search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனி பகவான்
    X
    சனி பகவான்

    சனியின் தாக்கத்தை குறைக்க விரதம் இருந்து இதை செய்தால் போதும்

    சனிக்கிழமைகளில் சாயா புத்திரன் சனி பகவானுக்கு விரதம் இருந்தால், அவரின் அருளால் சனி தோஷத்தின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை.
    சனிக்கிழமைகளில் சாயா புத்திரன் சனி பகவானுக்கு விரதம் இருந்தால், அவரின் அருளால் சனி தோஷத்தின் தாக்கம் குறையும் என்பது நம்பிக்கை. ஆனால் அவருக்கு எந்தவிதம் விரதம் இருப்பது, என்ன செய்தால் அவரின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பிக்கலாம் என்ற தெளிவு நம்மில் பலருக்கு இல்லை.

    சனீஸ்வரருக்கு உகந்த விரதங்களும் அதனை கடைபிடிக்கும் முறைகளையும் தெரிந்துக் கொள்ளலாம்..

    சனி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடும் துன்பத்திற்கு ஆளானவர்கள் சனிக்கிழமைகளில் பூரண உபவாசம் இருந்து சனி பகவானின் வாகனமான காக்கைக்கும், மற்றும் ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும். அன்று, ஒரு வேளை உணவு எடுத்துக்கொண்டு, சனிபகவான் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடலாம்.

    மாலை சிவாலயத்திற்கு சென்று அங்குள்ள சனிபகவான் சந்நிதியில்,ஒரு தேங்காயை இரண்டு பகுதிகளாக வெட்டி, அதில் நல்லெண்ணெய் விட்டு எள் முடிச்சிட்டு தீபமாக ஏற்றி வழிபடலாம்.

    சனிக் கிழமைகளில், சனிபகவானுக்கு நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்து கருப்பு அல்லது நீலநிற ஆடைசாத்தி, நைய்வேதியமாக எள் சாதம், வடைமாலை படைத்து வழிபட பலன் கிடைக்கும். அபிஷேக, ஆராதனைகளும்,நவக்கிரக சாந்தி ஹோமங்களும் சனிபகவானை குளிர்விக்கும்.

    திலசூரணம் அதாவது எள்ளை சுத்தம் செய்து, வறுத்து அதில் வெல்லம், ஏலக்காய் பொடி சேர்த்து இடித்து செய்யப்படுவது. இதனை சனிக்கிழமைகளில் வெங்கடேசப்பெருமாளுக்கும், சனிபகவானுக்கும் படைத்து அனைவருக்கும் விநியோகம் செய்யலாம்.

    இவை எல்லாவற்றையும் விட, அவரவர்களது பிறந்த ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ அல்லது சனிபகவானுடைய பிறந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரம் அன்றோ ஒவ்வொரு மாதமும் அல்லது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அர்ச்சனைகள் செய்வது மிக மிக நன்மையான பலன்களை தரும்.
    Next Story
    ×