என் மலர்
தோஷ பரிகாரங்கள்
தொழிற் கூடங்கள், நிறுவனங்கள் செழித்து விளங்க அவற்றில் இருக்கும் அலுவலகங்களில் கீழ்க்கண்ட வாஸ்து முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
தொழிற் கூடங்கள், நிறுவனங்கள் செழித்து விளங்க அவற்றில் இருக்கும் அலுவலகங்களில் கீழ்க்கண்ட வாஸ்து முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அலுவலக தலைமை அதிகாரியின் அறை அரை சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும்.
இந்த அறையை தென் மேற்கு பகுதியில் அமைக்க வேண்டும். கிழக்கு அல்லது வடக்கு முகமாக தலைமை அதிகாரியின் இருக்கை இருபது நல்லது. அலுவலக வாயில் கிழக்குதிசை நோக்கியோ அல்லது வடக்கு திசை நோக்கியோ இருக்க வேண்டும். வடக்கு முகமாகயிருந்தால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் கிழக்கு முகமாகயிருந்தால் தொழில் முன்னேற்றதிற்கான புதுபுது யோசனைகள் தோன்றும்.
அலுவலகத்தின் உளத்தைவிட அகலம் இரண்டு மடங்கு அதிகமாக இருப்தும் கதவுகளின் அளவு 6 அடி 4 அங்குலம் 7அடி 4 அங்குலம் அளவில் இருபது சிறப்பு. தேனீர்வேளை உணவு இடைவேளைகளில் அலுவலர்கள் கூடும் இடம்தென்கிழக்கிலோ அல்லது வடமேற்கிலோ இருக்க வேண்டும். வரவு செலவு கணக்கு பார்பவர்கள் குபேரனின் திசையான வடக்குத் திசை நோக்கி அமர்ந்திருபது தொழிலில் நல்ல பண புழக்கத்தைக் கொடுக்கும்.

கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை செய்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
கடன் தொல்லை தீர பரிகார முறைகளாக முன்னோர்கள் வீடு கட்டும் பொழுது, நிலை வாசலில் மற்றும் கிணறு தோண்டும் சமயம் மற்றும் வேறு சில சூட்சுமமான இடங்களில் ஓட்டை காலணா, வசதி உள்ளோர் வெள்ளி நாணயம், அரச குலத்தோர் தங்க நாணயம் போன்றவை அவ்விடம் புதைத்து வைப்பது வழக்கம். இவை அந்த இடம்/மனை பல காலங்கள் செல்வ செழிப்புடன் இருக்க உதவும் ஒன்று. தற்காலங்களில் இவை காணப்படுவதில்லை. அதற்கு மாற்றாக, அதே வீரிய சக்தியை கொண்ட மற்றும் அனைவரும் எளிதாக செய்ய கூடிய ஒன்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.20 முதல் 2 மணிக்குள், ஆறு ஒரு ருபாய் பழைய நாணயத்தை வலது கையில் எடுத்து கொண்டு வீட்டின் அல்லது அலுவலகத்தின் / தொழில் செய்யும் இடத்தின் வடகிழக்கு மூலை சென்று வடகிழக்கை நோக்கியவாறு அமர்ந்து ஸ்ரீம் என்ற மந்திரத்தை 60 முறை கூறி பின்பு நாணயங்களை அவ்விடம் புதைத்து விடவும். அடுத்து வரும் 33 நாட்களுக்கு மட்டும் கையளவு மஞ்சள் கலந்த நீரை மேற்கண்ட மந்திரத்தை 6 முறை கூறியவாறு தெளித்து வரவும். இது அவ்விடத்தை வறுமை நீக்கி, செல்வம் வளம் பெருக செய்யும் ஒரு பரிகாரமாகும். அந்த நாணயங்கள் நிரந்தரமாக அந்த மனையில் இருக்க வேண்டும்.
குறிப்பு : வடகிழக்கில் மண் இல்லாதோர், அடுக்குமாடிகுடியிருப்பில் வசிப்போர், வாடகை வீடு, அலுவலகம் போன்றவற்றிற்கு மேற்கண்ட முறையை சிறு தொட்டியில் மண் நிரப்பி அதில் புதைத்து வைத்து செய்து வரவும். வேறு இடம் மாற்றம் செய்ய நேரின், அதை புது இடத்தில் குறிப்பிட்டு உள்ள பகுதியில் வைத்து விடலாம்.

பித்ரு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் ஆடி அமாவாசையான அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை முறையாக செய்து வந்தால் முன்னோர்களின் ஆசி முழுவதும் நமக்கு கிடைக்கும்.

பித்ரு வழிபாட்டின்போது கவனிக்க வேண்டியவை :
நம் முன்னோர்கள் இறந்த நேரம் மற்றும் திதிகளை குறித்து வைத்து அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் பித்ரு தர்ப்பணம் செய்வது நல்லது.
பித்ருக்களுக்கு தர்ப்பணங்கள் செய்யும்போது காலை 7 மணிக்குள் செய்துவிட வேண்டும். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தின்போது தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. தர்ப்பணங்களை முறைப்படி சரியான நேரத்தில் செய்தால் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் நீங்கும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் நதிகளின் கரைகளில் கொடுத்தால் அதற்கு அதிக சக்தி உண்டு. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது பல யாகங்களை செய்வதை விட மேலானதாகும். ஒரு ஆண்டிற்கு ஒருவர் 96 முறை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்.
அமாவாசை மற்றும் சூரிய சந்திர கிரகணங்களில் பித்ருகளுக்கு செய்யும் தர்ப்பணங்களுக்கு மிகுந்த பலன் உண்டு. அமாவாசையன்று அன்னதானம் செய்வது மிகவும் நல்லது.
பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாட்களில் வெங்காயம், பூண்டு மற்றும் வாசனை திரவியங்களை தவிர்க்க வேண்டும். ஒருவருடம் நாம் பித்ருபூஜை செய்ய தவறிவிட்டால் பித்ருக்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என கூறப்படுகிறது.
ஆடி அமாவாசை அன்று பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பணங்களுக்கு மிகவும் சக்தி உண்டு. இந்த நாளில் பித்ருக்களை சாந்தப்படுத்தினால் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம். இந்த நாளில் தர்ப்பணம் கொடுக்க முன்னோர்களின் ஆசி முழுவதும் நமக்கு கிடைக்கும்.
திருவாதிரை, புனர்பூச நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று தர்ப்பணம் செய்தால் 12 வருடங்கள் பித்ருக்களை திருப்திப்படுத்த முடியும்.

எந்த தோஷமும் இன்றி சிலருக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். மேலும் சிலருக்கு எந்த வேலையை தொடங்கினாலும் அதில் சில தடைகள் வந்துகொண்டே இருக்கும். அது போன்றவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.
சிலருக்கு தெய்வ குற்றம் உண்டாகி இருக்கும். அது தெரியாமல் கூட இருக்கலாம். பக்தர்களுக்கு இருக்கும் பல்வேறு பிரச்சனைகளில் முக்கியமானது திருமண தடை. திருமண தடை நீக்க பரிகாரங்கள் ஏராளம் உள்ளன. திருமண தடைக்கு தெய்வ குற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். இப்பிறவியில் தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது தெய்வ குற்றம் செய்து இருப்பீர்கள். நீங்கள் என்று இல்லை. உங்கள் பெற்றோர் அல்லது முன்னோர்கள் செய்து இருப்பார்கள். அதன் விளைவாக தான் திருமணம் கைகூடி வராமல் தள்ளி சென்று கொண்டே இருக்கும். ஜாதகத்தில் தோஷம் என்பது பொதுவானது. ஆனால் எந்த தோஷமும் இன்றி சிலருக்கு திருமணம் தடைப்பட்டு கொண்டே இருக்கும். மேலும் சிலருக்கு எந்த வேலையை தொடங்கினாலும் அதில் சில தடைகள் வந்துகொண்டே இருக்கும். அது போன்றவர்களுக்கு தான் இந்த பரிகாரம்.
துர்கை அம்மனுக்கு இதை செய்வதால் தெய்வ குற்றம் நீங்கும். அதை பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம் வாருங்கள். தெய்வக்குற்றம் மட்டும் இல்லை. சாபம் கூட திருமணம் மற்றும் தொழில் தடைக்கு காரணமாக இருக்கலாம். இந்த பிறவியிலோ அல்லது போன பிறவியிலோ யாருடைய சாபதிற்ககோ நீங்கள் ஆளாகி இருக்கலாம். சாபம் என்பது வழி வழியாக தொடர்கதையாக வருவது. ஒருவருக்கு இழைக்கபட்ட அநீதியானது சாபமாக மாறும் போது அது கட்டாயம் பலிக்கும். ஆனால் அதன் பலனை அனுபவிக்கும் போது அவர்களுக்கே தெரியாமல் போகலாம். அவர்களது சந்ததியினரும் கூட இந்த பலனில் பங்கு கொள்வார்கள். நீங்கள் கேட்டிருக்கலாம்.. சிலர், உன் குடும்பமே தழைக்காமல் போகும். உன் சந்ததியே துன்பமுறும் என்றெல்லாம் வயிற்றெரிச்சலுடன் சாபம் இடுவார்கள்.
அவையெல்லாம் பலிக்குமா? என்று கேட்டால் தெரியாது தான். ஆனால் சில சாபங்கள் மிகவும் கொடூரமான விதத்தில் இருக்கும். சாபம் பலிக்காது என்று கூற சான்றுகள் இல்லை. பலிக்கும் என்பதற்கு சில புராணங்கள் எடுத்துக்காட்டாக இருப்பது அனைவரும் அறிந்ததே. கண்ணகிக்கு இழைக்கபட்டது அநீதி. அதன் விளைவாக மதுரையே நிர்மூலமானது. அது போல் சபத்தினால் கூட தடைகள் ஏற்படக்கூடும். அந்த மாதிரியான தடைகளை நீக்கி நல்லது நடக்க இந்த வழிபாடு பெருமளவு துணை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. 1. துர்க்கை அம்மன் சன்னதியில் வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் காலை பத்தரை மணி முதல் பணிரெண்டு மணிக்குள்ளாக தாமரைத் தண்டினாலான திரி கொண்டு நெய் தீபம் ஏற்றி மனதார உங்கள் கோரிக்கைகளை வைத்து வழிபட்டு வந்தால் தெய்வக் குற்றம் நீங்கும். சாபத்தினால் ஏற்பட்ட தோஷங்களும் நீங்கும்.
மிகவும் சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை செய்து அனைவரும் பலனடையலாம். தெய்வக்குற்றம் மற்றும் சாபம் நீங்குவதற்கான பரிகாரம் தான் இது. 2. தொடர்ந்து ஆறு வாரங்கள் இதை செய்து முடித்த பின்னர் அஸ்த நட்சத்திரம் வரும் நாளில் துர்க்கை சன்னதிக்கு சென்று சிகப்பு நிறத்தாலான பட்டு துணி ஒன்றை அம்மனுக்கு சாற்றி, சிகப்பு தாமரை பூவினை துர்க்கை அம்மனின் மலர் பாதங்களில் வைத்து 27 என்ற எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை மாலையாக கோர்த்து அந்த மாலையை அம்மனுக்கு சாற்றி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்த பின் தங்களால் முடிந்த அளவிற்கு பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கலாம். அர்ச்சனை செய்த அந்த குங்குமத்தை வீட்டிற்கு கொண்டு வந்து தினமும் நெற்றியில் இட்டு வருவதன் மூலம் தடைகள் நீங்கும். விரைவில் நாம் எதிர்பார்ப்பது கைகூடி வரும்.

புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் சிவகங்கை மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனை வழிபட்டு தீர்க்காயுள் பெற்று வாருங்கள்.
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் சிவகங்கை மாவட்டம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மனை வழிபட்டு தீர்க்காயுள் பெற்று வாருங்கள். இங்குள்ள சிவபெருமானுக்கு ‘பழம் புற்றுநாதர்’ என்றும், அம்பாளுக்கு ‘பாகம்பிரியாள்’ என்றும் பெயர் வழங்கலாயிற்று.
குணப்படுத்த முடியாத புற்றுநோய்க்கு மருந்து தரும் நாயகியாக விளங்குகிறாள் பாகம் பிரியாள். இவளது சந்நிதியில் தரும் தீர்த்தத்தை அருந்தினால், புற்றுநோய் தீரும் என்பது நம்பிக்கை. மரணபயத்துடன் இங்கு வருவோர், புத்துணர்வு பெற்று நம்பிக்கையுடன் செல்கின்றனர்.
இங்குள்ள தலவிருட்சமான அரசமரத்தை சுற்றி வந்தால் மகப்பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை. இவ்வூர் மக்கள் தங்கள் தாய்வழி சொத்தை அம்பாளுக்குரியதாக கருதி, மகள்களுக்கு எழுதி வைக்கின்றனர். இவ்வூர் அருகிலுள்ள திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோவில் புகழ்மிக்கது.

பதவியை இழந்தவர்கள் இந்த பஞ்சநத நடராஜர் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.
திருச்சியை அருகே உள்ளது பஞ்சநத நடராஜர் கோவில். சிறுநீரகம், மற்றும் சிறுநீரக கல் தொடர்பான நோய்களுக்கு இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார். சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள நோய் தீர்வது இன்றும் நடைபெறும் அதிசயமாக உள்ளது.
ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

கண்ணுக்குத்தெரியாத தீவினைகள், கெட்ட சக்திகள், கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியங்கள் போன்ற உங்களுக்கும் கண்ணுக்குத் தெரியாத ஏதாவது ஒரு கெட்ட சக்தி உங்கள் வீட்டில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதை நீக்க இதை செய்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
நாம் வழிபடும் தெய்வங்களை அவ்வளவு சுலபமாக, ஒன்று, இரண்டு, என்று கணக்கிட்டு, எண்ணி விடமுடியாது. இதே போல்தான், கெட்ட சக்திகளையும் நம்மால் கணக்கில் அடக்கிவிட முடியாது. கண்ணுக்குத்தெரியாத தீவினைகள், கெட்ட சக்திகள், கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியங்கள், ஏராளம். உங்களுக்கும் கண்ணுக்குத் தெரியாத ஏதாவது ஒரு கெட்ட சக்தியின் மூலம் பாதிப்பு இருப்பதாக, சிறிய சந்தேகம் வந்தால் கூட, உடனடியாக அந்த பிரச்சனை என்னவென்று அலசி ஆராய்ந்து பார்த்து தீர்வு கொள்வது மிகவும் நல்லது. இப்படிப்பட்ட கண்ணுக்குத்தெரியாத பாதிப்புகள் உங்கள் வீட்டில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், அதை நீக்க, என்ன செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, உங்கள் வீட்டில் கன்னி மூலை திறந்த நிலையில் இருக்கின்றதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். கன்னிமூலை எப்போதுமே அடைத்து தான் வைத்திருக்க வேண்டும். கண்ணின் மூலையானது திறந்த நிலையில், இருக்கும்பட்சத்தில், துர்தேவதைகள் கட்டாயம் வீட்டிற்குள் வந்து வாசம் செய்யும். அப்போது வீட்டில் கண்ணுக்குத்தெரியாத பிரச்சனைகளும், தலைவிரித்தாடும் என்பதில் சந்தேகமில்லை. ஒருவருடைய வீட்டின் தென்மேற்கு மூலையை தான் கன்னி மூலை என்று சொல்லுவார்கள். உங்களது வீட்டில் கண்ணுக்குத்தெரியாத துர்தேவதைகள் இருப்பதாக நீங்கள் நினைத்தாலும் சரி, அல்லது இனிவரும் காலங்களில் கெட்ட சக்திகள் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க வேண்டும் என்றாலும் சரி. எட்டி மரக் குச்சிகளை உங்கள் வீட்டில் வைப்பது மிகவும் நல்லது. பொதுவாகவே எட்டி மரம் காளிக்கு உரிய மரமாக சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் எட்டி மர குச்சிகள், எட்டி மரப் பட்டைகள், எட்டி மர வேர் இவைகள் அனைத்தும், அவ்வளவு சுலபமாக கடைகளில் கிடைப்பதில்லை. உங்களால் முடிந்தால் நாட்டு மருந்து கடைகளில் எட்டி மர குச்சிகள், அல்லது எட்டு மரப் பட்டைகளை, சொல்லி வைத்து வாங்குவது மிகவும் நல்லது. அப்படி இல்லை என்றால் எட்டிமரம் கொட்டைகளை வாங்கி கொள்ளுங்கள். எட்டி மரக் கொட்டைகளாலானது சுலபமாக கிடைக்கிறது. ஆனால் எட்டி மரக் கொட்டை என்பது விஷம் நிறைந்த ஒன்று. உங்களுக்கு எட்டி மரத்தில் இருந்து எந்த பொருள் கிடைத்தாலும், அது நல்லது தான்.
அந்த பொருளை வாங்கி, ஒரு மஞ்சள் நிற துணியில் முடிந்து, உங்கள் வீட்டில் கண்ணுக்கு தெரியாத ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். எட்டிப் மரத்தில் இருக்கும் எந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தாலும், வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி கட்டாயம் வெளியேறிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டிற்குள், கண்ணுக்குத்தெரியாத எந்த கெட்ட சக்தியும் கட்டாயம் உள்ளே நுழைய முடியாது.எட்டி மர கொட்டைகளை நீங்கள் உங்கள் வீட்டில் வைப்பதாக இருந்தால், கட்டாயம் குழந்தைகளுக்கு எட்டாத படிதான் வைக்க வேண்டும்.
அது விஷத்தன்மை உடையது என்பதை மறந்துவிடாதீர்கள். விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும், எட்டிமரததினுடைய சக்தி அதிலும் நிரம்பி இருக்கிறது. உங்களுக்கு எட்டிமர கொட்டை, எப்படி மரப்பட்டை, எட்டி மர குச்சி, எட்டி மர வேர், இதில் எது கிடைத்தாலும் மஞ்சள் நிற துணியில் முடிந்து, கண்ணுக்குத் தெரியாத இடத்தில் வைப்பது வீட்டிற்கு மிகவும் நல்லது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

வீட்டில் வலம்புரிச் சங்கு வைத்து வழிபட்டால் மகாலட்சுமி நம்மைத்தேடி வருவாள் என்று வேதவாக்கியம் சொல்கிறது. நம் வீட்டில் வலம்புரிச் சங்கு பூஜை முறையாக நடைபெற்றால் பிரம்மஹத்தி தோஷமும் அகன்று விடும்.

வீட்டில் வாஸ்து குறை காணப்பட்டால் மஞ்சள் நீரும் துளசியும் சங்கில் இட்டுக் காலையில் தெளித்து விட்டால் குறைகள் நீங்கும் 48 நாள் தினமும் செய்ய விருப்பம் உடையவர்கள் காலை உடற்சுத்தம் செய்துவிட்டு வலம் புரிச் சங்கை சுத்தமான நீரில் அலம்பி சந்தனம் குங்குமம் இட்டு பிளந்தபாகம் வெளிப்பக்கமாக வைத்து மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றி பிறகுஸ்வாகதம்... ஸ்வாகதம் ஸ்ரீ லட்சுமி குபேராய நம என்று சங்கில் குபேரனை அழைக்க வேண்டும், பிறகு ஓம் நவநிதி தேவதாயை நம சகல ஆராதனை சுவர்ச்சிதம் என்று சிவப்பு மலரைப் போட வேண்டும்.
வலம்புரிச் சங்கின் அளவைப் பொறுத்து தாமிரத் தட்டில் பச்சை அரிசி போட்டு அதன்மேல் சங்கை குபேரன் படத்தின் முன் வைக்க வேண்டும். மூன்று முக நெய் தீபம் ஒன்று ஏற்றினால் போதும். பிறகு துளசி, அரளி, சிவப்பு மலர், மல்லிகை கலந்து பன்னீர் தெளித்து வைத்துக் கொண்டு சங்கைச் சுற்றி மலர் தூவ வேண்டும். மும்முறை குபேர காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். பிறகு 16 நாமாவளி அர்ச்சனை செய்தல் வேண்டும்.
அர்ச்சனை முடிந்த பிறகு குபேர காயத்ரி சொன்ன பிறகு தூப தீபம் காட்டி ஓம் ஸ்ரீம் லட்சுமி சகித குபேராய நம: மம க்ரஹே அமுதம் நித்யானந்த வாஸம் குரு குரு.. என்று ஆத்ம பிரதட்சிணம் செய்து மலர் போட வேண்டும். கற்கண்டு, பால், அவல் பாயசம் நிவேதித்து நெய் தீபத்தை கற்பூர ஆரத்திக்குப பதிலாக காட்ட வேண்டும்.
இறுதியில் ஒரு பெண்ணுக்கு தாம்பூலம் மஞ்சள் தரவேண்டும். எளிமையான இந்த பூஜையை 48 நாட்கள் தொடர்ந்து செய்தால் குடும்ப வருமானம் செழிக்கும். 6 வெள்ளிக்கிழமைகளில் இந்த பூஜை செய்தால் கடன் தீர வழி ஏற்படும்.
வியாழக்கிழமை மாலை 5 முதல்7.30 மணி வரை குபேர காலத்தில் செய்து 9 ம் முடிக்க பொருள் சேர வழி உண்டாகும். 8 பவுர்ணமிகள் குபேர அர்ச்சனையுடன் சங்கு பூஜை செய்து வர செல்வம் சேரும்.

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும்.
ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் கால பைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களை செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.
காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளுமே அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப்பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழுந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.
கால பைரவர் பாம்பைப் பூணுலாக கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம் தண்டம் ஏந்தி காட்சி தருவார். காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் கால பைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகு தான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது.
காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக கால பைரவரையும் வழிபட்டால் தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும். கால பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாந்நி, எலுமிச்சம் பழ மாலை அணிவித்து, எள் கலத்த சாதமும் இனிப்பு பண்டங்களும் சமர்பித்து முன்னோர்களை நினைத்து பிதுர் பூஜைக்காக மந்திரங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபட்டால் பிதுர் தோஷம் நீங்கும். அன்று அன்னதானம் செய்வது நல்லது.

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தடை, மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும்.
சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர்.
பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, ""நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்,''என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.
இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,""என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்,''என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.
காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள "கமலத்தேர்' இங்கு தனி சிறப்பு.
கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலமாகவும் விளங்குகிறது. மேலும் திருமண தடை உள்ளவர்கள் இங்கே வந்து வழிபாடு செய்தால் விரைவில் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.
திருவள்ளூரிலிருந்து (16 கி.மீ.) அரக்கோணம் செல்லும் வழியில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

எவர் வீட்டுக்கேனும் ஆந்தை வருவதை மிக மிக சுபச் சகுனமாக வட மாநிலத்தவர்கள் கருதுகின்றனர். அதனால் ஆந்தை குரல் கொடுக்கும்போது அதை எண்ணி, அதற்கேற்றபடி பலனா, பரிகாரமா என முடிவெடுக்கின்றனர். இதோ அந்த விவரம்..
தீபாவளி தின இரவில் எவர் வீட்டுக்கேனும் ஆந்தை வருவதை மிக மிக சுபச் சகுனமாக வட மாநிலத்தவர்கள் கருதுகின்றனர். மற்ற நாட்களில் வெளியில் கிளம்பும்போது ஆந்தை கண்ணில் பட்டால், போகும் காரியத்தில் வெற்றி நிச்சயம் எனத் தீர்மானமாகச் சொல்லுகின்றனர்.
சாதாரண நாட்களிலும் இரவில் ஒரு வீட்டில் ஆந்தை வந்தமர்ந்து குரல் எழுப்பினால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு விரைவில் பொருளாதார ரீதியில் அதிர்ஷ்டம் வரும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். அப்படி வந்து அமரும் ஆந்தை குரல் எழுப்பாமல் அமைதி காத்தால் மிகவும் சங்கடப்படுவார்கள்.
ஒரு வீட்டுக்கு வந்த ஆந்தை அங்கேயே கூடு கட்டி வசிக்கத் தொடங்கி, இரவு பகலாகக் குரல் கொடுத்தால் அல்லது அவ்வீட்டின் எல்லைக்குள் உள்ள கோவிலில் இப்படி நிகழ்ந்தாலும் அந்தப் பகுதிவாழ் மக்களுக்கு லட்சுமி கடாட்சம் நிச்சயம் உண்டு. பொதுவாக சந்தியா காலம் அல்லது இரவு நேரத்தில் ஆந்தை குரல் எழுப்புவது சுபமாகக் கருதப்பட்டாலும், அது எழுப்பும் குரல் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் என்று வட மாநிலங்களில் சொல்கின்றனர். அதனால் ஆந்தை குரல் கொடுக்கும்போது அதை எண்ணி, அதற்கேற்றபடி பலனா, பரிகாரமா என முடிவெடுக்கின்றனர். இதோ அந்த விவரம்..
.
ஒருமுறை: மஹா மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வார்கள்.
மூன்று முறை: குருவின் எண். வீட்டில் எவருக்காவது விரைவில் திருமணம் நடக்கும். குடும்பத்தில் புதிய நபர் ஒருவரின் வருகைக்கு வாய்ப்பு உண்டு.
ஆறு முறை: சுக்கிரனின் எண். குடும்பத்துக்கு உறவினர் அல்லது உறவு இல்லாத- வேண்டிய அல்லது வேண்டாத நபர் திடீர் விருந்தாளியாக வருவார்.
எட்டு முறை: இதற்கும் உடனடி யாக மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வார்கள்.
ஒன்பது முறை: செவ்வாயின் எண். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் ஏற்படும். விரைவில் சாதகமான பலன்கள் உருவாகும். நல்ல செய்திகள் வரும்.
தீபாவளியன்று லட்சுமிதேவி பூஜிக்கப்படு வதால், அவளுடைய வாகனமாகிய ஆந்தையும் தனி மரியாதைக்குரிய பறவையாக மதிக்கப்படுகிறது.
சாதாரண நாட்களிலும் இரவில் ஒரு வீட்டில் ஆந்தை வந்தமர்ந்து குரல் எழுப்பினால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு விரைவில் பொருளாதார ரீதியில் அதிர்ஷ்டம் வரும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். அப்படி வந்து அமரும் ஆந்தை குரல் எழுப்பாமல் அமைதி காத்தால் மிகவும் சங்கடப்படுவார்கள்.
ஒரு வீட்டுக்கு வந்த ஆந்தை அங்கேயே கூடு கட்டி வசிக்கத் தொடங்கி, இரவு பகலாகக் குரல் கொடுத்தால் அல்லது அவ்வீட்டின் எல்லைக்குள் உள்ள கோவிலில் இப்படி நிகழ்ந்தாலும் அந்தப் பகுதிவாழ் மக்களுக்கு லட்சுமி கடாட்சம் நிச்சயம் உண்டு. பொதுவாக சந்தியா காலம் அல்லது இரவு நேரத்தில் ஆந்தை குரல் எழுப்புவது சுபமாகக் கருதப்பட்டாலும், அது எழுப்பும் குரல் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் என்று வட மாநிலங்களில் சொல்கின்றனர். அதனால் ஆந்தை குரல் கொடுக்கும்போது அதை எண்ணி, அதற்கேற்றபடி பலனா, பரிகாரமா என முடிவெடுக்கின்றனர். இதோ அந்த விவரம்..
.
ஒருமுறை: மஹா மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வார்கள்.
இரண்டு முறை: சந்திரனின் எண். நற்பலன் விளையும். வெகு சீக்கிரத்தில் ஒரு நற்செயலில் வெற்றி கிட்டும்.
நான்கு முறை: ராகுவுக்கு சாந்தி செய்வார்கள்.
ஐந்து முறை: புதனின் எண். குடும்பத் தலைவருக்குப் பயணத்தால் யோகம். அது புனிதப் பயணமாகவும் அமையலாம்.
ஏழு முறை: கேதுவுக்கு சாந்தி செய்வார்கள்.
ஒன்பது முறை: செவ்வாயின் எண். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் ஏற்படும். விரைவில் சாதகமான பலன்கள் உருவாகும். நல்ல செய்திகள் வரும்.
தீபாவளியன்று லட்சுமிதேவி பூஜிக்கப்படு வதால், அவளுடைய வாகனமாகிய ஆந்தையும் தனி மரியாதைக்குரிய பறவையாக மதிக்கப்படுகிறது.
திருச்சிற்றம்பலத்தில் உள்ள புராதனவனேஸ்வரர் திருக்கோவில் திருமணத் தடை அகற்றும் பரிகாரத்தலமாக திகழ்கிறது. பிரிந்த தம்பதிகள் சேர, மரண கண்டம், விபத்துகள் நீங்க, பகை விலகவும் இங்கு பூஜைகள் நடத்தப்படுகிறது.
திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் லிங்கத் திருமேனியாக காட்சி தரும் சிவபெருமான், பெரிய நாயகி உடனாய புராதனவனேஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
ஆடி, மார்கழி மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் இந்த ஆலயத்தில் திருமணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்தபடியே இருப்பதைக் காணலாம்.
இத்தல இறைவனின் பெயரைப் போலவே, இந்தக் கோவிலின் அமைப்பும், உருவச் சிலைகளும் புராதன காலத்தைச் சேர்ந்தவை போல் காட்சி தருகின்றன. இந்த ஆலயமானது திருமணத் தடை அகற்றும் பரிகாரத்தலமாக திகழ்கிறது.
சிவாலய தரிசனத்தை முடித்து வெளியே வந்தால், கிழக்கு நோக்கி 15 நிமிட நடைபயணத்தில் எமதர்மன் சன்னிதி இருக்கிறது. பிரிந்த தம்பதிகள் சேர, மரண கண்டம், விபத்துகள் நீங்க, பகை விலகவும் இந்த சன்னிதியில் பூஜைகள் நடத்தப்படுகிறது.
பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில், கீரமங்கலம் வழித்தடத்தில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் திருச்சிற்றம்பலம் திருத்தலம் அமைந்து உள்ளது.