என் மலர்
முக்கிய விரதங்கள்
வாமன ஏகாதசி அன்று மேற்கொள்ளும் உலகளந்த பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மன நலமும் உடல் நலமும் அருளும் இந்த ஏகாதசி திதியின் சிறப்புகளைப் புராணங்கள் போற்றுகின்றன.
துயர் தீர்க்கும் வாமன ஏகாதசி விரதம். வாமன ஏகாதசி அன்று மேற்கொள்ளும் உலகளந்த பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மன நலமும் உடல் நலமும் அருளும் இந்த ஏகாதசி திதியின் சிறப்புகளைப் புராணங்கள் போற்றுகின்றன.
ஆவணி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசிக்கு பரிவர்த்தினி ஏகாதசி என்றும் வாமன ஏகாதசி என்றும் பெயர். வாமன அவதாரம் நிகழ்ந்தது ஆவணி மாத ஏகாதசி நாளில் என்பதால் இந்த ஏகாதசிக்கு வாமன ஏகாதசி என்னும் பெயர் வாய்த்தது. பொதுவாகவே ஏகாதசி திதி மிகவும் மகிமை நிறைந்த விரதநாளாகக் கருதப்படுவது.
அதிலும் வாமன ஜயந்தியும் இணைந்து வரும் இந்த நன்னாள் பன்மடங்கு புண்ணியங்களை அருளும் நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகளை பகவான் கிருஷ்ணரே யுதிஷ்ட்டிரருக்கு எடுத்துச் சொல்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.

மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி.
மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது, தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள்தரும்.
லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை, பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும். காலையில் ஸ்ரீமகாலட்சுமி படத்தை 12 அல்லது அதன் மடங்கு களில் வலம் வரவும். பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும். நெய் தீபம் ஏற்றவும்.
மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை 3 முறை பாடவும். நைவேத்தியத்தை பெண் குழந்தைகளுக்கு (பிரசாதமாக) பகிர்ந்து கொடுக்கவும். இதையே ஆடி மாதம் செய்தால் அதன் பெயர்தான் வரலட்சுமி விரதம். ஆடி மாதம் செய்யும்போது வயதான சுமங்கலிகளை வர வழைத்து அவர்களை வணங்கி ஆசி பெறுவது நன்று.

இந்துக்களின் முக்கியமான வழிபாடுகளில் விரதங்களும் ஒன்று. சகல செல்வங்களையும் அருளும் அற்புதமான விரதங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அனந்த விரதம், அஜா மற்றும் பத்மநாபா ஏகாதசிகள் ஆகிய விரதங்களும் திருமாலுக்கு மிக உகந்தவை. அம்பாளுக்கு உகந்த சரத் ருதுவில் வரும் சாரதா நவராத்திரி, லலிதா சஷ்டி விரதம், உமாமகேஸ்வர விரதம், கேதார கௌரி விரதம், பிள்ளையாருக்கு உரிய தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய புண்ணிய தினங்களையும் தன்னகத்தே கொண்டது புரட்டாசி.
ஜேஷ்டா விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியன்று மூதேவியை நோக்கிச் செய்யப்படும் விரதம் இது. ‘எங்களை நீ பீடிக்காதே!’ என்று மூதேவியை வேண்டுவதாக உள்ள விரதம்.
தூர்வாஷ்டமி விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் செய்யப்படும் விரதம் இது. இந்த விரத நாளில், வடக்கு நோக்கிப் படர்ந்திருந்து, நன்கு வெண்மை படர்ந்த அறுகம் புற்களைக் கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட வேண்டும். இதனால் குடும்பம் செழிக்கும்.
மஹாலட்சுமி விரதம்: புரட்டாசி மாத வளர் பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்துச் செய்யப்படும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து, கனகதாரா ஸ்தோத்திரம் முதலான திருமகள் துதிப்பாடல்களைப் படித்து திருமகளை வழிபட்டு வந்தால், நம் வறுமைகள் நீங்கும்; வாழ்க்கை வளம் பெறும்.
கபிலா சஷ்டி விரதம்: புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு (தாமிர) வண்ணம் கொண்ட பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம்.
அனந்த விரதம்: புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கறுப்பைத் தவிர்த்து ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் புதன் கிழமையில் வருகிற விசாகம் நட்சத்திர தினத்தன்று புதன் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 புதன் கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
நவகிரகங்களில் பச்சை நிறம் கொண்ட புதன் கிரகமும் மனிதர்களுக்கு அறிவு, செல்வ வளமையை தரும் கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். அவரின் அருளை நாம் பெற மேற்கொள்ள கூடிய “புதன் கிழமை விரதம்” பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் புதன் கிழமையில் வருகிற விசாகம் நட்சத்திர தினத்தன்று புதன் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 புதன் கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை கழுவி சுத்தம் செய்து, பீடம் வைத்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும்.
பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும். பீடத்தில் புத பகவானின் சிறிய படத்தை வைத்து, அப்படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது பச்சை நிற துணியை வைத்து, பச்சை காய்கறிகள் மற்றும் இனிப்புகளை நைவேத்தியம் வைக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்களும் பச்சை நிற உடைகளை அணிந்து கொண்டு நெய் தீபங்கள் ஏற்றி, சந்தன மணம் கொண்ட தூபங்கள் கொளுத்தி புதன் பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.
புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை ஏதும் உண்ணாமல், அருந்தாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் புதன் பகவானுக்கு பூஜைகள் செய்ய வேண்டும். மாலையில் புதனுக்கு பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதம் முடித்ததும் ஒரு பிராமணருக்கு தானம் அளிப்பது மிகுந்த நன்மையை தரும். பச்சை நிற ஆடைகள், பச்சை நிற காய்கறிகள் தானம் அளிப்பது உங்களின் புதன் கிரக தோஷங்கள் நீங்கி புதன் பகவானின் ஆசிகளை உங்களுக்கு தரும்.
நவகிரகங்களில் புதன் பகவான் ஆனவர் மனிதர்களுக்கு சுக போகங்களை அளிக்கும் திருமால் அம்சம் கொண்டவராக இருக்கிறார். எனவே புதன் கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் திருமால் அருள் பெற்று மிகுந்த செல்வ சேர்க்கை கிடைக்க பெறுகின்றனர். தொழில், வியாபார திறனுக்கு காரகனாக புதன் இருப்பதால் தொழில், வியாபாரங்கள் வெற்றியடைந்து லாபங்கள் பெருகி, புகழ் உண்டாகும். அறிவாற்றலுக்கும் புதன் அதிபதி என்பதால் இவ்விரதம் மேற்கொள்ளும் மாணவர்கள் கல்வி, கலைகளில் சிறந்து பல நன்மைகளை பெறுவார்கள்.

இறைவனும் இறைவியும் இணைந்த இந்த வடிவத்தை வைத்து மேற்கொள்ளும் விரதத்தைத் தொடங்கினால், தொடர்ந்து 16 வருடங்கள் வரை இருக்க வேண்டும்.
‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை, சிவம் இல்லையேல் சக்தி இல்லை’ என்பார்கள். இரண்டும் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலே, உலகம் இயங்கும் என்பதை வலியுறுத்தும் தத்துவம் இது. அப்படி சிவனும், சக்தியும் இணைந்திருக்கும் வடிவமே, ‘உமா மகேஸ்வரர்’ வடிவம். இந்த வடிவத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் நினைத்து இருக்கும் விரதத்திற்கு ‘உமா மகேஸ்வர விரதம்’ என்று பெயர். பிரிந்த தம்பதியர் இணைவதற்கும், தம்பதியருக்குள் எப்போதும் ஒற்றுமை நிலவுவதற்கும் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அத்ரி மகரிஷிக்கும், அனுசூயா தேவிக்கும் பிறந்தவர், துர்வாசர். இவர் சிறந்த சிவ பக்தர். தவசீலரான துர்வாசர் கொஞ்சம் கோபக்காரரும் கூட. சாதாரணமாக ஒரு முனிவர் கோபம் கொண்டால், அவரது தவத்தின் வலிமை குறையும். ஆனால் துர்வாசர் கோபம் கொண்டால், அவரது தவ வலிமை அதிகரிக்கும். ஏனெ னில் அவரது கோபத்திற்குப் பின்னால், இந்த உலகத்தின் நன்மைகள் அடங்கியிருக்கும்.
ஒரு முறை கயிலை சென்ற துர்வாச முனிவருக்கு, சிவபெருமானின் கழுத்தில் கிடந்த வில்வ மாலை கிடைத்தது. அதனை வழியில் சந்தித்த இந்திரனுக்கு அளித்தார், துர்வாசர். ஆனால் இந்திரன் அந்த மாலையை அலட்சியப்படுத்தியதால், அவனுக்கு சாபம் அளித்து விட்டு, அதே கோபத்தோடு வந்து கொண்டிருந்தார். அப்போது கருடன் மீது வருகை தந்த மகாவிஷ்ணு வைச் சந்தித்தார். மகாவிஷ்ணு, மகாலட்சுமியை சந்திப்பதற்காக விரைந்து வைகுண்டம் சென்று கொண்டிருந்தார்.
மகாவிஷ்ணுவை சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்த துர்வாசர், சிவபெருமானின் வில்வ மாலையை விஷ்ணுவிடம் கொடுத்தார். மகாலட்சுமியை சந்திக்கும் ஆவலில் இருந்த விஷ்ணு, அந்த மாலையை வாங்கி கருடனின் மேல் வைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். தான் அளித்த ஈசனின் மாலையை, கழுத்தில் அணி யாது, கருடனின் மீது வைத்த விஷ்ணுவின் மேல், துர்வாசருக்கு கோபம் வந்தது.
தன்னையும், ஈசனையும் விஷ்ணு அலட்சியப்படுத்திவிட்டதாக நினைத்த துர்வாசர், “மகாலட்சுமி வைகுண்டத்தில் இருக்க மாட்டார். அவர் பாற்கடலுக்குள் சென்று விடுவார். பின் ஒரு சமயம், பாற்கடல் கடையப்படும்போது அவர் வெளிப்படுவார்” என்று சபித்துவிட்டார்.
இந்த நிலையில் வைகுண்டத்தில் மகாலட்சுமி இல்லாததால், ஈரேழு உலகங்களுக்கும் சென்று பார்த்தார், மகாவிஷ்ணு. எங்கும் மகாலட்சுமியைக் காணவில்லை. மகாலட்சுமி இல்லாததால், அனைத்து உலகங்களும் லட்சுமி கடாட்சம் இழந்து வறுமையில் வாடின. இதற்கான காரணம், துர்வாசரின் கோபம் என்பதை மகாவிஷ்ணு அறிந்து கொண்டார்.
எனவே அவர் கவுதம முனிவரின் ஆலோசனைப்படி, உமா மகேஸ்வர விரதத்தை கடைப்பிடித்தார். அதன் பயனாக பின்னாளில், அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அதற்குள் இருந்து மகாலட்சுமி வெளிப்பட்டாள். உமாமகேஸ்வர விரதத்திற்கு அப்படியொரு மகிமை இருக்கிறது.
விரதம் இருக்கும் முறை
சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம் என்று, சிவபெருமானுக்கு எட்டு விதமான விரதங்கள் இருக்கின்றன. இவற்றில் உமா மகேஸ்வர விரதத்தை ஒருவர் முறைப்படி கடைப்பிடித்து வந்தால், மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
சிவனின் அற்புத வடிவங்களில் உமா மகேஸ்வர வடிவமும் ஒன்று. இறைவனும் இறைவியும் இணைந்த இந்த வடிவத்தை வைத்து மேற்கொள்ளும் விரதத்தைத் தொடங்கினால், தொடர்ந்து 16 வருடங்கள் வரை இருக்க வேண்டும். விரத நாளன்று காலையில் குளித்து முடித்து இறைவனை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் ஒரு கலசத்தில் உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து, 16 வகையான பூஜைகளை செய்ய வேண்டும்.
சிலர் உமா மகேஸ்வரர் சிலையை வைத்தும் வழிபடுவார்கள். அப்படி வழிபட்டால் 16 ஆண்டுகள் கழித்து அந்த சிலையை, ஏதாவது ஒரு சிவன் கோவிலில் சேர்த்துவிட வேண்டும். முதல் ஆண்டு இந்த விரதத்தை தொடங்குபவர்கள் நைவேத்தியமாக அதிரசம் செய்ய வேண்டும். மற்ற ஆண்டுகளில் சிவனுக்கு விருப்பமான எதையும் செய்து படைக்கலாம். பூஜை முடிந்ததும் சிவனடியார்கள், விருந்தினர்களுக்கு உணவிட்டு பிறகே விரதமிருந்தவர்கள் உணவருந்த வேண்டும். இந்த விரதத்தின் முக்கிய நோக்கியமே உணவிடுவதுதான்.

திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும்.
கேரள மக்களின் பாரம்பரிய விழா ஓணம் பண்டிகை. அந்த மாநில மக்களால் சாதி, சமய பாகுபாடின்றி கொண்டாடப்படும் சிறப்பு மிகு திருவிழா அது. தமிழ் மாதமான ஆவணி, கேரளாவில் ‘சிங்க மாதம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த மாநிலத்தவர்களின், ஆண்டு தொடக்க மாதமும் அதுதான். அந்த சிங்க மாதத்தின் திருவோண நட்சத்திரத்தில் வளர்பிறையில் ‘ஓணம் பண்டிகை’ கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவிற்கு உகந்த நட்சத்திரம் திருவோணம் ஆகும். மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்பதற்காக வாமன அவதாரம் எடுத்தது திருவோணம் நட்சத்திரத்தில்தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலய அர்த்தஜாம பூஜை முடித்து, நடை சாத்தப்பட்டிருந்தது. அப்போது கருவறையில் எரிந்த விளக்கு அணையும் தருவாயில் இருந்தது. விளக்கின் நெய்யைக் குடிக்க வந்த எலி ஒன்றின் மூக்கு பட்டு, விளக்கு திரி தூண்டப்பட்டது. இதனால் விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. விளக்கு அணையாமல் இருக்கச் செய்த எலியை, அடுத்தப் பிறவியில் அரசனாகப் பிறக்க, ஈசன் அருள்புரிந்தார்.
சிவபெருமானின் அருளைப் பெற்ற எலி, மறு பிறவியில் அசுர குலத்தில் ‘பலி’ என்ற பெயரில் மன்னராகி, கேரளாவை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். தனது ஆற்றலால், தேவர்களைக்கூட பலி மன்னர் தோற்கடித்தார். இதனால் அவர் மகாபலி சக்கரவர்த்தி என்று பெயர்பெற்றார். அவர் அஸ்வமேத யாகம் செய்ய முயன்றபோது, தேவர்களின் நலன் கருதி வாமனராக வந்த திருமால், மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவரை ஆட்கொண்டார்.
மகாபலியை, வாமனர் ஆட்கொண்ட தினம் ஆவணி மாதம் திருவோணம் ஆகும். அன்றைய தினம் மகாபலி மன்னன், தன்மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? என்பதை பார்ப்பதற்காக பாதாள லோகத்தில் இருந்து கேரளாவுக்கு வருவதாக ஐதீகம். இதை நினைவு கூறும் வகையிலும், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், ஓணம் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
மகாபலி மன்னனின் வருகைக்காக இந்த திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. 10-வது நாளாக திருவோணம் தினம் கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மக்கள் வீடுகளை அலங்கரித்து திருவிளக்கேற்றி வழிபடுவார்கள். கும்மியடித்து மகிழ்வர். எல்லா கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
பக்தி பாடல்களை பாடி, பிரார்த்தனை செய்வர். குடும்ப பெரியவர்கள் புத்தாடைகளை வழங்க, அதை குடும்பத்தில் உள்ளவர்கள் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி பெற்று அணிந்து மகிழ்வர். ஓணம் அன்று சிறப்பான உணவு வகைகளை சமைத்து உறவினர்களுடன் உண்டு மகிழ்வார்கள். அன்றைய விருந்தில் அடப்பிரசாதம் என்னும் ஸ்பெஷல் பாயசம் இடம் பெறும். இளைஞர்கள் வாண வேடிக்கை செய்து மகிழ்வர். அன்று மாலை கேரளாவில் ‘செண்டை’ என்று அழைக்கப்படும் கேரள பாரம்பரிய மேள தாளத்துடன் புலி ஆட்டம், சிங்காரி மேளம், கதகளி நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பாம்பு போன்ற நீண்ட படகுப்போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெறும்.
கேரள மக்கள் எங்கிருந்தாலும் கொண்டாடி மகிழும் பண்டிகை ஓணம் பண்டிகை ஆகும். திருவோணத்தன்று பெருமாள் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். விரதம் இருக்கும் பக்தர்கள் திருவோணத்துக்கு முதல் நாள் இரவு உணவை தவிர்க்க வேண்டும். ஓணம் பண்டிகையின் போது மகா விஷ்ணுவை வணங்கி துதிப் பாடல்கள் பாட வேண்டும். விஷ்ணு புராணங்களை படிக்கலாம். சுவாமிக்கு நிவேதித்தப் பொருட் களை ஒரு பொழுது சாப்பிடலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அன்று வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு பலன்களை தரும்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருவோணத்தன்று தீபம் ஏற்றப்படும். இதை சாஸ்ரதீப அலங்கார சேவை என்பர். அன்று ஏழுமாலையானின் உற்சவரான மலையப்பசாமி ஊர்வலமாக 4 மாடங்கள் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு எழுந்தருள்வார். அங்கு ஆயிரத்தெட்டு திரிகளை கொண்ட நெய் விளக்கு ஏற்றப்படும். அப்போது திருமலையே ஜோதி மயமாக காட்சி தரும்.
திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும்.

சனிக்கிழமைகளில் சாயா புத்திரன் சனி பகவானுக்கு விரதம் இருந்தால், அவரின் அருளால் சனி தோஷத்தின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.
சனிக்கிழமைகளில் சாயா புத்திரன் சனி பகவானுக்கு விரதம் இருந்தால், அவரின் அருளால் சனி தோஷத்தின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. ஆனால் அவருக்கு எந்தவிதம் விரதம் இருப்பது, என்ன செய்தால் அவரின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்கலாம் என்ற தெளிவு நம்மில் பலருக்கு இல்லை.
சனீஸ்வரருக்கு உகந்த விரதங்களும் அதனை கடைபிடிக்கும் முறைகளையும் தெரிந்துக் கொள்ளலாம்..
சனி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடும் துன்பத்திற்கு ஆளானவர்கள் சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து சனி பகவானின் வாகனமான காக்கைக்கும், மற்றும் ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும். அன்று, ஒரு வேளை உணவு எடுத்துக்கொண்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.
மாலை சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள சனிபகவான் சந்நிதியில்,ஒரு தேங்காயை இரண்டு பகுதிகளாக வெட்டி, அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றி வழிபடலாம்.
சனிக் கிழமைகளில், சனிபகவானுக்கு நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலநிற ஆடைசாத்தி, நைய்வேதியமாக எள் சாதம், வடைமாலை படைத்து வழிபட பலன் கிடைக்கும். அபிஷேக, ஆராதனைகளும்,நவக்கிரக சாந்தி ஹோமங்களும் சனிபகவானை குளிர்விக்கும்.
திலசூரணம் அதாவது எள்ளை சுத்தம் செய்து, வறுத்து அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து செய்யப்படுவது. இதனை சனிக்கிழமைகளில் வெங்கடேசப்பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து அனைவருக்கும் விநியோகம் செய்யலாம்.
இவை எல்லாவற்றையும் விட, அவரவர்களது பிறந்த ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மையான பலன்களை தரும்.

மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. மகாலட்சுமிக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நேரம் எதுவென்று அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் ஒரு நாளைக்கு இரண்டு முறை, காலையிலும், மாலையிலும் விளக்கேற்ற வேண்டும். சுவாமி மாடத்துக்கு முன்பும், வாசல் மாடத்திலும் விளக்கேற்றுவது நல்லது. காலையில் விளக்கேற்ற முடியாதவர்கள் மாலையில் 5.30 மணியில் இருந்து 6 மணிக்குள்ளாக சுவாமி படத்துக்கு விளக்கேற்ற வேண்டும்.
அதிகாலையில் வீட்டின் முன்புறம், பின்புறம் சாணம் தெளிக்க வேண்டும்.
பின்புறமாக மூதேவி வெளியேறவும், முன்புறமாக லட்சுமி (ஸ்ரீதேவி) வீட்டுக்குள் வரவும் இப்படிச் சாணம் தெளிக்க வேண்டும். தெளிப்பதற்கு பசுஞ்சாணத்தையே உபயோகிக்க வேண்டும். கன்றுக் குட்டி போட்டுள்ள பசுவின் சாணத்தையே தெளிக்க உபயோகிக்க வேண்டும். அந்தப் பசு சாணம் போடும் போது சாணம் பூமியில் விழுவதற்கு முன் ஒரு பாத்திரத்தில் பிடித்து அதைக் கொண்டே சாணம் தெளிக்க வேண்டும். அல்லது சாணம் கிடைக்காவிட்டால், பூமியில் சாணம் விழுந்து விட்டால் அதன் மேற்புறத்தை ஒதுக்கி விட்டு, நடுப்பக்கத்தில் இறுகாமல் இருக்கும் சாணத்தை மட்டும் கொண்டு வந்து கரைத்துத் தெளிக்க வேண்டும்.
மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது, தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள்தரும்.
லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை, பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.
அதிகாலையில் வீட்டின் முன்புறம், பின்புறம் சாணம் தெளிக்க வேண்டும்.
பின்புறமாக மூதேவி வெளியேறவும், முன்புறமாக லட்சுமி (ஸ்ரீதேவி) வீட்டுக்குள் வரவும் இப்படிச் சாணம் தெளிக்க வேண்டும். தெளிப்பதற்கு பசுஞ்சாணத்தையே உபயோகிக்க வேண்டும். கன்றுக் குட்டி போட்டுள்ள பசுவின் சாணத்தையே தெளிக்க உபயோகிக்க வேண்டும். அந்தப் பசு சாணம் போடும் போது சாணம் பூமியில் விழுவதற்கு முன் ஒரு பாத்திரத்தில் பிடித்து அதைக் கொண்டே சாணம் தெளிக்க வேண்டும். அல்லது சாணம் கிடைக்காவிட்டால், பூமியில் சாணம் விழுந்து விட்டால் அதன் மேற்புறத்தை ஒதுக்கி விட்டு, நடுப்பக்கத்தில் இறுகாமல் இருக்கும் சாணத்தை மட்டும் கொண்டு வந்து கரைத்துத் தெளிக்க வேண்டும்.
மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது, தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள்தரும்.
லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை, பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.
நோயில்லா வாழ்வைப் பெற அடிப்படைத் தேவையான ஆரோக்கியத்தை, வணங்குவதன் மூலமாக நமக்கு கொடுப்பவர் ஆனைமுகப்பெருமான்.
‘குட்டுப் போட்டாலும் மோதகக் கையான்பால் குட்டுப் போட வேண்டும்’ என்ற பழமொழிதான் ‘குட்டுப்பட்டாலும் மோதிரக் கையான்பால் குட்டுப் பட வேண்டும்’ என்று மாறியது. பொதுவாக வழிபாடுகள் என்பது நமது உள்ளத்திற்கு மட்டுமல்ல, உடலிற்கும் நன்மை பயப்பதாக அமைகின்றது. இறைவழிபாட்டுத் தத்துவத்தை அழகாக முன்னோர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.
தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கர்ணம் போடுகின்றோம். இது ஒரு அற்புதமான உடற்பயிற்சி என்றும், இதை குழந்தைகள் செய்யும் பொழுது மூளைக்கு ரத்தம் அதிகமாக பாய்கிறது. மூளையில் உள்ள பகுத்தறியும் நரம்பு தூண்டப்படுகின்றது. அதன் மூலமாக அறிவாற்றல், நினைவுத் திறமை, கல்வி வளம் கிடைக்கின்றது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அங்ஙனம் நோயில்லா வாழ்வைப் பெற அடிப்படைத் தேவையான ஆரோக்கியத்தை, வணங்குவதன் மூலமாக நமக்கு கொடுப்பவர் ஆனைமுகப்பெருமான். வலது கையால் இடப்புறத்திலும், இடது கையால் வலப்புறத்திலும் குட்டிக்கொள்ளும் பழக்கமும், காதுகளின் கீழ் நுனியைப் பிடித்து இழுத்து தோப்புக்கர்ணம் போடும் அமைப்பும் நல்ல உடற்பயிற்சி ஆகும். விநாயகருக்குப் பிடித்த அருகம்புல் மாலையை முறைப்படி கசாயம் வைத்து மருத்துவர்கள் உடல் நோய் போகக் கொடுப்பார்கள். எனவே ஆனைமுகப் பெருமானின் விரதம் இருந்து வழிபாட்டினால் ஆரோக்கியத்திலும் மகிழ்ச்சி கிடைக்கின்றது.

அவணி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். இன்றைய தினம் காலை முதல் மாலை வரையில் பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் அருகில் உள்ள வைரவர் கோயிலுக்கு அல்லது சந்நிதிக்கு சென்று பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து பைரவரை தியானிப்பதும்,வணங்குவது சிறப்பாகும்.
மேற்சொன்ன முறைப்படி இன்று பைரவப்பெருமானை வணங்குபவர்களுக்கு நெடுநாட்களாக உங்களுக்கு வந்து சேராமல் இருந்த பணவரவுகள் கூடிய விரைவில் உங்களிடம் வந்து சேரும். உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பொருளாதார கஷ்ட நிலை படிப்படியாக நீங்கும். வீண் செலவுகள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை அதிகரிக்கும். சோம்பல் தன்மை நீங்கி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.

காலபைரவருக்கு வார நாட்களில் விரதம் இருந்து ராகு காலத்தில் பூஜை செய்து வழிபட்டால் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீரும்.
காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப்பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பாகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, இனிப்பு பண்டங்களும் சமர்ப்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களை சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் சிறப்பிக்கப்படுகிறது.
* திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும். வழக்கில் வெற்றி கிட்டும்.
* திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும்.
* செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும்.
* புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம். தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.
* தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர் களால் மாலை சூட்டி, பால் பாயாசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
* வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும்.
* சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயாசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

ஒரு ஆணின் ஜாதகத்திலோ, பெண்ணின் ஜாதகத்திலோ ராகு-கேதுவிற்கு நடுவில் அனைத்து கிரகங்களும் அமைந்தால் அது ‘கால சர்ப்ப தோஷம்’ ஆகும்.

இப்படிப்பட்ட சர்ப்ப தோஷ ஜாதகம் அமைந்தவர்கள் சந்தோஷம் பெறுவது சிரமம். திருமணத்தடை, பிள்ளைப்பேற்றில் தடை என்று ஒவ்வொரு தடைகளையும் சந்திக்க நேரிடும். அப்படிப்பட்டவர்கள் ஜாதகத்தில் ராகு- கேது இருக்கும் இடமறிந்து அதற்குரிய நட்பு கிரகத்தின் நாளில் அதிகாலையில் நீராடி, புளிப்பு கலந்த பதார்த்தத்தையும், அன்னம், உளுந்து கலந்த பலகாரத்தையும் தயாரித்து தேங்காய், பழம், வெற்றிலை-பாக்குடன் நுனி இலையில் வைத்து, மந்தாரை மலருடன் ராகு படத்திற்கு சூட்டி வழிபட்டு விரதம் இருப்பது நல்லது.
அதேபோல் விரதம் இருந்து கேதுவிற்கு புளிப்பு சேர்ந்த சாதம், கொள்ளு கலந்த பலகாரம் படைத்து ஐந்து வித மலர்களை மாலைகளாக்கி கேது படத்திற்கு சூட்டி வழிபடவேண்டும். நாகர் கவசத்தை நாள்தோறும் அல்லது வெள்ளி தோறும் பாடி பூஜித்தால் சர்ப்ப கிரகங்கள் சந்தோஷத்தை வழங்கும். நாகத்துடன் கூடிய விநாயகப் பெருமானையும் வழிபட்டு, பின்னோக்கி ராகுவிற்கு நான்கு பிரகாரமும், கேதுவிற்கு ஏழு பிரகாரமும் வர வேண்டும்.