search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காளஹஸ்தீஸ்வரர்
    X
    காளஹஸ்தீஸ்வரர்

    ராகு-கேது தோஷம், திருமண தடை நீக்கும் தலம்

    பக்தர்களின் ராகு-கேது தோஷத்தை காளஹஸ்தீஸ்வரர் கோவில் இறைவனான காளஹஸ்தீஸ்வரரே நிவர்த்தி செய்துவிடுகிறார். குறிப்பாக திருமணத் தடைகள் விலகும்; குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
    காளஹஸ்தீஸ்வரர் ஏழு அடி உயரத்திலும் பதினைந்து அடி சுற்றளவிலும் பிரமாண்டமாகக் காட்சியளிக்கிறார். சோழர்களின் ஆட்சியில் காளஹஸ்தீஸ்வரருக்கு செங்கல்கற்களால் திருக்கோயிலை வடிவமைத்தார்கள்.

    சோழ தேசத்தில் காளஹஸ்தீஸ்வரர் அருள்பாலித்து வருவதால், இந்த தலம் தென்காளஹஸ்தி என போற்றப்படுகிறது. காளஹஸ்தீஸ்வரருக்கு இணையாக அமர்ந்து அழகிய தோற்றத்தோடு அருள்கிறார் அம்பாள் ஞானாம்பிகை. காளஹஸ்தீஸ்வரருடைய இடப்பக்கத்தில் அமர்ந்து பக்தர்களுடைய குறைகளைத் தீர்த்து வைக்கிறார்.

    பக்தர்களின் ராகு-கேது தோஷத்தை இத்தல இறைவனான காளஹஸ்தீஸ்வரரே நிவர்த்தி செய்துவிடுகிறார். ஒவ்வொரு திங்கட்கிழமையும் தோஷம் களைய, கோயில் திருக்குளத்தில் நீராடி பின்னர் காளஹஸ்தீஸ்வரரை வழிபட்டால் பதினாறு செல்வங்களையும் பெற்றிடலாம். குறிப்பாக திருமணத் தடைகள் விலகும்; குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

    தஞ்சை - அம்மாபேட்டை வழியில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு தெற்கே 3 கி.மீ. தூரத்தில் உள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோயில். தஞ்சையிலிருந்து பேருந்து மற்றும் புன்னைநல்லூரிலிருந்து ஆட்டோ வசதிகள் உள்ளன. கோயில் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 9442347166, 9487029230 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 
    Next Story
    ×