search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகர்
    X
    விநாயகர்

    ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் தரும் ஆனைமுகப் பெருமான் விரதம்

    நோயில்லா வாழ்வைப் பெற அடிப்படைத் தேவையான ஆரோக்கியத்தை, வணங்குவதன் மூலமாக நமக்கு கொடுப்பவர் ஆனைமுகப்பெருமான்.
    ‘குட்டுப் போட்டாலும் மோதகக் கையான்பால் குட்டுப் போட வேண்டும்’ என்ற பழமொழிதான் ‘குட்டுப்பட்டாலும் மோதிரக் கையான்பால் குட்டுப் பட வேண்டும்’ என்று மாறியது. பொதுவாக வழிபாடுகள் என்பது நமது உள்ளத்திற்கு மட்டுமல்ல, உடலிற்கும் நன்மை பயப்பதாக அமைகின்றது. இறைவழிபாட்டுத் தத்துவத்தை அழகாக முன்னோர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள்.

    தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கர்ணம் போடுகின்றோம். இது ஒரு அற்புதமான உடற்பயிற்சி என்றும், இதை குழந்தைகள் செய்யும் பொழுது மூளைக்கு ரத்தம் அதிகமாக பாய்கிறது. மூளையில் உள்ள பகுத்தறியும் நரம்பு தூண்டப்படுகின்றது. அதன் மூலமாக அறிவாற்றல், நினைவுத் திறமை, கல்வி வளம் கிடைக்கின்றது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

    அங்ஙனம் நோயில்லா வாழ்வைப் பெற அடிப்படைத் தேவையான ஆரோக்கியத்தை, வணங்குவதன் மூலமாக நமக்கு கொடுப்பவர் ஆனைமுகப்பெருமான். வலது கையால் இடப்புறத்திலும், இடது கையால் வலப்புறத்திலும் குட்டிக்கொள்ளும் பழக்கமும், காதுகளின் கீழ் நுனியைப் பிடித்து இழுத்து தோப்புக்கர்ணம் போடும் அமைப்பும் நல்ல உடற்பயிற்சி ஆகும். விநாயகருக்குப் பிடித்த அருகம்புல் மாலையை முறைப்படி கசாயம் வைத்து மருத்துவர்கள் உடல் நோய் போகக் கொடுப்பார்கள். எனவே ஆனைமுகப் பெருமானின் விரதம் இருந்து வழிபாட்டினால் ஆரோக்கியத்திலும் மகிழ்ச்சி கிடைக்கின்றது.
    Next Story
    ×