என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    தெய்வத்திற்கு வேண்டுதல்கள் நிறைவேற தேங்காய் உடைப்பது வழக்கம். தேங்காய் உடைப்பதை வைத்து நம் வாழ்வில் நடக்க கூடிய இன்ப துன்பங்களை அறிந்து கொள்ளலாம்.
    (1) தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்

    (2) ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும்

    (3) சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும்

    (4) மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் இரத்தினம் சேரும்

    (5) ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும்

    (6) உடைக்கும் பொழுது கைப்பிடியிலிருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் - பொருள் இழப்பு ஏற்படும்

    (7) நீளவாக்கில் உடைந்தால் தனம் அழிந்து துன்பம் உண்டாகும்

    (8) முடிப்பாகம் இரு கூறானால் தீயினால் பொருள் சேதம்

    (9) முடிப்பாகம் இரு கூறாக உடைந்து அந்த இரு கூறுகளோடு அவற்றின் ஓடு உடனே தெறித்து வீழ்ந்தால் நோய்களினால் துன்பம் ஏற்படும்

    (10) சிறு, சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு - ஆபரண லாபம் உண்டாகும்

    (11) ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டிக் கொண்டிருக்கும் பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால் வேண்டும் காரியம் வெற்றியை தரும்.
    கடன் தொல்லை தீர பரிகார முறைகளாக முன்னோர்கள் வீடு கட்டும் பொழுது, சில விதிமுறைகளை பின்பற்றினார்கள். இந்த பரிகாரத்தை செய்தால் நல்ல பலனை காணலாம்.
    கடன் தொல்லை தீர பரிகார முறைகளாக முன்னோர்கள் வீடு கட்டும் பொழுது, நிலை வாசலில் மற்றும் கிணறு தோண்டும் சமயம் மற்றும் வேறு சில சூட்சுமமான இடங்களில் ஓட்டை காலணா, வசதி உள்ளோர் வெள்ளி நாணயம், அரச குலத்தோர் தங்க நாணயம் போன்றவை அவ்விடம் புதைத்து வைப்பது வழக்கம். இவை அந்த இடம்/மனை பல காலங்கள் செல்வ செழிப்புடன் இருக்க உதவும் ஒன்று. தற்காலங்களில் இவை காணப்படுவதில்லை. அதற்கு மாற்றாக, அதே வீரிய சக்தியை கொண்ட மற்றும் அனைவரும் எளிதாக செய்ய கூடிய ஒன்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.20 முதல் 2 மணிக்குள், ஆறு ஒரு ருபாய் பழைய நாணயத்தை வலது கையில் எடுத்து கொண்டு வீட்டின் அல்லது அலுவலகத்தின் / தொழில் செய்யும் இடத்தின் வடகிழக்கு மூலை சென்று வடகிழக்கை நோக்கியவாறு அமர்ந்து ஸ்ரீம் என்ற மந்திரத்தை 60 முறை கூறி பின்பு நாணயங்களை அவ்விடம் புதைத்து விடவும். அடுத்து வரும் 33 நாட்களுக்கு மட்டும் கையளவு மஞ்சள் கலந்த நீரை மேற்கண்ட மந்திரத்தை 6 முறை கூறியவாறு தெளித்து வரவும். இது அவ்விடத்தை வறுமை நீக்கி, செல்வம் வளம் பெருக செய்யும் ஒரு பரிகாரமாகும். அந்த நாணயங்கள் நிரந்தரமாக அந்த மனையில் இருக்க வேண்டும்.

    குறிப்பு : வடகிழக்கில் மண் இல்லாதோர், அடுக்குமாடிகுடியிருப்பில் வசிப்போர், வாடகை வீடு, அலுவலகம் போன்றவற்றிற்கு மேற்கண்ட முறையை சிறு தொட்டியில் மண் நிரப்பி அதில் புதைத்து வைத்து செய்து வரவும். வேறு இடம் மாற்றம் செய்ய நேரின், அதை புது இடத்தில் குறிப்பிட்டு உள்ள பகுதியில் வைத்து விடலாம்.
    வில்வம் சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும். இவ்விருட்சத்தைப் பூஜிப்பவர்கள் சகல நன்மைகளும் பெறுவார்கள். வில்வத்தின் பெருமையை பற்றி சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் மிக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
    உலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்லவரான ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது தான் வில்வ மரம். இதுவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும். இவ்விருட்சத்தைப் பூஜிப்பவர்கள் சகல நன்மைகளும் பெறுவார்கள். வில்வத்தின் பெருமையை பற்றி சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் மிக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

    வில்வ இலைகள் சிவனின் திரிசூல வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பதாக விளங்குகின்றன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்த வேண்டும். தினமும் சிவனுக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனை பூஜித்தால், நம்முடைய ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.

    வீட்டில் வில்வமரம் வைத்து வளர்த்து வழிபடுபவர்களுக்கு ஒரு போதும் நரகமில்லை. மேலும் எமபயம் எப்போதும் வாராது. ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை பூஜை செய்வதற்கு சமமானதாகும். வில்வ மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.
    மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி வீற்றிருக்கும் துளசியை வழிபட்டால், அதிர்ஷ்டத்திற்கும், ஐஸ்வரியத்திற்கும் பஞ்சம் இருக்காது என்பதே பலரின் கூற்றாக இருக்கிறது.
    பெருமாளுக்குரிய வழிபாட்டில் துளசிக்கு முக்கியமான இடம் உண்டு. துளசியானது, பூமாதேவியின் அம்சமாகவே போற்றப்படுகிறது. அதனால்தான் அதை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள், அதை ஒரு செடியாகப் பார்க்காமல், அதை ஒரு பெண்ணாக பாவித்து, அதை வலம் வந்து தங்களது குறைகளை நிறைவேற்றும்படி வழிபடுகிறார்கள். துளசிச் செடியை சுற்றி வந்து வழிபடுபவர்களுக்கு, பூமாதேவியின் அம்சமாக கருதப்படும் பொறுமை, வளமை மற்றும் துன்பங்களை தாங்கும் சக்தி போன்றவை கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ‘துளசி’ என்பதற்கு ‘ஒப்பில்லாதவள்’ என்று பொருள். ஒரு காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒன்றிணைந்து பாற்கடலைக் கடைந்தனர். அப்போது அதற்குள் இருந்து கற்பகத்தரு, ஐராவதம், சந்திரன், காமதேனு, மகாலட்சுமி ஆகியன வெளிப்பட்டன. இதனைக் கண்டதும், பெருமாளின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அதில் ஒரு துளி நீர், கடலுக்குள் விழுந்தது. பின்னர் கடலுக்குள் இருந்து பச்சை நிறத்துடன் துளசி தேவியின் உருவம் வெளிப்பட்டது.

    பாற்கடலில் இருந்து கிடைத்தவற்றில் கவுஸ்துபமணி, மகாலட்சுமி, துளசி ஆகியவற்றை விஷ்ணு வைத்துக் கொண்டார். மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கினார். துளசி இலையில் முப்பத்து முக்கோடி தேவர்கள், 12 சூரியர்கள், அஷ்ட வசுக்கள், இரண்டு அஸ்வினி தேவர்கள் வசிப்பதாக ஐதீகம். துளசி இலையின் நுனிப் பகுதியில் பிரம்மதேவனும், மத்தியப் பகுதியில் மகாவிஷ்ணுவும் இருப்பதாக சொல்கிறார்கள். மேலும் மகாலட்சுமி, காயத்ரிதேவி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரும் கூட துளசியில் வாசம் செய்கிறார்களாம்.

    துளசியானவள், எப்போதும் தனது நாயகனான மகாவிஷ்ணுவை துதித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அவளது இன்னொரு வடிவமே, பூமியில் வளரும் துளசிச் செடி என்றும் கூறப்படுகிறது. துளசிக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்து பெயர்களுமே, விஷ்ணுவோடு தொடர்புடையவையாகவே இருப்பது, அவர்களுக்கான நெருக்கமான தொடர்வை புலப்படுத்துவதாக இருக் கின்றன.

    துளசிக்கு, ‘ஹரிபிரியா’ என்ற நாமமும் உண்டு. இதற்கு ‘விஷ்ணுவின் மனதிற்கு இனியவள்’ என்று பொருள். அதேபோல் ‘வைஷ்ணவி’ என்றும் துளசி போற்றப்படுகிறாள். இந்த பெயருக்கு ‘விஷ்ணுவை சொத்தாக கொண்டவள்’ என்பது பொருளாகும். பொதுவாக ஆலயங்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது, ‘விஷ்ணுவல்லப’ என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இந்த விஷ்ணுவல்லப என்பதும் துளசியையே குறிக்கும். இதற்கு ‘விஷ்ணுவுக்கு பிரியமானவள்’ என்று அர்த்தம்.

    ஸ்ரீ துளசி என்பது, துளசியை மரியாதையாக அழைக்கும் பெயராகும். இந்தப் பெயரில் ‘ஸ்ரீ’ என்பது திருமகளான மகாலட்சுமியைக் குறிப்பதாகும். அதனால்தான் பசுமையான இலைகளைக் கொண்ட துளசியை வழிபடுபவர்களுக்கு அதிர்ஷ்டம் வந்துசேரும் என்கிறார்கள். மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி வீற்றிருக்கும் துளசியை வழிபட்டால், அதிர்ஷ்டத்திற்கும், ஐஸ்வரியத்திற்கும் பஞ்சம் இருக்காது என்பதே பலரின் கூற்றாக இருக்கிறது.

    துளசிக்கு, ‘பிருந்தா’ என்ற பெயரும் உண்டு. துளசி அடர்த்தியாக வளர்ந்திருக்கிற இடம் ‘பிருந்தாவனம்’ என்று அழைக்கப்படும். கிருஷ்ணர் விளையாடிய பிருந்தாவனம் புனிதத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    பசுமையான பச்சை நிறத்தில் இருப்பது ‘ராம துளசி’ என்றும், கரும்பச்சையாக இருப்பது ‘கிருஷ்ண துளசி’ என்றும் அழைக்கப்படுகிறது. துளசிக்கு இணையான தாவரமோ, மூலிகைகளோ வேறு எதுவும் இல்லை என்பார்கள். ஏனெனில் ‘துளசி’ என்ற சொல்லுக்கு ‘தன்னிகரற்றது’ என்ற பொருளும் உண்டு. துளசியில் நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி எனப்படும் கஞ்சாங்கோரை, திருத்துழாய் ஆகிய வகைகள் இருக்கின்றன.

    வடமொழியில் துளசிக்கு பலவிதமான பெயர்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் காரண காரியங்களின் அடிப்படையில் அமைந்தவையாக இருக்கிறது. துளசியில் சாறு நிரம்பி இருப்பதால், ‘சரசா’ என்று பெயர். எல்லா இடங்களிலும் எளிதாக கிடைப்பதால் ‘சுலபா’ என்று பெயர். அருகருகே பூக்களைக் கொண்டு பூங்கொத்து போல காட்சி தருவதால், ‘பகுமஞ்சரி’ என்று பெயர். ‘மஞ்சரி’ என்றால் தமிழில் ‘பூங்கொத்து’ என்று அர்த்தம். அதிகமான இதழ்களைக் கொண்டிருப்பதால், ‘பகுபத்ரி’ என்றும், வயிற்றுவலியைத் தீர்த்து வைப்பதால் ‘சூலாக்கினி’ என்றும், கிருமிகளைக் கொன்று துன்பத்தை நீக்குவதால் ‘அபேராசி’ என்றும், துளசிச் செடி வளரும் அடி மண் புனிதமானது என்பதால் ‘பவானி’ என்றும் பல பெயர்களில் துளசி போற்றப்படுகிறாள்.
    பைரவரை வழிபட சில குறிப்பிட்ட நேரங்கள் உள்ளது. அந்த நேரங்களில் வழிபட்டால் பிரச்சனைகள் தீரும். எந்த நேரத்தில் வழிபட்டால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.
    பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும். பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும்.

    இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.

    பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

    பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

    பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.
    விளக்கு ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மஹாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துவது. நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்” என்பது ஜதீகம்.
    விளக்கு ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மஹாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துவது. காலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றப்படும். விளக்கு ஏற்றுவது என்பது அங்கு இறை சக்தியினை கொண்டு வருவதாக சொல்லப்படுகின்றது.

    அதிலும் நெல்லிக்காயில் நெய் விளக்கு ஏற்றுவது அவ்வளவு நல்லதாம். ஏன் தெரியுமா? நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்” என்பது ஜதீகம். எவ்வாறு நெல்லிக்காய் விளக்கு ஏற்றுவது. முதலில் காட்டு நெல்லிக்காயை வாங்கி மேற்புறமாக சற்று பள்ளமாக தோண்டி கொள்ளுங்கள்.

    அதே போன்று கீழ்புறமும் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்து விடுங்கள். பின்னர் காட்டன் திரி கொண்டு நெய்யில் நனைந்து, பின்னர் அதனை நெல்லிக்காயில் வைத்து விளக்கேற்றுங்கள். இவ்வாறு விசேஷ நாட்களில் இது போன்று விளக்கு ஏற்றினால், இழந்ததை மீண்டும் பெற முடியும் என்பது ஐதீகம்.
    பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தியும், வெவ்வேறு பலன்களும் உண்டு.
    பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தியும், வெவ்வேறு பலன்களும் உண்டு.

    1.தேங்காய் - குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற்றுமை உண் டாகும்.
    2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி - நரம்பு வியாதி திருமணம் தடை நீங்கும்.
    3.கொடை மிளகாய் - புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.
    4.கொய்யா பழம்/ கத்திரிக்காய் - நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.
    5.பீட்ருட் - ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.
    6.பாகற்காய் - சனி பாதிப்பு நீங்கு, கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.
    7.வில்வபழம்/ மாதுளம் - லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.
    8.ஆரஞ்சு பழம் - தொழில் விருத்தி ஏற்படும்.
    9.அன்னாசிப்பழம் - சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.
    10.பப்பாளி பழம் - திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
    11.இளநீர் - ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.
    12.வெள்ளரிக்காய் - சுகமான வாழ்க்கைஅமையும்.
    13.மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவர்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.
    அம்மனை வழிபடுவதால் வாழ்வில் எண்ண முடியாத வளர்ச்சியைக் காணலாம் என்பார்கள். அம்மனுக்கு செய்யும் இந்த அபிஷேகங்கள் என்னென்ன பிரச்சனைகளை தீர்க்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
    அம்மனை வழிபடுவதால் வாழ்வில் எண்ண முடியாத வளர்ச்சியைக் காணலாம் என்பார்கள். இதனால் இல்லத்தில் பெண் குழந்தைகள் பிறக்கும் என்பதும் ஒரு நம்பிக்கை. வாழ்வில் அந்தந்த காலகட்டத்தில், ஒவ்வொரு வேண்டுதல்கள் இருக்கும். அவற்றை அம்மனுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கின்றனர் பெரியோர். திரவியங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அத்திரவியத்தை அளித்து பக்தர்கள் வேண்டுவனவற்றைப் பெறலாம் என்பது ஐதீகம்.

    தீர்க்காயுசுடன் வாழப் பசும்பால்,

    குடும்ப ஒற்றுமைக்கு இளநீர்,

    நல்வாழ்க்கைக்கு நல்லெண்ணை,

    கடன் தீர அரிசி மாவுப் பொடி,

    நினைத்த காரியம் நிறைவேற நீர்,

    பிணிகள் தீரக் கரும்புச்சாறு,

    குழந்தை பாக்கியம் பெற

    பசுந்தயிர், பயம் போக்க

    எலுமிச்சைச் சாறு, இனிய குரல்

    வளம் கிடைக்க தேன், செல்வம்

    சேர பஞ்சாமிருதம், அஷ்ட

    ஐஸ்வர்யத்திற்கு சந்தனம்,

    பாவங்கள் கரைய பஞ்சகவ்யம்,

    முக்தி கிடைக்க நெய்

    ஆகியவற்றால் அபிஷேகம் செய்தல் பன்மடங்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    இயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். அகால மரணமடைந்தவர் ஆன்மா சாந்தியடைய இராமேஸ்வரத்தில் தில ஹோமம் செய்தால் துர்மரணமடைந்த ஆத்மாவை சாந்தியடைய செய்துவிடும்.
    இயற்கையாக இறந்தவர்களின் ஆன்மாவிற்கு எளிதில் முக்தி கிடைத்துவிடும். மன வேதனை அடைந்து துர்மரணம் அடைந்தாலோ, கொடூரமான நோய் தாக்கத்தால் இறந்தாலோ அவர்களின் ஆன்மா எளிதில் முக்தி அடைவதில்லை.

    இயற்கையாக மரணித்து, முக்தி அடைந்தவரின் வீட்டில் சுப நிகழ்வு நடந்து கொண்டே இருக்கும். அகால மரணமடைந்த ஆத்மா முக்தி அடையும் வரை நல்ல காரியங்கள் நடைபெறுவதில் தடைகள் ஏற்படும். இதற்கு காரணம் ஆத்ம சாந்திக்கான கடமைகளை செய்யாமல் விடுவதுதான்.

    முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களை யும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் தில ஹோமம், எத்தகைய துர்மரணமடைந்த ஆத்மாவையும் சாந்தியடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.
    துளசியை நினைத்தால் பாவம் போகும். அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால் சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். ஆஞ்சநேயரை வணங்கும் அடியவர்கள் ‘ஸ்ரீ ராம ஜெயம்’ கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.

    தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்போது பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அக்கலசத்தின்றும் பச்சை நிறத்துடன் ஸ்ரீ துளசி மகாதேவி தோன்றினாள்.

    துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார். துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர். இலையின் நுனியில் பிரமன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரஸ்வதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர்.

    துளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான். துளசியை வழிபட்டால் ஆயுள் பலம், புகழ், செல்வம், மகட்பேறு முதலியன பெருகும். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர்.

    துளசி மாலையும் வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விஷேசமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ஸ்ரீ ராமஜெயம் அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜய ஜய ராம என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை தியானிக்க வேண்டும். அதன் பிறகு தமது பிரார்த்தனையைச் சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டின் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    புதன், வியாழன், சனிக்கிழமைகளில் அனுமன் பூஜையைத் தொடங்கலாம். அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம்.
    ஆன்மீகப்படி இத்தகைய பிரச்சனைகள் நீங்கி குடும்ப ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்கான ஒரு பரிகார முறை ஒன்று உள்ளது. தற்போது இந்த பரிகார முறையை பற்றி இங்கு பார்ப்போம்.
    நம்மால் உணர முடியாத பல நுட்பமான தீய அதிர்வுகள் வீட்டில் நிறைந்திருந்தால் எந்நேரமும் காரணமின்றி சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவார்கள். ஆன்மீகப்படி இத்தகைய பிரச்சனைகள் நீங்கி குடும்ப ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்கான ஒரு பரிகார முறை ஒன்று உள்ளது. தற்போது இந்த பரிகார முறையை பற்றி இங்கு பார்ப்போம்.

    தினமும் மாலை வேளைகளில் சிறிது மஞ்சள் எடுத்து, வீட்டு வாசல் படியின் இரண்டு புறத்திலும் இரண்டு சதுரங்களை வரைந்து கொள்ள வேண்டும்.

    அந்த இரண்டு சதுரங்களிலும் ஒரு வேப்பிலையை வைக்க வேண்டும். வேப்பிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு இருப்பது நல்லது.

    பிறகு அதன் மீது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வைத்து, எண்ணெய் ஊற்றி, மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

    மேற்கண்ட முறையில் தினமும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வந்தால் அந்த வீட்டில் இருக்கின்ற எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் விரைவிலேயே நேர்மறையான ஆற்றல்களாக மாறுவதை நாம் காணலாம்.

    குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள், மனஸ்தாபங்கள் போன்றவை நீங்கும்.

    பிறருடன் விரோதம் ஏற்படுவது, எதிரிகளால் நமக்கு பாதிப்புகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

    கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்துவாழும் தம்பதியர்கள் இந்த பரிகாரம் செய்வதால் கூடிய விரைவில் ஒன்றிணைந்து வாழ ஆரம்பிப்பார்கள்.
    சக்கர பூஜை அல்லது மகாமேரு பூஜை செய்வதால் உண்டாகும் நன்மைகளையும், தீரும் பிரச்சனைகளையும் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
    சக்கர பூஜை அல்லது மகாமேரு பூஜை செய்வதால் உண்டாகும் நன்மைகளையும், தீரும் பிரச்சனைகளையும் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

    1. மனதை ஒரு முகப்படுத்தலாம்.
    2. உலக இயக்கத் தத்துவத்தை அறியலாம்.
    3. மகிழ்ச்சி உண்டாகும்.
    4. பகைவர்கள் விலகுவர்.
    5. விஷப் பூச்சிகளால் ஆபத்து ஏற்படாது.
    6. சகல வியாதிகளும் நீங்கும்.
    7. முகத்தில் பொலிவு ஏற்படும்.
    8. சித்திகள் உண்டாகும்.
    9. ஆபத்துக்கள் ஏற்படாது.
    10. கல்வி, செல்வம், ஆயுள், ஆரோக்கியம்,
    சக்தி, பலம், புகழ் உண்டாகும்.
    11. நன் மக்கள்பேறு உண்டாகும்.
    12. பிரம்மத்தை அறியலாம்.
    13. மன நிறைவு ஏற்படும்.
    14. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
    15. முதுமையிலும் நிம்மதியான
    வாழ்வு உண்டாகும்.
    16. மக்களிடம் செல்வாக்கு உண்டாகும்.
    17. பிள்ளைகள் பெற்றோர் சொல்
    கேட்டு நடப்பார்கள்.
    18. நிகரற்றவர் என்ற பெருமை உண்டாகும்.
    19. உள்ளத்தில் ஒளி உண்டாகும்.
    20. வாக்கு பலிதம் உண்டாகும்.
    21. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
    22. மாணவர்கள் தேர்வுகளில்
    வெற்றி பெறுவார்கள்.
    23. காரியத் தடை நீங்கும்.
    24. தர்க்க வாதத்தில் வெற்றி பெறலாம்.
    25. ஞானம் உண்டாகும்.
    26. எடுத்த காரியம் யாவிலும்
    வெற்றி உண்டாகும்.
    27. இல்லறம் இனிமையாக அமையும்.
    28. கவித்துவம் உண்டாகும்.
    29. எழுத்தாற்றல், பேச்சாற்றல் வளரும்.
    30. விருப்பங்கள் நிறைவேறும்.
    31. எதிர்காலத்தை அறியும் பாக்கியம் கிட்டும்.
    32. உடல் வலிமை, மனவலிமை உண்டாகும்.
    33. வேலை கிடைக்காதவர்களுக்கு
    வேலை கிடைக்கும்.
    34. திருமணத் தடைகள் நீங்கும்.
    35. பிரிந்திருந்த கணவன் மனைவி
    ஒன்று சேருவார்கள்.
    36. இறுதிக் காலம் அமைதியாக இருக்கும்.

    ×