாளய பட்சம் வருகிறது. மகாளய பட்சத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுக்கிறோம். புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார். ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது.

    சனிக்கிழமை விரதம்

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

    ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.

    அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

    இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து உயிர்களிடத்தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
    புரட்டாசி மாத தேய்பிறை கார்த்திகை தினமான இன்று விரதம் இருந்து மாலையில் முருகன் ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் திருமண தடை நீங்கும், பிள்ளை இல்லாத தம்பதியனருக்கு மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    புரட்டாசி கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகனை வணங்கினால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும். திருமண தடை நீங்கும், பிள்ளை இல்லாத தம்பதியனருக்கு மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது.

    சரவணப் பொய்கையில் தாமரை மலரில் மிதத்து வந்த முருகனை ஆறு கார்த்திகைப்பெண்கள் எடுத்து வளர்த்தனர்.ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றதாக கூறுகிறது ஸ்கந்த புராணம். கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

    செவ்வாய்க்கு அதிபதி முருகன் ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் கிருத்திகை நாளில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள்  கார்த்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும் பிரச்னைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள பிள்ளைகளை அருளுவார் முருகப்பெருமான். குழந்தை செல்வம் திருமணம் ஆகியும் நீண்ட நாட்கள் பிள்ளைச் செல்வம் இல்லாத பெண்மணிகள் தமிழ் மாதத்தில் பத்தாவது மாதமான தை கிருத்திகையில் தமிழ்கடவுள் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும் கட்டாயம் குழந்தையும் பிறக்கும்.

    உப்பில்லா உணவு தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது. இது உயர்வாகவும் கருதப்படுகிறது. புரட்டாசி கார்த்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியவை எல்லாம் கிடைக்கும்.
    பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பது வழக்கம். இந்த விரதத்தை முறையாக இருந்தால் நாம் பல பலன்களை அடையலாம். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.
    புரட்டாசி சனிக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் கோலமிட்டு பின் குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையின் இருபக்கமும் குத்து விளக்கேற்ற வேண்டும். பின் அலங்கார பிரியரான வேங்கடேசப் பெருமாள் அலர்மேல்மங்கை தாயாருடன் இருக்கும் படத்தை பூஜை அறையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். அதன் பிறகு மாவிளக்கேற்றி நாம் அன்று சுவாமிக்கு படைக்க இருக்கும் நிவேதியங்களான சர்க்கரை பொங்கல், வடை, பாயசம் போன்றவற்றை படைத்தது புஜயை துவங்க வேண்டும். பெருமாளுக்குரிய பாடலையும் சுலோகங்களையும் பூஜையின்போது சொல்லலாம்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நாம் பெருமாளின் அருளோடு சேர்த்து குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம். இதனால் வீட்டில் உள்ள அனைத்து புருளாதார பிரச்சனைகளும் தீரும். அதோடு வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்.

    சனி தோஷம் இருக்கும் ஜாதகர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோயிலிற்கு சென்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதன் மூலம் சனி தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறுவர். அதோடு அஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி போன்ற சனியின் பிடியில் இருப்பவர் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை மனதார பிராதிப்பதன் மூலம் சனியின் உக்கிரம் குறைந்து சனியால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் ஏற்றம் பெறுவர்.

    புரட்டாசியில் விரதம் இருப்பதோடு, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் அளிப்பதன் மூலம் ஏழைகளின் பசி பறந்தோடுவது போல நம் துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும்.
    புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானை விரதம் இருந்து வழிபடுவது, பலவித பாவங்களைப் போக்கும் என்று புராணக் கதை கூறுகிறது. மேலும் லட்சுமியின் கடாட்சத்தையும் பெறலாம்.
    சித்திரை முதல் தொடர்ந்து பன்னிரண்டு மாதங்களிலும் வரும் பவுர்ணமி திருநாளில், சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பு. அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் லட்சுமியின் கடாட்சத்தையும் பெறலாம் என்கிறார்கள். இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கான கூடுதல் சிறப்பாகும். புரட்டாசி மாத பவுர்ணமி நாளில் சிவபெருமானை விரதம் இருந்து வழிபடுவது, பலவித பாவங்களைப் போக்கும் என்று புராணக் கதை கூறுகிறது.

    கிருச்சமதர் என்ற முனிவர் விநாயகப்பெருமானின் மிகச் சிறந்த பக்தர். அவர் விநாயகப் பெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தார். அவர் தவம் இருந்ததன் பலனாக விநாயகரை தரிசிக்கும் பெரும் பேறு பெற்றார். விநாயகரிடம் இருந்து பல வரங்களையும் பெற்றுக் கொண்டார். அந்த வரத்தின் மூலமாக, சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் அழிக்க முடியாத ஒரு மகனை, தன்னுடைய சக்தியால் பெற்றார்.

    அவ்வாறு அவர் பெற்ற மகனின் பெயர் பலி. கிருச்சமதர் முனிவரைப் போலவே பலியும், விநாயகர் மீது அளவு கடந்த பக்தி கொண்டான். பலியும் பிள்ளையாரை வழிபட்டு மூன்று உலகங்களையும் அடக்கியாளும் வல்லமையை தனக்கு தந்தருள வேண்டும் என்பது உள்பட பல வரங்களைப் பெற்றுக் கொண்டான். மேலும், அந்த வரங்களில் குறிப்பிடத்தக்கவை பொன், வெள்ளி மற்றும் இரும்பாலான மூன்று உலோக கோட்டைகளை கொடுத்து விநாயகர் அருள்புரிந்ததுதான்.

    வரங்களை கொடுத்த பிள்ளையார், பலியை எச்சரிக்கை செய்தார். “நான் வழங்கிய வரங்களைக் கொண்டு நீ தவறான பாதையில் சென்றால் சிவபெருமானின் திருக்கரத்தில் உள்ள கணை ஒன்றினால் உன்னுடைய கோட்டைகள் அழியும்” என்றார். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் ஆணவத்தால் மூவுலகங்களையும் துன்புறுத்தினான், பலி. திரிபுரங்களுக்கும் அதிபதியான அந்த அசுரனின் தொல்லைகளைப் பொறுக்க முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபிரானைச் சரணடைந்தனர். அவர்களைக் காத்தருள திருவுளம்கொண்ட பிள்ளையார், பலி என்ற திரிபுரனுடன் போர் தொடுக்க முடிவெடுத்தார்.

    அதற்காக விநாயகர் அந்தணர் வேடமிட்டு பலியிடம் சென்று “திருக்கயிலையில் இருக்கும் சிந்தாமணி விநாயகரின் திருவுருவத்தை எனக்கு எடுத்துத் தர வேண்டும்” என்று கேட்டார். பலியும் அதற்கு சம்மதம் தெரிவித்து சிவபெருமானிடம் சென்றான். ஆனால் சிவபெருமான் விநாயகர் உருவத்தை தர மறுத்ததுடன், தன்னுடன் போர் புரிந்து அதை எடுத்துச் செல்லும்படி கூறினார். சிவபெருமானுக்கும், திரிபுரனுக்கும் போர் நடந்தது. போரின் முடிவில் கடும் சீற்றத்துடன் பலியின் மீது சிவ கணை பாய்ந்தது. திரிபுரனாகிய பலி, சிவனாரின் திருவடிகளில் ஒன்றிக் கலந்தான். அவ்வாறு அவன் வீடுபேறடைந்த தினம், புரட்டாசி மாத பவுர்ணமி நாளாகும். அந்த நாளை ‘பாகுளி’ என்று அழைப்பார்கள். இந்தப் புண்ணிய திருநாளில் சிவ வழிபாடு செய்பவர்களைத் துன்பங்கள் நெருங்காது.

    புரட்டாசி பவுர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும். நண்பகலில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். மாலை பிரதோஷ வேளையில் சிவனை வழிபாடு செய்தால், சிவ பெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பதே புரட்டாசி மாத பவுர்ணமி நாளின் சிறப்பாகும்.

    புரட்டாசி மாத பவுர்ணமி தினத்தன்று பூரண பிரகாசத்தோடு அன்னையின் முகம் ஜொலிக்குமாம். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தினுடைய அமுதமாய் விளங்குபவள். இதனால் அன்னைக்கு ‘சந்திர மண்டல மத்யகா’ என்ற திருநாமம் உண்டு. ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தின் நடுநிசியாகும். எனவே புரட்டாசி மாதத்தின் பவுர்ணமி என்பது அம்பிகையின் பிரகாசம் ஆகும். இந்தக் கோடி சந்திரபிரகாசத்தை சவுந்தர்ய லஹரியில் அம்பிகையின் சவுந்தர்யத்தை “உன்னுடைய புன்முறுவல் அமுதம் போன்றது.

    உன் முகமாகிய சந்திரனிடமிருந்து பெருகும் அந்த அமுதம் போன்ற நிலவுக் கதிர்களை உண்ணும் பறவைகளுக்கு, அந்த அமுதத்தின் தித்திப்பு திகட்டவே அவறின் அலகுகள் உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டன. ஆகையால் அப்பறவைகள் ருசி மாற்றம் வேண்டி புளிப்பில் ஆசை கொண்டு குளிர்ந்த கதிர்கள் கொண்ட சந்திரனின் நிலவாகிய அமுதப் பெருக்கைப் புளித்த கஞ்சி என்று எண்ணி வேண்டிய மட்டும் இரவு தோறும் நிறைய பருகுகின்றன” என்று ஜகத்குரு ஆதிசங்கரர் கூறியிருப்பதாக, மகா பெரியவர் குறிப்பிடுகிறார்.

    புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.

    இந்நாளில் விரதம் இருப்பவர்கள், இரவில் குறைவான எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும். இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயாமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும். இந்தச் சக்தியை நல்ல வழியில் பயன்படுத்துவோருக்கு மேலும் மேலும் இறைவனின் அருள் கிடைக்கும். இப்படிபட்டவர்களுக்கு நல்ல உடல் பொலிவும், நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தியும் கிடைக்கும். இவர்கள் எந்த காரியத்தைத் தொடங்கினாலும் அதில் வெற்றி வந்து சேரும்.
    சந்தோஷமான குடும்பத்தை பெற்றவர்கள் கூட, உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க 48 நாட்கள் இந்த விரத வழிபாட்டை செய்து பலனடையலாம்.
    கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக சொல்லப்படும் முருகப் பெருமானை நினைத்து நம்முடைய வீட்டில் நாம் செய்யப்போகும் விரத  வழிபாடுதான் இது. காலையில் எழுந்து எப்போதும்போல குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, உங்கள் பூஜை அறையில் தரையில் இடம் இருந்தால், தரையை கொஞ்சம் தண்ணீர் போட்டு துடைத்துக் கொள்ளுங்கள். தரையில் கோலம் போட வசதி இல்லை என்றால், அலமாரியாக இருந்தாலும் கூட பரவாயில்லை. அந்த இடத்தை கொஞ்சம் தண்ணீர் போட்டு துடைத்து விடுங்கள்.

    கொஞ்சம் அரிசிமாவு எடுத்துக்கொண்டு, அந்த இடத்தில் ஸ்டார் கோலம் வரைந்து விட வேண்டும். அந்த ஸ்டார் கோலத்தில் உள்ளே மஞ்சளால் வர்ணம் தீட்டுவது போல, மஞ்சள் பொடியை நிரப்பி விடுங்கள். கொஞ்சமாக குங்குமத்தையும் கோலத்தில் நடுமத்தியில் வைத்துவிடுங்கள். கொஞ்சம் போல மஞ்சள் தூளை எடுத்து, அதில் பன்னீர் ஊற்றி, பிசைந்து, நடுவில் வைத்த குங்குமத்தின் மேல் பக்கத்தில் வைத்து, அதன் மேல் ஒரு அகல் தீபத்தை வைத்து, நெய் ஊற்றி திரி போட்டு, அந்த விளக்குக்கு பக்கத்தில் ஒரு பூவை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். (கோலத்தின் நடுவில் பன்னீர் ஊற்றி பிசைந்த மஞ்சள் கலவைக்கு மேல், அகல் தீபம் தீபம் வைக்கப்பட்டு எரிய வேண்டும்.)

    பூஜை அறையில் எப்போதும் போல சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, உங்கள் வீட்டில் வழக்கம் போல் தீபமேற்றி வைத்து, பூஜைக்குத் தயாராக வேண்டியது தான். அதன் பின்பாக நீங்கள் தரையில் ஒரு விரிப்பு விரித்து அதன்மேல் அமர்ந்து, அல்லது மரபலகையின் மீது அமர்ந்து கோலத்தின் மேல் தயாராக இருக்கும் தீபத்தை ஏற்றி விட்டு, 108 உதிரி புஷ்பங்களை கையில் வைத்துக் கொண்டு, ‘ஓம் சரவண பவ’ என்ற மந்திரத்தை உச்சரித்து அந்த தீபத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

    அர்ச்சனையை முடித்துவிட்டு, உங்களுக்கு இருக்கக்கூடிய குடும்ப பிரச்சனையை சொல்லி, வீட்டில் சுபகாரியங்கள் நடந்துகொண்டே இருக்கவேண்டும். வீட்டில் நிம்மதி இருக்க வேண்டும் என்ற நேர்மறை எண்ணத்தோடு வேண்டுதலை வைத்தால், உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய எப்பேற்பட்ட பிரச்சனையும் 48 நாட்களுக்குள் ஒரு முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து 48 நாட்கள் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வாரம்தோறும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் இந்த பூஜையியை நம்முடைய வீட்டில் செய்து வரலாம். அடுத்த நாள் காலை வரை அந்தக் கோலம் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கலாம்‌. காலை கையாலேயே அந்த கோலத்தை சுத்தப்படுத்தி கால் படாத இடத்தில் போட்டுவிட வேண்டும். முருகப் பெருமானை நினைத்து செய்யக்கூடிய இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையோடு செய்தவர்கள், யாரும் வாழ்க்கையில் தோற்றதில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.
    இன்றைய தினம் ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை.
    பிரதோஷம் விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும்.

    ருணம் என்றால் கடன். கடன் பிரச்சினையால் இன்றைக்கு பலரும் தத்தளிக்கின்றனர். ரோகம் என்றால் நோய். கடனும் நோயும்தான் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நோயினால் பலரும் கடனாளியாகின்றனர். இன்றைய தினம் ருண விமோசன பிரதோஷ வேளையில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். அதோடு செவ்வாய் பகவானையும் வணங்கி வழிபட்டால் தீராத கடன்களும் தீரும் என்பது நம்பிக்கை. ரத்ததானம், அன்னதானம், பூஜைகளுக்காக மலர் தானம் போன்றவை செய்வது நல்லது.

    அபிஷேகப்பிரியரான சிவனடியார்க்கு கறந்த பாலில் அபிசேகம் செய்வது சிறப்பு. தூய்மையான இளநீரில் அபிஷேகம் செய்வதும் நன்று. இறைவன் இயற்கையை விரும்பக்கூடியவர். இயற்கையான வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் ஆகியவற்றைக்கொண்டு பிரதோஷ நாளில் அபிஷேகம் செய்தால் சகலதோஷங்களும், பிரம்மஹத்தி தோஷமும், ஏழு ஜென்மங்களில் உண்டான தோஷமும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

    எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை. செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும்.

    எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே குளித்து விட்டு வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும், நோய்களும் நீங்கும் என்பது சிவ வாக்கு. உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வருமானம் அதிகரிக்கும். இந்த தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து பூஜித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ருண விமோசன பிரதோஷ நாளில் இருக்கும் மௌன விரதம் கூடுதல் பலன் தரும். இந்த நாளில் சிவபுராணம், நீலகண்டப் பதிகம், கோளறு பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்.
    சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம். பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து 21 முறை இருப்பது சிறப்பாகும்.
    தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாகும். பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

    அபிஷேகப்பிரியரான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்தது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

    சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம். இந்தக் கால பைரவ விரதம் என்பது அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு வாய்ந்ததாகும். பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து 21 முறை இருப்பது சிறப்பாகும். அந்த சமயத்தில், கால பைரவரின் மந்திரத்தை ஜபித்தால் என்பது பல மடங்கு நன்மையை நமக்கு செய்யும்.
    ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கீதையில் கிருஷ்ணர் கூறியிருந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
    தமிழ் மொழிக்கென தனியாக மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அப்படி அமைந்த பன்னிரண்டு மாதங்களில், புரட்டாசிக்கு தனிச் சிறப்பு உண்டு. இது வழிபாட்டுக்குரிய மாதமாகவும், மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது. ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கீதையில் கிருஷ்ணர் கூறியிருந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால், எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஆன்மிகத்தை போதிக்கும் சான்றோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. நவக்கிரகங்களில், கல்வி, கேள்விக்கு அதிபதியான புதனை வழிபடவும் இந்த புரட்டாசி மாதம் உகந்ததாக உள்ளது. புதன் கிரகத்தின் அதிதேவதையாக மகாவிஷ்ணுவே அருள்கிறார். எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    பெருமாளின் அம்சமாகவே கருதப்படும் புதனுடைய வீடு கன்னி ராசியாகும். இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கான சிறப்பு வழிபாடுகள், பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. புதனுக்கு நட்பு கிரகமாக திகழ்பவர், சனீஸ்வரன். அதனால்தான் சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகள், புரட்டாசி மாதத்தில் விசேஷமானதாக கருதப்படுகிறது.

    புரட்டாசி மாதத்தை ‘எமனின் கோரைப் பற்களுள் ஒன்று’ என்று அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும், புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெரு மாளுக்கு விரதமிருப்பது வழக்கம்தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது. அது என்னவென்று பார்ப்போம்..

    பெருமாள் கோவில்களில் புகழ்பெற்றது, திருப்பதி வெங்கடாசலபதி கோவில். திருப்பதியில் பெருமாளின் மிகச் சிறந்த பக்தர் ஒருவர் இருந்தார். பீமன் என்ற பெயருடைய அவர், மண்பாண்டங்களைச் செய்யும் தொழிலைச் செய்து வந்தார். இவர் பெருமாள் மீதான பக்தியால், தன்னுடைய ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக்கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போகக்கூட நேரம் இருக்காது. போனாலும் எப்படி வழிபடுவது என்று அவருக்குத் தெரியாது. ‘பெருமாளே, நீயே எல்லாம்’ என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

    ஒருமுறை அவருக்கு மனதில் ஒரு எண்ணம் உதித்தது. ‘பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன?’ என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடிந்ததும் மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து, அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

    அந்த ஊரைச் சேர்ந்த அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் ஆலயம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை கிடந்தது. ‘பட்டர்கள்தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ?’ என குழப்பத்தில் அரண்மனை திரும்பினார்.

    அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டு மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதி காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் திருவோணம் திதி தினமானது, திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் ஆகும். அந்த சிறப்பு தினம் இந்த ஆண்டு வருகிற 27-9-2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வருகிறது.
    புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
    புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு  பூஜைகள்  நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் ஆகும்.

    * புரட்டாசி சனி என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமையில் சனிபகவானை நினைத்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.

    இதேபோல் புரட்டாசியில் கடைப்பிடிக்க வேண்டிய சில விரதங்கள் :

    சித்தி விநாயக விரதம்:

    * புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும்.

    சஷ்டி – லலிதா விரதம்:

    * புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பரமேஸ்வரி சர்வமங்கலங்களையும் அருள்வாள்.

    அனந்த விரதம்:

    * புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வரியங்கள் கிடைக்கும்.

    அமுக்தாபரண விரதம்:

    * புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா – மகேஸ்வரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இவ்விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

    ஜேஷ்டா விரதம்:

    * புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும் விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.

    மஹாலட்சுமி விரதம்:

    * புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

    கபிலா சஷ்டி விரதம்:

    * புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூ ரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூ ஜிக்கும் விரதம் இது. இவ்விரதம் சித்திகளை தரும்.
    புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.
    புரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும்.

    புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் எனத் தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பாகும்.

    இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும். 

    புரட்டாசியில் கடைப்பிடிக்கும் விரதங்கள்...

    ஸித்தி விநாயக விரதம் - இது புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகரைக் குறித்துச் செய்யப்படும் விரதமாகும். இந்த விரதத்தை உள்ள சுத்தியோடு கடைப்பிடித்தால் காரிய ஸித்தி உண்டாகும்.

    துர்வாஷ்டமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் சிவனையும், விநாயகரையும் வழிபட வேண்டிய விரதமாகும். இந்த விரதத்தை மேற்கொள்ள குடும்பம் செழிக்கும்.

    மகாலட்சுமி விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாள்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதமாகும். திருமகளை தொடர்ந்து 16 நாள்கள் வழிபட நம் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

    அமுக்தாபரண விரதம் - புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா-மகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை(சரடை) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் சந்ததி செழிக்கும்.

    ஜேஷ்டா விரதம் - புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதமாகும்.

    சஷ்டி-லலிதா விரதம் -  புரட்டாவி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியைக் குறித்துக் கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலங்களையும் அருளும்.

    கபிலா சஷ்டி விரதம் - புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகள் கிடைக்கும்.

    மகாளயபட்சம் - புரட்டாசி பௌர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாள்களும் மாஹாளயபக்ஷம் ஆகும். இந்தக் காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகும்.
    உங்களுடைய ஜாதகத்தில் புதன் கிரகம் மிகவும் பலவீனமாக இருக்கிறதென்றால், நீங்கள் விரதம் இருந்து விநாயகரை அதிகமாக வழிபட வேண்டும். புதன்கிழமை விநாயகரை விரதம் இருந்து வழிபடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.
    வானியல் சாஸ்திரப்படி, புதன்கிழமை என்பது புதன் கிரகத்துக்கு உரிய நாளாகக் கருதப்படுகிறது. இந்த புதன் கிரகம் தான் வெற்றிக்கான கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது. கடவுளில் விநாயகப் பெருமானும் வெற்றிக்கான கடவுளாக கருதப்படுகிறார். அதனால் தான் புதனுக்கும் விநாயகருக்கும் தொடர்பு படுத்தி பார்க்கப்படுகிறது.

    ஒருவேளை உங்களுடைய ஜாதகத்தில் புதன் கிரகம் மிகவும் பலவீனமாக இருக்கிறதென்றால், நீங்கள் விநாயகரை அதிகமாக வழிபட வேண்டும். அப்படி வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளையும், அதிர்ஷ்டங்களையும் கொடுக்கும். புதன்கிழமை விநாயகரை வழிபடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.

    விநாயகப்பெருமான் சிறந்த அதிர்ஷ்டங்களையும், இறைநிலையையும் வழங்கக்கூடியவர். இவர் பெரும் அறிவு, செல்வம், உடல் நலம், மகிழ்ச்சி, குழந்தை வரம் ஆகியவற்றைத் தரக்கூடியவர்.

    ‘விக்னேஷ்வரன்’ என்று அழைக்கப்படுகின்ற விநாயகப்பெருமான் பிரச்சினைகளையும் உங்களுக்கு இருக்கின்ற காரியத் தடைகளையும் அகற்றுவார். ஒருவரிடம் இருக்கின்ற கெட்ட குணங்களை நீக்கி, மன அமைதியையும், நல்ல குணநலன்களையும் மனதுக்குள் தியானம் மற்றும் ஆன்மிகத் தன்மையையும் அதிகப் படுத்துவார் விநாயகர்.

    இந்து சமயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருமே எந்தவொரு காரியத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை வழிபட்டு ஆரம்பிப்பதையே வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். செய்யும் வேலை வெற்றியில் முடிய வேண்டும் என்பது தான் அதற்கான காரணம். எந்த காரியமாக இருந்தாலும் விநாயகரை வழிபட்டு தொடங்கினால், அந்த காரியத்தின் மீது என்ன மாதிரியான தடைகள் வந்தாலும் அதை நீக்கி, வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.

    உடல் மற்றும் மன ரீதியான சோர்வையும் போக்கி உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கச் செய்வார்.

    விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால், முக்திக்கு தடையாக இருக்கிற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் அழியும்.

    விநாயகப் பெருமான் விசாலமான அறிவையும், புத்திக் கூர்மையையும் கொடுப்பார். விநாயகருடைய அடையாளமாகக் கருதப்படுகிற யானையின் தலை என்பது பேரறிவின் குறியீடாகக் கூறப்படுகிறது.

    உங்களை ஆன்மிக வழியில் சாதுவான குணங்களுடன் அழைத்துச் செல்லக்கூடியது விநாயகர் வழிபாடு. இந்த வழிபாடானது, உங்களுடைய திறமையை அசாத்திய மானதாக மாற்றும். எந்த காரியத்தை செய்தாலும் வெற்றி உங்கள் பக்கமே நிற்கும்.
    வள்ளலார் கூறிய இந்த விரதத்தை துய்மையான மனதுடன் அனுஷ்டித்தால் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நிச்சயம்.
    “திங்கட்கிழமை இரவில் பலகாரங்கள் செய்து செவ்வாய்க்கிழமை அதிகாலையில் எழுந்து, நெற்றியில் திருநீறு அணிந்து நல்ல நினைப்புடன் வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் காலைக்கடன்களை முடித்துவிட்டு, சூரியோதயத்திற்கு முன் ஆசாரமான சுத்த தண்ணீரில் குளித்துவிட்டு விபூதியை தண்ணீரில் குழைத்து உடலெங்கும் பூசிக்கொண்டு, கணபதியை நினைத்து, பின்பு ஸ்ரீ பஞ்சாஷரத்தை 108 முறை ஜபித்து, பின்பு சிவனை நினைத்து தியானம் செய்ய வேண்டும் செய்துவிட்டு, எழுந்து வாயிலில் வந்து சூரியனைப் பார்த்து ஒம் சிவ சூரியாய நம என்று மெதுவாகச் சொல்லி நமஸ்கரித்து அதன் பின்பு அவ்விடத்தில் தானே நின்று கொண்டு, தங்கள் தங்கள் மனத்திலிருக்கிற கோரிக்கைகளை முடித்துக் கொடுக்க வேண்டுமென்று ஸ்ரீ வயித்தியலிங்கரையும் தையல்நாயகியையும் முத்துக்குமாரசாமியையும் தியானித்துக் கொண்டு,

    பின்பு ஓம் வயித்தியநாதாய நம என்ற மந்திரத்தை 108 அல்லது, 1008 இரண்டில் எந்த அளவாவது ஜபித்து, சிறிது மிளகை துணியில் முடிந்து வயித்தியலிங்கார்ப்பணம் என்று பூஜை செய்யுமிடத்தில் வைத்துவிட்டு, சிவனடியார் ஒருவருக்கு உபசாரத்தொடு செய்தவற்றை படைத்து, பின்பு பலகாரங்களோடு பச்சரிசிப் பொங்கல் முதலான உணவை அரையாகாரம் உட்கொண்டு, அன்று மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று சிவதரிசனம் செய்து, பாய், தலையணை இல்லாமல் மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்திரம் கேட்கவேண்டும் அல்லது பாடல்கள் பாடலாம். சிவனை நினைத்து தியானம் செய்யலாம். வெற்றிலைபாக்கு போடுவது, பகலில் தூங்குவதை விட்டு மிகவும் சுத்தமான முறையில் இவ்விரதம் கடைபிடிக்க வேண்டும்.

    -என்று வள்ளலார் குறிப்பிட்டிருக்கிறார்.

    இதன் மூலம் வேண்டிய கோரிக்கைகள் இனிது நிறைவேறும் என்பது நம்பிக்கை.
    ×