என் மலர்
தோஷ பரிகாரங்கள்
குணப்படுத்த முடியாத புற்றுநோய்க்கு மருந்து தரும் நாயகியாக விளங்குகிறாள் பாகம் பிரியாள். இவளது சந்நிதியில் தரும் தீர்த்தத்தை அருந்தினால், புற்றுநோய் தீரும் என்பது நம்பிக்கை.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் சிவகங்கை மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனை வழிபட்டு தீர்க்காயுள் பெற்று வாருங்கள். குணப்படுத்த முடியாத புற்றுநோய்க்கு மருந்து தரும் நாயகியாக விளங்குகிறாள் பாகம் பிரியாள். இவளது சந்நிதியில் தரும் தீர்த்தத்தை அருந்தினால், புற்றுநோய் தீரும் என்பது நம்பிக்கை.
மரணபயத்துடன் இங்கு வருவோர், புத்துணர்வு பெற்று நம்பிக்கையுடன் செல்கின்றனர். இங்குள்ள தலவிருட்சமான அரசமரத்தை சுற்றி வந்தால் மகப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. இவ்வூர் மக்கள் தங்கள் தாய்வழி சொத்தை அம்பாளுக்குரியதாக கருதி, மகள்களுக்கு எழுதி வைக்கின்றனர். இவ்வூர் அருகிலுள்ள திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயில் புகழ்மிக்கது.
மதுரையில் இருந்து 140 கி.மீ., தூரம் ராமநாதபுரம். அங்கிருந்து 60 கி.மீ., தூரம் திருவாடானை. இங்கிருந்து டவுன் பஸ்களில் 7 கி.மீ., சென்றால் திருவெற்றியூர்.

பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.
தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும். எ
த்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.
உயிரையும், உடலையும் பாதுகாக்கும் உடனடி நிவர்த்திப் பரிகாரங்கள் – மகா மிருத்யுஞ்ஜய ஹோமம் -திருக்கடையூரில் செய்வது ஸ்ரீ வாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை தரிசிப்பது, லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மரை வழிபடுவது, ஆஞ்ச நேயரை வழிபடுவது, ஆகும்.

நமக்கு செய்கின்ற எதிர்மறையான சக்தியின் தாக்குதல்களை தடுப்பதற்கான ஒரு சிறந்த ஹோமம் தான் சத்ரு சம்ஹார ஹோமம். மிக அற்புதமான இந்த ஹோமத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் சிறப்பான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
புராணங்களின்படி சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பிழம்பாக தோன்றியவர் தான் ஆறுமுகம் எனப் பெயர் பெற்ற முருகப்பெருமான். தேவர்களுக்கு தொல்லை தந்து கொண்டிருந்த சூரபத்மன் மற்றும் அவனின் அரக்கர் படையை அழிப்பதற்காகவே அவதாரம் செய்த அந்த முருகப்பெருமானின் சாந்நித்தியத்தை வரவழைத்து எதிரிகள் தொல்லையையும் அவர்களால் செய்யப்பட்ட மாந்திரீக ஏவல்களையும் ஒழிக்கும் ஒரு ஹோமம் தான் சத்ரு சம்ஹார ஹோமம்.
சத்ரு சம்ஹார ஹோமத்தை உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பொருந்தும் திதிகளில் செய்வது சிறப்பு. இந்த சத்ரு சம்ஹார ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்து கொள்ளலாம். முருகன் வழிபாட்டிற்குரிய வைகாசி விசாகம், கார்த்திகை மாதம், கந்த சஷ்டி விரத தினங்கள் போன்ற காலங்களில் செய்வது சிறப்பான பலன்களை தரும். முருகன் கோயிலில் இந்த ஹோமத்தை செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது. இந்த ஹோமத்திற்காக 6 வகையான பூக்கள், பழங்கள், திரவியங்கள் மற்றும் நைவேத்திய பிரசாதங்களை வழங்க வேண்டும்.
சத்ரு சம்ஹார ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.
சத்ரு சம்ஹார ஹோமத்தின் பிரதான நோக்கமாக இருப்பது நம் வாழ்வில் ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை அறவே ஒழிப்பதோடு, பின் வரும் காலங்களில் எத்தகைய எதிரிகளும் ஏற்படாமல் தடுக்க வல்லதாக இருக்கிறது. மேலும் அத்தகைய எதிரிகளால் நமக்கு தீய மாந்திரிக கலையின் மூலம் செய்யப்பட்ட செய்வினை, மாந்திரீக ஏவல் போன்றவற்றின் எதிர்மறை ஆற்றல்களை அழித்து உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் காக்கிறது. துஷ்ட சக்திகள் உங்கள் வீட்டுக்குள் எப்போதும் நுழையாமல் தடுக்கிறது காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படாமல் கெட்டது அனைத்திலும் சிறப்பான வெற்றியை பெருமாறு செய்ய வல்ல ஒரு ஹோமம் இந்த சத்ரு சம்ஹார ஹோமம் ஆகும்.

‘ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?’, ‘ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?’ என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சனி பகவான்ஒருவருடைய ஜாதகத்தில் தோஷம் ஏற்படக் காரணம், பிறருடைய கோபமும், சாபமுமே. தோஷங்களே மனிதப் பிறப்பிற்கு காரணமாக அமைகிறது. தோஷங்கள் இல்லை என்றால் பிறப்பு இல்லை. பல ஜென்மங்களில் ஒருவர் செய்த பாவம், புண்ணியங்களின் ஆடிட்டிங் தீர்ப்புதான் இந்த பிறப்பு.
அந்தத் தீர்ப்பை உலகிற்கு வழங்கும் நீதிபதியாக சனி பகவான் இருக்கிறார். மனிதன் இந்தப் பிறவியில் அனுபவிப்பது எல்லாம், அவனுடைய கர்ம பலன்களே ஆகும். இந்த கர்ம பலன்களை கொடுக்கும் கிரகம் ‘கர்ம காரகன்’ எனப்படும் சனி பகவான். மகா சக்தி படைத்த இவர், வலிமை வாய்ந்த கிரகம். தன் நிலையில் இருந்து வழுவாமல் பாரபட்சம் இன்றி தீர்ப்பை வழங்குபவர். அதனால்தான் துலாபாரத்தை சின்னமாகக் கொண்ட துலாம் ராசியில், சுவாதி நட்சத்திரத்தில் சனி பகவான் உச்சம் பெறுகிறார்.
நவக்கிரகங்களில் உள்ள எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை இரண்டையுமே தருகின்றன. ஆனால் நாம் அனைவரும், ‘சனி பகவான் மட்டுமே கெடுபலன்களைத் தருகிறார்’ என்று எண்ணிக்கொள்கிறோம். எந்த கிரகத்தின் தசா புத்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும், அது சனி பகவானாலேயே வருகிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, ‘ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் செய்யலாமா?’, ‘ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுமா?’ என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. ஏழரைச் சனிக்கும், மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம், வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது. பலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுப விஷயங்கள் நடைபெறுவது ஏழரைச் சனியின் காலத்தில்தான் என்பது மறுக்க முடியாத உண்மை. பல வருடங்களாக தடைபடும் திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல சுப நிகழ்வுகள், சனியின் பிடியில் இருக்கும்போது எந்த தடையும் இன்றி எளிமையாக நடந்து முடிந்துவிடும்.
சராசரியாக பெண்களுக்கு 21 வயதிலும், ஆண்களுக்கு 23 வயதிலும் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுக, போகங்களை அனுபவிக்கும் பாக்கியம் ஆரம்பமாகும். திருமணம் என்ற பந்தத்தில் ஆண், பெண் இருவரின் கர்ம வினைகளும் கலந்து பூர்வ புண்ணிய, பாக்கிய ஸ்தானங்கள் முழுமையாக இயங்கும்.
ஒரு ஆணுக்கு ஏழரைச் சனி நடைபெறும் காலகட்டத்தில், அவருக்கு ‘குடும்பம் என்றால் என்ன?’, ‘மனைவி – குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற கடமைகள் என்ன?’, ‘உழைப்பின் அவசியம்’, ‘உழைப்பால் உயரும் நெறி முறை’ போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவத்தை சனி பகவான் புரிய வைப்பார்.
அதே போல் பெண்களுக்கு, ‘கணவர் மற்றும் புகுந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது?’, ‘கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும்’,
‘குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும்’ என்பது போன்ற இல்வாழ்க்கை உண்மைகளை புரிய வைப்பார்.
சனி கிரகம் ஒரு ராசியை கடக்க ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் ஆகிறது . ராசி சக்ரத்தை ஒரு சுற்று சுற்றி வர, தோராயமாக 30 ஆண்டுகள் ஆகிறது. அதனால் பெரியவர்கள் பேச்சு வழக்கில் 30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை; 30 வருடம் தாழ்ந்தவரும் இல்லை என்பார்கள். அதாவது ‘30 வருடம் எந்த துன்பத்தை மட்டுமே அனுபவித்து வாழ்ந்த மனிதரும் இல்லை. 30 வருடமும் இன்பமாக மட்டுமே வாழ்ந்தவரும் இல்லை’ என்பதே இதன் பொருள். சராசரியாக ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை குறைந்த பட்சம் 60 வருடம் என நிர்ணயம் செய்தால், அதில் 30 வருட காலம் சனி பகவானின் பிடியில் மட்டுமே மனிதர்களின் வாழ்க்கை இருக்கும்.
கோச்சாரத்தில் சனிபகவான் ராசிக்கு 3, 6, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் முன்னேற்றமான பலன்களையும், ராசிக்கு 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும்போது சற்று ஏற்றம் இறக்கம் நிறைந்த சுப – அசுப பலன்களையும் தருவார்.
ஏழரைச் சனி (7 அரை ஆண்டுகள்) என்பது, ராசிக்கு 12, 1, 2 ஆகிய இடங்களில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலம் ஆகும் . ஜென்ம ராசிக்கு 12-ல் (2 அரை ஆண்டுகள்) சஞ்சரிக்கும் காலம் ‘விரயச் சனி’ என்றும், உங்கள் ராசியில் (2 அரை ஆண்டுகள்) சஞ்சரிக்கும் காலம் ‘ஜென்ம சனி’ என்றும், ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் (2 அரை ஆண்டுகள்) காலம் ‘குடும்பச் சனி’ அல்லது ‘பாதச் சனி’ என்றும் அழைக்கப்படுவார்.
அஷ்டமச் சனி (2 அரை ஆண்டுகள்) என்பது, ராசிக்கு 8-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலமாகும். அர்த்தாஷ்டமச் சனி (2 அரை ஆண்டுகள்) என்பது, ராசிக்கு 4-ல் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலமாகும். கண்டகச் சனி (2 அரை ஆண்டுகள்) என்பது, ராசிக்கு 7-ல் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் காலகட்டமாகும்.
சனி பவான், ராசிக் கட்டத்தை ஒரு முறை வலம் வரும் 30 ஆண்டுகளில், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என 15 ஆண்டுகள் ஒரு ராசியை தன் பிடிக்குள் வைத்திருப்பார். அதன்படி மனிதனின் சராசரி ஆயுள் காலமாக 60 ஆண்டுகளில் 2 சுற்று வலம் வரும் சனி பகவான், ஒருவரை 30 ஆண்டுகள் தன் பிடியில் வைத்து, ஒருவரின் கர்ம வினைக்கு ஏற்ப, ஏற்ற- இறக்கத்தைத் தந்து வாழ்வின் தத்துவத்தை புரிய வைப்பார்.
இந்திய அரசியல் சட்டப்படி பெண்ணின் திருமண வயது 18; ஆணின் திருமண வயது 23. இருந்த போதிலும் படிப்பு, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தற்போது குறைந்த பட்சம் 25 வயதிற்கு மேல்தான் திருமணத்தை பற்றியே பலரும் சிந்திக்கிறார்கள். ஒரு சிலர் தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வரன் அமையாத காரணத்தால் ஏழரைச் சனியின் மேல் பழி போடுகிறார்கள். ஏழரைச் சனி வந்தால் திருமணம் செய்யக்கூடாது என்று திருமணத்தைத் தள்ளிப் போடுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் பல வருடங்களாக திருமணமே வேண்டாம் என்று கூறி வருபவர்களுக்குக் கூட, ஏழரைச் சனியின் ஆதிக்க காலத்தில் திருமணம் நடைபெற்று விடும் என்பதுதான் சனி பகவானின் மகத்துவம்.
ஜனன கால ஜாதக ரீதியாக பல்வேறு தோஷங்களால் சரியான திருமண வாழ்வு கிடைக்காமல் மன நிம்மதி இழந்து தவிப்பவர்கள், ஏழரைச் சனியின் காலத்தில் முயற்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும். ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

நாம் செய்யும் சில தவறுகள் நம்மிடம் செல்வம் சேராமல் தடுத்து விடும். ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களிலும் மாற்றங்களை உண்டு பண்ணினால் உங்கள் வீட்டிலும் செல்வம், பணம் போன்றவை தாராளமாக தடையின்றி வந்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு பூஜையின் பொழுது பெண்கள் தங்களின் கைகளால் விளக்கேற்ற வேண்டும். ஆண்கள் விளக்கு ஏற்றினால் அல்லது ஆண்களை விளக்கு ஏற்ற வைத்தால் அந்த வீட்டில் செல்வம் சேராது என்கிறது சாஸ்திரம். சுத்தம் இல்லாத இடத்தில் சனிபகவான் வேண்டுமானால் தாராளமாக வந்து வாசம் செய்வார். ஆனால் மகாலட்சுமி ஆனவள் வாசம் செய்வதற்கு முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டை சுற்றிலும் ஒட்டடை இருந்தால் அந்த வீட்டில் செல்வம் சேராது. அதே போல் வீட்டின் சுவற்றில் கரையான் புற்று கட்டியிருந்தாலும், பூரான் அடிக்கடி வந்து சென்றாலும் அந்த வீட்டில் செல்வம் சேராது. உடனே அவற்றை சரி செய்வதற்கான வழியை பாருங்கள்.
ஒவ்வொரு வீடுகளில் எச்சில் பாத்திரம் சேர சேர உடனே கழுவிக் கொண்டே இருப்பார்கள். அதை அப்படியே போட்டு வைக்க மாட்டார்கள். அவர்களிடம் செல்வம் அதிகமாக சேரும். எச்சில் பாத்திரத்தை அப்படியே போட்டு வைப்பவர்களிடம் நிச்சயம் செல்வம் சேர வாய்ப்பில்லை. எந்த விஷயத்தையும் நேர்மறையான எண்ணங்களுடன் அணுகுபவர்கள் எப்போதும் செல்வவளம் கொண்டு இருப்பர். வார்த்தைகளில் இல்லை, வேண்டாம், வராது போன்ற சொற்களை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. மங்களப் பொருட்களை வேண்டாம் என்று சொல்லக்கூடாது. யாசகம் கேட்பவர்களிடம் இல்லை என்ற வார்த்தை செல்லக்கூடாது. அதற்கு பதிலாக வேறு ஒரு வார்த்தையை பயன்படுத்தி நீங்கள் சொல்ல நினைப்பதை சொல்லலாம். ஆனால் இந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்களிடம் செல்வம் சேராது என்பார்கள்.
ஒரு வீட்டில் இருளானது எப்போதும் நிலவக் கூடாது. சிறு வெளிச்சமாவது எப்போதும் இருப்பது அவசியம். வெளிச்சமின்றி இருள் சூழ்ந்த சூழ்நிலையில் வீடானது இருந்தால் அந்த வீட்டில் செல்வ வளம், பணவரவு நிச்சயம் தடைபடும் என்கிறது சாஸ்திரம். அதனால் ஒரு சிறு மின் விளக்கை ஆவது எப்போதும் எரியும் படி வீட்டில் அமைத்துக் கொள்வது செல்வவளம் பெருகுவதற்கு வழிவகுக்கும். அது போல் ஒரு வீட்டில் அன்னபூரணியை அவமதிப்பு செய்பவர்களுக்கு செல்வத்தை தடுக்கும் சாபம் உண்டாகும். வீட்டில் சமையலறையில் எந்த பொருள் தீர்வதற்கு முன்பும் அவற்றை வாங்கி சேகரித்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக அரிசி, உப்பு, பால், சர்க்கரை இந்த நான்கு பொருட்கள் தீரும் வரை வாங்காமல் இருப்பது செல்வ வளத்தை தடுக்கும். உங்களிடம் பணம் வரவு நிச்சயம் தடைபடும்.
கால்வாசி இருக்கும் பொழுதே கடைகளிலிருந்து வாங்கி தேக்கம் செய்து கொள்வது மகாலட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுபோல் ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களிலும் மாற்றங்களை உண்டு பண்ணினால் உங்கள் வீட்டிலும் செல்வம், பணம் போன்றவை தாராளமாக தடையின்றி வந்து கொண்டே இருக்கும்.

திருக்காமீஸ்வரர் கோவிலில் திருமணம் கைகூடாதவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், தொழிலில் அபிவிருத்தி இல்லாதவர்களும் கலந்து கொண்டு கோபூஜையை செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கின்றனர்.
புதுவையில் தென்மேற்கு 10 கி.மீ தொலைவில் வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. வேண்டுதல் நிறைவேற கோபூஜை கோயிலின் தென் மேற்கு பகுதியில் கோசாலை உள்ளது. இங்கு 20 க்கும் மேற்பட்ட பசு மற்றும் காளை மாடுகள் உள்ளன.
இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மாலை 6 மணி முதல் 7.30 வரை கோ பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதில், திருமணம் கைகூடாதவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும், தொழிலில் அபிவிருத்தி இல்லாதவர்களும் கலந்து கொண்டு இந்த கோபூஜையை செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும் என்பதால் ஏராளமான பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்கின்றனர்.
திருமணம் முடிந்ததும் மணமக்களுடன் இங்கு கோ பூஜை செய்து சுமங்கலி பெண்களுக்கு பிரசாதங்களை வழங்கி வருகின்றனர். அது மட்டுமின்றி ஆண்கள் தொழில் அபிவிருத்திக்காக கோபூஜை செய்து பலன் அடைந்து வருவதை காண முடிகிறது.

ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்னைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.
முன்புறத்தில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், அதன் பின்புறத்தில் ஸ்ரீ நரசிம்மரையும் வணங்கி சுற்றி பிரதட்சணம் செய்தால் நான்கு வேதங்களையும், பஞ்ச பூதங்களையும், அஷ்ட லட்சுமிகளையும், எட்டு திக்கு பாலர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். 16 வகையான பேரருளும் கிடைக்கும் என்பது முன்னோர்களின் வாக்கு...!
சக்கரத்தாழ்வார் பல பழமையான திருக்கோயில்களில் தனிச்சந்நதி கொண்டு காட்சியளிப்பதைக் காணலாம். (குறிப்பாக ஸ்ரீரங்கம், காஞ்சி வரதராஜர்கோயில், திருமாலிருஞ்சோலை (கள்ளழகர்) கோயில், திருமோகூர், ஸ்ரீவில்லிப்புத்தூர்) தற்போது இவரின் மகிமையைப் புரிந்துக்கொண்டு பல திருத்தலங்களில் இவருக்குத் தனிச்சந்நதி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன.சக்கரத்தாழ்வாரின் பின்புறம் உள்ள யோக நரசிம்மரையும் பல இடங்களில் தரிசிக்கலாம். இவரை சுதர்சன நரசிம்மர் என்று போற்றுவர். ஜ்வாலா கேசமும், திரிநேத்ரமும், 16 கரங்களும் பதினாறு வித ஆயுதங்களும் உடைய இவரை வழிபடுவதால் முப்பிறவியிலும், இந்த பிறவியிலும் உண்டான பாவங்கள், மற்றவர்களால் ஏற்படும் தீங்குகள், தீவினைகள், தோஷங்களால்
கெடுதிகள் யாவும் நீங்கும்.
ஸ்ரீசுதர்சன வழிபாடு பயங்கரமான கனவு, சித்தபிரமை, சதாமனோ வியாகூலம், பேய்பிசாசு, பில்லி சூன்யம், ஏவல் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது. சுதர்சனர் பிரத்யட்ச தெய்வம். தீவிரமாக உபாசிப்பவர்களுக்கு விரும்பியதை அளித்து காப்பாற்றுவார். சுதர்சனரை வழிபடச் சித்திரை நட்சத்திர தினங்கள் சிறப்பானவை. சித்திரை அவருக்குரிய நட்சத்திரம். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகமும், ஹோட சாயுத ஸ்தோத்திரமும் சொல்லி வந்தால் எளிதில் ஸ்ரீசுதர்சனரின் அருளைப் பெறலாம். சக்கரத்தானை திருவாழியாழ்வான்” என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள்.
சக்கரத்தாழ்வாரைப் பற்றி பல சுலோகங்கள் உள்ளன. ஸ்ரீரங்கம் கூரநாராயண ஜீயர் சுதர்சன சதகத்தை அருளியுள்ளார். சுவாமி தேசிகனின் சுதர்சனாஷ்டகம் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்லோகமாகப் பிரபலமாகியுள்ளது. ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என ‘ஆழ்வார்’ என்ற அடைமொழி இவர்கள் மூவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஸ்ரீ பகவானால் ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பேயாகும்.
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை புதனும்,சனியும் சேவிப்பது விசேஷம். முடிந்தால் தினமும், இயன்ற நிவேதனம் வைத்து பூஜிப்பது நல்லது. வியாழக்கிழமை ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால், நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும். ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட பக்தர்கள் ஓரடி எடுத்து வைத்தால், அவர் உடனே இரண்டடி முன்வைத்து பிரச்னைகளையும், துன்பங்களையும் தீர்த்து சந்தோஷத்தில் ஆழ்த்துவார் என்பது விதியாகும்.ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நதியில் நெய் விளக்கேற்றி,‘‘ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’’ என்று கூறி வழிபடுதல் கூடுதல் பலனைத் தரும்.

பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார். இவர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என்று அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக லக்னத்தையும், லக்னாதிபதியையும் பாவ கிரகங்கள் சூழ்ந்தால் அந்த ஜாதகர் வாழ்க்கை முழுவதும் யாருக்காவது கடன்பட்டிருப்பார். உதாரணமாக மகர லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 12ஆம் வீட்டில் சனியும், 2வது வீட்டில் செவ்வாயும் இருந்தது. இதன் காரணமாக அவர் வாழ்க்கை முழுவதும் கடன்பட்டவராகவே இருந்தார்.
இவ்விடயத்தில் லக்னத்தை மட்டுமல்லாது லக்னாதிபதி, 6ஆம் அதிபதி ஆகியோரின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக மீன லக்னத்திற்கு அதிபதி குரு; 6ஆம் அதிபதி சூரியன். இதில் குரு நீச்சமாகி, 6ஆம் அதிபதி சூரியன் ஆட்சி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் தன் வாழ்வின் இறுதிநாள் வரை கடன்காரராக இருப்பார்.
எனவே, லக்னாதிபதி பலவீனமாக இருப்பவர்கள், சம்பந்தப்பட்ட லக்னாதிபதிக்கு உரிய கோயில்கள், பரிகாரங்களை மேற்கொள்ளலாம். நிதி நிலைக்கு சிக்கல் வராத வகையில் எளிய வகையிலான தானங்களையும் மேற்கொள்ளலாம்.
இதேபோல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு, மொழிப் பாடங்களை பயிற்றுவிப்பதும் பலனளிக்கும். குறிப்பாக தமிழ் சொல்லித் தருவதன் மூலம் சில தோஷங்கள் கழியும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஏனென்றால் தமிழுக்கு உரிய கிரகம் சந்திரன். உடல் மனதிற்கு உரியவரும் அவரே.
தமிழ் பயிற்றுவிக்கும் போது உடலும், மனதும் பலம் பெறுகிறது. இவை இரண்டும் பலமாக இருந்தால் எவ்வளவு கடனையும் அடைத்துவிட முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.

பக்தர்களின் ராகு-கேது தோஷத்தை காளஹஸ்தீஸ்வரர் கோவில் இறைவனான காளஹஸ்தீஸ்வரரே நிவர்த்தி செய்துவிடுகிறார். குறிப்பாக திருமணத் தடைகள் விலகும்; குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
காளஹஸ்தீஸ்வரர் ஏழு அடி உயரத்திலும் பதினைந்து அடி சுற்றளவிலும் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறார். சோழர்களின் ஆட்சியில் காளஹஸ்தீஸ்வரருக்கு செங்கல்கற்களால் திருக்கோயிலை வடிவமைத்தார்கள்.
சோழ தேசத்தில் காளஹஸ்தீஸ்வரர் அருள்பாலித்து வருவதால், இந்த தலம் தென்காளஹஸ்தி என போற்றப்படுகிறது. காளஹஸ்தீஸ்வரருக்கு இணையாக அமர்ந்து அழகிய தோற்றத்தோடு அருள்கிறார் அம்பாள் ஞானாம்பிகை. காளஹஸ்தீஸ்வரருடைய இடப்பக்கத்தில் அமர்ந்து பக்தர்களுடைய குறைகளைத் தீர்த்து வைக்கிறார்.
பக்தர்களின் ராகு-கேது தோஷத்தை இத்தல இறைவனான காளஹஸ்தீஸ்வரரே நிவர்த்தி செய்துவிடுகிறார். ஒவ்வொரு திங்கட்கிழமையும் தோஷம் களைய, கோயில் திருக்குளத்தில் நீராடி பின்னர் காளஹஸ்தீஸ்வரரை வழிபட்டால் பதினாறு செல்வங்களையும் பெற்றிடலாம். குறிப்பாக திருமணத் தடைகள் விலகும்; குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
தஞ்சை - அம்மாபேட்டை வழியில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோயில். தஞ்சையிலிருந்து பேருந்து மற்றும் புன்னைநல்லூரிலிருந்து ஆட்டோ வசதிகள் உள்ளன. கோயில் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 9442347166, 9487029230 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஒவ்வொரு கிழமைகளிலும் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்களை பற்றியும், தீரும் பிரச்சனைகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
அதிகாலை சூரிய உதயத்தின்போது கருடனை தரிசித்தால், நினைத்த காரியம் நடைபெறும். வியாழக்கிழமை பஞ்சமி திதியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தை படிப்பது அமோக பலனைத் தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம். ஒவ்வொரு கிழமைகளிலும் கருட தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:-
ஞாயிறு : பிணி விலகும்.
திங்கள் : குடும்ப நலம் பெருகும்.
செவ்வாய் : துணிவு பிறக்கும்.
புதன் : பகைவர் தொல்லை நீங்கும்.
வியாழன் : நீண்ட ஆயுள் கிடைக்கும்.
வெள்ளி : திருமகள் திருவருள் கிட்டும்.
சனி : முக்தி அடையலாம்.
ஞாயிறு : பிணி விலகும்.
திங்கள் : குடும்ப நலம் பெருகும்.
செவ்வாய் : துணிவு பிறக்கும்.
புதன் : பகைவர் தொல்லை நீங்கும்.
வியாழன் : நீண்ட ஆயுள் கிடைக்கும்.
வெள்ளி : திருமகள் திருவருள் கிட்டும்.
சனி : முக்தி அடையலாம்.
வழக்குகளில் வெற்றி, கல்வியில் வெற்றி, வியாபாரத்தில் வெற்றி வழங்கும் ஆலயமாகவும், திருமணத்தடை மற்றும் நோய் தீர்க்கும் ஆலயமாகவும் இந்த வீர அனுமன் கோவில் இருக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் நாச்சியார் பிறந்த புண்ணிய பூமியாகும். இங்குள்ள ஆண்டாள் திருக்கோவில் 6-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இது கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் உள்ளது. 14-ம் நூற்றாண்டில் ஆண்டாள் தாயாரை வழிபடுவதற்காக, வடக்கு பகுதியில் இருந்து வியாசராஜர் வருகை தந்தார். இவர் இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து பல்வேறு நூல்களை இயற்றியவர்.
சிறந்த அனுமன் பக்தரான இவர், இந்தியா முழுவதும் 700 அனுமன் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்திருக்கிறார். இவர் பிரதிஷ்டை செய்யும் அனுமன் சிலைகளில், வாலின் நுனிப்பகுதியில் மணி, சங்கு, சக்கரம், இடுப்பில் கத்தி ஆகியவை இருக்கும். அப்படிப்பட்ட அனுமன் பக்தரான வியாசராஜர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆலயத்திற்கு வந்தார். பின்னர் அங்குள்ள குளத்தில் நீராடி, அதன் வடகரையில் அனுமனை நினைத்து, தூப கரி துண்டுகளை வைத்து பாறையில் வரைந்தார். அப்போது அனுமன், அந்த சிற்பத்தில் இருந்து தோன்றி வியாசராஜருக்கு காட்சியளித்து மறைந்தார்.
பின்னர் கரி கொண்டு வரையப்பட்ட அனுமன் சிற்பம் இருந்த இடத்தில், பாறையில் ஒரு சிற்பத்தைச் செதுக்கினார். அதற்கு ‘வீர அனுமன்’ என்று பெயரிட்டார். ஆண்டாள் நீராடிய திருக்குளத்தின் வடகரையில் இந்த வீர அனுமன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த அனுமனுக்கு, சுலோகம் ஒன்றையும் வியாசராஜர் இயற்றி இருக்கிறார். இந்தக் கோவிலில் உள்ள அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, பழ மாலை, முறுக்கு மாலை, மல்லிகைப்பூ மாலை, வெற்றிலை மாலை ஆகியவை அணிவிக்கப்படுகிறது.
வழக்குகளில் வெற்றி, கல்வியில் வெற்றி, வியாபாரத்தில் வெற்றி வழங்கும் ஆலயமாகவும், திருமணத்தடை மற்றும் நோய் தீர்க்கும் ஆலயமாகவும் இந்த வீர அனுமன் கோவில் இருக்கிறது. கரித்துண்டால் வரையப்பட்ட சிற்பத்தில் அனுமன் காட்சி கொடுத்ததால், சிலர் தங்கள் நெற்றியில் திலகம் இடும்போது கருப்பு நிறத்தில் கோடுகளை வரைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூரம் நட்சத்திரக்காரர்கள் வந்து வழிபட வேண்டிய மிகச் சிறந்த தலமாக, இந்த அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. மேலும் கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாவில் விளங்குளம் என்ற கிராமம் இருக்கிறது. எழில் கொஞ்சும் அந்த அழகிய கிராமத்தின் நடுவே, ‘அட்சயபுரீஸ்வரர்’ என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது.
பூரம் நட்சத்திரக்காரர்கள் வந்து வழிபட வேண்டிய மிகச் சிறந்த தலமாக, இந்த அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இத்தலத்தில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவான், ஆயுதங்கள் ஏதுமின்றி மங்கள சனீஸ்வரராக அருள்பாலிக்கிறார். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சனீஸ்வரன், இங்கு தன்னுடைய இரு மனைவியர்களான நீலாதேவி மற்றும் பிரதியுக்ஷா தேவி ஆகியோருடன் காணப்படுகிறார். இந்த சனீஸ்வரரை வழிபட்டு வந்தால், எம பயம், விபத்து போன்ற ஆபத்துகள் நீங்கி மங்களகரமான வாழ்வு அமையும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற தம்பதிகள் ஒன்றிணைய வாய்ப்பு உருவாகும்.
இந்த சிவாலயத்திற்குள் நுழைந்ததுமே ஒருவர் வாழ்வில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நிதர்சனமான உண்மை என்கின்றனர், பக்தர்கள்.