என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • நெய் தீபம் தொடர்ந்து முப்பது தினங்கள் ஏற்றி வர முன்னேற்றம் காணும்.
    • ஏழு செவ்வாய் அல்லது ஏழு வெள்ளிக்கிழமைகளில் சிகப்பு மலரால் அர்ச்சித்து வர காரியம் கைகூடும்.

    தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி செல்வரளி கொண்டு அர்ச்சனை செய்து ஏழை குழந்தைகளுக்கு ஆடை தானம் செய்ய பலன் கிட்டும்.

    உத்தியோக உயர்வு, வியாபார உயர்வு கிடைக்க வேண்டுமா?

    வளர்பிறை அஷ்டமி தினத்தில் சுவர்ண ஆகார்ஷன மந்திரமும் தியான மந்திரமும் சொல்லி 108 காசுகளால் அர்ச்சித்த பின்னர் அந்த காசுகளை பணப்பெட்டியில் அல்லது அலுவலக அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    நெய் தீபம் தொடர்ந்து முப்பது தினங்கள் ஏற்றி வர முன்னேற்றம் காணும்.

    இழந்துவிடும் நிலையில் உள்ள சொத்து மீண்டும் வரவேண்டுமா?

    மிளகு சிறிதளவு எடுத்து மூட்டையாக வெள்ளைத் துணியில் கட்டி நல்லெண்ணை தீபம் ஏற்றி துரோகம் செய்பவரை எண்ணி பொருள்கிட்ட வேண்டிக் கொள்வதுடன் இரண்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    ஏழு செவ்வாய் அல்லது ஏழு வெள்ளிக்கிழமைகளில் சிகப்பு மலரால் அர்ச்சித்து வர காரியம் கைகூடும்.

    • தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு ஏற்ற நாள்.
    • அந்த நாளில் விரதம் இருந்து இரவு நேரத்தில் அர்ச்சனைகள் செய்து விருப்பத்தை வேண்ட பலன் கிட்டும்.

    வறுமை நீங்க வேண்டுமா?

    பிரதி வெள்ளிக்கிழமைகளில் வாசனை மலர்களால் தொடர்ந்து எட்டு வாரங்கள் அர்ச்சனை செய்துவர வறுமை நீங்கும் வாய்ப்பு கூடும்.

    இல்லத்தில் பூஜை செய்பவரானால் வெல்லம் பருப்பு சேர்த்த பாயசம், உளுந்து வடை செய்து நிவேதிக்கலாம்.

    விருப்பங்கள் நிறைவேற வேண்டுமா?

    தேய்பிறை அஷ்டமி என்பது பைரவருக்கு ஏற்ற நாள். அந்த நாளில் விரதம் இருந்து இரவு நேரத்தில் அர்ச்சனைகள் செய்து விருப்பத்தை வேண்ட பலன் கிட்டும்.

    ஒரு அஷ்டமி பூஜை மட்டும் உன்னதத்தை கொடுக்காது என்பதை அறியவும்.

    பூர்வ ஜென்ம வினைப்பயன் குறைய வேண்டுமா?

    செவ்வாய்க்கிழமை வரும் அஷ்டமி நாளில் விரதம் அனுஷ்டித்து மாலை நேரத்தில் பூஜைகள் செய்து வடை மாலை சாற்றி வழிபட வேண்டும்.

    மறுநாள் காலை உணவு உட்கொண்டு விரதம் முடிக்க வேண்டும். நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுதல் கூடுதல் சுபம் கொடுக்கும்.

    கோள்களின் தாக்கம் குறைய வேண்டுமா?

    தயிர் அன்னம் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். தொடர்ந்து அஷ்டமி நாளில் இதை கடைப்பிடிக்க வேண்டும்.

    • எங்கிருந்தோ வற்றாத இந்த நீரோட்டம் இடபத்தின் வாயிலிருந்து வெளிப்படுகிறது.
    • புனிதம் மிகுந்த இந்த நீரை இறைவனின் திருமஞ்சனத்திற்கும், மக்களின் தாக சாந்திக்கும், புனித நீராடவுமே பயன்படுத்த வேண்டும்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எக்காலத்திலும் குறைவின்றி நீரை வாயிலிருந்து உமிழ்ந்து கொண்டிருக்கும் இந்த ரிஷப உருவத்தின் அருகே குளத்திற்கென ஒரு கைப்பிடிச் சுவரினை உருவாக்கியவர்கள் கல்வெட்டோடு கூடிய இடபத்தின் பெரும்பகுதியை சுவரினுள் மறையுமாறு செய்துவிட்டனர்.

    நூறாண்டுகளுக்குள் நடந்த இத்திருப்பணிகள் காரணமாக அரிய தகவலைத் தரும் தமிழ்க் கல்வெட்டு மறைக்கப்பட்டுள்ளது.

    ஆயினும் நற்பேறாக இந்திய தொல்லியல் துறையினர் 1904 ம் ஆண்டில் அதனைப் படி எடுத்துக் காப்பாற்றிவிட்டனர்.

    இந்த இடபத்தின் வாயில் திகழும் குழல்போன்ற பகுதிக்கு எங்கிருந்து நீர் வருகிறது என்பது யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.

    எங்கிருந்தோ வற்றாத இந்த நீரோட்டம் இடபத்தின் வாயிலிருந்து வெளிப்படுகிறது.

    புனிதம் மிகுந்த இந்த நீரை இறைவனின் திருமஞ்சனத்திற்கும், மக்களின் தாக சாந்திக்கும், புனித நீராடவுமே பயன்படுத்த வேண்டும்.

    சில அன்பர்கள், கை, கால்கள் கழுவுவதற்காக பயன்படுத்துவது மிகுந்த வருத்தமளிப்பதாக உள்ளது.

    தற்போது ஆந்திர மாநிலத்தில் இந்த அற்புதப் படைப்பு திகழ்ந்தாலும் ஒரு தமிழ்ச் சிற்பியின் அறிவியல் திறனோடு கூடிய அரிய சாதனை இது என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை, ஆனால் அதுதான் உண்மை!

    திருக்காரிக்கரையுடைய மகாதேவர் கோவில், திருவாலீசுரம் என முதன் முதலில் குறிக்கப் பெறுவது வீரகம்பண உடையாரின் கி.பி. 1365ம் ஆண்டு சாசனத்தில்தான்.

    அதே சாசனம் இத்தலத்து காலபைரவரை வைரவ நாயனார் என்று குறிப்பிடுகின்றது.

    பெரும்பாலான சாசனங்கள் திருவிளக்குகள் எரிப்பதற்காக அளிக்கப்பெற்ற கால்நடைப் பண்ணைகள் மற்றும் நிலதானங்கள் பற்றி குறிப்பிடுகின்றன.

    ஒரு சாசனத்தில் குலோத்துங்க சோழனின் ராஜகுருவான சுவாமி தேவர் பெயரில் திருக்காளத்தி தேவ சதுர்வேதி மங்கலத்தில் காணிவிட்ட செய்தி குறிக்கப் பெற்றுள்ளது.

    • கால பைரவரை வழிபட்ட பிறகு அவரது பிரகாரத்தை சுற்றி கும்பிடுகிறார்கள்.
    • 8 தடவை சுற்றி கும்பிட வேண்டும் என்று அங்கு ஐதீகமாக உள்ளது.

    8 தடவை சுற்ற வேண்டும்

    ராமகிரி கால பைரவர் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை 8 என்ற எண்ணிக்கையில் மேற்கொள்கிறார்கள்.

    கால பைரவரை வழிபட்ட பிறகு அவரது பிரகாரத்தை சுற்றி கும்பிடுகிறார்கள்.

    8 தடவை சுற்றி கும்பிட வேண்டும் என்று அங்கு ஐதீகமாக உள்ளது.

    அதேபோன்று தீபம் ஏற்றும் போதும் 8 அகல் விளக்குகளில் தீபம் ஏற்ற சொல்கிறார்கள்.

    தமிழில் அரிய கல் வெட்டு

    ராமகிரி நந்தி தீர்த்தத்தில் உள்ள இடப உருவத்திற்கு (நந்திக்கு) ஆயிரம் ஆண்டுகால வரலாற்றுப் பெருமை உண்டு.

    அதன் பின்உடலில் கி.பி. 9-10 ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் ஒரு அரிய கல்வெட்டுப்பொறிப்பு உள்ளது. அதில்,

    'ஸ்ரீ பரமேஸ்வரன் தரிசினத்தில்

    ஏறு இடு என்று பிரசாதம் செய்ய

    சாமுண்டி மகன் கூவத்து பெருந் தச்சன் இட்ட ஏறு'

    என்ற தமிழ்ப் பொறிப்பு இடம் பெற்றுத் திகழ்கின்றது. சென்னைக்கு அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் கூவம் என்றதோர் ஊர் உள்ளது.

    அந்த ஊரினைச் சார்ந்த சாமுண்டி என்பானின் மகன் கூவத்துப் பெருந்தச்சன் என்ற சிற்பிக்கு கனவில் எழுந்தருளிய பரமேஸ்வரன் தனக்குக் கல்லில் ரிஷபம் ஒன்று அமைக்குமாறு கூற அதன்படி வடிக்கப் பெற்றதே இந்த காளைச் சிற்பம் (நந்தி) என்ற செய்தியே மேற்படி கல்வெட்டுப் பொறிப்பாகும்.

    • பிரதோஷ வழிபாடு மிகுந்த பலன் தரும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது.
    • ஆனால் ராமகிரி தலத்தில் பிரதோஷ வழிபாடு நடத்தப்படுவது இல்லை. அதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது.

    சிவாலயங்களில் சமீபகாலமாக பிரதோஷம் வழிபாடு மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.

    மாதத்துக்கு 2 பிரதோஷங்கள் வருகிறது.

    அந்த நாட்களில் சிவாலயங்களில் கட்டுக்கு அடங்காத கூட்டம் காணப்படும்.

    பிரதோஷ வழிபாடு மிகுந்த பலன் தரும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது.

    ஆனால் ராமகிரி தலத்தில் பிரதோஷ வழிபாடு நடத்தப்படுவது இல்லை. அதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது.

    இந்த தலத்தில் உள்ள வாலீஸ்வரருக்கு எதிரே நந்தி பிரதிஷ்டை செய்யப்படவில்லை.

    பக்த ஆஞ்சநேயர் விக்கிரகம்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    அந்த ஆஞ்சநேயருக்கு பிறகுதான் அடுத்தடுத்து 2 நந்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    அதுவும் பிரகாரத்துக்கு வெளியேதான் உள்ளது.

    இத்தகைய காரணங்களில் இந்த தலத்தில் பிரதோஷம் வழிபாடு கிடையாது. பிரதோஷம் வழிபாடு நடைபெறாத ஒரே ஆலயமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.

    • ஆனால் என்ன காரணத்தினாலோ ராஜகோபுரத்தை கட்ட இயலவில்லை.
    • இதனால் திருப்பணி செய்பவர்களும் இந்த ராஜகோபுரத்தை கட்டும் முயற்சிகளில் ஈடுபடவில்லை.

    ஆலயங்களின் கம்பீரத்துக்கு அழகு சேர்ப்பது ராஜகோபுரம்தான்.

    ஆனால் ராமகிரி காலபைவரர் ஆலயத்தில் ராஜகோபுரம் இல்லை.

    இந்த ஆலயம் உருவான கால கட்டத்தில் எத்தனையோ மன்னர்கள் திருப்பணி செய்தனர்.

    சங்கமகுல விரூபாட்சராயன் என்ற மன்னன் இந்த ஆலயத்துக்கு கோபுரம் கட்ட ஆசைப்பட்டான்.

    இதற்கான ஏற்பாடுகளை செய்தான்.

    கோபுரம் கட்டுவதற்கான கருங்கற்கள் கொண்டு வரப்பட்டன. ராஜகோபுரம் கட்டும் பணியையும் அவன் தொடங்கி விட்டான்.

    இந்த நிலையில் புருஷோத்த கஜபதி என்ற மன்னன் திடீரென அவன் மீது படையெடுத்து வந்தான்.

    இதன் காரணமாக ராமகிரி ஆலயத்தின் ராஜகோபுரம் கட்டும் பணி தடைப்பட்டது.

    அதன் பிறகு வந்த பலர் அந்த கோபுரத்தை சீரமைத்து கட்ட முயற்சிகள் செய்தனர். ஆனால் யாராலும் முடியவில்லை.

    ஆந்திர மாநில அரசின் தொல்பொருள் கட்டுப்பாட்டில் இந்த ஆலயம் வந்த பிறகு ராஜகோபுரத்தை கட்ட திட்டமிடப்பட்டது.

    ஆனால் என்ன காரணத்தினாலோ ராஜகோபுரத்தை கட்ட இயலவில்லை.

    இதனால் திருப்பணி செய்பவர்களும் இந்த ராஜகோபுரத்தை கட்டும் முயற்சிகளில் ஈடுபடவில்லை.

    • தனது வாலால் லிங்கத்தை சுற்றி பலத்தை முழுமையாக திரட்டி இழுத்து பார்த்தார்.
    • ஆனால் அந்த லிங்கம் கொஞ்சம்கூட அசையவில்லை.

    ராமகிரி தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு வாலீஸ்வரர் என்று பெயர்.

    ஆஞ்சநேயர் காசியில் இருந்து ராமேசுவரத்துக்கு லிங்கத்தை எடுத்து சென்றபோது காலபைரவரின் விருப்பத்துக்கு இணங்க இந்த தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டது.

    இந்த லிங்கத்தை இங்கிருந்து ராமேசுவரம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆஞ்சநேயர் எவ்வளவோ முயற்சிகள் செய்தார்.

    தனது வாலால் லிங்கத்தை சுற்றி பலத்தை முழுமையாக திரட்டி இழுத்து பார்த்தார்.

    ஆனால் அந்த லிங்கம் கொஞ்சம்கூட அசையவில்லை.

    ஆஞ்சநேயர் நடத்திய கடும் போராட்டம் காரணமாக அந்த லிங்கம் சற்று சாய்ந்ததே தவிர நகரவில்லை.

    இதனால் ஆஞ்சநேயர் தனது முயற்சியை கைவிட்டார்.

    அந்த லிங்கம் இப்போதும் வடக்கு திசையை நோக்கி சரிந்த நிலையில் இருப்பதை பக்தர்கள் காண முடியும்.

    • ராமகிரி கால பைரவர் ஆலயத்தின் அற்புதங்களில் கோவிலுக்குள் கோவில் இருக்கும் அற்புதம் சிறப்பானது.
    • ஒரே ஆலயத்துக்குள் இன்னொரு ஆலயமும் அமைந்து இருக்கும் அதிசயம் அரிதாகவே பார்க்க முடியும்.

    ராமகிரி கால பைரவர் ஆலயத்தின் அற்புதங்களில் கோவிலுக்குள் கோவில் இருக்கும் அற்புதம் சிறப்பானது.

    ஒரே ஆலயத்துக்குள் இன்னொரு ஆலயமும் அமைந்து இருக்கும் அதிசயம் அரிதாகவே பார்க்க முடியும்.

    தமிழகத்தில் கும்பகோணம் அருகே உள்ள திருமீயூச்சூர் ஆலயத்தில் கோவிலுக்குள் கோவில் இருக்கும் அதிசயத்தை காண முடியும்.

    அதேபோன்ற அமைப்பை ராமகிரி கால பைரவர் ஆலயத்திலும் பார்க்கலாம்.

    கால பைரவர்தான் இந்த தலத்தின் பிரதான மூர்த்தி ஆவார்.

    அவரது கருவறை சன்னதி மற்றும் பிரகாரங்கள் பெரிய அளவில் அமைந்துள்ளன.

    அதேபோன்று அருகில் வாலீஸ்வரர் தனி சன்னதி உள்ளது.

    அதுவும் தனிக்கோவில் போன்றே காட்சி அளிக்கிறது.

    இதனால் கோவிலுக்குள் கோவில் அமைந்தது போன்ற அமைப்பை இந்த தலத்தில் பார்க்கலாம்.

    • எப்படி பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்பதை கோவில் குருக்களிடம் கேட்டாலே தெளிவாக சொல்லி விடுவார்.
    • எனவே உறவினர்களை பரிகாரத்துக்காக அழைத்து வர வேண்டாம் என்று கூறப்படுகிறது.

    ராமகிரி தலத்துக்கு சாதாரணமாக வழிபட செல்லும்போது உறவினர்கள், குடும்பத்தினருடன் சென்று வரலாம்.

    ஆனால் பரிகார பூஜைக்காக இந்த தலத்துக்கு உறவினர்களை எந்த பக்தரும் அழைத்து வரக்கூடாது என்பது செவிவழி செய்தியாக உள்ளது.

    குறிப்பாக குழந்தை பாக்கியத்துக்கு பரிகாரம் செய்ய செல்பவர்கள் தம்பதியர் சகிதமாக மட்டுமே சென்று வருவது நல்லது.

    எப்படி பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்பதை கோவில் குருக்களிடம் கேட்டாலே தெளிவாக சொல்லி விடுவார்.

    எனவே உறவினர்களை பரிகாரத்துக்காக அழைத்து வர வேண்டாம் என்று கூறப்படுகிறது.

    • பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.
    • ருத்ராட்சம் அணிந்தவர்களின் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சொல்லும் வார்த்தைகளாகும்.

    ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1 கோடி முறை உச்சரித்த பலனைத்தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை' என்கிறார் மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.

    இன்று நம்மில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அது புனிதமானது. அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அணியக்கூடாது. பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.

    ஆனால் இயற்கையாகவே துளையோடு இருக்கும் ருத்ராட்சம், அனைவரும் அணிந்து கொள்வதற்காகவே அவ்வாறு இருக்கிறது. அதன் ஆண், பெண் பேதம் எதுவும் இல்லை என்பது ஆன்மிகத்தை நன்கு கற்றறிந்தவர்கள் கூறும் வாக்காகும். சிவபெருமான் கண்களில் இருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை ஈசன், கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் ஐந்து முகம் கொண்ட ஒரு ருத்ராட்சத்தையாவது அணிய வேண்டியது அவசியம். ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர்பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.


    சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் இந்த ருத்ராட்சத்தை அணிவதால், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றி கிடைக்கும். மேலும் ருத்ராட்சம் அணிந்தவர்களின் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சொல்லும் வார்த்தைகளாகும்.

    அதிக விலைகொடுத்து அபூர்வ வகையிலான ருத்ராட்சத்தை வாங்கி அணியவேண்டும் என்று அவசியமில்லை. எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்தாலே போதுமானது. சிவபெருமானின் திருமுகம் ஐந்து. நமசிவாய மந்திரம் ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் தான் இயற்கையே மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்சத்தை பூமிக்கு அருள்கிறது. எனவே ஐந்து முக ருத்ராட்சங்களை அணிவதே சிறப்பு. ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.

    பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி. அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, அருணாசலபுராணம் விவரிக்கிறது. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணியலாம். சிவ மகாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று ஈசனே வலியுறுத்தியிருக்கிறார்.

    பெண்கள் தங்களுடைய தாலிக்கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதைப் போல, ருத்ராட்சத்தையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஈசன் அருளியது மனிதன் வாழும் உடலுக்காக அல்ல.. உயிரின் ஆன்மாவிற்காக என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.


    நீத்தார் கடன் எனப்படும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, பெண்களின் தீட்டு காலம் எனப்படும் மாதவிலக்கு, கணவன்-மனைவி தாம்பத்திய நேரங்களில் கூட ருத்ராட்சம் அணியலாமா? என்ற கேள்வி எழலாம். இவை மூன்று விஷயங்களும் இயற்கையானதே தவிர, எதுவும் செயற்கையானது அல்ல. பித்ரு கடன் நிறைவேற்றும்போது ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம். இதனால் முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழும். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

    நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது பலரும் சொல்லும் வாக்கு. பாவங்களால் தான் நமக்கு துன்பங்கள் நிகழ்கின்றன. அதற்காக நாம் கங்கையைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. ருத்ராட்சத்தை அணிந்து கொண்டாலே கொடிய பாவங்களும் நீங்கும். நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் படிப்படியாக குறையும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடியபாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

    ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் ருத்ராட்சம் அணிந்து, தினமும் 108 முறை எழுத்தாலோ, மனதலோ பஞ்சாட்சரத்தைச் சொல்லி வந்தால், 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்கிறார் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.

    • நாக தீபம் - உயர் பதவி விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்
    • கொடி தீபம் - செல்வ மேன்மை மயூர தீபம் - மக்கட் பேறு

    கோவில்களில் இறைவனுக்கு ஷோடச தீபாராதனை என்னும் 16 வகையான தீப- தூப ஆராதனைகளைச் செய்வார்கள். அந்த ஆராதனைகளையும், அவற்றால் கிடைக்கும் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

    1. தூபம் - உற்சாகத்தை அளிக்கும்

    2. தீபம் - விழிப்பு தரும்

    3. மகா தீபம் - அரச போகம்

    4. நாக தீபம் - உயர் பதவி

    5. விருட்ச தீபம் - அரசு பதவி கிடைக்கும்

    6. புருஷாமிருக தீபம் - நோய் நீங்கும்

    7. சூல தீபம் - ரோக நிவர்த்தி

    8. ஆமை தீபம் - தண்ணீர் பயம் நீங்குதல்

    9. கஜ தீபம் - செல்வம் கிடைக்கும்

    10. வியாக்ர புயி தீபம் - துஷ்ட நிவர்த்தி

    11. சிம்ம தீபம் - ஆயுள் விருத்தி

    12. கொடி தீபம் - செல்வ மேன்மை

    13. மயூர தீபம் - மக்கட் பேறு

    14. பூரணகும்ப தீபம் - சாந்தி, மங்களம் உண்டாகும்

    15. நட்சத்திர தீபம் - உலகாளும் திறமை

    16. மேரு தீபம் - மேலான நிலையை அடையலாம்.

    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, வைகாசி 18 (வெள்ளிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : அஷ்டமி காலை 8.52 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம் : பூரட்டாதி நாளை விடியற்காலை 4.03 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - அமைதி

    ரிஷபம் - ஆர்வம்

    மிதுனம் - சுகம்

    கடகம் - முயற்சி

    சிம்மம் - பொறுமை

    கன்னி - பரிவு

    துலாம் - ஆதரவு

    விருச்சிகம் - உயர்வு

    தனுசு - வாழ்வு

    மகரம் - புகழ்

    கும்பம் - பண்பு

    மீனம் - பணிவு

    ×