என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
- பிரதோஷ வழிபாடு மிகுந்த பலன் தரும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது.
- ஆனால் ராமகிரி தலத்தில் பிரதோஷ வழிபாடு நடத்தப்படுவது இல்லை. அதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது.
சிவாலயங்களில் சமீபகாலமாக பிரதோஷம் வழிபாடு மிக சிறப்பாக நடத்தப்படுகிறது.
மாதத்துக்கு 2 பிரதோஷங்கள் வருகிறது.
அந்த நாட்களில் சிவாலயங்களில் கட்டுக்கு அடங்காத கூட்டம் காணப்படும்.
பிரதோஷ வழிபாடு மிகுந்த பலன் தரும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் உள்ளது.
ஆனால் ராமகிரி தலத்தில் பிரதோஷ வழிபாடு நடத்தப்படுவது இல்லை. அதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது.
இந்த தலத்தில் உள்ள வாலீஸ்வரருக்கு எதிரே நந்தி பிரதிஷ்டை செய்யப்படவில்லை.
பக்த ஆஞ்சநேயர் விக்கிரகம்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆஞ்சநேயருக்கு பிறகுதான் அடுத்தடுத்து 2 நந்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
அதுவும் பிரகாரத்துக்கு வெளியேதான் உள்ளது.
இத்தகைய காரணங்களில் இந்த தலத்தில் பிரதோஷம் வழிபாடு கிடையாது. பிரதோஷம் வழிபாடு நடைபெறாத ஒரே ஆலயமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.
Next Story






