search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US GunFire"

    • காயம் அடைந்தவர்களில் பலர் 20-க்கும் குறைந்த வயதுடையோர்.
    • சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு விருந்துக்காக மக்கள் கூடியிருந்த நிலையில் சம்பவம் நடைபெற்றுள்ளது.

    வாஷிங்டன் நகரின் மேற்கு பகுதியில் உள்ள டேவிஸ் தெருவின் 100-வது ப்ளாக் பகுதியில், நள்ளிரவு 12:22 மணிக்கு (உள்ளூர் நேரம்), நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக சைராக்யூஸ் காவல்துறை செய்தித் தொடர்பாளர் லெப்டினென்ட் மேத்யூ மேலினோவ்ஸ்கி தெரிவித்தார்.

    காவல்துறையின் தகவலை மேற்கோள்காட்டி பிரபல அமெரிக்க பத்திரிகை, இந்த நிகழ்வில் நான்கு பேர் சுடப்பட்டதாகவும், ஆறு பேர் கத்தியால் குத்தப்பட்டதாகவும், மேலும் மூன்று பேர் அந்த களேபரத்திலிருந்து வேகமாக வெளியேறிய வாகனங்களால் மோதப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

    காயமடைந்தவர்களில் 17-25 வயதுக்குட்பட்ட 3 பேர் ஆண்கள் என்றும், 10 பேர் பெண்கள் என்றும், காயமடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றும் மெலினோவ்ஸ்கி கூறினார். மேலும் அவர், பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் காணப்பட்டதாகவும், அப்பகுதியிலுள்ள மருத்துவமனையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    சுடப்பட்டவர்களில் 20 வயதுக்கு கீழ் உள்ள இளம்பெண்கள் மூவர் ஆவார்கள்.

    சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு விருந்துக்காக மக்கள் கூடியிருந்தனர். ஒரு சிறிய கைகலப்பு தொடங்கி சற்று நேரத்தில் முடிவுக்கு வந்ததாகவும், அதன் பின்னர் 20 நிமிடங்களுக்குப் பிறகு மற்றொரு கைகலப்பு வெடித்ததாகவும், இதனைத் தொடர்ந்து டஜன் கணக்கான துப்பாக்கிச்சூடு சத்தங்கள் எழுந்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

    ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்ட உடனேயே சம்பவ இடத்துக்கு விரைந்ததாகவும் மிகப்பெரிய அளவில் நடைபெற இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • ஆனாலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் புறநகர் பகுதியான ரெண்டனில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒருவர் இறந்து கிடந்தார். 5 பேர் காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த துப்பாக்கி சூட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிலர் இடையே ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

    அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    ×