என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • ரூபாலி எச்.தேசாய் கனடாவில் டொராண்டாவில் பிறந்தவர்.
    • அமெரிக்காவின் அரிசோனா ஜேம்ஸ் இ ரோஜர்ஸ் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து தேறினார்.

    வாஷிங்டன் :

    அமெரிக்க நாட்டில் உள்ள 9-வது சர்கியூட் அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளி பெண் ரூபாலி எச்.தேசாய் (வயது 43) நியமிக்கப்பட்டார். அந்த நாட்டின் சட்டப்படி இதற்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    இது தொடர்பான ஓட்டெடுப்பு செனட் சபையில் நடந்து முடிந்துள்ளது. இதில் அவரது நியமனத்துக்கு ஆதரவாக 67 பேரும், எதிராக 29 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மையோர் ஆதரவாக ஓட்டு போட்டதால், ரூபாலி எச்.தேசாய் அப்பீல் கோர்ட்டு (கலிபோர்னியாவில் சான்பிரான்சிஸ்கோ நகரில்) நீதிபதியாக நியமிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

    இவர் கனடாவில் டொராண்டாவில் பிறந்தவர். அமெரிக்காவின் அரிசோனா ஜேம்ஸ் இ ரோஜர்ஸ் சட்டக்கல்லூரியில் சட்டம் படித்து தேறினார். தற்போது நீதிபதியாகியுள்ள 9-வது சர்கியூட் அப்பீல் கோர்ட்டில் தலைமை நீதிபதி மேரி ஸ்ரோடரின் சட்ட குமாஸ்தாவாக 2005, 2006 ஆண்டுகளில் பணியாற்றினார். பின்னர் வக்கீல் தொழில் செய்தார்.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி இவரை 9-வது சர்கியூட் அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்தார். அதற்கு இப்போது நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் தந்துள்ளது.

    இந்த கோர்ட்டில் தெற்காசியாவில் இருந்து முதன் முதலாக இவர்தான் நீதிபதியாகி இருக்கிறார் என்பது சிறப்பு.

    • 5 முதல் 7 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும், 18 முதல் 79 வயதிற்குட்பட்ட 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தீ விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நேற்று நள்ளிரவு 2.45 மணியளவில் திடீரென்று வீட்டில் தீப்பற்றிய நிலையில், 5 முதல் 7 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும், 18 முதல் 79 வயதிற்குட்பட்ட 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் 3 இளைஞர்கள் எவ்வித பாதிப்புமின்றி பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தீ விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • லேபாயேட் சதுக்கம் ஜாக்சன் சிலை முன்பு சிலர் நின்று கொண்டு இருந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை உள்ளது. இதன் அருகே உள்ள லேபாயேட் சதுக்கம் ஜாக்சன் சிலை முன்பு சிலர் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • குரங்கு அம்மை பரவலால் அமெரிக்காவின் சில மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • இந்நிலையில் அமெரிக்கா முழுவதும் சுகாதார அவசரநிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    ஆப்பிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குரங்கு அம்மை நோய் அமெரிக்காவில் 6,600-க்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. மேலும், நியூயார்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உள்பட பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன.

    இந்நிலையில், குரங்கு அம்மை நோயை சுகாதார அவசர நிலையாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

    அவசர நிலை பிரகடனம் காரணமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

    • இரு நாடுகளும் நேட்டோவில் இணைய ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
    • அமெரிக்க செனட் சபை தனது ஒப்புதலை இன்று அளித்துள்ளது.

    வாஷிங்டன்:

    நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் மீது ரஷியா படையெடுத்து 150 நாட்களாக போர் செய்து வருகிறது.

    இதற்கிடையே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோ ராணுவக் கூட்டணியில் இணையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், ஸ்வீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு அமெரிக்க செனட் சபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நேட்டோவில் இணைவதன் மூலம் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் மற்றும் முழு அட்லாண்டிக் கூட்டணிக்கும் பயனளிக்கும் என பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வாஷிங்டன்:

    அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு தலைவர் அல்-ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை பல ஆண்டுகளாக அமெரிக்க படை தேடி வந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பவரை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து அவரை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி தான் வசித்த வீட்டில் இருந்து வெளியே எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவர் பால்கனி அருகே வரும் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர்.

    அல்-ஜவாஹிரி மீது மட்டும் தாக்குதல் நடத்த வேண்டும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்த அமெரிக்கா, துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஹெல்பயர் ஆர் 9 எக்ஸ் ரக ஏவுகணையை பயன்படுத்தியது.

    இந்த ஏவுகணை எம்.க்யூ-9 ரீப்பர் டிரோனில் (ஆளில்லா விமானம்) பொருத்தப்பட்டு கொண்டு செல்லப்படும். அதிநவீன கேமரா உள்ளிட்ட வசதிகளை கொண்ட ஆளில்லா விமானம். இலக்கின் மேலே பறந்து செல்லும்.

    லேசர் கருவி பொருத்தப்பட்ட ஆர் 9 எக்ஸ் ஏவுகணை இலக்கை நோக்கி ஏவப்படும். இலக்கின் மீது மோதுவதற்கு முன்பு ஏவுகணையின் பக்க வாட்டில் இருந்தது 6 பிளேடுகள் வெளியாகும். அதன்பின் இலக்கு வைக்கப்பட்ட நபர் மீது மோதும் ஏவுகணை அவரது உடலை துண்டு துண்டாக்கி விடும். ஏவுகணை வெடிக்காது.

    இதன்மூலம் இலக்கு மட்டும் அழிக்கப்படும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த நவீன ஏவுகணையை தான் அல்-ஜவாஹிரியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்தியது. தாக்குதலின்போது அல்-ஜவாஹிரி வீட்டில் அவரது உறவினர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

    அல்-ஜவாஹிரி மட்டும் கொல்லப்பட்டார். முதலில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அதன்பின் ஆர்-9-எக்ஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    அல்-ஜவாஹிரியை கொல்ல இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கு முன்பு ஆர்-9-எக்ஸ் ஏவுகணை முதல் முறையாக கடந்த 2017-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.

    சிரியாவில் அல்-கொய்தா கமாண்டர் அபு அல்-கைர் அல்-மஸ்ரி காரில் சென்றபோது அந்த விமானம் மீது ஆர்-9-எக்ஸ் ஏவுகணையால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக புகைப்படங்களில் காரின் மேல்புறத்தில் ஓட்டை இருந்தது. காரின் முன் மற்றும் பின்புறத்தில் எந்த சேதமும் ஏற்பட வில்லை.

    அல்-ஜவாஹிரி இந்த ஆண்டு தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக காபூலில் உள்ள வீட்டுக்கு இடம்பெயர்ந்ததை அமெரிக்க உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அது அல்-ஜவாஹிரி தானா என்பதை உறுதிப்படுத்த நேரம் எடுத்துக் கொண்டனர். அல்-ஜவாஹிரி தனது வீட்டு பால்கனிக்கு வரும் போது அவரது முகத்தை புகைப்படம் எடுத்து ஸ்கேன் செய்து அது அவர் தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

    பின்னர் தாக்குதலுக்கான திட்டம் மே மாதம் வகுக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி வீட்டின் கட்டமைப்பு, அவரது குடும்பத்தினரின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது.
    • ஆளில்லா விமானத்தை (டிரோன்) எங்கிருந்து அமெரிக்கா இயக்கியது என்பதில் கேள்வி எழுந்தது.

    அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மூலம் கொல்லப்பட்ட அல்-ஜவாஹிரி ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் பதுங்கி இருந்தார்.

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுமையாக வெளியேறியது.

    இந்த நிலையில் அந்நாட்டில் அமெரிக்க ராணுவத்தின் எந்த பங்களிப்பும் இல்லாத நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு அல்-கொய்தா தலைவர் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டார்.

    இதனால் ஆளில்லா விமானத்தை (டிரோன்) எங்கிருந்து அமெரிக்கா இயக்கியது என்பதில் கேள்வி எழுந்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தி ஆளில்லா விமானம் இயக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் டிரோன் பாகிஸ்தான் வான்வெளி வழியாக சென்றதாகவும், தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்ததாகவும் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் அல்-ஜவாஹிரியை கொல்ல அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அல்-ஜவாஹிரி, பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்துள்ளார். அவர் வசித்த பகுதி பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ளது.

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்து வருகிறது. அதற்காக நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அளவில் நிதியை பெற முயற்சித்து வருகிறது.

    இதற்கிடையே அல்-ஜவாஹிரியின் நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களை அளிக்கும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டதாகவும், இதன் மூலம் அமெரிக்காவிடம் நல்ல பெயர் எடுத்து விடலாம் என்ற காரணத்தால் பாகிஸ்தான் அதற்கு சம்மதித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இதையடுத்து அல்-ஜவாஹிரியின் நடமாட்டம் குறித்து பாகிஸ்தான் தகவல்கள் அளித்து இருக்கிறது. இதுகுறித்து சில நிபுணர்கள் கூறும்போது, அமெரிக்காவிடம் நட்புறவை பெறவும், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவைகளிடம் இருந்து நிதி உதவி பெறவும் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவி உள்ளது என்றனர்.

    • கொரோனா தொற்று மற்ற முக்கிய உறுப்புகளை போலவே மூளையிலும் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்தும்.
    • அறிவாற்றலையும், நினைவுத்திறனையும் பாதிக்கக்கூடியவையாக உள்ளன.

    கொரோனா தொற்றின் பின் விளைவுகள் தொடர்பாக அமெரிக்காவின் ஹூஸ்டண் மெத்தடிஸ்ட் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஜாய் மித்ரா, முரளிதர் எல்.ஹெக்டே தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.அந்த ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு நீண்டகால மீள இயலாத நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக வயதானவர்கள், இதர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளன.

    கொரோனா தொற்று மற்ற முக்கிய உறுப்புகளை போலவே மூளையிலும் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்தும். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் மூளை வரைபட ஆய்வுகளில் ரத்தம் கசியும் ஆழமான புண்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

    இவை அறிவாற்றலையும், நினைவுத்திறனையும் பாதிக்கக்கூடியவையாக உள்ளன. இதன் கூறுகள் அல்சைமர், பார்கின்சன் ஆகிய நோய்களுடன் ஒத்திருக்கின்றன. உரிய நேரத்தில் கண்டறியா விட்டால் இந்த பாதிப்புகளை சரிசெய்ய இயலாது.

    கொரோனா நோயாளிகளில் 20 முதல் 30 சதவீதம் பேர் தங்களுக்கு நினைவு இழப்பு, தினசரி நடவடிக்கைகளை மறத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக கூறியுள்ளனர். கொரோனா தொற்றால் மூளை செல்கள் வயதாவது விரைவுபடுத்தப்படுகிறது.

    கொரோனா வைரஸ் செல்களில் ஊடுருவும் போது அந்த செல்கள் செயலற்றதாகிறது அல்லது இறந்துவிடுகிறது. இதனால் வயதாகும் போது ஏற்படும் மூளை சுருக்கம் விரைவிலேயே ஏற்படுகிறது.

    கொரோனா தொற்றால் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள், மூளை புண்களால் ஏற்படும் நுரையீரல், இதயம் சார்ந்த பிரச்சினைகள் குறித்த பல்வேறு நிலைகளில் தொடர் ஆய்வுகள் மேற் கொண்டு வருகிறோம்.

    தடுப்பூசி செலுத்துவது, உரிய சுகாதார முறைகளை கடைபிடிப்பதன் மூலம் கொரோனாவராமல் தடுப்பதுடன் நீண்ட கால பாதிப்பில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி நான்சி பெலோசி தைவான் சென்றார்.
    • இதனால் தைவான் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார்.

    25 ஆண்டுகளில் தைவான் சென்றுள்ள அமெரிக்க மக்கள் பிரதிநிதி நான்சி பெலோசி ஆவார். பெலோசி வருகையை தொடர்ந்து தைவான் மீதான ராணுவ மற்றும் பொருளாதார நெருக்கடியை சீனா அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், உலகிலேயே அதிகம் பேரால் கண்காணிக்கப்பட்ட விமானம் என்ற பெருமையை அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் பயணம் செய்த விமானம் பெற்றுள்ளது.

    இதுதொடர்பாக, சர்வதேச விமான கண்காணிப்பு சேவை நிறுவனமான பிளைட் ரேடார் 24ன் தகவல் தொடர்பு இயக்குனர் இயன் பெட்செனிக் கூறியதாவது:

    அமெரிக்காவில் இருந்து சபாநாயகர் பெலோசி பயணித்த போயிங் ட் ஸ்பெர் 19 விமானம் புறப்பட்டது முதலே மக்களின் கவனத்தைப் பெற ஆரம்பித்தது. செவ்வாயன்று விமானம் புறப்பட்டது முதல் எங்கள் சேவையில் அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானம் இதுவாகும். பின்னர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கடந்த போது, எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் மிக அதிகமான கண்காணிக்கப்பட்ட விமானம் ஆனது. தைவானின் தைபேயில் விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு வரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துக் கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்.
    • அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டதற்கு முன்னாள் அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடி வந்தது.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்க தலைவர் அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அறிவித்தார்.

    இந்நிலையில், அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார்.

    இதுதொடர்பாக ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், செப்டம்பர் 11 தாக்குதலுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரும், அல்-கொய்தாவின் தலைவரான அய்மான் அல்-ஜவாரி இறுதியாக நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். அதிபர் பைடனின் தலைமைக்கு பாராட்டுக்கள். இந்த தருணத்திற்காக பல பத்தாண்டுகளாக உழைத்த உளவுத்துறை அதிகாரிகள் தங்களில் ஒருவருக்கு கூட சிறிய பாதிப்பும் இன்றி இதை நிகழ்த்திக் காட்டியுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

    • அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்.
    • இந்தத் தகவலை அதிபர் ஜோ பைடன் இன்று உறுதிப்படுத்தினார்.

    வாஷிங்டன்:

    அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடி வந்தது.

    இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்க தலைவர் அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டார் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், அல்-கொய்தா இயக்க தலைவர் அல்-ஜவாரி கொல்லப்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அல்-கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாரி காபூலில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு காலம் சென்றாலும், நீங்கள் எங்கு மறைந்திருந்தாலும், எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும்.

    இரட்டைக் கோபுர தாக்குதலை என்றுமே மறக்க மாட்டோம். அமெரிக்காவை தாக்க நினைப்பவர்களுக்கு இதுவே முடிவு என தெரிவித்தார்.

    • ஆப்கானிஸ்தானில் தலிபான், அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தினர் செயல்பட்டு வருகின்றனர்.
    • அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அல் கொய்தா இயக்க தலைவன் கொல்லப்பட்டான்.

    வாஷிங்டன்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் அங்கு பதுங்கி இருந்த அல்-கொய்தா இயக்கத்தின் தலைவரான அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டான்.

    அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவன் அய்மான் அல்-ஜவாரி என்பதும், அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து அவனை தேடி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    அல்-கொய்தா இயக்கத்தின் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டதை அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இன்று அறிவித்தார்.

    ×