என் மலர்
முக்கிய விரதங்கள்
சதுர்த்தி தினத்தன்று காலையில் எழுந்து உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக்கி, விரதத்தை ஆரம்பித்து அன்றைய தினம் சந்திரன் உதயமாகும் வரை எந்த உணவையும் உண்ணாது, விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு மனிதனுக்கு சங்கடம் என்பது ஒன்று மனதால் வருகிறது அல்லது பணத்தால் வருகிறது. இந்த சங்கடங்கள் அகன்று சந்தோஷம் பெருக வேண்டுமானால், சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். சதுர்த்தி என்றாலே நம் நினைவிற்கு வருபவர் கணபதி. ஒவ்வொருவரும் தங்களது ஆவல்கள் பூர்த்தியாக இந்த சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ளலாம். பொதுவாக உண்ணா நோன்பு இருக்கின்ற பொழுது நமது உடலும் வலிமை பெறுகின்றது. உள்ளமும் இறை உணர்வால் பலம் பெறுகின்றது. சதுர்த்தி திதி தேய்பிறையில் வந்தால் அது சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகின்றது.
சதுர்த்தி தினத்தன்று காலையில் எழுந்து உடலையும், உள்ளத்தையும் சுத்தமாக்கி, அன்றைய தினம் சந்திரன் உதயமாகும் வரை எந்த உணவையும் உண்ணாது, விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
மஞ்சளில் விநாயகர், பிள்ளையார் படம் அல்லது விக்கிரகம் (மாலை மற்றும் பூ அணிவிப்பதற்கு) அர்ச்சனை செய்வதற்கு மஞ்சள் கலந்த அட்சதை பூக்கள், வாசனை மிக்க பூக்களால் ஆன மாலைகள், பஞ்சபாத்திரம். தீர்த்த பாத்திரத்தில் சுத்தமான நீர், மணி, தூபக்கால், தீபத்தட்டு, கற்பூரம், குத்துவிளக்கு, திரி, எண்ணெய், ஊதுபத்தி, சாம்பிராணி, விபூதி, குங்குமம். அமர்ந்து பூஜை செய்வதற்கு பலகை, இனிப்புச் சுவையுடைய நைவேத்தியப் பொருட்கள். (மோதகம், அப்பம், கொழுக்கட்டை ஏதேனும் ஒன்று. அவல், பொரி கடலையும் வைக்கலாம்)
இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி, உள்ளங்கையை தீர்த்தத்தால் சுத்தம் செய்து பிறகு தீர்த்தத்தைப் பருகி ‘ஓம் அச்யுதாய நம’ என்றும், ‘அனந்தாய நம’ என்றும் மூன்றுமுறை சொல்ல வேண்டும்.
பிறகு இரண்டு உள்ளங்கைகளிலும் மஞ்சள் அரிசியான அட்சதையை வைத்துக் கொண்டு, ‘சுக்லாம்பரதம் விஷ்ணும் சசிவர்னம் சதுர்புஸம், ப்ரஸன்ன வதனம் த்யோயேத் ஸர்வ வின்னோப சாந்தயே’ என்று கூறிய படி தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். பிறகு தியானம் செய்ய வேண்டும். தங்களுக்குத் தெரிந்த விநாயகர் அகவல், விநாயகர் பாடல், மந்திரங்களைச் சொல்லி மனமுருகி விநாயகரை வழிபட வேண்டும்.
பூஜை செய்யும் பொழுது நைவேத்தியமாகப் படைக்கும் கொழுக்கட்டையை, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கொடுத்துவிட்டு, விரதமிருந்தவர்கள் அந்தக் கொழுக்கட்டையும் பாலும் குடிக்கலாம். இயலாதவர்கள் உடல் நலம் கருதி இரவு உணவை பலகாரமாக உட்கொள்ளலாம். பகலில் பால் அல்லது பழச்சாறு குடித்துக் கொள்ளலாம்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான்.
சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்

பீம ஏகாதசி ஏகாதசி அன்று முழுமையாக விரதம் இருந்தவர்கள், இழந்தவற்றை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.
பாண்டவர்களுள் ஒருவனாக விளங்கிய பீமன் சாப்பாட்டில் பிரியம் கொண்டவன். அவன் தனக்கு அருள் கிடைக்க வேண்டி ஏகாதசி விரதமிருக்க முடிவெடுத்தான். ஆனால், அவனால் பட்டினியாக இருக்கமுடியாது. எனவே, குருவாக விளங்கும் வியாச பகவானிடம் இதைப்பற்றி எடுத்துரைத்தான்.
ஒரே ஒரு ஏகாதசியில் மட்டும் நான் முழுமையாக உபவாசம் இருக்கின்றேன். ஆனால் எனக்கு எல்லா ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலன் கிடைக்கவேண்டும் என்று சொன்னான். அதற்கு வியாச முனிவர், ‘ஆனி மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதமிருந்தால் உனக்கு முழுமையான பலன் கிடைக்கும்’ என்று அருள்புரிந்தார்.
அன்று முதல் ஆனி மாத ஏகாதசி ‘பீம ஏகாதசி’ என்று அழைக்கப்பெற்றது. அந்த ஏகாதசி அன்று முழுமையாக விரதம் இருந்தவர்கள், இழந்தவற்றை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.

தாய்-தகப்பனாருக்கு திதி கொடுக்காமல் இறைவனை வழிபடுவதால் எந்த பலனும் ஏற்படாது. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் சிரார்தம் செய்யலாமா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
விரதங்கள் என்பது நாம் நலமுடன் இருக்கவும், பகவானை வேண்டி இருக்கும் சுய நியமனமாகும். இந்த காலத்தில் தாய், தகப்பனார் திதி வருமேயானால் தவறாமல் செய்ய வேண்டும்.
தாய்-தகப்பனாருக்கு திதி கொடுக்காமல் இறைவனை வழிபடுவதால் எந்த பலனும் ஏற்படாது. நித்யானுஷ்டானத்தில் தினமும் முன்னோர்களுக்கு திதி செய்ய வேண்டும். வாழ்கையில் மிகமுக்கிய சுபநிகழ்வான திருமணத்தில் கூட தெவசம் “நாந்தி” என்று செய்யப்படுகிறது. தெவசம் செய்வது நமது கடமை, விரதம் என்பது விருப்பம்.
இறப்பு தீட்டு இருக்கும் காலத்தில்கூட ஏகாதசி விரதம் கடைபிடிக்க வேண்டும் என்கிறது ஸ்மருதிகள். முன்னோர் வழிபாட்டினை எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாது என்கிறது சாஸ்திரங்கள்.
சபரிமலைக்கு விரதம் இருப்பவர்கள் விரதகாலத்தில் திதி கொடுப்பதில் எந்த தடையும் இல்லை.

மகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது.
அதுவே மூன்று மிக முக்கிய அமாவாசைகளில் ஒன்றான மகாளய அமாவாசை சனிக்கிழமை தினத்தில் வருவது மிகவும் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது.
மகாளய பட்சம் எனும் 15 நாட்கள் கொண்ட இந்த புண்ணிய தினத்தின் இறுதியில் வருகின்றது மகாளய அமாவாசை. (பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களைக் குறிப்பதாகும்.)
மகாளய அமாவாசை தினத்தில் என்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு செய்தால், அந்த நாள் சிறப்பாக அமைவதோடு, நம் முன்னோர்களின் ஆசி மற்றும் இறைவனின் ஆசி கிட்டுவது நிச்சயம்.
மரங்களில் மிக புனிதத்தன்மை வாய்ந்த மரம் அரச மரம். அப்படி அரச மரத்தடியில் அமர்ந்து காட்சி தருபவர் விநாயகர். இந்த தினத்தில் அரசமரத்தைச் சுற்றி வந்து பிள்ளையாரை வணங்குவது மிகச் சிறந்த புண்ணியத்தைத் தரும். முன்னோர்களின் ஆசி கிட்டுவதோடு, நம் உடலின் நோய் குறைந்து நலம் பெறலாம். நீண்ட நாள் வாழ முடியும்.

இதுவரை திதி கொடுப்பதற்கு மறந்தவர்கள் கூட விரதம் இருந்து (நாளை) மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் பித்ருக்களின் ஆசியைப் பெறமுடியும்
அறைக்குள் விளக்காகி, வீட்டில் படமாயிருக்கும் நம் முன்னோர்களை வழிபட உகந்த நாள் அமாவாசை. எல்லா மாதங்களிலும் ‘அமாவாசை’ வந்தாலும், ஆடி மாதம் வரும் அமாவாசையை ‘ஆடி அமாவாசை’ என்றும், தை மாதம் வரும் அமாவாசையை ‘தை அமாவாசை’ என்றும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை ‘மகாளய அமாவாசை’ என்றும் சொல்வார்கள்.
இதில் மகாளய அமாவாசை, வரும் புரட்டாசி மாதம் 1-ந் தேதி (17.9.2020) வியாழக்கிழமை வருகின்றது. அன்றையதினம் விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபடுவதன் மூலமும், பித்ருக்களுக்கு திதி கொடுப்பதன் மூலமும் முன்னேற்றங்கள் வந்துசேரும். ‘மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை’ என்று சொல்வார்கள்.
இதுவரை திதி கொடுப்பதற்கு மறந்தவர்கள் கூட விரதம் இருந்து மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் பித்ருக்களின் ஆசியைப் பெறமுடியும். முன்னோர்களைப் போற்றுங்கள். முன்னேற்றங்களைப் பெற்று வாழ முடியும்.

ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ தினமான இன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சிவபெருமானை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ தினங்களில் இருக்கின்றன. அதில் ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை வழிபடும் முறை குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஆவணி மாத தேய்பிறை பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு சிவனை வணங்கி, உணவேதும் உண்ணாமல் விரதம் இருப்பது சிறப்பு. பால், பழம் சாப்பிட்டும் அன்றைய தினத்தில் சிவபெருமானுக்கு விரதமிருக்கலாம். ஆவணி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து சிவபெருமான், நந்தி பகவான் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.
பிறகு நந்தி தேவருக்கு அருகம்புல், வெல்லம் கலந்த அரிசியையும், சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். பிரதோஷங்களில் சனிக்கிழமை அன்று வருகின்ற சனி பிரதோஷம் மிகவும் சிறப்பானது.
அதிலும் இன்று வருகின்ற ஆவணி தேய்பிறை பிரதோஷமானது சனி பகவானுக்குரிய பூசம் நட்சத்திரத்தில் வருவதால், அன்றைய தினத்தில் சிவன் கோயிலிலேயே இருக்கின்ற நவகிரக சந்நிதியில் சனிபகவானுக்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, வழிபாடு செய்வதால் சனி பிரதோஷத்தன்று சிவபெருமான், நந்தி தேவரை வழிபட்ட பலனை பெற முடியும். அஷ்டம சனி, ஜென்ம சனி போன்ற சனி கிரக தோஷங்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு பாதகங்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.மேலும் மாத சிவராத்திரி தினமும் ஆவணி தேய்பிறை பிரதோஷ தினத்திலேயே வருவது மிகவும் சிறப்பானதாகும். எனவே அன்றைய தினத்தில் பிரதோஷ வழிபாடு தவறாமல் செய்வதால் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும்.
பிரதோஷ வழிபாடு முடிந்ததும் உங்கள் சக்திக்கேற்ப பக்தர்கள் மற்றும் கோயிலுக்கு வெளியில் இருக்கும் யாசகர்களுக்கு சுண்டல், கேசரி போன்ற பிரசாதங்களை வழங்குவது சிவபெருமான் மற்றும் சனி பகவான் ஆகியோரின் அருட்கடாட்சத்தை உங்களுக்கு கொடுக்கும். ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை விரதம் இருந்து வணங்குபவர்களுக்கு செய்த பாவங்களுக்கான கர்ம வினைகள் நீங்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் நல்ல வருமானம் உண்டாகும். குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். கல்வி, தொழில் போன்றவற்றில் மேன்மையான நிலை ஏற்படும்.

குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடக்கும் என நம்பிக்கையில் பல்வேறு வேடங்களை அணியும் பக்தர்கள் தற்போது விரதம் தொடங்கி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நடைபெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அப்படியே திருவிழா நடந்தாலும் கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.
இருந்தபோதும், திருவிழா நடக்கும் என நம்பிக்கையில் பல்வேறு வேடங்களை அணியும் பக்தர்கள் தற்போது விரதம் தொடங்கி உள்ளனர். ஏராளமான பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கடலில் புனித நீராடி, கோவிலில் வந்து சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் துளசிமாலை அணிவிக்கவில்லை. எனவே, கோவிலுக்கு முன்பாக பக்தர்கள் தங்களுக்கு தாங்களே துளசிமாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
விரதம் தொடங்கிய பக்தர்கள் தங்களது ஊர்களில் உள்ள கோவில்களின் அருகில் பிறை அமைத்து தங்கி உள்ளனர். அங்கு அவர்கள் தினமும் ஒருவேளை பச்சரிசி உணவு உண்டு, அம்மன் புகழ்பாடி வழிபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து உடன்குடி அருகே மாதவன்குறிச்சி ஈசுவரி தசரா குழு நிர்வாகி கருப்பசாமி கூறியதாவது:-
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் எங்களது ஊரில் பக்தர்கள் விரதம் தொடங்கி உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, தசரா திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கும்நிலை ஏற்பட்டால், உள்ளூரில் உள்ள கோவிலிலேயே காப்பு கட்டி, வேடம் அணிந்து வேண்டுதலை நிறைவேற்றுவோம்.
எனினும் தசரா திருவிழாவுக்கு முன்பாக கொரோனா தொற்றை அம்மன் அழித்து, விழா சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார்.
நாம் கடவுளுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானதும், அவசியமானதும். இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும். ஆனால், அந்தக் கிரகத்தை கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் அவரே.பெருமாளுக்கு உகந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது.
இதனால் சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டித்தால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.மகாவிஷ்ணு தசாவதாரங்கள் எடுத்த பின்பும், குறிப்பாக, கண்ணனாக அவதரித்து, கீதையை உபதேசித்து, வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும், உலகில் பாவங்கள் குறையவில்லை. பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம்.சனிக்கிழமை விரதம் எளிமையானது.
பகலில் பழமும், நீர் கலந்த பாணத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷம்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும்.சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால் சனிக்கிழமைகளில் விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால், சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காத்தருள்வார்.

ஸ்வர்ணாகர்ஷண பைரவரை ஒன்பது பெளர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம்.
வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள். பெளர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பெளர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பெளர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.
சித்திரை- பரணி, ஐப்பசி- பரணி «பான்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.
தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும்.
பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம். அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்.
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

கல்யாண வெங்கடேச பெருமானுக்கு விரதம் இருந்து நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டைத்தேங்காய் வைத்து வழிபட்டு கோயிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டியில் பிரம்மா பூஜித்த திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் தனித்தனி கோவிலில் அருள்பாலிக்கின்றனர். திருமணம் விரைவில் கைகூட பெருமாளுக்கு மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.
ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு காட்சி தரும் இவர் “கல்யாண வெங்கடேசப் பெருமாள்’ எனப்படுகிறார். பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கு இங்கு சன்னதிகள் உள்ளன. விரதம் இருந்து நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டைத்தேங்காய் வைத்து வழிபட்டு கோயிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக வழிபடுகின்றனர்.
இருப்பிடம்: வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ள நாயுடு மங்கலம் கூட்டுரோட்டில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இக்கோயில்.

ஆவணி கிருத்திகை தினமான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதால் கிடைக்கும் மிகச் சிறப்பான பலன்களை தெரிந்து கொள்ளலாம்.
முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய சிறப்பான ஒரு தினமாக ஆவணி கிருத்திகை தினம் இருக்கிறது. இந்த ஆவணி கிருத்திகை பெரும்பாலும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் வருகின்றது. எனினும் இந்த மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது நன்மை தரும்.
முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.
வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செண்பகம், செம்பருத்தி, செவ்வரளி, சிவப்பு ரோஜா மலர்ககளில் ஏதாவது ஒரு வகையினை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படியான முறைகளில் முருகனை ஆவணி மாத கிருத்திகை தினத்தில் வழிபட்டு உங்கள் வீட்டின் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேசரி, பஞ்சாமிர்தம் போன்றவற்றை இந்த தினத்தில் பிரசாதமாக வழங்கி நீங்களும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இந்த ஆவணி மாத கிருத்திகை வழிபாடு மற்றும் விரதம் மேற்கொள்வதால் உங்களுக்கு ஏற்படுகின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும். எதிரிகளின் தொல்லை, கொடிய நோய்கள்,காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். பூமி லாபம் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.