என் மலர்
அமெரிக்கா
- கலிபோர்னியாவில் ஒரு குழந்தைக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளது.
- வாஷிங்டனில் அமெரிக்க குடியுரிமை அல்லாத ஒரு குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
குரங்கம்மை நோய் பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பரவியது. தற்போது ஆசிய நாடுகளிலும் பரவி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் முதல் முறையாக குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலிபோர்னியாவில் ஒரு குழந்தைக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளது. அதே போல் வாஷிங்டனில் அமெரிக்க குடியுரிமை அல்லாத ஒரு குழந்தைக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.
இரு குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது ஆராயப்பட்டு வருகிறது.
- கொரோனா தடுப்பூசிகளை பைடன் முழுமையாக போட்டு கொண்டுள்ளார்.
- தாம் சிறப்பாகச் செயல்படுகிறேன் என்று பைடன் டுவிட்டர் பதிவு.
வாஷிங்டன்:
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மொத்தம் 91,76, 7,460 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 3,74,3,320 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பரிசோதனையின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் ஜோ பைடனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்துள்ளார்.
பைடன், கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக போட்டுள்ளார் என்றும், தற்போது தன்னை தனிமைக்கப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தனிமைப்படுத்திக் கொண்டே பணிகளை அவர் கவனிப்பார் என வெள்ளை மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தனது புகைப்படத்தை தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்த பைடன் நண்பர்களே, நான் சிறப்பாகச் செயல்படுகிறேன். உங்கள் அக்கறைக்கு நன்றி என்று தெரிவித்து உள்ளார்.
- புதுடெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இசை கச்சேரியை நடத்துகிறார்.
- இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.
நியூயார்க் :
பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர் (வயது 28). ஜஸ்டிஸ் உலக சுற்றுலா என்ற பெயரில் பல்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாப் இசை கச்சேரிகளை நடத்தி வருபவர். உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஜூனில் இவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட விசயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனால், டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன் ரசிகர்களுக்கு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், ஜஸ்டிஸ் உலக சுற்றுலாவானது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தனக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார். அவருக்கு ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனால், ஒரு காதின் பக்கத்தில் உள்ள முக நரம்பு பாதிக்கப்படும்.
இதனால், முகம் முடக்குவாதம் ஏற்படுவதுடன் கேட்கும் திறனையும் இழக்க கூடிய ஆபத்து உள்ளது. அந்த வீடியோவில் அவர், மிக முக்கியம். இந்த வீடியோவை காணுங்கள். ரசிகர்களாகிய உங்களை நான் விரும்புகிறேன். உங்களுடைய பிரார்த்தனையில் எனக்கும் இடம் கொடுங்கள் என தலைப்பிட்டார்.
அவர் அதில் கூறும்போது, இந்த கண் துடிப்பு இல்லாமல் உள்ளது. இதனை நீங்கள் காணலாம். எனது முகத்தின் ஒரு பக்கத்தில் என்னால் புன்னகைக்க முடியவில்லை. மூக்கு துவாரம் ஒரு பக்கம் அசைக்க முடியவில்லை. முகத்தின் ஒரு பக்கம் முழு அளவில் முடங்கி போயுள்ளது. முக முடக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
அதனால், அடுத்த எனது நிகழ்ச்சிகளை நான் ரத்து செய்து விட்டதற்காக பெருத்த ஏமாற்றம் அடைந்தவர்களுக்கு, என்னால் உடல்ரீதியாக, செயல்பட முடியவில்லை என வெளிப்படையாக தெரிவித்து கொள்கிறேன். இது சற்று தீவிரம் வாய்ந்தது. நீங்கள் அதனை காணலாம் என்று கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசும்போது, முகத்திற்கு வேண்டிய பயிற்சிகள் அளித்து வருகிறேன். ஓய்வு எடுத்து கொள்கிறேன்.
நான் என்ன சாதிக்க வேண்டும் என பிறந்தேனோ அதற்காக தயாராகி 100 சதவீதம் முழுமையாக திரும்பி வருவேன் என தெரிவித்து உள்ளார். எனினும், அவர் முழுமையாக குணமடைந்து எப்போது திரும்பி வருவார் என்பதற்கான காலஅளவு எதனையும் தெரிவிக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று பரவலின்போது கடந்த 2 முறை அவரது சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 3வது முறையாக இந்த சுற்றுப்பயணமும் தள்ளி வைக்கப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
24 கோடி பேர் தொடரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை, 37 லட்சத்திற்கும் கூடுதலானோர் பார்த்து வேதனை அடைந்தனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டனர். இந்த சூழலில், ஜஸ்டின் பீபர் ரசிகர்களை மீண்டும் மகிழ்விக்க வருகிறார்.
அவர் உலக சுற்றுலாவில் ஈடுபட உள்ளார். இதில் விரைவில் இந்தியாவுக்கும் வந்து பாப் இசை கச்சேரிகளை நடத்த இருக்கிறார். இதன்படி, இந்தியாவுக்கு வருகிற அக்டோபர் 18ந்தேதி வருகிறார். புதுடெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் அவர் இசை கச்சேரியை நடத்துகிறார். இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.
ரூ.4 ஆயிரத்தில் இருந்து டிக்கெட் விலை தொடங்குகிறது. ஜஸ்டினுக்கு முக முடக்குவாதம் ஏற்பட்ட அதே வாரத்தில், அவரது மனைவி ஹெய்லி பீபர் கூறும்போது, ஒவ்வொரு நாளும் தனது கணவர் நன்றாக குணமடைந்து வருகிறார். இது அரிதான மற்றும் அதிக அச்சமூட்டும் விசயம் ஆகவும் இருந்தது என அவர் கூறினார்.
இதன்பின்பு கடந்த ஜூனில் இருவரும் சர்ச்சுக்கு ஒன்றாக செல்வது, நடப்பு ஜூலையில் சுற்றுலா செல்வது என பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். ஜஸ்டின் பீபர் முக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டபோது, வடக்கு அமெரிக்காவில் நடைபெற இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தது ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அவர் மீண்டும் புத்தெழுச்சி பெற்று பாப் இசை பாடல்களை பாட இருப்பது அவரது ரசிகர்களுக்கு புது உற்சாகம் ஏற்படுத்தி உள்ளது.
- 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது.
- டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்டதால் அவர்மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வாஷிங்டன்:
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்தார். இதையடுத்து 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்தது.
இதற்கிடையே, டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். ஆனால், 2 மாதமாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது. இதனால் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் கடந்த 9-ம் தேதி அதிரடியாக அறிவித்தார்.
போலி கணக்குகள் தொடர்பாக கேட்ட தகவல்களை டுவிட்டர் நிறுவனம் தரதாலும், ஒப்பந்தப்படி செயல்படாததாலும் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்தார். டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் அவர்மீது டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கட்டாயம் நிறைவு செய்யவேண்டுமென டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு டெல்லவிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்குமாறு எலான் மஸ்க் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வழக்கு விசாரணை வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
- உக்ரைனுக்கு அமெரிக்கா செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார் ஒலனா ஜெலன்ஸ்கா
- ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை கேட்டார்
வாஷிங்டன்:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா இன்று அமெரிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்களிடையே உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:-
எதிரிகளை எதிர்த்து போராடவும் லட்சக்கணக்கான உக்ரைன் மக்களை பாதுகாக்கவும் அமெரிக்கா எங்களுக்கு ஏற்கனவே நிறைய உதவி செய்துள்ளது. இந்த போராட்டத்தில் அமெரிக்கா எங்களுடன் நிற்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். ரஷியா கொல்லும் போது, அமெரிக்கா காப்பாற்றுகிறது. அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதம் தொடர்கிறது. இந்த போரில் கொல்லப்பட்டவர்கள் சார்பாகவும், கை கால்களை இழந்தவர்கள் சார்பாகவும், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் சார்பாகவும், போர் நடைபெறும் முன்களப் பகுதியில் இருந்து தங்கள் குடும்பத்தினர் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். நான் கேட்க விரும்பாத ஒன்றைக் கேட்கிறேன், ஆயுதங்களைக் கேட்கிறேன். ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை கேட்கிறேன்.
என் மகன் தனது பள்ளிக்குத் திரும்ப முடியுமா என்பது, உக்ரைனில் உள்ள லட்சக்கணக்கான தாய்மார்களைப் போன்று எனக்கும் தெரியாது. எனது மகள் கல்வியாண்டின் தொடக்கத்தில் பல்கலைக்கழகத்திற்குச் சென்று சாதாரண மாணவ பருவ வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா? என்பதற்கும் என்னிடம் பதில் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக ஈரான் சென்றுள்ளார்.
- புதினும் ரஷியாவும் எந்தளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக ஈரான் சென்றுள்ளார். அங்கு அதிபர் புதின் ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி, ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் துருக்கி அதிபர் தையூப் எர்டோகன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினின் ஈரான் பயணம் உலக அரங்கில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், அதிபர் புதினின் ஈரான் பயணம் உலக அரங்கில் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.
புதினும் ரஷியாவும் எந்த அளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது. இப்போது அவர்கள் உதவிக்காக ஈரானிடம் திரும்ப வேண்டும். ஈரானிடம் இருந்து ராணுவ டிரோன்களை நாடுகிறது.
ஈரானிடம் இருந்து ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களைக் கோருவதன் மூலம், உக்ரைனில் நடக்கும் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் அதிபர் புதின் தீவிரம் காட்டவில்லை என தெரிவித்தார்.
- இந்தியாவில் 90 சதவீதம் பேர் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
- கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 200 கோடி டோஸ் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது புதிய சாதனை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பில்கேட்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வாழ்த்துகள் நரேந்திர மோடி. சிறந்த நிர்வாகத்துக்கான மற்றொரு மைல் 200 கோடி தடுப்பூசிகள். கொரோனாவின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசாங்கத்துடனான எங்கள் தொடர்ச்சியான கூட்டாண்மைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
- 2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைப்பர் சோனிக் ஏவுகணை இதுவாகும்.
- ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடியது.
அமெரிக்கா, ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் கூறும்போது, "ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது வெற்றிகரமாக அமைந்தது.
2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட 3-வது ஹைப்பர் சோனிக் ஏவுகணை இதுவாகும்" என்று தெரிவித்துள்ளது.
ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. இவ்வகை ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் வளி மண்டலத்தில் உள்ள காற்றை உறிஞ்சி கூடுதல் உந்து சக்தியை பெருக்கும் ஆற்றல் கொண்டவை.
- இந்த கடிகாரம் ரூ.30 கோடிக்கு மேல் ஏலம் போக வாய்ப்புள்ளது.
- அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன.
வாஷிங்டன் :
அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த "தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்" கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 31 கோடியாகும். அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், 1933 ஆம் வருடத்தில் நாசிப்படை தேர்தலில் வென்ற நாள்.
ஹிட்லரின் இந்த கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏலம் விடுகிறது. கைக்கடிகார தயாரிப்பாளர்களும் ராணுவ வரலாற்று ஆசிரியர்களும் அந்த கடிகாரத்தின் பின்னணியை ஆராய்ந்து அது ஹிட்லர் தான் வைத்து இருந்தார் என உறுதிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும் அந்த கடிகார தயாரிப்பு நிறுவனம் இந்த கடிகாரத்தின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
- உணவகத்தின் அருகில் சந்தேகத்திற்குரிய பை ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
- இது போன்ற சம்பவத்தால் நாடு பாதிப்படைந்துள்ளதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.
கிரீன்வுட்:
அமெரிக்காவின் இண்டியானா மாநிலம், கிரின்வுட் நகரில் 'கிரீன்வுட் பார்க் மால்' என்ற வணிக வளாகம் உள்ளது. நேற்று மாலை இங்கிருக்கும் உணவகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை சுடத்தொடங்கினார். இதனால் அனைவரும் சிதறி ஓடினர். இந்த திடீர் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது அங்கிருந்த ஒருவர் தன் கையிலிருந்த துப்பாக்கியால், துப்பாக்கி சூடு நடத்திய நபரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.
இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஜிம் ஐசன் கூறியதாவது:
துப்பாக்கி மற்றும் பலவிதமான வெடிமருந்துகளுடன் வணிக வளாகத்தில் உள்ள உணவகத்தில் நுழைந்த நபர், துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் ஆயுதமேந்திய நபரைத் தன்னிடம் இருந்த துப்பாக்கியினைக் கொண்டு சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தில் ஆயுதமேந்திய நபர் உட்பட 4 பேர் பலியாயினர். இருவர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் மாலை 6 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றனர். உணவகத்தின் அருகிலுள்ள பாத்ரூம் அருகில் சந்தேகத்திற்குரிய பை ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இண்டியானா போலீஸ் மற்றும் பல விசாரணை அமைப்பினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது போன்ற சம்பவத்தால் நாடு பாதிப்படைந்துள்ளது என இண்டியானாபோலிஸ் காவல்துறை துணை அதிகாரி க்ரிஸ் பேய்லி கூறியுள்ளார்.
பாதிப்படைந்தவர்களுக்காக வருந்துவதாகவும், அவர்களுக்காக பிரார்தனை செய்வதாகவும் கிரீன்வுட் நகரின் மேயர் மார்க் மையர்ஸ் தெரிவித்தார். இந்த கோரச் சம்பவம் நம் சமூகத்தை பயங்கரமாக தாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
- மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
- சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மாதம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டபூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை ரத்து செய்துள்ளது.
தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
கருகலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்த நிலையில், சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
சென்ட் சபையில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
- பில் கேட்ஸ் நன்கொடைகள் வழங்குவதில் பெயர் பெற்றவர்.
- பில் கேட்ஸ் அவர்களின் மனிதாபிமானத்தை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
வாஷிங்டன் :
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் நன்கொடைகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இதற்காக இவர் 2000 ஆம் ஆண்டு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கினார். இந்த அறக்கட்டளையில் சுகாதாரம், கல்வி போன்ற பல துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பில் கேட்ஸ் தனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பில் கேட்ஸ் இந்த மாதம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குகிறார். 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்குவது குறித்து பில் கேட்ஸ் கூறியதாவது:
எதிர்காலத்தில் எனக்கும் எனது குடும்பத்திற்கும் நான் செலவழிப்பதைத் தவிர எனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு வழங்க திட்டமிட்டுள்ளேன். நான் இந்தப் பணத்தைக் கொடுப்பதை தியாகமாக நினைக்கவில்லை. மிக பெரிய சவால்களைச் சமாளிப்பதில் நான் ஈடுபட்டிருப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன்.
மேலும் எனது வளங்களை சமூகத்திற்குத் திருப்பித் தர வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பில் கேட்ஸ் அவர்களின் மனிதாபிமானத்தை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.






