என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது.

    புளோரிடா:

    அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. தினமும் ஏதாவது ஒரு இடத்தில் துப்பாக்கி சூடு அரங்கேறி வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக புளோரிடா மாகாணம் ஆர்லண்டோ பகுதியில் மர்ம நபர் ஒருவன் திடீரென கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் பொது மக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டான்.

    இதில் 7 பேர் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லபட்டு சேர்க்கபட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதன் தப்பி ஓடி விட்டான். அவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன்.
    • இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோ பைடனை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வந்தது.

    இதற்கிடையே, அதிபர் ஜோ பைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டார். என அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் தெரிவித்தார்.

    இந்நிலையில், அதிபர் ஜோ பைடனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று மீண்டும் உறுதியானது. இதனால் மீண்டும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என டாக்டர் குழு தெரிவித்துள்ளது.

    • அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது.
    • கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மேலும் பாதித்துள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

    இந்நிலையில், கெண்டகி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகினர்.

    தொடர் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின்தடையால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

    ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மக்கள் பத்திரமாக மீட்கப்ப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.

    • பருவ நிலை மாற்றம் மற்றும் சுகாதார பாதுகாப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை.
    • தைவான் தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றம் இல்லை என பைடன் உறுதி

    வாஷிங்டன்:

    அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளனர். ஐந்தாவது முறையாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இரு நாடுகளிடையேயான உறவில் பதட்டமான சூழல் நிலவும் நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையே இந்த உரையாடல் நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார். பருவ நிலை மாற்றம் மற்றும் சுகாதார பாதுகாப்பு உள்பட இரு நாடுகளும் இணைந்து செயல்படக் கூடிய பகுதிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாகவும் கூறப்படுகிறது.

    இரு நாடுகள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும், பல்வேறு துறைகளில் அமெரிக்கா, சீனா இடையேயான ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் நன்மை பயக்கும் என்று அமெரிக்க அதிபர் இந்த பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டார்.

    தைவான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை என்றும், அந்த பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரான ஒருதலைப்பட்ச முயற்சிகளை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என்றும் பைடன் தெரிவித்தார்.

    இந்த பேச்சுவார்த்தையின்போது இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • அதிபர் ஜோபைடனுக்கு நேற்று மாலை, இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது.
    • அதிபர் தனது கடுமையான தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டு வருவார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோபைடனை டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஜோபைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார்.

    இதுகுறித்து அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் கூறும்போது, 'அதிபர் ஜோபைடனுக்கு நேற்று மாலை, இன்று காலை நடத்தப்பட்ட ஆன்டிஜென் சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்துள்ளது.

    இதையடுத்து அதிபர் தனது கடுமையான தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டு வருவார். அவருக்கு காய்ச்சல் இல்லை. கொரோனா அறிகுறிகள் முற்றிலும் நீங்கிவிட்டன' என்றார்.

    • ஜோ பைடன் காணொலி மூலம் கணினி மைக்ரோசிப் தயாரிப்பு கூட்டத்தில் பங்கேற்றார்.
    • கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் என்றார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

    இந்த நிலையில் ஜோ பைடன் காணொலி மூலம் கணினி மைக்ரோசிப் தயாரிப்பு கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு அவர் கூறும்போது, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நன்றாக உணர்கிறேன் என்றார்.

    • செர்ஜி மனைவி நிகோலை இரு முறை மட்டும்தான் பார்த்திருக்கிறேன்.
    • செர்ஜியும் நானும் நண்பர்கள்.

    வாஷிங்டன் :

    கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான செர்ஜி பிரின், தனது மனைவி நிக்கோல் ஷனாஹனிடம் இருந்து விவாகரத்து கோரி சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஊடகம் ஒன்று, கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரினின் மனைவி நிக்கோல் ஷனாஹனுக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்குக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதனால்தான் செர்ஜி பிரின் தனது மனைவியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி சர்வதேச அளவில் பேசும் பொருளாக மாறியது.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "இது ஒரு ஆதாரமற்ற செய்தி. செர்ஜியும் நானும் நண்பர்கள். கடந்த இரவில்கூட இருவரும் விருந்து நிகழ்ச்சியில் ஒன்றாக இருந்தோம். செர்ஜி மனைவி நிகோலை கடந்த 3 ஆண்டுகளில் இரு முறை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அந்த இருமுறையிலும் கூட நாங்கள் அனைவரும் இருக்கும்போதுதான் சந்தித்தோம். எங்களுக்குள் எந்தவிதமான தொடர்பும் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.

    • துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • எத்தனை பேர் தாக்குதலில் ஈடுபட்டார்கள்? என்பது உறுதி செய்யப்படவில்லை.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக துப்பாக்கி சூடு சம்வங்கள் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிலையில் கார் கண்காட்சி நடந்துகொண்டிருந்த லாஸ் ஏஞ்சல்ஸ் பார்க்கில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

    துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை ஒருவரும் கைது செய்யப்படவில்லை. எத்தனை பேர் இந்த தாக்குதலில் ஈடுபட்டார்கள்? என்பதும் உறுதி செய்யப்படவில்லை. துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 20 மைல் தொலைவில் உள்ளது.

    • பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்தது.
    • ஜமைக்கா, ஜெர்மனி நாடுகள் முறையே வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்றன.

    யூஜின்:

    18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்தது.

    கடைசி நாளான இன்று நடந்த ஆண்களுக்கான போல்வால்ட் பந்தயத்தில் சுவீடன் வீரர் அர்மன்ட் டுப் லான்ட்ஸ் புதிய உலக சாதனை படைத்தார். அவர் 6.21 மீட்டர் உயரம் தாண்டி னார்.

    ஒலிம்பிக் சாம்பியனான அர்மண்ட் இதற்கு முன்பு 6.20 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. தனது சாதனையை முறியடித்து அவர் புதிய உலக சாதனை புரிந்தார்.

    அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் நீல்சன் 5.94 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், பிலிப்பைன்ஸ் வீரர் எர்ஸைட் 5.94 மீட்டர் தூரம் தாண்டி வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவுக்கு தங்கம் கிடைத்தது. ஜமைக்கா, ஜெர்மனி நாடுகள் முறையே வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்றன.

    அமெரிக்கா 13 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலம் ஆக மொத்தம் 33 பதக்கத்து டன் முதல் இடத்தை பிடித்தது. 

    • அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஆனாலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் புறநகர் பகுதியான ரெண்டனில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒருவர் இறந்து கிடந்தார். 5 பேர் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிலர் இடையே ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    • ஒமைக்ரான் துணை வகை தொற்றால் அமெரிக்க அதிபர் பாதிக்கப்பட்டுள்ளார்.
    • அவரது இரத்த அழுத்தம், சுவாச விகிதம் சீராக உள்ளது.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் ஜோ பைடன் ஒமைக்ரான் வைரஸ் துணை வகையை சேர்ந்த BA5 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது தனிப்பட்ட மருத்துவர் கெவின் ஓ கானர் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வகை கொரோனா வைரசால் தற்போது அமெரிக்காவில் 70 முதல் 80 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளும் அமெரிக்க அதிபர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக மருத்துவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஜோ பைடனுக்கு, இருமல், தொண்டை புண் மற்றும் உடல் வலி இருந்தாலும் அவரது இரத்த அழுத்தம், சுவாச விகிதம், நுரையீரல் செயல்பாடு, உடல் வெப்ப நிலை சீராக உள்ளது. முழுமையாக கொரோனா தடுப்பூசிகளை பைடன் போட்டிருந்த நிலையில், இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது, தொடர்ந்து அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான வாள்வீச்சு போட்டி நடக்கிறது.
    • இந்தப் போட்டியின் அடிப்படையில் மாநில போட்டிக்கான சென்னை அணி தேர்வு செய்யப்படும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட வாள்வீச்சு சங்கம் சார்பில் 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான வாள்வீச்சு போட்டி கொளத்தூரில் உள்ள கல்ட்டிஜென் மல்டி விளையாட்டு அரங்கில் நாளை ( 24-ந் தேதி ) நடக்கிறது. இந்தப் போட்டியின் அடிப்படையில் மாநில போட்டிக்கான சென்னை அணி தேர்வு செய்யப்படும்.

    மேற்கண்ட தகவலை சென்னை மாவட்ட வாள்வீச்சு சங்க செயலாளர் வி.கருணாமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

    ×