என் மலர்
ஆன்மிகம்
- வறுமை நீங்கவும், செல்வச் செழிப்பு ஏற்படவும் கால பைரவரை வழிபடலாம்.
- பாவம் நீங்கியதால் உயிர்கள் உன்னத நிலையை அடைந்து இறைவன் திருவடியை அடைகின்றன.
கால பைரவரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.
திருமணத் தடைகள் விலகும்.
சனிக்கிழமைகளில் வாசனை வீசும் மலர்களால் பைரவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி தோஷங்களும், நவக்கிரகத் தொல்லைகளும் நீங்கும்.
தேய்பிறை அஷ்டமி அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தைப் பேறு கிட்டும்.
வறுமை நீங்கவும், செல்வச் செழிப்பு ஏற்படவும் கால பைரவரை வழிபடலாம்.
பாவம் நீங்கியதால் உயிர்கள் உன்னத நிலையை அடைந்து இறைவன் திருவடியை அடைகின்றன.
இதற்கு காரணமாக இருக்கும் கால பைரவரை நாமும் அவசியம் வழிபட வேண்டும்.
கால பைரவர் அருள் பெற நமது நாட்டில் எத்தனையோ ஆலயங்கள் உள்ளன.
- ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம்.
- எனவே அன்று பைரவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
பைரவருடைய உடலின் அங்கங்களாக 12 ராசிகள் அமைந்துள்ளன.
அவை மேஷம் சிரசு, ரிஷபம் வாய், மிதுனம் இரு கைகள், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி இடை, துலாம் புட்டங்கள், விருச்சிகம் மர்ம ஸ்தானங்கள், தனுசு தொடை, மகரம் முழங்கால்கள், கும்பம் காலின் கீழ் பகுதி, மீனம் கால்களின் அடிப்பாகம் என 12 ராசிகளும் நிறைந்துள்ளன.
பைரவரின் சேவகர்களாக நவக்கிரகங்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய பக்தர்கள் எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்தக் கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பார்.
பைரவரை வழிபட ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜென்மச்சனி, அர்த் தாஷ்டமச்சனி போன்ற சனி தோஷங்கள் விலகி விடும்.
பைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகும்.
ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம்.
எனவே அன்று பைரவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர்.
காசி கோவிலில் கால பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார்.
சிவன் கோவில்களில் கால பைரவர்தான் காவல் தெய்வமாக விளங்குகிறார்.
காலனாகிய எமனையே சம்காரம் செய்து மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த மூர்த்தி இவர்.
எனவே இவரை கால சம்கார மூர்த்தி என்றும் அழைக்கின்றனர்.
- சிவபெருமானின் தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர்.
- இவர் காசியில் சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.
சிவபெருமானின் தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர்.
இவர் காசியில் சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.
ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர்.
முனிவரின் சாபத்தில் இருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர்.
சனிக்கு அருள்பாலித்து ஈஸ்வர பட்டம் கொடுத்து சனீஸ்வரராக்கி நவக்கிரகங்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர்.
இப்படி பைரவர் பல்வேறு சிறப்புகளைக் கொண்டவர்.
இவரைக் கால பைரவர், மார்த்தாண்டவ பைரவர், சேத்ரபாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணகர்சன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.
ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவபெருமானாரை வேண்டினார்கள்.
ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்கினார்.
அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டில் இருந்து அறுபத்து நான்காக மாறியது.
அதோடு அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியது.
இதுவே பைரவ அவதாரத்தின் தனித்துவம் ஆகும்.
இதனால் மகிழ்வடைந்த தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.
ஆனால் தற்சமயம் நம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது.
- தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.
- தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வு சிறக்கும்.
பைரவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது மிக, மிக பிடிக்கும்.
தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, சந்தன மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், தேன், அவல் பாயசம் மற்றும் பழ வகைகளை படைத்து பைரவரை வழிபட்டால் நாம் விரும்பியதை எல்லாம் பைரவர் தருவார்.
தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.
செல்வத்தை நமக்கு வாரி வழங்கும் அஷ்ட லட்சுமிகள், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு தங்களது செல்வ வள சக்தியை மேம்படுத்தி கொள்கிறார்கள்.
எனவே நாமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் மங்காத செல்வ வளத்தை பெறலாம் என்பது ஐதீகமாகும்.
தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வு சிறக்கும்.
காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடியும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும்.
அதே போல் ஆலயத்தின் மற்ற சன்னதிகளை மூடி சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டி சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.
- சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.
- பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள்.
சிவாலயங்களில் நீங்கள் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்தைப் பார்த்து இருப்பீர்கள்.
சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.
ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடா விட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய் விடக் கூடும்.
அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்.
பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள்.
வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் "பைரவா... காப்பாற்று'' என்று அழைத்துப் பாருங்கள்,
காகம் விரட்டும் போது கோழி தன் குஞ்சுகளை எப்படி தன் இறக்கைக்குள் வைத்து காப்பாற்றுகிறதோ, அப்படி ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவர்.
பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால், நவக்கிரக தோஷங்கள் விலகி, தீ வினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலை குனியா வாழ்க்கையை நிச்சயம் வாழ்வீர்கள்.
8 மற்றும் 64 என்ற எண்ணிக்கையில் பல கோலங்களில் பைரவர் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
- இன்று கார்த்திகை விரதம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-23 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி இரவு 7.55 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம்: கிருத்திகை இரவு 9.28 மணி வரை பிறகு ரோகிணி
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று கார்த்திகை விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான், பாலாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்கமயில் வாகன புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலையில் திருமஞ்சன சேவை. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்க ளில் காலை சிறப்பு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கடமை
ரிஷபம்-உண்மை
மிதுனம்-நன்மை
கடகம்-பெருமை
சிம்மம்-நட்பு
கன்னி-லாபம்
துலாம்- தெளிவு
விருச்சிகம்-ஈகை
தனுசு- புகழ்
மகரம்-முயற்சி
கும்பம்-உயர்வு
மீனம்-வெற்றி
- 6-ந்தேதி அமாவாசை.
- திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
4-ந்தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடிய ருளல்.
* அகோபிலமடம் திருமத் 39-வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம்.
* திருப்போரூர் முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
5-ந்தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் உலா.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
* திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
6-ந்தேதி (வியாழன்)
* அமாவாசை
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.
* மன்னார்குடி ராஜகோ பால சுவாமி புறப்பாடு.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவ சம் அணிந்து வைர வேல் தரிசனம்,
* மேல்நோக்கு நாள்.
7-ந்தேதி (வெள்ளி)
* ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப் பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* சமநோக்கு நாள்.
8-ந்தேதி (சனி)
* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மன்னார் குடி ராஜகோபால சுவாமி, திருப்புல்லாணி ஜெகநாதப்பெருமாள் ஆகிய தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
* திருநள்ளார் சனி பகவானுக்கு அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
9-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சன்னிதி எதிரில் அனுமானுக்கு திருமஞ்சன சேவை.
* பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்,
* சமநோக்கு நாள்.
10-ந்தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.
* தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்,
- இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பாலாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-22 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி இரவு 9.34 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: பரணி இரவு 10.18 மணி வரை பிறகு கிருத்திகை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பிரதோஷம். மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமான் பாலாபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருத்தணி, கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ஸ்ரீ அம்பாள் ஸ்ரீ சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தாமதம்
ரிஷபம்-தானம்
மிதுனம்-கீர்த்தி
கடகம்-சாந்தம்
சிம்மம்-பக்தி
கன்னி-திடம்
துலாம்- போட்டி
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- பொறுமை
மகரம்-விவேகம்
கும்பம்-பாராட்டு
மீனம்-வரவு
- இன்று மாலை அனுமன் வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.
- நாச்சியார் திருக்கோலத்தில் பல்லாக்கு உற்சவம்.
காஞ்சிபுரம்:
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் வைகுண்ட பெருமாள் திருக்கோவில் என அழைக்கப்படும். அருள்மிகு வைகுந்தவல்லி சமேத வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் வைகுண்ட பெருமாள் திருக்கோவிலில் குரோதி ஆண்டு வைகாசி மாத பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று அம்ச வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். மாலை சூரிய பிரபை வாகனம் உற்சவமும் நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று காலை கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அதுமட்டுமில்லாமல் இன்று மாலை அனுமன் வாகன உற்சவமும் நடைபெற உள்ளது.
இதனைத்தொடர்ந்து பிரமோற்சவத்தின் நான்காவது நாளான நாளை சேஷ வாகனம். மாலை வேளையில் சந்திர பிரபை உற்சவம் நடைபெறுகிறது.
5-ம் தேதி- ஐந்தாவது நாள் சாலை உற்சவம் நாச்சியார் திருக்கோலத்தில் பல்லாக்கு உற்சவம், தொடர்ந்து மாலை யாளி வாகன உற்சவம் நடைபெற உள்ளது.
6-ம் தேதி -ஆறாவது நாள் உற்சவம் வேணுகோபாலன் திருக்கோளத்தில் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை வேளையில் யானை வாகன உற்சவம் நடைபெறுகிறது.
தொடர்ந்து 7-ந்தேதி -எடுப்பு தேர் உற்சவம் நடைபெறுகிறது. ஜூன் 8 ஆம் தேதி எட்டாவது நாள் உற்சவம் - வெண்ணெய் தாழி கண்ணன் பல்லாக்கு மற்றும் மாலை வேளையில் குதிரை வாகனம்
9-ந்தேதி - ஒன்பதாவது நாள் உற்சவம் பல்லாக்கு மற்றும் தீர்த்த வாரி நடைபெறுகிறது மாலை முகுந்த விமான உற்சவமும் நடைபெற உள்ளது.
- இன்று வாஸ்து நாள்.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு வைகாசி-21 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி இரவு 11.31 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: அசுவினி இரவு 11.29 மணி வரை பிறகு பரணி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று வாஸ்து நாள் (காலை 9.58 மணிக்கு மேல் 10.34 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று) சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-ஆக்கம்
மிதுனம்-தனம்
கடகம்-பக்தி
சிம்மம்-உதவி
கன்னி-நிறைவு
துலாம்- நம்பிக்கை
விருச்சிகம்-பாராட்டு
தனுசு- தாமதம்
மகரம்-ஆதாயம்
கும்பம்-சாதனை
மீனம்-சுகம்
- எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.
- தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும்.
பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார்.
எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.
தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும்.
எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம்.
ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை.
குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.
அதிகாலையில் நீராடி, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும்.
பகலில் ஏதாவது ஒருபொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால் போதும்.
மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்குச் சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும்.
சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து, குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது.
பிறகு வீட்டிற்கு வந்து பூஜையறையில் பூஜை முடித்து, இனி என்னால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும்.
சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
- அந்த நாய்கள் யாருக்கும் எந்த துன்பமும் செய்வதில்லை.
- பக்தர்கள் தங்களால் இயன்ற உணவை அந்த நாய்களுக்கு வழங்கி விட்டு செல்கிறார்கள்.
காலபைரவரோடு இருக்கும் நான்கு நாய்களையும் வேதங்கள் நான்காகக் கூறியுள்ளனர்.
எப்போதும் இறைவனோடு சேர்ந்தே இருப்பவை வேதங்கள் என்பதை உணர்த்தவே இவர் கொண்ட கோலம் கால பைரவ மூர்த்தி கோலமாகும்.
பைரவமூர்த்தியோடு நாய் இருப்பதற்கு மேலும் சில காரணங்களைக் கூறுவது வழக்கத்தில் உள்ளது.
அவை, காவலுக்குத் துணை புரியும் நாய் காலத்தை அறிந்து சொல்லும் (உணர்த்தும்) சூக்கும புத்தி கொண்டது. குறிப்பாக எந்த உயிரையும் எடுக்க காலன் வருவது, கண்களுக்குத் தெரியாத தீய சக்திகள் வருவது போன்றவற்றைக் கண்டு அவற்றை தெரிவிக்கும் தன்மை நாய்க்கு உண்டு என்றும் சொல்வார்கள்.
அஷ்டமி திதி நாட்களிலும் சனிக் கிழமைகளிலும் பைரவரை முறைப்படி அர்ச்சித்து வழிபட்டால் சனி தோஷங்களும் சகலவிதமான தோஷ்ங்களும் நீங்கும்.
ராமகிரி தலத்தின் பிரதான மூர்த்தி காலபைரவர் என்பதால் என்னவோ அந்த கோவிலின் அனைத்து பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
எங்கு பார்த்தாலும் நாய்கள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
அந்த நாய்கள் யாருக்கும் எந்த துன்பமும் செய்வதில்லை.
பக்தர்கள் தங்களால் இயன்ற உணவை அந்த நாய்களுக்கு வழங்கி விட்டு செல்கிறார்கள்.






