search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்
    X
    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில்

    கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம்

    திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தடை, மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும்.
    சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர்.

    பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது ரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, ""நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்,''என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.

    இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது என தோற்று விடுகிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,""என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும்,''என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.

    காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் பெற்ற சிறப்புடையது. தாமரை மலர் விரித்தாற் போல் அமைந்து அதன் மேல் அமைந்துள்ள "கமலத்தேர்' இங்கு தனி சிறப்பு.

    கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலமாகவும் விளங்குகிறது. மேலும் திருமண தடை உள்ளவர்கள் இங்கே வந்து வழிபாடு செய்தால் விரைவில் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.

    திருவள்ளூரிலிருந்து (16 கி.மீ.) அரக்கோணம் செல்லும் வழியில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    Next Story
    ×