என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ராகு கேது தோஷத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொண்டு அதற்குண்டான பரிகாரங்களை செய்தால் நிவாரணம் பெறலாம்.
    ராகுவோட அமைப்பு சரியாக இருந்தால் தான் தந்தை வழி சொத்துகள் கைகூடிவரும். இல்லாவிட்டால் இழுபறியாகும். கல்யாணமாலை கழுத்தில் விழுவதில் தாமதம், சந்தான பாக்கியம் கிட்டுவதில் தடை, சிற்றின்ப நாட்டம் அதிகரிப்பு, பெயர், புகழுக்கு களங்கம் ஏற்படுவது, சட்டத்தினால் தண்டிக்கப்படுவது, தொழிலில் எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இட மாற்றம், வீண்பழி சுமத்தல், குடும்பப் பிரிவு இப்படிப்பட்ட பொதுவான பிரச்சினைகள் வரும்.

    இத்தகைய ராகு தோஷத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க சில வழிகள் உள்ளன. ராகுவுக்கு தனியாக ஓரைகாலம் இல்லை. அதனால், சனிக்கிழமை காலை 6.15 முதல் 6.45-க்கு 5 அகல் தீபத்தை வீட்டு பூஜை அறையில் ஏற்றி வையுங்கள். தினமும் துர்க்கை காயத்ரியைச் சொல்லுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை 5 அகலில் நெய்தீபம் ஏற்றி கும்பிடுங்க. எலுமிச்சை தீபம் கூடாது.

    3 பழத்தை துர்க்கையிடம் வைத்து வழிபட்டு திரும்ப வாங்கி குடும்பத்துடன் சாறுபிழிந்து குடியுங்கள். வருடத்தில் ஒருமுறையாவது, பட்டீஸ்வரம் சென்று துர்க்கையையும், திருநாகேஸ்வரம் சென்று ராகுவையும் தரிசித்துவிட்டு வாருங்கள். இயன்றபோதெல்லாம் பக்தர்களுக்கு உளுந்து சாதம் விநியோகியுங்கள். பசுவுக்கு கடலைப்பொட்டு அல்லது வேறு ஏதாவது தீவனம் வாங்கிக் கொடுங்கள்.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம், அருகில் உள்ள கோவிலுக்கு சென்று துர்க்கை, ராகு சன்னதிகளில் வழிபாடு செய்யுங்கள். வசதி உள்ளவர்கள் கோமேதகக் கல் டாலர் அணியுங்கள் அல்லது கோமேதக கணபதியை கும்பிடுங்கள். சிறியதொரு கருங்கல்லை உங்கள் கைவசம் வைத்திருப்பது ராகு தோஷ நிவர்த்திக்கான மிக எளிய வழி.

    அது போல கேது தோஷத்தில் இருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன.

    செவ்வாய்க்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45 மணிக்குள் 5 அகல் தீபங்களை நெய்விட்டு ஏற்றிவைத்து இஷ்ட தெய்வத்தை கும்பிடுங்கள். விநாயகர் கோவிலுக்குப்போய் அறுகம்புல் சாத்தி வழிபடுங்கள். பக்தர்களுக்கு இயன்ற அளவு கதம்ப சாதத்தை விநியோகம் செய்யுங்கள். துருக்கல் எனப்படும் உலோகத்தாலான டாலரை அணிந்துகொள்வது சிறப்பானது.

    வருடத்திற்கு ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். அவரது அபிஷேக விபூதியை வாங்கிவந்து தினமும் இட்டுக் கொள்ளுங்கள். விநாயகர் காரியசித்தி மாலை துதியை எப்போதும் சொல்லுங்கள். வசதி உள்ளவர்கள் கோமேதகக் கல்லை டாலரில் பதித்து அணியுங்கள்.

    அல்லது கோமேதக கணபதியை வாங்கி பூஜியுங்கள். காளஹஸ்தி கீழ்ப்பெரும்பள்ளம் ஆகிய தலங்களுக்குச் சென்று இறைவன் இறைவியை தரிசிப்பதோடு கேது கிரகத்தையும் வணங்குங்கள். இவற்றுள் உங்களால் முடிந்தவற்றைச் செய்யுங்கள். கேது தோஷம் குறைந்து வாழ்க்கையில் குதூகலம் பிறக்கும்.
    அதிக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் படிப்படியாகக் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
    அதிக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் படிப்படியாகக் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம். கடன் தீர சாஸ்திரத்தில் பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சில..

    கடன் தொல்லை தீர எளியப் பரிகாரம்

    • அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும்.

    • செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்னை நீங்கும்.

    • ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும், சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும்.

    • அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும் போதும், அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போது யாரிடம் அதிக கடன்பட்டிருக்கிறோமோ அவரிடம் அசலில் ஒருசிறிய பகுதியை கொடுத்தால் அந்த முகூர்த்த விசேஷம் காரணமாக, உங்கள் கடன் விரைவாகக் குறையும்.

    • குளிகை காலத்திலும் கடன் அடைக்கலாம்.

    • கரிநாள் உள்ள நாட்களிலும் கடன் அடைக்கலாம்.

    • மரணயோகம் உள்ள நாட்களில் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.

    • தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லை நீங்கும். சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் சஷ்டி கவசம் படிக்க, கடன் நிவாரணம் ஏற்படும்.
    மாங்கனி திருவிழாவில் இறைவன் மீது வீசப்படும் மாங்கனிகளை, குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    இறைவனின் திருவாயால் ‘அம்மையே‘ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவர். இவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில், காரைக்காலில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    முக்கனிகளுள் ஒன்றான மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறும், ஒரு சில ஆலயங்களில் முதன்மையானது காரைக்கால் மட்டும்தான். இங்குள்ள கயிலாயநாதருக்கு மாங்கனியுடன் பட்டுத்துணி சாத்தி வழிபடும் பக்தர்கள், சாமி வீதி உலாவைத் தொடர்ந்து, தங்களது வேண்டுதல்கள் நிறைவேற மாங்கனிகளை வாரி இறைக்கின்றனர்.

    இவ்வாறு இறைவன் மீது வீசப்படும் மாங்கனிகளை, குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    சிவபெருமான் தனது பக்தனின் இல்லத்தில் அமுது உண்டார் என்றால், அது காரைக்கால் அம்மையார் இல்லத்தில் மட்டும்தான் என்பதை புராணங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. சிறு வயது முதல் சிறந்த சிவ பக்தையாக விளங்கிய காரைக்கால் அம்மையாரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையாரின் இல்லத்திற்கு உணவு வேண்டிச் செல்வார்.

    சிவபெருமானின் பசித்த நிலையைக் கண்ட புனிதவதியார், கணவர் கொடுத்தனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை, தயிர் சாதத்துடன், சிவபெருமானுக்கு பரிமாறுவார். இதை நினைவுகூரும் வகையில் மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில், பிச்சாண்டவர் வீதிஉலா முடிந்து, அமுதுபடையல் நிகழ்ச்சி நடைபெறும்போது பிச்சாண்டவருக்கு, மாங்கனியுடன் தயிர்சாதத்தை அம்மையார் படைக்கும் நிகழ்வு நடைபெறும்.
    திருவண்ணாமலை கிரிவல பாதையில் காணப்படும் அஷ்டலிங்கங்களை தரிசிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதுடன், நமது பிரச்சனைகளும், தோஷமும் நீங்கும்.
    1 இந்திரலிங்கம் : (கிழக்கு) திருவண்ணாமலை ராஜகோபுரத்திலிருந்து கிழக்கே கிரிவலம் செல்லும்பாதையில் அமைந்த முதல் லிங்கம் கிழக்குத்திசையில் அமைந்த லிங்கம் . கிரக அதிபதி : சூரியன் ,சுக்கிரன் வழிபாட்டின் பலன் : லட்சுமிகடாட்சம் நீண்ட ஆயுள் ,புகழ் ,செல்வம் கிட்டுமென்பது இறைஐதீகம்

    2 அக்னி லிங்கம் : (தென்கிழக்கு )கிரிவலப்பாதையில் செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகேயுள்ளது. கிரிவலப்பாதையின் வலப்பக்கத்தில் அமைந்த சிறப்பு பெற்ற லிங்கம் தென்கிழக்கு திசை கிரக அதிபதி :சந்திரன் வழிபாட்டு பலன் :நோய் ,பிணி,பயம் ,எதிரிகள் ஆகிய தொல்லைகள் விலகும்.

    3. எமலிங்கம் (தெற்கு ) ராஜகோபுரத்தில் இருந்து சுற்றி வருகையில் தரிசிக்கும் 3 வது லிங்கமாகும் . சிம்ம தீர்த்தம் அருகே அமைந்துள்ளது. கிரக அதிபதி :செவ்வாய் பலன் : ரத்த சம்பந்த நோய்கள் தீரும் ,இடம் பூமிப்பிரச்சினைகள் தீரும் .பொருளாதார உயர்வு ஏற்படும்.

    4 நிருதிலிங்கம் (தென்மேற்கு) : இவ்கு வழிபட்டு மலையை பார்த்தால் நந்தீஷ்வரர் தலையை உயர்த்தி பார்ப்பது போல தெரியும்.சனி தீர்த்தம் அருகேயுள்ளது . திசை அதிபதி: ராகு.வழிபாட்டுப்பலன் : சுக வாழ்வு ,குழந்தைப்பேறு

    5.வருணலிங்கம் (மேற்கு ) வருணதீர்த்தம் அருகே அமைந்துள்ளது. 8வது கிலோமீட்டரில் அமைந்த லிங்கம் மேற்கு திசாஅதிபதி :சனி வழிபாட்டு பலன் : நீண்ட ஆயுள் ,புகழ்

    6. வாயுலிங்கம் (வடமேற்கு ) திசா அதிபதி :கேது வழிபாட்டுபலன் : பொறுமை ,அமைதி,

    7 குபேரலிங்கம் (வடக்கு): திசா அதிபதி :குரு பலன் :தரித்திரம் நீங்கி பொருளாதாரம் உயரும்

    8. ஈசான்ய லிங்கம் (வடகிழக்கு ) : எல்லா நிலைகளும் கடந்து ஈசனை தேடுமிடம் திசா அதிபதி :புதன் இறை நிலை அடைய வழிகாட்டுமிடம் எட்டு லிங்கமும் முக்கிய மானவையே . ஏதேனும் பெளர்ணமி இரவில் தரிசனம் செய்து விட்டு எழுதுங்கள்
    ஸ்ரீதன்வந்தரி பகவானின் படத்தை வைத்து, பூஜை செய்து அஷ்டோத்ரம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபட்டால் தீராத அனைத்து நோய்களும் உடனே விலகும்.
    ஸ்ரீமகாவிஷ்ணுவின் பல அவதாரங்களுள் தன்வந்தரியின் அவதாரமும் ஒன்று. ஸ்ரீமகாவிஷ்ணுவின் விருப்பப்படி கஸ்யபரின் புதல்வர்களான தேவர்களும் அசுரர்களும் ஒன்று சேர்ந்து அமிருதத்தை எடுப்பதற்காக பாற்டலைக் கடைந்தனர்.

    அப்போது ஆலாஹலம் என்னும் விஷம் காமதேனு பசு, குதிரை, நான்கு தந்தமுள்ள வெள்ளை யானை, பாரிஜாதம் என்னும் வருஷம், அப்ஸரஸ் ஸ்த்ரீகள், ஸ்ரீமகாலட்சுமி முதலான பலவும் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின. இறுதியாக கையில் அம்ருதம் நிரம்பிய கலசத்துடன் சங்கு சக்ரத்துடன் ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமாக ஓர் மகாபுருஷன் தோன்றினார்.

    அனைவரும் நமஸ்கரித்து அம்ருத கலசத்தைப் பெற்றுக் கொண்டனர். இவரே ஸ்ரீதன்வந்தரி. இவரே ஆயுர்வேத சாஸ்திர ஸ்தாபகர், ஆவார். அவரை வழிபட்டால், நல்ல உடல் நலத்துடன் கூடிய வாழ்க்கை அமையும். ஸ்ரீதன்வந்தரி பகவானின் படத்தை வைத்து, பூஜை செய்து அஷ்டோத்ரம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபட்டால் தீராத அனைத்து நோய்களும் உடனே விலகும். நமக்கு ஏற்படும் நோய்களைத் தீர்ப்பவர் மருத்துவர்தான் என்றாலும், தன்வந்தரியே மருத்துவர் வடிவில் வந்து நோயை குணப்படுத்துகிறார்.

    ஆகவே நோயின்றி வாழ விரும்பும் குறிப்பாக மருத்துவத்துறையில் இருக்கும் அனைவரும் ஸ்ரீதன்வந்தரியை பூஜீத்து நமஸ்கரித்து நன்மையை அடையலாம்.
    ராகு கேது தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
    தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்.

    தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

    துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

    ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.
    கடன்தொல்லையோ, பிள்ளைகளுக்கான வேண்டுதல்களோ, திருமண பரிகாரங்களோ எதுவானாலும் வந்தவர்களின் மனம் குளிர வைக்கிறான் இந்த வயலூர் முருகன்.
    அருணகிரி நாதர் இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு, பாடி பரவசப்பட்ட இடம் இந்த வயலூர். அருணகிரிநாதர் மட்டுமல்ல, ஞானவரோதயர் என்ற அடியாருக்கு அருள் புரிந்த திருத்தலம்.

    வயலூர் முருகனை வழிபட்டு இறவாப்புகழை பெற்றார் அருணகிரிநாதர் என்ற ஒன்று போதும் இந்த தலத்தின் பெருமைக்கு சான்று. பழனி, திருச்செந்தூருக்கு வேண்டுதல் வைத்தவர்கள் இந்த கோயிலில் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தலாம். ஆனால், வயலூரானுக்கு வைத்த வேண்டுதலை வேறு கோயிலில் செலுத்த முடியாது அசலோடு வசூலித்துவிடுவான் இந்த வடிவேலன் என்பது இந்த ஊர் மக்களின் சொல்லாக இருக்கிறது.

    கடன்தொல்லையோ, பிள்ளைகளுக்கான வேண்டுதல்களோ, திருமண பரிகாரங்களோ எதுவானாலும் வந்தவர்களின் மனம் குளிர வைக்கிறான் இந்த வயலூர் முருகன். வைத்த கண் வாங்காமல் பார்க்க வைக்கும் இந்த வடிவேலனை, வயலூர் நாயகனை கண்குளிர பார்த்துவிட்டு வந்தவர்களின் மனங்களையும் இவர் ஆட்சிகொண்டு விடுகிறான்.

    தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன் இந்த கோயிலின் வழக்கமாக இருக்கிறது. தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள்.

    திருமண பரிகார தலமாகவும் வயலூர் இருக்கிறது. வரம் தருவான் வயலூரான் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகவும், பெரும்பாலான நேரங்களில் நிஜமாகவும் இருக்கிறது. இந்த கோயிலில் வைகாசி விசாகம், கார்த்திகை திருவிழா, சஷ்டி விழா என  வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடக்கின்றன.
    நவகிரக தோஷம் போக்கும் தலங்களில் சென்னையில் உள்ளது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    சூரியன் - சென்னை செங்குன்றம் அருகேயுள்ள ஞாயிறு கோவில்

    சந்திரன் - சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் அமைந்துள்ள அகஸ்தியர் கோவில்

    செவ்வாய் - வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில்

    புதன் - திருவாலங்காடு

    வியாழன் - பாடி வலிதாயநாதர் கோவில்

    சுக்கிரன் - மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவில்

    சனி - சென்னை பூக்கடை தங்கசாலையில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில்

    ராகு-கேது - சென்னை பாரிமுனை மண்ணடியில் உள்ள மல்லீஸ்வரர், குன்றத்தூர் நாகேஸ்வரர்
    ஜாதகத்தில் நவகிரக தோஷம் இருப்பவர்கள் சில எளிய தானிய பரிகாரங்களை செய்வதன் மூலம் நிரந்தர தீர்வை காண முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    சூரியன்: சூரிய பகவானுக்கு உரியது கோதுமை. கோதுமையால் தயாரித்த சுண்டலோ அல்லது உணவையோ படைத்தால், சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும்.

    சந்திரன்: சந்திர பகவானுக்கு உரியது நெல். அதனால், அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால், சந்திர தோஷம் நீங்கும். வாழ்நாள் முழுவதும் இன்னல்கள் ஏற்படாது.

    செவ்வாய்: செவ்வாய் பகவானுக்கு உரியது துவாரை. இதனை படைத்து வணங்கினால், விபத்து, காயங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். திருமண தடை நீங்கும். சொத்து சேரும்.

    புதன்: புதனுக்குரியது பச்சை பயிறு. இத்தானியத்தை வைத்து வணங்கினால், கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் பெற முடியும். வணிகத்தில் வெற்றி பெறலாம். ஜோதிட கலையில் புகழ் பெறலாம்.

    குரு: குரு பகவானுக்கு உரியது கடலை. கடலையை படைத்து வணங்கினால், மங்கள சுபாரியங்கள் சுலபமாக நடக்கும். மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.

    சுக்கிரன்: சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை. மொச்சையை படைத்து வணங்கினால், கலைகளில் வித்தகராக திகழலாம்.

    சனி: சனி பகவானுக்குரியது எள். எள்ளை படைத்து வணங்கினால், எந்த தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும். கஷ்டங்கள் நீங்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நோய் தீரும். ஆயுள் அதிகமாகும்.

    இராகு: இராகு பகவானுக்கு உரியது உளுந்து. உளுந்து படைத்து வணங்கினால், நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும். திடீர் பணக்காரனாக்கும் தன்மை இராகு பகவானுக்கு உண்டு.

    கேது: கேது பகவானுக்குரியது கொள்ளு. கொள்ளு படைத்து வணங்கினால், வாட்டி வதைத்த நோய் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். மனதில் உற்சாகமும், தெம்பும் கிடைக்கும். விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும்.
    தினமும் வீட்டில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமையும். எந்த தூபம் போட்டால் எந்த வகையான பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.
    சந்தனதத்தில் தூபமிட - தெய்வ கடாட்சம் உண்டாம்.

    சாம்பிராணியில் தூபமிட -கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

    ஜவ்வாது தூபமிட -திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.

    அகிலி தூபமிட -குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    துகிலி தூபமிட -குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.

    துளசி தூபமிட - காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.

    தூதுவளை தூபமிட -எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.

    வலம்புரிக்காய் தூபமிட -பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.

    வெள்ளைகுங்கிலியம் தூபமிட -துஷ்ட அவிகள் இருந்தவிடம் தெரியாது நீங்கிவிடும்.

    வெண்கடுகு தூபமிட -பகைமை எதிர்ப்புகள் விலகும்.

    நாய்கடுகு தூபமிட -துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.

    மருதாணிவிதை தூபமிட -சூனிய கோளாறுகளை நீக்கும்.

    கரிசலாங்கன்னி தூபமிட -மகான்கள்அருள்கிட்டும்.

    வேப்பம்பட்டை தூபமிட -ஏவலும் பீடையு நீங்கும்.

    நன்னாரிவேர் தூபமிட -இராஜவசியம் உண்டாக்கும்.

    வெட்டிவேர் தூபமிட -சகல காரியங்களும் சித்தியாகும் .

    வேப்பஇலைதூள் தூபமிட - சகலவித நோய் நிவாரணமாகும்.

    மருதாணிஇலைதூள் தூபமிட -இலட்சுமி கடாட்சம் உண்டாகும்.

    அருகம்புல்தூள் தூபமிட - சகல தோஷமும் நிவாரணமாகும்.

    மேலே குறிப்பிட்டுருக்கும் அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

    தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து அங்கு நடக்கும் நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும். !
    அனைத்து விதமான தோஷங்களும் நீங்க தீபங்கள் ஏற்றினால் பலன் கிடைக்கும். எந்த வகையான தோஷத்திற்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    1. ராகு தோஷம் - 21 தீபங்கள்
    2. சனி தோஷம் - 9 தீபங்கள்
    3. குரு தோஷம் - 33 தீபங்கள்
    4. துர்க்கைக்கு - 9 தீபங்கள்
    5. ஈஸ்வரனுக்கு - 11 தீபங்கள்
    6. திருமண தோஷம் - 21 தீபங்கள்
    7. புத்திர தோஷம் - 51 தீபங்கள்
    8. சர்ப்ப தோஷம் - 48 தீபங்கள்
    9. காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
    10. களத்திர தோஷம் -108 தீபங்கள்
    வீட்டில் வறுமை, தரித்திரம் வராமல் இருக்கவும், செல்வம் சேரவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள 11 விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    வீட்டில் தரித்திரம் மறைந்து செல்வம் நிலைக்க கடைபிடிக்க வேண்டியவை :

    1. வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

    2. ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.(வாசல் படி நரசிம மூர்த்திக்கு சொந்தம் ).

    3. உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது.

    4. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது/சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது,பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

    5. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.

    6. பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது

    7. இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது. வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.

    8. அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவைகள் மாமிசத்துக்கு சமம்.

    9. செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால், பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.

    10. செல்வச் செழிப்போடு வாழ, நமது வீட்டில் நமது ஆடைகள், துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது. நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும், புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.

    11. நமது வீட்டிற்குள் நுழைந்ததும், எப்போதும் நறுமணம் வீச வேண்டும். அப்படி இருந்தால், செல்வம் சேர தொடங்கும். எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும். அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
    ×