என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பைரவர் சந்நிதியில் வழிபடும் போது பின்வரும் பாடலைப் பாடி வழிபட வேண்டும்.

    பைரவர் சந்நிதியில் வழிபடும் போது பின்வரும் பாடலைப் பாடி வழிபட வேண்டும்.

    'தளம் பொலி மலரோன் ஆதி வானவர் தாழ்ந்து போற்ற

    உளம் பொலி காசி மேஷம் உயிர்கள் செய் பாவமெல்லாம்

    களம் பொழியாது தண்டனை கண்டள பொழிந்து முந்தி

    வளம் பொலி வகை செய் கால பைரவற் கன்பு செய்வாம்!

    ஸ்ரீபைரவர் காயத்ரி

    ஓம் திகம்பராய வித்மஹே

    தீர்கஸிஷ்ணாய தீமஹி

    தந்நோ பைரவ; ப்ரசோதயாத்.

    • இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும்.
    • இவ்வாறு 16 சனிக் கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனி பகவானின் தாக்கம் நின்றுவிடும்.

    சனி பகவானின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே சிறந்தது ஆகும்.

    புதிய நீலத்துணியில் கறுப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும்.

    பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும்.

    பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும்.

    வைத்தப்பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.

    அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும்.

    அந்த நீலப் பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும்.

    இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும்.

    இவ்வாறு 16 சனிக் கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனி பகவானின் தாக்கம் நின்றுவிடும்.

    • ராமகிரி ஆலயத்தில் முதலில் தோன்றி அருள்பாலித்தவர் ஸ்ரீகால பைரவர்.
    • அதனால்தான் இத்தலத்தை கால பைரவ ஷேத்திரம் என அழைக்கிறார்கள்.

    ராமகிரி ஆலயத்தில் முதலில் தோன்றி அருள்பாலித்தவர் ஸ்ரீகால பைரவர்.

    அதனால்தான் இத்தலத்தை கால பைரவ ஷேத்திரம் என அழைக்கிறார்கள்.

    தனது பத்தினி ஸ்ரீகாளிகா தேவியுடனும் எதிரில் நாய் வாகனத்துடனும், ஐந்து கோஷ்ட மூர்த்திகள் உள்ள பிரத்யேகமான கர்ப்ப கிரகத்தில் சூலம், உடுக்கை, கத்தி, தண்டம், முறையாக வலது நான்கு கரங்களிலும், அங்குசம், பாசம், மணி, கபாலம் முதலியவற்றை இடது நான்கு கரங்களிலும் தரித்து நிர்வாண கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    சூரியன், சந்திரன், கங்கை உள்ள ஜடாமுனியுடன் கோரைப்பற்கள் உடைய முகத்துடனும், தென்திசை நோக்கி எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீகால பைரவ மூர்த்தி.

    பெயர் மாற்றம்

    ராமகிரி ஊரை ஆதி காலத்தில் "திருக்காரிக்கரை" என்று அழைத்தனர்.

    ஸ்ரீராமரின் பூஜை நிமித்தமாக கொண்டு வரப்பட்ட சுயம்புலிங்கம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதன் காரணமாக "ராம்" என்ற நாமமும், ஆஞ்சநேயர் சாபத்தால் மடுகு மறைந்து "கிரி" (மலை) ஏற்பட்டதால் கிரி என்ற பதமும் சேர்த்து அன்று முதல் திருக்காரிக்கரை கிராமத்திற்கு ராமகிரி என்ற புனிதப் பெயர் உண்டாயிற்று.

    காலமாற்றத்தால் திருக்காரிக்கரை என்ற பெயர் மறைந்து ராமகிரி என்ற பெயர் நிலைத்து நின்று விட்டது.

    • சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.
    • எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

    சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.

    எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

    சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர்

    வைகாசி தாதா - ருரு பைரவர்

    ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர்

    ஆடி அரியமான் -கபால பைரவர்

    ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

    புரட்டாசி பகன் - வடுக பைரவர்

    ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்

    கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர்

    மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர்

    தை விஷ்ணு - குரோதன பைரவர்

    மாசி வருணன் - ஸம்ஹார பைரவர்

    பங்குனி பூஷா -சட்டநாத பைரவர். 

    ராமகிரி ஆலயத்தில் வாலீஸ்வரர் சன்னதிக்கு அருகே மரகதாம்பிகை தனி சன்னதியில் உள்ளார்.

    சுருட்டப்பள்ளி தலத்திலும் அம்பாளின் பெயர் மரகதாம்பிகைதான்.

    இந்த இரண்டு மரகதாம்பிகையையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது மிகுந்த நன்மை தரும் என்பது சித்தூர் மாவட்ட மக்கள் நம்புகிறார்கள்.

    ராமகிரி தலம் ஆதிகாலத்தில் தொண்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.

    ஆந்திரா மாநிலம் பிரிந்தபோதுதான் அது தனியாக சென்று விட்டது.

    அந்த காலத்து தொண்டை மண்டலத்தில் 5 மரகதாம்பிகை ஆலயங்கள் மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்று இருந்தன.

    அதில் தற்போது 2 ஆலயங்கள் சுருட்டப்பள்ளியிலும், ராமகிரியிலும் இருப்பது தெரிய வந்தது.

    இந்த ஆலயங்களை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதியில் மேலும் 3 மரகதாம்பிகை ஆலயங்கள் உள்ளன.

    இந்த 5 மரகதாம்பிகை ஆலயங்களுக்கு ஒரே நாளில் சென்று அம்பிகையை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

    ராமகிரி மரகதாம்பாள் சன்னதி சுவற்றில் ஸ்ரீவாலீஸ்வரர் அந்தாதி பாடல் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

    மகரதாம்பிகை புகழ் பாடும் அந்த பாடல் வருமாறு:

    மரகதமே,அதிசுகமே மனம் நிறையும் சருதிலயமே

    சரனெனவே உளயடைவோர்க்கருளிறியும் மதிவதன்

    திரனெல்லாம் தந்தெனையே உன் புகழைப்பாட வைத்தாய்

    திருமாலின் தங்கச்சியே குருவாக நிற்பாய்...

    * வாழவொரு வழிகாட்டும் வடி வழகி எந்தன்

    தோழியைப்போல் துணை நிற்பாள் தூய "மரகதமாய்"

    ஆழம் நிறை கடலாகும் அவள் தனையே அறிய

    அவனிதனில் முற்பட்டோர்க் கல்லல் என்று மிலையே....

    * 'இலை மட்டு முண்டிறைவன் நிலைகன்ட அபர்னை

    சிலையாக நிற்கின்றாள் "திருராமகிரியில்"

    தொலையாத வினையில்லை இவள் பாதம் பற்ற

    தொல்லுலகில் தூயவளாம், இவளை நீ நாடு...

    -ஸ்ரீவாலீஸ்வரர் அந்தாதி (1:41:42)

    • மோட்சத்திற்கு அதிபதி சிவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு.
    • சிவனின் 64 அவதாரங்களில் ஒன்றான கால பைரவரே மோட்சத்துக்கு அதிபதி ஆவார்.

    மோட்சத்திற்கு அதிபதி சிவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு.

    சிவனின் 64 அவதாரங்களில் ஒன்றான கால பைரவரே மோட்சத்துக்கு அதிபதி ஆவார்.

    அதனால் தான் காசி தலத்திற்கு கால பைரவர் அதிபதியாக உள்ளார்.

    ஒவ்வொருவருடமும் தர்ப்பணம் பூஜையை ஆற்று ஓரமும், கடற்கரை ஓரமும் அல்லது குருமார்களை வைத்து வீட்டிலும் செய்யலாம்.

    வீட்டில் செய்யும் பூஜையை சிரார்த்தம்(திதி) பூஜை என்பார்கள். இறுதியாக பிண்டங்களை கடலிலோ,ஆற்றிலோ கரைக்கலாம்.

    மோட்ச தீபம் சிவனுக்கு ஏற்றக்கூடாது.அது பைரவருக்கு உரியது, சிரார்த்தம் பூஜை அல்லது மோட்ச தீபம் பைரவருக்கு ஏற்றி, மோட்சத்துக்குரிய அர்ச்சனை செய்த பின் கடைசியில் சிவனுக்கோ அல்லது விநாயகருக்கோ நெய்தீபம் ஏற்றி குடும்ப அர்ச்சனை மட்டும் செய்ய வேண்டும்.

    பைரவருக்கு சாம்பராணி தைல அபிஷேகமும் கதம்ப சாதம் நெய்வேத்தியமும் மிகவும் பிடித்தமானவை.

    எனவே இவற்றை எல்லா பூஜைகளுக்கும் பயன்படுத்தலாம்.

    • ஏழைப் பெண்கள் அவர்கள் குலவழக்கப்படி கொடுத்தால் பைரவர் அருளாசி கிடைக்கும்.
    • பல மடங்கு செல்வம் பெருகும். அந்தச் செல்வம் நம்மிடம் நீங்காது நிறைந்து விளங்கும்.

    வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு நமது பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    அவ்வாறு செய்யும்போது சந்தனாதி தைலம், அத்தர், புனுகு, ஜவ்வாது, சிவப்பு அரளி மாலை அல்லது பூக்களை பூசாரியிடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு 62 வெள்ளிக்கிழமைகளுக்கு தொடர்ந்து வழிபாடு செய்துவர வேண்டும்.

    31 வெள்ளிக்கிழமைகள் முடிந்த பின்னர் குறைந்தது ஒரு ஏழைப் பெண்ணுக்கு தாலியில் தங்கம் செய்து கொடுக்க வேண்டும்.

    ஏழைப் பெண்கள் அவர்கள் குலவழக்கப்படி கொடுத்தால் பைரவர் அருளாசி கிடைக்கும்.

    பல மடங்கு செல்வம் பெருகும். அந்தச் செல்வம் நம்மிடம் நீங்காது நிறைந்து விளங்கும்.

    • பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும்.
    • பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும்.

    பைரவப் பெருமானை காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும்.

    பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும். மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும்.

    இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப் பெருமானை அடையும் சாகாக் கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.

    கும்பிட கால நேரம் கிடையாது

    1. கால பைரவரை வணங்கினால் கெட்ட நேரம் நல்ல நேரம் ஆகும்.

    2. நான்கு கைகளை உடையவர், சூலம், கபாலம், பாசகுஷம், டமரகம் ஆகியவை கைகளில் இருக்கும்.

    3. இவரை கும்பிட கால நேரம் கிடையாது. 24 மணி நேரமும் வழிபடலாம். ஏனென்றால் கால நேரமே இவர்தான்.

    4. படைத்தல், காத்தல், அழித்தல் என மும்மூர்த்திகளுக்கும் துணையாய் இருப்பவர் இவரே.

    5. இவர் சைவம் மற்றும் வைணவம் இரண்டிற்கும் உரியவர்.

    6.பாம்பினை பூனூலாகவும், அரைஞான் கொடியாகவும் அணிந்துள் ளார்.

    7. இவரின் வாகனம் அசுரசுன வாகனம் (நாய்வாகனம்) மற்ற கோவிலில் சுன வாகனம் மட்டும் இருக்கும்.

    8. நிர்வாண கோலம் இவருக்கு ஆனந்த கோலாகலம்.

    9. வியாதிகளை குணப்படுத்துபவர்.

    10. மேலும் ராமகிரி கோவிலில் நந்தி, நாய் வாகனம் இரண்டும் இருக்கும், மற்ற கோவிலில் நாய் வாகனம் மட்டும் இருக்கும்.

    • தேவக்கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு.
    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-20 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி நள்ளிரவு 1.41 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 12.52 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். தேவக்கோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. சூரியனார் கோவில் ஸ்ரீ சூரியநாராயணருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உண்மை

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-பெருமை

    சிம்மம்-பரிவு

    கன்னி-பாசம்

    துலாம்- உதவி

    விருச்சிகம்-செலவு

    தனுசு- வரவு

    மகரம்-உறுதி

    கும்பம்-வெற்றி

    மீனம்-பக்தி

    • வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அதனைத் தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது.

    விழாவின் 8-வது நாளான நேற்று கலிவேட்டை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு பழங்கள், மலர் அலங்காரத்துடன் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடந்தது. 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வெள்ளை குதிரை வாகனம் தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது.

    அங்கு குரு சுவாமி தலைமையில் அய்யா வழி பக்தர்களின் 'அய்யா சிவ சிவா அரகரா அரகரா' என்ற பக்தி கோஷத்திற்கு இடையே அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குமரி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் குதிரை வாகனம் செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வந்தது. வாகனம் வரும் வழிகளில் அந்த பகுதி மக்கள் வரவேற்பு கொடுத்து, வெற்றிலை, பாக்கு, பழங்கள், பன்னீர் ஆகியவற்றை சுருளாக படைத்து வழிபட்டனர்.

    இரவு 11 மணிக்கு வாகனம் சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. அங்கு வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் அய்யா வைகுண்டசாமி காட்சியளித்தார். தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும், பெரிய உகப்படிப்பும், அன்னதர்மமும் நடந்தது.

    விழாவில் இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்திர வாகன பவனியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 

    • திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் அலங்காரம், திருமஞ்சன சேவை
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-19 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : நவமி காலை 6.28 மணி வரை பிறகு தசமி நாளை விடியற்காலை 5.25 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : உத்திரட்டாதி பின்னிரவு 2.26 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்களில் அலங்காரம், திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - நற்சொல்

    ரிஷபம் - முயற்சி

    மிதுனம் - இன்பம்

    கடகம் - செலவு

    சிம்மம் - சுகம்

    கன்னி - சுபம்

    துலாம் - வெற்றி

    விருச்சிகம் - உறுதி

    தனுசு - ஈகை

    மகரம் - தனம்

    கும்பம் - அன்பு

    மீனம் - சாந்தம்

    • மேலும் தினசரி 9 முறை 12 நாட்களுக்கு தொடர்ந்து படிக்க எதிரிகள் அஞ்சுவார்கள்.
    • ஆணவங்களை அழிக்கும் பைரவர் உங்களுக்கு எதிராக ஏற்படும் இன்னல்களை நீக்குவார்.

    ஞாயிற்றுக்கிழமை ராகுகால வழிபாட்டு நேரத்தில் நெய் தீபம் முப்பது வாரங்கள் ஏற்றி வர திருமணம் முடிவுக்கு வரும்.

    ஏவல் பில்லி சூனியம் போன்ற

    துஷ்ட காரியங்களின் தாக்கம் குறைய வேண்டுமா?

    பைரவர் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் ஆலயங்கள் சென்று முறையாக அங்கு நடைபெறும் வழிபாடுகளை கடை பிடிப்பதால் இதுபோன்ற கஷ்டங்கள் விலகும். சிறப்பான பைரவர் தலங்களை இணைப்பில் காணவும்.

    சத்துரு உபாதைகள் நீங்கவும் வழக்குகளில்

    வெற்றி பெறவும் வேண்டுமா?

    பைரவருக்கு இரவு நேர பூஜையும் செவ்வாய், வெள்ளி நாட்களில் யாகமும் சிறந்த பலனைக் கொடுக்கும்.

    முழு மனதுடன் ஈடுபடும் பைரவர் பூஜை சத்ருக்களின் தொல்லை களை நீக்கிவிடும். தேன், உளுந்து வடை நிவேதனம் செய்ய வேண்டும்.

    ஆபத்துக்கள் விலக என்ன செய்யலாம்?

    கால பைரவ அஷ்டகத்தை தொடர்ந்து படிப்பதாலும், சிகப்பு அரளி மலரால் அர்ச்சிப்பதாலும், ஏற்பட இருக்கும் ஆபத்துகள் நிகழாமல் தடுக்கப்படும்.

    மேலும் தினசரி 9 முறை 12 நாட்களுக்கு தொடர்ந்து படிக்க எதிரிகள் அஞ்சுவார்கள்.

    ஆணவங்களை அழிக்கும் பைரவர் உங்களுக்கு எதிராக ஏற்படும் இன்னல்களை நீக்குவார்.

    12 நாள் முடிவில் முடிந்தால் ஒன்பது நபர்களுக்கு அன்னதானம் செய்யவும்.

    சனிக்கிழமைகளில் 6 எண்ணை தீபம் தொடர்ந்து 6 வாரங்கள் ஏற்றி சனீஸ்வரரை வணங்குவதால் எதிர்ப்புகள் நீங்கும்.

    ×