search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விஷ்ணு
    X
    விஷ்ணு

    இந்த விரதம் அனுஷ்டித்தால் இழந்தவற்றை மீண்டும் பெறலாம்

    பீம ஏகாதசி ஏகாதசி அன்று முழுமையாக விரதம் இருந்தவர்கள், இழந்தவற்றை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.
    பாண்டவர்களுள் ஒருவனாக விளங்கிய பீமன் சாப்பாட்டில் பிரியம் கொண்டவன். அவன் தனக்கு அருள் கிடைக்க வேண்டி ஏகாதசி விரதமிருக்க முடிவெடுத்தான். ஆனால், அவனால் பட்டினியாக இருக்கமுடியாது. எனவே, குருவாக விளங்கும் வியாச பகவானிடம் இதைப்பற்றி எடுத்துரைத்தான்.

    ஒரே ஒரு ஏகாதசியில் மட்டும் நான் முழுமையாக உபவாசம் இருக்கின்றேன். ஆனால் எனக்கு எல்லா ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலன் கிடைக்கவேண்டும் என்று சொன்னான். அதற்கு வியாச முனிவர், ‘ஆனி மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று விரதமிருந்தால் உனக்கு முழுமையான பலன் கிடைக்கும்’ என்று அருள்புரிந்தார்.

    அன்று முதல் ஆனி மாத ஏகாதசி ‘பீம ஏகாதசி’ என்று அழைக்கப்பெற்றது. அந்த ஏகாதசி அன்று முழுமையாக விரதம் இருந்தவர்கள், இழந்தவற்றை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.
    Next Story
    ×