search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அட்சயபுரீஸ்வரர் கோவில்
    X
    அட்சயபுரீஸ்வரர் கோவில்

    பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறந்த பரிகார தலம்

    பூரம் நட்சத்திரக்காரர்கள் வந்து வழிபட வேண்டிய மிகச் சிறந்த தலமாக, இந்த அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. மேலும் கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும்
    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகாவில் விளங்குளம் என்ற கிராமம் இருக்கிறது. எழில் கொஞ்சும் அந்த அழகிய கிராமத்தின் நடுவே, ‘அட்சயபுரீஸ்வரர்’ என்ற சிவன் கோவில் அமைந்துள்ளது.

    பூரம் நட்சத்திரக்காரர்கள் வந்து வழிபட வேண்டிய மிகச் சிறந்த தலமாக, இந்த அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இத்தலத்தில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவான், ஆயுதங்கள் ஏதுமின்றி மங்கள சனீஸ்வரராக அருள்பாலிக்கிறார். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சனீஸ்வரன், இங்கு தன்னுடைய இரு மனைவியர்களான நீலாதேவி மற்றும் பிரதியுக்‌ஷா தேவி ஆகியோருடன் காணப்படுகிறார். இந்த சனீஸ்வரரை வழிபட்டு வந்தால், எம பயம், விபத்து போன்ற ஆபத்துகள் நீங்கி மங்களகரமான வாழ்வு அமையும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற தம்பதிகள் ஒன்றிணைய வாய்ப்பு உருவாகும்.

    இந்த சிவாலயத்திற்குள் நுழைந்ததுமே ஒருவர் வாழ்வில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது நிதர்சனமான உண்மை என்கின்றனர், பக்தர்கள்.

    Next Story
    ×