என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

சரிந்த நிலையில் சிவபெருமான்
- தனது வாலால் லிங்கத்தை சுற்றி பலத்தை முழுமையாக திரட்டி இழுத்து பார்த்தார்.
- ஆனால் அந்த லிங்கம் கொஞ்சம்கூட அசையவில்லை.
ராமகிரி தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு வாலீஸ்வரர் என்று பெயர்.
ஆஞ்சநேயர் காசியில் இருந்து ராமேசுவரத்துக்கு லிங்கத்தை எடுத்து சென்றபோது காலபைரவரின் விருப்பத்துக்கு இணங்க இந்த தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு விட்டது.
இந்த லிங்கத்தை இங்கிருந்து ராமேசுவரம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஆஞ்சநேயர் எவ்வளவோ முயற்சிகள் செய்தார்.
தனது வாலால் லிங்கத்தை சுற்றி பலத்தை முழுமையாக திரட்டி இழுத்து பார்த்தார்.
ஆனால் அந்த லிங்கம் கொஞ்சம்கூட அசையவில்லை.
ஆஞ்சநேயர் நடத்திய கடும் போராட்டம் காரணமாக அந்த லிங்கம் சற்று சாய்ந்ததே தவிர நகரவில்லை.
இதனால் ஆஞ்சநேயர் தனது முயற்சியை கைவிட்டார்.
அந்த லிங்கம் இப்போதும் வடக்கு திசையை நோக்கி சரிந்த நிலையில் இருப்பதை பக்தர்கள் காண முடியும்.
Next Story






